Skip to content
Home » மகாலட்சுமி 65

மகாலட்சுமி 65

எழில் வேணியும் நிலாவும் எழுந்து நின்றவுடன் வகுப்பில் உள்ள அனைவரும் இப்போது இவர்கள் இருவரும் என்னை செய்தார்கள் என்று எண்ணினார்கள் அதேபோல் நிலாவின் தோழிகள் நிலா பேசியது அவர் காதில் விழுந்து விட்டதோ என்று எண்ணினார்கள்…

அவன் இருவரையும் எழுப்பி நிற்க வைத்துவிட்டு இருவரும் மூன்று நாட்கள் இன்ஃபார்ம் செய்யாமல் லீவ் எடுத்து இருக்கிறீர்கள் என்றான் இருவருக்கும் அதன் பிறகு தான் மூச்சு வந்தது என்று சொல்லலாம் அப்போது நிலா வீட்டில் விசேஷம் சார் அதனால் தான் என்றால் …

ஏற்கனவே நீ அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டிருக்கிறாய் இப்பொழுது வேனியும் உன்னுடன் அது மட்டும் இல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் லீவ் எடுத்து இருக்கிறீர்கள் விசேஷம் என்றால் முன்கூட்டியே சொல்லத் தெரியாதா என்றான் அப்பொழுது நிலா அப்போது  திரு திருவென முழித்தாள்…

வேணி தான்  என்னுடைய அக்காவிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது குழந்தை பிறப்பதெல்லாம் சொல்லிவிட்டா பிறக்கும்  சார் நாங்கள் சொல்லிவிட்டு லீவ் எடுப்பதற்கு என்றால் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் சிரித்துவிட்டார்கள் ஏன் எழில் கூட சிரிக்க தான் செய்தான் ..

பிறகு சிரித்துவிட்டு முறைத்துக் கொண்டே வேனியிடம் நீயும் நிலா உடன் சேர்ந்து நன்றாக பேச கற்றுக் கொண்டாய் வேணி என்று விட்டு குழந்தை சொல்லிவிட்டு பிறக்காது தான் ஆனால் மூன்று நாட்களாக வாக வா குழந்தை பிறந்தது என்றான் இப்பொழுது மாணவர்கள் அனைவரும் வேணியை பார்த்து சிரித்தார்கள்…

குழந்தை ஒரு நாள் தான் பிறக்கும் சார் நாங்கள் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டோம் இனி மேல் இன்பார்ம் செய்துவிட்டு லீவ் எடுகிறோம் என்று என்றால் அப்போது நிலா இவர் மட்டும் என்ன சொல்லிட்டு லீவ் எடுக்கிறார் என்று முனகினாள் எழில் இருவரையும் உட்காருமாறு சொன்னான் …

இருவரையும் உட்கார சொல்லிவிட்டு நிலா நீ சொன்னது என் காதில் விழுந்தது நான் சொல்லிவிட்டு தான் லீவு எடுகிறேன் நான் லீவு எடுத்தால் என்னுடைய மேல் அதிகாரியிடம் சொல்ல வேண்டும் அது மட்டும் இல்லாமல் நீங்கள் லீவு எடுப்பதற்கும் நான் அவர்களுக்கு தான் பதில் சொல்ல வேண்டும் அதை மறந்து விடாதீர்கள் என்று சொன்னான் …

நானும் நமது எச்சோடி இடமும் பிரின்சிபல் இடமும் இன்பார்ம் செய்ய வேண்டும் என்றான்  பிறகு பாடம் எடுக்க ஆரம்பித்தான் பாடம் எடுத்துவிட்டு அவனது வகுப்பை முடிந்து கொண்டு வெளியே செல்லும் வேலையில் டெஸ்ட் அனைவரும் எப்படி எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்டான் அனைவரும் திருத்திருவென முழித்தார்கள்..

நிலா தனது தோழிகளை பார்த்தால் டெஸ்ட் வைத்தாரா என்பது போல் அவர்கள் ஆமாம் என்று மண்டையாட்டியுடன் எழிலை பார்த்தால் நான் வரவில்லை என்றவுடன் என்னுடைய பிரியடிலில் ஜாலியாக இருக்கலாம் என்று எண்ணி இருப்பீர்கள் அல்லவா நான் வருண் சாரிடம் சொல்லி கொஸ்டின் கொடுத்துள்ளேன்…

கொஸ்டின் கூட யாருடையது என்று தெரிந்திருக்குமே நான் எடுக்கும் கொஸ்டின்க்கும் அடுத்தவர்கள் எடுக்கும் கொஸ்டினுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்குமே என்றான் அனைவரும் ஆமாம் என்பது போல் மண்டை ஆட்டினார்கள் இன்னும் பேப்பர் திருத்தவில்லை இன்று தான் திருத்துவேன்..    

திருத்திவிட்டு எப்படி எழுதி இருகிறீர்கள் என்று பார்க்கிறேன் எழில் வேணி நிலா இருவரையும் பார்த்தான் நான் உங்கள் இருவருக்கும் டெஸ்ட் சொல்லப்போவதில்லை நீங்கள் லீவு எடுத்திருந்ததால் இது ஏற்கனவே சொல்லி எழுதாமல் விட்டது என்பதால் இனிமேல் டெஸ்ட் இருக்கும் அதை மறந்து விடாதீர்கள்…

அரை மணி நேரம் டெஸ்ட் எழுதினால் அரை மணி நேரம் தான் பாடம் எடுப்பேன் இன்னும் ஒரு மாத காலங்கள் தான்  இருக்கிறது அதற்கு பிறகு உங்களுக்கு செமஸ்டர் வந்துவிடும் நானும் இன்னும் இரண்டு பாடம் தான் எடுக்க வேண்டி இருக்கிறது தினமும் ஒரு ஒரு பக்கம் எடுத்தால் கூட போதும் நான் முடித்து விடுவேன் ….

நீங்கள் படிக்க ஆரம்பித்து விடலாம் தினமும் டெஸ்ட்  வைப்பேன் இதை வைத்துதான் உங்களுக்கு இன்டர்நெல் மார்க் போடுவேன் என்று விட்டு வெளியே சென்று விட்டான் நாளைக்கு என்ன டேஸ்ட் என்பதை நான் ஈவினிங் சொல்கிறேன் என்று கிளம்பி விட்டான் பிறகு அடுத்தடுத்த ஹவரும் வந்தது ஒவ்வொருவராக பாடம் எடுத்து விட்டு சென்றார்கள் …

மகாவின் பீரியட் மதியத்திற்கு மேல் இருந்தது லஞ்ச் பிரேக்கில் எழில் வேணியை அழைத்தான் அவளும் என்ன சார் என்று கேட்டுக் கொண்டு வந்தால் அவளை அவனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று ஒரு பேப்பரை நீட்டினான் நாளைக்கு எந்தெந்த கொஸ்டின் டெஸ்ட் என்று இதில் எழுதி இருக்கிறது…

இது அனைத்துமே கேட்க மாட்டேன் இதில் அந்த நேரத்திற்குள் எத்தனை கொஸ்டின் எழுத முடியுமோ அதை தான் கேட்பேன் ஆனால் இவை அனைத்து படித்து இருக்க வேண்டும் என்று கூறி கொடுத்து அனுப்பினான் அவளும் வரும் வழியில் அதை படித்துக் கொண்டே வந்தால் முன்னால் வரும் ஒரு ஸ்டாப் மீது மோதி விட்டாள்…

பேப்பரை படித்துக் கொண்டு வந்ததால் அவள் மோதி விட்டாள் சாரி என்று விட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கு ஒரு ஆசிரியர் இருப்பதை பார்த்து விட்டு சாரி  மேம் தெரியாமல் மோதி விட்டேன் என்றாள் கண்ணை எங்கு வைத்துக்கொண்டு வருகிறாய் இங்கு பார்த்துக் கொண்டு கூட வரத் தெரியாதா என்று சொன்னார்…


தெரியாமல் தான் மோதி விட்டேன் சாரி என்றால் அப்பொழுதுதான் மகா வகுப்பு எடுப்பதற்காக வந்து கொண்டு இருந்தால் வேணியை ஒருவர் திட்டிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு என்ன ஆச்சு மேம் என்றாள் இல்ல மேம் இந்த பொண்ணு கையில இருக்க பேப்பர் பாத்துட்டு வந்து என் மேல் மோதி விட்டது என்றார்…

அவளுக்கு  சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் ஆகியது  திருமணம் ஆனதில் இருந்து இந்த பெண்ணிற்கு கவனம் படிப்பில் இல்லை கவனம் வேறு எதிலோ செல்கிறது இவர்கள் கெடுவது மட்டும் இல்லாமல் சுற்றி இருப்பவர்களையும் கெடுபார்கள் என்று தான் சொல்லி திட்டினார் வேணிக்கு கண்கள் குளம் கட்டி நின்றது மகா தான் வேணி நீ க்ளாஸ் போ என்றால்…

மகா என்ன மகா இப்படி அந்த பொண்ணை போக சொல்கிறீர்கள் என்று கேட்டார் இருங்க மேம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வேணியை அனுப்பி வைத்துவிட்டு அவரிடம் பேசினால் திருமணம் ஆகிவிட்டது என்பதால் அந்த பெண் அந்த எண்ணத்தில் தான் நடந்து கொள்வால் என்று அர்த்தமா உங்களுக்கும்தான் திருமணம் ஆகிவிட்டது எனக்கும் தான் திருமணம் ஆகிவிட்டது …

நாம் எப்போதும் அதே எண்ணத்தில் தான் இருக்கிறோமா நீங்கள் அந்த பெண்ணின் வகுப்பிற்கு பாடம் எடுக்கவில்லையே அந்தப் பெண் எப்படி படிக்கிறால் என்று உங்களுக்கு தெரியுமா அந்த பெண்ணின் வகுப்புக்கு நீங்கள் செல்கிறீர்களா நீங்களாகவே முடிவு செய்து கொள்ளாதீர்கள் அந்த பெண் உங்கள் மீது மோதியது என்னவோ தவறுதான் அதற்கு அந்த பெண் மன்னிப்பும் கேட்டுவிட்டார் ….

ஆனால் நீங்கள் அந்த பெண்ணின் பர்சனல் லைஃப் பற்றி பேசுவது தவறு அந்த பெண்ணும் பற்றி மட்டும் இல்லை வேறு யாருடைய பசங்களை பற்றியும் பேச வேண்டிய உரிமை நமக்கு இல்லை அது அவரவர் விருப்பம் சரியா படிக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டு சூழ்நிலை எப்படி என்றெல்லாம் நமக்கு தெரியாது…

இதைப் பற்றி எல்லாம் நாம் பேச வேண்டாம் நான் பேசியது தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்ற விட்டு கிளம்பினால் மகா ஒரு நிமிடம் என்றார் என்ன மேம் என்று திரும்பினாள் நீ சொல்வதெல்லாம் சரிதம்மா நான் தான் ஏதோ ஒரு வேகத்தில் தவறாக எண்ணி விட்டேன் என்றார் நாம் நம் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை மனதில் நினைத்துக் கொண்டு அடுத்தவர்களை காயப்படுத்துவது தவறு தான் மேம்..

நானும் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் காலையிலிருந்து ஏதோ போல் இருக்கிறீர்கள் அதற்காக அந்த பெண்ணை நாம் தவறாக திட்டுவது தவறு தானே என்று விட்டு கிளம்பி விட்டால் அவரும் சரி என்று விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார் ….

வேணி அவளது கிளாஸ் ரூமுக்கு சென்று கொஸ்டின் பேப்பரை நிலாவிடம் கொடுத்து இதை சொல்ல சொல்லிவிட்டு வந்து அவளது இடத்தில் உட்கார்ந்து கொண்டாள் மகா வரும் வேளையில் வேணி அமைதியாக தான் இருந்தால் ஆனால் எப்பொழுதும் போல் இல்லாமல் இருந்தால் அதை மகா உணர்ந்து விட்டு அமைதியாக இருந்தால்  பாடம் எடுத்துவிட்டு இனிமேல் தினமும் டெஸ்ட் இருக்கும் என்றால்…

அனைவரும்  நீங்களுமா என்று கேட்டார்கள் நீங்களுமா என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டால் எழில் சாரும் தான் மேம் டெஸ்ட் சொல்லி இருக்கிறார் என்றார்கள் அனைவருமே கூட சொல்லக்கூடும் இன்னும் ஒரு மாதங்கள் தான் இருக்கிறது இன்னும் நீங்கள் சின்ன பிள்ளைகள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா..

நீங்கள் தான் பெரியவர்கள் ஆகிவிட்டீர்கள் அல்லவா அதை மறந்து விடாதீர்கள் என்றால் பிறகு வேனி நிலா இருவரும் ஏன் மூன்று நாட்களாக வரவில்லை என்றால் இருவரும் அவர்களது காரணத்தை சொன்னவுடன் இனிமேல் சொல்லிவிட்டு விடுமுறை எடுக்க வேண்டும் உங்கள் வீட்டில் இருந்து வந்து கேள்வி கேட்டால்..

அதற்கு நாங்கள் தானே பதில் சொல்ல வேண்டும் என்றவுடன் நிலா வீட்டிலிருந்து எதற்கு மேம் கேள்வி கேட்க போகிறார்கள் என்றாள் நீ கேட்பது என்னவோ சரிதான் கல்லூரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பெற்றவர்களிடம் நீங்கள் நிறைய பேர் வெளியே சுற்றுகிறார்கள் ஆனால் அவர்கள் கல்லூரிக்கு தான் வந்திருக்கிறார்கள் என்று அவரது பெற்றோர்கள் எண்ணுகிறார்கள் ..

நாளை பின்னாலில் இதனால் ஏதாவது பிரச்சனை என்றால் எங்களிடம் தானே வந்து கேட்பார்கள் என்று மகாவின் கண் வேரங்கோ இருந்தது பேச்சு தான் நிலாவிடம் இருந்தது தனது அக்கா மகா சொல்வது தனக்காக அல்ல இந்த வகுப்பில் உள்ள யாரோ ஏதோ செய்திருக்கிறார்கள் என்று எண்ணி விட்டு ஓகே மேம் என்று உட்கார்ந்தால் …

வகுப்பில் உள்ள அனைவரும் மகாவை பார்த்தார்கள் மகா அனைவரையும் பார்த்து சிரித்துவிட்டு நான் இப்பொழுது சொன்ன உதாரணம் நிலா வேணிக்கு அல்ல இந்த வகுப்பில் உள்ள அனைவருக்கும் அவர்களது கேரக்டர் எப்படி என்று அனைவருக்கும் தெரியும் நான் யாருடைய பர்சனல் லைஃப்லும் தலையிட மாட்டேன் ஆனால் கல்லூரியின் பெயர் கெடாத அளவிற்கும் உங்களின் பெற்றவர்கள் பெயர் கெடாத அளவிற்கு நடந்து கொள்வது நம்முடைய கடமை தான் ….

அதை மட்டும் மறந்து விடாதீர்கள் என்று விட்டு கிளம்பி விட்டால் அன்றைய பொழுதும் அப்படியே முடிந்தது அனைவரும் மாலை வீட்டிற்கு சென்றார்கள் எழில் மகாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வருவான் வேணியும் சென்று ஏதாவது பார்த்துவிட்டு வருவாள் இப்படியே நாட்கள் உருண்டோடியது ஒரு வாரங்களுக்கு மேல் சென்றது எழில் மகா இருவரும் இனி குழந்தையை பெரிதாக பார்க்கவில்லை அன்று மருத்துவமனையில் இருக்கும் போது அந்த மூன்று நாட்கள் பார்த்தது தான் அதன் பிறகு வீட்டிற்கு வந்த பிறகு பார்க்கவில்லை…

அதேபோல் வீட்டில் உள்ளவர்களும் யாரும் இருவரிடமும் பேசவில்லை அவர்களும் எழில் வேணி இருவரை தவர வேற யாரிடமும் பெரிதாக பேசவில்லை இத்தனை நாட்களில் பாக்கெட் பால் வாங்கி தான் இருவரும் மகா மகிழ் இருவரும் யூஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள் பாக்கெட் பால் மகிழுக்கு பிடிக்கவில்லை ஒரு மாதிரியாகவே இருந்தது …

அதேபோல் அதிகமாக டிபன் ஐட்டம் சாப்பிட்டு பழகியவன் மூன்று வேலையும் சாதமோ அல்லது உப்புமா சேமியா என்று கிண்டுவது அவனுக்கு ஒப்பவில்லை சப்பாத்தி என்று போட்டுக் கொடுத்தாலும் மகாவும் அவலால் முடிந்த உணவுகளை செய்து கொடுத்து கொண்டுதான் இருந்தால் இருந்தாலும் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது …

ஒரு நாள் இரவு வேளையில் வீட்டிற்கு வரும் பொழுது இட்லி மாவு வாங்கிக் கொண்டு வந்தான் மகா அவனுக்கு போன் செய்து பார்த்தால் அவன் எடுக்கவே இல்லை அவன் வீட்டிற்கு வருவதற்கு இரவு 9:30 மணி ஆகியது வீட்டில் கதவு அடைத்து இருந்தார்கள் அவன் வரவில்லை என்றவுடன் கதவு தட்டும் சத்தம் கேட்டு சுந்தரி தான் வந்து கதவை திறந்தார் …

தனது மகனை பார்த்து முறைத்து விட்டு அவன் கையில் இருப்பதையும் பார்த்தார் அவன் கையில் வைத்திருப்பது என்ன என்று அவருக்கு தெரியும் அளவிற்கு தான் இருந்தது வெள்ளை கலர் கவரில் இட்லி மாவு என்பதையும் உணர்ந்தார் பிறகு அவன் மேலே  சென்று விட்டான் மகா தான்  மாமா என்ன இது என்று கேட்டால்…

இட்லி மாவு என்றான் என்ன இது எதற்கு என்றால்  இது என்ன கேள்வி என்றான் இட்லி  மாவு எதுக்கு யூஸ் பண்ணுவாங்க என்றான் மாமா இந்த நேரத்தில் எதுக்கு  என்றால் சேமியா உப்புமா இந்த மாதிரி சாப்பிட முடியவில்லை அதனால் தான் என்றான் மகா அவனை முறைத்து பார்த்துவிட்டு மாவை வாங்கி கொண்டு சென்று அவனுக்கு அந்த நேரத்தில் இரண்டு தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து சட்னி அறைத்து கொடுத்தாள் ….

அவன் பசியில் சாப்பிட்டு விட்டான் மகா சாப்பிட்டாளா என்று கூட அவனுக்கு கேட்க தோணவில்லை என்று தான் சொல்ல வேண்டும் சாப்பிட்டு முடித்த பிறகுதான் நீ சாப்பிட்டு விட்டாயா என்றான் அவள் அவனை முறைத்துக் கொண்டே சாப்பிட்டேன் என்றால் உண்மையாகவே சாப்பிட்டாயா? நான் பசியில் ஏதும் கேட்காமல் விட்டுவிட்டேன் என்றான் …

சாப்பிட்டேன் என்று சொல்லிவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு வந்து படுத்துக் கொண்டால் அவள் இரவுக்கு சப்பாத்தி குருமா செய்து இருந்திருக்கிறாள் அதை அனைத்தையும் அப்படியே ஹாட் பாக்சில் வைத்து மூடி வைத்துவிட்டு வந்து படுத்துக் கொண்டால் மகிழ் சமையலறைக்குச் சென்று பார்த்தான் …

அனைத்தும் அப்படியே இருப்பதை பார்த்துவிட்டு  அறைக்கு வந்தான் மகா என்று அவளது தோளில் கை வைத்தான் எழுந்து உட்காருந்தால் என்ன என்று கேட்டாள் சாப்பிடவில்லை போல என்றான் நீங்க சாப்டீங்களா வந்து படுங்கள் என்று விட்டுப் படுத்துக் கொண்டால் மகிழுக்கு ஒரு மாதிரி இருந்தது மயிலு என்றான்…

மகா அழ செய்தாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை மகா மகிழ் இருவருக்கும் என்ன இருக்கிறது என்பதை நம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 65”

  1. CRVS2797

    ஆக மொத்தம், இந்த கதையில் எல்லாருமே சின்னப் பசங்களாத்தான் பிகேவ் பண்ணுறாங்களோன்னு தோணுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *