Skip to content
Home » மகாலட்சுமி 54

மகாலட்சுமி 54

நிலா தனது தோழிகளிடம் வேணிக்கு தனது அண்ணன் முகிலுடன் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னால் அவள் அவ்வாறு சொன்னவுடன் அவளது தோழிகள் மூவரும் என்ன உன் அண்ணன் உடன் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிர்ச்சியாகி கேட்டார்கள் …அப்பொழுது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் இவர்களை தான் பார்த்தார்கள் அந்த வேலையில் எழிலும் வகுப்பிற்குள் வந்தான் நிலா மற்றும் நிலாவின் தோழிகள் நால்வரையும் பார்த்துக் கொண்டே வகுப்பிற்குள் வந்தான் கிளாஸ் ஸ்டார்ட் ஆகி இவ்வளவு நேரம் ஆகிறது …அமைதியாக இருக்க வேண்டும் என்று கூட தெரியாதா என்று பொத்தாம் பொதுவாக அனைவரையும் சொல்லிவிட்டு பாடம் எடுக்க ஆரம்பித்தான் பாடம் எடுத்து முடித்துவிட்டு இறுதியில் இளவேனில் ஸ்டாண்ட் அப் என்றான் ..அவளும் எழுந்து நின்றாள் வகுப்பில் உள்ள அனைவருக்கும் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரியும் ஆனால் யாருடன் என்று தெரியாது இப்பொழுது எழில் தான் காய்ஸ் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன் இளவேனிலுக்கு நேற்று சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் ஆகிவிட்டது..ஆகையால் இளவேனிலை  யாரும் தவறான கமெண்ட் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் உங்கள் தோழியாக எண்ணி நீங்கள் பேசுவதற்கும் அவளை தப்பான முறையில் கமெண்ட் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது…அந்த வித்தியாசங்களும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என்று விட்டு இளவேனில் சிட் டவுன் என்றான் அவளும் அமர்ந்துவிட்ட. பிறகு அனைவரையும் பார்த்து இன்று நான் டெஸ்ட் சொல்லி இருந்தேன் மறந்துவிடாதீர்கள் இப்பொழுது வைக்கவில்லை என்றவுடன் வைக்கவே மாட்டேன் என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள்…மதியம் ஃபர்ஸ்ட் அவர் என்னுடையதுதான் அதை மறந்து விடாதீர்கள் அப்போது டெஸ்ட் உண்டு இளவேனில் உனக்கு மட்டும் கால் மணி நேரம் டைம் தருகிறேன் நான் சொல்லும் கொஸ்டினை மட்டும் படித்து எழுதி காண்பித்தால் போதும் என்று விட்டு அனைவரும் நன்றாக எழுத வேண்டும் இல்லையென்றால் என்ன செய்வேன் என்று தெரியாது என்று சொல்லி விட்டு சென்று விட்டான்….அப்பொழுது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அச்சச்சோ ஒருநாள் லீவ் விட்டாங்க என்ற தைரியத்துல படிக்கவில்லையே என்று பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது நிலா வேனியை போட்டு அடித்தால் என்னை எதுக்கு அடிக்கிறாய் என்று கேட்டால்எல்லாம் உங்களால் தான் போடி நேற்று நடந்த கலாட்டாவில் நான் படிக்கவே இல்லை என்றால் சினிங்கி கொண்டு நாங்கள் எப்படி எழுதுவது என்றார்கள் நிலாவின் தோழிகள் மற்ற மூவரும் நிலா அவர்கள் மூவரையும் மூக்கு முட்டு முரைத்தால் பிறகு எப்படி கல்யாணம் ஆகியது என்று கேட்டார்கள் சொல்ற வாயை மூடுங்கடி என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அடுத்த வகுப்பு எடுப்பதற்காக மகா அவர்கள் கிளாசுக்குள் வந்தால்…மகாவை பார்த்துவிட்டு நிலாவின் தோழிகள் நிலாவை பார்த்தார்கள் நிலா  அப்புறமாக சொல்கிறேன் என்பது போல் கண் மூடி திறந்தால் எழிலும் மகா உடனே வந்தான் சாரி கைஸ் ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் இவர்கள் மிஸ் மகாலட்சுமி என்றான்  சாரி சார் ஐம் மிஸ்ஸஸ் மகாலட்சுமி அகமகிழன் என்றால்…அவள் அவ்வாறு சொன்னவுடன் எழிலுக்கு மனதிற்குள் சிரிப்புதான் வந்தது ஆனால் வெளியே அவளை முறைத்து பார்த்துவிட்டு சாரி என்று விட்டு மிஸ்ஸஸ் மகாலட்சுமி தான் இனிமேல் உங்களுக்கு ரேகா மேம்ற்க்கு பதிலாக இவங்கதான் இனிமேல் என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்…மகாவும் அவர்கள் வகுப்புக்குள் வந்தால் என்னுடைய பெயர் மகாலட்சுமி முதல் நாள் பாடம் எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் இதுவரை பாடம் எந்த அளவுக்கு சென்று இருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் உங்களது பெயர் என்ன என்ன ஆக வேண்டும் என்று இருக்கிறீர்கள் என்று அனைத்தும் சொல்லுங்கள்..ஒவ்வொருவராக அதேபோல் ஒவ்வொருவராக அவர்களது கனவையும் அவர்கள் பெயரையும் அனைத்தையும் சொன்னார்கள் மகா சிறிது நேரம் பேசிவிட்டு உங்களுக்கு என்னென்ன பாடம் பிடிக்கும் என்று சொல்லுங்கள் என்று கேட்டால் இப்படியே அவளுடைய பீரியடும் முடிந்தது அவளுடைய வகுப்பை முடித்துவிட்டு சென்றுவிட்டால்…அடுத்த ஹவருக்கு அடுத்து ஒரு டீச்சர்ஸ் வந்து கிளாஸ் எடுத்துவிட்டு சென்றார்கள் இப்படியே லஞ்சு பிரேக்கும் வந்தது நிலா தனது தோழிகளை அழைத்துக் கொண்டு எப்போதும் சாப்பிடும் மரத்துக்கு அடியில் வந்து அமர்ந்தால் அப்பொழுது அவளுடைய தோழிகள் இப்போது டெஸ்ட் என்னடி செய்வது என்று கேட்டார்கள் …என்ன செய்வது என்றால் லஞ்ச் பிரேக்கில் தான் படிக்க வேண்டும் என்றால் சீக்கிரம் சாப்பிடுங்கள் நான் கொஞ்சம் கூட படிக்கவில்லை உண்மையாகவே என்றால் அவர்களுக்கும் அவளது சூழ்நிலை புரிந்துகொள் முடிந்தது அதனால் அமைதியாக இருந்தார்கள் பிறகு எப்படி திருமணம் ஆகியது என்று கேட்டார்கள்…அமைதியா இருங்கடி இப்போ உங்களுக்கு கதை சொல்ல ஆரம்பிச்சா என்னால முடியாது நான் மாலை வீட்டுக்குச் சென்று குரூப்பில் வாய்ஸ் நோட் போடுகிறேன் பிறகு நாளை பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக சாப்பிட்டார்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள்…அனைவரும் கைகழுவிக்கொண்டு டிபன் பாக்ஸ் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது எழில் அவனது நண்பன் வருனுடன் சாப்பிட்டுவிட்டு கை கழுவி கொண்டு செல்ல வந்திருந்தான் பிறகு அகல் நிலா என்று அழைத்தான் அவளும் ஒரு நிமிடம் நின்று எழிலை பார்த்துவிட்டு அவனிடம் வந்து நின்று என்ன சார் என்று கேட்டால்…சாப்பிட்டு விட்டீர்கள் எனில் என்னுடைய ஸ்டாப் ரூமுக்கு வந்து விட்டுச் செல்லுங்கள் என்றான் சரி சார் என்று விட்டு தனது தோழிகளிடம் டிபன் பாக்ஸில் கொடுத்துவிட்டு ஸ்டாப் ரூம் சென்றால் மகா லேடீஸ் ஸ்டாப்புடன் உட்கருந்து சாப்பிட செய்தல் நிலா மே இன் கமின் சார் என்று கேட்டுவிட்டு எழில் இருக்கும் இடத்திற்கு சென்று நின்றாள்…நிலா டெஸ்ட் சொல்லிருந்தேன் அல்லவா எங்களுக்கு மீட்டிங் இருக்கிறது நான் வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகலாம் அதனால் டெஸ்ட் கொஸ்டின்ஸ் இதில் இருக்கிறது போர்டில் எழுதி போட்டுவிட்டு நீங்களும் டெஸ்ட் எழுதி விடுங்கள் இளவேனிலுக்கு என்ன கொஸ்டின் எழுத வேண்டும் என்றும் இருக்கிறது…கரெக்டாக 15 மினிட்ஸ் டைம் கொடுங்கள் அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்களோ அது வரை மட்டும்தான் அந்த நேரத்திற்குள் படித்திருக்க வேண்டும் அனைத்து பேப்பரையும் வாங்கி வைத்துக் கொண்டு இருங்கள். நான் எப்படியும் இந்த பீரியட் முடிவதற்குள் வந்து விடுவேன் என்று நினைக்கிறேன் என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்…சரி என்று வாங்கிவிட்டு நிலா வகுப்பிற்கு வந்தால் என்ன சார் சொன்னார்கள் என்று வகுப்பில் உள்ள அனைவரும் கேட்டார்கள் சாருக்கு இப்பொழுது மீட்டிங் இருக்கிறதாம் என்றவுடன்  வகுப்பில் உள்ள அனைவரும் ஓ என்று சவுண்ட் விட்டார்கள் அனைவரும் சந்தோஷமடைந்தார்கள்..டெஸ்ட் என்னை பார்க்க சொல்லி இருக்கிறார் என்றவுடன் அனைவருக்கும் சப் என்று ஆகியது அவன் வரமாட்டான் டெஸ்ட் இருக்காது என்று எண்ணினார்கள் இப்பொழுது நிலா டெஸ்ட் வைக்க போகிறாள் என்று உடன் அனைவருக்கும் சிறிது வருத்தமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் எழில் சார் இருந்தால் கூட கொஞ்சம் பக்கத்தில் பார்த்து கூட எழுதலாம் …ஆனால் நிலா இருக்கும்பொழுது அப்படி செய்ய முடியாது என்று வகுப்பில் உள்ள அனைவருக்கும் தெரியும் அதனால் சிறிது வருத்தமடைந்தார்கள் அனைவரும் நிலாவையே பார்த்தார்கள் நிலாவே ஒரு மாதிரி தான் மூச்சு வைத்திருந்தால் இப்போது எப்படி படிப்ப என்று அவளுடைய தோழிகள் கேட்டார்கள் ..எங்க இருந்து படிக்கிறது என்றால் அப்புறம் என்ன பண்ண போற என்றார்கள் அப்புறம் என்ன கோவிந்தா தான் என்று விட்டு அந்த ஹவர் ஸ்டார்ட் ஆனவுடன் கொஸ்டின் அனைத்தையும் போர்டில் எழுதி போட்டால் இளவேணிலுக்கு என்று கொடுக்கப்பட்ட கொஸ்டின் அவளுக்கு சொல்லிவிட்டு கரெக்டாக பதினைந்து நிமிடம் தான் டைம் என்றும் சொன்னாள்…அவளால் முடிந்த வரை இளவேனில் அந்த ஒரு கொஸ்டின் மட்டும் படித்தால் மற்றவர்களும் அவர்களுக்கு தெரிந்ததை எழுதினார்கள் நிலா படிக்கவில்லை என்றாலும் நடத்திய போது கேட்டதை வைத்து எழுத செய்தால் அனைவரும் எழுதி முடித்துவிட்டு பிறகு நிலா பேப்பர் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் எழில் அவர்கள் வகுப்பிற்குள் வந்தான்….அனைவரும் எழுதி முடித்து விட்டீர்களா எப்படி எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே நிலாவின் கையில் இருக்கும் பேப்பர்களை வாங்கிவிட்டு நிலாவை அவளது இடத்தில் உட்கார சொல்லிவிட்டு மற்றவர்களிடம் பேப்பர் வாங்க செய்தான் அனைவரும் கொடுத்த பிறகு இந்த டெஸ்ட் வைத்து தான் உங்களுக்கு இன்டர்நெல் மார்க் போடுவேன்…எப்படி எழுதி இருக்கிறீர்கள் என்று பார்ப்பேன் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் பேப்பர் வாங்கிக் கொண்டு சென்று விட்டான் வகுப்பில் உள்ள அனைவரும் என்ன  இந்த மார்க் இதை வைத்து தான் இன்டர்நெல் மார்க் போடுவாரா அப்பொழுது பட்ட ராமாம் தான் என்று எண்ணினார்கள் …அன்று மாலை பொழுதும் அப்படியே சென்றது மாலை அனைவரும் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்தார்கள் மகிழ் காலையிலே சொல்லிச் சென்றான் இன்று ஒரு நாள் முகில் உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருவான் நிலா உட்கார்ந்த பிறகு நீ உட்கார்ந்து கொள் வேணி என்று வேணியிடமும் சொல்லிவிட்டு தான் வந்தான்…அவளும் சரி என்று விட்டாள் முகில் இருவரையும் அழைத்துக் கொண்டு செல்ல வரும் வேளையில் நிலாவின் முகம் ஒரு வாட்டமாக இருந்தது முகில் என்ன ஆச்சு என்று கேட்டேன் நிலா எதுவும் பதில் சொல்லாமல் இருந்தால் முகில் வேணியை பார்த்தான் நான் வீட்டிற்கு வந்து சொல்கிறேன் என்று அவள் சொன்னால் …முகில் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் போகும் வழியில் வேணியிடம் இன்று வண்டி வாங்கிக் கொள்ளலாமா என்று கேட்டான் வேண்டாம் இன்னும் ஒரு வாரம் கழித்து வாங்கிக் கொள்ளலாம் ஒன்று பிரச்சனை இல்லை இல்லை என்றாலும் மகிழ் அண்ணா கூட  வாங்கி தரட்டும் அதற்கான அமௌன்ட் கொடுத்து விடுங்கள் என்று சொன்னால் ..சரி இப்பொழுது ஏதோ ஒன்று சரி இல்லை என்று மனதில் எண்ணிக் கொண்டு சரி என்று விட்டு அமைதியாக இருவரையும் வீட்டிற்கு அழைத்து  சென்றான் அவனுக்கு முக்கியமான வேலை ஒன்று இருந்ததால் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு தனது அம்மா அத்தை சித்தியிடம் சொல்லிவிட்டு கடைக்கு சென்று விட்டான் …வீட்டிற்கு சென்றவுடன் எப்பொழுதுமே நிலா சுந்தரியிடம் சென்று ஒரு பத்து நிமிடம் பேசி விட்டு செல்வது வழக்கம் ஆனால் இன்று சுந்தரி நிலா நிலா என்று அழைக்க அழைக்க எதுவும் சொல்லாமல் வேகமாக அவளது சென்றுவிட்டாள் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை அனைவரும் முகிலை பார்த்தார்கள்…முகில் எனக்கு எதுவும் தெரியாது என்று விட்டு வேலையை இருப்பதால் சென்றுவிட்டான். அனைவரும் இப்பொழுது வேணியை பார்த்தார்கள் வேணி நிலவாக சொல்வாள் என்று விட்டு அமைதியாக அவளது அறைக்கு சென்று விட்டாள் வீட்டில் அனைவருக்கும் இவள் ஏன் அவ்வாறு இருக்கிறாள் என்று புரியவில்லை…எழில் ஏதாவது சொல்லி விட்டானோ என்று அனைவரும் எழிலை நினைத்தார்கள் எழிலாள் தான் இவள் இப்படி வருத்தமான இருக்கிறாளோ என்று எண்ணினார்கள் நிலா ஏன் இவ்வளவு அமைதியாக செல்கிறாள் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️

3 thoughts on “மகாலட்சுமி 54”

  1. CRVS2797

    ஒருவேளை, டெஸ்ட் சரியா எழுதலைன்னு முகத்தை தூக்கி வைச்சுட்டாளோ என்னவோ…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *