Skip to content
Home » மகாலட்சுமி 113

மகாலட்சுமி 113

வேணி வெளியே சென்றவுடன் சுந்தரியும் காவேரியும் வேணியை பார்த்து சிரித்தார்கள் திருப்பி இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் அன்றைய இரவு பொழுதும் வந்தது இரவு 8 மணி இருக்கும் அனைவரும் அசதியாக இருந்ததால் சீக்கிரமே சாப்பிட்டு விட்டார்கள் இரவு உணவும் மீதி இருந்ததை அனைவரும்  சாப்பிட்டுக் கொண்டார்கள் …

சாதம் ரசம் இருந்தது அதை சாப்பிட்டு கொண்டு கலவை சாதத்தை ஒரு சிலருக்கு கொடுத்தும் அனுப்பினார்கள் அவர்களும் சாப்பிட்டுக் கொண்டார்கள் அப்பொழுது எழில் ஊரிலுள்ள ஒரு சிலருக்கு அனாதை ஆசிரமத்திற்க்கும் எடுத்துக் கொண்டு சென்று விட்டான் அதற்கு முன்பே 5 சிற்பம் அரிசி காய்கறிகள் என்று அனைத்தையும் கொடுத்துவிட்டான் சாதம் செய்து போட சொல்லி முதியோர் இல்லம் அனாதை ஆசிரமம் கோவில் மூன்று இடதிற்க்கும் சென்று ஐந்து சிற்பம் அதற்கு ஏற்ற காய்கறிகள் அனைத்தையும் மளிகை சாமான் அனைத்தையும் வாங்கி கொடுத்து விட்டான் …

அவன் மகா வளைகாப்பிற்கு என்று செய்து செலவு என்றால் இதை தான் செய்தான் இது எதுவும் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லவும் இல்லை எழில் அனைத்து சாமான்களை ஏற்றுக்கொண்டு வைத்துவிட்டு அனைவருக்கும் காசு கொடுத்து விட்டு வருவதற்காக சென்றிருந்தான் அனைவரும் காலையிலிருந்து செய்த வேலையால் அசதியாக இருந்ததால் இரவு உணவு 8 மணி போல் சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டார்கள்…

அனைவரும் அவர்களது  அறைக்கு படுக்கச் சென்றவுடன் சுந்தரி மேலே சென்றார் அப்பொழுது மகிழ் மகாவிற்கு ரொம்ப நேரமாக கால் தொங்க போட்டு உட்கார்ந்திருந்தால் கால் வலிக்கிறது என்று சொன்னதால் அவளது காலை சுடு தண்ணீரில் வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தான் அவன் என்ன டி கால் இப்படி வீங்கி இருக்கு என்று அழுது கொண்டு இருந்தான் ..

மாமா என்றாள் பின்ன என்ன டி இப்படி வீங்கி விட்டது உனக்கு வலிக்கும் இல்ல என்று சொல்லி அழுது கொண்டே இருந்தான் மகா அமைதியாக மகிழையே பார்த்துக் கொண்டிருந்தால் அப்போது அங்கு வந்த சுந்தரி   அவனை நகர்த்தி விட்டு தனது மருமகளுக்கு அவரே கால் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தார் மகிழ் அமைதியாக தனது அம்மாவை பார்த்தான் …

சுந்தரி மகாவை பார்த்தார் அவளது கண்கள் லேசாக கலங்கியது என்ன டி செய்கிறது என்று கேட்டார் மகா தனது அத்தையை பார்த்து விட்டு எனக்கு அடி வயிறு வலிக்குது வாந்தி அதிகமா வருது என்னால சமைக்க முடியல ஒரு மாதிரியா இருக்கு என்றவுடன் சுந்தரி எழுந்து உட்கார்ந்து என்ன தான்  அவளை கணவனாக மகிழ் தாங்கினாலும் அவளுக்கும் தனது தாய் தேவைப்படுகிறாள் அல்லவா என்று எண்ணினார்….


அவளுக்கு கோதையை விட  காவேரியை விட எப்போதுமே    அவள் தேடுவது என்னை தானே தாயாக இருந்த என்னை எந்த அளவிற்கு அவள் தன்னுடைய அம்மாவை தேடி இருக்கிறாள் எல்லாம் என்னால் தானே என்று வருந்தினார் சுந்தரி மகாவை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் இருக்கும் கட்டிலில் உட்கார வைத்தார் கால் நீட்டி போட்டு உட்கார வைத்தார் பிறகு அவளது மடியில் படுத்தார்….


மகாவிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவரின் தலையை கோதிவிட்டு அவரது நெற்றியில் முத்தம் வைத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாகிறது மகா மடியில் சுந்தரி இது போல் படுத்து இதற்கு முன்பு மற்ற நேரங்களில் அசதியாக இருந்தாலோ சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் மகாவிடம் சொல்லிக்கொண்டே அவளது மடியில் படுப்பார் ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவளது மடியில் படுத்தார்….

சுந்தரியும் எழுந்து மகாவின் நெற்றியில் முத்தம் வைத்து இங்கேயே உட்காரு டி என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்று அவளுக்கு இப்போது இடுப்பு வலி குறைவதற்கு கஷாயம் வைத்து கொடுத்தார் பிறகு சரி நேரமாகிறது ரொம்ப நேரமாக உட்கார்ந்து கொண்டே இருக்கிறாய் படுத்து தூங்கு என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தார் மகிழ் அமைதியாக தனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் …

பிறகு சுந்தரி தனது மகன் அருகில் போய் நின்றவுடன் டேய் இதற்காக வா டா அழுது கொண்டு இருக்கிறாய் இது எல்லாம் அம்மா  எனக்கு பயமாக இருக்கிறது அவளுக்கு மாதம் நெருங்க நெருங்க  இப்போ அவ ஒரு உசுரு மட்டுமில்லை மூன்று உசுரு  என்னால் அவளை நன்றாக பார்த்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை என்றான் டேய் நன்றாக தானே பார்த்துக் கொண்டு இருகிறாய் அப்புறம் என்ன என்றார் இருந்தாலும் அவளுக்கு நீ அருகில் இல்லை என்ற வருத்தம் இருக்க தானே செய்கிறது ….

அவள் உன்னை எந்த அளவிற்கு தேடியிருக்கிறாள் என்பது கூட எனக்கு இப்போது தான் தெரிகிறது என்றான் அவர் சிரித்துவிட்டு டேய் அவள் என்னை தேடுவது ஒன்றும் தவறு இல்லையே என்றார் அம்மா நான் எப்போ அப்படி சொன்னேன் என்றான்  நானும் அதைத்தான் சொல்கிறேன் மாசமாக இருக்கும் பெண் அன்னையைத் தேடுவதில் ஒன்றும் புதிதல்ல சரியா என்ன அவள் கோதையை விட என்னை அதிகமாக தேடுகிறாள்  அவ்வளவுதான் என்றார்.,

அம்மா என்றான் என்னடா என்றார் ஒன்றுமில்லை எனக்கு அவளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும் போய் படு நேரமாகிறது என்று தனது மகனின் தோளில்  தட்டி விட்டு கீழே இறங்கிச் சென்றார் சுந்தரி கீழே இறக்கி வரும் பொழுது காவேரி அப்பொழுது வரவேற்பறையில் தான் உட்கார்ந்து இருந்தார் சுந்தரியை பார்த்து சிரித்தார் …


சுந்தரியும் அமைதியாக காவேரி அருகில் வந்து உட்கார்ந்தவுடன் சுந்தரி கண்ணில் இருந்து நீர் வடிந்தது சுந்தரி கண்ணீரை துடைத்துவிட்டு என்னாச்சு சுந்தரி என்றார்  அவளுக்கு அடி வயிறு அடிக்கடி சுருக்கு சுருக்கு என்று  வலிக்குதுன்னு சொல்றா இப்போ எப்படி இருக்கு என்றார் இப்போ பரவால்ல அண்ணி என்றார் சுந்தரி நீ பயப்படுவது போல் நடக்கும் என்று இல்லை அனைத்தும் நல்லதா நடக்கும் என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குச் சென்றார் ….


சுந்தரியும் ஒரு இரண்டு நிமிடம் உட்கார்ந்து இருந்து விட்டு இறைவனை வேண்டி விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார் காவேரி அவரது அறைக்கு சென்று விட்டார் என்ன காவேரி என்றார் கந்தன் சுந்தரி சொன்னதை சொன்னவுடன் என்ன இருந்தாலும் உனக்கு அவள் மேல் இருக்கும் பாசம் குறையவில்லை ஆனால் கோபம் அதற்கு முன்பு வந்துவிடுகிறது என்றார் கோபம் இல்லை வருத்தம் சரியா என்று சொல்லிவிட்டு அமைதியாக படுத்து விட்டார் …


சுந்தரி வெளியே உட்கார்ந்து இருக்கும்போது தான் எழில் வந்தான் என்னம்மா இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் போய் தூங்கவில்லையா என்றான் நீ எங்கடா இவ்வளவு நேரம் சென்று வருகிறாய் என்றார் இப்பொழுதுதான் அனைவருக்கும் பணம் கொடுத்து விட்டு வருகிறேன் என்று விட்டு வந்தான் சரிடா சாப்பிடலாம் வா என்றார் அவனுக்கு லைட்டாக ரசத்தை சூடு செய்து எடுத்துக் கொண்டு வந்து வைத்துவிட்டு கொஞ்சம் அவனுக்காக இடியாப்பம் செய்திருந்தார் அதை எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்….

அவனும் துணியை மாற்றிக் கொண்டு வந்தான் எதற்கு இடியாப்பம் இவ்வளவு அலைசலில் செய்து இருகிறாய் என்றான் டேய் நான் ஒன்றுமே செய்யவில்லையே வீட்டில் தானே இருந்தேன் நீ சாப்பிடு டா என்று ஊட்டி விட்டார் பிறகு சிரித்தான் இடியாப்பம் சாப்பிட்ட பிறகு செரிக்க வேண்டும் என்பதற்காக ரசம் சாதமும் சாப்பிட வைத்துவிட்டு சரி போய் தூங்கு என்று அனுப்பி வைத்தார்……



நான் போய் அவளை பார்த்து விட்டு வருகிறேன் என்றான் டேய் ஒன்றும் வேண்டாம் என்றார் ஏன் நீ போய் அவளை பார்த்து விட்டு வந்தாயா என்றான் அவர் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்தார் உனக்கு தெரியாதா அவளுக்கு கோதை அத்தையை விட நீ தான் முக்கியம் என்று  கூட உனக்கு தெரியாதா என்றான்..


அவள் மகிழ் என்னிடம் எங்கள்  இரண்டு பேரிடமும் சொல்ல முடியாததை கூட உன் கிட்ட சொல்லா நினைப்பா  என்றான் டேய் நான் அவளை பார்த்துக் கொள்கிறேன் நீ போய் தூங்கு என்றார் உண்மையாகவே என்றான் உண்மையாகவே என்றவுடன் சரி என்று விட்டு வேகமாக அவனது அறைக்கு சென்று விட்டான் தனது அம்மா பேசிய வார்த்தையிலும் சந்தோசத்திலும் அசதியிலும் படுத்தவுடன் தூங்கிவிட்டான் ..


மறுநாளில் இருந்து சுந்தரி தினமும் மேலே சென்று மகாவிற்கு கசாயம் செய்து வைத்துவிட்டு வருவார் காலை உணவு மதிய உணவு செய்து விட்டு வருவார்  இரவுக்கு மாலை 6 மணிக்கு மேலே சென்று சுந்தரி உணவு சமைத்து வைத்து விட்டு வருவார் ஆனால் மகாவிடம் பெரிதாக எதுவும் பேச மாட்டார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் …

வேணியும் கல்லூரி செல்ல தொடங்கி விட்டாள் நிலா அவளது லேப் வைப்பதற்கு அப்ரூவல் வாங்க தேவையான அனைத்தைக்கும் அலைந்து கொண்டிருக்கிறாள் அனைத்து வேலைகளும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது அனைவரும் அவர்களது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் இப்படியே மாதங்களும் உருண்டோடியது மகாவிற்கு ஒன்பதாவது மாதம் தொடங்கி இருந்தது ..


ஒரு நாள் மாலை 4 மணியளவில்  மகிழ் வெளியே சென்று விட்டு வந்தான் வரும்போதே பையா பையா என்று அழைத்துக் கொண்டே வந்தான்  கருப்பையா தாத்தா அவரது அறையில் இருந்து வேகமாக ஓடி வந்தார் வீட்டில் உள்ள அனைவரும் கருப்பையா தாத்தாவையே பார்த்தார்கள் அவர் என்ன டா மகிழா என்று கேட்டுக் கொண்டே வந்தார் மகிழின் கண்களும் லேசாக கலங்கியது கருப்பையாவின் கண்களும் லேசாக கலங்கியது….


அப்பொழுதுதான் பாண்டியம்மா தனது கணவனின் தோளை பற்றி என்ன கிழவனுக்கு இப்பதான் வயசு திரும்புதுன்னு நினைப்போ என்று கேட்டார் என் பேராண்டி என்னை ரொம்ப மாசம் கழிச்சு கூப்பிடுகிறான் டி எனக்கு நாலு வயசு குறைஞ்ச மாதிரி தான் இருக்கும் என்று சொல்லி சிரித்தார் பையா நான் இரண்டு நாட்கள் வெளியே செல்ல வேண்டி இருக்கிறது என்று சொன்னான்….

என்ன டா விளையாட்டா என்றார் இல்ல பையா உனக்கே தெரியும் ஊரில் நடக்கிற பிரச்சினை குடிநீர் சரியா வரலன்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க அதுக்கு மீட்டிங் வெளியூரில் போட்டு இருக்காங்க நான் போய் ஆகணும் என்றான் ஏன் அதற்கு நீ தான் சொல்ல வேண்டுமா என்றார் பாண்டியம்மா பாட்டி ..

பாட்டி நம் வீட்டிலிருந்து யாரையும் அனுப்ப முடியாது என்றான் சரி முத்துவை  போய்விட்டு வர சொல்ல வேண்டியது தானே என்றார் பாட்டி  அதே பிரச்சினை காரணமாக  முத்து இங்கு இருப்பவர்களை போய் பார்க்க வேண்டி இருக்கு பாட்டி அதனால முத்துவும் அங்கே போய் விடுவான்  என்று உடன் கருப்பையா  சரிடா என்று சொல்லிக்கொண்டே நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் ….

அப்பொழுதுதான் எழிலும் வீட்டிற்குள் வந்தான் வெளியே சென்று வந்தான் தனது அண்ணன் வரவேற்பு அறையில் நிற்பதை பார்த்து விட்டு என்னடா என்றான் அதான் எழில்  இருக்கிறான் அல்ல அவன்  பார்த்துக் கொள்வான் என்றார் கருப்பையா தாத்தா அப்போது மகிழ் தாத்தாவை கூப்பிடும் போதே மகா கீழே இறங்கி வந்தால் அவர் எழில் பார்த்து கொள்வான்  என்றவுடன் இல்ல தாத்தா எழில் இருக்க மாட்டான் என்றான்….

அனைவரும் மகிழை பார்த்தார்கள் அவன் நிலா லேப் வைக்கும் விஷயமாக அப்ருவல் வாங்க வெளியூர் நிலாவை அழைத்துக் கொண்டு நாளை காலை கிளம்ப வேண்டும் என்றான் மகிழுக்கு அழுகையாக இருந்தது அழுகையை அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான் அப்பொழுது கருப்பையா தாத்தா தான் ஏன் டி உன்னால் இல்லை வீட்டில் உள்ளவர்களால் மகாவை பாத்து கொள்ள முடியாதா உங்களாலா எல்லாம் என்று கத்தினார் பாண்டியம்மா பாட்டி தனது கணவரிடம் அதற்கு மேல் கத்தினர் நீ என்ன லூசா யா நாளை காலை தானே நாம் குலதெய்வ கோவிலுக்கு கிளம்புகிறோம் என்று சொல்லி தானே சொல்லி இருக்காங்க என்று கத்தினார்…..

குலதெய்வ கோவிலுக்கு இப்போது எதற்கு பாட்டி என்று கேட்டான் டேய் இது நம்ப முறை நாம் தான் கோவில் போய் சாமி கும்பிட்டு  விட்டு  வரணும் என்றார் அவன் வீட்டில் உள்ள தனது அத்தைகளை பார்த்தான் டேய் நீ உன் அத்தைகளை பார்க்காதே உன் அத்தைகள் இருவரும் இந்த வீட்டில் பிறந்த பிள்ளைகள் இதை இந்த வீட்டிற்கு வாழ வந்தவள் தான் செய்ய வேண்டும் உன் அம்மா இல்லை மகா தான் செய்ய வேண்டும்….

மகா எப்பொழுது செய்ய முடியாது என்றவுடன் மகிழ் அமைதியாக தனது பாட்டியை பார்த்தான் டேய் அவள் மாசமாக இருப்பதால் சொல்கிறேன் என்றார் அப்பொழுது அம்மா மட்டும் போய் பொங்கல் வைக்கலாமா என்றான் டேய் இப்போதும் நாம் எதுவும் செய்யப் போகிறது இல்லை நமக்கு பதிலாக மகா மாசமாக இருப்பதால் நம் பங்காளிகள் தான் செய்யப் போகிறார்கள் இப்பொழுது என்ன செய்வது என்று மகிழுக்கு ஒன்றும் புரியவில்லை…

இவ்வளவு நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை மகா கேட்டால் மகிழ் பையா பையா என்று கத்தியுடன் மகாவும் மேலே இருந்து கீழே இறங்கி வந்தால் அவளும் கேட்டுவிட்டு படியிலிருந்து மாமா என்று கூப்பிட்டால் மகிழ் அவளை பார்த்தால் நீ ஒன்றும் கவலைப்படாதே அனைவரும் கோவிலுக்கு சென்றாலும் எழிலும் நிலாவும் அப்ரூவல் வாங்க சென்றாலும் நீ வெளியூர் சென்றாலும் என்னை இந்த வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ள ஆள் இருக்கிறார்கள் …

என்னை பார்த்துக் கொள்வார்கள் என்று தனது பெரியம்மாவை பார்த்துக் கொண்டே சொன்னால் அவர் மகாவை முறைத்தார் மாமா நீ அமைதியாக மேலே வா என்னை பார்த்துக் கொள்ள ஆள் இருப்பார்கள் வீட்டில் உள்ளவர்களும் நிம்மதியாக கோவிலுக்கு சென்று வாருங்கள் அது தான் இன்னும் 20 நாட்கள் இருக்கிறதே எனக்கு  டெலிவரிக்கு என்றால் மகா காவேரி தன்னை பார்த்துக் கொள்வார் எனக்காக வீட்டில் இருப்பார் என்று எண்ணி அவ்வாறு சொன்னால்….

மகா எண்ணியது  போல் காவேரி கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து மகாவை பார்த்துக் கொள்வாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *