Skip to content
Home » மகாலட்சுமி 121 இறுதி அத்தியாயம்

மகாலட்சுமி 121 இறுதி அத்தியாயம்

எழில் நிலா இருவரிடமும் பாண்டியம்மா உங்கள் இருவருக்கும் நான் திருமணம் என்று சொன்னவுடன் என்ன எங்கள் இருவருக்குமா என்று இருவரும் அதிர்ச்சியாகி கேட்டுக் கொண்டே எழுந்து நின்றார்கள் வீட்டில் உள்ள அனைவரும் இருவரையும் பார்த்தார்கள் ….

நிலா எழில் இருவரும்  ஒரே வார்த்தையாக எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என்றார்கள் பிறகு எழில் நிலா இப்பொழுது தானே லேப் வைக்க வேண்டும் என்று யோசித்து இருக்கிறாள் அப்படி இருக்கும் பட்சத்தில் அவளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசிக்கிறீர்கள் என்றான் அப்போது கருப்பையா தாத்தா தான் டேய் மாமன் மகனாகவே அவளது கனவு நினைவாக வேண்டும் என்று நினைக்கும் போது கணவனாக உன்னால் இதை செய்ய முடியாதா என்று காவேரி கேட்டார் …

அத்தை நான் மாமன் மகளாக  அவளுக்கு செய்வதற்கும் கணவனாக என்று யோசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது அதை நினைவில் கொள்ளுங்கள் எனக்கு அவள் மேல் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றான் வேணி எழிலை பார்த்தால் அவளுக்கு எழில் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது சிரிக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் எங்கு தானே காட்டி கொடுத்து விடுவோமோ என்று தனது சிரிப்பை அடக்கிக் கொண்டால் …

மகிழ் கையை இறுக்கி பிடித்தாள் மகிழ் வேணியை பார்த்து சிரித்தான் வேணியும் மகிழை பார்த்து சிரித்தால் பிறகு நிலா சிரித்துக் கொண்டே ஏன் மாமாவிற்கு வேண்டுமானால் இப்பொழுது திருமணம் செய்து வையுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை பார்த்து முறைத்தார்கள் மகிழ் வேணி இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ் வேணி இருவரையும் பார்த்து முறைத்தார்கள்…

நான் தவறாக ஒன்றும் சொல்லவில்லையே நீங்கள் ஏன் மாமாவிற்கு வயதாகிறது என்று எண்ணினால் அவருக்கு இப்பொழுது திருமணம் செய்து வையுங்கள் ஆனால் எனக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்றால் எழில் நிலாவை முறைத்துக் கொண்டே எனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றான் டேய் உனக்கு இப்பொழுதே வயது ஆகிறது என்றார்கள்….

அது எனக்கும் தெரியும் ஏன் முப்பது வயதுக்கு மேல் யாரும் பெண் தர மாட்டார்களா என்றான் டேய் அப்படி இல்லை ஆனால் என்றார் பாட்டி ஒன்றுமில்லை எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அமைதியாக வேறு ஒரு இடத்திற்கு நகர்ந்தான் நிலாவும் அமைதியாக அங்கே உட்கார்ந்து கொண்டாள் அவளது மனதில் என்ன வீட்டில் உள்ள அனைவரும் இப்படி ஒரு கேள்வி கேட்டு விட்டார்கள் தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தால் கூட பரவாயில்லை என்று எண்ணினால் …

பிறகு அவளது மனசாட்சியே  கேட்டது அவளை தனிப்பட்ட முறையில் கேட்டிருந்தால் மட்டும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாயா என்று அவள் மனதுக்குள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை மகா எழில் அருகில் வந்து நின்றாள் அவனது தோளில் தட்டினால் எழில் மகாவை பார்த்து முறைத்தான் உனக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்டான் எனக்கு  முன்னாடியே தெரியுமா இல்லை இப்பொழுது தான் தெரியுமா என்பது கேள்வி அல்ல ஏன் நிலாவை நீ திருமணம் செய்து கொள்வதில் என்ன பிரச்சனை என்றாள்….

  மகா நீ என்ன லூசா? நான் என்னுடைய விருப்பத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான் சரி இப்பொழுது சொல் யார் வேண்டாம் என்று சொன்னார்கள் என்றால் மகா உனக்கு புரிகிறதா இல்லையா இப்பொழுது நான் அவளிடம் என்னுடைய விருப்பத்தை சொன்னால் கூட வீட்டில் உள்ளவர்கள் பேசியதால் நான் சொல்கிறேன் என்று நினைக்க மாட்டாளா சரி இனிமேல் சொன்னால் கூட  வீட்டில் உள்ள  அனைவரும் இவ்வாறு பேசுகிறார்கள் என்று நீ என்னிடம் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை ….

ஏன் சொல்லியிருந்தால் அடுத்த நிமிஷமே நீ உன்னுடைய விருப்பத்தை நிலாவிடம் சொல்லி இருப்பாயா என்றால் மகா இது நக்கல் செய்வதற்கான நேரமில்லை என்றான் அதை தான்  டா நானும் சொல்கிறேன் நேரம் கடத்தாதே உன்னுடைய விருப்பத்தை அவளிடம் சொல் உனக்கும் வயதாகிறது என்பதை மறந்து விடாதே அதேபோல் அவளுக்கும் திருமண வயது தான் சரியா என்றால் இப்பொழுது நீ என்ன சொல்ல வருகிறாய் என்றான் ….

இருவருக்கும் விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன் என்றவுடன் மகாவை அடிக்க கை ஓங்கினான் மாமா என்று கத்திக் கொண்டே வந்து நிலா எழில் கையை பிடித்தால் எழில் நிலா மகா அக்கா தங்கை இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு கையை கீழே உதறிவிட்டு நிலா உன் அக்கா என்ன பேசினால்  என்று உனக்கு தெரியுமா டி என்றான் அவள் என்ன பேசினால் என்று எனக்கு தெரியாது அவள் அப்படி பேசி இருந்தால் ஒரே வார்த்தை தான் பேசி இருப்பாள் ….

உனதுக்கு வயதாகிறது அவளுக்கும் திருமண வயது தானே விருப்பம் இருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருப்பாள் என்றால் மகா சிரித்தால் எழில் அதிர்ச்சியாகி நிலாவை பார்த்தான் நிலா சிரித்துக் கொண்டே மாமா நானும் இப்போது உன்னிடம் ஒரு விஷயம் தான் பேச வந்தேன் உனக்கு விருப்பம் இருந்தால் என்னை திருமணம் செய்து கொள் வீட்டில் உள்ள அனைவரும் எண்ணியது போல எனக்கு திருமண வயது தானே….

அவர்கள் பேசுகிறார்கள் கேட்கிறார்கள் என்பதற்காக நான் இப்பொழுது உன்னிடம் வந்து பேசவில்லை என்னை உன்னை விட யாராவது புரிந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் எழில் நிலாவை முறைத்து விட்டு அவளது நெஞ்சில் கையை வைத்து அதை எப்போது நீ இங்கிருந்து சொல்கிறாயோ  அப்பொழுது நான் உன் கழுத்தில் தாலி கட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அவளது நெஞ்சிலே கையை வைத்து அவளை லேசாக தள்ளிவிட்டு அக்கா தங்கை இருவரையும் முறைத்துவிட்டு நகர்ந்தான் ……

பிறகு நேரமாக்குவதால் அனைவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள் வீட்டிற்கு வந்து யாரும் இதைப் பற்றி பேசவில்லை மகா அனைவரிடமும் அவர்களாக விருப்பம் இருக்கு இல்லை என்று சொல்லும் வரை இதைப்பற்றி இனிமேல் பேசாதீர்கள் என்று விட்டால் அதன் பிறகு யாரும் பேசவில்லை இப்படியே நாட்களும் சென்றது அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள்….

இப்படியே  கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஓடியது மகா மகிழ் இருவரும் குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்கு பிறகு கீழே இறங்கி வந்து விட்டார்கள் இப்பொழுது மகா மகிழ் இருவரும் மகிழுடைய அறையில் தான் இருக்கிறார்கள் மகா இப்பொழுது மூன்று நாட்களாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டால் காவேரி இரண்டு குழந்தை இருக்கிறது வீட்டில் இருந்து பால் கொடு என்று சொன்னார் ….

சுந்தரி அது என்ன அண்ணி உங்கள் மருமகளுக்கு என்று வரும் பொழுது ஒரு நியாயம் என்னுடைய மருமகளுக்கு ஒரு நியாயமா குழந்தை இரண்டிற்கும் நாம் தான் உணவு ஊட்ட ஆரம்பித்து விட்டோமே பிறகு என்ன பகல் முழுவதும் பெரிதாக அவர்கள் இருவரும் பால் குடிப்பது கூட இல்லை தானே விளையாடி கிட்டு தானே இருக்கிறார்கள் நாம் பார்த்துக் கொள்ளலாம் அவள் இன்னும் நிறைய மாணவர்களை  ஊக்கப்படுத்தி அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு செல்ல  வேண்டாமா என்றார்…

சுந்தரி நீ உன்னுடைய மருமகளுக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றால் தான் அதிசயம் என்று சொல்லிவிட்டு சிரித்தார் பிறகு மகா வீட்டில் உள்ள அனைவரையும் ஒருநாள் இரவு அழைத்தாள் வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு கேட்டால் அனைவரும் நீ கல்லூரிக்கு சென்று வா நாங்கள் குழந்தை பார்த்துக் கொள்கிறோம் என்றவுடன் நிலா தான் ஏன் இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தால் என்ன குறைந்தா விடுவாய் என்று கேட்டால்…

உன்னால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாதா என்றாள் நான் ஒன்னும் அப்படி சொல்லவில்லை என்று விட்டு அமைதியாக அச்சுவை தூக்கி கொண்டு சென்று ஒரு இடத்தில் உட்கார்ந்தால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்தவுடன் அடுத்து இரண்டாவது நாளிலே நிலா அப்ரூவல் வாங்கி இருக்கும் இடத்தில் லேப் ஓபன் செய்தார்கள் மகா அவளது கையால் தான் திறந்து வைத்தால் அச்சுமாவின் கையைப் பிடித்து தன்னுடைய அச்சு மா தான் திறக்க வேண்டும் என்று நிலா ஒரே பிடிவாதம் பிடித்ததால் அனைவரும் அது சின்ன குழந்தை என்று சொல்லிவிட்டார்கள் ….

அவள் தான் என்னுடைய மூத்த மகள் என்று நிலா ஒரே போடாக போட்டு விட்டாள் என்னுடைய குழந்தைகள் இருவரும் திறக்க வேண்டும் என்று சொன்னால் பிறகு வீட்டில் உள்ள யாரும் எதுவும் பேசவில்லை  மகா மகிழ் இருவரும் சிரித்துக்கொண்டே குழந்தையை இருவரும் தூக்கி கொண்டே  குழந்தைகள் இருவரது கையாளும் லேப்  பை ஓபன் செய்தார்கள் அவளும் திறம்பட தன்னுடைய உழைப்பை தன்னால் முடிந்த அளவிற்கு போட்டு கொஞ்சமாக முன்னேறி கொண்டும் இருக்கிறாள் ….

நாட்களும் உருண்டோடியது நிலா லேப் ஓபன் செய்து ஒரு வாரம் கழித்து வேணி கல்லூரிக்கு கிளம்பி வெளியில் வரும் வேளையில் மயங்கி நிலா இடம் பேசிக்கொண்டே வந்தவள் நிலாவை பிடித்துக் கொண்டே நிலாவின் தோளிலே சாய்ந்தால் நிலா வேகமாக வேணி வேணி என்று கத்தியவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கீழே இறங்கி வந்து விட்டார்கள் பாண்டியம்மா பாட்டி வேணியின் கையை பிடித்து பார்த்தார் ….

அவருக்கு ரெட்டை நாடி துடிப்பது போல் தெரிந்தவுடன் வீட்டிலுள்ள யாரிடமும் எதுவும் சொல்லாமல் மருத்துவரை வர சொல்லி மட்டும் சொன்னார் லதாவும் வந்து பார்த்துவிட்டு வேணி மாசமாக இருக்கிறாள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் பிறகு வீட்டில் அனைவருக்கும் அவ்வளவு ஆனந்தமாக இருந்தது நிலா வேணியின் தாடையில் முத்தம் வைப்பது போல் வந்து அவளது தாடையில் லேசாக கடித்து விட்டு சொன்ன மாதிரியே சொன்னபடியே என்னை அத்தை ஆக்கி. விட்டாய் என்று சொல்லி சிரித்தால் …

வேணியும் நிலாவை பார்த்து சிரித்துவிட்டு முகிலை பார்த்தால் முகில் கண் மூடி திறந்தான் பிறகு அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது இப்பொழுது வேணி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் மகாவும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் முகில்தான் வேணியை கல்லூரிக்கு அழைத்துக் கொண்டு சென்று விட்டு அழைத்துக் கொண்டு வருகிறான் அவனால் முடியாத வேலையில் வேலு அழைத்துக் கொண்டு செல்வார் ….

நிலா நான் அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று சொன்னால் வீட்டில் உள்ள அனைவரும் அவள் வாலுத்தனம் செய்வாள் என்று எண்ணி அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் அது தான் அவளிடம் சொன்ன காரணம்  ஆனால் வீட்டில் அனைவரும் எண்ணியது வேணி இந்த நேரத்தில் முகிலை அதிகமாக தேடுவாள் என்று எண்ணி அவ்வாறு சொன்னார்கள் நிலாவும் அதை புரிந்து கொண்டதால் சிரித்துக் கொண்டே அமைதியாகிவிட்டால் …..

இப்படியே நாட்களும் சென்றது கயலும் எப்பொழுதும் போல் வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருக்கிறாள் வேணியின் பெற்றவர்களும் வேணியை அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்த பிறகு காவேரியே கயல் வீட்டிற்கு சென்று கயல் குழந்தையை பார்த்துவிட்டு குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் குடும்பத்துடன் சென்று செய்துவிட்டு வந்தார்கள் ….

அதன் பிறகு அம்பிகா கணேசன் அன்பு கயல் குழந்தை அகரன் ஐவரும் மகிழ் வீட்டிற்கும் எப்பொழுது போல் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள் முத்துவிற்கும்  ஒரு நல்ல பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மகிழ் தான் அனைத்தையும் முன் நின்று எடுத்துக்காட்டி செய்தான் திருமண செலவு முழுவதையும் கருப்பையா தாத்தா பார்த்துக் கொண்டார் ராதா வேண்டாம் என்று சொன்ன போது கூட நீ அன்று என்னை உங்களுடைய மருமகளாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாய் ….

அப்போது அது பொய்யா என்று கேட்டார் அதன் பிறகு ராதா வாயை திறக்கவில்லை ராதா கணேசன் இருவரும் அப்பா அம்மாவாக முன் நின்றார்கள் அவ்வளவுதான் அனைத்தையும் மகிழ் குடும்பமே எடுத்துக் கட்டி செய்தது முத்துவிற்கு வந்திருக்கும் மனைவியும் நல்ல பெண்ணே அவள் பெயர் வெண்மதி அவளை மகிழ் வீட்டில்  உள்ள அனைவருக்கும் ரொம்ப பிடித்திருந்தது …

முத்துக்கு ஏற்ப நல்ல குணமடையவளாக இருந்தால் நிலா எழில் இருவரும் திருமணத்தை பற்றிய பேச்சு இதுவரை எடுக்கவில்லை வீட்டில் அனைவருக்கும் சிறிது வருத்தமாக இருந்தது வீட்டில் உள்ள அனைவரும் மகா மகிழ் இருவரிடமும் திரும்பவும் பேசினார்கள் மகா அப்பொழுதும் ஒரே வார்த்தையாக சொல்லி விட்டாள் அவர்களாக வந்து எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்கும் வரை இதைப் பற்றி பேச வேண்டாம் என்று கோதை மகாவிடம் வந்து கத்தினார் ….

எழிலுக்கு வயதாகிறது அது உனக்கு நினைவில் இருக்கிறதா உன் தங்கைக்கு விருப்பமில்லை என்றால் வேறு ஒரு பெண் பார்க்கலாம் என்றார் மகா சிரித்துக்கொண்டே நீங்கள் வேண்டுமானால் உங்கள் மருமகனுக்கு வேறொரு பெண் பாருங்கள் யார் வேண்டாம் என்றார்கள் என்றால்  கோதை திமிரு டி உனக்கு என்றார் மகா  தனது  தாயை பார்த்து சிரித்து விட்டு உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா தைரியம் என்று கூட சொல்ல முடியாது அம்மா உனக்கு உன் மகளை விட்டுவிட்டு உனது மருமகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா ….

நீ எப்படி சுத்தி வளைத்து என்னிடம் கேள்வி கேட்டாலும் இதற்கு என்னுடைய பதில் இது மட்டும்தான் அவர்களாக கேட்கும் வரை என்னால் இதைப்பற்றி இனிமேல் பேச முடியாது என்று சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டால் அவள் கல்லூரி செல்ல ஆரம்பித்தும் கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மேல் சென்றது மகா மகிழ் இருவரின் இரண்டாவது வருட திருமண நாளும் வந்தது முதல் திருமண நாளின் பொழுது மகா மகிழ் இருவரும் மொட்டை மாடியில் இருந்ததால் பெரிதாக எதுவும் செய்யவில்லை….

இருவரும் கோவிலுக்கு சென்று வந்தார்கள் எழில் தான் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தான் இந்த திருமண விழாவிற்கு குடும்பத்துடன் கோவில் செல்ல வேண்டும் என்று எண்ணினார்கள் குடும்பத்துடன் மலை கோவிலுக்கு சென்றார்கள் அனைவரின் மனதிலும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது காவேரி கயல் கையை பிடித்துக் கொண்டு படி ஏறி சென்றார்…

காவேரி கயலின் குழந்தையை வைத்துக் கொண்டார் இனி குழந்தையை கோதை வைத்துக் கொண்டார் மகா மகிழ் இருவரின் குழந்தைகளை  மணிவும்  கந்தனும் ஆளுக்கொரு ஒரு குழந்தையாக வைத்துக் கொண்டார்கள் சுந்தரி தனது கணவனின் கையை பிடித்துக் கொண்டு வந்தார் மகிழ் நிலா கையையும் எழில் மகா கையையும் பிடித்துக் கொண்டு படி ஏறினார்கள் வேணி முகில் கையை பிடித்து கொண்டு வந்தால் …..

தாத்தா பாட்டி இருவரையும் உதிரன் அழைத்துக் கொண்டு வந்தான் காவேரி கயலையும் இனியையும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு படி ஏறினார் அனைவரும் மகா மகிழ் அவர்கள் குழந்தை இருவர் நால்வரும் பெயரிலும் அர்ச்சனை செய்துவிட்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு உட்கார்ந்தார்கள் அப்பொழுது அதே சாமி இந்த குடும்பத்தை பார்த்து சிரித்தார் அனைவருக்கும் சிறிது சந்தோஷமாக இருந்தது அப்பொழுது அந்த சாமி வந்தவுடன் அனைவரது வயிற்றிலும் புலியை கரைத்தது போல் கலங்கினார்கள் ….

சாமி அனைவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்தார் என்னை பார்த்து யாரும் பயம் கொள்ள வேண்டாம் நான் நடப்பதை தான் சொல்வேனே தவிர உங்கள் மனது காயப்படும் படியாக எதையும் சொல்ல மாட்டேன் இப்பொழுது நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஆனால் அது நல்லது தான் உங்கள் குடும்பத்திற்கு நல்ல நேரம் ஆரம்பித்து இருக்கிறது அனைத்தும் நல்லதாகவே நடக்கும் நீங்கள் அனைவரும் நினைத்த காரியம் நடக்கும் …

உங்கள் வீட்டில் சுப காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் ஆனால் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று இப்பொழுது கிடைக்காது அது கிடைக்கும் பொழுது கிடைக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதுதான் அது நடக்கும் என்று சொல்லி சிரித்துவிட்டு சென்றார் வீட்டில் உள்ள அனைவருக்குமே ஒன்று புரிந்தது அவர் இறுதியாக சொல்லிச் சென்றது எழில் நிலா திருமணத்தைப் பற்றி தான் என்று ஆனால் அவர்கள் இருவரும் தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூட அவர் சொல்லவில்லை …..

ஆனால் அதே போல் தான் சொல்லிவிட்டு செல்கிறார் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டாளே போதும் என்று எண்ணி சந்தோஷப்பட்டாவார்கள் பிறகு சாமியை தரிசனம் செய்துவிட்டு மலையை விட்டு கீழே படி  இறங்கினார்கள் கோவில் பூசாரியும் அந்த  சாமியாரும் இந்த குடும்பத்தை பார்த்து வாழ்த்தினார்கள் இவர்கள் இந்த குடும்பம் இப்பொழுது போல் எப்பொழுதும் சந்தோஷமாக சண்டை சச்சரவு இல்லாமல் வாழ வேண்டும் …

அப்படி ஏதாவது பிரச்சனை வந்தால் அதை சமாளித்துக் கொண்டு வாழ பழக வேண்டும் இவர்கள் ஆசைப்பட்டது போல் இவர்கள் குடும்பத்திலே திருமணம் பந்தமும் இணைய வேண்டும் ஏற்கனவே அண்ணன் தங்கை அக்கா தங்கை உறவாக இருக்கும் இவர்கள் பெண்ணெடுத்து பெண் கொடுக்கும் உறவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்…

அவர்களைப் போல நாமும் வாழ்த்தி இந்த குடும்பத்துடன் இருந்து விடை பெறுவோம் ….

உங்களுக்கு மகா மகிழ் இருவரையும் பிடித்திருந்தால் கமெண்ட் இல் வந்து சொல்லுங்கள் கதையின் நகர்வு எப்படி உள்ளது என்பதை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

மிக்க நன்றி 🙏…

நான் இந்த கதையில் நாம் வாழும் வாழ்க்கையில் நம்முடன் பயணிப்பவர்களின் மன ,உடல் நலன்கள் எப்படி இருக்குமோ அப்படியே எழுதி இருக்கிறேன் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் குணமும் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும் அதையே இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன் …

மற்றபடி அனைவரும் நல்லவர்களே ஆனால் சூழ்நிலையின் படி காவேரி ஒரு சிலருக்கு கெட்டவராக தெரிந்திருக்கலாம் கயல் செய்தது தவறாக இருந்திருக்கலாம் மகா மகிழ் அவர்களது விருப்பத்தை சொல்லாதது தவறாக இருந்திருக்கலாம் ஆனால் இது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடப்பதை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் ..

என்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து நான் சொல்லி இருக்கும் அனைத்தும் சரியாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப இது மாறுபடும் …

மிக்க நன்றி 🙏

சுபம் ..🙏

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

இதுவரை என்னுடன் பயணித்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி சைலன்ட் லீடர்ஸ் ஆக இருந்து ஸ்டார் கொடுத்து என்னை ஊக்குவித்த அன்பு வாசகர்களுக்கும் நன்றி…

சைலன்ட் லீடர்ஸ்களே கதை முடிவிலாவது உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ..

நீங்களும் இந்த கூட்டு குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்து இந்த கதையை முழுமையாக வாசித்து நீங்களும் இந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்திருப்பீர்கள் என்று நம்பி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்….

இந்த கதைக்கு கொடுத்த ஆதரவை போன்று என்னுடைய அடுத்த கதைகளுக்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்பி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்…🙏

மயிலாய் வருடும் மகாலட்சுமியே கதைக்கு எபிலாக் வேண்டுமா வாசக நெஞ்சங்களே…

எபிலாக் இரவு ஏழு மணிக்கு பதிவிடபடும்….

2 thoughts on “மகாலட்சுமி 121 இறுதி அத்தியாயம்”

  1. Kalidevi

    KATHAI ARUMAIYA IRUNTHUCHI LAST MUDIYA PORAPO VANTHA EPI ELLAM ROMBA NALLA IRUNTHUCHI IPO INTHA MARI YARUM JOIN FAMILY AH IRUKAURATHU ILLA INTHA STORY PADIKUM POTHU ANTHA AASAI VARUTHU.
    GOOD CONGRATS SIS.
    NADULA 1 OR 2 EPI MISSING SIS

  2. Nalla story…chinna chinna expression um explain panni irukanga…nalla irunthathu….nila ezhil marriage missing but super ending

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *