Skip to content
Home » மகாலட்சுமி 69

மகாலட்சுமி 69

நிலா மேலே வந்தவுடன் நால்வரும் நிலாவையே பார்த்தார்கள் இப்பொழுது இவள் என்ன பிரச்சனை செய்ய போகிறாளோ என்று வாய் விட்டே எழில் சொன்னான் அவன் அவ்வாறு சொன்னவுடன் மற்ற மூவரும் சிரித்தார்கள் …

நிலா எழிலை பார்த்து முறைத்துவிட்டு மற்ற மூவரையும் பார்த்து முறைத்தாள் நிலா தனது மகிழ் மாமாவின் சட்டையை பிடித்துக்கொண்டு கத்தினால் என்னடா நினைத்து கொண்டிருக்கிறீர்கள் புருஷனும் பொண்டாட்டிம் நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் உங்கள் இஷ்த்திற்கு நடந்து கொண்டிருக்கிறீர்கள் …

இனி அண்ணி அவ்வளவு  அவ்வளவு கத்தி கொண்டு இருக்கிறார் நீங்கள் இருவரும் எனக்கென்ன என்று வந்து கொண்டிருக்கிறீர்கள் இனி அண்ணிக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது என்று கூட எண்ணமில்லை அவர்களை அவ்வளவு காத்த விட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் என்று கத்தினாள்…

பிறகு தனது மகிழ் மாமாவை பார்த்து அழுதால் அவன் வேறு எதுவும் பேசாமல் அவளை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டு  கொண்டு அழுதான் நிலா குட்டி என்று கூப்பிட்டான் நீ பேசாத மாமா எல்லாம் இவலால் தான் இவள் சொல்லிக் கொடுப்பதை தானே நீயும் பேசிக் கொண்டிருக்கிறாய் அவள் உன்னை மேலே வா என்று அழைத்து வந்தவுடன் நீயும் வந்துவிட்டாய் அல்லவா ..

எல்லாம் இவளால் தான் என்று தனது அக்காவை கை காண்பித்தாள் வேணி ஏதோ பேசுவதற்கு வாய் எடுத்தால் அப்போது எழில் அமைதியாக தான் இருந்தான் பேசாதே என்பது போல் எழில் கைப்பிடித்தான் இப்ப நாங்க என்னடா பண்ணும் என்று கேட்டான் இன்னும் என்ன மாமா பண்ணணும் இப்படி மேலே வந்து உட்கார்ந்து இருக்கீங்க …

அப்போது மகிழ் தான் சரி வேற என்ன பண்ணனும் மேலே வந்து உட்காராம என்றான் நிலா தனது அக்கா மகாவை பார்த்து முறைத்தாள் நீ அமைதியாக இருந்து கொண்டு  அவள் சொல்றது தான் கேட்ப இல்லை என்றால் ஆமாம் டி நான் சொல்வதை தான் கேட்பார் நான் அவர் பொண்ணாட்டி என்றால்  நிலா வேகமாக தனது அக்காவை பார்த்து முறைத்துவிட்டு எனக்கு பசிக்குது நான் இங்கு தான்  சாப்பிடுவேன் எனக்கு பிரியாணி வேணும் என்றால்…

பிரியாணி எங்கிருந்து வரும் காக்கா வா தூக்கி கொண்டு வந்து தரும் என்றால் மகா கொஞ்சம் நேரம் அமைதியாக இரு அவளுடன் சரிக்கு சமமாக நிற்காதே என்றான் சரி டா நிலா குட்டி நான் வெஜ் பிரியாணி வேணும் என்றால் செய்து தராட்டா இப்போ எப்படி டா நான் வேஜ் வரும் என்றான் நீ கவலை படாதே மாமா…

நான் முகில் அண்ணாக்கு போன் பண்ணி விட்டேன் முகில் அண்ணா சிக்கன் வாங்கிட்டு வரும் நீ பிரியாணி செஞ்சு கொடு மாமா நீ தான் எனக்கு செஞ்சு தரணும் என்றாள் மகிழ் திரு திறுவென  முழித்தான் எழிலும்  மகாவும் சிரித்தார்கள் நான்  வந்துட்டேன் என்று கத்தி கொண்டே முகில்  மேலே வந்தான் …

அவன் கையில் இரண்டு கவர்கள் இருந்தது ஒன்றை நிலா கையில் கொடுத்தான் அவள் அதை மகிழ் கையில் கொடுத்தால் சரி எனக்காக வந்து ஹெல்ப் பண்ணுங்க என்று கேட்டான் அப்போது மகா எழில் இருவரும் சிரித்து கொண்டே உன்னோட நிலா குட்டி தானே கேட்ட அப்போ நீயாகவே தான்  மாமா செய்யணும் நாங்க ஹெல்ப் பண்ண மாட்டோம் என்றாள்…

ப்ளீஸ் வாடி என்று மகாவை அழைத்தான் சுற்றி தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இருப்பதை உணர்ந்து விட்டு மகா வா என்றான்  நீயே செய் மாம் எனக்கு தெரியாது என்று விட்டு மகா அமைதியாக உட்கார்ந்து விட்டால் சரி என்று விட்டு மகிழே வெங்காயம் தக்காளி எல்லாம் அரிந்து அனைத்தையும் செய்து கொண்டு இருந்தான் ..

அவன் பிரியாணி செய்யும் வாசம் கீழ் வரை வந்தது மகா எழில் முகில் வேணி நிலா ஐவரும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள் இனி உதிரணை திரும்பி பார்த்தாள் அவன் திரும்பி உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு அவனது அருகில் சென்று அமர்ந்தால் …

அவன் இவளை திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தான் அவனது தோல்  மேல் கை வைத்து டேய் மாமா என்றால் அவன் அவலது கையை தோளில் இருந்து தட்டி விட்டு திரும்பி உட்கார்ந்து கொண்டான் என்ன டி வேணும் உனக்கு இன்று கத்தினான் மாமா உன் பையன் இருக்கான் நீ மட்டும் கத்துற என்றால்…

ஓ இப்ப நான் கத்தினது  தான் தெரிஞ்சுதா அதுக்கு முன்னாடி நீ இவ்வளவு நேரம் கத்தியது தெரியலையா என்றான் இனி சிரித்துக் கொண்டே அப்போ உன் பையன் இங்க இல்லையே என்றால் என்று சிரித்துக் கொண்டே கேட்டால் உதிரன் இப்படி சிரிச்சு சிரிச்சே ஆளு மயக்கிடு என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான் …

எது நான் உன்ன சிரிச்சு மயக்கினேனா என்றால் பின்ன இல்லையா என்று கேட்டான் ஹோ என்றாள் என்னடி ஓ னு சொல்ற 17 வயசுல இருந்தே இப்படி  சிரிச்சு தானே மயகின என்றான்  என்ன என்றால் ஹோ சார் அப்போ தான் என்னை காதலிக்க ஆரம்பிச்சீங்களா என்றால்….

அப்படிலாம் இல்ல என்று சிரித்துக் கொண்டே உதிரன் அவளை தனது தோளில் சாய்த்து கொண்டு இனியின் கன்னத்தில் கடித்தான் டேய் மாமா என்னடா பண்ற வலிக்குது தம்பி வேற இருக்கான் என்று முனகினாள் இதையே தாண்டி ஒரு மாசமா சொல்ற மனுஷனை பக்கத்துல விட மாட்ற ஒரு மாசமா சுத்தமா ஒரு முத்தத்திற்கு கூட பட்டினி போட்டு வச்சிருக்க என்றாள் இனி அவனைப் பார்த்து முறைத்தால் பிறகு சிரித்து விட்டால் …

வா என்று  கை காண்பித்தல் குழந்தையை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு தனது காதல் கணவனை லேசாக அனைத்து அவனது தாடையில் முத்தம் வைத்தால் அவ்வளவுதானா என்றான் இப்போ அவ்வளவுதான் என்றால் அப்போ மீதி நைட்டு தருவியா  என்றான் மாமா இப்பதான் தம்பி பொறந்து இருக்கான் என்ன விளையாட்டா என்றாள்…

சும்மா டி எனக்கு தெரியாதா எனக்கு உன்னோட அருகாமை கிடைத்தாலே போதும் டி என் இனி குட்டி ஐ லவ் யூ டி என்று அவளது நெற்றியில் முத்தம் இட்டான். மாமா பிரியாணி வாசனை வருதுடா என்றாள் உங்க சின்ன அத்தை இட்லியும் சாம்பார் தான் வச்சிருக்காங்க பிரியாணி செய்யல என்றான் அது எனக்கும் தெரியும் உங்க சித்தி பிரியாணி செய்யல என்று என்றாள்…

இந்த வாசனை மேல இருந்து வருது அதுவும் என் அண்ணன் கையாள செய்றான்   என் அண்ணனோட கை மனம் எனக்கு தெரியாது என்றால் அதுக்கு என்னடி பண்ண முடியும் என்றான் நீ வாடா மாமா என்று அவனது கையை பிடித்து அழைத்துக் கொண்டே வெளியே வந்தால் சுந்தரி உணவு மேசையில் உட்கார்ந்து தக்காளி அறிந்து கொண்டிருந்தார்…

அவரிடம் சென்று இந்தா உன் பேரனை வைத்துக் கொள் என்று சொல்லிவிட்டு உதிரனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே மேலே அழைத்துச் சென்றால் சுந்தரி அமைதியாக போகும் தனது மகளையும் மருமகனையும் பார்த்துக் கொண்டே இருந்தார் இனி மேலே சென்று உடன் அனைவரும் இனி உதிரனை பார்த்தார்கள் என்னை விட்டு எல்லாரும் பிரியாணி சாப்பிடலாம் என்று முடிவு பண்ணி விட்டீர்களா கேட்டுக்கொண்டே எழில் அருகில் வந்து உட்கார்ந்தால் …

தோட உனக்கும் சேர்த்து தான் அண்ணி பிரியாணி ரெடியாயிட்டு இருக்கு உன் புருஷன் உன் கிட்ட சொல்லல என்றாள் இதை நான் நம்பனுமா என்றாள் நிலா உதிரனை பார்த்தால் உதிரன் இல்ல நிலா நான்  அவளிடம் சொல்லவில்லை அவளே மோப்பம் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வருகிறாள் என்றவுடன் அனைவரும் இனியை பார்த்து சிரித்தார்கள் …

அப்பொழுது நிலா குட்டி இதுக்கு தயிர் பச்சடி வேணும்டா என்றான் மகிழ் இனியை பார்த்து சிரிக்க மட்டும் செய்தான் அவள் இவனைப் பார்த்து பழுப்பு காண்பித்து விட்டு திரும்பி கொண்டாள் தயிரும் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டே தயிரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் முகில் இதுக்கு வெங்காயம் மட்டும் அரிந்து கொடு என்று மகாவிடம் எடுத்துக் கொண்டு வைத்தான் ..

அதெல்லாம் நீயே தான் மாமா செய்யணும் என்றாள் மகிழ் மகாவை பார்த்து ப்ளீஸ் டி என்று விட்டு சென்றான் இங்கே கொடு என்று வாங்கி எழில் அரிந்து  கொண்டிருந்தான் அது எப்படி மாமா எந்த இடத்திலும் மகாவை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்ட இல்ல என்று நிலா தனது எழில் மாமாவிடம் கேட்டால்…

எந்த இடத்திலும் விட்டு தர மாட்டேன் என்றான் அப்பொழுது உதிரன் தான் உன் அண்ணனிடம் கூட விட்டு தர மாட்டாயா என்று கேட்டான் இவளுக்கு புருஷனா இருந்தாலும் அவனிடம் கூட நான் இவளை விட்டு தர மாட்டேன் என்றான் அப்போது அனைவரும் மகாவை பார்த்தார்கள் நிலா நீ மகா என்றாள்…

எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை வராது அப்படி வந்தாலும் நான் யாரிடமும் என்  வேந்தனை விட்டு தர மாட்டேன் என்றால் நிலா மகிழ் மாமா விடம் என்றால் நான் அவனிடம் கூட இவனை விட்டுத் தர மாட்டேன் என்றால் எழில் தோளில் சாய்ந்து கொண்டே சொன்னால் மகிழ்  மகா என்று வேகமாக கத்தினான் ..

அப்பொழுதுதான் மகா ஒன்றை உணர்ந்தால் தான் இத்தனை பேர் முன்பும் தனது மகிழ் மாமாவை அவன் என்று சொல்லி விட்டோம் என்று பிறகு வரேன் மாமா என்று விட்டு வேகமாக அந்த வெங்காயத்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் மாமா ப்ளீஸ் சாரி சாரி நான் வேணும்னு சொல்ல லா ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன் என்றாள் …

மகிழ் ஏதோ பேச வந்தான் அதற்குள் மகா மகிழ் வாயில் கை வைத்து மாமா ப்ளீஸ் ஏதாவது சொல்லிடாத என்றால் மகிழ் தான் வாய் மேல் இருக்கும்  மகாவின் கையையும் மகாவின் கண்ணையும் பார்த்தான் அவளது கண்ணை பார்த்துக் கொண்டே உள்ளது கையில் முத்தம் பதித்தான் மகாவிற்கு ஏதோ உள்ளுக்குள் செய்தது கூச்சமாகவும் இருந்தது …

அகா என்றால் என்னடி என்று அவளை பார்த்து  கண்ணடித்தான்  என்ன பண்ற இப்படி பாக்காத பேசாத ஏதோ ஒரு மாதிரி இருக்கு எனக்கு என்றாள் என்ன மாதிரி இருக்கு என்று கேட்டான் தன் மகிழ் மாமா  கொடுத்த அதே முத்தத்தை தன் கை வழியாகவே அவனுக்கு கொடுத்து விட்டு வெளியே சிரித்துக் கொண்டே சென்று விட்டால் மகிழ்  செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிறகு அவள் செய்த செயலை எண்ணி சிரித்தான்….

அனைவரும் போகும்போது இருந்த மகாவின் மூஞ்சிக்கும் வரும்போது இருக்கும் மஹாவின் முகத்தையும் பார்த்தார்கள் அதானால் அமைதியாக இருந்தார்கள் ஆனால் நிலா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் என்ன மகா உள்ள ஒரே ரொமான்ஸா என்றால் அப்போது எழில் தான் வயசுக்கு தகுந்த பேச்சு பேசு நிலா என்றான் ….

இப்பதான் எனக்கு இரண்டு வயசுன்னு நினைப்பா மாமா என்றாள் உனக்கு வயசு ஆகி இருக்கலாம் ஆனால் வயசு புள்ள மாறி எப்படி நடந்துகணுமோ அப்படி நடந்துக்கோ என்றான் நானும் அதையேதான்  சொல்றேன் இங்க ஒரு வயசு புள்ள இருக்குன்னு நினைச்சி இருக்கணும் இல்லையா என்று சொல்லிவிட்டு அமைதி ஆகி விட்டாள்….

இனிக்கு பசித்தது என்பதால் முகில் இரண்டு கவரியில் வாங்கிக் கொண்டு வந்திருந்ததில் ஒரு கவர் கறி இன்னொரு கவர் பழங்கள் அந்த பழத்தை எடுத்து அரிந்தால் அப்பொழுது வேணி தான் இனி  அக்கா அதை வையுங்கள் நான் கீழே சென்று எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றால் அப்போது முகில் தான் இல்ல இனி நீ எடுத்து சாப்பிடு  அது உனக்கு வாங்கிக் கொண்டு வந்ததுதான்…

நான் மேலே வந்த அவசரத்தில் அதையும் தூக்கி கொண்டு வந்து விட்டேன் என்றவுடன் பழத்தை அரிந்தால் அவர் அரிந்து கொண்டிருப்பதையே மகா பார்த்தல் மகா பார்த்தவுடன் இனி அதை மகா கையை பிடிங்கி பாதிப்பழத்தை கட் பண்ணி வைத்தால் எனக்கு என்று எழில் நிலா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வந்து அதை கடித்தார்கள் …

வேணி அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்ததை உதிரன் முகில் இருவரும் பார்த்தார்கள் ஆனால் அமைதியாக இருந்தார்கள் மகா சிரித்துக்கொண்டே தன்னிடம் இருக்கும் பழத்தில் கொஞ்சம் வேணிக்கு கொடுத்தால் நீயும் இந்த வீட்டில் ஒருத்தி தான்  எதற்கெடுத்தாலும் இப்படி அடிக்கடி ஜர்க் ஆகி நிர்க்காதே என்றாள்..

இல்ல அண்ணி என்றால் அப்போது இனி தான் சிரித்துக் கொண்டு இப்படி அனைவரும் ஒருவர் சாப்பிடுவதை புடுங்கி சாப்பிடுவது போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவது இவை அனைத்தும் இந்த வீட்டில் நடப்பது தான் ஒரு சின்ன சின்ன விஷயத்திற்கும் இப்படி பார்த்துக் கொண்டே இருக்காதே என்றால் …

வேணி சரி என்று மண்டையை ஆட்டினால்  அப்பொழுது மகிழ் அனைத்தும் ரெடி செய்துவிட்டு வந்து அனைவரும் சாப்பிடலாம் வாருங்கள் என்று அனைத்தும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தான் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள் இனியும்  மகா மகிழ் இருவரிடமும் பேசவில்லை அவர்களும் இனியிடம் பேசவில்லை அனைவரும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்…

அப்போது மகா தான் நிலா என்றாள் அவள் என்ன என்பது போல் எழுந்து பார்த்தால் நிலா மகிழ் மடியிலும் இனி எழில் மடியிலும் படுத்திருந்தார்கள் சாப்பிட்டுவிட்டு அனைவரும் மகாவை பார்த்தார்கள் மகிழை பார்த்து விட்டு  கீழே போயிட்டு படுங்க தம்பி வர அழுவான் என்று இனியைப் பார்த்துக் கொண்டே சொன்னால் …

அப்புறம் என்று விட்டு அமைதியாக இருந்தால் இனி நிலா இருவரும் வேகமாக எழுந்து என்ன இனிமேல் மேல வரக்கூடாது அவ்வளவு தானே என்று சொல்லிவிட்டு மகாவை இருவரும் ஒரே போல் முறைத்து பார்த்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்கள் அவர்கள் இருவரும் சென்றவுடன் எழில் சிரிக்க ஆரம்பித்தான் …

மகா எழில் முதுகில் இரண்டு போட்டால் அவங்க ரெண்டு பேரும் அப்படி கத்திட்டு போறாங்க நீ சிரிக்கிற என்றாள்  இதுவரைக்கும் அமைதியா இருந்தவர்களும் கத்திட்டு போறாங்க சந்தோஷப்படு மகா என்று விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான் அனைவரும் கீழே இறங்கும்போது மணி ஒன்பது இருக்கும் காவேரி அங்குதான் உட்கார்ந்திருந்தார்…

கோதை தான் இவ்வளவு நேரம் மேலே என்ன ஆட்டம் நேரமாகவில்லையா வந்து சாப்பிடுங்கள்   என்று கத்தினார் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் திரு திருவென முழித்தார்கள் இப்பொழுது கோதையிடும் தாங்கள் சாப்பிட்டுவிட்டோம் என்று சொன்னால் ஏதாவது சொல்வார்களா என்று எண்ணினார்கள் காவேரி அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார்கள் ….

மேலே சென்று விட்டு வந்ததால் காவேரி ஏதாவது சொல்வாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 69”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *