Skip to content
Home » மகாலட்சுமி 107

மகாலட்சுமி 107

எழில் நிலா இருவரும் என்ன ஹனிமூன் கா என்று கேட்டார்கள் மகா சிரித்துவிட்டு அதற்கு எதற்கு நீங்கள் இருவரும் இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் எதற்கு அதிர்ச்சியாக இருக்கிறோம் என்று நிலா சிரித்துக் கொண்டே வேணியை கட்டிக் கொண்டால்…..

மகிழும் நால்வரும் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றான் பிறகு மூவரும் சிறிது நேரம் பேசி விட்டு சாப்பிட்டுவிட்டு கீழே இறங்கி வந்தார்கள் சுந்தரி தான் வேணியிடம் என்ன வேணி சிரித்துக் கொண்டே வருகிறாய் என்று கேட்டார் வேணி சுந்தரியை பார்த்து சிரித்துவிட்டு மகிழ் கொடுத்ததை சுந்தரி கையில் திணித்தாள் சுந்தரி வாங்கி பார்த்து விட்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்தார் ….


பிறகு முகிலிடம் சொல்லி விட்டாயா என்று கேட்டார் இல்லம்மா இனி மேல் தான் சொல்லணும் என்றால் சரி என்று அனுப்பி வைத்தார் முகில் அவனது அறையில் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான் காவேரி தான் என்ன சுந்தரி என்று கேட்டார் ஏன் அண்ணி அதை நீங்கள் உங்கள் மருமகளிடமே கேட்டிருக்க வேண்டியதுதானே என்றார் சிரித்துக் கொண்டே ….

காவேரி சுந்தரியை முறைத்து விட்டு அதில் அப்படி என தான் இருக்கிறது என்றார் சுந்தரியும் சிரித்துவிட்டு அண்ணி அதில் வேணி பிஎட் படிப்பதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் இருக்கிறது என்றார் அவள் எம் பிள் அல்லவா பண்ண போகிறேன் என்று சொல்லி இருந்தால் என்று கேட்டார் சுந்தரி சிரித்துக் கொண்டே அவளுக்கு எழிலையும் மகாவையும் பார்த்து ஆசிரியராக வேண்டும் என்று தோன்றியிருக்கிறது போல அதனால் பி.எட் படிப்பதற்கு முழு பணமும் செலுத்தி இருக்கிறான் மகிழ் என்று சொன்னார் ….

காவேரி சுந்தரியை முறைத்தார் அண்ணி எனக்கு இதர்க்கும் சம்பந்தமில்லை நீங்கள் வேண்டுமானால் உங்கள் மருமகளிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும் என்னை முறைக்க வேண்டிய அவசியமில்லை என்றார் சுந்தரி  காவேரி அமைதியாக சுந்தரியை பார்த்தார் கோதை சிரித்தார் என்ன டி நக்கலா என்று காவிரி தனது தங்கையிடம் கேட்டார்….

இல்லக்கா என்று விட்டு அமைதியாகிவிட்டார் பிறகு வேணியே அமைதியாக வெளியில் வந்தால் முகில் போனில் பேசிக் கொண்டிருந்தவுடன் என்ன வேணி போனவுடன் வந்து விட்டாய் என்று கோதை கேட்டார் இல்ல அத்தை அவர் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார் அதனால் தான் என்றால் அப்பொழுது காவேரி தான் கேட்டார் உனக்கு பிஎட்  படிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறதா என்று கேட்டார்….

வேணி தனது அத்தையை ஒரு நிமிடம் அமைதியாக பார்த்துவிட்டு ஆமாம் அத்தை எனக்கு எழில் அண்ணனையும் மகா அண்ணியையும் பார்த்து ஆசிரியராக வேண்டும் என்று தோன்றுகிறது அதனால் தான் என்றால் சரி அதை நீ வீட்டில் இருக்கும் எங்களிடம் சொல்லி இருக்கலாமே முகிலிடம் சொல்லி இருக்கலாமே என்றார் அத்தை நான் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ளாதீர்கள் …

நான் இதுவரை அவரிடம் என்னுடைய விருப்பத்தை சொல்லவில்லை ஏன் மகிழ் அண்ணனிடமும் நானாக சொல்லவில்லை அவராக தான் என்னுடைய விருப்பத்தை தெரிந்து கொண்டு இவ்வாறு செய்திருக்கிறார் என்றவுடன் காவேரி அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை முகில் போன் பேசிவிட்டு வெளியில் வந்தான் என்ன வேணி என்று கேட்டுக் கொண்டே வந்தான் ….

வேணி சுந்தரியிடம் இருந்த பி.எட்  ஃப்பார்மை புடுங்கிக் கொண்டால் சுந்தரி வேணியை பார்த்து சிரித்தார் கோதையும் சிரித்தார் காவேரி முறைத்தார் வேணி தனது அத்தையை பார்த்து சிரித்து விட்டு மகிழ் கொடுத்த ஹனிமூன் டிக்கெட்டை மட்டும் சுந்தரியிடம்  கண்ணால் காண்பித்தால் முகிலிடம் கொடுக்குமாறு முகிலும் அதை வாங்கி பார்த்துவிட்டு வேணியை பார்த்தான்…

அவளது தலை கீழே குனிந்த உடன் அமைதியாக இருந்தான் எப்படா கிளம்புகிறீர்கள் என்று கேட்டார் காவேரி அவன் ஒரு நிமிடம் வேணியை பார்த்துவிட்டு நாளை காலை கிளம்புகிறோம் என்றான் சரி நேரம் ஆகிறது பாருங்கள் போய் நேரத்தோடு தூங்குங்கள் என்றார் வீட்டில் அனைவரும் இவர்கள் நால்வரும் மேலே இருக்கும் போதே  சாப்பிட்டு விட்டார்கள் …

அனைவரும் அவர்கள் அறைக்கும் சென்று விட்டார்கள் மறுநாள் காலை 10 மணி போல் முகில் வேணி இருவரும் ஹனிமூன் செல்வதற்கு கிளம்பினார்கள் மகிழ் அங்கு சென்று அவர்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்திருந்தான் டிக்கெட் அங்கு சென்று யாரை பார்க்க வேண்டும் என்று அனைத்தையும் முகில் கையில் கொடுத்துவிட்டு வேனியின் தாடையில் லேசாக தட்டி விட்டு வேனியின் கையிலும் சிறிது பணத்தை கொடுத்து விட்டு சென்றான் ..

வேணியும் அமைதியாக வாங்கிக் கொண்டால் மகிழ் சென்ற பிறகு கோதை தான் சிரித்துக்கொண்டே கேட்டார் உனக்கு உன்னுடைய கணவன் எந்த செலவும் செய்ய மாட்டானா என்று அதற்கு வேணி சிரித்து கொண்டே அத்தை என்னுடைய கணவன் எனக்கு ஆயிரம் செலவு செய்யலாம் ஆனால் இது எதுவும் எனது அண்ணன் கொடுப்பது போல் வராதே எனது அண்ணன் கொடுப்பது வேறு கணவன் செலவு செய்வது வேறு என்று சிரித்தால்….


சிரித்துக் கொண்டே முகில் கையை கெட்டியமாக பிடித்தால் எங்கு அவர் தவறாக எண்ணி விடுவாரோ என்று வேண்டி முகில் வேணியை பார்த்து சிரித்தான் பிறகு நேரமாகுவதால் இருவரும் சாமி கும்பிட்டு விட்டு கிளம்பினார்கள் இருவரும் ஹனிமூன் சென்று ஐந்து நாட்கள் தங்கி   விட்டு வருவதாக பிளான் இருந்தது வேணி அங்கு சென்றவுடன் முகிலையே  பார்த்துக் கொண்டிருந்தாள் …

முகிலும் வேணியை பார்த்த சிரித்து விட்டு என்ன வேணி என்று கேட்டான் வேணி அந்த பிஎட் ஃபார்ம்மை முகில் கையில் கொடுத்துவிட்டு இது மகிழ்  அண்ணன் கொடுத்தது எனக்கு பி எட் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது நான் இப்போது எம் பீல் பண்ணவில்லை எனக்கு எழில் அண்ணன்  மகா அண்ணியையும் பார்த்து ஆசிரியராக வேண்டும் என்று ஆசை இருக்கிறது ….

நான் உங்களிடம் சொல்ல வில்லை என்று கோபித்துக் கொள்வீர்கள் என்றால் உனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறது என்று எனக்கும் தெரியும் ஆனால் அதை நீயாக சொல்வாய் என்று காத்துக் கொண்டிருந்தேன் அதை மகிழ் தெரிந்து கொண்டு உன்னை சேர்த்தும் விட்டு விட்டான் இதில் என்ன இருக்கிறது என்றான் இல்லை நான் உங்களிடம் சொல்லவில்லை என்று விட்டு அமைதியாக இருந்தால்….

முகில் அவளைப் பார்த்து சிரித்தவன் உன் அண்ணன் உனக்கு செய்வதை நான் கோபித்துக் கொள்ள மாட்டேன் என்றான் வேணி வேகமாக முகிலை கட்டிக்கொண்டு அழுதால் பரவாயில்லையே மேடத்துக்கு என்ன கட்டிப்பிடிக்கணும்னு தோனி இருக்கு கொஞ்சம் வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருக்கும் போல என்றான்….

வேணி முகில் நெஞ்சிலே இரண்டு மூன்று அடிகளை போட்டுவிட்டு எனக்காகவது இப்பொழுதாவது தோன்றுகிறது ஆனால் நீங்கள் உங்களுக்கு தோன்றியதை என்னிடம் இப்பொழுது வரை மறைத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று சொன்னால் அவன் அதிர்ச்சியாக நான் என்ன வேணி உன்னிடம் மறைத்தேன் என்றான்…..

நீங்கள் எதையும் என்னிடம் மறைக்கவில்லை என்று சொல்லுங்கள் என் கண்ணை பார்த்து என்று கேட்டாள் முகில் அமைதியாக தலையை கீழே குனிந்து கொண்டான்  உங்களுக்கு என் மேல் ஆசை இருக்கிறது என்பதை நீங்கள் என்னிடம் மறைத்து விட்டீர்கள் தானே என்றாள் எனக்கும் தெரியும் அதுவும் நீங்கள் கிட்டத்தட்ட எத்தனை நாட்களாக என்னிடம் இருந்து மறைகிரீர்கள் அதை  என்னுடைய கண்ணை பார்த்து பேசுங்கள் என்றாள் ……

இல்லை வேணி நீ படித்துக் கொண்டிருக்கும் பெண் என்று தான் நான் படித்துக் கொண்டிருக்கும் பெண் என்று இன்னும் எத்தனை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் என்று எனக்கு புரியவில்லை என்றால் வேணி எனக்கு உன் மேல் ஆசை வரும்போது உனக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது என்றான்  ஏன் தேர்வு நடந்து கொண்டிருந்தால் படிக்காமல் விட்டு விடுவேனா என்றால் …..

முகில் சிரித்துவிட்டு நீ படிக்க மாட்டாய் என்று நான் சொல்லவில்லை ஆனால் நான் ஒன்று  சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளாதையோ நான் நிறைய பேர் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஏன் கண் குளிர இனி மகா இருவரையும் பார்த்தும் இருக்கிறேன் அவர்கள் இருவரும் அவர்கள் வாழ்க்கையை தொடங்கிய ஒரு சில நாட்கள் வெளியில் நடப்பது கூட தெரியாத அளவிற்கு தான் நடந்து கொள்கிறார்கள்…

அப்படி இருக்கும்போது நான் எனக்கு உன் மேல் விருப்பம் இருக்கிறது என்று சொல்லி நாம் இருவரும் இணைந்தால் தேர்வு நடக்கும் நிலையில் உன்னுடைய படிப்பில் கவன சிதறல் ஏற்பட்டால் அதனால் தான் என்றவுடன் வேனி அவனை இறுக்கமாக கட்டி அணைத்தாள் அடியே விடு டி என்னவோ பண்ணுது என்றான் வேணியும் சிரித்து கொண்டே எனக்கும் தான் என்னவோ பண்ணுது என்றால் …

வேணி நீ இவ்வளவு பேசுவியா என்று கேட்டான் அவளை பார்த்து சிரித்து கொண்டே நான் என்னுடைய புருஷனிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவேன் என்று சொன்னால் அவள் அவ்வாறு சொன்னவுடன் முகில் கைகள் அவளது உடலில் அத்து மீறியது வேணி சினிங்கி கொண்டே அவனுக்கு ஒத்துழைத்தால் அதன் பிறகு அவர்கள் இருவரும் அவர்களது இல்லறத்தை ஆரம்பித்தார்கள் .,

அவர்கள் இருவரும் அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் நோக்கி சென்றார்கள்  முகில் வேனி இருவரும் ஹனிமூன் சென்ற அன்று இரவு மகிழ் வீட்டிற்கு வந்த பிறகு மகிழ் சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் நின்று நிலவையே பார்த்து கொண்டு இருந்தான் மகா அமைதியாக மகிழ் அருகில் போய் நின்றால் மகிழ் மகா இருப்பதை உணர்ந்தும் அமைதியாக இருந்தான்….


  மகா மகிழை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்துக் கொண்டு மாமா உனக்கு என் மேல் கோபமா என்றால் அவனது கண்ணில் இருந்து நீர் பட்டு அவளது கையில் பட்டது மாமா என்று மகிழின் முன் பக்கம் வந்து நின்றால் மகா எனக்கு உன் மேல் கோபம் இல்ல டி வருத்தம் தான் வேணி அவ்வாறு கேட்டதால் தானே நீ உன் மனதில் இருப்பதை சொன்னாய் நீ உன் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்தது எனக்கு சந்தோஷம் தான் ….

ஆனால் உனக்கு எப்படி எல்லாம் எதிர்பார்ப்புகள் இருந்தது என்று என்னிடம் சொல்லி இருக்கலாமே என்ற வருத்தம் தான் எழில் சொன்னது போல் நீ அப்போதே என்னிடம் என் சட்டையை பிடித்து ஏன்டா உன்னால் என்னுடைய காதலை வீட்டில் சொல்ல முடியவில்லை என்று கேட்டிருக்கலாமே அதேபோல் நீ நான் உன்னுடன் இணையும் போது என்னுடைய முழு மனதுடன் தான் இணைய வேண்டும் என்று நினைத்திருக்கிறாய்…

நீ என்னை எப்படி எடுத்துக் கொண்டாய் என்று எனக்கு தெரியவில்லை நீ சொல்வது என்னவோ உண்மைதான் நான் உனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக தான் இணைந்தேன் அதற்காக எனக்கு உணர்ச்சியும் இல்லை ஆசையும் இல்லை என்று எண்ணி விடாதே நான் விருப்பப்பட்டு தான் உன்னுடன் இணைந்தேன் அதேபோல் என் விருப்பத்தோடும்  மட்டும் இல்லாமல் உன்னை என்று விட்டு அமைதியாகி விட்டான் …

மகா மகிழையே பார்த்துக் கொண்டிருந்தால் நானும் மனிதன் தாண்டி எனக்கும் எல்லாம் உணர்ச்சியும் இருக்கிறது கடமைக்கு என்று நான் உன்னுடன் இணையவில்லை உன்னை விரும்பி ரசித்து தான் உன்னை ஏற்றுக்கொண்டேன் போதுமா என்று விட்டு மகாவை கட்டி அணைத்தான் மகாவிற்கு லேசாக கண்ணீர் துளிர்த்தது …

மகிழ் அழுது கொண்டிருப்பவனது கண்ணைத் துடைத்து விட்டு அவனது நெற்றியில் முத்தம் வைத்தால் பிறகு தாடையில் முத்தம் வைத்து அவனது கழுத்தை கடித்தால் அடியே நாம் மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கிறோம் என்றான் அதற்கு என்ன இங்கு யார் வரப் போகிறார்கள் என்று கேட்டாள் மகிழ் சிரித்துக் கொண்டே என்னுடன் பிறந்தவனும் உன் கூட பிறந்தவளும் பூனைக்குட்டி போல் வந்து விடுவார்கள் என்று சொன்னான் ….

மகா அவனது தோளிலே அடித்து விட்டு சிரித்து விட்டு வீட்டிற்குள் புகுந்து விட்டால் மகிழும் சிரித்துக்கொண்டே கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவர்களது அறைக்குள் புகுந்தான் மகா மகிழ் இருவரும் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததை மகிழ் சொன்னது போல் பூனைக்குட்டி போல் வந்த எழிலும் நிலாவும் கேட்டுவிட்டு இறுதியில் அவர்கள் பேசியதை கேட்டு தங்களுக்குள்ளே பார்த்து முறைத்து விட்டு லேசாக சிரித்துக் கொண்டும் கீழே இறங்கி விட்டார்கள் ….

அவர்கள் இருவரும் கீழே சிரித்துக்கொண்டே இறங்கி வருவதை பார்த்து காவேரி அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தார் உங்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் மேலே என்ன வேலை என்றும் கத்தினார் காவேரி இருவரையும் ஏதாவது சொல்லி திட்டுவாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 107”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *