நிலா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு அவர்கள் ஹாஸ்பிடல் போய்விட்டு குழந்தை கன்ஃபார்ம் என்று ஆனவுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வந்திருந்தார்கள்…
நாங்கள் போகும் வேலையில் தான் அவர்களும் வீட்டிற்குள் நுழைந்தார்கள் அவர்களே அசதியாக இருந்ததால் நாங்கள் கொஞ்ச நேரம் மட்டும் பார்த்துவிட்டு நாங்கள் எடுத்துச் சென்றதை கொடுத்துவிட்டு வந்துவிட்டோம்…
மத்த படி அவர்கள் எங்களை உபசரிக்காமல் இல்லை அவர்கள் அப்பொழுது கூட எங்களை சாப்பிட தான் சொன்னார்கள் இட்லி ஊத்துச் சென்றார் கயலின் மாமியார்….
நாங்கள் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டோம் மற்றபடி அவர்கள் எங்களை உபசரிக்காமல் இல்லை நன்றாக தான் உபசரித்தார்கள் என்று தனது பெரியம்மாவை முறைத்து பார்த்துக் கொண்டே சொன்னால் …
இந்த முறை ஒன்றும் குறைச்சல் இல்லை என்று விட்டு மறுபடியும் அவரது அறைக்குள் சென்று விட்டார் காவேரி வீட்டில் உள்ள அனைவரும் நிலாவைப் பார்த்து சிரித்தார்கள் பிறகு கயல் எப்படி இருக்கிறாள் என்று கேட்டார்கள்…
முதலில் எனக்கு பசிக்கிறது சாப்பிட்டுவிட்டு தான் அடுத்தபடி என்று விட்டு என்ன சாப்பாடு என்று கேட்டால் உனக்கு பிடித்த இடியாப்பம் என்றவுடன் எது எனக்கு பிடித்த இடியாப்பமா என்று கேட்டுக் கொண்டே திறந்து பார்த்தால்…
இடியாப்பம் இருந்தவுடன் அதை மோந்து பார்த்துவிட்டு இடியாப்பத்தை பார்த்தவுடன் பசி அதிகமாகி விட்டது என்று விட்டு இறுதியாக எழிலை பார்த்தால் அவன் கண்மூடி திறந்தவுடன் நீதான் செஞ்சாய மாமா என்று கேட்டுக் கொண்டே ஒரு தட்டை எடுத்து சாப்பிட அமர்ந்தால்…
அவள் சாப்பிடும் பொழுது மகிழும் அருகில் உட்க்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டான் அவனுக்கும் இடியாப்பம் என்றாள் பிடிக்கும் அவன் மதியம் சாப்பிடவில்லை …..
வேலையின் காரணமாக இப்பொழுது அவனுக்கு பசி எடுத்ததால் யாரைப் பற்றியும் யோசிக்காமல் நில உடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான் இருவரும் சாப்பிட்டுவிட்டு கை கழுவிட்டு வந்து உட்கார்ந்தார்கள்…
மகாவிடம் மகிழ் மகா இன்னும் கொஞ்சம் இடியாப்பம் இருக்கிறது நீ சாப்பிட்டுக் கொள் என்றான் மகா இல்லை எனக்கு வேண்டாம் மாமா இட்லி சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றால் அதான் இன்னும் ஒரு ஆள் சாப்பிடும் அளவிற்கு இருக்கிறது நீ சாப்பிடு என்றான்…
அப்போது வேலை எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை அண்ணே நீங்கள் இன்று சாப்பிடுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்….
ஏனென்றால் மகாவும் அதற்குத்தான் யோசிக்க செய்தால் வேணி கேட்டிருந்தாலே ஆசையாக இருப்பது ஒரு ஆளுக்கு தான் அப்படி இருக்கும் நிலையில் இப்போது நான் சாப்பிட்டு விட்டால் ..
வேணி ஏமாறுவாளே என்று எண்ணினால் அது உணர்ந்து தான் வேணியும் நீங்கள் சாப்பிடுங்கள் அண்ணி என்று சொன்னால் அப்பொழுது எழில் வேனியை பார்த்து உனக்கு தனியாக உள்ளே ஹாட் பாக்சில் வைத்திருக்கிறேன் வேணி….
இதை யார் வேண்டுமானாலும் சாப்பிட்டு கொள்ளலாம் உனக்கென்று தனியாக இருக்கிறது உள்ளே ஹாட் பாக்ஸ்லில் இருக்கு அதை நீ சாப்பிட்டுக் கொள் என்றான்…
அதன் பிறகு மகிழ் தான் வேணி உனக்கும் இடியாப்பம் என்றால் பிடிக்குமா என்றான் அவள் ஆமாம் என்றவுடன் எனக்கு தெரியாது என்றான் இதில் என்னென்ன இருக்கிறது…
எனக்கு பிடிக்கும் என்பதால் நான் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று எதுவும் இல்லையே வீட்டில் அனைவரும் சாப்பிடலாம் அதுதான் எனக்கு எழில் அண்ணன் உள்ளே தனியாக எடுத்து வைத்திருக்கிறேன் என்று சொல்கிறாறே..
இதை நீங்கள் சாப்பிடுங்கள் அண்ணி என்றுடன் மகாவும் சென்று சாப்பிட்டால் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்கு சென்றார்கள் …
மகிழ் அவனது அறைக்கு செல்லும் நிலையில் நான் சொன்னது உன் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு எழில் அவனது அறைக்கு சென்றான்…
காலை பொழுது எப்பொழுதும் போல் விடிந்தது மகிழ் வெளியே செல்லும் போது மகா நீ எழிலுடன் மருத்துவமனைக்கு இன்று சென்றுவிட்டு வா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது….
நான் நாளை மாலை தான் வருவேன் என்றான் மகா ஒரு நிமிடம் முழுவதாக மகிழன் கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் சரி மாமா என்றால் நான் எழிலிடம் சொல்லிவிட்டு சொல்கிறேன் என்றான்…
வேண்டாம் மாமா நான் மாலை கல்லூரி முடிந்து வந்து அவனை கூப்பிட்டு சென்று கொள்கிறேன் இப்பொழுது சொல்ல வேண்டாம் என்றால் ஏன் என்றான் வேண்டாம் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று உடன் அவனும் அவர்களது அறையில் இருந்து கிளம்பி விட்டான் ..
அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டு அவரது வேலையை பார்க்கச் சென்று விட்டார்கள் கல்லூரியில் எழிலும் அனைவரையும் திட்டி விட்டு பேப்பரை கொடுத்தான் மாலை பொழுதும் வந்தது…
அனைவரும் அவர்களது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள் பெரியவர்கள் வந்து விட்டார்கள் உதிரன் மகிழ் இருவரும் வராமல் இருந்தார்கள் முகில் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டில் வந்து விட்டுவிட்டு வேலை இருப்பதாக சொல்லி சென்று விட்டான்….
அப்பொழுது எழில் அறைக்கு மகா வந்தால் எழில் தனது சட்டையை அவிழ்த்து கொண்டு இருந்தான் அவள் கதவை கூட தட்டாமல் ஏதோ ஒரு ஞாபகத்தில் வந்து விட்டாள் அவள் வந்தவுடன் திரும்பிப் பார்த்துவிட்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்….
மாமா ஒரு முக்கியமான வேலையாக சென்று இருகிறார்கள் நாளை மாலை தான் வருவார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் எழில் மகாவை முறைத்துவிட்டு வேறு ஒரு உடையை அணிந்து கொண்டு வெளியில் வந்தான்…
மகாவும் அவனிடம் சொல்லிவிட்டு அவன் எப்படியும் வருவான் என்ற நம்பிக்கையில் வெளியே வந்து விட்டால் பிறகு எழிலும் வெளியே வந்தான் நிலா நீ என்கூட வா என்று வரவேற்பு அறையில் இருக்கும் நிலாவிடம் சொன்னான்…
அப்பொழுது மகா தான் நிலா வேண்டும் என்றவுடன் எழில் மகாவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு வேணி நீ என் கூடவா என்றான் எங்கு அண்ணா என்றாள் மருத்துவமனைக்கு என்றான் மகிழ் எங்கே என்று சுந்தரி கேட்டார்…
மகா தான் மாமா முக்கியமாக வேலை இருக்கிறது என்பதால் வெளியே சென்று இருக்கிறார் நாளை தான் வருவார் என்றாள் முக்கியமான வேலையாக இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என்றால் …
வேலையை விட்டு விட்டு வர வேண்டாமா என்று மட்டும் எண்ணி விட்டு அமைதியாக இருந்தார்கள் வேணியும் கிளம்பி விட்டு வந்தால் வீட்டில் உள்ள அனைவரும் வேணி இடம் மருத்துவமனையில் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லு என்று மட்டும் சொல்லி அனுப்பினார்கள் …
எழில் இருவரையும் அழைத்துக் கொண்டு காரில் சென்றான் எழில் தான் கொஞ்ச தூரம் சென்ற பிறகு சாருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை மருத்துவமனைக்கு கூட அழைத்துக் கொண்டு கூட செல்ல முடியாத அளவிற்கு என்றான் …
முதலில் மாமா உன்னிடம் சொல்லிவிட்டு செல்கிறேன் என்று தான் சொன்னார் நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கும் வேளையில் மகிழிடம் இருந்து எழிலுக்கு போன் வந்தது…
எழில் மகாவை பார்த்து விட்டு போன் அட்டென்ட் செய்துவிட்டு எதுவும் பேசாமல் இந்த பக்கம் அமைதியாகவே இருந்தான் இரண்டு நிமிடம் மௌனத்திற்கு பிறகு மகிழ் தான் பேச செய்தான்…
ஹாஸ்பிடலுக்கு கிளம்பி விட்டீர்களா என்றான் எழில் மகாவை பார்த்துவிட்டு சாருக்கு அவ்வளவு முக்கியமான வேலையோ என்றான் மகா எழில் தோளில் கிள்ளி இருந்தால் அமைதியாக இருக்கும் படி என்னால் வர முடியவில்லை …
எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது நீ போய் காண்பித்து விட்டு வா யார் கூட வருகிறார்கள் என்று கேட்டான் உன்னால் அழைத்துக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் யார் வருகிறார்கள் என்று எல்லாம் கேட்க முடியுமா என்றான்….
அவன் குரல் அந்த பக்கம் கரகர என்று இருப்பதை உணர்ந்து விட்டு வேனி வருகிறாள் என்று விட்டு வேணி கையில் போனை கொடுத்தான் ஹலோ அண்ணா என்றால் வேணி ஹாஸ்பிடல் சென்று விட்டு டாக்டர் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு அனைத்தையும் சொல்…
அங்கு போன உடன் எனக்கு போன் செய் அண்ணா அப்போ நீங்கள் முக்கியமான வேலையாக சென்று இல்லையா என்றால் மகிழ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த உடன் சரி நான் அங்க போய் பார்த்துவிட்டு போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை எழில் இடம் கொடுத்தாள்…
சரிடா என்று விட்டு வைத்து விட்டான் அதன் பிறகு மகாவை திரும்பிப் பார்த்துவிட்டு வேணியிடம் அப்போ அவன் முக்கியமான வேலையாக சொல்லவில்லை மருத்துவமனை வந்தால் ஏதாவது சொல்வார்களோ என்ற பயத்தில் வராமல் இருக்கிறான் அப்படி தானே என்றான்….
மகா வேகமாக எழில் தோளில் சாய்ந்து கொண்டாள் எழில் அவளது தலையை கோதி கொடுத்தான் அண்ணி எனக்கு புரியவில்லை அண்ணன் எதனால் வரவில்லை இப்பொழுது நீங்கள் எதற்காக அழுது கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால்….
அப்பொழுது எழில் கூற செய்தான் இருவருக்கும் பயம் டா என்றான் டாக்டர் வந்து ஏதாவது சொல்லி விடுவார்களோ உடல் அளவில் எதாவது பிரச்சனை இருக்கிறதா என்று கேட்டால் அவர்கள் இருவருக்குமே உடல் அளவில் எந்த பிரச்சனையும் இல்லை ….
ஆனால் இருவரும் பயப்படுகிறார்கள் மற்றபடி ஒன்றுமில்லை என்றான் புரியவில்லை அண்ணா எதற்காக இருவரும் பயப்படுகிறார்கள் என்று உனக்கு வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தெரியும் என்று நினைக்கிறேன்…
வீடு இரண்டாக பிரியும் என்று கோவிலுக்கு சென்ற இடத்தில் சாமி சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியும் அண்ணா அதற்கும் இதற்கும் என்ன அண்ணா சம்பந்தம் எனக்கு புரியவில்லை…
இவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று எண்ணுகிறார்களா என்றால் இல்லை நாங்கள் அன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு நாங்கள் மூவரும் கோயிலுக்குச் சென்றிருந்த வேளையில் அந்த சாமி ஒரு வார்த்தை சொன்னார்…
என்னன்னா சொன்னாரு நீங்கள் மூவரும் அதன் பிறகு கோவிலுக்கு சென்றீர்களா என்று கேட்டால் இல்லை நாங்கள் மூவரும் ஒன்றாக செல்லவில்லை அன்று கோவிலுக்கு சென்று வந்த பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை வேளையில் இருவரும் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள் …
நானும் கல்லூரி முடிந்து அன்று கோவிலுக்கு சென்று இருந்தேன் மூவரும் கோவிலுக்கு வந்திருப்பது கோவிலுக்கு சென்று பிறகு தான் தெரியும் யாரும் யாரிடமும் சொல்லிவிட்டு செல்லவில்லை …
அப்போது மூவரும் சாமிய தரிசனம் செய்துவிட்டு சுற்றிவரும் போது நாங்கள் அன்று பார்த்த அந்த சாமியை சாமி கும்பிட்டு வரும் பொழுதும் பார்த்தோம் அப்பொழுது அவர் மகாவை கூப்பிட்டார்…
என்னென்ன சொன்னார்கள் என்றாள் வேணி வேகமாக அவர் மகாவைப் பார்த்து சிரித்துவிட்டு மகிழையும் பார்த்தார் என்னையும் பார்த்தார் பிறகு நான் அன்று சொன்னதே தான் உங்கள் குழந்தையால் தான் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்…
நீங்கள் அந்த குடும்பத்திற்காக என்று நினைத்திருக்கலாம் ஆனால் அதே குடும்பமே உங்களை வெறுக்கும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை என்றார் அப்பொழுது இருவருமே அமைதியாக தான் அந்த சாமியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் …
நான்தான் கேட்டேன் இதற்கு தீர்வு தான் என்ன என்று அவர் என்னையே ஒரு நிமிடம் முழுவதுமாக பார்த்துவிட்டு இவர்கள் இருவரும் செய்த ஒரு தவறால் ஒரு பெண் அவள் புகுந்த விட்டு உறவையே முறித்துக் கொண்டு வாழ்கிறாள் என்றார் …
அவர் கயலை தான் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும் ஆனால் நாங்கள் அமைதியாக இருந்தோம் அவர் என்னை பார்த்து லேசாக சிரித்துவிட்டு இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கும் போதுதான் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்….
ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணையும் வேலையில் இருவரில் ஒருவரின் சம்மதம் மட்டும் தான் இருக்கும் மற்றொருவர் விருப்பம் இல்லாமல் தான் இவர்கள் வாழ்க்கையை தொடங்குவார்கள் என்று கூறி சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார் …
எனக்கு ஒரு நிமிடம் உயிரே போய்விட்டது அதனால் தான் அன்று நிலா சொல்லும் பொழுது நான் உங்கள் திருமணதன்று இவளை அடித்ததற்கு காரணம் எங்கு அவர் சொன்னது போல் இருவரும் அவர்களது விருப்பமில்லாமல் இந்த குடும்பத்திற்காக என்று இன்னொரு தவறை செய்து விடுவார்களோ என்று எண்ணினேன் என்று மகாவையே பார்த்தான்…
மகா எழிலையே பார்த்துக்கொண்டு இருந்தால் அந்த சாமி சொன்னது போல் மகா மகிழ் இருவரும் தங்களது வாழ்க்கையை தொடங்கும் நேரம் இருவரில் ஒருவரின் விருப்பத்தோடும் இன்னொருவரின் விருப்பம் இல்லாமலும் தான் அவர்களின் வாழ்க்கையை தொடங்குவார்களா …
இவர்கள் மறைத்த ஒரு உண்மையால் இவர்கள் வீட்டில் இன்னும் என்னென்ன குழப்பங்கள் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படும்..
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..
அன்புடன்…
❣️தனிமையின் காதலி❣️
இந்த கதையை பிரச்சினை க்காக எழுதினாங்களா..? இல்லை, பிரச்சினையையே கதையா எழுதுறாங்களான்னு தெரியலை.
Yen intha bayam kayal Yen pirinji iruka. Kudubathukaga nu ippadi la yosichi sera kudathu maha