Skip to content
Home » மகாலட்சுமி 116

மகாலட்சுமி 116

pலதா டாக்டர் அவரால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டு இருந்தார் இப்படியே அரை மணி நேரம் முடிந்தது வீட்டில் உள்ள அனைவரையும் பதற வைத்துக் கொண்டு இருந்தால் ஏதாவது நேர்ந்து விடுமோ என்று எண்ணினார் பிறகு மகா கொஞ்ச கொஞ்சமாக எழில் சொல்லிவிட்டு சென்றதை அவளாகவே எண்ணி பார்த்தால் …..


அவளுக்குமே தெரிகிறது தனக்கு மூச்சு வாங்குகிறது என்று உணரும் படியாக தான் இருந்தது ஆனால் அதையும் தாண்டி எழில் சொல்லிச் சென்றது மூலையில் நின்றதால் அதையே யோசித்துக் கொண்டு அவளாகவே கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றிக்கொண்டு லேசாக மூச்சு விட ஆரம்பித்தால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தான் மகாவிற்கு சிரான மூச்சு வந்தது ….

லதா இறைவனை வேண்டி விட்டு லேசாக மகா தாடையில் கூட தட்டினார் மெடிக்கலி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை இப்பொழுது நீ இங்கு நல்ல முறையில் இருப்பதற்கு காரணம் நீ மட்டுமே நீயாக முயற்சி செய்ததால் மட்டும் தான் இப்பொழுது நன்றாக இருக்கிறாய் ஆனாலும் அதிகமாக பேசக்கூடாது கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்றார் ….

மகா லேசாக சிரித்து விட்டு வேந்தா என்றால் அவனை கூப்பிட வேண்டுமா இப்போது யாரிடமும் நீ பேசக்கூடாது என்றார் அவள் இல்லை என்பது போல் தலையாட்டி விட்டு அவளது நெஞ்சை சுட்டி காண்பித்து தான் இப்பொழுது உங்கள் முன் பேசுவதற்கு காரணம் அவன் தான் என்றால் லேசாக அவரும் சிரித்து விட்டு சரி மகா உனக்கு மயக்க ஊசி போட வேண்டும் கொஞ்ச நேரம் நீ ஓய்வெடு என்று சொல்லிவிட்டு மயக்க ஊசி போட்டுவிட்டு வெளியில் வந்தார் …



லதா அவளது ஆக்சிஜன் மாஸ்கை கழட்டிவிட்டு வெளியில் வந்தார் வீட்டில் உள்ள அனைவரும் லதாவை சூழ்ந்து கொண்டார்கள் எழில் அமைதியாக உட்கார்ந்து இருந்தான் அனைவரையும் விட்டுவிட்டு சிரித்துக் கொண்டே லதா எழிலை  பார்த்தார் பிறகு அவனது அருகில் சென்று அவனது தோளில் தட்டி விட்டு உன்னுடைய நம்பிக்கை பலித்து விட்டது டா அவளுக்கு ஒன்றுமில்லை சீரான மூச்சு வந்துவிட்டது …

நன்றாக இருக்கிறாள் என்றார் இதன் பிறகு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு அவள் மயக்க நிலையில் தான் இருப்பாள் வேண்டும் என்றால் யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார் எழில் அமைதியாக உட்கார்ந்து இருந்தான் நிலா நீ போய் பார்த்துட்டு வா என்றான் …

நிலா வேகமாக மகிழை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு அவனது கையையும் பிடித்து அழைத்துக் கொண்டு மகா இருக்கும் அறைக்குள் சென்ற பிறகு மகாவை இருவரும் ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு மனதிற்குள் என்னென்னவோ யோசித்து விட்டு வெளியில் வந்தார்கள் அனைவரும் சென்று பார்க்க வேண்டாம் இன்பெக்சன் ஆகிவிடும் அவள் கண் முழிக்கட்டும் ஒரு இரண்டு மணி நேரம் மட்டும்தான் என்று சொல்லிவிட்டு சென்றார்…

வீட்டில் உள்ள அனைவருக்கும் அந்த இரண்டு மணி நேரமே இரண்டு யுகம் போல் சென்றது இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவள் நிலாவை பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தால் நர்ஸ் வந்து சொன்னவுடன் நிலா உள்ளே சென்றால்  நிலா தனது அக்காவை பார்த்து முறைத்தாள் மகா சிரித்தால் அதான் ஒன்றும் இல்லையே என்றால் எதாவது ஆகி இருந்தால்  ஆனால் எவ்வளவு பயம் முருத்தி விட்டாய் மாமா அழுது கொண்டிருக்கிறார் என்றால்….

அப்போ மேடமுக்கு நான் இல்லையென்றால் சந்தோஷம் அப்படித்தானே என்றால் நிலா தனது அக்காவை அடிக்க வந்து விட்டு அமைதியாக கையை கீழே இறக்கி விட்டால் மகா சிரித்தால் ஒன்றுமில்லை என்றால் நிலாவின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது மகா தனது தங்கையை தனது அருகில் அழைத்து அவளது கண்ணீரை துடைத்து விட்டால் பிறகு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வந்து பார்த்தார்கள்..

இறுதியாக மகிழ் வந்தான் மகிழ் மகாவிடம் பேச வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக வெளியில் சென்றார்கள் மகிழ் மகாவின் கையை பிடித்துக் கொண்டு அவளது கையில் தனது தலையை வைத்துக்கொண்டு அழுதான் மாமா ஒன்றுமில்லையே என்றால் மகிழ் மகாவையே பார்த்துக்கொண்டு அழுதான் மகா மகிழிடம் உனக்கான தண்டனையை முழுவதாக கொடுக்காமல் போய்விடுவேன் என்று நினைத்தாயா என்று சொல்லி சிரித்தால் …

மகிழும் சிரித்துக்கொண்டே எனக்கான தண்டனையை ஆயுள் முழுவதும் கூடவே இருந்து கொடு  டி ஆனால் என்னை விட்டு விலகி மட்டும் விடாதே என்று சொல்லி அவளது கையில் முத்தம் வைத்தான் பிறகு அதிகம் பேசக்கூடாது என்று நர்ஸ் சொன்னதால் மகிழ் அமைதியாக மகாவை பார்த்துக் கொண்டிருந்தான் எழிலை வர சொல்லட்டா என்று கேட்டான் மகா வேண்டாம் என்று தலையாட்டினாள் ….


மகிழ் வெளியில் வரும் பொழுது எழில் சரி டா நீ அனைவரையும் பார்த்துக் கொள் நான் வீட்டிற்கு நிலாவை அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்றான் வீட்டில் உள்ள அனைவரும் எழிலையே கேள்வியாக பார்த்தார்கள் காவேரி அவளை பார்க்கவில்லையா டா என்று கேட்டார் அதுதான் அவள் நன்றாக தானே இருக்கிறாள் வீட்டிற்கு வந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்கள் இருந்து பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு நிலாவையும் கையோடு அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் ….


வீட்டில் உள்ள அனைவரும் இவன் என்ன இப்படி பேசுகிறான் என்று எண்ணினார்கள் மகிழ் லேசாக சிரித்தான் பிறகு மகிழ் அன்புவின் அருகில் வந்து அவனது கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு சரி அன்பு நீங்கள் இருவரும் தம்பி வர விட்டு விட்டு வந்திருப்பீர்கள் தம்பி அழ செய்வான் கயல் அழைத்துக் கொண்டு செல் வீட்டில் வேறு சித்தி பயந்து கொண்டு இருப்பார்கள் என்றான்…

அன்பு சிரித்துக் கொண்டே அம்மா இரண்டு மூன்று முறை போன் செய்து பேசி விட்டார்கள் தான் அங்கு தம்பி அழுது கொண்டே தான் இருக்கிறான் நான் கயலை அழைத்து கொண்டு செல்கிறேன் பிறகு வந்து பார்க்கிறேன் என்று மகிழ் தோளில்  தட்டி விட்டு வீட்டில் அனைவரையும் பார்த்தான் காவேரி அமைதியாக கயல் அன்பு இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் …

கயல்  தனது அம்மாவிடம் எதுவும் பேசாமல் தனது கண்ணில் இருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டே அன்புவின் கையை பிடித்து அவனை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு சென்றாள் பிறகு வெளியே சென்றவுடன் அன்புவை  கட்டி அணைத்துக் கொண்டு அழுதால் அன்பு ஒன்றுமில்லை கயல் உன் அம்மா உன்னிடம் எப்பொழுதும் போல் பேசக்கூடிய நாள் வெகு விரைவில் உள்ளது என்று சொல்லி தம்பி அழுது கொண்டிருக்கிறான் வா நாம் சீக்கிரம் வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லி கயலை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்….

எழில் வீட்டிற்கு சென்று ஒரு அரை மணி நேரம் அமைதியாக நிலாவின் கையை பிடித்துக் கொண்டு இருந்துவிட்டு நிலா நீ போய் குளித்துவிட்டு வா என்றான் மாமா என்றால் போடி போய் குளித்துவிட்டு வா என்றவுடன் நிலாவும் அவளது அறைக்கு சென்று குளிக்க சென்றால்  எழில் முகம் கை கால் மட்டும் கழிவு கொண்டு நிலாவிற்கு சமைத்தான் நிலா குளித்துவிட்டு வந்தவுடன் சாப்பிட வைத்தான் அவனும் சாப்பிட்டான் …

பிறகு வீட்டில் உள்ள அனைவருக்கும் சமையல் செய்தான் மகாவிற்கும் பத்திய சாப்பாடு செய்து எடுத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான் வீட்டில் உள்ள அனைவரையும்  மிரட்டி சாப்பிட வைத்தான் டேய் நீ இங்கு இருக்கலாமே என்றார் கோதை இங்கிருந்து என்ன பண்ண போறேன் அதான் இத்தனை பேரும் இருக்கிறீர்களே என்று சொல்லிவிட்டு மகிழிடம் அவனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வேணியிடம் மகாவிற்கு பத்திய சாப்பாடு கொடுத்து விடு என்று சொல்லிவிட்டு மகாவை பார்க்காமலே வீட்டிற்கு வந்து விட்டான் ….


வீட்டில் உள்ளவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு திரும்பவும் மருத்துவமனைக்கு சென்றார்கள் இப்படியே ஐந்து நாட்கள் சென்றது மகாவிற்கு ஆப்ரேஷன் செய்ததால் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை மகாவிற்கும் இப்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை …


குழந்தையை வீட்டில் அனைவரும் கொஞ்சினார்கள் நேரம் போவதே தெரியவில்லை அனைவருக்கும் குழந்தையையும் மகாவையும் விட்டு விலக மனமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இப்படியே இந்த ஐந்து நாட்களும் சென்றது இந்த ஐந்து நாட்களில் மகா கண் விழித்ததுக்கு பிறகு எழில் மகாவை பார்க்கவில்லை மகா எழிலை பார்க்க வேண்டும் என்று கேட்கவில்லை அவனும் நான் வீட்டிற்கு வந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரே வார்த்தையாக முடித்து விட்டான் …

வீட்டில் உள்ள அனைவருக்கும் இவர்கள் இருவரும் ஏன் இவ்வாறு சொல்கிறார்கள் என்றும் எண்ணினார்கள் மகிழ் அனைவரையும் பார்த்து சிரிக்க மட்டும் தான் செய்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை சுந்தரியும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக தனது மருமகளை மட்டுமே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார் குழந்தைகளை காவேரியும் கோதையும் பார்த்துக் கொண்டார்கள்…

பாண்டியம்மா பட்டி கருப்பையா இருவரையும் எழில்  காலையில் இரண்டு மணி நேரமும் மாலை நேரத்தில் இரண்டு மணி நேரமும் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு விட்டு அவர்கள் பார்த்தவுடன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான்  இனியை  குழந்தை இருப்பதால் வீட்டிற்கு வர சொல்லிவிட்டான் அவளும் மதிய வேளையில் மட்டும் சாப்பாடு கொண்டு கொடுத்துவிட்டு பிறகு குழந்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுவாள் ..

வேணியை கல்லூரிக்கு செல்ல சொல்லி விட்டான் முதல் நாள் வேணி எழிலை முறைத்து விட்டு பிறகு அமைதியாக அவளும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் வீட்டில் உள்ள வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் அவரது வேலைகளை பார்க்க சென்று விட்டார்கள் அனைவருக்கும் இந்த ஐந்து நாட்களும் எழில் தான் சமைத்துக் கொடுத்தான் …

ஐந்து நாட்களுக்கு பிறகு மாலை 4 மணிக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்துவிட்டு மகா மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் வேணி தான் மூவருக்கும் ஆரத்தி சுற்றினால்  மகிழ் கையில் ஒரு குழந்தையும் மகா கையில் ஒரு குழந்தையும் இருந்தது வேணி ஆரத்தி எடுத்தால் பிறகு ஆரத்தி ஊற்றி விட்டு வந்தால் இருவரும் வெளியே நின்று கொண்டு இருந்தார்கள் காவேரி தான் ஏன் மகான் நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் ….

மகா தனது பெரியம்மாவை பார்த்து லேசாக சிரித்து விட்டு தனது மகிழ் மாமாவை பார்த்தால்   அவனும் சிரித்தவுடன் இருவரும் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று உணவு மேசையில் உட்கார்ந்திருந்த நிலா எழில் கையில் ஆளுக்கொரு குழந்தையாக கொடுத்தார்கள் அவர்கள் இருவரும் மகாவிற்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்ன பிறகு பெரிதாக மருத்துவமனை செல்லவில்லை …

நிலாவுமே பெரிதாக மருத்துவமனை செல்லவில்லை அவள் சென்ற நேரங்களில் தனது அக்காவை சிறிது நேரம் பார்த்து விட்டு குழந்தையும் கொஞ்சி விட்டு தான் வந்தால் இருவரும் குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள் பிறகு இருவரிடமும் குழந்தை ஒப்படைத்துவிட்டு மகா மகிழ் இருவரும் மொட்டை மாடி ஏறுவதற்கு ஒரு படி கால் வைத்தார்கள் அப்போது காவேரி மகா இங்கு உன்னுடைய அறையிலேயே ரெஸ்ட் எடுத்துக் கொள் என்றார் …


மகா தனது பெரியம்மாவை பார்த்து சிரித்துவிட்டு நான் கொஞ்ச நேரம் மேலே சென்று விட்டு வருகிறேன் பெரியம்மா  என்று சொல்லிவிட்டு மகிழ் கையை பிடித்துக் கொண்டு மேலே படி ஏறினால் காவேரிக்கு வருத்தமாக இருந்தது எங்கு தன்னால் தான் மகா மேலே செல்கிறாளோ என்று வருந்தினார் வீட்டில் உள்ள அனைவரும் மொட்டைமாடி படிக்கட்டுகளில் ஏறி செல்லும் மகா மகிழ் இருவரையும் பார்த்தார்கள்…


வீட்டில் உள்ள அனைவருக்கும் காவேரி எண்ணியது போல் தான் எண்ணினார்கள் குழந்தை எழில் நிலா இருவரது கையிலும் இருந்தது வீட்டில் உள்ளவர்கள் எண்ணியது  போல் தான் மகா மகிழ் மனதில் இருக்கிறதா என்பதை நம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

❣️ தனிமையில் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 116”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *