மகிழ் மகா இருவரும் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்கள் வேணி அனைத்து பொருட்களையும் மொட்டை மாடியில் அடுக்கி நேர்த்தியாக வைத்திருந்தாள் அங்கு ஹாலிலேயே ஓரிடத்தில் கிச்சனுக்கு என்று ஒதுக்கி வைத்திருந்தாள்…
அங்கு இரண்டு அறைகள் இரண்டு அறையிலும் அட்டாச் பாத்ரூம் மற்றும் ஒரு ஹால் இதைவே அந்த மொட்டை மாடியில் இருப்பவை மிதம் இருக்கும் இடம் மாடியாக உபயோகித்து கொண்டார்கள் மகிழ் மேலே சென்றவுடன் மகாவிடம் எப்பொழுது டி இந்த முடிவு எடுத்தாய் என்று கேட்டான்….
மாமா என்ன என்ன செய்ய சொல்கிறாய் இப்பொழுது நாம் இங்குதான் இருப்போம் என்று பிடிவாதம் பிடித்திருந்தாலோ இல்லை நாம் அமைதியாக இருந்தாலோ பெரியம்மா வீட்டை விட்டு சென்று இருப்பார்கள் உங்களுக்கு அது பரவாயில்லையா …
கயலை இந்த வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக எவ்வளவு செய்தார்கள் என்று மறந்து விட்டீர்களா நாம் உறுதியாக நின்றதால் ஏதோ விட்டுவிட்டார்கள் ஆனால் இப்பொழுது கயல் செய்திருக்கும் தப்புக்கும் நாம் தான் காரணம் நாமும் ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்…
அப்படி இருக்கும் பொழுது பெரியம்மா அமைதியாக விட்டு விடுவார்களா நம் இருவரின் மேல் இருக்கும் பாசத்தால் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள் என்றாள் நான் எப்போ மகா அப்படி எண்ணினேன் எனக்கு தெரியாது அத்தையை பற்றி என்றான்…
அப்புறம் என்ன மாமா அதைப் பற்றி கேட்கவில்லை ஆனால் அவர்கள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் என்று தெரிந்து அதற்கு முன்பாகவே நீ இவை அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறாயே அதை பற்றி கேட்கிறேன் என்றான் பிறகு என்ன செய்வது நாம் வெளியே சென்றாலும் இந்த வீட்டை விட்டு செல்ல சொல்கிறீர்களா…
என்னாலோ இல்லை உங்களாலோ வீட்டில் உள்ளவர்களோ நாம் வெளியே சென்றார் தாங்கிக் கொள்ள முடியுமா இவர்களை பார்க்காமல் இருக்க முடியுமா நாம் அனைவரையும் ஒருநாள் பார்க்காமல் இருந்தாலே கஷ்டம் இவர்கள் அனைவரையும் நாம் வெளியே தங்கி கொண்டால் எப்பொழுதாவது தான் பார்க்க முடியும்…
அதுவும் பெரிதாக பேச முடியாது அது மட்டும் இல்லாமல் இப்பொழுதும் நாம் அனைவருடன் பேசப்போவதில்லை என்றால் மகா என்றான் ஆமாம் நம் இவர்கள் அனைவரிடமும் பேசினாள் நாம் மொட்டை மாடிக்கு குடி வந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போகிவிடும் அது மட்டும் இல்லாமல் நாம் செய்த தவறுக்கு தண்டனை நாமும் அனுபவிக்க வேண்டாமா….
நம்மால் அங்கொருத்தி எத்தனை மாதங்களாக தனிமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் அதுவும் இப்பொழுது இருக்கும் இந்த நிலைமையிலும் என்றால் மகிழ் வேகமாக வந்து மகாவின் எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு கட்டிப்பிடித்தான்…
மகாவிற்கு வலித்தது ஆனால் வலியை பொறுத்துக் கொண்டு அமைதியாக தான் இருந்தால் அப்போது வேணி அங்கு வந்தால் அண்ணா அண்ணி உடைய எலும்புகள் அனைத்தும் நொறுங்கிவிடும் போல என்று சொல்லிக்கொண்டே வந்தால் அதன் பிறகு தான் மகாவை விட்டு நகர்ந்து நின்று சாரி வேணி என்று விட்டு அமைதியாகி விட்டான்…
இதில் என்ன அண்ணா இருக்கிறது என்றால் பிறகு இருவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் இருவரும் இந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை அப்பப்போ டீ காபி மட்டும் குடித்தார்கள் அவர்களுக்கும் இப்பொழுது அது தேவையானதாக தான் இருந்தது..
அதனால் வேறு எதுவும் பேசாமல் டீ வாங்கி குடித்தார்கள் ஏனென்றால் இந்த மூன்று நாட்களில் அவர்கள் இருவரும் பெரிதாக ஒன்றும் சாப்பிடவில்லை மூன்று வேளையும் டீ காபி தான் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவளும் அவர்களுடன் ஒரு டீ கப்புடன் வந்து அமர்ந்தால்….
அப்போது முகில் உதிரன் இருவரும் வந்தா என்னை மன்னித்து விடு டா என்று மகிழ் இடம் உதிரன் கேட்டான் நீ எந்த தவறும் செய்யவில்லை நீ ஏன் உன்னை வருத்தி கொள்கிறாய் நீ உன் வாயால் சொல்லாமல் இருந்தாலும் இந்த விஷயம் எப்படியாவது தெரிய தான் போகிறது இப்பொழுது உன் வாயால் தெரிய வேண்டும் என்று இருந்திருக்கிறது என்று சமாதானம் படுத்தினாள் மகா….
அவன் சமாதானமாகவில்லை என்றவுடன் நீ இதையே பேசிக் கொண்டிருக்காதே என்று விட்டு அது மட்டும் இல்லாமல் இனிமேல் யாரும் மேலே எங்களை பார்ப்பதற்காக என்று வராதீர்கள் எங்களிடமும் பேசாதீர்கள் நீங்கள் மட்டும் இல்லை வீட்டில் உள்ளவர்கள் யாருமே என்றால் ….
அப்பொழுதுதான் நிலாவும் படிக்கட்டில் ஏறி வந்தால் எழிலும் பின்னாடியே வந்தான் மகா அவ்வாறு சொன்னவுடன் எழில் நிலா இருவரும் அமைதியாக நின்றார்கள் முகில்தான் மகா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஏன் நாங்கள் கயல் இடம் இப்பொழுது பேசாமல் தான் இருக்கிறோமா என்று கேட்டான் …
அண்ணா நீ கயலிடம் பேசாமல் இருப்பது வேறு பேசிக் கொண்டிருப்பது வேறு என்னிடம் பேசுவது வேறு ப்ளீஸ் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் அப்படி நீங்கள் அனைவரும் என்னிடம் வந்து இங்கு பேசி உறவாடினால் பெரியம்மா வீட்டை விட்டு செல்வதற்கு நிறைய சான்ஸ் இருக்கிறது அதை தான் நீங்கள் அனைவரும் விரும்புகிறீர்களா என்று கேட்டால்….
அனைவரும் அமைதியாக இருந்தார்கள் அப்பொழுது இங்கு யாருமே வர வேண்டாம் என்று சொல்கிறாயா என்று உதிரன் கேட்டான் நான் யாருமே இங்கு வர வேண்டாம் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை எழிலும் வேனியும் மட்டும் மேலே வரட்டும் மற்றபடி வேற யாரும் வர வேண்டாம் என்றவுடன் முகில்தான் வேனியை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு இவள் வந்தால் மட்டும் அம்மா எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று எண்ணுகிறாயா என்றான் …
அண்ணா இவள் வந்தால் பெரியம்மா ஏதாவது சொல்வார்களா சொல்ல மாட்டார்களா என்பது அடுத்த விஷயம் அதை அவள் பார்த்துக்கொள்வாள் அதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் அதை எப்படி சமாளிக்க வேண்டுமோ அவள் சமாளித்துக் கொள்வாள் அதேபோன்று எழிலை பற்றியும் நீங்கள் யோசிக்க வேண்டாம் …
இவர்கள் இருவரும் பெரியம்மாவிடம் என்ன சொல்லி சமாளிக்க வேண்டுமோ அப்படி சொல்லி சமாளித்துக் கொள்வார்கள் அதைப்பற்றி கவலை உங்கள் யாருக்கும் வேண்டாம் என்றால் நிலா எதுவும் பேசாமல் தனது அக்கா மாமா இருவரையும் முறைத்துவிட்டு கீழே இறங்கி விட்டாள் எழில் போகும் நிலாவை காண்பித்து சிரித்தேன்…
பிறகு உதிரன் முகில் இருவரும் கீழே இறங்கி விட்டார்கள் வேணி தான் நான் இரவுக்கு சமைத்து வைக்கிறேன் அண்ணி என்றால் இல்லை வேணி நீ கீழே சென்று இனியை பார்த்துக் கொள் எப்படியும் அம்மாவும் அத்தையும் வருத்தத்தில் இருப்பார்கள் நீ கீழே போய் இருக்கும் வேலைகளை பார் நான் பார்த்துக் கொள்கிறேன் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் …
எழிலும் நீ போ வேணி நான் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறேன் என்றான் எழில் இருப்பதால் வேணியும் சரி என்று விட்டு கீழே சென்று விட்டால் அவள் கீழே செல்லும் வேளையில் கோதை சுந்தரி இருவரும் மௌனமாக சமைப்பதற்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள் வேனி இருவரையும் பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்….
நீங்கள் இருவரும் சென்று கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்றால் இருவரும் வேணியை பார்த்து முறைத்தார்கள் அந்த முறைப்பின் அர்த்தம் உணர்ந்துதால் வேணி இருவரையும் பார்த்து சிரித்து விட்டு என்னால் என்னுடைய மாமியாரை எதிர்த்து பேச முடியும் கேள்வி கேட்க முடியும் உங்களால் முடியுமா என்று கேட்டால் …
இருவரும் மௌனமாக இருந்தார்கள் சின்னத்தை நான் அத்தையை குறை சொல்லவில்லை அவர்கள் பக்கம் இருப்பது நியாயம் தானே அவர்களுக்கும் வலி இருக்க தானே செய்கிறது அதற்காக மகா அண்ணி மகிழ் அண்ணன் செய்தது தவறு என்று சொல்ல மாட்டேன் நான் ஒன்று சொன்னால் என்னை கோபித்துக் கொள்ளாதீர்கள்….
அவர்கள் இருவர் மட்டும்தான் தவறு செய்திருக்கிறார்களா நீங்கள் யாரும் தவறு செய்யவில்லையா அவர்கள் இருவரையும் இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளத் தூண்டியது இந்த வீட்டில் உள்ள அனைவரும் இதில் நீங்கள் அனைவரும் கயல் அண்ணியை தவிர வேறு யாராவது பெண்ணென்று சொல்லி இருந்தால் மகிழன் அண்ணனே அவரது விருப்பத்தை சொல்லி இருப்பார்கள்….
அதுவும் நீங்கள் இது தான் பெண் என்று முடிவு செய்துவிட்டு மகிழ் அண்ணனிடம் சொல்லியிகிறீர்கள் பெண் பார்க்க செல்லலாம் என்று சொல்லி இருந்தால் கூட சொல்லி இருப்பார்கள் அப்படி தனது பெரியம்மா தன்னைத் தூக்கி வளர்த்தவர் அவருடைய பெண்ணை தான் காதலிக்கும் தனது மாமாவிற்கு பெண் கேட்கப்படவில்லை திருமண ஏற்பாடு வரை செல்கிறீர்கள் என்று இருக்கும் பட்சத்தில் மகா அண்ணி என்ன செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்…
ஏற்கனவே இந்த குடும்பத்திற்காக என்று அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தவர் தான் மகா அண்ணி அதை நான் சொல்லி தான் உங்கள் யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை அப்படி இருக்கும் பொழுது தன் வாழ்க்கையை இழக்க துணிந்து விட்டார் என்னால் அவர்கள் பக்கம் மட்டும் தவறு இருக்கிறது என்று சொல்ல முடியாது …
வீட்டில் உள்ள அனைவர் மீதும் ஒவ்வொரு வகையில் தவறு இருக்கிறது ஆனால் அதையும் மீறி அவர்கள் தங்களது காதலை சொல்லி இருக்க வேண்டும் இருவரும் சுயநலமாக இல்லாமல் இந்த வீட்டிற்காக என்று பொதுநலமாக இருந்து அவர்கள் காதலை இழந்து திருமணம் செய்தும் சேரவும் முடியாமல் பிரிவும் முடியாமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் …
என்னை பொருத்த அளவு அவர்கள் இருவரும் எப்பொழுதும் போல் பேசி கொள்கிறார்களே தவிர மற்றபடி கணவன் மனைவியாக பேசிக்கொள்வதும் போலோ வாழ்வதுபோலோ தெரியவில்லை இனி அது அவர்கள் வாழ்க்கை கணவன் மனைவியாக வாழட்டும் என்று எண்ணுகிறேன்…
அது மட்டும் இல்லாமல் நீங்கள் யாரும் மகிழ் அண்ணா மகா அண்ணியை பார்க்காமல் இருந்தால் போதும் அவர்களிடம் பேசாமல் இருந்தால் போதும் அத்தையின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பிருக்கிறது உடனடியாக அனைத்தையும் மறந்து விடுவார் என்று எண்ணாதீர்கள் …
அதேபோல் நீங்கள் அவர்கள் இருவரிடம் பேசலாம் என்றும் நினைக்காதீர்கள் அவர்கள் இருவரும் உங்களிடம் பேச விரும்ப மாட்டார்கள் நீங்களும் பேசாமல் ஒதுங்கியே இருங்கள் என்று விட்டு அதேபோல் நான் பேசாமல் போகாமல் இருக்க மாட்டேன் என்னை அத்தை கேள்வி கேட்டால் அதற்கான பதிலை நான் சொல்லிக் கொள்வேன் …
அதற்காக அத்தை மனது புண்படும்படியான பதிலை சொல்வேன் என்று இல்லை என்று விட்டு அமைதியாக சமைக்க ஆரம்பித்தால் கோதை சுந்தரி இருவருக்கும் புத்தியில் உரைக்கும் படியாக வேணி பேச செய்தாள் அவர்களுக்கும் அவர்கள் செய்த தவறு உணரும்படியாக தான் பேசினால்…
அவள் பேசியதும் தவறும் இல்லை பொய்யும் இல்லை என்று இருவரும் உணர்ந்தார்கள் இருவர் மட்டும் இல்லை பாண்டியம்மா பாட்டி சமைத்து முடித்து விட்டார்களா இல்லை சமைப்பதற்கு ஏதாவது உதவி செய்யட்டா என்று கேட்பதற்காக வந்தார் இவர்கள் மூவரும் பேசுவதை அவரும் கேட்டார் …
கேட்டுவிட்டு அமைதியாக அவரது அறைக்குச் சென்று தனது கணவன் கருப்பையா தாத்தாவிடம் அனைத்தையும் சொன்னார் கருப்பையா தாத்தா சிரித்துக் கொண்டே வேணி நல்ல பெண் மட்டும் அல்ல பாண்டியம்மா அனைத்து விவரங்களையும் தெரிந்தவள் அனுபவசாலி வயது அனைத்து அனுபவத்தையும் தந்துவிடாது….
நிறைய வலிகள் அனுபவத்தை தரும் அதுதான் வேணி பக்குவப்பட்டு இருக்கிறாள் என்று கூறினார் பாண்டியம்மா பாட்டியும் நீங்கள் சொல்வது சரிதான் என்று சிரித்துவிட்டு இருவரும் வரவேற்பு அறைக்கு வந்தார்கள் வேணி அனைத்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்து வரவேற்பு அறையில் உள்ள உணவு மேசை மீது வைத்தால்….
அனைவரையும் அழைத்தாள் குழந்தை தூங்கியதால் காவேரியும் தூங்கி கொண்டு இருந்தார் வேணி இருவரையும் பார்த்துவிட்டு அமைதியாக வந்து விட்டாள் சுந்தரி தான் ஏன் அண்ணியை அழைத்து வரவில்லை என்று கேட்டதற்கு அத்தை தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மூன்று நாட்களாக தூங்கவில்லை யாரும் எழுப்ப வேண்டாம்…
குழந்தை அழுதால் அவர்களே எழும்பி விடுவார்கள் என்று விட்டு அனைவருக்கும் பரிமாறினால் அனைவரும் சாப்பிடாமல் அமைதியாக இருந்தார்கள் அத்தையை மூன்று நாட்களாக நான் சாப்பிட வைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் அவர்கள் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள் ….
அவர்கள் பெயரனுக்காகவே அவர்கள் சாப்பிடுவார்கள் அதே போல் குழந்தை பசியால் மட்டும் இனியாக்காவிடம் செல்லட்டும் மற்ற நேரங்களில் அத்தையே வைத்திருக்கட்டும் என்று விட்டு அனைவருக்கும் பரிமாறினாள் மகா அனைத்தையும் மொட்டை மாடியில் இருந்து பார்க்க செய்தாள்…
மகா மனதுக்குள் வேனியை எண்ணி மகிழ்ந்தால் வீட்டில் உள்ளவர்களும் வேணி இவ்வளவு தூரம் சொன்ன பிறகு அமைதியாக சாப்பிட்டார்கள்…
வேணி சமையலறையில் தனது சின்னத்தை கோதைக்கும் சுந்தரி அம்மாவிடமும் சொன்னதை இன்னொருவரும் கேட்க நேரிட்டது அது யாராக இருக்கும் என்பதை நாம் பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்…
அன்புடன்
❣️ தனிமையின் காதலி ❣️
வேற யாரு..? அநேகமா அது காவேரி அத்தையாத் தான் இருக்கும்.