இப்படியே நாட்கள் உருண்டோடியது ஒரு வாரங்களுக்கு மேலாகச் சென்று இருந்தது அனைவரும் அவர்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர் மகா நிலாப் படிக்கும் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்து விட்டால் ….
அவள் எப்பொழுதும் தனியாக அவளுடைய வண்டியில் சென்று கொண்டிருந்தால் எழிலும் அவனுடைய வண்டியில் சென்று கொண்டிருந்தான் இந்த ஒரு வாரங்களில் முகில் தான் வேணி நிலா இருவரையும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று கூப்பிட்டு கொண்டு வந்திருந்தான்…
அன்று மாலை கல்லுரி விட்டு முகில் இருவரையும் அழைத்துக் கொண்டு வரும் வேளையில் மகிழ் முகிலுக்கு போன் செய்திருந்தான் முகிலும் என்ன என்று கேட்டதற்கு இருவரையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பைக் ஷோரூம் அழைத்து வருமாறு கூறினான்…
அவனும் சரி என்று விட்டு நிலா வேனி இருவரையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பைக் ஷோரூம்க்கு அழைத்து சென்றான் வரும் வழி எல்லாம் இருவரும் எதற்கு என்று தொடர்ந்து கேட்டு கொண்டே வந்தார்கள் மகிழ் தான் உங்கள் இருவரையும் இங்கு அழைத்துக் கொண்டு வர சொன்னான் என்றவுடன் இருவரும் சந்தோஷமாக இறங்கி உள்ளே சென்றார்கள்…
மகிழ் இருவரிடமும் உங்களுக்கு எந்த கலர் எந்த கம்பெனி பிராண்ட் பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்யுங்கள் பணத்தைப் பற்றி யோசிக்க கூடாது என்றான் இருவரும் சிரித்துவிட்டு அவர்களுக்கு பிடித்த ஸ்கூட்டியை தேர்வு செய்தார்கள்…
பிறகு அதற்கு மகிழ் பணமும் செலுத்தினான் முகில் வேனியை பார்த்தான் வேணி எதுவும் சொல்லாமல் சரி என்பது போல் முகிலை பார்த்து மண்டையை மட்டும் ஆட்டினால் அவனும் சிரித்துக் கொண்டே சரி என்று விட்டு அமைதியாகி விட்டான்…
பிறகு இன்னும் ஒரு வாரத்தில் லைசென்ஸ் வாங்கிவிடலாம் நாளையிலிருந்து நீங்களே கல்லூரிக்கு சென்று வந்து விட வேண்டும் உங்களை யாரும் அழைத்துக் கொண்டு சென்று விட்டு விட்டு கூப்பிட்டுக் கொண்டும் வர மாட்டார்கள் என்றான்…
இருவரும் சிரித்துக்கொண்டே சரி என்பது போல் மண்டையாட்டினார்கள் பிறகு அந்த வண்டியை வேனி வீட்டிற்கு ஒட்டிக்கொண்டு வந்தால் அந்த வண்டிக்கு அன்று மாலையை பூஜையும் போட்டு அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று வந்தார்கள் ….
மறுநாள் கல்லூரிக்கு செல்லும் பொழுது வீட்டில் உள்ளவர்கள் அதுவும் வேலு தான் முக்கியமாக தனியாக இருவரும் இந்த வண்டியில என்று கேட்டார் நிலா தனது தாய் மாமாவை முறைத்து கொண்டே மாமா ப்ளீஸ் என்னை தான் இத்தனை நாட்களாக தனியாக விட மாட்டேன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக விட்டுவிட்டு வந்தீர்கள்….
இப்போதுதான் வேனியிருக்கிறாளே எனக்கும் வண்டி ஓட்ட தெரியும் அவளுக்கும் வண்டி ஓட்டத் தெரியும் நாங்களே போய்க் கொள்கிறோம் ப்ளீஸ் என்று கெஞ்சினாள் அப்பொழுது எழில் தான் வந்து சத்தம் போட்டான் தனது தந்தையிடம் இன்னும் அவள் சின்ன குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்று விட்டு அவன் கல்லூரிக்கு கிளம்பி விட்டான் ….
அதன் பிறகு வீட்டில் உள்ளவர்களும் வேணியிடம் நிலா இடமும் ஆயிரம் பத்திரம் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்கள் இருவரும் சந்தோஷமாக கல்லூரிக்குச் சென்று வந்தார்கள் இப்படியே நாட்கள் உருண்டோடியது…
இப்பொழுது இனிக்கு 9 ஒரு மாதம் தொடங்கியிருந்தது குழந்தை பிறக்க இன்னும் 20 நாட்கள் இருந்தது இப்பொழுது கயல் ஐந்தாவது மாதம் தொடக்கத்தில் இருந்தால் வீட்டில் உள்ள சிறியவர்கள் மட்டும் ஐந்தாவது மாத தொடக்கத்திலே ஒரு நாள் மகா கையால் அனைத்து வகையான சாதங்களும் செய்து எடுத்துக் கொண்டு சென்று ஐந்தாவது மாதம் சாதம் கொடுத்துவிட்டு வந்தார்கள் ….
காவேரி அதற்கும் கூச்சல் இட்டார் நான் எவ்வளவு சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை அப்படித்தானே என்று விட்டு நான் இருக்கும் வீட்டில் அவளுக்கென்று எந்த சாப்பாடும் செய்யக்கூடாது என்று கூட கத்தினார்…
அப்படி இங்குதான் செய்வீர்கள் என்றால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்றார் மகா ஒரே வார்த்தையாக நான் இங்கே செய்யவில்லை பெரியம்மா நான் என்னுடைய அக்காவிற்கு செய்கிறேன் அதற்கு நீங்கள் தடை சொல்லாமல் இருந்தால் போதும் என்று விட்டு வெளியே மண் அடுப்பு பத்த வைத்து அதிலையே குச்சி அடுப்பிலே அனைத்து வகையான சாதனங்களையும் கிளறி எடுத்துக் கொண்டு சென்றார்கள்…
எழில் பூ பழம் வாங்கிக் கொண்டு வந்தான் முகில் உதிரன் என்று அனைவருமே சென்றார்கள் இனியும் ஆர்ப்பாட்டமாக கிளம்பினால் அப்பொழுது காவேரி தான் ஒரே வார்த்தையாக இனி செல்லக்கூடாது என்று மட்டும் சொன்னார் …
பாண்டியம்மா பாட்டியும் இனி நீ மற்ற நாளில் சென்று அவளை தனிப்பட்ட முறையில் பார்த்துவிட்டு வா இப்பொழுது அவளுக்கு சோறு கொடுக்கும் வேளையில் நீ செல்ல கூடாது நீயும் மாசமாக இருக்கிறாய் அதனால் செல்லக்கூடாது என்றார் …
சுந்தரி கோதை என பெண்கள் நால்வருக்குமே அதுவே சரி என்று பட்டதால் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் இனி தான் வருந்தினால் மகா இனியை சமாதானம் செய்துவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு கயல் வீட்டுக்கு சென்றாள்…
இன்னும் சொல்லப்போனால் கயலுக்கு தெரிவிக்காமல் தான் சர்ப்ரைசாக சென்றார்கள் கயல் மற்றும் அவளுடைய கணவன் பெற்றவர்கள் அனைவரும் அவ்வளவு சந்தோஷமடைந்தார்கள் பிறகு கயலை உட்கார வைத்து சாமி கும்பிட்டு விட்டு வீட்டில் ஒரு சேரை போட்டு அருகில் உள்ள இரண்டு மூன்று வீடுகளில் இருந்து சுமங்கலி பெண்களையும் அழைத்து சிறியதாக வளகாப்பு போல் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள் ….
அன்று மகிழுடன் நிலா கயலை பார்க்கச் சென்று வந்ததில் இருந்து நிலா கயலிடம் தினமும் பேச செய்தால் அது காவேரிக்கும் தெரியும் இருந்தாலும் கண்டும் காணாமல் அமைதியாக இருந்தார் தான் சொன்னால் மட்டும் இவர்கள் கேட்கப் போகிறார்கள் என்று எண்ணி அமைதியாகிவிட்டார் ….
இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தார் யாரும் கேட்பதில்லை அதுவும் இப்பொழுது அவள் மாசமாக இருக்கிறாள் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் பேசுகிறார்கள் என்று அதன் பிறகு அவர் யாரும் பேச வேண்டாம் போய் பார்க்க வேண்டாம் என்று சொல்லவே செய்யவில்லை …
சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்பதால் சொல்வதையே நிறுத்திவிட்டார் இனிக்கு குழந்தை பிறக்க இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் காலையில் எழுந்ததிலிருந்து இனி சோர்வாக இருந்தால் ….
உதிரன் இனி சோர்வாக இருப்பதை பார்த்து நான் இன்று வீட்டில் இருந்து கொள்ளட்டா நீ ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று கேட்டான் இல்ல மாமா ஒன்றும் இல்லை இந்த நேரங்களில் இப்படித்தான் இருக்கும் …
அதுதான் தேதி இன்னும் இருபது நாட்களுக்கு மேல் இருக்கிறது அல்லவா அது மட்டும் இல்லாமல் வீட்டில் இத்தனை பேர் இருக்கிறார்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவனை அனுப்பி வைத்தாள் மகாவும் அதேபோல் நான் வேண்டுமானால் இன்று வீட்டில் இருக்கட்டுமா என்றாள்…
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் குழந்தை பிறந்த பிறகு நீ தானே பார்த்துக் கொள்ளப் போகிறாய் அப்போது லீவு எடுக்க வேண்டும் அல்லவா அதனால் இப்பொழுது தானே நீ வேலைக்கு சேர்ந்திருக்கிறாய் என்றவுடன் அவளும் சிரித்துக் கொண்டே ஏதுவாக இருந்தாலும் போன் செய் என்று சொல்லிவிட்டு ஆயிரம் பத்திரமும் சொல்லிவிட்டு சென்றாள் ….
வீட்டில் உள்ள ஆண்களும் வேலைக்கு சென்று விட்டார்கள் அனைவருமே வேலைக்கு சென்று விட்டார்கள் பெண்கள் மூவரும் கோவிலுக்கு சென்று வருகிறோம் என்று சொன்னார்கள் எங்களுக்கு மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது இனிக்கு குழந்தை பிறக்கும் தேதி நெருங்கு நேரங்க என்றவுடன் அவர்கள் பயத்தை உணர்ந்ததால் பாண்டியம்மா பாட்டியும் சரி சென்று வாருங்கள் என்று அனுப்பி வைத்தார் ….
மூன்று பேரும் சென்று இரண்டு மணி நேரங்கள் ஆகியிருந்தது அவர்கள் சென்ற அன்று கோவிலில் சாமிக்கு திருக்கல்யாணம் செய்துகொண்டு இருந்ததால் அவர்கள் கோவிலில் இருந்து வர நேரமாகியது திருக்கல்யாணத்தை முடித்துவிட்டு வரலாம் என்று எண்ணியிருந்தார்கள் …
அதுதான் வீட்டில் பாட்டி இருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் குழந்தை பிறக்க இன்னும் இருபது நாட்களுக்கு மேலே இருக்கிறதே என்று எண்ணினார்கள் அவர்கள் சென்று இரண்டு மணி நேரத்தில் இனி அவளது அறையில் இருந்து ஒரு மாதிரியாக சோர்வாக நடந்து வந்தால்…
பாண்டியம்மா பாட்டி என்னடி பண்ணுது ஏதாவது இருந்தால் சொல் என்று கேட்டார் அவள் ஒன்றும் இல்லை பாட்டி என்று சொல்லிக் கொண்டே நடந்து கொண்டே இருந்தால் பாண்டியம்மா பாட்டிக்கு சந்தேகம் வந்துவிட்டது இனி உனக்கு வலி என்றால் என்ன என்று தெரியவில்லையா வலிக்கிறதா டி நடக்க வேண்டும் போல் இருக்கிறதா என்று கேட்டார் …..
அவள் அழுது கொண்டே வேகமாக கத்தினாள் அவள் கீழே விழ இருந்து நேரத்தில் பாண்டியம்மா பாட்டி அந்த நேரத்தில் அவளை வேகமாக தாங்கிப் பிடித்தார் அவராலும் ரொம்ப நேரம் அவளை தாங்கிப் பிடிக்க முடியவில்லை அவரின் வயதின் காரணமாக ஒரு வழியாக அவளை தாங்கி பிடித்துக் கொண்டே அங்குள்ள ஷோபாவில் உட்கார வைத்தார்…
இனி என்னடி பண்ணுவது என்று கேட்டார் பாட்டி எனக்கு காலையிலிருந்து அடிவயிறு வலிக்கிறது சுருக்கு சுருக்கு என்று வலிக்கிறது பாத்ரூம் போக வேண்டும் போல் இருக்கிறது என்று கத்தினால் அது தாண்டி வலியே உனக்கு தான் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே …
வீட்டில் உள்ளவர்களும் சொல்லியிருந்தார்களே என்று கத்தினர் பாட்டி நீங்கள் பொய் வலி வரும் என்றும் சூட்டுவலி வரும் என்று சொன்னீர்களே அதுவாக இருக்கும் என்று எண்ணினேன் எனக்கு காலையிலிருந்து வலிக்கிறது என்றவுடன் பாண்டியம்மா வேறு எதுவும் பண்ணாமல் வேகமாக முதலில் மகாவிற்கு தான் அழைத்தார்….
அவருக்கு இப்பொழுது வேறு யாருக்கும் அழைக்க வேண்டும் என்று தோன்றவில்லை என்ன செய்வது என்றும் தெரியவில்லை முதலில் அவர் அழைத்தது மகாவிற்கு தான் மகா அந்த நேரத்தில் வகுப்பு இல்லாத காரணத்தினால் அடுத்த வகுப்பிற்கு பாடம் எடுப்பதற்கு நோட்ஸ் எடுத்துக்கொண்டு ஸ்டாப் ரூமில் இருந்தால் ….
தனது பாட்டியிடம் இருந்து போன் வந்தவுடன் அவர்கள் நான் கல்லூரிக்கு வந்து விட்டதால் மற்ற நேரங்களில் போன் செய்ய மாட்டார் ஏதாவது முக்கியமாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே போன் அட்டென்ட் செய்து ஹலோ பாட்டி என்றால் …
அடுத்த நிமிடம் பாண்டியம்மா பாட்டி மகா இனிக்கு வலி வந்து விட்டதடி என்று அழுது கொண்டு கரகரத்த குரலில் சொன்னார் வீட்டில் யாரும் இல்லை இவளுங்க மூணு பேரும் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள் என்று கத்தினார்….
மகா தான் ஒன்றும் இல்லை பாட்டி நீங்கள் எத்தனை பிரசவம் பார்த்து இருக்கிறீர்கள் இப்படி நீங்கள் அழலாமா அமைதியாக இருங்கள் நான் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் அதுவரை நீங்கள் அவளுக்கு கசாயம் வைத்துக் கொடுங்கள்…
நான் இன்னும் 20 நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்று சொல்லிவிட்டு வேகமாக ஸ்டாப்ரூமில் இருந்து வெளியில் வந்து அங்கு இருப்பவரிடம் எழிலுக்கு இப்பொழுது எந்த கிளாஸில் பகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று கேட்டுவிட்டு அவன் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் கிளாசுக்கு சென்றால் …
அங்கு சென்று மே ஐ கம் இன் சார் என்று கேட்டாள் எழிலும் வாங்க மகா என்றவுடன் வேகமாக மகா உள்ளே சென்றால் அவள் முகம் பதட்டமாக இருப்பதை பார்த்துவிட்டு என்ன மகா என்று கேட்டான் இனிக்கு வலி வந்து விட்டதாம் என்று மட்டும் சொன்னால் …
எழில் ஸ்டுடென்ட்சை பார்த்து ஒன் மினிட் என்று விட்டு வெளியே இருவரும் வேகமாக வந்தார்கள் அவர்கள் துறை ஹச்ஓடி இடம் விஷயத்தை சொல்லிவிட்டு லீவ் வேண்டும் என்றும் சொல்லிவிட்டு இருவரும் அவர்களது வண்டியில் வீடு நோக்கி வேகமாக புறப்பட்டார்கள் …
அவர்கள் இருவரும் கரெக்டான நேரத்திற்கு வீட்டிற்கு சென்றார்களா இனிக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்ததா…
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் படித்துவிட்டு கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று உங்களின் மேலான கருத்துக்களை ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு செல்லுங்கள் …
என்னுடைய கதையின் நகர்வு எப்படி செல்கிறது என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் உங்களின் கருத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்…
நீங்கள் தரும் விமர்சனங்களே என்னை அடுத்தடுத்த பாகங்கள் எழுத துண்டுகளாக இருக்கும் என்று நம்புகிறேன்…
மிக்க நன்றி🙏
அதான்.. இப்ப எழில் & மகா வீட்டுக்கு கிளம்பிட்டாங்க தானே..
இனி நல்லபடியா பிள்ளையை பெத்துடுவா.
Nice