Skip to content
Home » மகாலட்சுமி 72

மகாலட்சுமி 72

எழில் மகாவிற்கு மாத்திரை கொடுத்து விட்டு அவள் மாத்திரை சாப்பிட்டவுடன் அவளை ஓங்கி தாடையில் ஒரு அரை விட்டான் வேந்தா என்று மகா வேகமாக கத்தினால் சீ வாயை மூடு டி இத்தனை நாட்களாக உனக்கு நண்பனாக இருந்தேன் ஆனால் இன்று ஒரு தம்பியாக எனக்கு வலிக்கிறது …

உன் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வரும் என்று நான் என்ன கூட இல்லை என்ன டி நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனசை தொட்டு சொல் என் அண்ணன் இத்தனை நாட்களாக உனது உடம்புக்கு தான் அலைந்தானா என்று அவள் சொல்லிய வார்த்தை தான் ஆனால் அதை அடுத்தவர்கள் வாயிலிருந்து கேட்கும் பொழுது அவளுக்கு உடல் நடுங்கியது கூசியது …

ஹோ மேடம்க்கு வலிக்குதா உடம்பு கூசுகிறதா  இதே வார்த்தையை தான் ஒரு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நீ என் அண்ணனை பார்த்து சொன்னாய் என்பதை மறந்துவிடாதே அவன் உனக்கு உடம்பு சரியில்லை என்று ஒரே காரணத்துக்காக மட்டும் தான் உன் கூட நெருங்கி இருப்பனே தவிர அவனும் விருப்பப்பட்டு உன் கூட இணைந்திருக்க மாட்டான் …

ஆனால் அந்த ஒரே வார்த்தையில் கொன்னுட்டல அவனை நீயே கொன்னுட்ட  அன்னைக்கு நீ அவனுடைய காதலை வீட்டில் சொல்லாமல் மறைத்த வலியை விட இப்ப இருக்க வலி ஆயுசுக்கும் இருக்கும் இனி அவனே விருப்பப்பட்டா கூட உன் கூட நெருங்கும் போதெல்லாம் நீ சொன்ன வார்த்தை தான் அவன் நெஞ்சில் முல்லா குத்தும் என்று மகாவிடம் கத்துவிட்டு அமைதியாக இருந்தான்…

எழில் இப்படி ஒரு வார்த்தை சொன்னவுடன் மகா கீழே மண்டி போட்டு உட்காந்து நான் வேண்டுமென்றா சொன்னேன் வேண்டும் என்றா சொன்னேன் என்று கத்திக்கொண்டே அழுதால் பிறகு அவளுக்கு ஜுரம் இருப்பது ஞாபகத்தில் வந்து எழில் அவளை எழுப்பி அமைதியாக இரு ரெஸ்ட் எடு ஏதாச்சு பேசினா என்ன செய்வனே தெரியாது என்று விட்டு கீழே இறங்கி விட்டான் …


அவன் இறங்கியவுடன் மகா உட்காரந்து அழுது கொண்டு இருந்தாள் தனது மகிழ் மாமாவை தான் என்ன வார்த்தை சொல்லிவிட்டோம் என்று எண்ணி வருந்தி கொண்டிருந்தால் அவள் அப்படியே சோபாவில் உட்கார்ந்த வாக்கிலே மாத்திரையின் வீரியத்தில் தூங்கி விட்டாள் எழில் மகாவிடம் பேசிவிட்டு கீழே இறங்கி சென்று தனது வண்டியை எடுத்துக்கொண்டு பஞ்சாயத்து ஆபீஸ் முன்பு நிறுத்தினான் …

அப்பொழுது முத்து தனது அண்ணன் மகிழிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் அண்ணா சாப்பிட்டு இந்த மாத்திரையை போடுங்க என்று என்னட மாத்திரை என்று கேட்டுக் கொண்டே வந்தான் எழில் வாட எழில்  அண்ணன் காலையில சீக்கிரமாவே வந்துடுச்சு எனக்கு போன் செஞ்சிடுச்சு நானும் வந்தேன் இப்ப சாப்பிட சொன்னா சாப்பிட மாட்டேங்குது நானும் அதற்கு தான் சாப்பிட சொல்லி அழைப்பதற்கு தான் வந்திருக்கிறேன் என்றான் …

அப்போது முத்து தான் இல்லை எழில் இன்று நான் வீட்டிலிருந்து அண்ணனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து விட்டேன் இதை சாப்பிட்டுவிட்டு மாத்திரை சாப்பிட சொன்னால் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் என்றான் எதற்கு மாத்திரை என்று கேட்டான்  அண்ணனுக்கு உடம்பு நல்லா கொதிக்குது டாக்டர் கிட்ட போலாம்னு சொன்னாலும் வரமாட்டாரு அதான் அம்மாவ கஞ்சி வச்சி தர சொல்லிட்டு மாத்திரை எடுத்துட்டு வந்தேன் சாப்பிட மாட்டேன் என்கிறார் என்றான்…

முத்து அவ்வாறு சொன்னவுடன் தனது அண்ணனை தொட்டுப் பார்த்தான் தனது அண்ணன் உடல் அனலாக கொதிப்பதையும் உணர்ந்தான் சாப்பிட்டு மாத்திரை போடு டா என்று தனது அண்ணனை எழுப்பினான் அவன் எழுந்திருக்க மாட்டேன் என்றவுடன் கஞ்சியை அவனுக்கு ஊட்டி விட்டான். அமைதியாக எழிலையே பார்த்துக் கொண்டு சாப்பிட்டான் அவனுக்கு வாய் துடைச்சி விட்டு விட்டு மாத்திரை போடும் வேளையில் வாந்தி எடுத்தான் மகிழ்….

எழில் அதை தன் கையில் தாங்கிக் கொண்டு பாத்ரூமுக்கு சென்று கொட்டி விட்டு தன்னையும் சுத்தம் செய்து கொண்டு வந்து தனது அண்ணனையும் கைத்தவங்களாக அழைத்துக் கொண்டு சென்று சுத்தம் செய்து அழைத்துக் கொண்டு  வந்து உட்கார வைத்தான் அவன உட்கார வைக்கும் போது அவன் சோர்வாக இருந்த உடன் எழிலுக்கு பயமாக இருந்தது அவன் எதில் வந்தான் என்று கேட்டான்….

எழில் அண்ணன் பைக்ல தான் வந்தாரு என்றவுடன் சரி டா நீ போய் பைக் எடு என்று விட்டு தனது அண்ணனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று மகிழை நடுவில் உட்கார வைத்துவிட்டு எழில் பின்னாடி உட்கார்ந்து கொண்டான்  இருவரும் மகிழை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் டாக்டர் லதா மகிழிடம் என்ன ஆச்சு என்று கேட்டார் …

நேற்று தான் மகா வந்தால் என்று எண்ணிவிட்டு உடம்பு சரியில்லாத நேரத்தில் என்ன செய்யணும்னு தெரியாதா என்று கேட்டார் எழில் தான் சாரி ஆன்ட்டி என்றான் எழிலை பார்த்து முறைத்து விட்டு ஏதோ செய்யுங்க என்று விட்டு மகிழுக்கு ட்ரிப் போட்டுவிட்டு ஒரு இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து விட்டு அதன் பிறகு வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் …

வீட்டிற்கு மகிழை முத்து ஒரு பக்கமும் எழில் ஒரு பக்கமும் கைத்தாங்கலாக தான் அழைத்துக் கொண்டு வந்தார்கள் அதை பார்த்தவுடன் சுந்தரிக்கு மனம் பதைத்தது காவேரி அங்கு தான் இருந்தார் அவர் மகிழை பார்த்துவிட்டு மகிழிடம் வருவதற்கு இரண்டு அடி எடுத்து வைத்தார். பின்பு அப்படியே நின்றார் எழிலை பார்த்துவிட்டு அவரது அறைக்கு சென்று விட்டார்….

அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை ஆனால் தனது அத்தை மேலும் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்ததால் அமைதியாக இவனுக்கும் காய்ச்சல் வந்துவிட்டது அம்மா என்று மட்டும் சொல்லிவிட்டு முத்துவை மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு வர சொல்லிவிட்டு தனது அண்ணனை கைத்தாங்களாக மேலே அழைத்துச் சென்றான் பிறகு வீட்டிற்குள் சென்றவுடன் வீட்டின் கதவு திறந்து இருந்தது …

ஆனால் இருவரும் இருக்கும் கதவு தாழ்ப்பாள்  போட்டிருந்தது முத்து தான் அண்ணி அண்ணி என்று  இரண்டு முறை கதவை தட்டினான் மகாவும் கனவில் இருந்து முழித்தது போல் எழுந்து வந்து கதவை திறந்தால் அங்கு முத்து நிற்பதை பார்த்துவிட்டு என்ன முத்து என்று கேட்டால் அப்பொழுது எழில் மகாவை முறைத்துக் கொண்டே தனது அண்ணனை தன் மேல் சாய்த்துக் கொண்டு வந்து நின்றான்….

மாமா என்று மகா  மகிழை தொட வந்தால் மகிழ் அவளது கையை தட்டி விட்டுவிட்டு அமைதியாகச் சென்று கட்டிலில் படுத்தான் மகாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது அதனால் இவர்கள் இருவரின் முன்பும் தனது நிலையை எடுத்துரைக்க அவள் விரும்பவில்லை அதனால் அமைதியாக இருந்தால் முத்துவிடம் தான் கேட்டால் முத்து தான் அனைத்தையும் சொன்னான் .,

அண்ணன் காலையில் வரும் பொழுது காய்ச்சலோடு தான் வந்தார் அண்ணி வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொன்னதற்கும் செல்ல மாட்டேன் என்றார் பிறகு நான் வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கஞ்சி வைத்துக் வாங்கி கொண்டு மாத்திரை வாங்கிக் கொண்டு வந்தேன் சாப்பிட மாட்டேன் என்று சொன்னார்கள் எழில் வந்து சாப்பிட வைத்தான் பின்பு மருத்துவமனை அழைத்துச் சென்றோம்…

டிரிப்ஸ் போட்டு இருக்கிறது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகும் என்று சொல்லிவிட்டு சரி அண்ணி எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள் என்று விட்டு சென்றான் எழில் அவனை அனுப்பிவிட்டு சமையல் அறைக்கு சென்று இருவருக்கும் கஞ்சி காய்சி எடுத்துக்கொண்டு வந்தான்…

எழில் மகாவிடம் எதுவும் பேசாமல் மகாவின் அருகில் அந்த கஞ்சியை வைத்தான் மகா தனது நண்பனை பார்த்துவிட்டு மகிழ் இருக்கும் அறையைப் பார்த்தால் அவன் அசதியில் தூங்கிக் கொண்டிருந்தான் அமைதியாக அந்த கஞ்சியை சாப்பிட்டால் தனது அண்ணனுக்கு ஜுரம் குறைந்து இருக்கிறதா என்று பார்த்தான் ..

லேசாக விட்டிருப்பது போல் இருந்தவுடன் அவனை எழுப்பினான் அவன் எழுந்து உட்கார்ந்தவுடன் அவனுக்கு வாந்தி எடுக்காமல் இருப்பதற்கு ஒரு மாத்திரை கொடுத்திருந்தார் மருத்துவர் அந்த மாத்திரையை  போட்டுவிட்டு கஞ்சி ஊட்டி விட்டான் பிறகு அவனது நெற்றியில் தண்ணீர் வைத்து பத்து போட்டான் …

இரவில் தான் ஜுரம் அதிகமாக வரும் என்று சொல்லியே அனுப்பி இருந்தார் லதா ஆகையால் இருவரையும் உட்கார வைத்து டிவி போட்டுவிட்டு அவனும் அருகில் அமர்ந்திருந்தான் மாலை 4 மணிக்கு மேல் மகிழ் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று விட்டு அவனது அறையில் சென்று போய் படுத்தான் மகாவிற்கு முக்கால்வாசி ஜுரம் விட்டிருந்தது …

மகா சென்று இரவுக்கு ரசம் சாதம் செய்தால் எழில் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் வேறு எதுவும் சொல்லவில்லை பிறகு மகிழை எழுப்பினான் இரவு 7:00 மணி போல் இருவரும் ரசம் சாதம் சாப்பிட வைத்தான் மகா எழில் நீ என்றால் எனக்கு வேண்டாம் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் நான் கீழே போய்விட்டு வருகிறேன் என்று விட்டு பிறகு எட்டரை மணி போல் கீழே இறங்கினான் …

நிலா வேகமாக எழிலிடம் வந்து மாமாக்கு எப்படி இருக்கு என்று கேட்டாள் அவளது கண்கள் கலங்கி இருந்தது ஒன்றுமில்லை இப்பொழுது சோரம் விட்டு இருக்கிறது இரவு வேலையில் தான் அதிகமாக வரும் என்று சொல்லி இருக்கிறார்கள் மாமாவுக்கு எப்படி ஜுரம் வந்துச்சு நேற்றுதான் மகாவிற்கு ஜுரம் என்று சொன்னீர்கள்…

இன்று மாமாவிற்கு ஜுரம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் எழில் எதுவும் சொல்லாமல் இருந்தான் ..

இன்னொரு முறை கேட்டால் இதுல என்னடி காரணம் எனக்கு எப்படி தெரியும் என்றான் நீயும் அவங்க கூட சேர்ந்து இருக்க உனக்கும் ஒட்டிக்க போது மாமா ஜுரம் என்றால் இப்போது வீட்டில் உள்ள அனைவரும் சிரித்தார்கள் நிலா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து முறைத்துவிட்டு நான் ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை எனக்கும் அனைத்தும் தெரியும் என்றால் …

எழில் அவளது தலையை கலைத்துவிட்டு உணவு மேசையில் வந்து உட்கார்ந்தான் என்ன டா உனக்கு சாப்பாடு போடலையா என்று கோதை கேட்டார் அத்த ஓவரா பண்ணாதீங்க உன் மகளும் மருமகனும் ரசம் சோறு சாப்பிட்டாங்க என்னையும் அதையே சாப்பிட சொல்றியா எனக்கு பசிக்கிறது நான் காலையிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை என்றான்…

அவன் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்றவுடன் நிலா தனது தட்டில் இருக்கும் சாதத்தை அவனுக்கு ஊட்டுவதற்கு கையை அவனது வாய் அருகே கொண்டு சென்றாள் எழில் நிலாவைப் பார்த்து சிரித்துவிட்டு முதல்வாய் அவளிடம் வாங்கிவிட்டு அவளது தட்டை புடுங்கி சாப்பிட்டான் இப்பொழுது எழிலை பார்த்து வேணி சிரித்தால் …

நிலா வேணியை பார்த்து முறைத்துவிட்டு வேறு ஒரு தட்டி எடுத்து அவளுக்கு சாப்பாடு போட்டுக் கொண்டால் பிறகு பாண்டியம்மா பாட்டி தான் டேய் நீ அங்கே இன்று தூங்கிக். கொள் என்றார் எழில் தனது பாட்டியை பார்த்து சிரித்து விட்டு நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அங்குதான் தூங்கப்போகிறேன் என்றான்..

நிலா நானும் வரட்டா என்றால் இப்பதான் எனக்கு ஜுரம் தொத்திக்கும் சொன்ன இப்போ உனக்கு ஒட்டிக்காதா என்றான் சும்மா சொன்னேன் என்றாள் அதெல்லாம் ஒன்றும் வேணாம் நான் பார்த்துக்கிறேன் ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஜுரம் இருக்கிறது நீ வரவேண்டும் என்றான் காவேரி எழிலை அங்கு செல்ல வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை….

அமைதியாக தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அதுவும் எழில் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் லேசாக கண் கலங்கியது பிறகு எழில் சாப்பிட்டுவிட்டு மேலே மொட்டை மாடிக்கு சென்றான் அப்பொழுது மகிழ் அவனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தான் மகா உள்ளேயும் போக முடியாமல் வெளியேவும் உட்கார்ந்திருக்க முடியாமல் அங்குள்ள சோபாவில் உட்கார்ந்து வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தால் ..

எழில் வந்தவுடன் வேந்தா என்று கத்தி கொண்டு சென்று அவனை கட்டி அணைத்தால் என்னடி ஆச்சு என்று கேட்டான் கொஞ்ச நேரம் வாயை மூடுறீயா எதுக்கு அழுதுட்டு இருக்க இன்னும்  காய்ச்சலை  இழுத்து வச்சுக்கவா என்றான் தனது நண்பனை மகா நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்தால் தனது கண்ணீரையும் துடைத்தால் பிறகு வா தூங்கலாம் என்றால்…

மாத்திரை சாப்டியா என்றான் சாப்பிட்டேன் என்றாள் மாமாக்கு மாத்திரை என்றாள் கொடுத்துவிட்டு தான் சென்றேன் என்றான் பிறகு மகாவை அழைத்துக் கொண்டு ரூமுக்குச் சென்றான் அவன் ரூமுக்கு செல்லும் பொழுது மகிழ் மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டுதான் இருந்தான் மகாவை கீழே பெட் போட்டு படுக்க வைத்துவிட்டு கீழே அவனும் மகாவின் அருகில் சிறிது இடைவெளி விட்டு படுத்தான்…

இருவரும் உறங்கி விட்டார்களா என்று உட்கருந்து பார்த்தான் இருவரும் மருந்தின் வீரியத்தில் உறங்கியதை பார்த்தவுடன் உங்கள் இருவரையும் நான் எப்படி தான் சேர்த்து வைப்பேன் என்று எனக்கு புரியவில்லை உங்கள் வாழ்க்கையில் மட்டும் ஒவ்வொன்றாக பிரச்சனை மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கிறது இத்தனை நாட்கள் இருந்த பிரச்சனையை விட இப்பொழுது இவள் இழுத்து வைத்திருக்கும் பிரச்சினை பெரிது…

லச்சு இதை எப்படி நான் சரி செய்வேன் என்று அழுதான் அப்போது அவனது தோளில் ஒரு கரம் படிந்தது திரும்பிப் பார்த்தான் சிரிது அதிர்ச்சியும் ஆனான் எழில் தோலில் வைத்து கரம் யாருடையது எழில் மகிழ் மகா இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை எப்படி சரி செய்வான்..

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 72”

  1. CRVS2797

    அநேகமா அது வேணியோ, இல்லை நிலாவோவாத் தான் இருக்கணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *