Skip to content
Home » மகாலட்சுமி 64

மகாலட்சுமி 64

வேணி அனைவரையும் சாப்பிட வைத்தால் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தார்கள் இரவு 10 மணி இருக்கும் அப்பொழுதுதான் குழந்தை லேசாக சினுங்கியது ….

குழந்தைவுடன் குழந்தை தூங்க ஆரம்பித்து ரொம்ப நேரம் இருக்கும் என்றவுடன் குழந்தையின் தூக்கம் கலையாதோ அளவிற்கு மெதுவாக தூக்கிக் கொண்டே வந்து இனியை பார்த்தார் அவள் வரவேற்பு அறையில் இல்லை என்றவுடன்  அவளது அறைக்குச் சென்றார் அவள் உதிரன் மடியில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தால் ….

உதிரன் அவளது தலையை கோதிக் கொண்டிருந்தான் மெதுவாக இனியை எழுப்பினார் பிறகு குழந்தைக்கு பாலூட்டுமாறு சொல்லிவிட்டு வெளியில் வந்தார் அப்பொழுது வேனி சாப்பிடு வருமாறு கூப்பிட்டால் வேணியை ஒரு முறை திரும்பி பார்த்து முறைத்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டார் …

வேணியும் எல்லோரும் சாப்பிட்டு விட்டார்கள் நீங்கள் மட்டும்தான் இன்னும் சாப்பிடவில்லை என்றாள் நீ சாப்பிட்டாயா என்றார் அவர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் வேணி திரு திருவென முழித்தால் வா வந்து சாப்பிடலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு சென்று இருவரும் மாற்றி மாற்றி பரிமாறி சாப்பிட்டார்கள்…


பிறகு வேணியிடம் இனி இடமே குழந்தை இரவு இருக்கட்டும் என்றார் இனி அக்காவை நீங்கள் உங்கள் அறையில் தங்க வைத்துக் கொள்ளலாம் இல்லையா இல்லை நீங்கள் இனி  அக்கா அறையில் சென்று படுத்துக் கொள்ளலாம் இல்லையா இனி  அக்கா குழந்தை எப்படி பார்த்துக் கொள்வார்கள் என்று கேட்டால் வீட்டில் உள்ள அனைவரும் வேனியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்…

காவேரி தனது இளைய மருமகளை பார்த்து சிரித்துக் கொண்டே பேச்சிலாம் நல்லா தான் பேசுற என்று சொல்லிவிட்டு இந்த மூன்று நாட்களாக குழந்தையை இரவில் யார் பார்த்துக் கொண்டார்கள் நானா என்று கேட்டார் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் இருந்தார்கள் நீங்கள் தானே அவங்க மாமியார் உங்க பேரப்பிள்ளை தானே உங்களால் பார்த்துக் கொள்ள முடியாதா என்றால்…

அவர் சிரித்துக் கொண்டே அவளுடைய அம்மா சுந்தரி இருக்கிறாள் அவள் பாத்துக்குவாள் என்றார் அவருக்கு உடம்பு முடியவில்லையாம் மூன்று நாட்களாக அவர்கள் தானே பார்த்துக் கொண்டார்கள் என்றாள்  உண்மையை சொல் மூன்று நாளா அவள பார்த்துக் கொண்டால் என்று விட்டு அதெல்லாம் உதிரன் பார்த்துக் கொள்வான் என்று விட்டு அமைதியாக அவரது சென்று விட்டார் …

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை உதிரனும் கேட்டான் தனது தாயைப் பார்த்து சிரித்துவிட்டு வேணி இடம் வந்தான் ஏன் வேணி அம்மாவிடம் இப்படி வாய்க்கு வாய் பேசுகிறாய் என்று கேட்டான் அண்ணா நான் இப்படி பேசினால் மட்டுமே அத்தையால் கொஞ்சமாவது வெளியே வர முடியும்….

நானும் உங்களை போல் இப்படியே இருந்தால் அத்தை வருந்தி கொண்டே தான் இருப்பார்கள் அத்தை அதை மறக்க வேண்டும் என்பதையும் தாண்டி அதிலிருந்து வெளியே வரவேண்டும் எனக்கு அதுதான் முக்கியம் என்று விட்டு வேறு எதுவும் பேசவில்லை சுந்தரி நான் வேண்டுமானால் உங்கள் அறைக்கு வரட்டுமா என்று கேட்டார்..

இல்லத்தை ஒன்று பிரச்சினை இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன் குழந்தை தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது அப்படி எழுந்தால் நான் இனியை எழுப்பி பால் குடிக்க வைத்துக் கொள்கிறேன் என்னால் முடியவில்லை என்றால் உங்களை யாராவது கூப்பிடுகிறேன் என்று விட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்…..


வேணி மற்ற அனைவரையும் தூங்க சொல்லிவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு அவளது அறைக்கு சென்றாள் முகில் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவள் அமைதியாக படுத்தாள் முகில் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது உணர்ந்து விட்டு என்னையே எதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் ….

ஒன்றும் இல்லை என்றான் ஆனால் அவனது யோசனைகள் நீண்டு கொண்டே சென்றது வேணி எழுந்து உட்கார்ந்து இரவு விளக்கை ஆன் செய்தால் அவள் லைட் போட்டவுடன் முகிலும் எழுந்து உட்கார்ந்தான்   வேணி உங்கள் மனதில் என்னிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை நேரடியாக கேளுங்கள் என்று விட்டு அமைதியாக இருந்தால் …

முகில் வேகமாக அவளது கையை தனது கண்ணில் பொத்தி கொண்டு அழுதான்  என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் நான் ஒன்று சொன்னால் என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதே நான் உன்னை விரும்பியது என்னவோ உண்மைதான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் மற்றபடி எனக்கு உன்னுடைய கேரக்டர் பற்றி எதுவும் தெரியாது…

ஏன் திருமணம் செய்து கொண்டு வந்த புதிதில் கூட நான் கொஞ்சம் பயந்தேன் என்று கூட சொல்லலாம் எங்கே தன்னால் இந்த குடும்பத்தில் ஏதாவது சிறு விரிசல் கூட ஏற்படுமோ என்று ஆனால் இன்று எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்றான் இந்த குடும்பத்திற்காக இந்த குடும்பத்தில் உள்ளவர்களாக சிறுவயதிலிருந்து சின்னச் சின்ன விஷயங்கள் அவளது சந்தோஷங்களைக் கூட விட்டுக் கொடுத்துதான் வாழ்ந்திருக்கிறாள் …..

அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைவரும் எண்ணுவோம் தான் ஆனால் ஏதோ ஒரு இடத்தில் அனைவருமே அவளை விட்டுக் கொடுத்து இருக்கிறோம் ஆனால் எழில் எந்த இடத்திலும் அவளை விட்டுக் கொடுப்பதில்லை மகிழே விட்டுக் கொடுத்தால் கூட எழில் விட்டுக் கொடுக்க மாட்டான் இப்பொழுது நீயும் அதே மாதிரி தான் இருக்கிறாய்….

வேணி தனது கணவனை பார்த்து முறைத்துக் கொண்டே சிரிக்க செய்தாள் அவளது கண்ணில் இருந்து நீர் வடிந்தது நான் உன்னை தவறாக சொல்லவில்லை என்றான் அவளது கண்ணீரை துடைக்க வந்தான் வேண்டாம் என்று விலகி அவனிடமிருந்து அவளது கையை  உருவிக்கொண்டால்…

நீங்கள் என்னை அப்படி நினைத்து இருந்தாலும் தவறு இல்லை நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் உண்மையாகவே என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தானே திருமணம் செய்து கொண்டீர்கள் நான் உங்களை தவறு சொல்ல விரும்பவில்லை என்னை நீங்கள் விரும்பிய ஒரே காரணத்திற்காக ஏற்றுக்கொண்டது இந்த குடும்பம் …

உங்களுக்கு மட்டுமில்ல இந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த பயம் இருக்க செய்திருக்கும் என்பது எனக்கு தெரியும் அப்படியே என் மேல் பயமே இருந்தால் கூட வீட்டில் உள்ள அனைவரும் என்னை அவர்களது மகளாக மருமகளாக பேத்தியாக தான் பாவித்தார்கள் யாரும் என்னை ஒதுக்கி வைக்கவில்லை …

உள்ளத்தால் கூட யாருமே ஒதுக்கி வைக்க விரும்பவில்லை அப்படி இருக்கும் பொழுது நான் இவர்களை எப்படி ஒதுக்கி வைப்பேன் எனக்கும் இப்படி குடும்பமாக வாழ தான் ஆசை என்று விட்டு அண்ணி அனைவருக்கும் விட்டுக் கொடுத்தார்கள் விட்டுக் கொடுத்தார்கள் என்று சொல்கிறீர்கள் அவர்களிடத்தில் இருந்து அவர் விட்டுக் கொடுக்கவில்லை…

அவர் அவராக வாழ்ந்திருக்கிறார் அதுதான் அவரது குணமே இன்னொரு முறை அவர் விட்டுக் கொடுத்தார் என்று நீங்களோ வீட்டில் உள்ளவர்களோ அப்படி சொல்லாதீர்கள் என்று கூறி விட்டு அமைதியாக படுத்தல் முகில் வேறு எதுவும் சொல்லவில்லை அமைதியாக  படுத்தான் இருவரும் அசதியில் உறங்கி விட்டார்கள்…

வேணி படுத்ததும் உறங்கி விட்டால் முகில் சிறிது நேரம் எதையெதையோ யோசித்துக் கொண்டு உறங்கினான்  எழில் மகா மகிழ்  இருவரும் சாப்பிட வைத்துவிட்டு அவனும் அங்கே சாப்பிட்டுவிட்டு அமைதியாக கீழே வந்து படுத்தான் அனைவரும் அமைதியாக தூங்கி விட்டார்கள் ஒவ்வொருவர்  மனதிலும் ஒவ்வொரு சஞ்சலும் இருக்கத்தான் செய்தது …

இப்படியே மறுநாள் விடிந்தது காலையில் மகா எப்பொழுதும் போல் எழுந்து குளித்து முடித்து சமையல் செய்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினால் ஏற்கனவே மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து இருந்ததால் வேகமாக தனது ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு கீழே இறங்கி வந்தால்..

அப்போது வேணி அத்தை காவேரியிடம் அத்தை குழந்தையை காலை வெயிலில் காண்பித்தால் நல்லது தானே என்று கேட்டால் ஆமாம் அதற்கு என்ன என்று கேட்டார் இல்லையத்தை குழந்தையை வெயிலில் தினமும் காண்பிக்க வேண்டும் அல்லவா வெளியே நின்று காண்பித்தால் வெயில் அதிகமாக இல்லை மொட்டை மாடியில் சென்று காமிகலாம் அல்லவா என்று கேட்டாள்…

அவள் எதற்காக அவ்வாறு சொல்கிறால் என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் அப்பொழுதுதான் மகா மாடியில் இருந்து இறங்கி வந்தால் சிரித்துக் கொண்டே இறங்கி வந்தால் மேலே குழந்தையை இளம் சூட்டில் காண்பிப்பது நல்லது தான் ஆனால் காலை வெயிலில்  தான் காமிக்க வேண்டும் அதற்காக மொட்டை மாடி வெயிலில் இல்லை தோட்டத்தில் இருக்கும் இளஞ்சூட்டு  வேயிலில் காண்பிக்க வேண்டும் என்றால் ….

வீட்டில் உள்ள அனைவரும் வேற எதுவும் பேசாமல் அமைதியாக  இருந்தார்கள் வேணி மகாவை மறைத்து பார்த்தால் அப்பொழுது தான்  வேணியும் கல்லூரிக்கு கிளம்பி விட்டு அனைத்து சாப்பாடுகளையும் ஒதுங்கி வைத்துக்கொண்டு இருந்தால் அப்பொழுது மகா வேணி ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு விடுமுறை சொல்லி விட்டாயா என்றால் …

மகா அவ்வாறு கேட்டவுடன் வேணி மகாவையே துருதுருவென பார்த்தாள் திருத்திருவன பார்த்தாள் என்ன ஒரு வாரத்திற்காக லீவ் எடுக்க வேண்டுமா ஏற்கனவே மூன்று நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுத்திருக்கிறோமே என்று எண்ணினால் பிறகு எதற்கு அண்ணி என்று கேட்டால்…

நீ தானே குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அப்போது நிலா முறைத்துக் கொண்டே வந்து தனது அக்காவை வேணி நீ கல்லூரிக்கு செல் நான் பார்த்துக் கொள்கிறேன் ஏற்கனவே சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து விட்டோம் என்று ஒரு மைனஸ் பாயிண்ட் உன் மேல் இருக்கிறது இப்பொழுது மூன்று நாட்கள் லீவு எடுத்து வைக்கிறோம்…..

அதுவும் இதுவரை நாம் இன்பார்ம் செய்யவில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் நான் ஒரு வாரம் லீவு எடுத்துக் கொள்கிறேன் என்றால் அப்பொழுது சுந்தரியும் பாண்டியம்மாவும் ஒரே போல் யாரும் லீவு எடுக்க வேண்டாம் அனைவரும் அவரது வேலையை போய் பாருங்கள்…

நாங்கள் தான் வீட்டில் இருக்கிறோமே எங்களுக்கு குழந்தை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியும் என்றார்கள் நிலா இல்லை நான் இருக்கேன் என்றாள்  ஒன்று வேண்டாம் அதான் இத்தனை பேர் இருக்கும் அல்லவா நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்றவுடன் மகா அனைவரையும் பார்த்துவிட்டு வெளியே சென்றால்…

அனைவரும் மறுநாளில் இருந்து அவர்களது வேலையை பார்க்கச் சென்றார்கள் உதிரன் ஒரு மாதம் வீட்டில் இருக்கிறேன் என்றான். அப்பொழுது காவேரி தான் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ இரவு வேலை மட்டும் பார்த்துக் கொள் என்று அனுப்பினார் அனைவரும் அவர்களது வேலைக்கு கிளம்பி சென்றார்கள்….


காலை உணவு சாப்பிட்டு விட்டு மகா செல்வதற்கு முன்பாகவே மகிழ் சென்று விட்டான் நிலா வேணி இருவரும் கல்லூரிக்கு சென்றவுடன் நிலாவின் தோழிகள் நிலா வேணி இருவரிடமும் என்னடி அடிக்கடி லீவ் போட்டுக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள் நான்தான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா …

அடிக்கடி வீட்டில் விசேஷங்கள் வருகிறது அதற்கு நான் என்ன செய்வேன் என்று சிரித்தால் நீ லீவு போடுற சரி நீ எப்போ லீவ் போட்டாலும் எப்படி அப்போ எழில் சாறும் லீவ் போடுகிறார்கள்  நானும் ரொம்ப நாளா கேட்கிறேன் என்றார்கள் அப்பொழுது நிலா சிரித்துக் கொண்டே நானும் ரொம்ப நாட்களாக அதே தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் …

இன்று வருவார் அல்லவா அப்போது அவரிடமே கேட்டு விடலாம் நீங்களும் என்னுடன்  கேட்டு விடுங்கள் என்றால் அனைவரும் என்னடி விளையாடுகிறாயா அவரிடம் போய் எங்களை மாட்டி விட பார்க்கிறாயா என்று சொன்னார்கள் அப்போது எழில் அனைவரையும் முறைத்துக் கொண்டே அவர்களது வகுப்பறைக்குள் நுழைந்தான்…

பீட்டற்கு நூறு ஆயுசு டீ என்றால் நிலா தனது தோழிகளை பார்த்து எழில் வேகமாக வகுப்பறைக்குள் வந்து நின்று இளவேனில் அகல் நிலா ஸ்டாண்டர்ட் அப் என்றான் இருவரும் எழுந்து நின்று திருத்திருவென முழித்தார்கள் வகுப்பில் உள்ள அனைவரும் இப்போது இவர்கள் இருவரும் என்ன செய்தார்கள் என்று எண்ணினார்கள் …

நிலாவின் தோழிகள் ஒருவேளை இவள் சொல்லியதை அவர் காதில் வாங்கி இருப்பாரோ என்று எண்ணி பயந்தார்கள் எழில் வேணி நிலா இருவரையும் இப்பொழுது எதற்காக நிற்க வைத்து இருக்கிறான் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 64”

    1. CRVS2797

      அதானே… இப்ப எதுக்கு அவங்களை நிற்க வைச்சிருக்கான்னு தெரியலையே..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *