காவேரி வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து சரி நாம் வீட்டிற்கு கிளம்பலாமா நேரமாகிறது என்றார் வீட்டில் உள்ள அனைவரும் காவேரியை அதிர்ச்சியாகிப் பார்த்தார்கள் அனைவரும் இன்னும் அனைத்தும் முடியவில்லை என்று மனதில் எண்ணினார்கள் …
காவேரி அமைதியாக வீட்டிள்ள அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தவுடன் சுந்தரி தான் முதல் ஆளாக எழுந்து நின்றார் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு சரி கிளம்பலாம் வாருங்கள் என்றார் பாண்டியம்மா பாட்டி சுந்தரி என்றார் அத்தை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்கிறோம் இருப்பவர்கள் இருங்கள் வருபவர்கள் வாருங்கள் என்றார் ….
அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள் சுந்தரி காவேரி கையை பிடித்து அவரை அழைத்துக்கொண்டு அமைதியாக வீட்டிற்குச் சென்று விட்டார் கோவிலில் இருந்து கிளம்பும் போது எழிலை பார்த்தார் எழில் நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னவுடன் அமைதியாக காவேரியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார் …
சுந்தரிக்கும் மகாவிற்கு வளையல் போடுவதை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது தான் ஏன் காவேரிக்கும் இருந்தது தான் இருந்தாலும் தங்களால் இதை அனைத்தையும் எடுத்துக்கட்டி செய்ய முடியவில்லை என்ற வருத்தம் காவேரிக்கு அதிகமாக இருந்தது அதை உணர்ந்ததால் சுந்தரி அமைதியாக காவேரியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள் …
கயல் தன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவள் எடுத்துக் கொண்டு வந்த சாதத்தை கொடுத்தால் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டுவிட்டு அனைத்தையும் நல்ல முறையில் முடித்து வைத்துவிட்டு கிளம்பினார்கள் வீட்டில் உள்ள அனைவரும் கோவிலின் ஓரிடத்தில் உட்கார்ந்து மகாவிற்கு ஐந்தாவது மாதம் சோறு கொடுக்கும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு கிளம்பி விட்டார்கள்….
இப்படியே நாட்களும் சென்றது முகில் வேணி இருவரும் அவர்களது வாழ்க்கையை தொடங்கிய பிறகு சந்தோஷமாக இருந்தார்கள் வீட்டில் வேலையை முடித்துவிட்டு தினமும் முகில் கடை வைத்திருக்கும் இடத்திற்கு சென்று சிறிது நேரம் முகிலுடன் உட்கார்ந்து விட்டு வருவாள் பிறகு ஒரு நாள் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்தால் …
அனைவரும் வேணியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் தனது அத்தையிடம் வந்து நின்றால் அத்தை நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொன்னால் என்ன வேணி என்று கேட்டார் அவர் வைத்திருக்கும் கடையை நான் கொஞ்ச நாட்கள் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு படிப்பும் இங்கு தான் போடப்பட்டிருக்கிறது என்றால்…
ஏன் வேணி உன்னை நாங்கள் தினமும் கல்லூரி சென்று வர வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லையே என்றால் அத்தை நான் அதற்கு சொல்லவில்லை வேறு ஒரு விஷயம் பேசுவதற்காக என்றால் அவர் அமைதியாக வேணியை பார்த்தார் மகிழ் அப்பொழுதுதான் படி இறங்கி வந்தான் மகிழ் அண்ணா அமைதியாக ஒரு நிமிஷம் என்றவுடன் மகிழ் அமைதியாக படிகளிலே நின்றான்…
வேணி அண்ணி அண்ணி என்று இரண்டு முறை கீழே இருந்து கத்தியவுடன் மகாவும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தால் தனது கணவன் படியில் நிற்பதை பார்த்துவிட்டு தனது கணவனின் அருகில் வந்து நின்றால் என்ன வேணி என்றவுடன் சொல்கிறேன் அண்ணி என்று சொல்லிவிட்டு தனது அத்தையை பார்த்தால் அவர் வேணியை பார்த்து ஒரு நிமிடம் முறைத்துவிட்டு என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல் என்றார்….
சொல்லுகிறேன் அத்தை அவருக்கு பிஎச்டி பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றால் முகில் வேணி என்று அவளது கையை பிடித்தான் சுந்தரி அவள் சொல்லட்டும் டா இப்ப என்ன என்று கேட்டார் அத்தை என்றான் அமைதியாக இரு நீ வாய்விட்டு கேட்காததை உன்னுடைய மனைவி கேட்கிறாள் அதில் என்ன தவறு என்றார் சுந்தரி என்ன சொல்கிறாய் என்று காவேரி கேட்டார்….
உண்மை தான் அண்ணி முகிலுக்கு அக்ரிகல்ச்சரில் பி ஹெச் டி பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் அவன் பிஹெச்டி பண்ண வேண்டும் என்றால் வெளியே சென்று படிக்க வேண்டும் என்றே ஒரே காரணத்திற்காகவே இத்தனை நாட்கள் அதைப் பற்றி அவன் பேசாமல் இருந்தான் ஆனால் அவனது விருப்பத்தை எப்படியோ வேணி தெரிந்து கொண்டு இப்பொழுது நம்மிடம் பேசுகிறாள் என்றார்….
காவேரி சுந்தரி அவன் வெளியூர் சென்று படிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அவன் இப்பொழுது படிக்க வேண்டாம் என்றார் அத்தை என்றாள் வேணி நீ முதலில் உன்னுடைய படிப்பை முடி அதன் பிறகு இதைப் பற்றி பேசலாம் என்று சொல்லிவிட்டு மகிழை பார்த்துவிட்டு அமைதியாக அவரது அறைக்கு சென்று விட்டார் ….
மகிழ் சிரித்துக் கொண்டே வேணி இடம் வந்து வேணியை அழைத்துக் கொண்டு பூந்தோட்டத்திற்கு வந்தான் அண்ணா என்றால் அத்தை சொல்வதில் எனக்கு எந்த தவறும் தெரியவில்லை அத்தை சொல்வது போல் நீ உன்னுடைய பிஎட் படிப்பை இரண்டு வருடம் முடி வேணி கொஞ்சம் பொறுமையாக இரு முகில் இத்தனை வருடம் அமைதியாக தான் இருந்தான் இப்பொழுதும் நான் அவனுடைய கனவை கலைக்க சொல்லவில்லை …
ஆனால் இரண்டு வருடம் அதை ஒத்திவைக்கலாம் அல்லவா ஒன்றும் அவர் அவசரம் இல்லையே அண்ணா அவருக்கு மேற்கொண்டு படித்து விட்டு அதைப் பற்றி தெரிந்து கொண்டு விவசாயத்தில் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரே என்றாள் நீ சொல்வது அனைத்தும் எனக்கும் புரிகிறது அதற்கான நேரம் காலம் வரட்டும் என்றான்…
அண்ணா எனக்கு புரியவில்லையே என்றால் மகா சிரித்துக்கொண்டே வந்து வேணி குழந்தை இப்போது வேண்டாம் என்று ஏதாவது முடிவு செய்து இருக்கிறாயா என்று கேட்டால் அண்ணி நாங்கள் அப்படியெல்லாம் எதுவும் முடிவு செய்யவில்லை நாங்கள் இருவரும் எப்போதும் போல் தான் இருக்கிறோம் என்று விட்டு பிறகு மகா கேட்டதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு மகாவை பார்த்தால் …
அண்ணி என்றால் மகா வேணியை பார்த்து சிரித்து விட்டு ஒன்றும் அவசரமில்லை வேணி என்று சொல்லிவிட்டு அமைதியாக மாடிப்படி ஏறிவிட்டாள் நீ பிஎட் முடித்த பிறகு அவனது கடையை எடுத்து பார்த்துக் கொள்ளலாம் அதன் பிறகு அவன் வெளியே சென்று படித்து விட்டு வரட்டும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றான் வேணியும் அதன் பிறகு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள் …
வேணி விட்டிற்குள் வந்தவுடன் முகில் வேணியை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றான் வேணி நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று உனக்கு புரிகிறதா என்றான் எனக்கு எல்லாம் புரிகிறது நீங்கள் ஏன் உங்களது விருப்பத்தை வீட்டில் உள்ளவர்களுடன் சொல்லவில்லை எனக்கு வீட்டில் உள்ள அனைவரையும் விட்டுவிட்டு வெளியே செல்வதற்கு விருப்பம் இல்லை அதனால் தான் சொல்லவில்லை…
அதற்காக உங்களுடைய கனவை அழிக்க வேண்டுமா என்றாள் நான் எப்பொழுது சொன்னேன் என்னுடைய கனவை அழிக்க போகிறேன் என்று ஆனால் நான் இதுவரை இது போல் சென்றதில்லையே என்று தானே சொல்கிறேன் நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லையே என்றான் வேணி முகிலை கட்டிக்கொண்டு சிரித்தால் என்னடி என்றான் …
ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு மகா மகிழ் பேசியதை சொல்லி சிரித்தால் முகிலும் வேனியை கட்டிக்கொண்டு அவளது காது மாடலில் லேசாக கடித்துவிட்டு உனக்கு சம்மதமா என்றான் நான் எப்போ உங்களிடம் குழந்தை வேண்டாம் என்று சொன்னேன் என்று கேட்டால் அடி கள்ளி என்று அவளது தாடையில் கிள்ளினான் சரி விடுங்க என்று விட்டு சிரித்துக் கொண்டே வெளியே வந்தால் …
நிலா குறுகுறுவென வேணியை பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி நிலா தலையில் கொட்டி விட்டு என்னடி என்றாள் இல்ல போகும் போது அண்ணா உன்னை கை புடிச்சு இழுத்துட்டு போனார் உடனே பெருசா ஏதாவது வெடிக்கும் என்று பார்த்தேன் ஆனால் வரும்போது இப்படி வெட்கப்பட்டு சிரிச்சிட்டு வரியா அதான் என்றால் அன்னைக்கு என்கிட்ட நீ ஒரு விஷயம் கேட்டல அதை உனக்கு பண்ணி கொடுக்க முடிவு பண்ணி இருக்கோம் என்றால் ….
நிலா தலையை சாய்ந்து கொண்டே நான் என்னடி கேட்டேன் நீ அதை பண்ணி தருவதற்கு என்று கேட்டால் வேணி நிலா கையை இறுகி பிடித்து கொண்டு அன்று நீ அத்தையாக வேண்டும் என்று கேட்ட இல்லை அதற்கான ஸ்டேப் எடுத்து வைப்பதற்கு என்று சொல்லிவிட்டு வேகமாக சமையல் அறைக்குள் புகுந்து விட்டால் வேணி வேகமாக வரும் பொழுது காவேரியின் மீது மோதி விட்டாள் ….
நிலாவும் பின்னாடியே உண்மையாகவா என்று கேட்டுக் கொண்டே வந்தால் காவேரி இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு என்ன டி சின்னப்புள்ளத்தனமாக விளையாடிட்டு இருக்கீங்க வீட்டுக்குள்ள என்றார் நிலா அவரைப் பார்த்து சிரித்துவிட்டு பெரியம்மா உங்க மருமக உங்கள பாட்டி ஆக்க முடிவு பண்ணிட்டா என்று சொல்லி சிரித்தால் …
காவேரி இருவரையும் பார்த்து சிரித்தவர் பிறகு முறைத்துக் கொண்டே இப்படி ஓடி பிடிச்சு விளையாடமா உருப்படியான வேற வேலை இருந்தா போய் பாருங்க டி என்று இருவரையும் பார்த்து முறைத்து விட்டு இந்த பக்கம் திரும்பி சிரித்தார் வேணி சிரித்துக்கொண்டே தனது அத்தையை பார்த்து அத்தை இந்த பக்கம் திரும்பி சிரிச்சா உங்க கௌரவம் குறைஞ்சிடுமா என்று சொல்லி சிரித்தால் …
காவேரி இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு பிறகு சிரித்து விட்டார் வீட்டில் உள்ள அனைவரும் வரவேற்பு அறையில் இருந்ததால் நிலா வேணி இருவரும் பேசியதை கேட்டு சந்தோஷம் அடைந்தார்கள் இப்படியே நாட்களும் உருண்டோடியது கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சென்றது மகா எழில் இருவரும் அடுத்த வருடம் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்கள் …
வேணியும் பிஎட் சேர்ந்து விட்டால் தினமும் அவளே அவளது ஸ்கூட்டியில் கல்லூரி சென்று வர ஆரம்பித்து விட்டால் நிலா லேப் ஆரம்பிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கி வைத்து விட்டு அப்ருவல் வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டே வீட்டில் இருந்தால் வீட்டில் சும்மா ஒன்றும் இல்லை அவள் லேப் வைப்பதற்கு எங்கு யாரைச் சென்று பார்க்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளை முழுதாக செய்து கொண்டிருக்கிறாள் ….
இப்படியே நாட்களும் சென்றது இனி கூட குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் இப்போது ஒரு மாதமாக தான் சுந்தரி கூட இப்பொழுது உன்னை யார் செல்ல சொன்னாய் என்று கத்தினார் காவேரி தான் சிரித்துக் கொண்டே சுந்தரி அவளும் எத்தனை நாள் தான் வீட்டில் இருப்பாள் நாம் தான் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பித்து விட்டோம் அல்லவா அவள் காலை இரவு இரண்டு வேளையும் பால் கொடுத்தால் போதும் …
மற்ற நேரங்களில் நாம் சாப்பாடு கொடுத்து பழகிவிடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார் ஆமா அண்ணி நீங்க உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்துருங்க என்று தனது வாயை கோணித்துக் காண்பித்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார் காவேரி சுந்தரியை பார்த்து சிரித்தார் இப்படியே மாதங்களும் உருண்டோடியது…
வேணி வரவேற்பு அறையில் வந்து நின்று கொண்டு அனைவரையும் அழைத்தாள் அனைவரும் வந்து நின்றார்கள் என்ன என்று கேட்டார்கள் வேணி சுந்தரி அருகில் போய் நின்றால் என்ன வேணி என்று கேட்டார் அம்மா மகா அண்ணிக்கு ஏழாவது மாதம் தொடங்கிவிட்டது என்றால் சரி அதற்கு என்ன என்று கேட்டார்….
ஒரு மாமியாராக உங்க மருமகளுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லையா என்று நேரடியாகவே கேட்டால் அவர் வாயை திறக்கவில்லை அமைதியாக இருந்தார் உங்களிடம் இதற்கு பதில் இருக்காது அப்படி தானே என்று சொல்லிவிட்டு கோதை மணி அருகில் வந்து நின்றால் இருவரும் அமைதியாக பார்த்தார்கள் அத்தை நீங்கள் 10 மாதம் சுமந்து பெற்ற மகள் தானே ஒரு அம்மாவாக உங்கள் மகளுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் இந்த மாதிரி நேரத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா என்று கேட்டால்….
கோதையின் கண்கள் கலங்கியது மணி கோதையை தனது தோளில் சாயத்துக் கொண்டார் கோதை பிறகு தனது கண்ணீரை துடைத்துவிட்டு வேணி நீ சொன்னது போல் பத்து மாதம் மட்டும் தான் நான் அவளை என் வயிற்றில் சுமந்தேன் மற்றபடி அவளது எந்த ஒரு நல்லது கெட்டதிலும் இதுவரை நான் தலையிட்டதில்லை என்றார் ஏன் இப்பொழுது இந்த நேரத்தில் கூட அண்ணி உங்களை எதிர்பார்க்க மாட்டார் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டால் ….
வீட்டில் உள்ள அனைவரும் வேணியை பார்த்தார்கள் வீட்டில் அனைவருக்குமே தெரியும் மகா தனது பெற்ற தாயை எதிர்பார்க்காமல் இருப்பாளா அவள் மட்டும் இல்லை மாசமாக இருக்கும் எந்த பெண்ணும் இந்த மாதிரி நேரத்தில் தனது தாயுடன் இருக்க வேண்டும் என்று எண்ணாமல் இருப்பார்களா என்று எண்ணினார்கள் இவர்கள் அனைவரும் எண்ணுவது போல் மகா தன்னுடைய தாய் தன் அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா …..
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️