மகா மகிழ் இருவரும் மொட்டை மாடிக்கு சென்றவுடன் ரொம்ப வலிக்கிறதா என்றான் லைட்டா என்று சொல்லி சிரித்து விட்டு அங்குள்ள ஷோபாவின் மகிழை உட்கார வைத்துவிட்டு அவனது மடியில் படுத்தாள் என்னடி செய்கிறது என்றான் ஒன்றுமில்லை லேசாக வலி இருக்கிறது மருந்தின் வீரியத்தில் தூக்க வேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லி சிரித்தால் …
மகிழ் அவளது நெற்றியோட நெற்றி முட்டினான் அப்பொழுது காவேரி மேலே வந்து மகா சாப்பிடு வா என்றார் எழில் காவேரியின் பின்னாடியே வந்து அவர்கள் மொட்டை மாடியில் இருந்த இடத்தில் இருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து மகாவின் அருகில் வைத்தான் காவேரி எழிலை முறைத்துவிட்டு இங்கு என்னடா சாப்பாடு செய்திருக்கிறாய் என்று கேட்டார்…
அத்தை அவள் மருத்துவமனையில் இருந்து வரும் வரை நான் இங்கிருந்து தான் அவளுக்கு அனைத்து சாப்பாடையும் நான் இங்கு செய்து தான் எடுத்துக் கொண்டு வந்தேன் அதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் இருவருக்குமே நான் இங்கு இருந்து தான் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தேன் இன்னும் சொல்லப்போனால் மகா என்ன சாப்பிட்டாளோ பத்திய சாப்பாடு அதை தான் மகிழும் சாப்பிட்டான்….
நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன் உங்கள் அனைவருக்கும் கீழே சமைத்தேன் என்றான் காவேரி எழிலை பார்த்துக்கொண்டு இருந்தார் அவள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று அவள் தான் யோசிக்க வேண்டும் அத்தை நானாக குறுக்கே வந்து எதையும் செய்ய முடியாது அது மட்டும் இல்லாமல் அவள் மருத்துவமனையில் இருந்தவரை அவளுடைய அனைத்து செலவையும் நான் தான் பார்த்துக் கொண்டேன் என்றான்….
அத்தை அது நான் என்னுடைய தோழிக்காக செய்தது அதில் யாரும் தலையிட முடியாது சரியா ஆனால் அவள் எங்கு சாப்பிட வேண்டும் என்று அவள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மகாவிற்கு ஊட்ட ஆரம்பித்தான் மகாவும் அமைதியாக எழில் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தால் மகா சாப்பிடும் வரை காவேரியும் அமைதியாக இருந்தார் பிறகு மகா சாப்பிட்டு முடித்தவுடன் மகா இரவு உணவு இருவரும் கீழே வந்து சாப்பிடு கீழே தங்கிக் கொள்ளுங்கள் என்றார் ….
மகா தனது பெரியம்மாவிடம் சரி பெரியம்மா என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள் அவரும் இப்பொழுது அவள் அசதியாக இருக்கிறாள் என்று உணர்ந்து அமைதியாக கீழே இறங்கிவிட்டார் இரவு மகா கீழே வந்து சாப்பிட்டு கொண்டாள் கீழே தான் இருந்தால் ஒரு இரண்டு மணி நேரம் மட்டும் மேலே இருந்து விட்டு பிறகு கீழே இறங்கி வந்தால் …
இரவு ஏழு எட்டு மணி அளவில் மகாவை காவிரி சாப்பிட அழைத்தார் அவளும் அமைதியாக சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்தால் இப்போது சுந்தரி தான் சமைத்து இருந்தார் அனைவருடனும் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு பிறகு மகிழை அழைத்துக் கொண்டு மேலே சென்றாள் காவேரி மகா என்று அழைத்தார் என்ன பெரியம்மா என்று கேட்டால் கீழே இங்கு உங்களது அறையில் தூங்கிக் கொள்ளலாமே என்றார் …..
மேலே செல்கிறாயே இன்னும் உனக்கு என் மேல் கோபம் போகவில்லையா நான் செய்தது தவறு என்று நினைக்கிறாயா என்றார் அவள் தனது பெரியம்மாவை பார்த்து சிரித்து விட்டு பெரியம்மா நீங்கள் செய்தது தவறு என்றும் சொல்லவில்லை எனக்கு உங்கள் மீதும் இந்த வீட்டில் உள்ளவர்கள் மீதும் எந்த கோபமும் இல்லை தவறு எங்கள் இருவரின் மீதும் இருக்கிறது என்று எங்களது இருவருக்குமே தெரியும் ….
நாங்கள் அதை இல்லை என்று சொல்ல மாட்டோம் நாங்கள் நேசித்ததை சொல்லவில்லை சொல்லும் அளவிற்கு நாங்கள் இருவரும் தைரியமாக இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் எங்களால் இந்த வீட்டில் வளர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்திருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியும் அவள் இப்பொழுது இந்த நொடி வரை தனது பிறந்து விட்டு உறவில்லாமல் அங்கு வருந்தி கொண்டுதான் இருக்கிறாள் என்றும் எனக்கு தெரியும் …
ஆனால் நான் ஒன்று கேட்கிறேன் தவறாக எடுத்துக் கொள்தீர்கள் ஒரு பெண்ணாக கயலுக்கு எந்த அளவிற்கு வருத்தம் இருந்திருக்கும் என்று நீங்களே யோசிங்கள் நீங்கள் வருந்த வில்லை என்று நான் சொல்ல மாட்டேன் ஆனால் இத்தனை உறவுகள் இருந்தும் யாரும் இல்லாமல் அவளது திருமணத்தின் பொழுது அவளுக்கு வலி இருந்ததை விட அவள் வயிற்றில் ஒரு உசுரை சுமந்து கொண்டிருக்கும் வேளையில் கூட உங்களால் அவளைச் சென்று பார்க்க முடியவில்லை …
அப்பொழுது கூட தேவையில்லை அவள் தாய்மை அடைந்த பிறகு சென்று உங்களுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை தானே அதே குழந்தையை தானே இப்பொழுது நானும் பெற்று இருக்கிறேன் இப்பொழுது இது உங்கள் வீட்டு வாரிசு என்று தோன்றியதா அதனால் தான் பார்த்து விட்டீர்களா என்று கேட்டால் சுந்தரி மகா என்று கத்தினர் அத்தை என்னையும் பேச விடுங்கள்…
உங்களது அண்ணி செய்த அனைத்தும் சரியா தவறா என்று நான் இங்கு வாதாட வில்லை ஆனால் கயலின் இடத்திலிருந்து யோசியுங்கள் சரியா நான் யாரையும் இங்கு தவறு சொல்ல விரும்பவில்லை எங்கள் மீது தவறு இருக்கிறது இப்பொழுதும் அதை ஒத்துக் கொள்கிறேன் அதற்கான தண்டனையும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நான் சொல்ல வருவது அது அல்ல சரி அப்பொழுது கூட விட்டு விடுங்கள் ….
கீழே எழில் என்னை அழைத்துக் கொண்டு வந்து அன்று அவ்வளவு கத்து கத்தினான் அப்பொழுது கூட யாருக்கும் மாசமாக இருக்கும் பெண்ணை கதவை சாற்றி விட்டு உள்ளே விட்டு தாழ்ப்பாள் போட்டான் என்று எண்ணம் கூட யாருக்கும் வரவில்லை தானே எனக்கும் அவனுக்கும் எனக்கும் பிரச்சினை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் அவன் அன்று அவ்வளவு பேசினான் ஆனால் அமைதியாக தான் இருந்தீர்கள் ….
அப்பொழுது உங்களுக்கு பிடிக்காத ஒன்றை யார் செய்தாலும் அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அமைதியை விட்டு விடுவீர்கள் அப்படித்தானே என்று கேட்டால் காவேரிக்கு சாட்டையால் அடிப்பது போல் இருந்தது அமைதியாக இருந்தார் பிறகு மகாவை பார்த்தார் மகா நான் செய்த அனைத்தும் தவறாக கூட இருக்கட்டும் இல்லை என்னுடைய இடத்திலிருந்து அது சரியாக கூட இருக்கட்டும் ஆனால் நீங்கள் இருவரும் கீழே தங்கிக் கொள்ளலாமே என்றார் …..
பெரியம்மா உண்மையாகவே சொல்கிறேன் எனக்கு உங்கள் மீது இந்த வீட்டில் உள்ளவர்கள் மீது கோபமும் வருத்தமும் இல்லை சரி எனக்கு மேலேவே கிடைத்திட்ட இப்போது ஒரு வருடங்களாக இருந்து பழகி விட்டது அதுதான் உண்மையும் கூட என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நாங்கள் இருவரும் மேலே இருந்து கொள்கிறோம் அதற்காக குழந்தைகள் இருவரும் எங்களுடன் இருப்பார்கள் என்று இல்லை …
குழந்தைகள் இருவரும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கட்டும் குழந்தைக்கு பசி எடுத்தால் மட்டும் என்னுடன் இருக்கட்டும் மற்ற நேரங்களில் குழந்தை இங்கிருக்கும் அனைவரிடம்தான் இருக்கும் அதை பற்றி கவலை உங்களுக்கு வேண்டாம் எங்கள் இருவருக்கும் எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது கீழே வருகிறோம் எனக்கோ மகிழ் மாமாவிற்க்கோ நானும் அவரோ இருந்தே அறையில் தங்க இப்பொழுது விருப்பமில்லை….
கொஞ்ச நாட்கள் செல்லட்டும் அதன் பிறகு கீழே வந்து கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு மகிழ் கையை பிடித்துக் கொண்டு இரண்டு படி ஏறினால் அப்போது காவேரி மேலே சென்று குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வது என்று விட்டு அமைதியாகிவிட்டார் மகா சிரித்துவிட்டு தனது அத்தையை பார்த்தால் சுந்தரி சிரித்துக் கொண்டே நீ போ டி நானும் எழிலும் வந்து மேலே படுத்திக் கொள்வோம் என்ற பிறகு மகா தனது பெரியம்மாவை பார்த்து சிரித்துவிட்டு தனது கணவனின் கையை பிடித்துக் கொண்டு மேலே ஏறினால்…
அவள் அடிக்கடி படி ஏறி இறங்க கூடாது ஆப்ரேஷன் செய்திருப்பதால் என்று வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும் ஆனால் மகா மேலே இருக்கும் அறையில் தான் தாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வது அனைவருக்கும் வருத்தமாக இருந்தது ஆனால் அனைவராலும் அதன் பிறகு வேறு எதுவும் பேச முடியாது அமைதியாக இருந்தார்கள் …
அவர்கள் இருவரும் மேலே சென்ற பிறகு வேணி மேலே சென்றாள் என்ன அண்ணி ஆப்ரேஷன் செய்திருக்கும் நிலையில் அடிக்கடி மேலே ஏறி இறங்க கூடாது என்றால் அண்ணி இரவு நேரத்தில் குழந்தை அழுமே என்றால் மகா சிரித்துக் கொண்டே அத்தையும் எழிலும் பார்த்துக் கொள்வார்கள் நீ ஆசைப்பட்டபடியே ஒரு பெண் ஒரு பையன் உன்னுடைய மருமகனுக்கு எனக்கு மருமகளை ரெடி பண்ற வழியை பாரு என்று அவளது காதில் லேசாக சிரித்துக் கொண்டே சொன்னாள்…
வேணி மகாவை பார்த்து முறைத்துவிட்டு பிறகு சிரித்துக் கொண்டே எதுவும் பேசாமல் அமைதியாக கீழே இறங்கி விட்டாள் இப்படியே நாட்களும் உருண்டோடியது கல்லூரியில் மகாவிற்கு பிரசவத் தேதிக்கான விடுமுறை கொடுத்திருந்தார்கள் குழந்தை பிறப்பிற்கு என்று அரசாங்க உத்தியோகம் என்பதால் ஒரு வருட காலம் கொடுத்திருந்தார்கள்…
எழில் தினமும் கல்லூரி சென்றுவிட்டு இரவு மகாவை பார்த்துக் கொள்வான் எழிலும் சுந்தரியும் அங்குள்ள வரவேற்பு அறையில் படுத்து கொள்வார்கள் குழந்தை முக்கால்வாசி நேரம் எழில் சுந்தரிடம் இரவு இருக்கும் பசியாற்ற மட்டும் சுந்தரி உள்ளே எடுத்துச் சென்று வருவார் மகா மகிழ் கதவை தாழ்ப்பாள் போடவில்லை எழில் அதிகமாக இரவு நேரத்தில் உள்ளே செல்ல மாட்டான் ….
இப்படியே நாட்கள் சென்றது வீட்டில் உள்ள அனைவரும் நிலாவிடம் அதான் அப்ரூவல் வாங்கி விட்டாச்சே லேப் ஓபன் செய்யலாம் அல்லவா என்று முகில் உதிரன் இருவரும் கேட்டார்கள் நிலா சிரித்துக் கொண்டே மகா எப்பொழுது நன்றாக எழுந்து நடமாடுகிறளோ அப்பொழுது ஓபன் செய்து கொள்ளலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சிரித்துவிட்டு அதற்கு தேவையான ஒவ்வொரு உபகரணங்களாக வாங்கி வைத்தால்…
மகிழ் எழில் உதிரன் முகில் நால்வரும் அதற்கு உதவியும் செய்தார்கள் இப்படியே நாட்களும் சென்றது முழு நேரமும் கோதையும் காவேரியும் பகலில் குழந்தையை பார்த்துக் கொண்டார்கள் குழந்தை பகல் முழுவதும் கீழே இருந்தது மகாவும் கூட பகல் முழுவதும் கீழே தான் இருப்பாள் அவள் படுக்க வேண்டும் என்றால் சுந்தரி மேலே அழைத்துச் செல்வார் முதல் மூன்று நாட்கள் மகிழ் வீட்டில் இருந்தான் சுந்தரி தான் திட்டி விட்டுவிட்டார் ….
டேய் போய் உன்னுடைய பொழப்பை பாரு அவள் பின்னாடியே சுற்ற வேண்டாம் அதான் வீட்டில் இத்தனை பேர் இருக்கிறோம் அல்லவா உன்னுடைய மனைவியை கொஞ்ச வேண்டுமென்றால் இரவு வந்து கொஞ்சி கொள் என்றார் மகிழ் முதலில் தனது தாயைப் பார்த்து முறைத்துவிட்டு பிறகு சிரித்துக் கொண்டே சரி மா என்று விட்டு அவனுடைய வேலையை பார்க்கச் சென்று விட்டான் …
முத்துவின் பெற்றவர்களும் வேணியின் பெற்றவர்களும் வந்து குழந்தையை பார்த்துவிட்டு சென்றார்கள் ஊரில் உள்ள ஒரு சிலரும் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள் கயல் அன்பு இருவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டு சென்றதோடு சரி அதன் பிறகு மகாவிடம் போன் பேசிக் கொள்வார்களே தவிர இருவரும் வீட்டிற்கு வரவில்லை பிறகு குழந்தை பிறந்த 11 வது நாள் குழந்தைக்கு பெயர் சூட்டி ஏழாம் காப்பு இடுவதாக முடிவு செய்தார்கள்….
மகாவும் மகிழும் அதற்கு ஒத்தும் கொண்டார்கள் குழந்தை பிறந்த 11 வது நாள் குழந்தைக்கு பெயர் சூட்டி ஏழாம் காப்பு இட்டார்கள் வீட்டில் அனைவரும் மகா மகிழிடம் என்ன பெயர் என்று கேட்டார்கள் ஐயர் குழந்தையின் பெயரை சொல்லி குழந்தைக்கு சக்கரை தண்ணி வையுங்கள் என்று சொல்லும்போது மகா எழில் நிலா இருவரையும் பார்த்தால் இருவரும் சிரித்துக் கொண்டே முதலில் பிறந்தது பெண் குழந்தை என்பதால் பெண் குழந்தையின் அருகில் வந்து இருவரும் ஆளுக்கு ஒரு காதில் வெண்பா பூங்குழலி என்று மூன்று முறை அழைத்து விட்டு குழந்தையின் வாயில் ஆளுக்கு ஒரு பக்கம் கடவாயில் சர்க்கரை தண்ணீர் வைத்துவிட்டு குழந்தையை கொஞ்சி விட்டு நகர்ந்தார்கள் ….
பிறகு ஆண் குழந்தைக்கு வெற்றி மாறன் என்று அதேபோல் இருவரும் ஆளுக்கு ஒரு காதில் சொல்லிவிட்டு குழந்தையின் ஆளுக்கு ஒரு கடவாயில் தக்கரை தண்ணீர் ஊற்றிவிட்டு வந்தார்கள் அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அதேபோல் சொல்லிவிட்டு வந்தார்கள் இப்படியே ஏழங்காப்பும் நல்லபடியாக முடிந்தது இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது அங்கு காவேரி வந்தார்…
அனைவரையும் வருவேற்பரையில் வந்து உட்கார சொல்லி இருந்தார் அனைவரும் காவேரி என்ன சொல்ல போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தார்கள் நாமும் அவர்களைப் போலவே காவேரி எதற்காக அனைவரையும் அழைத்து அவர்கள் வீட்டு வரவேற்பரையில் உட்கார வைத்திருக்கிறார் என்ன சொல்ல காத்திருக்கிறார் என்றும் அவர் கயல் அன்பு இருவரையும் எப்போது ஏற்றுக்கொள்வார் என்பதையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
INTERESTING