இரண்டு வருடங்களுக்கு பிறகு…
எழில் மகாவிடம் கத்தி கொண்டு இருந்தான் உண்மையை சொல்லு டி டேய் நேரமாகிறது சீக்கிரம் கிளம்பு என்றால் விளையாடுகிறாயா உண்மையை சொல் நீ தானே அவளிடம் சென்று பேசினாய் என்றான் டேய் நீ என்ன லூசா? நான் பேச வேண்டும் என்று எண்ணி இருந்தால் இரண்டு வருடத்திற்கு முன்பே பேசி இருக்க மாட்டேனா அப்புறம் எப்படி அவளாக வந்து அப்படி பேசுவாள் என்றான் ….
அவள் அப்படி வந்து பேசினால் நீ அவளிடம் சென்று கேள்வி கேள் என்றால் அப்பொழுது நிலா அங்கு வந்து நின்றால் என்ன மாமா என்றால் எதுக்கு வந்த அதை மட்டும் சொல்லிட்டு போ என்றான் எழில் நிலா அமைதியாக வெளியே கிளம்பினால் எதுக்கு வந்த விஷயத்தை சொல்லாமல் போறா என்றான் நீ கோபப்படாமல் கேட்பாய் என்றால் நான் வந்த விஷயத்தை சொல்வேன் இப்படி கோபப்பட்டு கத்தினால் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாது என்றால்….
நான் கோப பட்டால் சொல்ல வந்த விஷயத்தை உன்னால் சொல்ல முடியாது ஆனால் வாழ்நாள் முழுவதும் என்னுடன் உன்னால் வாழ முடியுமா என்றான் நிலா கண்கள் கலங்கியது எழிலை திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு அவனது தாடையில் ஒன்று போட்டுவிட்டு விருப்பப்பட்டு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் போதுமா யாருக்காகவும் யார் சொல்லியும் நான் உன்னை கல்யாணம் பண்ண முடிவு எடுக்க வில்லை…
இப்ப எதுக்காக நீ மகா கிட்ட கத்திக்கொண்டு இருக்க அவ சொல்லி தான் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்ல எனக்கும் புத்தினு ஒன்னு இருக்கு சரியா இன்னொரு விஷயம் இந்த நிமிஷம் வரைக்கும் மகா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்கிட்ட வந்து கேட்கல வீட்டில் இருக்கிற எல்லோரும் கேட்டாங்க ஏன் சுந்தரி அத்தை கூட கேட்டாங்க அக்கா இதுவரைக்கும் ஒரு நாள் கூட என்கிட்ட வந்து கேட்கல ….
நானா தான் எனக்கு விருப்பப்பட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் அது இந்த குடும்பத்துக்காகவும் கிடையாது விருப்பம் இருந்தா இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பி மண மேடை மேலே வந்து உட்காரு இல்லையென்றால் மணமேடையில் இருந்து கூட எனக்கு விருப்பமில்லை என்று எழுந்து கொள் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று விட்டு நகர்ந்து விட்டால் எழில் அதிர்ச்சியாகி என்ன விருப்பம் இருந்தால் வந்து நிற்கட்டா விருப்பமில்லை என்றால் மணமேடையில் இருந்து கூட எழுந்து கொள்ளட்டுமா என்றான்..
மகா எழிலை பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டாள் அக்கா தங்கச்சி இரண்டு பேருக்கும் ஓவர் குசும்பு என்று சொன்னான் அப்படியே வச்சுக்க டா என்று விட்டு அமைதியாக போய்விட்டாள் அடுத்த அரை மணி நேரத்தில் நிலா சொன்னதுபோல் எழில் மாப்பிள்ளையாக பட்டு வேஷ்டி சட்டை கட்டிக்கொண்டு மணமேடையில் வந்து உட்கார்ந்தான் அடுத்த பத்தாவது நிமிடத்தில் நிலா ஆகாயநிற கலரில் பட்டு புடவை அணிந்து கொண்டு வந்து மணமகளாக வேணி இனி இருவரையும் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு வந்தால் ….
அப்பொழுது பாண்டியம்மாவின் தோழிகள் இவள் பெண்ணா இல்லை அண்ணிமார்கள் இருவரும் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வருகிறார்களா இல்லை மணப்பெண் இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருகிறாளா என்று தெரியவில்லை என்று சொன்னார்கள் அது எழில் காதிலும் விழுந்து சிரித்து கொண்டே வரும் நிலாவை பார்த்தான் அவர்கள் சொன்னது போல் நிலா தான் இனி கையை ஒரு பக்கமும் ஒரு பக்கமும் வேணி கையை ஒரு பக்கமும் பிடித்துக் கொண்டு இருவரையும் அழைத்துக் கொண்டு வந்தால்….
அவர்கள் இருவரின் இரு பக்கமும் மகாவின் இரண்டு குழந்தைகளும் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்தார்கள் எழில் ஐவரையும் பார்த்து சிரித்தான் மற்ற நாள் வரும் எழிலை பார்த்து சிரித்தார்கள் நிலா எழிலை பார்த்து முறைத்துக் கொண்டே மேடை போட்டு இருக்கும் இடத்தில் படி ஏறி வந்து எழிலின் அருகில் உட்கார்ந்தால் எழில் நிலாவைப் பார்த்து கண்ணடித்து விட்டு சிரித்தான் நிலா முறைத்து விட்டு இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்றால்…
எழில் சிரித்துக் கொண்டே இந்த மாமனுக்கு வேறு எதில் டி குறைச்சல் என்றான் அந்த நேரத்தில் ஐயர் பேசிய வரை போதும் இரண்டு பேரும் திருமணத்திற்கு பிறகு பேசிக் கொள்ளுங்கள் இப்போது மந்திரங்கள் சொல்லுங்கள் என்றவுடன் நிலா சிரித்தால் எழில் ஐயரை பார்த்து முறைத்து விட்டு மந்திரம் சொல்ல ஆரம்பித்தான் பிறகு இருவரும் ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல இருவரும் மந்திரம் சொல்லி கொண்டு இருந்தார்கள்….
மாங்கல்யத்தை ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று ஐயர் அழைத்தார் மகா வாங்கி கொண்டு சென்று அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வைத்துவிட்டு பிறகு வீட்டில் உள்ளவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அவரிடம் வந்து கொடுத்தால் நல்ல நேரம் முடிய போகிறது என்று சொல்லி அனைவரும் மணமக்களை வாழ்த்துங்கள் மாங்கல்ய தந்து நாமே என்று சொல்லி எழில் கையில் தாலி கொடுத்தார்….
எழில் தாலியை வாங்கி கையில் வைத்துக்கொண்டு பிறகு எனக்கு வேறு எதில் டி குறைச்சல் என்ற சிரித்துக் கொண்டே தனது மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே கேட்டான் நிலா அவன் முறுக்கி விட்டு மீசையை கீழே இறக்கிவிட்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக என்னை காதலிக்கிறாய் அந்த காதலை என்னிடம் சொல்ல துப்பு இல்லையா நீ வீரனா என்று சொல்லி சிரித்தால் எழில் அதிர்ச்சியாகி அவளை பார்த்துக்கொண்டு இருந்தான் …
மகிழ் எழில் என்று கத்தினான் எழில் தனது அண்ணனை பார்த்துவிட்டு நிலாவைப் பார்த்துக் கொண்டே அவனது கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை கூட உணராது நிலா கழுத்தில் மூன்று முடிச்சு இட்டான் மூன்றாவது முடிச்சியை நாத்தனார் போட வேண்டும் என்று சொன்னார்கள் எழில் அமைதியாக மகாவை பார்த்தான் வீட்டில் உள்ள அனைவரும் இனி தான் போட வேண்டும் என்று சொல்லியும் மகாவை பார்த்தான்….
மகா அமைதியாக வந்து மூன்றாவது முடிச்சியை போட்டு விட்டாள் நிலா தனது எழில் மாமாவின் கண்ணில் இருந்து வடியும் நீரை துடைத்து விட்டுக் கொண்டே அவன் கட்டிய தாலியை ஏற்றுக்கொண்டால் பிறகு அவனை பார்த்து கண்ணடித்தால் எழில் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான் பிறகு ஐயர் நேரம் ஆகிறது மெட்டி போட்டு விடுங்க என்றவுடன் எழில் ரோபோ போல் மெட்டி போட்டு விட்டான் ….
அதன் பிறகு ஒவ்வொரு சடங்காக செய்தான் இவளுக்கு என்னுடைய விருப்பம் எப்படி தெரிந்தது? நான் திருமணத்திற்கு முன்பு இவளிடம் சொல்லச் சென்றபோது இவள் தூங்கிவிட்டாளே நான் சொன்னதை இவள் கேட்கவில்லையே என்று எண்ணினான் ஆனால் அவன் அறியாத ஒன்று அவள் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தாள் அவனது விருப்பத்தை சொன்ன அனைத்தையும் அவள் கேட்டுக் கொண்டுதான் இருந்தால் என்பதை எழில் அறியவில்லை என்பது தான் உண்மை….
அதை இப்பொழுது எண்ணி வருந்தினான் நான் என் விருப்பத்தை சொல்லாமல் மகா சொல்ல மாட்டாள் வேறு யாரும் சொல்லி இருக்கவும் மாட்டார்கள் இவளுக்கு எப்படி தெரியும் என்பதை எப்படி தெரிந்து கொள்வது திருமணத்திற்கு முன்பே என்னிடம் வந்து கேட்டிருக்கலாமே என்றும் எண்ணினான் ….
அனைத்து சடங்கும் முடிந்து வீட்டிற்கும் அழைத்து வந்தார்கள் அனைத்தையும் மகா தான் முன் நின்று செய்தால் நாத்தனார் செய்ய வேண்டும் என்று சொல்லியும் கூட மகா தான் செய்ய வேண்டும் என்று ஒரே பிடிவாதமாக சொல்லிவிட்டான் இனியும் சிரித்துக் கொண்டே மகா வே செய்யட்டும் என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டால்….
மகாவும் சிரித்த முகமாக அனைத்தையும் செய்தால் பிறகு இரவு சடங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது எப்போது டா இரவு வரும் நிலாவிடம் தனியாக நாம் பேசுவோம் என்று எழில் எண்ணி இருந்தான் இனி வேணி உதிரன் முகில் மகிழ் அன்பு கயல் ஏழு பேரும் எழிலை ஓட்டினார்கள் என்னடா இரவு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது ஏற்கனவே பார்த்தவள் தானே நீ சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்தவள் ….
உன்னுடனே வளர்ந்தவள் தானே இப்படி அலைகிறாய் என்றார்கள் எழில் அனைவரையும் பார்த்து முறைத்துவிட்டு ஆமாம் நீங்க எல்லாம் யாரும் அலையவில்லை பாருங்கள் நான் தான் அலைகிறேன் என்றான் இப்போது அனைவரும் கப் சிப் என்று வாயை மூடிக் கொண்டார்கள் மகா சிரித்துக்கொண்டே வந்தால் அவன் எங்களை திட்டியதற்கு உனக்கு சிரிப்பாக இருக்கிறதா என்று கேட்டார்கள் …..
அவன் கேட்டதில் ஒன்று தப்பில்லையே ஆமாம் டி நீ என்னைக்கும் அவனை விட்டு தந்து இருக்க என்றாள் கயல் மகா சிரித்துக்கொண்டே எழில் தோளில் கையை போட்டு கொண்டு நான் எதுக்கு அவனை விட்டு தரணும் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு தர மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே சிரித்தால் எழில் தோளில் இருந்த மகாவின் கையை லேசாக எடுத்துவிட்டான் வீட்டில் உள்ள அனைவரும் எழிலை அதிர்ச்சியாகி பார்த்தார்கள் மகா சிரித்தால் …
அனைவரும் மகாவிடம் அவன் தோளில் இருக்கும் உன்னுடைய கையை எடுத்து விடுகிறான் நீ அமைதியா இருக்கு என்றார்கள் இதுல என்ன இருக்கு என்று கேட்டாள் இல்ல டி என்றார்கள் ஒண்ணுமே இல்லை நீங்களா எதையாவது நினைத்து விட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று சொல்லிவிட்டு எழில் தோளில் ஒன்று போட்டுவிட்டு அவனது நெற்றியோடு நேற்று முட்டிவிட்டு லூசு மாதிரி நீயாக எதையாவது நினைத்துக் கொண்டு பயப்படாதே….
அவர்கள் சொன்னாலும் சொல்லாட்டியும் நிலா நீ எடுத்து வளர்த்தவள் தான் உன் கூட வளர்ந்தவளும் எதுக்கு இவ்வளவு நர்வஸ் ஆகுற இங்க பாரு என்று அவனது தாடையில் தட்டினால் அவனது கண்கள் லேசாக கலங்கி இருந்தது வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகி எழில் அருகில் வந்து நின்றார்கள் நாங்கள் அனைவரும் விளையாட்டிற்கு தான் அப்படி பேசினோம் நீ என்ன டா சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டார்கள்….
எழில் அனைவரையும் பார்த்து இல்லை என்று விட்டு மகாவை எலும்பு நொறுங்கும் அளவிற்கு கட்டிப் பிடித்தான் பிறகு வேணி தான் அண்ணா மகா அண்ணியை இந்த அளவுக்கு கட்டிப்பிடிக்கிறீங்க எலும்பு நொறுங்கிட போது என்ற பிறகுதான் மகாவை நாம் ரொம்பவே இறுக்கி பிடித்திருக்கிறோம் என்பதை உணரந்து விட்டு மகாவை விட்டு லேசாக விலகினான் மகா அவனை லேசாக கட்டி அணைத்து டேய் நேரம் ஆகிறது இப்போது நீ கீழே கிளம்பு என்றால்….
பிறகு எழில் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவருடனும் கீழே இறங்கி வந்தான் நிலா வீட்டில் உள்ள பெரியவர்களுடன் உட்கார்ந்து இருந்தால் அவனது முகம் வாட்டமாக இருப்பதையும் பார்த்துவிட்டு நிலா தான் சிரித்துக்கொண்டே என்ன மாமா நான் இங்க ஒத்தையா பொண்ணு தனியா உட்க்கார்ந்து இருக்கேன் நீ மாப்பிள்ளை வேற இப்படி பயந்துட்டு இத்தனை பேத்துக்கு கூட வர என்று சொல்லி சிரித்தால் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை முறைத்தார்கள்….
எழில் நிலாவின் அருகில் வந்து நிலாவின் தோளில் தட்டிவிட்டு யாரு டி இங்கு பயந்தா என்று சொல்லிவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது தாய் எடுத்துக் கொண்டு வந்து பால் சொம்பை தனது கையில் எடுத்துக் கொண்டு தனது தாத்தா பாட்டி காலில் விழுந்து விட்டு சாமியையும் தரிசனம் செய்துவிட்டு அவனாகவே நிலாவை கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்திருந்த மொட்டை மாடிக்கு அவளை அழைத்துச் சென்றான்….
அதாவது மகிழ் மகா இருவரும் இருந்த அறையில்தான் அவர்களுக்கு முதல் இரவு வைக்க வேண்டும் என்று எழில் நிலா இருவருமே தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டார்கள் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் மொட்டை மாடிக்கு அவர்கள் படி ஏறியவுடன் மகிழ் விசில் அடித்தான் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் அதன் பிறகு விசில் அடித்து சிரித்தார்கள் எழில் அனைவரையும் பார்த்து சிரித்து விட்டு மொட்டை மாடி படி ஏறினார் ….
நிலா எழில் பாக்கெட்டில் இருக்கும் போனை எடுத்து மகிழை பார்த்து தூக்கி எறிந்தால் மகிழ் அதை இலாவாக கேட்ச் பிடித்து என்ன நிலா உனக்கு ஒழுங்கா கூட அவன் போனை உடைக்க தெரியல இவனை எப்படி உன் பக்கம் இழுப்ப என்று சொல்லி சிரித்தான் நிலா ஒரு நிமிடம் எழில் கையை பிடித்து நிறுத்திவிட்டு அவளும் நின்று நான் எதுக்கு மாமா என்னுடைய எழில் மாமாவை என் பக்கம் இழுக்கணும் அவர் அவரா இருக்க தான் நான் ஆசைப்படுகிறேன்….
நானும் நானா இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் நானா விருப்பப்பட்டு திருமணத்துக்கு சம்மதிக்கணும்னு எனக்காக ரெண்டு வருஷம் காத்துட்டு இருந்தார் அதுவே எனக்கு பெரிய பரிசு தான் எனக்கு இதுவே சந்தோஷம் தான் இன்னொரு விஷயம் நான் இந்த நிமிஷம் வரைக்கும் அவர் கிட்டயே சொல்லல நான விருப்பப்பட்டு என்னோட முழு சமூகத்தோடு தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ..
இப்போ என்னோட வாழ்க்கையும் அவரோட தொடங்கப்போறன் என்று வீட்டில் உள்ள அனைவரும் பார்த்து சொல்லிவிட்டு இப்பொழுது எழில் கையை அவள் பிடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு படி ஏறினால் எழில் கண்கள் கலங்கி இருந்தது ஆனால் அவனது உதடு சிரித்துக் கொண்டு இருந்தது மேலே சென்றவுடன் எழில் பால் சொம்பை அங்கு உள்ள ஒரு இடத்தில் வைத்துவிட்டு நிலாவை வெளியே மொட்டை மாடிக்கு அழைத்து கொண்டு வந்தான் ……
அவளும் அமைதியாக அவனுடன் வந்து நின்றாள் எழில் நிலவைப் பார்த்து ரசித்துக்கொண்டே அவளை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்தான் நிலாவின் கண்ணீர் எழில் கையில் பட்டு தெரித்தது நிலா பின்பக்கம் இருந்தே அவனது தாடையில் இருக்கும் தாடியை தனது பற்களால் லேசாக கடித்து நீ உன்னுடைய விருப்பத்தை என்னிடம் வந்து நீ சொல்லும்போது நான் கேட்டேன் டா மாமா தூங்குவது போல் நடிச்சேன் மத்தபடி நீ உன்னோட விருப்பத்தை என்னிடம் சொல்லிட்டு தான் என் கழுத்துல மூணு முடிச்சு போட்டு இருக்க சாரி சாரி இரண்டு முடிச்சு மூன்றாவது முடிச்சு உன்னுடைய தோழி போட்டோ என்று சொல்லி அவனது தாடையில் கடித்தால் …
அவன் நிலாவின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு உண்மையாகவே நீ கேட்டி யாடி உண்மையாவே நான் கேட்டேன் என்று அவனது பக்கம் திரும்பி அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டே சொன்னாள் எழில் நிலாவை இறுக்கி கட்டி அணைத்தான் மகா மொட்டை மாடிக்கு வந்தால் இருவரும் இருக்கும் கோலத்தை பார்த்து இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக கீழே இறங்கினால் வீட்டில் உள்ள அனைவரும் என்ன என்று கேட்டவுடன் மகா அனைவரையும் பார்த்து கட்டை விரலை காண்பித்தாள்…
பிறகு கீழே இறங்கி வந்து அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சாமியை தரிசனம் செய்தால் வீட்டில் உள்ள அனைவருமே இவர்கள் இருவரும் அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டு சந்தோஷமாக அவர்களது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டினார்கள் நாமும் அதேபோல் வேண்டுவோம் இவர்கள் குடும்பம் இப்பொழுது போல் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி அவர்களிடமிருந்து விடை பெறுவோம்….
சுபம் …..🙏
அன்புடன்
❣️தனிமையின் காதலி ❣️
கதையின் நகர்வு எப்படி உள்ளது என்பதை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
மிக்க நன்றி 🙏
Good 👍. I like your storyr