Skip to content
Home » மகாலட்சுமி 56

மகாலட்சுமி 56

வேணி கையில் நிலாவில் பேப்பர் வந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும்  நிலா என்ன மார்க் எடுத்து இருப்பாள் என்று பார்த்தார்கள் ..

அப்பொழுது சுந்தரி தான் அந்த பேப்பரை வாங்கியும் பார்த்தார் அவள் 25க்கு 20 அரை மார்க் வாங்கி இருந்தால் …

சுந்தரி எழில் இடம் ஏண்டா அவள்தான் ஓரளவுக்கு நல்ல மார்க் வாங்கி இருக்கிறாள் இல்ல அவள் முழுமதிப்பின் தான் எப்பொழுதும் எடுபாளா அதற்காக தான் வருந்துகிறாளா என்றார் …

எழில் சிரித்துக் கொண்டே அம்மா உங்களுக்கு அவளைப் பற்றி தெரியவில்லை அவள் முழுமதிப்பின் எப்பொழுதுமே எடுக்க மாட்டாள் …

அவள் செமஸ்டர் எக்ஸாமில் மட்டும்தான் எவ்வளவு படித்திருந்தாலும் ஒழுங்காக பர்பாமென்ஸ் பண்ணுவாள் மற்றபடி கல்லூரியில் வைக்கும் சாதா  டெஸ்ட்க்கு எல்லாம் அவள் எப்போதுமே மேலோட்டமாக மட்டும்தான் எழுதி விட்டு வருவாள்…

அவளுக்கு இப்போது மார்க்  என்று வராது என்று அவள் வருந்தவில்லை அவள் படிக்கவில்லை ஒழுங்காக எழுதவில்லை என்று மட்டும் தான் வருந்தினாள் ..

இன்னும் சொல்லப்போனால் ஒழுங்காக எழுதவில்லை என்பதை தாண்டி அவள் படிக்கவில்லை என்பது தான் விஷயம் அவள் படித்துவிட்டு எழுதவில்லை என்றால் அதற்கு வேறு மாதிரி நடந்து கொண்டிருப்பாள் சுந்தரி நிலாவை பார்த்தார்..

நிலா கண் மூடி திறந்தவுடன் சரி என்று விட்டு அமைதியாகிவிட்டார்கள் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது மகிழ் வந்தான் என்னமா காரசாரமாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது என்று கேட்டுக் கொண்டே வந்தான்…

இனி தான் இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய் அண்ணா என்றாள் ஒரு முக்கியமான வேலை விஷயமாக சென்று இருந்தேன் ஏன் என்ன ஆயிற்று என்றான்  ஒன்றுமில்லை எல்லோரும் இருக்கிறார்கள் நீ மட்டும் இல்லை என்பதற்காக தான் கேட்டேன் …

நான் மட்டும் தான் இல்லையா உன்னுடைய புருஷன் உதிரனை கூட தான் காணவில்லை போல என்றான் மகிழ் சிரித்துக் கொண்டே தனது தங்கையிடம் இன்னும் மாமாவும் வரவில்லை என்றால் அப்பொழுது வேணி தான் நடந்த அனைத்து விஷயங்களையும் சொன்னால்…

  மகிழ் நிலாவை பார்த்து சிரித்துவிட்டு மகா கிளம்பி வா நாம் போய் கயலை பார்த்துவிட்டு வரலாம் என்றான் என்ன கயலை பார்க்கவா என்று வேகமாக கேட்டார் காவேரி….

மகிழ் திரும்பித் தனது அத்தையை பார்த்துவிட்டு அத்தை ஏதாவது பேசாதீர்கள் ப்ளீஸ் அவள் இப்பொழுது மாசமாக இருக்கிறாள் உங்களை  போக சொல்லி நான் சொல்லவில்லை .,

நாங்கள் இருவரும் பார்த்துவிட்டு வருகிறோம் என்றான் டேய் அவள் உன்னை எந்த நிலையில் நிற்க வைத்து விட்டு சென்றாள் என்று உனக்கு புரியவில்லையா என்றார் …

அத்தை நீங்கள் சென்று அவளை பார்த்து பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் முழு தப்பும் அவள் மேல் மட்டும் தான் இருக்கும் என்று எண்ணாதீர்கள் என்று பொத்தம்புதுவாக சொல்லிவிட்டு மகா கிளம்பி வா என்றான் ..

சரி என்று விட்டு மகா எழுந்தால் அப்போது மகிழ் தனது தாயிடம் அம்மா அவளுக்கு பிடித்ததை செய்து தாருங்கள் என்றான் அவர் அமைதியாக நின்றார் இரண்டு முறை சொல்லிப் பார்த்தான்…

அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை என்றவுடன் மகா தான்  மாமா நான் செய்கிறேன் என்றால் அப்போது வேணி நீங்கள் போயிட்டு கிளம்புங்கள் அண்ணி நான் செய்கிறேன் என்றாள் இல்லடா நானே செய்து கொள்கிறேன் என்றால் …

அண்ணி நீங்க போங்க ஒன்றும் பிரச்சனை இல்லை என்ன செய்ய வேண்டும் அண்ணிக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்றவுடன் சரி என்று விட்டாள்…

அவள் வேலை செய்கிறாள் என்றவுடன் குழி பணியாரம் மட்டும் செய் வேணி என்று விட்டு கிளம்பச் சென்றாள் தான் இவ்வளவு சொல்லியும் தனது பிள்ளைகள் அனைவரும் அவள் பக்கமே நிற்பதால் காவேரி கோபத்தில் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்…

வேணி சென்று முதலில் குழி பணியாரம் ஊற்றினால் பிறகு அதில் வெள்ளம் கலந்து ஸ்வீட் பணியாரமும் ஊற்றினால் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றார் அத்தை கயல் அண்ணிக்கு  கார பணியாரம் பிடிக்கும் ஸ்வீட் பணியாரமும் பிடிக்கும் என்று நிலா சொல்லி கேட்டிருக்கிறேன் என்றாள்…

காவேரி அவளை முறைத்துக் கொண்டிருந்தார் அவள் அரிசி மாவு எடுத்து  கொண்டு இருந்தாள்  என்ன செய்கிறாய் என்று கேட்டார் திரும்பவும் அத்தை கயல் அண்ணிக்கு கொழுக்கட்டை பிடிக்கும் பருப்பு பாயாசம் பிடிக்கும் இல்லை என்றால்…

அதற்கு என்ன என்றார் அத்தை நான் செய்து கொடுக்கிறேன் முதல் முறையாக செல்கிறார்கள் அதுவும் அண்ணி மாசமாக இருக்கிறார்கள் என்று உடன் இவளுக்கு அனைவருக்கும் என்ன பிடித்திருக்கிறது என்று தெரிந்திருக்கிறது என்று மட்டும் எண்ண விட்டு எதையோ செய் என்று விட்டு அவள் செய்வதை அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார் …

அவள் உப்பு கூட குறைய ஏதாவது போடுகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தார் அமைதியாக நின்று வேடிக்கை மட்டும் பார்த்தார் எல்லாம் ரெடியாகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டே மகா வந்தால் …

எல்லாம் ரெடி ஆயிடுச்சு அண்ணி என்று சொல்லிக் கொண்டு வேணியும்  சமையலறையில் இருந்து ஒரு பையில் அனைத்தையும் போட்டு எடுத்துக் கொண்டு வந்தால் மகா சமையல் அறைக்குள் போகும் வேளையில்  எழில் கயலை பார்க்க நீ போக வேண்டாம் என்றான் வேகமாக….

வீட்டில் உள்ள அனைவரும் எழிலை பார்த்தார்கள் இவன் ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று மகாவிற்கு ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

வேணியும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தால் எழில்  திரும்பவும் சொன்னான் நீ கயலை பார்க்க போக வேண்டாம் என்றான் மகா எழிலை பார்த்தால் அவன் அவ்வாறு சொன்னவுடன் அதன் பிறகு தான் மகா ஒன்றை உணர்ந்தால் அதன் பிறகு அவள் அறைக்குள் புகுந்து விட்டால்….

வீட்டில் உள்ள அனைவரும் எழில் அவ்வாறு சொன்னவுடன் மகா கோபித்து கொண்டாளோ என்று எண்ணினார்கள் ஆனால் மகிழ் எழிலையே பார்த்துக் கொண்டிருந்தான்….

டேய் அண்ணா மூன்று மாதங்களாக அவள் 20 25 நாட்களுக்குள் தலை குளித்துக் கொண்டிருக்கிறாள் அவளை நாளை மருத்துவமனை அழைத்துச் செல் மாசமாக இருக்கும் பெண்ணை பார்க்க செல்லும் வேளையில் இவள் தலை குளித்தவுடன் வர வேண்டாம்…

நீ வேண்டுமானால் உன்னுடன் நிலாவை அழைத்து செல் என்றான் அப்பொழுது வேணி நான் வருகிறேன் என்றால்  அப்பொழுது எழில்  வேணாம் வேணி நீ நான் முகில் மூவரும் நாளை செல்லலாம் என்றான்…

டேய் என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நான் யாரையுமே போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொருவராக நான் செல்கிறேன் என்று சொல்கிறீர்கள் என்றார்…

அத்தை நீங்கள் போக வேண்டாம் பேச வேண்டாம் என்று சொன்னீர்கள் ஆனால் மாசமாக இருக்கும் பெண்ணை அம்மாவாக நீங்கள் தான் முதலில் பார்க்க வேண்டும் நீங்கள் பார்க்கவில்லை …

உங்களை போங்கள் என்றும் நாங்கள் யாரும் செல்லவில்லை ஆனால் எங்களை போக வேண்டும் என்று சொல்லாதீர்கள் ப்ளீஸ் என்றால் அவர் அனைவரையும் முறைத்துவிட்டு ஏதோ பண்ணுங்க எப்படியோ போய் தொலைங்க என்று விட்டு அவரது அறைக்கு செல்ல இருந்தார்…

அப்பொழுது நிலா தனது பெரியம்மாவை பார்த்துக் கொண்டு இருந்தால் அவர் நிலாவை பார்த்து விட்டு இவங்கள் யாரும் கேட்கவில்லை நீ மட்டும் ஏண்டி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்றார் …

நிலா அமைதியாக அப்போதும் தனது பெரியம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தவுடன் போயிட்டு வா உனக்கு மட்டும் என்ன இங்க இருக்க எல்லாரையும் விட உன்னிடம் தான் அவ ரொம்ப அட்டாச்மென்ட் அதிக வலி உனக்கும் இருக்க தான் செய்யும்….

போயிட்டு வா என்னை ஏன் பார்க்கிறாய் என்று விட்டு சென்று விட்டார். பிறகு நிலா போய் கிளம்பி கொண்டு வந்தால் பிறகு நிலாவும் மகிழும் கயலை பார்க்க சென்றார்கள்..

அவர்கள் இருவரும் சென்ற பிறகு எழில் தான் தனது அம்மாவிடம் அம்மா இடியாப்பம் செய்து வையுங்கள்  நிலவுக்கு பிடிக்கும் அல்லவா என்றான் அப்பொழுது கோதை தான் சமையலறையில் வந்து டேய் நாங்கள் இரவு உணவு முழுதும் சமைத்து விட்டோம் …

இப்போது வந்து அதை செய் இதை செய் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்றார் அவள் என்ன இருக்கிறதோ அதையே சாப்பிட்டு கொல்வாள் ஒரு மாதிரி இருக்கிறால் என்பதற்காக எல்லாம் நீங்கள்அவளை எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடாதிங்க என்று விட்டு அமைதியாக வந்து உட்கார்ந்தார்…

மகாவும் குளித்து முடித்துவிட்டு வேறொரு உடை அணிந்து கொண்டு வந்து உட்கார்ந்தால் அவள் வந்து உட்கார்ந்தவுடன் எழில் நானே செய்து கொள்கிறேன் என்று விட்டு மகா கையில் அந்த பேப்பரை ஒப்படைத்தான் …

எழில் மகா கையில் பேப்பரை ஒப்படைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று இடியாப்பம் செய்யச் சென்றான் அப்போது மகா இன்னொரு ஆளுக்கும்  சேர்ந்து என்றால் …

அப்போது வேணி அண்ணா உங்களுக்கு சமைக்க தெரியுமா என்று கேட்டால் அப்பொழுது சுந்தரி தான் சிரித்துக்கொண்டே அதெல்லாம் அவன் நன்றாக சமைப்பான்..

ஏன் மகிழ் முகில் உதிரன் வீட்டில் உள்ள ஆண்கள் அனைவருக்கும் சமைக்க தெரியும்டா நாங்கள் தான் விடுவதில்லை இவன்கள் என்றாவது ஒருநாள் சமையல் அறைக்குள் புகுந்து விட்டு வருவார்கள் என்றார் …

என்னம்மா அன்னைக்கு சமையலறை இரண்டாக இருக்குமா என்றால் வேணி சிரித்துக் கொண்டே அதெல்லாம் இல்லை அவங்களே பாத்திரம் முதற்கொண்டு கழுவி வைத்துவிட்டு அடுப்பையும் கிளீன் செய்துவிட்டு தான் வருவான்கள் சுத்தமாக தான் இருக்கும் என்றார்….

வேணி  மகாவிடம் அண்ணி உங்களுக்கும் இடியாப்பம் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு அண்ணா எனக்கும் என்றால் வேணி வேகமாக எழில் வேனியிடம் சரி வேணி என்று விட்டு மேடமுக்கு இடியாப்பம் என்றால் விருப்பமில்லை …

அவள் புருஷனுக்கு பிடிக்கும் என்பதற்காக கேட்கிறாள் என்றான் சிரித்துக் கொண்டே இடியாப்பமும் செய்துவிட்டு இடியாப்பம் தேங்காய்ப்பால் இரண்டையும் உணவு மேசையில் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான்…

மகா அனைத்து பேப்பரையும்  கரெக்ஷன் செய்து இருந்தால் எழில் வந்து மார்க் கவுன்ட் பண்ணிக் கொண்டிருந்தான் வேணி பேப்பர் வந்தவுடன் வேணியிடம் எழில் பேப்பர் கொடுத்தான்…

வேணி அந்த பேப்பரை பார்த்துவிட்டு திரு திருவென முழித்தால் எழில் சிரித்துக் கொண்டே நான் பேப்பர் திருத்துவது போல் இருக்காது மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று விட்டு பேசிக் கொண்டிருந்தான் வேணி சிணுங்கி கொண்டு நானே ஒழுங்காக எழுதவில்லை இதில் நீங்கள் வேறு என்ன அண்ணி என்று கேட்டால்…

அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் அப்போது மகிழும் நிலாவும் கயலை  பார்க்க சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள் அப்போது எழில் தான்  என்ன நிலா அதிசயமாக இருக்கிறது சீக்கிரமாக வீட்டிற்கு வந்து விட்டாய்…

அதுவும் கயலை பார்க்க சென்று விட்டு சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்டாய் என்றான் நிலா அவனை மூக்கு முட்ட முறைத்து விட்டு என்னை வம்பு இழுக்கவில்லை என்றால் உங்கள் தூக்கமே வராதா என்று கேட்டுக் கொண்டே அவனது அருகில் வந்து உட்கார்ந்தால்..

அப்போது சுந்தரி தான் அது எப்படி தூக்கம் வரும் உன்ன அவன் வம்பு இழுக்கவில்லை என்றாலும் நீ அவனை வம்பு இழுக்கவில்லை என்றாலும் உங்கள் இருவருக்கும் தூக்கம் வருமா என்றார்…

இருவரும் தங்களுக்குள் பார்த்து சிரித்துக் கொண்டார்கள் நிலா வேணியை பார்த்துவிட்டு அவள் கையில் இருக்கும் பேப்பரை புடிங்கி பார்த்தால் புடுங்கி பார்த்து சிரித்து விட்டு இது அக்கா தானே கரெக்ட் பண்ணினாள் என்று கேட்டால்…

வேணி ஆமாம் என்று மண்டையாட்டியயுடன் மகா திருத்தினால் இப்படித்தான் இருக்கும் என்று விட்டு கொலை பசி என்ன சாப்பாடு என்று கேட்டால் …

அப்பொழுது காவேரி தான்  ஏன் போன இடத்தில் உங்களுக்கு ஒரு வாய் சாப்பாடு கூட போடவில்லையா என்று கேட்டுக் கொண்டே வந்தார் நிலா கயலை பார்க்க சென்று வந்ததால் கயல் எப்படி இருக்கிறாள் என்று சொல்லுவாள் அதை கேட்பதற்காகவே வரவேற்பறைக்கு வந்தார்…

அப்பொழுது நிலா பசிக்கிறது என்ன சாப்பாடு என்று கேட்டவுடன் காவேரி அவ்வாறு கூற செய்தார் அவர் அவ்வாறு கூறியவுடன் வீட்டில் உள்ள அனைவரும் காவேரியை பார்த்துவிட்டு இப்பொழுது நிலாவை பார்த்தார்கள்…

அனைவருக்கும் அந்த கேள்வி இருக்கத்தான் செய்தது எழில் அவளுக்கு பிடிக்கும் என்று இடியாப்பம் செய்ய தான் செய்தான் இருந்தாலும் அவர்கள் அங்கு கொஞ்சமாவது சாப்பிட்டு விட்டு வந்திருப்பார்கள் என்று அனைவரும் எண்ணினார்கள் …

அதனால் தான் அனைவரும் இப்பொழுது நிலாவையே பார்த்தார்கள் நிலா என்ன சொல்வாள்…

கயல் வீட்டில் என்ன நடந்தது என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

கதை  படித்துவிட்டு ஏதாவது நிறைகுறைகள் இருந்தால் உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க நன்றி 🙏

3 thoughts on “மகாலட்சுமி 56”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *