Skip to content
Home » மகாலட்சுமி 66

மகாலட்சுமி 66

மயிலு நீ இன்னும் சாப்பிடல போல என்றான் நீங்க சாப்டீங்களா உங்க வயிறு நம்பிடுச்சா வந்து படுங்க என்று உடன் மகிழுக்கு ஒரு மாதிரியாக இருந்தது மயிலு என்று அவளை எழுந்து உட்கார வைத்தான் வா டி வந்து சாப்பிடு என்றான்…

எனக்கு பசி இல்லை என்றால்  நான் சாப்பிடும் போதே சொல்லி இருக்கலாம் அல்லவா சாப்பிடவில்லை என்றான் ஏன் இருப்பது நீங்களும் நானும் தான் நான் சாப்பிட்டேனா என்று கூட உங்களுக்கு கேட்க முடியவில்லை உங்களுக்கு மட்டும் தான் பசி இருக்கும் அப்போ எனக்கு எல்லாம் பசி இருக்காது அப்படி தானே என்றாள்…

ஏன் டி இப்படிலாம் பேசற வேற எப்படி பேசணும்னு நினைக்கிறீங்க காலைல போனா நைட்டு வரீங்க என்னோட நினைப்பு கூட கிடையாது என்றால் மயிலு என்றான் ஒன்றும் இல்லை அமைதியாக வந்து படுங்க என்று விட்டு படுத்தால் அவனுக்கு மகா இவ்வளவு பேசுவாள் என்றெல்லாம் அவன் என்ன வில்லை …

இப்பொழுது கூட நான் அவளை சாப்பிட கூப்பிடவில்லை என்று தான் கோபப்படுகிறார்கள் என்று எண்ணினான் ஆனால் தான் அவளுடன் நேரம் செலவழிப்பதில்லை என்பதை அதன் பிறகு தான் உணர்ந்தான் எப்படியும் எழில் இருப்பான் பார்த்துக் கொள்வான் என்று எண்ணி நான் எழில் இருந்தாலும் தான் அவள் அருகில் தான் இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான்…

மகிழ் இரவு முழுவதும் எதையதோயோ யோசித்துக்கொண்டு காலையில் தான் தூங்கினான் மகிழ் தான் முதலில் கீழே இறங்கி வந்தான் அவன் இறங்கி வரும் வேளையில் விட்டுள்ள அனைவரும் வரவேற்பு அறையில் தான் இருந்தார்கள் அப்பொழுது சுந்தரி அதான் மொட்டை மாடிக்கு சென்று ஆகிவிட்டது இனிமேல் அவர்களாக தான் கதவு திறந்து கொள்ள வேண்டும் …

இவர்கள் வரும் நேரத்திற்காக எல்லாம் ஒருவர் காத்துக் கொண்டிருந்து கதவை திறந்து விடுவார்களா ஏன் மேலிருந்து கீழே வந்து அம்முனியால் கதவை கூட  திறந்து விட முடியாதா இவங்களுக்கு ஒரு ஆள் கதவு திறந்து விட வேண்டுமா என்று கேட்டுவிட்டு சமையல் அறைக்குள் புகுந்து விட்டார் சுந்தரி அவ்வாறு பேசுவார் என்று வீட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கவில்லை …

காவேரிக்கு கூட ஒரு மாதிரியாக இருந்தது சுந்தரி அவ்வாறு கேட்டவுடன் காவேரி அமைதியாக அவரது அறைக்குச் சென்று விட்டார் மகிழுக்கு கண்கள் கலங்கிவிட்டது இத்தனை நாட்களாக எத்தனை மணி ஆனாலும் தனக்கு கதவை திறந்து விட்ட அம்மா இப்போது இரவு ஒன்பது மணிக்கு வந்ததுக்கு கூட இவ்வாறு சொல்கிறார்கள் என்று எண்ணி வருந்தினான்…

அவன் பின்னாடியே வந்து மகாவும் அதை கேட்டால் மகிழ் கண்கள் கலங்கியதையும் பார்த்தால் அவன் கண்கள் கலங்கியதை வீட்டில் உள்ள யாருக்கும் காண்பிக்காதவாறு கீழே இறங்கி சென்று விட்டான் மகா பின்னாடியே வந்தால் மாமா என்று அழைத்துக் கொண்டே அவன் தனது கண்ணீரை உள்ள இழுத்துக்கொண்டு என்ன மயிலு  என்று கேட்டான்….

என்னுடன் வா என்று அழைத்துக் கொண்டு பூந்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு சென்றவுடன் என்னடி என்று வேகமாக கேட்டான் மாமா ப்ளீஸ் நீ இனிமேல் எனக்கு போன் செய்ய நான் வந்து கதவை திறந்து விடுகிறேன் என்று உடன் அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்து கையை கீழே இறக்கி விட்டான் என்னடி நினைச்சுட்டு இருக்க ….

அம்மா என்ன என்றால் இப்படி சொல்றாங்க நீ என்ன இப்படி பேசுற என்றான் அப்பொழுது நான் இந்த வீட்டில் இருப்பதே இங்க இருப்பவர்களுக்கு தொந்தரவா இருக்க என்றான் மாமா ப்ளீஸ் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பேசாதே என்றான்…

அவர்கள் பேசினது எதுவும் தப்பில்லை இப்ப நான் பேசுவது தப்பா மகா என்று அவளது முகத்தை  பார்த்துக் கொண்டே கேட்டான் மகா அமைதியாக இருந்தால் என்னடி நான் மாட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீ மாட்டும் மௌனமாக இருக்கிறாய் என்று கேட்டான் இல்லை என்று விட்டு அமைதியாக சென்றுவிட்டால்..

மகா மகா என்று இரண்டு முறை அழைத்தான் அவள் திரும்பியும் பார்க்காமல் அமைதியாக சென்றுவிட்டாள் மகிழுக்கு நாம் இப்பொழுது பேசிய அனைத்தும் தவறோ என்று எண்ணினான் அவனுக்கு வேலை இருந்த காரணத்தினால் போனும் வந்து கொண்டே இருப்பதால் அமைதியாக இதை ஓரம் தள்ளி வைத்துவிட்டு சென்றுவிட்டான்…

இப்படியே அவர்களுக்குள் இரண்டு நாட்கள் சென்றது பெரிதாக முகம் கொடுத்து கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும் கல்லூரி முடிந்து வரும் பொழுது மாவு வாங்கிக் கொண்டு வருவாள் அதை இரவு காலை இரு வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள் அவன் வந்தவுடன் உணவு பரிமாறுவாள்..

மதியத்திற்கு சாப்பாடு சமைத்து கல்லூரிக்கு போகும் பொழுது பஞ்சாயத்து ஆபீசில் சென்று வைத்துவிட்டு போய்விடுவாள் இப்படி இரண்டு நாட்களுக்கு மேல் சென்றது எழில் இருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை என்பதையும் உணர்ந்தான்…

மூன்றாவது நாள் காலையில்  கல்லூரி செல்வதற்கு முன்பு எழில் பஞ்சாயத்து ஆபீஸ்க்கு சென்றான்  தனது அண்ணன் பஞ்சாயத்து ஆபீஸில் தான் இருக்கிறானா என்பதையும் முத்துவிடம் போன் செய்து உறுதி செய்து கொண்டு தான் அங்கு சென்றான் என்னடா இவ்வளவு தூரம் கல்லூரிக்கு செல்லவில்லையா என்றான்  செல்ல வேண்டும் தான் அதை விட முக்கியமான வேலை என்றான்…

அதைவிட முக்கியமான வேலை இங்கு என்னடா என்றான் மகிழ்  பர்சனல் என்று  எழில் முத்துவை ஒரு நிமிடம் பார்த்தான் நான் வெளியே செல்கிறேன் அண்ணா என்றான் நீ இருடா உனக்கு தெரியாமல் என்ன இருக்கிறது நீயும் வீட்டில் ஒரு ஆள் தான் என்று விட்டு என்னடா என்று தனது தம்பியிடம் கேட்டான்….

எனக்கு ஒரு விஷயம் சொல் உன்னை அவள் விரும்பினாலா இல்லை நீ அவளை விரும்பினாயா என்று கேட்டான் மகிழுக்கு இப்பொழுது இந்த கேள்வி தேவையா என்பது போல் இருந்தது எதற்காக என்றான் புரியாமல் எழில் மகிழையே பார்த்துக்கொண்டு இருந்தான் அமைதியாக பிறகு மகாவும் நானும் பேசிக் கொள்ளவில்லை என்று தெரிந்து வந்து கேட்கிறான் என்று எண்ணிக் விட்டு இப்பொழுது எதுக்குடா இந்த கேள்வி என்று கேட்டான் …

இல்லை தெரிந்து கொள்ளத்தான் என்றான் இது எங்களுக்கு திருமணம் ஆகி இத்தனை மாதங்களுக்கு பிறகா என்றான் திருமணமாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது என்று கூட உனக்கு தெரிந்திருக்கிறதா என்று கேட்டான் இப்பொழுது அதற்கு என்னடா என்று கேட்டான் நான் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன் உனக்கும் அவளுக்கும் இப்பொழுது என்ன பிரச்சனை என்று கேட்டான்…

கணவன் மனைவிக்குள் ஆயிரம் இருக்கும் அதற்குள் உனக்கு என்ன சம்பந்தம் நீ எதற்கு குறுக்கே வருகிறாய் என்று கேட்டான் எழில் அமைதியாக தனது அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான் முத்து தான் அண்ணா என்று கத்தினான் எழில் முத்துவை பார்த்து சிரித்தான் …

மகிழ் முத்துவை பார்த்து முறைத்துவிட்டு என்னடா என்று கேட்டான் அண்ணா கணவன் மனைவிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் தான் அதில் நாங்கள் யாரும் தலையிட மாட்டோம் தான் ஆனால் இப்பொழுது எழில் பேசுவதற்கு நீங்கள் எழில் இடம் இப்படி தான் பேசுவிறீர்களா என்று கேட்டான் அவன் எனது தம்பியாக வந்து கேட்டாலும் சரி இல்லை அவளுடைய நண்பனாக வந்து கேட்டாலும் சரி எங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது தவறு இல்லையா என்று கேட்டான்


எழில் அப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தான் இப்பொழுது நடப்பது உங்களுக்கு என்று தனிப்பட்ட விஷயம் அப்படித்தானே என்றான் பின்ன இல்லையா என்றான் மகிழ்  சரிடா அண்ணா இனிமேல் எதுவாக இருந்தாலும் என்னிடம் வந்து நீயோ அவளோ கேட்காதீர்கள் சரியா என்று சொன்னான்….

மகிழுக்கு ஒரு மாதிரியாக இருந்தது உங்களுக்கென்று தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் நான் பேசுவேன் என்று தனது தம்பி சொல்வான் என்று மகிழ் எண்ணினான் ஆனால் அவன் அமைதியாக இருந்தவுடன் அவனுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது …

மகிழ் நிமிர்ந்து எழிலை பார்த்தான் அவனது கண்கள் கலங்கி இருந்தது தனது தம்பியை அப்படி ஒரு நிலைமையில் பார்த்தவுடன் ஓடி சென்று கட்டி பிடித்தான் எழில்  வேகமாக தனது அண்ணனை தள்ளி விட்டான் வாயை மூடுடா மூன்று நாட்களாக நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இருவர் முகமும் சரியில்லை அதற்கு முன்பாகவே அவள் முகம் ஒரு மாதிரியாக தான் இருந்தது …

நான் மேலே அவளிடம் பேச சென்றால் கூட எனக்கு வேலை இருக்கிறது என்று ஏதோ காரணங்களை சொல்லி என்னை கீழே அனுப்பி விடுகிறாள் நான் கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்கு மேலாக பார்க்கிறேன் அவளது முகமும் சரியில்லை சரி அதை பற்றி உன்னிடம் பேசினால் எப்படியும் நீ அதை சரி செய்து விடுவாய் என்று வந்தேன்…

நீ இப்பொழுது சொன்னது போல் உங்களுக்கு என்று தனிப்பட்ட விஷயமாக கூட இருக்கலாம் என்று எண்ணி தான் இத்தனை நாட்களாக அமைதியாக விலகி இருந்தேன் ஆனால் இப்பொழுது நீ அவளிடம் பேசுவதாக கூட  இல்லை வீட்டிற்கும் நேரம் கழித்து வருகிறாய் அம்மா இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில்  அந்த மாதிரி பேசி இருக்கிறார்கள் நான் அந்த வேலையில் வீட்டில் இல்லை…


நிலா சொல்லித்தான் எனக்கே தெரிகிறது இப்பொழுது என்றால் நீ இப்படி பேசுகிறாய் என்னதான் இருவரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அத்தையிடம் சொன்னது போல் இருவரும் மொத்தமாக பிரிந்து விடலாம் என்று நினைக்கிரீர்களா என்று கூறி அழுதான் இப்படி ஒரு கோணத்தில் சுத்தமாக மகிழ் எண்ணவில்லை..

இப்பொழுது இதை எப்படி சரி செய்வது என்று கூட தெரியவில்லை அப்படியே அவனுக்கு அருகில் மகிழும் அமர்ந்து விட்டான் முத்து தான் இருவரையும் தேற்றி  என்னதான் ஆயிற்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்றான் மகிழ் எழிலை பார்த்துவிட்டு இங்கு வாடா என்று கூப்பிட்டான் அவனும் வேகமாக ஓடி சென்று கோழி குஞ்சு போல் தனது அண்ணனின் அருகில் உட்கார்ந்து அவனது தோளில்  சாய்ந்து கொண்டான்…

எழிலை இப்படி மகிழ் பார்த்ததே இல்லை அவன் சிறு வயதில் கூட தன்னிடம் இந்த அளவிற்கு வந்து அட்டாச் ஆக மாட்டான் என்று மகிழுக்கு தெரியும் அவனுக்கு எதுவாக இருந்தாலும் தனது அம்மா சுந்தரியும் மகாவும் தான் மகிழுக்கு வேண்டுமானால் தனது இரு அத்தைகளும் இருக்கலாம் ….

அவன் பாண்டியம்மா பாட்டியை ஒரு சில நேரங்களில் பாண்டியம்மாள் என்றும்  சுந்தரியை சுந்தரி என்றும் பெயர் சொல்லி தான் அழைப்பான்  ஆனால் தனது தம்பி எத்தனை வருடங்களுக்குப் பிறகு தன்னிடம் வந்து எப்படி இருப்பது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது மகிழ் எழிலையே பார்த்துக் கொண்டே இருந்தான்…

எழில் தனது அண்ணன் என்ன பிரச்சனை என்று சொல்வான் என்று எண்ணி தனது அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான் மகிழ் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவுடன் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு உண்மையாகவே புரியவில்லை என்றான் மகிழ் ஒரே வார்த்தையாக தனிமை என்றான்..

மகிழ்  தனிமை என்று சொன்னவுடன் எழில் வேகமாக எழுந்து நின்றான் முத்து என்னை தனிமையா என்று அதிர்ச்சியாக கேட்டான் தனிமை என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 66”

  1. CRVS2797

    அதாவது இத்தனை நாள் குடும்பத்தோட இருந்துட்டு,
    இன்னைக்கு எல்லாரும் அவங்களை ஒதுக்கி வைச்ச மாதிரி மொட்டை மாடியிலே போய் வாழறது தனிமை படுத்துதோ என்னவோ..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *