Skip to content
Home » மகாலட்சுமி 70

மகாலட்சுமி 70

கோதை டேய் எப்பொழுது மேலே சென்றீர்கள் இவ்வளவு நேரமா மேலே ஆட்டம் போட்டு வருவதற்கு சீக்கிரம் சாப்பிட வாருங்கள் என்று கத்தியவுடன் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் கோதையையே பார்த்தார்கள் காவேரி அங்கு தான் உட்கார்ந்திருந்தார் ..

அப்பொழுது எழில் தான் வேகமாக இப்போ என்ன சின்னத்த உங்களுக்கு பிரச்சனை நீங்க செஞ்ச இட்லியும் சாம்பரும் வீணா போயிடும் என்ற கவலையா என்றவுடன் கோதை எழிலை பார்த்து முறைத்தார் நாங்க எல்லாரும் மேலே சிக்கன் பிரியாணி போட்டாங்க சாப்பிட்டோம் அதனால இந்த இட்லியை நாளைக்கு உப்புமா செஞ்சுருங்க சாப்பிட்டுகிறோம் என்று விட்டு அவனது அறைக்கு சென்றான்…

டேய் நான் எல்லாம் செய்ய மாட்டேன் டா என்ன விளையாடுறியா என்றார் நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் நீங்க செஞ்ச இட்லியை தூக்கி பிரிட்ஜுக்குள்ள மட்டும் வச்சிட்டு போய் படுங்க நான் காலையில எழுந்திருச்சு உப்புமா கிண்டிக்கிறேன் என்று தனது சின்னத்தைக்கு பழுப்பு காண்பித்தான்..

யாரும் எங்களுக்கு செய்து தர வேண்டாம் நானே செஞ்சுகிறேன் இப்போ எல்லோரும் அமைதியாக போயிட்டு படுங்க நேரம் ஆகுது என்று விட்டு தனது காவேரி அத்தையை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு சென்றான் அவர் அவனைப் பார்த்து முறைத்துவிட்டு குழந்தையை இனி கையில் கொடுத்துவிட்டு அவரது அறைக்கு சென்று விட்டார் வேறு எதுவும் பேசவில்லை …

அனைவரும் சென்றவுடன் மகிழ்  மகா அனைவரையும் வைத்துக்கொண்டு என்ன பேச்சு பேசுகிறாய் என்றான் மகிழ் நான் எங்கே பேசினேன் உன் தங்கச்சியும் நிலாவும்  தான் என் வாயைக் கிளறினார்கள் நான் இருவரையும் ஒண்ணுமே சொல்லல நான் வேணும்னு பேசல ஏதோ ஒரு ப்ளர்ல பேசிட்டேன் சாரி டா மாமா என்றாள் …

மகள் சிரித்துக் கொண்டே அவளது தோளில்  கை போட்டு கழுத்தை இறுக்கி அணைத்து அவனுடன் அழைத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று நிலவின் வெளிச்சத்தை பார்த்தான் இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆகுது மாமா என்றாள் மகிழ் அவளை பின் பக்கம் இருந்து கட்டி அணைத்துக் கொண்டு ரொம்ப நாள் ஆகுதா வருஷம் ஆகுது டி என்றான்…

மகாவிற்கு லேசாக கண்கள் கலங்கியது சந்தோஷமா இருக்கணும் நினைக்கிறேன் இந்த நேரத்தில் அழுது கொண்டிருக்கிறாய் என்றான் சரி என்று விட்டு தனது மாமாவின் பக்கம் திரும்பினாள் சந்தோஷமா இருக்கியா மகா என்றான்  லைட்டா என்றாள் லைட்டா னா என்ன டி அர்த்தம் என்று அவளது தாடையில் கடித்தான் மாமா என்ன பண்ற என்று கத்தினால் …

சும்மா என்று அவளைப் பார்த்து கண் அடித்தான் வரவர நீ ரொம்ப மோசம் மாமா பேட் பாய ஆயிட்டே வர என்றாள் மகிழ் அவளைப் பார்த்து சிரித்தான் என் பொண்டாட்டியை பார்த்து நான் கண்ணடிச்சா தப்பா என்ன டி பேட் பாய ஆயிடுமா என்று கூறி அவளது நெற்றியில் இதழ் பதித்தான்…

சரி நேரம் ஆகுது போயிட்டு தூங்கலாம் மாமா என்றாள் சரி என்று விட்டு இருவரும் வந்தார்கள் மகிழ் அவளது தோளில் கை போட்டுக் கொண்டே பெட்ரூம்க்கு அழைத்துச் சென்றான் இரு மாமா பாத்திரங்கள் எல்லாம் இருக்கிறது விளக்கி வைத்துவிட்டு வருகிறேன் காலையில் எழுந்து விளக்கினால் நேரமாகி விடும் என்றால் …

காலையில் விளக்கிக் கொள்ளலாம் நான் விலகி தருகிறேன் இப்பொழுது நீ வந்து தூங்கு வா என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான் சரி என்று விட்டு இருவரும் படுத்தார்கள் அவளை பின்பக்கமாக இருந்து கட்டி அணைத்துக் கொண்டு படுத்தான் அவனது மூச்சுக்காற்று அவளது காது மாடலில் படுமாறு படுத்திருந்தான் மகா ஒரு பத்து நிமிடம் பார்த்தவள் அதற்கு மேல் முடியாமல் மகிழை பின்பக்கம் இருந்து தள்ளி விட்டாள் …

என்ன டி இப்படி மனுஷனுக்கு கொல்றா என்றான்  எது நான் உங்களை கொல்றேனா நீங்கள்தான் என் காதில் உங்களது உதடு உரசும் அளவிற்கு வந்து படுத்துக்கொண்டு மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேச பேச உங்களது உதடு எனது காதில் மோதுகிறது எனக்கு ஒரு மாதிரியாக கூச்சமாக இருக்கிறது என்றால் மகிழ் அவளை ஆசையாக  குறு குறுவென பார்த்தான் ..

மகா கண்களால் ஒன்றும் இல்லை என்று விட்டு  கம்முனு படு மாமா என்றால் அது என்ன டி ஒரு நிமிஷம் வாடா போடானு  சொல்ற ஒரு நிமிஷம் மாமா என்று சொல்ற ஒரு நிமிஷம் பேர் சொல்லி கூப்பிடுற என்றான் அதாலாம் அப்படி தான்  எனக்கு எப்ப எப்படி தோணுதோ அப்படி கூப்பிடுவேன் என்று அவனை பார்த்து கண்ணடித்து விட்டு போர்வையை கழுத்து முதல் கால் வரை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தாள்…

எப்பயாச்சும் ஒரு டைம் தான் கிடைக்குது அதை கூட முழுசா அனுபவிக்க விடமாட்ற என்று புலம்பிக்கொண்டே படுத்தான் இருவரும் சந்தோஷத்தில் தூங்கிவிட்டார்கள் வீட்டில் உள்ள அனைவரும் அப்படியே தூங்கி விட்டார்கள் அப்படியே இரண்டு நாட்கள் சென்றது எழில் சொன்னது போல் இனி உதிரன் குழந்தைக்கு அன்று பெயர் சூட்டு விழா விமர்சையாக நடந்தது…

நெருங்கிய உறவினர்களை மட்டும் கூப்பிட்டு செய்தார்கள் எழில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைக்கப் போகிறோம் என்று சொல்லும் பொழுதே சொல்லிவிட்டான் இனியிடம் மகா மகிழ் இருவரும் வருவார்கள் என்று எண்ணாதே என்று இனியும் இரண்டு நிமிடம் தனது தம்பியை முறைத்து பார்த்துவிட்டு எனக்கும் தெரியும் என்றால் அதன் பிறகு தான் அவன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான் …

அனைவரையும் அழைத்தான் அந்த கூட்டத்தில் தனது அக்கா எந்த பிரச்சினையும் செய்து விடக்கூடாது அவர்களும் வரவேண்டும் என்று எண்ணி தான் முன்கூட்டியே சொல்லி இருந்தான் அவளும் ஒத்துக்கொண்ட பிறகுதான் அனைத்து ஏற்பாட்டையும் செய்தார்கள் இனி உதிரன் குழந்தைக்கு அமுத நிலவன் என்று பெயர் சூட்டினார்கள் நிலா தான் பெயர் வைத்தாள்…

அவள் இரண்டு நாட்களுக்கு முன்பே நான் தான் பெயர் வைப்பேன் என்று கத்தினால் இனி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிறகு நிலா இனியின் காதில் வந்து இது மகா ஆசை பட்ட பெயர் தான் என்று சொல்லிவிட்டு குழந்தைக்கு பெயர் வைத்தாள் வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையின் காதில் பெயர் சொல்லி சக்கரை தண்ணீர் வைத்தார்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழாவும் நல்ல முறையில் முடிந்தது …

மகா மகிழ் இருவரும் மொட்டைமாடிக்குச் சென்று ஒரு வார காலங்களிலே ஊரில் ஒரு சிலருக்கு அவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள் இப்பொழுது மொட்டை மாடியில் தங்கி இருக்கிறார்கள் என்பது வரை தெரியும் மற்றபடி பெரிதாக பிரச்சனை என்றும் தெரிந்தும் அதைப்பற்றி யாரும் பேசவில்லை அது அவர்கள் வீட்டு விஷயம் மற்றபடி அவர்கள் அனைவரும் நல்லவர்களே என்று எண்ணி அதை நாம் கிண்டி கிளறி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம் என்று எண்ணினார்கள் ..

ஆகையால் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்தவர்களும் யாரும் மகிழ் மகா இருவரை பற்றியும் பெரிதாக கேட்காமல் விசேஷத்தை முடித்துக் கொண்டு சென்றார்கள் அதன் பிறகு ஒரு வார காலங்கள் சென்றது அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருந்தது அப்பொழுது மகா காலையில் கல்லூரிக்கு வந்ததிலிருந்து சோர்வாக தான் இருந்தால் அதை எழில் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும் …

அவனுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது இந்த ஆண்டு கல்லூரி முடிவதற்கு இன்னும் இரண்டு மாத காலங்களே இருக்கிறது ஒரு மாதத்தில் செமஸ்டர் வரப்போகிறது என்பதால் அந்த  எண்ணத்திலே இருந்து கொண்டு இருந்தான் அதனால் அவன் மகாவை பெரிதாக கண்டு கொள்ளவில்லை ஆனால் நிலா காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போது இருந்தே தனது அக்காவை பார்த்துக் கொண்டுதான் இருந்தால் பேசவில்லை என்றாலும் அவளது முகம் ஒரு மாதிரியாக இருப்பதை உணர்ந்தால்…

எழிலியிடம் இதைப் பற்றி பேசலாம் என்று எண்ணினாள் ஆனால் அதற்கான வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை கல்லூரி முடிந்து வீட்டிற்கு சீக்கிரமாகவே மகா சென்றிருந்தாள் வேணி நிலா இருவரும் வருவதற்கு முன்பாகவே அவள் வீட்டிற்கு வந்து இருந்தால் வேணி நிலா இருவரும் அதன் பிறகு தான் வந்தார்கள் …

எழில் அனைவரும் வந்து கொஞ்ச நேரம் கழித்து தான் வந்தான் வேணி மகா வந்து விட்டளா நான் அவளை கல்லூரியிலும் பார்க்கவில்லை என்று கேட்டுக் கொண்டே வந்தான் என்னன்னு தெரியல னா இன்று நாங்கள் வருவதற்கு முன்பாகவே அண்ணி வந்து விட்டார்கள் என்று சொன்னால் நீ போய் பார்க்கவில்லையா என்றான் இல்லையென்றால் நானே இப்பொழுதுதான் வந்தேன் …

இப்பொழுதுதான் துணி மாத்தி கொண்டு வருகிறேன் நீங்கள் கூப்பிடுகிறீர்கள் என்றால் சரி என்று விட்டு எழில் வேகமாக மேலே சென்றான் எழில் மேலே செல்வதால்  அதான் எழில் அண்ணா   செல்கிறார்கள் என்று வேணி கீழே இருந்தால்  அவன் செல்லும் வேளையில் மகா படுத்திருப்பதை பார்த்தான் இவள் என்ன இப்படி படுத்திருக்கிறாள் என்று எண்ணிவிட்டு மகா மகா என்று இரண்டு முறை அழைத்தான் …

அவளிடம் எந்த அசைவும் இல்லை என்றவுடன் பதறி கொண்டு அவளது அருகில் சென்று அவளை தொட்டுப் பார்த்தான் அவளது உடம்பு கொதித்தது அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை வேகமாக வேணி என்று கத்தினான் வீட்டில் அனைவரும் வரவேற்பு அறையில் நின்று மேலே பார்த்தார்கள் வேணி வேகமாக மேலே ஓடினால் என்ன அண்ணா என்றால் உனக்கு கார் ஓட்ட தெரியுமா என்றான்…

தெரியும் அண்ணா மகா அண்ணி தான்  கத்துக் கொடுத்தாங்க என்றால் சரி நீ காரை திருப்பிக் கொண்டு  வாசலுக்கு அருகில் கொண்டு வா என்று விட்டு மகாவை தூக்கிக் கொண்டு வந்தான் அவன் மகாவை தூக்கிக் கொண்டு வருவதை வீட்டில் உள்ள அனைவரும் பார்த்தவுடன் அனைவருக்கும் ஒரு மாதிரியாக இருந்தது என்ன என்று கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது ஆனால் யாரும் எதுவும் கேட்கவில்லை..

எழில் வரவேற்பு அறையில் வந்து நின்று விட்டு அவளுக்கு உடம்பு அனலாக கொதிக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு வேணி நீ என்னுடன் வா என்று வேனியை உட்கார சொல்லிவிட்டு பின்னால் வேனி மடியில் மகாவை படுக்க வைத்துவிட்டு காரை மருத்துவமனைக்கு ஓட்டி சென்றேன் வேணி மகிழுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருந்தால் இருவரும் ஹாஸ்பிடலுக்கு போய் சேர்வதற்கும் மகிழ் மருத்துவமனைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது…

அவர்கள் வந்தவுடன் மகிழ் வேகமாக கார்க கதவைத் திறந்து மகாவை தூக்கிக் கொண்டான் எழில் பின்னாடியே காரை நிறுத்திவிட்டு சென்றான் வேனியும் பின்னாடியே சென்றால் டாக்டர் என்ன ஆச்சு என்று கேட்டார்கள் மயக்கம் போட்டு விட்டால் என்று சொல்லி ஜுரம் அடிக்கிறது என்றும் சொன்னார்கள்…

எப்பொழுது இருந்து ஜுரம் இருக்கிறது என்று டாக்டர் கேட்டார்கள் அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்குள் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டார்கள் பிறகு இருவரும் ஒரே போல் தெரியவில்லை இப்பொழுது மயக்கம் போட்ட பிறகுதான் தெரியும் என்றவுடன் டாக்டர் திட்டிவிட்டு மகாவை செக்கப் செய்ய உள்ளே அழைத்துச் சென்றார்கள்..


மகாவை மருத்துவமனையில் அட்மிட் செய்தவுடன் இருவரும் இப்பொழுது எதற்கு முறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேணிக்கு புரியவில்லை இருவரும் ஒரே போல் அவளுக்கு உடம்பு சரியில்லை என்று கூட பார்க்கவில்லையா பார்க்க மாட்டாயா என்று கேட்டார்கள் வேணிக்கு ஒரு நிமிடம் சிரிப்பு வந்துவிட்டது சிரித்துவிட்டு இருவரையும் பார்த்து இப்பொழுது அவள் முறைத்தால் …

மகா அண்ணி புருஷன் நீங்க இருக்கும் போது பிரண்டா இவரு பார்க்கல என்று நீங்க கேக்குறீங்க ஃப்ரெண்ட் இவரு இருக்கும்போது புருஷனா பார்க்கலன்னு அவரு கேக்குறாரு இப்ப அதுதான் ரொம்ப முக்கியம் இல்ல ரெண்டு பேருமே பார்க்கிறது தானே இப்போ டாக்டர் என்ன சொல்றாங்க பஸ்ட் அதை பார்க்கலாம் என்று கத்தினால் அதன் பிறகு இருவரும் அமைதியாகிவிட்டார்கள்..

பிறகு டாக்டர் மூவரையும்  உள்ளே வர சொன்ன பிறகு உள்ளே சென்றார்கள் அவளுக்கு ட்ரிப் போடப்பட்டிருந்தது மகாவிற்கு குளிர் காய்ச்சல் இருந்திருக்கிறது போல என்று லதா டாக்டர் சொன்னார் பிறகு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து ரெஸ்ட் எடுக்கட்டும் சத்தான உணவாக கொடுங்கள் கஞ்சி மட்டும் வைத்துக் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார் சரி என்று விட்டு மூவரும் மகாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்…

மகா வீட்டிற்கு வரும்பொழுது ஓரளவுக்கு டிப்ஸ் போட்டதால் தெம்பாக இருந்தால் மகிழ் தோளில் சாய்ந்து கொண்டே மேலே சென்றால் சுந்தரி தான் அவர்கள் இருவரும் மேலே சென்றவுடன் எழிலிடம் என்னடா சொன்னார்கள் என்று கேட்டார்  எழில் தனது அம்மாவை பார்த்து சிரித்துவிட்டு அதை பத்தி நீ ஏன் மா கேக்குற என்று கேட்டான் …

அவர் தனது மகனை முறைத்து விட்டு வேணியை பார்த்தார் அவள் அமைதியாக இருந்த உடன் எழிலே தனது தாயைப் பார்த்து சிரித்துக் கொண்டே குளிர் ஜுரமா பெருசா ஒன்னும் இல்ல என்றாள் சத்தான உணவுகளை சாப்பிட சொல்லி இருக்காங்க வீட்ல இருந்து ஒரு மூணு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க என்றான் ..

இரு நான் மேலே போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று விட்டு மேலே சென்றான் மகிழ் ஏதாவது வேலை இருந்தா போய் பாரு நான் மகாவை பார்த்துக் கொள்கிறேன் என்றான் எழில் மகிழ் தனது தம்பியை முறைத்து  பார்த்துவிட்டு  அதான் நான் இருக்கிறேன் இல்ல நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கீழே போ என்றான் எழில் வேறு எதுவும் பேசாமல் சரி எத்தனை நாள் பார்த்துக் கொள்வான் என்று எண்ணிவிட்டு அமைதியாக கீழே இறங்கி வந்து விட்டான்…

அவன் கீழே இறங்கி வந்தவுடன் நிலா சிரித்தால் எழில் அமைதியா போயிடு டி என்றான் என்ன மாமா எங்கோ கருகுற ஸ்மெல் வருது போல என்றால் வீட்டில் உள்ள இளையவர்கள் அனைவரும் சிரித்து விட்டார்கள் அனைவருமே வீட்டிற்கு வந்து விட்டார்கள் சுந்தரி அனைவரிடமும் சொல்லியும் விட்டார் இதுபோல் மகாவை அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்றும் நிலா இவ்வாறு சொன்னவுடன் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் சிரித்தார்கள் …

எழில் நிலாவைப் பார்த்து முறைத்தான் மகிழ் மகாவை நன்றாக பார்த்துக் கொள்வானா மகாவிற்கு உடல்நிலை சீக்கிரமாக சரியாகிவிடுமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…


அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

3 thoughts on “மகாலட்சுமி 70”

  1. CRVS2797

    அட ராமா..! பொண்டாட்டியை புருசன் பார்த்துக்க மாட்டானா என்ன…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *