Skip to content
Home » மகாலட்சுமி 55

மகாலட்சுமி 55

எழில் மகா இருவரும் ஒன்றாக தான் வெவ்வேறு வண்டியில் வந்து இறங்கினார்கள் இருவரும் ஒன்றாக தான் வந்தார்கள் ஆனால் வரும் வழியில் ஒன்றும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை..

இருவரும் வீட்டிற்குள் வந்தவுடன் முதலில் சுந்தரி தான் எழிலை வரவேற்பு அறையில் பிடித்து வைத்துக் கொண்டு டேய் நிலாவை ஏதாவது சொன்னாயா என்று கேட்டார் அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை பிறகு கண்மூடி கண் திறந்து விட்டு எங்கம்மா அவள் என்று கேட்டான்….

டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லவில்லை ஏதாவது சொன்னாயா என்று கேட்டார் அப்பொழுது நிலாவே தனது எழில் மாமாவின் குரலும் தனது அத்தையின் குரல் வேகமாக கேட்டவுடன் அவளது அறையில் இருந்து வெளியில் வந்தால் என்னத்தை நான் ஒரு மாதிரியாக இருந்தால்…

அதற்கு காரணம் எழில் மாமா தான என்று கேட்டுக் கொண்டே வந்தால் அப்புறம் ஏண்டி அமைதியாக இருக்கிறாய் தினமும் வந்தவுடன் கல்லூரியில் என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லாமல் செல்ல மாட்டாய் ஆனால் இன்று நான் கூப்பிட கூப்பிட அமைதியாக உள்ளே சென்று விட்டாய் …

உன்னுடைய அண்ணனை கேட்டாலும் எனக்கு தெரியாது என்று விட்டு சென்று விட்டான் வேனியிடம் கேட்டாலும் அவளும் எதுவும் சொல்லவில்லை நான் என்ன நினைப்பது என்று கேட்டார் அத்தை நான் அமைதியாக சென்றேன் என்றால் எனக்கு உடலில் கூட ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம் அல்லவா…

எப்பொழுது எடுத்தாலும் எனக்கு எதுவாக இருந்தாலும் எழில் மாமாவை தான் குற்றம் சொல்வீர்களா என்று கேட்டாள் இவள் ஏன் இன்று இப்படி பேசுகிறாள்   என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை அப்பொழுது பாண்டியம்மாள்  பாட்டி தான் சுந்தரியை திட்டி விட்டு நீ இங்க வாடி என்று கூப்பிட்டார் நிலா அவரது மடியில் சென்று படுத்தால்…

சரி நிலா அவன் எதுவும் செய்யவில்லை உனக்கு உடலிலும் எந்த பிரச்சினையில்லை என்று எங்களுக்கு தெரியும் நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே அமைதியாக இரு என்று விட்டு சுந்தரிக்கு டீ எடுத்துட்டு வருமாறு கண் ஜாடை காண்பித்தார் அவரும் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவுடன் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தால்…

பிறகு சுந்தரி மடியில் படுத்து தூங்கிவிட்டால் எழில் தனது தாயிடம் அவள் கொஞ்ச நேரம் தூங்கி எழட்டும் என்றான் அப்பொழுதும் சுந்தரி அமைதியாக இல்லாமல் என்னடா ஆச்சு ஏன் புள்ள இப்படி இருக்கா என்று கேட்டார் எழில் வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு அவளுக்கு இன்று டெஸ்ட் இருந்தது …

அவள் நேற்று முகில் திருமணத்தால் படிக்காமல் விட்டுவிட்டால் போல எப்பொழுதும் இரவு வேளையில் படித்து விடுவாள் நேற்று படிக்கவில்லை போல யாரும் அவளை திட்டலாம் செய்யவில்லை அதுவும் அது என்னுடைய பாடம் தான் நான் அவளை திட்ட எல்லாம் செய்யவில்லை எதுவாக இருந்தாலும் இந்த டேஸ்ட் வைத்து தான் முடிவெடுப்பேன் என்றேன்…

இன்னும் நான் பார்க்கவில்லை பேப்பரைக் கூட அவள் ஒழுங்காக எழுதவில்லை என்று நினைக்கிறேன் அதற்காக அவளே வருத்தம் அடைந்து கொண்டுதான் இவ்வாறு நடந்து கொள்கிறாள் வேறு எதுவும் பிரச்சனை இல்லை என்றான் புள்ள படிக்கவில்லை என்றால் எதற்காக டா  இவ்வளவு சோர்வாக இருக்கிறார்கள் என்று கேட்டார்…

அப்பொழுது எழில் சிரித்துக் கொண்டே நீங்கள் எல்லாம் நினைப்பது போல் கிடையாது அவளுக்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. கனவு இருக்கிறது அதை அவள் நன்றாக செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது அவளுடைய ஆசை கிடையாது…

நல்ல முறையில் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவளுடைய ஆசை இப்பொழுது அவளால் முடியவில்லை என்றவுடன் அவள் வருந்துகிறாள் மற்றபடி யாரும் அவளை திட்டவும் இல்லை எதுவும் சொல்லவும் இல்லை என்று விட்டு அவனது அறைக்குச் சென்றான்…

இவ்வளவு நேரம் எழில் பேசியதை நிலா கேட்க தான் செய்தால் அவள் தூங்கிது என்னவோ உண்மைதான் ஆனால் எழில் பேச ஆரம்பித்தவுடன் அவள் எழுந்து விட்டால் கண் மூடிக்கொண்டு இவ்வளவு நேரம் எழில் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு அவன் சென்றவுடன் எழுந்து உட்கார்ந்தால்…

ஏனென்றால் எழில் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தது மட்டும் இல்லாமல் நிலா கண்ணீர் வடித்தல் அதை சுந்தரியும் உணர்ந்தார் அவர் அதை உணர்ந்து இருந்தாலும் அமைதியாக இருந்தார் நிலா அத்தை என்று சொல்லிவிட்டு அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள்…

சரி டி இப்பொழுது இல்லை என்றால் என்ன அடுத்த முறை ஒழுங்காக படித்துக் கொள் நீ வேண்டும் என்று படிக்காமல் இல்லையே என்றார் அப்போது வேணி சாரி நிலா என்றால் லூசு மாதிரி பேசாதே இதற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நாம் அனைவரும் ஒரே குடும்பம்…

அப்படி இருக்கும் பொழுது இதில் எங்கிருந்து சாரி எல்லாம் வந்தது என்று தனது தோழியை திட்டி விட்டு சுந்தரியிடம் டீ கேட்டு வாங்கி குடித்தாள் அன்றைய இரவு பொழுதும் வந்தது மகா வேணி இருவரும் சமையல் அறைக்குள் வேலை செய்ய வந்ததற்கு உங்களுக்கு படிக்கும் வேலையும் உனக்கு கிளாஸ் எடுப்பதற்கு நோட்ஸ் எடுக்க வேண்டிய வேலையும் இருக்கும் அல்லவா அதை போய் பாருங்கள்…

ஒன்றும் பிரச்சனை இல்லை என இருவரையும் அனுப்பி வைத்தார் காவேரி இருவரும் இரண்டு முறை கேட்டுப் பார்த்தார்கள் அமைதியாக போங்கள் அதான் நாங்கள் மூவரும் இருக்கிறோம் அல்லவா பார்த்துக் கொள்கிறோம் என்று உடன் சரி என்று விட்டு இருவரும் வந்து விட்டார்கள் இனி இவர்கள் கல்லூரி முடிந்து வரும்பொழுது அசதியில் தூங்கிக் கொண்டிருந்ததால்…

யாரும் அவளை எழுப்பவில்லை ஏழு மணி ஆகியதால் அவள் இரவு தூங்காமல் விட்டுவிடுவாள் என்பதால் மகா தான் எழுத்து சென்றது இனியை எழுப்பினால் இனி எழுந்தவுடன் சரி நான் முகம் கை கால் கழுவிக்கொண்டு வருகிறேன் என்றால் சரி என்று விட்டு மகாவும் வெளியே சென்றால் இனி அவளது அறையில் இருந்து முகம் கை கால் கழுவிக்கொண்டு வரும்போது சிரித்த முகமாக சந்தோஷமாக ஓடி வந்தால்…

மகா எழில் அனைவரும் இவள் எதற்காக இப்படி ஓடி வருகிறாள் என்று கேட்டார்கள் நான் சந்தோஷமாக இருக்கிறேன் அதனால் தான் என்றால் அப்படி என்னடி சந்தோஷமான விஷயம் என்று எழில் தனது அக்காவிடம் கேட்டான் மகா அவசரத்தில் இன்று கயலிடம் இன்று முதல் நாள் வேலைக்கு செல்கிறேன் என்று மட்டும் தான் சொல்லி விட்டு சென்றிருப்பாள் போல…

நான் அவளுக்கு போன் செய்து பேசினேன் என்றால் காவேரி அவளை முறைத்து பார்த்தார் நீ எதற்காக போன் போட்ட அவளுக்கு என்றார் இனி தனது அத்தையை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு அத்தை அவளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பேசாதீர்கள் அதேபோல் இந்த வீட்டிற்குள் அவர்கள் வரக்கூடாது என்று சொன்னீர்கள் யாரும் அவளை இந்த வீட்டிற்குள் அழைத்து வரவில்லை…

ஆனால் என்னை பேச வேண்டாம் என்றெல்லாம் சொல்லாதீர்கள் என்று விட்டு அமைதியாகிவிட்டாள் அதன் பிறகு காவிரியும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார் அவள் இப்போது மாச இருக்கிறாள் என்பதால் வேணி தான் அக்கா கயல் அண்ணி எப்படி இருக்காங்களாம் ஹாஸ்பிடல் போனாங்களா என்று கேட்டால் …..

இனி சிரித்துக் கொண்டே அவள் ஹாஸ்பிடலுக்கு போய்விட்டு வந்தாலாம் குழந்தை நன்றாக இருக்கிறதாம் மூன்றாவது மாதம் தொடங்கிவிட்டது என்று சொன்னார்களாம்  என்றால் முகில் அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்தான் ..

என்ன இனி சந்தோஷமா இருக்க என்று கேட்டுக் கொண்டே வந்தான் நீ தாய் மாமா ஆகி விட்ட இல்ல  அந்த சந்தோஷம்தான் என்றால் ஒரு நிமிடம் முகிலுக்கு ஒன்றும் புரியாமல் திரு திருவென  முழித்தான் பிறகு நிலா அவனது கையில் கிள்ளி டேய் அண்ணா  கயல் மாசமா இருக்கிறாள் இல்ல அதான் என்றாள்   …

முகில் சிரித்து கொண்டே கயல் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்தால என்ன சொன்னாங்களாம் என்றான் காவேரி தனது மகனை மறைத்து பார்த்தார்  முகில் தனது தாயை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் இனிடம் கேட்க ஆரம்பித்தான் காவேரி  முனங்கி கொண்டே யாரும் நான் சொல்வதை கேட்பதாக இல்லை என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள்  சென்று விட்டார்…

அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது இனி முகிலிடம் கயலிடம் பேசியதை சொல்லிவிட்டு பிறகு இனி மகாவிடம் மகா அண்ணன் எங்கே இன்னும் காணவில்லை என்று கேட்டால் அவர் ஏதாவது வேலையாக சென்று இருப்பார் வந்து விடுவார் இனி என்றாள் ..

உன் புருஷனுக்கு வேலை இல்லாமலா இருக்கும் என்றான்  முகில் மாமாவுக்கு ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும் அண்ணா என்று விட்டு  வந்துருவாரு இனி என்றாள் வருவாரு வருவாரு என்றான் எழில் மகா எழிலை முறைத்து பார்த்தல் நிலா சிரித்துக் கொண்டே அது எப்படி மாமா எங்க போனாலும் சொல்லிட்டு போய்டுவாரு என்று  எழில் தோலில் கை போட்டுக்கொண்டு கேட்டால் …

யார் நிலா கண்டா நமக்குத் தெரியும் என்றான் மகா இருவரையும் திரும்பி முறைத்து பார்த்தால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது எழில் நிலா விடம் நிலா உள்ளே பேப்பர் கட்டுக் இருக்கு கொண்டு வா என்றான் சரி என்று விட்டு அவளும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தால்…


எழில் ஒவ்வொரு பேப்பராக திருத்தி விட்டு வேணியிடம் மார்க் கூட்டி சொல்லு வேணி என்றான் வேணி எழிலை பார்த்தால் மகா வேணியிடம் இது எப்பொழுதும் நடக்கும் ஒன்று தாண்டா ஏன் அத்தை அம்மா எல்லோரும் கூட்டி தருவார்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்திருக்கும் பொழுது பேசிக்கொண்டே பேப்பர்  திருத்தம் செய்யும் வேலையில் மட்டுமே என்றாள்…

பேசிக் கொண்டே பேப்பர் திருத்துவரா என்று விட்டு அமைதியாகி விட்டால் வேணி எழில் சிரித்துக்கொண்டே வேணியை பார்த்து அதெல்லாம் மார்க் கூட குறைச்சு எல்லாம் போட மாட்டேன் அப்படி பண்ற ஆள் நான் இல்லை என்றான்  சிரித்து விட்டால் வேணி நிலா சிரித்துக் கொண்டே நம்பாத நம்பாத இப்படிதான் உனக்கு மார்க் குறையுது என்றாள்


எழில் சிரித்து கொண்டே நிலா தலையில் கொட்டி விட்டு இந்த பிடி இதை கவுண்ட் பண்ணி தா என்றான் வேணி தனது கையில் இருக்கும் நிலாவின் பேப்பரையே பார்த்து கொண்டு இருந்தாள்…

இனி தான் என்ன வேணி இந்த பேப்பரை இவ்வளவு நேரம் பார்கிற என்று கேட்டால் வேணி எழிலை பார்த்து கொண்டே நிலா பேப்பர் அக்கா என்றால்….

வீட்டில் உள்ள அனைவரும் அவள் என்ன மார்க் வாங்கி இருப்பாள் என்று அந்த பேப்பரை பார்த்தார்கள்….ஆனால் நிலா எழில் மகா மூவரும் எப்போதும் போல் இருந்தார்கள் …

நிலா எப்படி எழுதி இருக்கிறாள் அவளுடைய மார்க் என்ன என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

5 thoughts on “மகாலட்சுமி 55”

  1. CRVS2797

    அவ தான் க்ளாஸ்லயே கவனிக்கிற ஆளாச்சே…
    அப்புறம் ஏன் மார்க் குறையப் போகுமது….???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *