எழில் மனதில் இருவரையும் எண்ணி வருந்தி கொண்டிருக்கும் பொழுது அவனது தோளில் ஒரு கரம் படிந்தது யார் என்று திரும்பிப் பார்த்தான் தனது அண்ணன் மகிழனின் கை தான் தன் மேல் பட்டவுடன் என்னடா அண்ணா ஆச்சு என்ன வேண்டும் என்று தனது கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டான்…
எனக்கு ஒன்றுமில்லை நீ அமைதியாக படுத்து தூங்கு அவன் அதிகமாக அண்ணா என்று கூப்பிட மாட்டான் என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் தனது தம்பி எப்பொழுதாவது தான் தன்னை அண்ணா என்று கூப்பிடுவான் என்று எண்ணி விட்டு பிறகு ஒன்றுமில்லை எல்லாம் சரியாகும் அமைதியாகப் படு டா என்றான்…
மகிழ் ஒரே ஒரு விஷயம் கெஞ்சி கேட்டுக்குறேன் நீ உன் பொண்டாட்டி மேல கோபப்படு நான் கோபப்பட வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் ஆனால் அவளை வெறுத்து மட்டும் விடாதே என்றான் மகிழ் வேகமாக எழுந்து அறைந்திருந்தான் தனது தம்பியை எழில் மகிழ் என்று லேசாக முனங்கினான் லூசாடா நீ நான் அவளை வெறுத்து விடுவேன் என்று எண்ணினாயா? …
அவள் பேசியது என் மனதை காயப்படுத்தியது தான் என்னை உயிரோடு கொன்று புதைக்கும் வார்த்தைதான் இல்லை என்று சொல்ல மாட்டேன் அதற்காக அவளை வெறுக்கவோ அவளை விட்டு விலகவும் மாட்டேன் எனக்கு தெரியும் அவள் எதையும் யோசிக்காமல் சொல்ல மாட்டாள் என்று அவள் இடத்தில் இருந்து பார்த்தால் அது அதிக வலி தான் இப்பொழுது என்னை அந்த வார்த்தை சொல்லிவிட்டு என்னைவிட அதிகமாக வருந்தி கொண்டிருப்பதும் அவள் தான் என்றும் எனக்கு தெரியும்…
நீ எனக்கு அவளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அமைதியாக இரு எதையாவது யோசித்துக் கொண்டே இருந்து உனக்கு ஜுரத்தை இழுத்து வைத்துக் கொள்ளாதே என்றான் சரி என்று விட்டு மகிழ் உறங்கியவுடன் எழிலும் காலையிலிருந்து அலைந்ததில் தூங்கினான் காலை ஆறு மணி போல் மகிழ் தான் டீ போட்டுவிட்டு எழிலை எழுப்பினான்…
அவன் எழுந்தவுடன் கல்லூரிக்கு நேரமாகவில்லையா சீக்கிரம் கிளம்பி கல்லூரிக்கு செல்லுங்கள் என்று மகாவை கண் காண்பித்து விட்டு சமையல் அறைக்கு சென்றான் எழிலும் மகாவை எழுப்பி விட்டு கல்லூரிக்கு நேரமாகவில்லையா என்று மகாவை எழுப்பினான் இருவருக்கும் மகிழ் டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து எழில் கையில் கொடுத்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமைக்க ஆரம்பித்தான்…
நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எழில் வந்தான் டேய் எனக்கு ஜுரம் விட்டுடுச்சு ஒன்னும் பிரச்சனை இல்ல நேத்தே காலேஜ் லீவு போட்டாச்சு காலேஜ் கிளம்புற வேலையை பாரு எக்ஸாம் வர நெருங்குதுன்னு சொன்ன இல்ல நீ காலேஜ் கிளம்பு ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பாத்துக்குறேன் என்றான்…
எழில் மகாவை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தான் அவள் கண் மூடி திறந்தவுடன் கீழே இறங்கி சென்றான் வீட்டில் அனைவரும் என்ன ஆயிற்று என்று கேட்டவுடன் இருவருக்கும் ஜுரம் விட்டு இருக்கிறது என்று சொல்லிவிட்டு வேகமாக கல்லூரி கிளம்பி கொண்டு வந்தான் தனது தாய் கொடுத்த இரண்டு இட்லியை சாப்பிட்டுவிட்டு வேகமாக படி ஏறினான் மகா மகிழ் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்…
மகா சாப்பிட்டவுடன் மகாவின் அருகில் மாத்திரையை எடுத்து வைத்தான் மகா எதுவும் பேசாமல் தனது மகிழ் மாமாவை ஒரு நிமிடம் முழுவதாக நின்று பார்த்துவிட்டு மாத்திரையை சாப்பிட்டுக்கொண்டு மதியத்திற்கும் அவன் கொடுத்த மாத்திரையை தனது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு வெளியே வந்தால் இருவரையும் பார்த்துவிட்டு தனது அண்ணனிடம் நீயும் மாத்திரை போட்டுக் கொள் என்று சொல்லிவிட்டு மகாவை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான்..
அவர்கள் கீழே இறங்கி வரும் வேளையில் வேணி நிலா இருவரும் கல்லூரிக்குச் சென்று இருந்தார்கள் மகா அவளது ஸ்கூட்டியிலும் எழில் அவனது வண்டியிலும் கல்லூரிக்கு கிளம்பினார்கள் கல்லூரி முதல்வர் இருவரும் ஏன் நேற்று வரவில்லை என்று காரணம் கேட்டார் இருவரும் ஒரே போல் உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள் இது எக்ஸாம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ..
நீங்களே இப்படி அடிக்கடி லீவ் எடுத்தால் மாணவர்கள் எப்படி ஒழுங்காக படிப்பார்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என்று வான் பண்ணி இருவரையும் அனுப்பினார் இருவரும் சரி என்று விட்டு வந்து விட்டார்கள் முத்துக்கு எழில் போன் செய்து சொல்லி இருந்தான் மகிழுக்கு இப்பொழுதுதான் ஜுரம் கொஞ்சம் விட்டு இருக்கிறது. அவனை பத்திரமாக பார்த்துக் கொள்…
அவன் சொல்லவில்லை என்றாலும் முத்து தனது சொந்த அண்ணனாக தான் மகிழை பார்த்துக் கொண்டிருக்கிறான் மகிழும் தனது சொந்த தம்பி போல் தான் முத்துவை பார்த்துக் கொண்டிருக்கிறான் நான் மகிழ் அண்ணாவை பார்த்துக் கொள்கிறேன் என்றான் பிறகு முத்து தனது அம்மாவிடம் சொல்லி ரசம் சாதம் எடுத்துக்கொண்டு வந்து மகிழுக்கு கொடுத்தான் அவனுக்கு ஜுரமே இல்லை என்றாலும் அவனுக்கு மாத்திரை போட சொல்லி சொன்னான்…
பிறகு ஒரு அரை மணி நேரம் அங்கே ஓய்வெடுக்க சொல்லியும் அங்குள்ள சேரில் படுக்க வைத்தான் இருவருக்கும் ஜுரம் விட்டிருந்தது இப்படியே இரண்டு நாட்கள் சென்றது இருவரும் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை ஒருவர் ஒருவர் மற்றவருக்கு தேவையான அனைத்தையும் செய்தார்கள் ஆனால் இருவரும் பேச முயலவில்லை மகா இரண்டு மூன்று முறை மகிழிடம் பேச முயற்சி செய்தால் அவன் ஒதுங்கியவுடன் அவளுக்கு வலித்தது அதனால் அவளை பேசுவது நிறுத்தி இருந்தால் …
தன் மாமா தன்னை புரிந்து கொண்டு தன்னிடம் பேசுவார் என்று எண்ணினால் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் மகிழை பார்ப்பதற்காக ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள் மகிழ் அப்பொழுதுதான் வெளியே வேலையாக காலை 7:00 மணி போல் இறங்கி வந்தான் அவன் வருவதற்கும் அவர்கள் வீட்டிற்குள் ஊரில் உள்ள பெரியவர்கள் சிலர் வருவதற்கும் சரியாக இருந்தது ..
வாங்க ஐயா என்று அனைவரையும் அனைவருக்கும் வணக்கம் வைத்து வரவேற்றான் என்ன அனைவரும் ஒன்றாக வந்திருக்கிறீர்கள் என்று வரவேற்பு அறையில் நின்று கேட்டான் பிறகு அவனுக்கு வரவேற்பு அறையில் நிற்பது ஒரு மாதிரியாக இருந்தது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக அவன் இந்த வரவேற்பரையில் நிற்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு இருந்தான்..
மகாவும் அப்பொழுது கீழே இறங்கி வந்தால் தனது மகிழ் மாமா நிற்க முடியாமல் அவஸ்தியாக நின்று கொண்டிருப்பதை உணர்ந்து விட்டு ஊரிலிருந்து வந்திருக்கும் பெரியவர்கள் அனைவரையும் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் வீட்டில் குழந்தை இருக்கிறது நம் சத்தமாக பேசினால் குழந்தையை பாதிக்கும் அழ செய்யும்…
நாம் பூந்தோட்டத்தில் உட்கார்ந்து பேசலாமே என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு மகிழை அழைத்து கொண்டு பூந்தோட்டத்திற்குள் வந்தால் ஊர் பெரியவர்கள் அனைவருக்கும் மகா எதற்காக அவ்வாறு சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டு எங்களுக்கும் அனைத்தும் தெரியும் மகா நாங்கள் எதுவும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்டு வந்து நின்றார்கள் …
எழில் உதிரன் முகில் மூவரும் ஒவ்வொரு சேராக எடுத்துக் கொண்டு வந்து பூந்தோட்டத்தில் போட்டார்கள் என்ன ஐயா என்ன விஷயம் எல்லோரும் ஒன்றாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டான் மகிழ் இல்லப்பா ஆடி மாசம் பொறந்திருச்சு இல்லையா அதான் அஞ்சு வருஷத்துக்கு ஒரு டைம் தேர் போடுவோம் இல்ல அதன் இப்ப தேர் போடாலான்னு தான் என்றார்கள் …
சரி ஒரு நிமிஷம் இருங்க என்று விட்டு முகில் என்றான் முகில் மகிழை பார்த்தவுடன் வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டுக் கொண்டு வா என்றான் சரி என்று விட்டு முகில் வீட்டிற்குள் சென்று வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தான் இனி கையில் குழந்தை இருந்ததால் இனி வீட்டிற்குள் இருந்தால்..
முகில் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்து நின்றவுடன் கருப்பையா தாத்தா தான் என்னப்பா எல்லாரும் ஒண்ணா கூட வந்து இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்டார் ஐயா பயப்படும் படியான விஷயம் ஒன்றும் இல்லை நல்ல விஷயம் தான் ஆடி பொறந்திருச்சு அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் தேர் போடுவது வழக்கம் தான அதான் தேர் போடலாம் என்று தான் என்று சொன்னார்கள்…
கருப்பையா தனது பேரன் மகிழனை பார்த்தார் மகிழ் தனது தாத்தாவை பார்த்து கண் மூடி கண் திறந்தான் ஐயா நீங்கள் சொல்வது சரிதான் நாம் முதலில் கோவிலில் சீட்டு போட்டு பார்க்க வேண்டும் அல்லவா அதன் பிறகு சாமி உத்தரவு கொடுத்த பிறகு ஊரில் உள்ள அனைவரிடமும் பேச வேண்டும் அல்லவா என்றான் ஆமாம் தம்பி எல்லோரிடமும் பேச வேண்டாம் என்றார்கள்…
சரி எனக்கு இன்று ஒரு நாள் டைம் கொடுங்கள் நான் ஊரில் உள்ள அனைவரிடமும் பேசிவிட்டு மாலை உங்களிடம் அனைத்தையும் சொல்கிறேன் மாலை ஒரு ஆறு மணி போல் அனைவரும் வந்து விடுகிறீர்களா இல்லை சொல்லி அனுப்பட்டுமா என்றான் இல்லப்பா நாங்கள் மாலை வருகிறோம் என்று விட்டு அனைவரும் கிளம்பினார்கள் அனைவரும் கிளம்பும் வேலையில் அனைவருக்கும் வேணி டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் …
அனைவரும் குடித்துவிட்டு சரி மகிழ் வருகிறோம் என்று விட்டு சென்றார்கள் அனைவரும் சென்றவுடன் கருப்பையா தாத்தா தான் மகிழிடம் என்ன மகிழ் பண்ணலாம் என்று இருக்கிறாய் என்று கேட்டார் இது நம்ம மட்டும் முடிவெடுக்கிற விஷயம் இல்ல தாத்தா எல்லார்கிட்டயும் பேசணும் ஃபர்ஸ்ட் எல்லார்கிட்டயும் பேசிட்டு அதுக்கப்புறம் சாமி உத்தரவு கொடுத்த தான் பார்ப்போம் அதுக்கு அப்புறம் இதை பத்தி மேற்கொண்டு பேசலாம் என்று விட்டு மகாவை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மேலே சென்று விட்டான்…
தனது மாமா தன்னிடம் ஏதோ பேச விரும்புகிறார் என்பதையும் உணர்ந்து விட்டு மகிழுடனே மகாவும் மேலே சென்றாள் மேலே சென்றவுடன் மகிழ் மகாவையே பார்த்துக்கொண்டு இருந்தான் மகாவிற்கு ஒன்றும் புரியவில்லை தன்னால் அங்கு வரவேற்பு அறையில் நிற்க முடியவில்லை என்பதை உணர்ந்து ஊரிலிருந்து வந்த பெரியவர்களை அழைத்துக் கொண்டு பூந்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றதை எண்ணி மகாவை எண்ணி சந்தோஷம் கொண்டான்…
மகாவை மேலே வா என்று கண் காண்பித்து விட்டு வந்துவிட்டான் ஆனால் இப்போது மகிழுக்கு மகாவிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை மகாவையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளை கட்டி அணைக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அவள் சொன்ன வார்த்தை அவனது நெஞ்சில் தீயாக சுட்டது அவள் அருகில் சென்று விட்டு அவளிடம் இருந்து விலகினான்…
மகாவிற்கு உடல் நடுங்கியது பிறகு தனது மகிழ் மாமாவையே பார்த்துக் கொண்டிருந்தால் அவன் அமைதியாக இருந்தவுடன் அவனது சட்டையை பிடித்து அவனது தாடையிலே ஒன்று போட்டால் நான் பேசிய வார்த்தை தவறுதான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் என்னை முழுவதாக கொன்று விடாதே என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் கல்லூரிக்கு நேரமாகுவதால் சாப்பிடாமல் கிளம்பினால் …
அவள் கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பு சமைத்த சாப்பாட்டை மட்டும் உணவு மேசை செய்யும் மீது வைத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டால் மகிழ் ஒரு இரண்டு நிமிடம் மகா சென்ற பிறகு மகாவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தான் பிறகு அவனுக்கு முத்து வேலை என்று அழைத்தவுடன் தனது நினைவில் இருந்து வெளியில் வந்து காலை உணவை சாப்பிட்டுவிட்டு எழில் எப்படியும் அவளை சாப்பிட வைத்து விடுவான் என்பதை உணர்ந்ததால் எழிலுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அவள் சாப்பிடவில்லை என்று அனுப்பி விட்டு ஊரில் உள்ளவர்களிடம் பேசலாம் என்று கீழே இறங்கி சென்றான் …
வீட்டில் உள்ள அனைவரும் செல்லும் மகிழையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஊரில் அனைவரும் திருவிழாவிற்கு ஒத்துக் கொள்வார்களா என்று எண்ணினார்கள் அவர்கள் எண்ணுவது போல் ஊரில் உள்ள அனைவரும் திருவிழாவிற்கு ஒத்துக் கொள்வார்களா …
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
சைலன்ட் லீடர்ஸ் கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
மிக்க நன்றி 🙏
ஏன் தேர்த் திருவிழா நடத்தக் கூடாதா என்ன…???