Skip to content
Home » மகாலட்சுமி 75

மகாலட்சுமி 75

கிட்டத்தட்ட இப்படியே 20 நாட்கள் சென்றது இந்த இருபது  நாட்களில் மகிழ் தினமும் இரவு 12:00 மணி போல் தான் வந்து கொண்டிருந்தான் காலை 4 மணிக்கு எழுந்து சென்று விடுவான் சுந்தரி தான் கதவை திறந்து விட்டுக் கொண்டு இருந்தார் …

முதல் நாள் மகிழ் கதவை தட்டலாம் என்று எண்ணி வந்தான் தனது தாய் சொன்னதை எண்ணி விட்டு இப்பொழுது மகாவிற்க்கும் போன் செய்ய விரும்பாமல் வேணிக்கு போன் செய்தான் தனது மகனின் பைக் சவுண்ட் கேட்டுவிட்டு சுந்தரியே கதவைத் திறந்தார் அவன் வரும் வரை வரவேற்பரையில் தான் அமர்ந்திருந்தார்…

வேலு கூட என்ன உன் மகன் மேல கோவம் என்று சொன்ன அவனுக்காக காத்திட்டு இருக்க என்று கேட்டார் சிரித்து கொண்டே சுந்தரி தனது கணவனை பார்த்து முறைத்துவிட்டு சென்று கதவை திறந்து விட்டார் வேணி  தான் கதவை திறக்கிறாள் என்று எண்ணினான் மகிழ் ஆனால் தனது தாய் கதவை திறப்பதை பார்த்தவுடன் மகிழ் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றான்…

வேணி அப்பொழுதுதான் அவள் அறையில் இருந்து வந்தால் சுந்தரி வேணி நீ போய் தூங்கு என்றவுடன் மகிழ் அண்ணனுக்கு சுந்தரி அம்மா கதவை திறந்து விட்டு விட்டார்கள் என்று எண்ணி விட்டு அமைதியாக அவளது அறைக்கு சென்று விட்டாள் திருவிழா என்று சொன்னவுடன் முகில் உதிரன் இருவரையும் காப்பு கட்ட சொல்லிவிட்டான்  மகிழ்…

எழிலும் காப்பு கட்ட சொன்னான் வீட்டில் உள்ள அனைவரும் காப்பு கட்டி இருந்தார்கள் மகிழ் காப்பு கட்ட வில்லை அனைத்தையும் முன் நின்று செய்து கொண்டு இருந்தான் இப்படியே திருவிழாவிற்கு முன்னாடி நாளும் வந்தது இரவு 8 மணி போல் எழில் அவனது கையில் நிறைய பைகளை எடுத்துக் கொண்டு வந்தான் சுந்தரி தான் என்னடா இது என்று கேட்டார் …

இரு மா என்று விட்டு தாத்தா பாட்டி என்று வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்தான் அனைவரும் வந்தவுடன் காவேரி தான் என்னடா இத்தனை பை என்று கேட்டார் அத்தை நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் இத்தனை வருடம் இந்த வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது என்றால் அனைத்தையும் மகிழ் தான் எடுத்துக்காட்டி செய்தான் இப்பொழுது அவன் இல்லை…

அவன் எதுவும் செய்யவும் மாட்டான் அவன் செய்தாலும் இங்கு யாரும் விரும்பி ஏற்றுக் கொள்ளவும் மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும் ஆகையால் அவனிடத்தில் இருந்து அனைவருக்கும் நான் திருவிழாவிற்கு என்று துணி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொள்ளுங்கள் என்றான் காவேரிக்கு கண்கள் கலங்கியது ஆனால் வேறு எதுவும் பேசாமல் முதல் ஆளாக கை நீட்டினார்…

தனது அத்தை கை நீட்டியவுடன் அவருக்கென்று வாங்கிய புடவையை அவரது கையில் வைத்தான் பிறகு தனது மாமா கந்தனுக்கும் கொடுத்தான் பிறகு தனது தாத்தா பாட்டி என்று வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தான் எடுத்து கொண்டு வந்த துணியை கொடுத்தான் எழில் நிலா வாங்கிக் கொள்ள மாட்டேன் என்றால் எழில் நிலாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே உனக்கு துணி வேண்டுமென்றால் நீ உன் மாமாவிடம் தான் கேட்க வேண்டும் நிலா..

அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்றான் அப்புறம் எதற்காக நீ வாங்கிக் கொண்டு வந்தாய் அவர் தான் வாங்கித் தருகிறார் இல்லை நீ அமைதியாக விட வேண்டியது தானே என்று கத்தினால் எல்லோருக்கும் எடுக்கும் போது என்னால் உனக்கு மட்டுமே எடுக்காமல் இருக்க முடியாது நாளைக்கு இப்பொழுது பேசிய உன்னுடைய இந்த வாயே நாளை வேறுவிதமாக பேசும் என்னுடைய மகிழ்  மாமா எடுத்து கொடுத்தால் அனைவருக்கும் எடுத்துக் கொடுக்க முடிந்த உன்னால் எனக்கு மட்டுமே எடுத்து தர முடியாது என்று கேட்பாய் என்று சிரித்துக் கொண்டே சொன்னான் …

அவனது வாய் என்னவோ சிரிக்க செய்தது ஆனால் மனம் வலிக்க தான் செய்தது அப்பொழுது மகிழும் வீட்டிற்கு வந்தான் இரவு உணவு சாப்பிடுவதற்கு எவ்வளவு வேலையாக இருந்தாலும் இரவு உணவு வீட்டில் தான் வந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறான் இருப்பதே இரண்டு பேர் தான் நான் வரவில்லை என்றால் மகா சாப்பிட மாட்டால் என்று மகிழ் உணர்வான்…

என்ன தான் தனது தம்பி எழில் சாப்பிட வைத்து விடுவான் என்று எண்ணினாலும் அவள் சாப்பிட மாட்டாள் என்பதை முதல் இரண்டு நாட்களில் தெரிந்து கொண்டான் எழிலை விட்டு அவளை சாப்பிட வைக்க சொன்னான் அவனும் எவ்வளவு கெஞ்சி பார்த்து விட்டான் ஆனால் மகா சாப்பிடுவதாக இல்லை மகிழ் மாமா வேலை வேலை என்று சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள் அவர் எப்பொழுது வருகிறாரோ நான் அப்பொழுது அவருடனே சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டால்…

ஆகையால் அவளுக்காகவே அவன் தினமும் இரவு 9 10 மணிக்குள் வந்து சாப்பிட்டுவிட்டு பிறகு கோவில் வேலை என்று அலைத்துவிட்டு இரவு தினமும் 11 மணி 12 மணி போல் தான் வந்து கொண்டிருக்கிறான் இன்று இரவு ஒன்பதரை மணி போல் வீட்டிற்கு வந்தான் அவன் வீட்டிற்குள் வரும்போது அனைவரும் கையில் துணிப்பை வைத்திருப்பதை பார்த்தான்…

அனைவர் கையில் இருக்கும் துணிப்பை பார்த்துவிட்டு இறுதியில் தனது தம்பி எழிலை பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் மொட்டை மாடிக்கு சென்று விட்டான் அவன் படி ஏறும் பொழுது நிலா மாமா ஒரு நிமிஷம் என்று கத்தினாள் மகிழும் நின்று நிலாவை பார்த்தான் நாளை திருவிழா எனக்கு திருவிழாவிற்கு போட புது துணி வேண்டும் எனக்கு துணி எங்கே என்றால் அதுதான் நீ கையில் வைத்திருக்கிறாயா அப்புறம் என்ன என்று கேட்டான்…

இது எழில் மாமா வாங்கி கொடுத்தது நான் அதைப்பற்றி கேட்கவில்லை எப்பொழுதும் நீதானே எனக்கு வாங்கி தருவாய் நீ வாங்கி தர வேண்டிய துணி எங்கே  என்று கேட்டால் எழில் அமைதியாக தனது அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ் இப்பொழுது என்ன சொல்வான் என்று மகிழையே பார்த்தார்கள் மகிழ் சிரித்துக் கொண்டே எடுத்து தரவில்லை என்றால் சும்மாவா விட்டு விடுவாய் காரில் இருக்கிறது போய் எடுத்துக் கொள் என்றான் …

நிலா வேகமாக திரும்பி எழிலை பார்த்து பழுப்பு காண்பித்து விட்டு வெளியில் நிற்கும் காருக்கு ஓடினாள் அப்பொழுது வேணியும் வந்து நின்றால் அண்ணா எனக்கு என்றால் வேணி அப்படி ஒரு வார்த்தை கேட்பாள் என்று வீட்டில் உள்ள யாருமே என்னவில்லை நிலா எப்பொழுதுமே மகிழிடம்  கேட்பாள் என்பதால் அமைதியாக இருந்தார்கள் இனி கூட தனது அண்ணன் எடுத்து தர மாட்டான் என்பதால் அமைதியாக தான் இருந்தால்…

ஆனால் வேனி தனக்கு எங்கே துணி என்று கேட்பாள் என்று வீட்டில் உள்ள யாருமே என்ன வில்லை அப்பொழுது மகிழ்  வேணியை பார்த்துக் கொண்டிருந்தான் ஏன் உனக்கு உன்னுடைய கணவன் எடுத்து தரவில்லையா என்று கேட்டான் வேணி அமைதியாக இருந்தால் அண்ணா எனக்கு அவர் எடுத்து தருவார் நான் அவர் எடுத்துத் தர மாட்டார் என்று சொல்லவில்லை சரியா அது மட்டும் இல்லாமல் அவர் என்னிடம் கொடுத்துவிட்டார் …

மாலையே எனக்கென்று ஒரு துணியும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் நிலாவுக்கும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் அதேபோல் உதிரன் மாமாவும் நிலாவுக்கு எடுத்துக் கொண்டுதான் வந்து கொடுத்திருக்கிறார்கள் இப்பொழுது எழில் அண்ணா வீட்டில் உள்ள அனைவருக்கும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் நான் அதைப்பற்றி கேட்கவில்லை…

இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் நீங்கள் எப்பொழுதும் எடுத்துக் கொடுப்பீர்கள் என்று நிலா எத்தனையோ முறைகளில் சொல்லி இருக்கிறாள் நான் இந்த வீட்டிற்கு வந்து முதல் விசேஷம் இதுதான் நீங்கள் நானும் இந்த வீட்டுப் பெண் தான் என்று எண்ணி எனக்கு இதுவரை எந்த துணியும் எடுத்துக் கொடுத்ததில்லை அதை பற்றி தான் நான் இப்பொழுது கேட்கிறேன் …

எனக்கு எங்கே துணி  அண்ணா இல்லை எனக்கு துணி எடுத்துக் கொண்டு வரவில்லையா என்று கேட்டால் வீட்டில் உள்ள அனைவரும் வேனியை அதிர்ச்சியாக பார்த்தார்கள் இவள் என்ன விட்டால் நான் இந்த வீட்டு பெண்ணில்லை என்று கூட கேட்பாள் போல என்று கோதை மனதில் எண்ணினார் மகிழ் சிரித்துக் கொண்டே வேணி உனக்கும் காரில் துணி இருக்கிறது என்று அவன் சொல்வதற்கு  முன்பாகவே வேணி இந்த உனக்கு துணி என்று நிலா அவளது கையில் ஒரு புடவையை வைத்தால் ..

வேணி நிமிர்ந்து மகிழைப் பார்த்து சிரித்தாள் இது உனக்கென்று நான் வாங்கியதுதான் ஆனால் இதை நீ நாளை கட்ட வேண்டாம் உனக்கு உன்னுடைய கணவன் வாங்கி கொடுத்ததை கட்டிக் கொண்டு வா அதுதான் மரியாதை என்று மட்டும் சொல்லிவிட்டு முகிலை இறுதியாக பார்த்துவிட்டு அமைதியாக மாடிப் படி ஏறிச் சென்றான் மகிழ் மேலே சென்று சாப்பிட அமர்ந்தவுடன் மகா அவனுக்கு சாப்பாடு பரிமாறி கொண்டு இருந்தால் …

பிறகு அவளும் உட்காந்து சாப்பிட்டால் இருவரும் சாப்பிட்டு முடித்து மகிழ் வரவேற்பு அறையில்  வந்து உட்கார்ந்தான் மகா பால் காய்ச்சி கொண்டு இருந்தாள் அப்பொழுது எழில் மேலே வந்தான் என்னடா இந்த நேரத்தில் வந்திருக்கிறாய் என்று மகா கேட்டால் ஒரு முக்கியமான விஷயமாக தான் என்று சொல்லிக்கொண்டே மகிழ் கையில் ஒரு கவரை வைத்தான் மகாவின் கையிலும் ஒரு கவரை கொடுத்தான் …

மகிழ் எதுவும் பேசாமல் என்னென்று பிரித்துப் பார்த்தான்  மக தான் என்னடா என்று கேட்டு கொண்டே பிரித்துப் பார்த்தால் அதை பிரித்து பார்த்துவிட்டு அதில் புதிய பட்டுப் புடவை இருப்பதை பார்த்துவிட்டு அமைதியாக அங்கு உள்ள சேரின் மீது வைத்தால் என்ன ஆச்சு மஹா என்று கேட்டான் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் சமையலறைக்குச் சென்று பால் எடுத்துக் கொண்டு வந்து மகிழ் கையில் கொடுத்தாள் …

எழில் இருப்பதால் சாப்பிட்டு விட்டாயா என்று கேட்டுவிட்டு அவன் சாப்பிட்டேன் என்று சொன்னவுடன் அவனது கையில் ஒரு டம்ளர் பால் கிளாசை கொடுத்தால் வாங்கிக் கொண்டே அமைதியாக நின்றான் இதை இருவரும் நாளை திருவிழாவிற்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் பால் குடித்து விட்டு கிளாசை வைத்துவிட்டு சென்று விட்டான்..

எழில் சென்றவுடன் ஒரு பத்து நிமிடம் மகா மகிழை  பார்த்துக்கொண்டு இருந்தால் மகிழ் எதுவும் பேசாமல் எழில் கொடுத்த இருவரது உடையையும் அவர்களது அறையில் சென்று வைத்துவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டான் அவனுக்கு கொஞ்சம் வேலை இருந்தது அதனால் சென்று விட்டான் இரவு 12 மணி போல் தான் வீட்டிற்கு வந்தான் அவன் வரும்பொழுது மகா எப்பொழுதும் தூங்கி இருப்பாள் இல்லை அவளது அறையில் உட்கார்ந்து கல்லூரி விஷயமாக எதையாவது செய்து கொண்டிருப்பாள் …

ஆனால் இன்று நிலாவை வெரிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் கைகட்டி கொண்டு மகிழிடம் ஒரு சாவி இருப்பதால் மகிழ் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து சொல்லிவிட்டான் திருவிழா ஆரம்பிக்கும்போதே  வேணியை கூப்பிட்டு வேணி எனக்காக யாரும் தூங்காமல் காத்துக் கொண்டிருக்க வெண்டாம் வீட்டை கதவு தாழ்ப்பாள் போடாமல் பூட்டி மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்…

என்னிடம் ஒவ்வொரு சாவி இருக்கிறது நான் வெளியே கதவை திறந்து கொண்டு வந்து பூட்டிவிட்டு மேலே சென்று கொள்கிறேன் என்னால் யாருடைய தூக்கமும் வீணாக வேண்டாம் என்று சொன்னான் அது தாய்க்காக மட்டுமில்லை மகா வேணிகாகவும் தான் அவ்வாறு சொன்னான் தான் லேட்டாக வருவதால் மூவரின் தூக்கமும் கெடுக்கிறது என்பதை உணர்ந்ததால் அவன் அவ்வாறு சொன்னான் …

அதை சுந்தரியும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை தனது மகன் மூவரையும் மனதில் வைத்து தான் அவ்வாறு சொல்கிறாள் என்று எண்ணியதால் அவரும் சரி என்று சொல்லிவிட்டார் அன்றிலிருந்து அவனிடம் இருக்கும் சாவியை வைத்து கதவை திறந்து கொண்டு வந்து விடுவான் இப்பொழுது மகா மொட்டை மாடியில் நின்று கொண்டு இரவின் வெளிச்சத்தை வெரித்து பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் அவனது மனது காயமடைந்தது…

அவளையை பார்த்துக் கொண்டு இருந்து அவளது அருகில் வந்து நின்றான் மகா தன் அருகில் வந்து நிற்கும் உருவத்தை திரும்பிப் பார்த்துவிட்டு தனது காதல் கணவன் தான் என்றவுடன் அமைதியாக திரும்பவும் தான் விட்ட வேலையை செய்து கொண்டிருந்தாள் அதாவது நிலாவையே வெரிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ் மகா மகா என்று இரண்டு முறை அழைத்தான்…

அமைதியாக இருந்தாள் தோலில் கை வைத்தவுடன் மகா மகிழை முறைத்து பார்த்து திரும்பினாள் மகள் இந்த முறைப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதில் எண்ணினான் இப்பொழுது மகிழ் எதற்காக மகாவின் தோளில் கை வைத்தான் மகா மகிழை ஏதாவது திட்டுவாளா …

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 75”

  1. CRVS2797

    அய்யய்யே…..அவன் பொண்டாட்டி, அதனால அவன் கையை வைச்சான்.. அதைப்பத்தி நமக்கென்ன…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *