Skip to content
Home » மகாலட்சுமி 104

மகாலட்சுமி 104

மகிழை அங்கு மகா வேணி இருவரும் எதிர்பார்க்கவில்லை இருவரும் மகிழைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி மகிழையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவனது சட்டை வேர்வையில் நனைந்திருந்தது கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது அவனது கையிலும் கண்ணிலும் ரத்த நிறம் நாளங்கள் புடைத்து கொண்டு இருப்பதும் தெரிந்தது….

அண்ணா என்றும் வேணியும் மகா மாமா என்றும் அழைத்தார்கள் மகிழ் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் எழில் தான் மகா வேணியை முறைத்துவிட்டு மகாவை பார்த்து சீ வாய மூடு டி உனக்கு வெட்கமாக இல்லை மகிழிடம் எதிர்பார்த்தாய் எதிர்பார்த்தாய் என்று கத்திக் கொண்டிருக்கிறாய் நீ எதிர்பார்ப்பதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன்…

ஒரு காதலியாகவோ மனைவியாகவோ உனக்கு அவனிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றது என்றால் அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் நீ இதையெல்லாம் எதிர்பார்க்கிறாய் என்று அவனிடம் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அதை செய்யாமல் மூன்றாவது மனிதரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்றுடன் வேனி அதிர்ச்சியாகி எழிலை பார்த்தால் ….

இந்த இடத்தில் வேணி மட்டுமில்லை உன்னை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கணவன் மனைவி இடையே நடக்கும் விஷயங்களை சொல்வது தவறுதான் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் மூன்றாவது மனிதர்கள் தான் நீ என்னிடம் சொல்லி இருந்தாலும் நான் இதையே தான் சொல்லி இருப்பேன் என்று கத்தினான்…

வேணியின் தலை கீழே கவிழ்ந்தது மகா அமைதியாக எழிலையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் வீட்டில் உள்ளவர்களிடம் அவனது விருப்பத்தை சொல்லவில்லை என்றால் அந்த இடத்திலேயே நீ அவனது சட்டையை பிடித்து கேட்டிருக்கலாம் இல்லை என்றால் அதன் பிறகு நீ அவனிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் …

ஏன் வீட்டில் உள்ளவர்களிடம் நமது காதலை சொல்லவில்லை என்று ஆனால் நீ இதை எதையுமே செய்யாமல் நான் எதிர்பார்த்தேன் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் இதுவரை அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாயா நான் உன்னிடம் இதை எதிர்பார்த்தேன் நீ இதை செய்யவில்லை என்று திருமணத்திற்கு பிறகாவது சொல்லி இருக்கிறாயா? என்று கத்தினான்…

பிறகு இதை எல்லாத்தையும் விட இன்னொரு விஷயம் இதுவரை நீ சொன்னதை கூட நான் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் அவன் உன்னுடன் உங்களது வாழ்க்கை தொடங்கியதைப் பற்றி பேசுகிறாய் பார்த்தாயா கொஞ்சம் கூட உனக்கு கூச்சமே இல்லையா அவன் உன்னை விரும்பவில்லை என்று நினைக்கிறாயா எப்படி நீ வற்புறுத்தியதால் தொந்தரவு செய்ததால் அவன் உன்னை விரும்புகிறேன் என்ற எண்ணம் உனக்கு வருகிறதா ….

பரவாயில்லை அப்படித்தான் இதுவரை அவன் உனக்கு இருந்திருக்கிறான் அப்படித்தானே அப்படி என்றால் இதுவரை நீ அவனது காதலை உணரவில்லை அவன் உனக்காக தான் உன்னை விரும்புகிறான் சரி உனக்காக உன்னை விரும்புகிறவன் எப்படி வீட்டில் உள்ளவர்களிடம் அவனது காதலை சொல்வான் உனக்காக விரும்புகிறான் என்றால் நீ தானே சொல்ல வேண்டும் என்றான்..

மகா எழிலை முறைத்துப் பார்த்தால் மகிழ் எழிலின் கையை பிடித்தான் எழில் தனது அண்ணனை முறைத்து விட்டு அவனது கையை உதறிவிட்டு அவன் உன்னை விரும்பவில்லை விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் ஆனால் உன்னை எந்த அளவுக்கு விரும்புகிறான் என்று கூட தெரியாத அளவிற்கு தான் நீ அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று விட்டு அவளை அழைத்து கொண்டு  கீழே இழுத்துக் கொண்டு சென்றான்…..

மகிழ் வேணி இருவரும் எழில் என்று கத்தினார்கள் மகிழ் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து விட்டான் வேணி தான் அண்ணா அண்ணி மாசமாக இருக்கிறார்கள் என்று கத்திக் கொண்டே இருந்தால் எழில் ஒரு நிமிடம் நின்று வேணியை முறைத்துவிட்டு மகாவை கீழே தர தர வென  இழுத்துக் கொண்டு வந்தான் வரவேற்பு அறையில் இருந்தவர்கள் எல்லாம் இவன் இப்படி மகாவை இழுத்து கொண்டு வருவதை பார்த்துவிட்டு சுந்தரி தான் டேய் அவள் மாசமாக இருக்கிறாள்…

எதற்காக இப்படி இழுத்துக் கொண்டு வருகிறாய் என்று கத்தினார் எழில் தனது தாயை முறைத்துவிட்டு அவளது கையை இறுக பிடித்தான் நிலா வேகமாக வந்து மாமா என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றவுடன் அமைதியாக போய் விடுடி என்று நிலாவை வேகமாக தள்ளிவிட்டான் நிலா அவன் தள்ளியே தள்ளி கீழே விழுந்து விட்டால் நிலா அதிர்ச்சியாகி எழிலையே பார்த்தல்….

வீட்டில் உள்ள அனைவரையும் விட எழிலுக்கு அதிகமாக தான் கோபம் வரும் ஆனால் இதுவரை அவனது கோபத்தை நிலாவிடம் காண்பித்ததில்லை இப்போது தான் இது இரண்டாவது முறையாக காண்பிக்கிறான் நிலா அமைதியாக எழிலையே பார்த்துக் கொண்டே இருந்தால் வரவேற்பறையில் வந்து நின்று விட்டு அத்தை என்று வீடே அதிரும் அளவிற்கு கத்தினான் …..

அவரும் அவரது அறையில் இருந்து வந்துவிட்டு எழிலின் கை மகாவின் கையை இறுக பிடித்திருப்பதையும் அவனது கண்ணையும் பார்த்தார் அவனது கைகள் கண்கள் நரம்போடி இருந்தது அவனது கண்கள் ரத்த சிவப்பாக இருந்தது அதையும் பார்த்துவிட்டு அமைதியாக அவனை பார்த்தார் எனக்கு ஒரு அரை மணி நேரம் மட்டும் டைம் கொடுங்கள் இதற்கு முன்பு கீழே மகிழ் இருந்த அறையில் இவள் ஒரு அரை மணி நேரம் இருந்து விட்டு வரட்டும் என்றான் …..

அவர் அவனது கண்ணை இரண்டு நிமிடங்கள் அமைதியாக பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் சரி என்பது போல் அவரது கண்ணை மூடி திறந்தார் பிறகு எழில் மகாவை இருக்கி பிடித்து அவன் உன்னை விரும்பவில்லை விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் அவன் உன்னை எந்த அளவிற்கு விரும்புகிறான் உன் மேல் எந்த அளவிற்கு பைத்தியமாக இருக்கிறான் என்பதை அந்த அறைக்கு சென்று தெரிந்துகொள்….

கிட்டத்தட்ட உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகப்போகிறது திருமணத்திற்கு முன்பு நீ எத்தனை வருடங்களாக அவனை விரும்பினாய் என்று எனக்கு தெரியாது இத்தனை வருடம் விரும்பியும் இத்தனை மாதங்கள் அவனுடன் ஒன்றாக ஒரே அறையில் வாழ்ந்தும் அவனது காதல் உனக்கு புரியவில்லை அப்படித்தானே …

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அவனுடன் அதே அரையில் ஒன்றாக இருந்திருக்கிறாய் இருந்தும் அவனுடைய விருப்பம் உன் மேல் எந்த அளவுக்கு என்று கூட புரிந்து கொள்ளவில்லை அவ்வளவுதான் நீ அவன் மேல் வைத்திருக்கும் காதல் உள்ளே சென்று அவன் உன்னை எந்த அளவுக்கு விரும்பினான் விரும்புகிறான் என்பதை தெரிந்து கொள் என்று மகாவை மகிழ் மகா இருவரும் திருமணத்திற்கு பிறகு இருந்த அறையில் சென்று அவளை உள்ளே தள்ளி விட்டு கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வரவேற்பரையில் வந்து உட்கார்ந்தான்…..


வீட்டில் உள்ள அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு வேனியிடம் வேணி நீ போய் கதவை திறந்து விட்டு உன் அண்ணியை அழைத்து சென்று மேலே கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடு என்றான் வேணி வேகமாக போய் கதவைத் திறந்தால் வேணி கதவை திறக்கும் பொழுது மகா அந்த கதவில் சாய்ந்து அப்படியே உட்கார்ந்து இருந்தால்…..

பிறகு வேணி  மகாவின் கையை பிடித்து அறையில் இருந்து அழைத்துக் கொண்டு வந்தான் மேலே போய் விட்டு விட்டு வந்து விடு வேணி என்றவுடன் மகா வேணியின் கையை  உதறி விட்டு எழிலை ஓங்கி அறைந்தால் நான் என்ன பேசினேன் என்று கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நீ இருக்கிறாய் உனக்கு நான் என்ன பேசினேன் என்று என்னடா தெரியும் அவ்வளவுதான் நீ என்னை புரிந்து வைத்திருக்கிறாய் …..

எனக்கு மேலே போய்க் கொள்ள தெரியும் என்று விட்டு எழிலையும் முறைத்து விட்டு வீட்டில் உள்ள அனைவரையும் முறைத்துவிட்டு அமைதியாக மாடி படி ஏறினாள் வேனிக்கு வருத்தமாக இருந்தது தன்னால் தான் அனைத்தும் என்று வருந்தி கொண்டிருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை ஆனால் வேணி எதுவோ கேட்கப் போய் மகா ஏதோ வாய் திறந்து ஏதோ பிரச்சனையாகி இருக்கிறது அதனால் தான் எழில் அவ்வாறு கத்துகிறான் என்று எண்ணினார்கள்….

வீட்டில் உள்ள அனைவரும் அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தார்கள் மகா மேலே சென்றவுடன் சுந்தரி தனது இளைய மகன் எழிலை ஓங்கி அறைந்தார் நிலா அத்தை என்று வேகமாக கத்தி கொண்டு வந்தால் வாயை மூடு டி ஏதாவது பேசினால் என்ன செய்வேன் என்று தெரியாது இவ்வளவு நேரம் அவன் உன் அக்காவை பேசினான் அப்போது உனக்கு கோபம் வரவில்லை அப்படித்தானே என்று கேட்டார் ……

அவர் மகாவை அண்ணியாக நினைத்து செய்தாரா தோழியாக நினைத்து செய்தாரா என்று கூட எனக்கு தெரியாது என்று சொன்னால் அவன் அண்ணியாக நினைத்து செய்கிறான் இல்லை தோழியாக நினைத்து செய்கிறான் அது எனக்கு தேவையில்லை ஆனால் ஒரு தங்கையாக உன்னால் வந்து எதுவும் கேட்க முடியவில்லை அல்லவா இப்பொழுது அத்தை மகளாக மட்டும் எதற்கு சப்போர்ட் செய்கிறாய் …

அவன் மேல் தவறு இருக்கிறது இல்லை ஆனால் அவனை அடித்து விட்டேன் என்று வந்து கேட்டாய் அல்லவா ஆனால் இதற்கு முன்பு உன்னால் கேட்க முடியவில்லை என்றார் அத்தை நான்  இதுவரை  அவர்களது நட்பில் புகுந்ததில்லை சரியா இனியும் நான்   அவர்களது நட்பிற்குள் இடையே போக மாட்டேன் அவ்வளவுதான் என்று விட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டால் இப்பொழுதும் நீங்கள் உங்கள் மகனை அடிக்கீர்கள் நான் அதை கேட்க கூடது என்றால் நான் அமைதியாக சென்று விடுவேன் என்று சொல்லிவிட்டு அமைதியாக ஓரிடத்தில் போய் உட்கார்ந்து விட்டால் ….


வீட்டில் உள்ள அனைவருமே அமைதியாக தான் இருந்தார்கள் இனி என்று வேகமாக அழைத்தார் இனி தனது தாயின் அருகில் வந்து நின்றாள் ஒரு பெண்ணாக ஒரு மனைவியாக நீ உன்னுடைய காதலன் கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டார் இனி ஒரு நிமிடம் தனது தம்பி எழிலை பார்த்துவிட்டு கண்ணை மூடி திறந்து எனக்கு என் கணவன் நகை பணம் புடவை இதெல்லாம் வாங்கி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை விட என் கணவன் என்னை யாரிடம் விட்டுத் தரக்கூடாது ……


நான் உன்னுடன்  எந்த சூழ்நிலையிலும் இருப்பேன் என்று சொல்வதை விட தன்னால் முடியாத நேரத்தில் தனக்கு துணையாக பேசுவதை காட்டிலும் தோல் சாய தோலும் மடிசாய மடியும் தருவதுதான் பெரிது என்று சொல்லிவிட்டு தனது தம்பியை பார்த்துவிட்டு எனக்குத் தெரிந்தவரை இதுவரை உன் அண்ணன் உன் அண்ணிக்கு மடியும்  கொடுத்ததில்லை தோளும் கொடுத்ததில்லை …..

அவர் வேண்டுமானால் அவளது தோளிலும் மடியிலும் சாய்ந்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு தனது தம்பியை முறைத்துவிட்டு நான் உன்னிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல நினைக்கிறேன் அண்ணனுக்காக என்று யோசித்து உனது நட்பை இழந்து விடாதே அவ்வளவுதான் சொல்வேன் நீ உனது தோழிக்கு தோளும் மடியும் தருவது பெரிதல்ல அதையே நாளை மனைவிக்கும் தரவேண்டும் அதுதான் பெரிது என்று சொல்லிவிட்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்…

உதிரன் பின்னாடியே சென்றான் மாமா ப்ளீஸ் வேணாம் எனக்கு இப்போ தூங்கணும் போல இருக்கு தனியா இருக்கணும் என்று சொல்லிவிட்டு கதவை லேசாக சாற்றி விட்டு அவளது கட்டிலில் சென்று அமர்ந்து விட்டாள் எழில் தனது அக்கா சொன்னதை ஒரு நிமிடம் முழுவதாக மண்டைக்குள் ஏற்றிவிட்டு அமைதியாக வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் ….


மேலே சென்ற மகா அமைதியாக அவளது மொட்டை மாடிக்கு சென்று விட்டு இரவு சமைப்பதற்கு நேரம் ஆகுவதால் சமையலறைக்குச் சென்று இரவு உணவு சமைத்துவிட்டு மகிழைப் பார்த்தால் அவன் வரவேற்பு அறையில் இல்லை என்றவுடன் அவர்கள் இப்பொழுது இருக்கும் அறைக்கு சென்றால் மகிழ் அமைதியாக உட்கார்ந்து இருந்தான் அவனது தோளில் கைவைத்து மாமா என்றால் ….

அவன் அவளை திரும்பி பார்த்தான் நேரமாகிறது சாப்பிடலாம் என்றால் மகிழ் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட வந்த அமர்ந்தான் இருவரும் சாப்பிட்டுவிட்டு மகாவும் மாத்திரை போட்டுவிட்டு அவர்களது அறைக்குச் சென்று அமைதியாக வேறு எதுவும் பேசாமல் படுத்து விட்டார்கள் படுத்ததும் உறங்கியும் விட்டார்கள் கீழே நிலா இரவு எட்டு மணி போல் எல்லோரும் இப்படியே உட்கார்ந்து இருந்தால் சமைப்பதாக ஐடியா இல்லையா…..

நேரமாகிறது எனக்கு பசிக்கிறது என்றால் சுந்தரி சமைக்க எழுந்தார் ஒன்றும் வேண்டாம் சுந்தரி இன்று நான் சமைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் புகுந்தால் வேணியும் பின்னாடியே வந்தால் நிலா வேனியை பார்த்து சிரித்துவிட்டு வேணி நானும் நன்றாக சமைப்பேன் சாப்பிடும் அளவிற்கு இருக்கும் அந்த அளவிற்கு நீ பயம் கொள்ள வேண்டாம் நான் சமைக்கிறேன் நீ போய் உட்காரு என்றாள் ….

இத்தனை பேருக்கும் நீ ஒரு ஆளாக எப்படி சமைப்பாய் என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை அதெல்லாம் சமைப்பேன் என்று சொல்லிவிட்டு வேணியை வெளியே அனுப்பி வைத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் மாவு இருந்ததால் இட்லியும் சாம்பார் சட்னியும் செய்துவிட்டு அனைவரையும் சாப்பிட வைத்தால் அனைவரும் அமைதியாக எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைக்குச் சென்று விட்டார்கள்……

வேணி அவளது அறைக்குள் சென்று விட்டு வருந்தினாள் தன்னால் தான் மகிழ் அண்ணன் மகா அண்ணி இருவருக்கும் ஏதாவது பிரச்சனை வருமா என்று வருந்தினாள் எழில் அண்ணன் மகா அண்ணி இருவரது நட்பிலும் ஏதாவது பிளவு ஏற்படுமா என்றும் வருந்தினாள் வேணி பயப்படுவது போல் ஏதாவது நடக்குமா இல்லையா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 104”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *