Skip to content
Home » மகாலட்சுமி 58

மகாலட்சுமி 58

எழில் கோவிலில் நடந்த விஷயத்தை சொல்லி முடிப்பதற்கும் மருத்துவமனை வருவதற்கும் சரியாக இருந்தது எல்லாம் சரியாகிவிடும் அண்ணி ஒன்றுமில்லை என்றால் வேணி…

சரி என்று விட்டு அவளும் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு எழிலின் கையை பிடித்துக் கொண்டு மருத்துவமனை உள்ளே சென்றார்கள்  மூவரும் சென்று ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்தார்கள்..

பிறகு மகாவின் நேரம் வரும்போது மூவரும் உள்ளே சென்றார்கள் இவர்கள் பார்க்கச் சென்று டாக்டர் இவர்கள் குடும்ப மருத்துவர் தான் அவர் பெயர் லதா அவரிடம் தான் இப்பொழுது இனியும் காண்பித்துக் கொண்டிருக்கிறாள் ஏன் கயல் கூட இப்பொழுது அங்குதான் காண்பித்துக் கொண்டிருக்கிறாள் …

வா எழில் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் காலையிலிருந்து மகிழ் ஆயிரம் முறை போன் பேசி விட்டான் டோக்கன் போட்டுவிட்டது மட்டும் இல்லாமல் நீங்கள் வந்துவிட்டார்களா என்று  கேட்டுக் கொண்டே இருக்கிறான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்….

அப்புறம் எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் பிறகு எழில் இடம் முகிலுக்கு திருமணமாகி விட்டதாம் சொல்லப்படவில்லை என்றார் அப்போது எழில் சிரித்துக் கொண்டே வேணியை காண்பித்து இதுதான் முகில் உடைய மனைவி ஆன்ட்டி என்று விட்டு வேணியிடம் இவங்க லதா ஆன்ட்டி…

நம்முடைய குடும்ப டாக்டர் தான் வேணி நம் வீட்டு விஷயங்கள் அனைத்தும் இவருக்கு தெரியும் இவர்தான் இனிக்கும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார் கயலும் இவரிடம் தான் காண்பித்துக் கொண்டு இருக்கிறாள் என்றான் …

அவளும் வணக்கம் அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாள் டாக்டர் லதாக்கு லேசாக கண் கலங்கி விட்டது ஏன் நான் ஏதாவது தவறாக பேசி விட்டேனா என்றால் வேணி அவர் எழுந்து சிரித்துக் கொண்டே வந்து இல்லை வேணி…

என்னை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும்  ஆண்டி என்று தான் கூப்பிடுவார்கள் என் மகாவும் என்னை ஆண்ட்டி என்று தான் அழைப்பாள் ஆனால் என்னை முதன் முதலாக அம்மா என்று அழைத்தது நீதான் என்று விட்டு என்ன லைனில் மகி இருக்கிறேனா என்று கேட்டார்…

எனக்கு தெரியும் உன்னை பற்றி என்று விட்டு மகா விடம் என்ன செய்கிறது எப்படி இருக்கிறது உனக்கு என்று கேட்டார் ஆன்ட்டி எனக்கு எப்பொழுதும் போல் நார்மலா தான் இருக்கிறது ஆனால் மாதம் மாதம்  பீரியர்ட் சீக்கிரமாகவே வந்து விடுகிறது என்றால் ..

அவள் அவ்வாறு சொன்னவுடன்  எழில் தான் சீக்கிரமாக வந்து விடுகிறதா  20 25 நாட்களுக்குள் மாத மாதம் தலைக்கு குளித்து விடுகிறாள் என்றான்  சரி இருடா நான் போய் அவளை செக் செய்துவிட்டு வருகிறேன்…

இருவரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்கள் என்றுடன் எழிலும் வேணியும் வெளியே சென்றார்கள் மகா விடம் அடி வயிற்றில் வலி இருக்கிறதா என்று கேட்டர் இல்லை என்றவுடன் ஸ்கேன் செய்து பார்த்தார் பிறகு இருவரையும் உள்ளே அழைத்தார் ..

பிறகு  எழில் மகாவிற்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை அவள் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகியிருக்கிறாள் அதனால் தான் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பதால் தான் இரண்டு மூன்று மாதங்களாக சீக்கிரமாகவே தலைக்கு குளித்து விடுகிறாள் …

மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இப்படியேவும் இருக்க கூடாது இது பின்னாளில் உடலளவில் பிரச்சனை ஏற்படுத்திவிடும் இதற்கான தீர்வு வீட்டில் உள்ள உங்களிடம் தான் இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் …

பிறகு மகிழ் நான் பேசுவது அனைத்தும் கேட்கிறதா உன் பொண்டாட்டிக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவள் நன்றாகத் தான் இருக்கிறார்கள் மகிழிடம் போன்  பேசினார் வேணியிடம் இருந்து போன் வாங்கி பிறகு நீ ஃப்ரீயாக இருக்கும் பொழுது என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார் சரி என்று விட்டு வைத்து விட்டார் …

பிறகு மூவரிடமும் எந்த பிரச்சினையும் இல்லை ஸ்ட்ரெஸ் ஆகாமல் இருந்தாலே போதும் என்றவுடன் கிளம்ப தயாரானார்கள் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு எழில் தான் மருத்துவரிடம் ஆன்ட்டி எதற்காக மகிழ் இயம் தனியாக மீட் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் அவளுக்கு உண்மையாகவே ஏதாவது பிரச்சனை இருக்கிறதா அதை மறைக்கிறீர்களா என்றான்….

டாக்டர் சிரித்துக் கொண்டே உண்மையாகவே மகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லடா நான் மகிழ்வுடன் பேச வேண்டும் அதற்காகத்தான் நீங்கள் மகாவை பற்றி தானே பேச போகிறீர்கள் என்றான்

ஆமாம் மகாவைப் பற்றிதான் ஆனால் உன்னிடம் சொல்ல முடியாது என்றார் என்னிடம் சொல்லுங்கள் என்றான் அவர் சிரித்துக் கொண்டே அவன் பயப்படும் படியான விஷயம் எதையும் சொல்லப் போவதில்லை இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம்..

நான் இதை அவனிடம் தான் சொல்ல வேண்டும் உன்னிடம் அல்ல என்றார் எனக்கு புரியவில்லை என்றான் அவன் தானே அவளுடைய கணவன் என்றார் நான் அவளுடைய நண்பன் அதை மறந்து விடாதீர்கள் என்றான் அவர் சிரித்துக் கொண்டே இது அவர்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது டா ….

அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நான் உன்னிடம் பேச வேண்டுமா இல்லை உன்னுடைய அண்ணனிடம் பேச வேண்டுமா நீயே சொல் என்றார் அவன் டாக்டரை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு சாரி ஆன்ட்டி என்றான் அவர் சிரித்துக் கொண்டே நீ நண்பன் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை..


ஆனால் ஒரு சில இடங்களில் நீயாக இரு அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கான ஸ்பேஸ் கொடுத்து பழகு இப்பொழுது அவள் உன்னுடைய தோழி மட்டும் இல்லை உன்னுடைய அண்ணனின் மனைவி அதை மறந்து விடாதே …

உன்னை நான் மகாவை உன்னுடைய அண்ணியாக பார் என்று நான் சொல்லவில்லையே ஆனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீயோ வீட்டில் உள்ளவர்களோ தலையிடாதீர்கள் என்றார் எழில் சிரித்துக் கொண்டே சரி ஆன்டி என்று விட்டு வெளியில் வந்தான் …

வேணி என்னென்ன என்றால்  ஒன்றும் இல்லை என்று விட்டு இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் மூவரும் வீட்டிற்கு செல்லும் வேளையில் வீட்டில் அனைவருமே வரவேற்புரையில் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் ..

வீட்டிற்குச் சென்றவுடன் சுந்தரி தான் வேகமாக கேட்டார் என்னடா என்ன சொன்னாங்க என்று  ஒன்றுமில்லை அம்மா என்று விட்டு எழில் அமைதியாக போய் உட்கருந்து கொண்டான் மகாவும் அமைதியாக உட்கருந்தவுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் பயமாகிவிட்டது…

சுந்தரி வேனியிடம் சென்று கேட்டார் வேணி  சிரித்துக் கொண்டே அண்ணிக்கு உடல் அளவில் எந்த பிரச்சினையும் இல்லை மனதளவில் எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரொம்ப ஸ்ட்ரஸ் ஆனதால் தான் இப்படி இருக்கிறது வீட்டில் உள்ளவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்…

உடலில் எந்த பிரச்சினையும் இல்லை எதையும் யோசிக்காமல் ஃப்ரீயாக இருக்க சொல்ல வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள் மற்றபடி எதுவும் இல்லை என்றவுடன் சுந்தரி வேறு எதுவும் பேசாமல் சமையல் அறைக்குள் சென்று விட்டார் …

காவேரியும் கோதையும் தான் மகாவைத் திட்டினார்கள்  வீடு என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் இதையே நினைத்துக் கொண்டு இருப்பார்களா உனக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது அதை பார் ..

இந்த வீட்டை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று விட்டு அவர்கள் இருவரும்  சமையல் அறைக்குள் சென்று விட்டார்கள் இவர்கள் மருத்துவமனை சென்று விட்டு வீட்டிற்குள் வருவதற்கு இரவாகிவிட்டது…

அதனால் பெரியவர்கள் அவரவர் அறைக்கு சென்று விட்டார்கள் சிறியவர்கள் அனைவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள் அனைவரும் வேணிடம் உண்மையாகவே ஒன்று பிரச்சினை இல்லையே என்று கேட்டார்கள் …

மகா சிரித்துக்கொண்டே  உண்மையாகவே எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் பாண்டியம்மா பாட்டி அவளது தலையில் தடவி விட்டு முத்தம் கொடுத்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் சென்றார் ..

பிறகு நேரமாகியதால் அனைவரும் அவர்கள் அறைக்கு சென்று விட்டார்கள்  மகிழ் நைட் 11 மணி போல் வீட்டிற்கு வந்தான் சுந்தரி தான் கதவை திறந்தார் தனது மகனை முடறைத்துக் கொண்டே  சார் நாளைக்கு தான் வருவீங்கன்னு கேள்விப்பட்டேன் என்றார்…

மகிழ் தலை குனிந்து கொண்டு அமைதியாக வீட்டிற்குள் வந்தான் அவன் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டு வீட்டிற்குள் வந்தவுடன் சுந்தரியும் எதுவும் பேசாமல் அமைதியாக  கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தார்…

அவன் உணவு மேசையில் இருக்கும் தண்ணீரை எடுத்து பருகிக் கொண்டிருந்தான் அவன் பருகும் வரை அமைதியாக இருந்தார் அவர் சாப்பிட்டாயா என்று கேட்பதற்காக வாய் எடுக்கும் வேளையில் எழில் எங்கிருந்து வந்தான் என்று தெரியாது தனது அண்ணனை ஓங்கி அறைந்து இருந்தான் …

சுந்தரி இதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல வேண்டும் எழில் அதுவும் தனது அண்ணனை அடிப்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை இன்னும் சொல்லப்போனால் வீட்டில் பெரியவர்கள் கூட யாரும் இதுவரை மகிழை அடித்ததில்லை…

அவன் அப்படி ஒரு தவறு செய்திருக்கிறானா என்று கேட்டால் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும் அப்படி இருப்பவனை இன்று தனது இளைய மகன் பெரிய மகனை அடித்தவுடன் அதிர்ச்சியாகி பார்த்தார் பிறகு அதிகம் சத்தம் இல்லாமல் டேய் என்னடா செய்து கொண்டிருக்கிறாய்…

எதற்காக டா இப்பொழுது அவனை அடித்தாய் என்று கேட்டார் எழில் தனது தாயை முறைத்துவிட்டு நான் எதற்காக அவனை அடித்தேன் என்று அவனுக்கு தெரியும் என்று விட்டு வேற எதுவும் பேசாமல் அவனை முழுவதாக ஒரு நிமிடம் முறைத்து பார்த்து விட்ட எழில் அவனது அறைக்கு சென்றுவிட்டான் ….

சுந்தரிக்கு தான் ஒன்றும் புரியவில்லை அவன் மாட்டும் வந்தான் அடித்தான் கிளம்பி விட்டான் என்று எண்ணி விட்டு தனது பெரிய மகனை இப்பொழுது பார்த்தார் அவன் தனது தாயைப் பார்த்து சிரித்து விட்டு அம்மா இன்னும் சாப்பிடவில்லை என்று மட்டும் சொன்னான் ….

அவர் சமையலறைக்கு சென்று இரண்டு தோசை ஊற்றிக்கொண்டு வந்தார் நேரமாகிவிட்டது என்பதால் இட்லி இருக்கிறது இருந்தாலும் அவன் சாப்பிட மாட்டான் என்று தான் தோசை ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தார் அவனும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு சாப்பிட்டான் …

என்னடா மகவை பார்கிறாயா என்று கேட்டார் இல்ல மா  அவளை பார்க்க வில்லை அனைவரும் தூங்கிவிட்டார்களா என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு நீ சாப்பிட்டாயா என்று கேட்டான் அவர் நான் அனைவருடன் சாப்பிட்டு விட்டேன் என்று உடன் சரி நீ போய் தூங்கு என்று விட்டு அவனது அறைக்கு சென்றான்…


அவன் அவனது அறைக்குள் செல்லும் நிலையில் மகா கோழி குஞ்சு போல் சுருண்டு படுத்திருந்தாள் அவளுக்கு தலை குளிக்கும் நேரத்தில் உடல் அளவில் வலி என்றெல்லாம் எதும் எப்பொழுதும் கிடையாது ..

ஆனால் இப்பொழுது மகிழுடைய திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்தலில் இருந்து தான்  மனதளவில் ரொம்பவே ஒடுங்கி போயிருக்கிறாள் என்பதை மகிழ் உணர்வான் அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்கச் செய்தது…

அவள் மட்டுமா என்னை காதலித்தால் நானும் தானே அவளை காதலிக்க செய்தேன் அவள் மட்டும் இந்த குடும்பத்திற்காக என்று காதலை தூக்கி எறிந்து விட்டு சொல்லாமல் இல்லையே ஏன் நானும் அவளை உண்மையாக காதலித்து இருந்தால் நானும் இந்த குடும்பத்திடம் என்னுடைய காதலை சொல்லி அவளை திருமணம் செய்து இருக்கலாமே என்று எண்ணி வருந்தினான்…

இப்பொழுது  எழில் கூட மகிழை அதற்காகத்தான் அறைந்து இருந்தான் தன் தோழிக்காக எது வேண்டுமானாலும் செய்வான் என்று மகிழுக்கு தெரியும் ஆகையால் இப்போது தனது தம்பியை எண்ணி சிரித்துவிட்டு மகாவை பின்பக்கம் இருந்து இறுக்கி கட்டி அணைத்துக் கொண்டு படுத்தான் …

மகா அழுது கொண்டே மகிழ் நெஞ்சில் சாய்ந்து படுத்தாள் ப்ளீஸ் டி அழுது என்ன சாவடிக்காத என்றான் அவள் தூங்கவில்லை என்று மகிழும் உணர்வான் தான் வந்தது கூட தெரியாத அளவிற்கு எல்லாம் அவள் தூங்க மாட்டாள் என்று அவனுக்குமே தெரியும் …

அவள் தனது காதலியாக இருக்கும்போது தான் எந்த நேரத்திற்கு வருவேன் என்று தனக்காக முழித்துக் கொண்டு இருப்பவள் இன்று நான் முழுமையாக அவளுடையவனாக மாறி இருக்கும் வேளையில் எனக்காக நான் வரும் வரை தூங்கமால் கூட  இருப்பாள் என்று எண்ணினான்….

மகவை இறுக்கி அணைத்துக் கொண்டு அவளது நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு இதை எப்படியாவது சரி செய்கிறேன் நீ இந்த குடும்பத்தையே எண்ணிக் கொண்டு இருக்காதே ப்ளீஸ் என்னையும் கொஞ்சம் பார் என்றான் …

மயிலு ப்ளீஸ் டி  என்னையும் கொஞ்சம் பார் என்றான் மகா மகிழ் முகத்தை பார்க்காமலே அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அசதியிலும் தலை குளித்து இருப்பதாலும் அவன் வந்தவுடன் உறங்கியும் விட்டாள் …

இவ்வளவு நேரம் அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தவள் அவன் வந்தவுடன் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவன் வந்த ஐந்தாவது நிமிடத்தில் உறங்கி இருந்தால் மகிழ் அவளையே முழுவதாக பத்து நிமிடங்கள் பார்த்துவிட்டு அவனும் அசதியில் உறங்கி இருந்தான்…

இனிவரும் காலங்களில் வாழ்க்கை இவர்களுக்கு இன்னும் என்னென்ன வைத்திருக்கிறது…

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 58”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *