Skip to content
Home » மகாலட்சுமி 74

மகாலட்சுமி 74

மகிழ் எழிலுக்கு மகா காலை உணவு சாப்பிடவில்லை என்று மெசேஜ் அனுப்பி விட்டு ஊரில் உள்ள பொதுமக்களை பார்ப்பதற்கு சென்றிருந்தான் பஞ்சாயத்து கூட்டி அனைவரிடமும் கேட்டான் அதில் கருப்பையா தாத்தா மகிழனின் அப்பா வேலு கந்தன் மணி நால்வரும் கலந்து கொண்டார்கள் …

அனைவரும் திருவிழா நடத்துவதற்க்கு சம்மதம் என்றவுடன் அன்றே கோவிலில் குறியும் கேட்டார்கள் சாமியும் திருவிழா வைக்க உத்தரவு குடுத்தவுடன் அவர்கள் ஊரில் இருக்கும் செல்லியம்மன் துஷ்டமான சாமிக்கு திருவிழா செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது அது கொஞ்சம் பெரிய தேர் இன்னும் 20 நாட்களில் திருவிழா என்றும் பேசியிருந்தார்கள்..

மகிழ் அங்கே கூட்டத்தில் வைத்தே சொல்லியிருந்தான்  அனைவரும் அவர்களால் முடிந்ததை அவர்களும் ஒவ்வொருவரும் தரட்டும் ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் இவ்வளவுதான் காசு என்று ஓரளவுக்கு குறைந்தபட்ச காசையையே  சொன்னான் பெரியவர்கள் அனைவரும் கேட்டார்கள் இப்படி காசு சேர்த்தால் எப்படி திருவிழாவை நடத்துவது அதுவும் இது பெரிய தேர் என்று சொன்னார்கள் …

நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஐயா நான் உங்களை தவறு சொல்லவில்லை ஆனால் அனைவரும் தேர்க்கு என்று பணம் போட வேண்டும் அல்லவா ஊரிலுள்ள பெரியவர்கள் பெரிய தலை கட்டுகள் அவர்களால் முடிந்த பணத்தை தரட்டும் என்று விட்டு தனது தாத்தாவை பக்கம் பார்த்து எனது தாத்தாவும் ஒரு பெரிய அமௌன்ட் தருவார் நானும் ஒரு தலைவராக என்னால் முடிந்ததை செய்கிறேன்…

மற்றபடி எங்கள் வீட்டிலே  ஐந்து ஆறு தலை கட்டு இருக்கிறது நாங்களும் எங்களால் முடிந்ததை செய்வோம் அதேபோல் ஊரில் உள்ள இளைஞர்களும் அவர்களால் முடிந்ததை செய்வார்கள் மற்றபடி ஏழை எளிய மக்கள் அவர்களால் முடிந்ததை மட்டும் தரட்டும் என்று கூறினான் சுற்றியுள்ள பெரியவர்களுக்கும் அதுவே சரி என்று பட்டதால் அனைவரும் சரி என்று விட்டு கூட்டத்தை கலைத்து விட்டு சென்று விட்டார்கள்…

மாலை 6:00 மணி போல்  பெரியவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள் மகா அப்பொழுதுதான் கல்லூரி முடித்து வீட்டுக்குள் வந்தால் அனைவரும் பூந்தோட்டத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தனது கைப்பையை வண்டியிலே வைத்துவிட்டு வந்தால் நிலா வேணி இருவரும் அங்க நின்று கொண்டிருப்பதை பார்த்தால் எழில் இல்லை என்றவுடன் எழிலுக்கு போன் செய்தால் …


அவனும் வீட்டிற்கு அப்பொழுதுதான் வந்தான் பிறகு அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றான் ஐயா ஊர் தலைவரின் முறையில நான் இவ்வளவு அமௌன்ட் தரேன் என்று சொல்லி 5 லட்சம் என்ற சொன்னான் வீட்டில் அனைவரும் மகிழையே பார்த்தார்கள் மகீழ் தனது தாத்தாவை பார்த்தான் அவர் நான் 10 லட்சம் தருகிறேன் என்றார்…

பிறகு ஊரில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்ததை தாருங்கள் என்று விட்டு என் வீட்டிலும் எழிலுக்கு திருமணம் ஆகவில்லை அவனை தவிர இத்தனை தலை கட்டி இருப்பதால் அவர்கள் தருவார்கள் என்று விட்டு இளையவர்களும் அமௌன்ட் தருவார்கள் சரி என்று கூறி ஊரில் உள்ள பெரியவர்களை அனுப்பி வைத்தான் அவர்கள் அனைவரும் சென்றவுடன் எழிலிடம் நிலா மாமா உனக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகலையா என்றால் ….

எழில் நிலாவை முறைத்து கொண்டே அப்புறம் என்னடி என்று கேட்டான் எனக்கும் தானே திருமணமாகவில்லை என்றால் எழில் அவளது தலையில் கொட்டி விட்டு போடி நாயே என்று திட்டி விட்டு வீட்டிற்குள் சென்றான்  கருப்பையா தாத்தா மகிழிடம்  டேய் உன்னிடம் பணம் இருக்கிறதா என்றார் மகிழ் தனது தாத்தாவை ஒரு இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு நானும் கையில் பணம் வைத்திருக்கிறேன் தாத்தா ..

ஒன்றும் பிரச்சனை இல்லை ஊருக்காக செய்வது தான் கோவில் விஷயம் இதெல்லாம் கணக்கு பார்த்துக் கொண்டிருக்க முடியாது நான் என்னுடைய ஆஃபீஸை விரிவாக்கம் செய்வதற்காக வைத்திருக்கும் பணம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று விட்டு மகாவை பார்த்தான் மகா எதுவும் பேசாமல் நின்று கொண்டு இருந்து விட்டு மேலே மொட்டை மாடிக்கு சென்று விட்டால் …

மறுநாள் காலையில் ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள் அப்பொழுது மகிழிடமும் கருப்பையா தாத்தாவிடம் ஐயா நீங்கள் தான் ஊருக்கு பெரிய தலை கட்டு வருட வருடம் உங்கள் வீட்டில் இருந்து தான் அனைத்தையும் எடுத்துக்காட்டி செய்வீர்கள் என்று சொன்னார்கள் உங்கள் வீட்டு இருந்து இந்த வருடம் யார் செய்வார்கள் என்று கேட்டவுடன் கருப்பையா தாத்தா மகிழைப் பார்த்தார் …

மகிழ் இனி என்று வேகமாக கத்தினான் இனி குழந்தை வைத்துக்கொண்டு வீட்டிலிருந்தாள் இனி குழந்தையை தூக்கி கொண்டு வேகமாக ஓடி வந்தால் தனது அண்ணன் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு அவனது வாயிலிருந்து தன்னை அழைப்பது கெட்டவுடன் வேகமாக வந்து நின்றாள் இவளும் எங்கள் வீட்டு வாரிசு தான் ஐயா பெண் பிள்ளை என்று எண்ணாதீர்கள்…


இவளுக்கு அனைத்து மரியாதையும் தாருங்கள் என்று மகாவை பார்த்துக் கொண்டே சொன்னான் மகா கண்மூடி திறந்தவுடன் அமைதியாகி விட்டான் இனி தனது அண்ணனை பார்த்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தால் அனைவரும் எதுவும் பேசாமல் இருந்தவுடன் சரி என்று விட்டு அமைதியாகிவிட்டால் உதிரினும் இனியும் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் இந்த வீட்டில் அடுத்த தலைமுறைகாக இருந்தது என்று சொன்னான் ….

மகிழ்  உனக்கு தான் திருமணமாகி விட்டதே நீ தானே அடுத்த தலைமுறை என்ற கூட்டத்தில் ஒரு பெரியவர் கேட்டார் ஐயா நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது ஆனால் இவளும் எங்கள் வீட்டு வாரிசு தானே அடுத்த தலைமுறையாக இவள் இருப்பாள் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அனைவரையும் கையெடுத்து கும்பிட்டான் அனைவரும் அமைதியாக சென்றுவிட்டார்கள்…

மகா கல்லூரிக்கு கிளம்பி விட்டால் மாலை பஞ்சாயத்து ஆபீஸ்க்கு வந்திருந்தால் முத்து இருவரையும் பார்த்து திரு திருவென என முழித்தான் இருவருக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என்று மகிழ் வாயிலாகவும் எழில் வாயிலாகவும் முத்து தெரிந்து கொண்டான் இப்பொழுது மகா அண்ணி எதற்கு வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லையே என்று எண்ணிவிட்டு என்ன அண்ணி இவ்வளவு தூரம் என்று கேட்டான் …

நான் உங்க அண்ணனிடம் பேச வந்திருக்கிறேன் உன்னிடம் இல்லை என்றால் அண்ணனிடம் வீட்டில் பேசலாமே என்று கேட்டான் முத்து மகிழ் சிரித்தான் உங்க அண்ணன் வீட்டில பேசினா தானே நான் பேசுவதற்கு உங்க அண்ணன் வீட்டுக்கு வரதே நைட் 11 மணிக்கு இதில் எங்கிருந்து பேசுவது நாலு மணிக்கு எழுந்து ஓடிருவாரு என்றால் மகிழை பார்த்து முறைத்துக் கொண்டு மகிழுக்குமே சிறிது வருத்தமாக இருந்தது …

அவன் வேண்டும் என்று எதையும் செய்யவில்லை திருவிழா இன்னும் 20 நாட்களில் இருக்கிறது என்று கூறியதால் வேலை பளு அதிகமாக இருந்ததால் ஊர்த்தலைவர் என்பதால் திருவிழாவை எடுத்துக்காட்டி செய்து கொண்டிருப்பதால் அதைப் பற்றி அலைந்து கொண்டிருந்தான் அவனது கம்பெனிக்கு சென்று கூட மூன்று நாட்கள் ஆகிறது பிறகு மகிழ் முத்துவுக்கு கை கண் காண்பித்தவுடன் முத்து வெளியே சென்று விட்டான் …

மகிழ் என்ன என்றான்  மகா மகிழையையே  பார்த்துக் கொண்டு இருந்தாள் இனியை எதற்கு எல்லாத்தையும் எடுத்துக்காட்டி செய்ய சொன்ன மாமா என்று கேட்டால் மகிழுக்கு ஒரு மாதிரியாக இருந்தது ஏன் அதுல என்ன உனக்கு பிரச்சனை என்றான் இல்ல நீ இருக்கும்போது என்றவுடன் மகிழ் அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான் …

அப்பொழுதுதான் எழிலும் தனது அண்ணனை பார்க்க வரலாம் என்று வந்தான் மகாவை தன்னுடைய அண்ணன் அடிக்க கை ஓங்கியதை பார்த்துவிட்டு  வேகமாக ஓடி வந்து தனது அண்ணனின் கையை கீழே இறக்கினான் மகிழை பார்த்து அண்ணா என்னாச்சு என்று கேட்டான் மகிழ் மகா சொன்னதை சொன்ன உடன் அண்ணா நானும் அதை பத்தி பேச தான் வந்தேன் என்றான்….

ரெண்டு பேருக்கும் இப்ப என்ன ஏன் அவ இந்த வீட்டு வாரிசு இல்லையா அவள்  திருவிழாவை எடுத்துக் கட்டி செய்யக்கூடாதா நம்ம குடும்பத்தோட அடுத்த தலைமுறை இருந்து அவ செய்வதால் உங்கள் இரண்டு பேருக்கும் இப்போ என்ன வந்துச்சு என்று கத்தினான் அண்ணா ப்ளீஸ் கோபப்படாத நாங்க ரெண்டு பேரும் எந்த தப்பான எண்ணத்திலும் சொல்ல மாட்டோம்…..


இன்னொரு விஷயம் நாங்க ரெண்டு பேரும் இதைப் பற்றி இதுவரைக்கும் டிஸ்கஷன் பண்ணல நான் என் மனசுல இருக்குறத சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்திருக்கும் விஷயம் கூட இவளுக்கு தெரியாது அதேபோல் இவள் உன்னை பார்க்க வந்திருப்பதும் எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை கூட யோசித்து இருக்கலாம் என்று விட்டு மகிழை பார்த்தான்…


மகிழ் அமைதியாக எழிலை பார்த்துக் கொண்டிருந்தான் இனிக்கு இப்பொழுதுதான் குழந்தை பிறந்து இருக்கிறது மூன்று மாதம் தான் ஆகிறது பச்சை உடம்பு காரி குழந்தைக்கு பால் தர வேண்டும் என்பதால் மட்டும் தான் நான் சொல்ல வந்தேன் எனக்கு தெரிந்து மகாவும் அந்த காரணத்திற்காக தான் சொல்ல வந்திருப்பாள்  என்று நினைக்கிறேன் என்றான்…


பிறகு  மகிழ் மகாவை பார்த்தான்  மகா கண்மூடி திறந்தவுடன் மகாவை பார்த்து சாரி என்றான் அவன் சாரி என்றவுடன் மகாவின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது பிறகு எழிலை பார்த்து சரி டா நீ பார்த்துட்டு வா எனக்கு வேலை இருக்கு என்று விட்டு மகிழை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டால் மகிழுக்கு வருத்தமாக இருந்தது…

மகிழ் மகாவை தவறாக எண்ணி கை ஓங்கவில்லை அவன் ஏதோ ஒரு எண்ணத்தில் கை ஓங்கி விட்டான் இப்பொழுது அதை எண்ணி வருந்தினான் பிறகு எழில் தான் இப்ப என்ன அண்ணா முடிவு பண்ணி இருக்க என்று கேட்டேன் டேய் நீ சொல்வதெல்லாம் யோசிக்காமல் தான்  நான் இருப்பேனா இதில் ஒரு விஷயம் இருக்கிறது அடுத்த தலைமுறையாக திருமணம் ஆனவர்கள் மட்டும்தான் அனைத்தையும் எடுத்துக்கட்டி செய்ய முடியும்…

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நானோ மகாவோ செய்ய முடியாது என்றவுடன் என்ன சூழ்நிலை நீ அவள் மேல் இருக்கும் கோபத்தால் சொல்கிறாயா என்று வேகமாக கத்தினான் மகிழ் சிரித்துக்கொண்டே லூசு மாதிரி பேசாதே கோபத்தில் இருக்கிறேன் தான் இல்லை என்று சொல்ல மாட்டேன் கோபத்தில் இருக்கிறேன் என்பதற்காக அவளை அனைத்திடத்திலும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறேனா….


நாங்கள் இருவரும் இப்போது அந்த குடும்பத்தில் ஒரு ஆளாகவே இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் என்றவுடன் எழிலுக்கு கஷ்டமாக இருந்தது தனது அண்ணனையே பார்த்துக் கொண்டு இருந்தான்  கொஞ்சம் புரிந்து கொள் டா நீயும் எதுவும் பண்ண முடியாது முகிலோ உதிரனோ செய்யணும் என்று நம்ம சொன்னா ஊர்ல இருக்கிறவங்க கொஞ்சம் தப்பா பாப்பாங்க அதனால்தான் இனியை செய்ய சொல்லி இருக்கேன்….


அதுமட்டுமில்லை நான் சொல்வதை கொஞ்சம் புரிந்து கொள் அவள் கோவிலில் மட்டும் தான் நம் வீட்டு வாரிசாக அனைத்தையும் எடுத்துக் கட்டிக்கொண்டு பார்ப்பாள் மற்றபடி அவள் செய்ய வேண்டிய வேலை அனைத்தையும் நீ நான் முகில் உதிரன் அனைவரும் பார்த்துக் கொள்ளலாம் சரியா என்றான்….


மகிழ் தனது அண்ணன் சொல்வது சரியாகப் பட்டதால் சரி என்று விட்டு அமைதியாக  அனைத்து வேலைகளும் எப்படி செல்கிறது என்று கேட்டு விட்டு சென்றான் மகா மகிழ் இருவருக்கும் இருக்கும் மன வருத்தங்கள் எப்பொழுது நீங்கும் ….



மகிழ் இந்த திருவிழாவை நல்ல முறையில் நடத்தி முடிப்பான என்பதை நாம் வரும் பதிவுகள் பார்க்கலாம் …

அன்புடன்

❣️தனிமையின்  காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 74”

  1. CRVS2797

    ஆமா,..்வன் ஆங் ஊங்ன்னா அவளை அடிக்க கை தூக்கட்டும், இவ அவனை முறைச்சு தள்ளட்டும்…
    இதே வேலையாப் போச்சு ரெண்டு பேருக்கும். வீட்டுக்கு மூத்த வங்க இவங்க மட்டும் தான் இப்படி சண்டை போட்டுட்டு திரியுறாங்க. இளசுங்க எல்லாம் சைலண்ட்டா தான் இருக்காங்க. இவங்களுக்கு மட்டும் என்ன வந்துச்சு கேடுன்னு தெரியலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *