காவேரி உங்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் மேலே என்ன வேலை என்று கேட்டவுடன் இருவரும் திரு திரு வென முழித்தார்கள் காவேரி இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு நீங்கள் இருவரும் சின்ன பிள்ளை இல்லை என்று நினைக்கிறேன் அடிக்கடி இனிமேல் இரவு நேரத்தில் மேலே செல்வதை குறைத்து கொள்ளுங்கள் ….
இரவு 8 மணிக்கு மேல் நீங்கள் இருவரும் இனிமேல் மேலே செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு அமைதியாக அவரது அறைக்கு சென்று விட்டார் இனி சிரித்தால் எழில் இனியின் தலையில் கொட்டி விட்டு என்ன சிரிப்பு என்றான் டேய் அத்தை சொல்லிவிட்டு சென்றது உன் காதில் விழ வில்லையா என்று கேட்டாள் …..
ஓவரா பண்ணாத டி இப்ப அதுக்கு என்ன என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே எழில் அவனது அறைக்கு சென்று விட்டான் நிலாவும் சிரித்துக் கொண்டே அவளது அரைக்கு சென்று விட்டாள் வீட்டில் அனைவரும் இதுங்க இரண்டும் என்ன லூசா என்று எண்ணினார்கள் ஆனால் இருவரும் சிரித்தது மகிழ் தங்கள் இருவரையும் பூனை நடை போட்டு வருவார்கள் என்று சொன்னதை எண்ணி சிரித்துவிட்டு அவர்கள் அறைக்குள் சென்றார்கள்….
மகிழ் மகா இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்தவுடன் சந்தோஷத்தில் தூங்கி விட்டார்கள் இப்படியே அந்த நாட்களும் சென்றது ஐந்து நாட்களுக்குப் பிறகு முகில் வேனி இருவரும் இரவு எட்டு மணிபோல் வீட்டிற்கு வந்தார்கள் அவர்கள் இருவரும் வரும்பொழுது அனைவரும் வரவேற்பரையில் தான் இருந்தார்கள் சுந்தரியும் கோதையும் மட்டும் சமையலறையில் இருந்தார்கள் …
வேணி வீட்டிற்கு வந்து இறங்கியவுடன் வேகமாக கீழே இறங்கி ஓடினாள் முகில் சிரித்துக் கொண்டான் இவளுக்கு தன்னைவிட மகாவும் தனது சுந்தரியும் தான் தேவை முக்கியம் என்று எண்ணி சிரித்தான் வேணி வரவேற்பு அறையில் இருக்கும் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு சுந்தரி அங்கு இல்லை என்றவுடன் வேகமாக சமையல் அறைக்குள் புகுந்தால் வீட்டில் அனைவரும் வேனியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் …
வேணி சுந்தரியை பின்பக்கம் இருந்து கட்டிக்கொண்டு அவரது தாடையில் முத்தம் வைத்தால் அவர் வேகமாக அவளை திரும்பிப் பார்த்தார் அவர் வேகமாக திரும்பிய உடன் வேணி சுந்தரி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் அவர் அவளை பார்த்து சிரித்து விட்டு நெற்றியில் முத்தம் வைத்தார் பிறகு வேணியை பார்த்து சிரித்தார் வேணியை கையோடு வரவேற்பரைக்கு அழைத்துக் கொண்டு வந்தார் …
அப்பொழுதுதான் முகில் வீட்டிற்குள் வந்தான் காவேரி தான் என்ன வேணி வேகமாக வந்து சுந்தரியை பார்க்கிறாய் என்று கேட்டார் வேணி முகிலை பார்த்தால் முகில் வேணியை பார்த்து முறைத்தான் என்ன அண்ணா வேணியை பார்த்து முறைகிறாய் என்று நிலா சிரித்துக் கொண்டே கேட்டால் அவள். வந்தவுடனே வேகமா அத்தையை பார்க்க ஓடி வந்து விட்டால் ….
நிலா எடுத்துக்கொண்டு வந்த பைகளை தூக்கிட்டு வருவது யாரு என்று கேட்டான் நிலா முகிலை பார்த்து சிரித்து விட்டு நான் எடுத்துட்டு வரேன் என்று சொன்னால் அதேபோல் எழிலும் சொன்னான் பிறகு இருவரும் சென்று காரில் இருந்து அனைத்து பைகளையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள் வேணி முகில் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்று தாத்தா பாட்டி காலில் விழுது ஆசீர்வாதம் வாங்கினால் …
அவர்கள் இருவரும் இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு ஆசீர்வாதம் செய்தார்கள் அதன் பிறகு தான் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றை உணர்ந்தார்கள் பிறகு காவேரி கந்தன் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் கோதை மணி காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் கோதை வேணிக்கு நெட்டி முறித்தார் பிறகு அவளது நெற்றியில் முத்தம் வைத்தார் ….
இனி வேணியை கட்டிக்கொண்டு சிரித்தால் உதிரன் முகிலை கட்டிக்கொண்டு சிரித்தான் பிறகு நிலா இதில் என்னென்ன இருக்கிறது இவ்வளவு வெயிட்டா இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே நிலா வந்தால் எழிலும் நிலாவும் அனைத்து பைகளையும் தூக்கிக் கொண்டு வந்தார்கள் வேணி வேகமாக நிலா கையில் இருக்கும் ஒரு பையை திறந்து அதில் இருக்கும் புடவை ஒன்று எடுத்து நிலா கையில் வைத்தால்…..
இந்த புடவை சூப்பராக இருக்கிறது ஆனால் என்ன அனைவருக்கும் எடுத்துக் கொண்டு வந்து இருக்கலாம் என்றால் முகில் அனைவருக்கும் நான் நிலா என்றான் இல்லை அண்ணா இதே போல் என்றால் வேணி சிரித்து கொண்டே அதே கலர் டிசைன் புடவையை எடுத்து அனைவரின் கையிலும் கொடுத்தால் அனைத்தும் ஒரே கலர் ஒரே டிசைன் நிலா என்னென்ன என்று கேட்டாள் இந்த புடவை நன்றாக இருக்கிறது என்று முதலில் வேணிக்கு நான் எடுத்தேன்…
வேணி ரொம்ப அழகாக இருக்கிறது இதே போல் வீட்டில் அனைவருக்கும் எடுக்க வேண்டும் என்று சொல்லி எடுத்தால் என்று சொல்லி சிரித்தான் பிறகு அது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் வெவ்வேறு கலரில் ஒவ்வொரு துணியை எடுத்துக் கொண்டு வந்து இருந்தார்கள் பிறகு ஒவ்வொருவருக்கும் என்று வாங்கிய பொருட்களை அனைவருக்கும் கொடுத்தார்கள்…
வேணி ஒரு பையை மட்டும் தூக்கி போட்டு வேகமாக மேலே ஏறினால் அப்பொழுது காவேரி தான் தனது தொண்டையை செருமினார் உடனே சுந்தரி வேணி அவர்கள் இருவரும் இல்லை என்றார் ஏன் ம்மா எங்கு என்று கேட்டால் அப்பொழுதுதான் மகாவும் மகிழும் வீட்டுக்குள் நுழைந்தார்கள் அண்ணா எங்கு இந்த நேரத்தில் சென்று வருகிறீர்கள் மணி 9:00 மணி ஆகப்போகிறது என்றால் ….
எப்போது வந்தீர்கள் வேணி என்று கேட்டான் இப்பொழுதுதான் என்று சொல்லிவிட்டு மகிழை வேகமாக அவர்களது வீட்டு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றாள் வீட்டில் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை மகிழ் நெளிந்து கொண்டு நின்றான் மகாவையும் அருகில் இருக்க வைத்துவிட்டு முகிலை பார்த்தால் முகில் வேணியின் அருகில் வந்தவுடன் இருவரும் அவர்களது காலில் விழுந்தார்கள் …
வேணி என்று காவேரி கத்தினார் அத்தை நான் உங்கள் தம்பி மகனை இங்கு அழைத்துக் கொண்டு வரவில்லை என்னுடைய மகிழ் அண்ணன் என்னுடைய அண்ணனாக இந்த வீட்டு பூஜை அறையில் நிற்பதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு இருவரது காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் பிறகு மகிழும் மகா இருவரும் ஆசீர்வாதம் செய்தார்கள் …
பிறகு மகா அவளது நெற்றியில் முத்தம் வைத்து சந்தோஷம் வேணி என்றாள் மகிழ் கட்டி கொண்டான் எங்க அண்ணி சென்று வருகிறீர்கள் என்று கேட்டால் மகிழ் சிரித்துக் கொண்டே நீ ஒரு சந்தோஷமான செய்தி சொன்னது போல் நானும் உனக்கொரு சந்தோஷமாக செய்தி சொல்கிறேன் என்றான் எங்க அண்ணா சென்று வருகிறீர்கள் என்று திரும்பவும் கேட்டு விட்டு என்ன அண்ணா சந்தோஷமான செய்தி என்று கேட்டால் ….
இப்போது நாங்கள் இருவரும் மருத்துவமனைக்கு சென்று வருகிறோம் என்றான் இப்பொழுது இந்த நேரத்திலா என்று கேட்டால் ஆமாம் வேணி என்று விட்டு இப்பொழுது உன்னுடைய அண்ணிக்கு ஐந்தாவது மாதம் முடியப்போகுது அல்லவா அதனால் தான் செக்கப் செய்துவிட்டு வரலாம் என்று என்றான் அதில் என்ன சந்தோஷமான விஷயம் என்று கேட்டால் ….
மகிழ் சிரித்துக் கொண்டே உன்னுடைய அண்ணி இப்பொழுது இரட்டை உயிர் மட்டுமல்ல என்று விட்டு அமைதியாக இருந்தான் வீட்டில் உள்ள அனைவரும் இவன் என்ன சொல்கிறான் என்று அவனைப் பார்த்தார்கள் மகிழ் சிரித்து கொண்டே மூன்று உயிராக இருக்கிறாள் என்றவுடன் நிலா வேனியை தள்ளிவிட்டு தனது அக்காவை வேகமாக கட்டிக்கொண்டால் …
எழில் சிரித்துக் கொண்டே நிலா தலையில் கொட்டி விட்டு லூசு அவளது வயிற்றை அழுத்தி புடிச்சிட்டு இருக்க இறுக்கி என்றான் நிலா சாரி சாரி என்று சொல்லிவிட்டு அமைதியாக நகர்ந்து நின்றாள் வீட்டில் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது என்னை இரட்டை குழந்தைகளாக என்று எண்ணினார்கள் பரவால்ல எனக்கு ஜோடியாக என்னை மாதிரி இரண்டு உசுரு வரப்போகுது என்றான் முகில்….
உதிரன் முகில் தலையில் கொட்டினான் அது என்னடா உனக்கு ஜோடியா பின்ன இல்லையா என்ன மாதிரியே கயல் மாதிரியே இரட்டையர்கள் என்று சொல்லி சிரித்தான் காவேரி கண்கள் கலங்கியது தான் பேசியதை முகில் அதன் பிறகு தான் உணர்ந்து விட்டு தனது தாயைப் பார்த்தான் அவரது கண்கள் கலங்கி இருப்பதை பார்த்துவிட்டு அமைதியாகி விட்டான் …
மகிழ் மகாவை அழைத்துக் கொண்டு அமைதியாக மொட்டை மாடிக்குச் சென்று விட்டான் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் விளக்கேற்றி சாமி கும்பிட்டார்கள் மகாவிற்கு இரட்டை குழந்தை என்பதற்காகவும் முகில் வேணி இருவரும் அவர்களது வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள் என்பதற்காகவும் அப்பொழுது சூழ்நிலையை சகஜமாக்குவதற்கு நிலா தான் சிரித்துக் கொண்டே அப்போ என்னை சீக்கிரம் அத்தை ஆக்கி விடுவாய் என்று சொல்லு வேணி என்றால் …
காவேரி சிரித்துக் கொண்டே நிலா தலையில் லேசாக கொட்டி விட்டு ஏன் டி இருவரும் அவர்களது வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக நீ சீக்கிரம் அத்தை ஆகணுமா அவங்க ரெண்டு பேருக்கும் எப்ப விருப்பம் இருக்கோ அப்ப குழந்தை பெத்துக்கட்டும் என்று மறைமுகமாக வேணிக்கும் சொல்லிவிட்டு சென்றார் வேணி தங்களுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது அவளாக விருப்பப்பட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி அவ்வாறு சொன்னார்……
நிலா குழந்தை பிறக்கிற அப்போ பிறக்கட்டும் பெரியம்மா அது எப்போது பிறந்தாலும் ஏத்துக்க நானும் ரெடி அது எப்போ பிறந்தாலும் அதுக்கு அத்தை நான் தானே என்று தனது பெரியம்மாவை பார்த்து சொல்லிவிட்டு முகிலை பார்த்து கண்ணடித்தால் எழில் விசில் அடித்தான் முகில் எழில் தோளில் தட்டி விட்டு அவனது அறைக்கு ஓடிவிட்டான் எழில் சிரித்துக் கொண்டே விசில் அடித்தான்…
இதை மேலே இருந்து பார்த்த மகிழும் சிரித்தான் பிறகு மகாவிடம் சொல்லிவிட்டு மகாவின் மடியில் படுத்துக்கொண்டு அவளது வயிற்றில் முத்தம் வைத்தான் மகாவிற்கு உடல் சிலிர்த்து அடங்கியது அன்று இரவு அனைவரும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷத்தில் தூங்கி விட்டார்கள் மறுநாள் காலையில் காலை 6:00 மணி போல் இனி வீட்டில் உள்ள அனைவரையும் கோவிலுக்கு கிளம்ப சொன்னால் அனைவரும் எதற்கு என்று கேட்டதற்கு நான் வேணி முகில் இருவரது பேயரிலும் கோவிலில் அர்ச்சனை சொல்லி இருக்கிறேன்….
வீட்டில் அனைவரும் சென்று பார்த்து விட்டு வரலாம் என்றாள் சரி என்று விட்டு அனைவரும் கிளம்பினார்கள் அவர்கள் கிளம்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் மகா மகிழ் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள் இருவரும் வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அவர்களது வண்டியில் கிளம்பி விட்டார்கள் எழில் மகா இருவருக்கும் இப்பொழுது விடுமுறை விட்டிருக்கிறார்கள் …
இன்னும் ஒரு மதத்திற்கு பிறகுதான் அவர்களுக்கு கல்லூரி ஆரம்பம் ஆகும் மகா மகிழ் இருவரும் கோவிலுக்கு தான் சென்றார்கள் கோவிலுக்கு சென்ற பிறகுதான் அவர்கள் இருவருக்குமே ஒரு விஷயம் தெரியும் கயல் வர சொல்லி தான் இருவரும் கோவிலுக்கு சென்றார்கள் அந்த கோவிலில் கயல் மகாவிற்கு ஐந்தாவது மாதம் வளையல் போட்டு சாதம் தருவதற்கான அனைத்து ஏற்பாடும் செய்திருந்தால் …
ஊரில் உள்ள ஒரு சில பெரியவர்களையும் அழைத்து இருந்தால் என்பதே அங்கு போன பிறகுதான் தெரிந்து கொண்டார்கள் மகா மகிழ் இருவரது கண்ணிலும் நீர் வடிந்தது கயல் மகாவின் கண்ணை துடைத்துவிட்டு தனது அத்தைக்கு கண் காணிபித்தால் அவர் மகாவை அழைத்துக் கொண்டு சென்று ஒரு பியூட்டிஷியன் வரவைத்து இருந்தார்கள் …
மகாவிற்கு வேறொரு உடை அணிந்து புது புடைவை தான் அதை தண்ணீரில் அம்பிகா நேற்று தண்ணிரில் நினைத்து காய போட்டிருந்தார் மாசமாக இருக்கும் பெண் புது துணி உடுத்த கூடாது என்பதற்காக அதை மகாவிற்கு கட்டிவிட்டு பியூட்டிஷனை வைத்து அலங்காரம் செய்தார்கள் மகா அலங்காரம் செய்துவிட்டு வளைகாப்பு செய்வதற்காக ஐந்தாம் மாதம் சோறு கொடுப்பதற்கு மனை போடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வரும் வேலையில் தான் இனி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த கோவிலில் நுழைந்தால் …
அவர்கள் நுழையும்போதே கோவிலில் ஏதோ விசேஷம் போல என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள் காவேரி பேசிக்கொண்டே வரும்போது தான் மகா மகிழ் கயல் குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்க இருப்பதை பார்த்துவிட்டு இனியை பார்த்தார் இனி தனது அத்தையை பார்த்து சிரித்துவிட்டு சாரி அத்தை கயல் தான் அனைவரையும் அழைத்துக் கொண்டு வர சொன்னாள் ….
அவள் மாகவிற்கு ஐந்தாவது மாதம் வளையல் போட்டு சாதம் தருவதற்காக நம் வீட்டில் வைத்து கொடுத்தால் அவளால் பார்க்க முடியாது என்பதால் அவள் கோவிலில் வைத்து தருகிறாள் என்று சொன்னால் மாகவிற்கு மூன்றாவது மாதம் இருக்கும் போது அவள் மாசமாக இருந்ததால் அவளால் தர முடியவில்லை இப்பொழுது குழந்தை பிறந்து விட்டது என்பதால் அவள் தர விருப்படுகிறார்கள் என்று சொன்னால் ….
காவேரி அனைவரையும் முறைத்துவிட்டு கோவில் சன்னதிக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அமைதியாக ஐந்தாவது மாதம் கொடுப்பது தெரியும். படியாக மறைவாக ஓர் இடத்தில் சென்று உட்கார்ந்து கொண்டார் எழில் தனது அத்தையை பார்த்து சிரித்தான் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்…..
பிறகு வீட்டில் உள்ள ஊரில் உள்ள ஒரு சில பெரியவர்கள் வந்து மகா மகிழ் இருவரையும் அங்கு போடப்பட்டுள்ள மனையில் உட்கார வைத்து சந்தன நலங்கு வைத்தார்கள் பிறகு கயல் அவளது கையால் செய்த சாதங்களை ஊட்டி விட்டாள் கயல் அன்பு இருவரும் சேர்ந்து மூன்று பவுனில் வளையல் போட்டு விட்டார்கள் மகா எதற்கு என்று கேட்டால் அமைதியாக இரு டி என்னால் உன்னுடைய வளைகாப்பை பார்க்க முடியாது இன்று சொல்லிவிட்டு மகாவிற்கு நெட்டி முறித்தாள்….
அதை பார்த்துக் கொண்டிருந்த காவேரியின் கண்கள் கலங்கியது இங்கு உட்காந்து பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டில் உள்ள அனைவரின் கண்களும் கலங்கியது இனி கயலை கட்டிக்கொண்டு சிரித்தால் காவேரி வேகமாக எழுந்து வந்து சரி கிளம்பலாமா நேரம் ஆகிறது என்றார் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாக காவேரியை பார்த்தார்கள் …
இன்னும் அனைத்து முடியவில்லை என்பது போல் இன்னும் நாம் கூட எந்த நலங்கும் வைக்கவில்லையே என்றும் ஒரு சிலர் எண்ணினார்கள் வீட்டில் அனைவரின் விருப்பத்தையும் காவேரி புரிந்து கொள்வாரா இல்லை காவேரியின் மனநிலையை வீட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்வார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
neenga manasu maralame konjam ippadiye irunthu ena pana poringa