Skip to content
Home » மகாலட்சுமி 78

மகாலட்சுமி 78

மகா தீ மிதிக்கும் இடத்திற்கு வந்து நின்றால் அவள் நின்ற பிறகு ஒவ்வொருவராக வந்து நின்றார்கள் பிறகு நேரம் ஆவதை உணர்ந்து தீ மிதிக்கச் சொன்னார்கள் மகா விற்கும் முன்பு இரண்டு பேர் தீ மிதித்தார்கள் பிறகு மகா தீ மிதித்தால் மூன்றாவதாக மகா தீமிதிக்க இறங்கினால் …

கொஞ்ச தூரம் சென்றவுடன் மகாவிற்கு மயக்கம் வருவது போல் இருந்தது தான் காலையில் பால் கூட குடிக்காமல் வந்ததால் மயக்கம் வருகிறது போல விரதம் இருப்பதால் தான் இப்படி இருக்கிறது என்று எண்ணினால் தன்னை சமாளித்து கொண்டு இரண்டு அடி எடுத்து வைத்திருப்பாள் அவள் மயங்கி கீழே விழப்போவதை  சுந்தரி உணர்ந்து எழில் என்று வேகமாக கத்தினார்…

எழில் வேகமாக ஓடிவந்து மகாவை தாங்கிப் பிடித்தால் கீழே விழாமல் பிறகு அவளை அழைத்துக்கொண்டு அவளுடனே அவனும் தீ மிதித்துக் கொண்டு வந்தான் அவள் சுயநினைவில் இல்லை மயக்க நிலைக்குச் சென்றுவிட்டால் மயக்க நிலையில் தான் அவளை கைத்தாங்கலாக அவளது வேண்டுதல் பலிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவளை நடக்க வைத்தே அழைத்துக் கொண்டு வந்தான் …

தீ மிதிக்கும் இடத்தை விட்டு நகர்ந்து வந்து மகாவை நிக்க வைத்தான் அப்பொழுது வேகமாக சுந்தரி வந்து மகாவைத் தாங்கினார் அவளது தாடையில் தட்டினார் மகா மகா என்று கத்தினார் இப்பொழுது பாரடா எப்படி மயங்கி விட்டாள் என்று சாப்பிடாதால் தான் எல்லாம் உன்னால் தான் உன்னை நம்பி தானே அவன் விட்டுச் சென்றிருக்கிறான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ ….

இப்படி நீ  அவளை பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறாயே என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கத்தினர்  எழில் அமைதியாக தனது தாய் திட்டுவதை கேட்டுக் கொண்டிருந்தான் என்னடா அவள் மயங்கி விட்டால் நீ எனக்கு என்ன என்பது போல் இருக்கிறாய் என்று கத்தினார் அம்மா ஒரு நிமிடம்  அமைதியாக இருக்கிறீர்களா என்றான்…

அருகில் உள்ள ஒரு பாட்டியிடம் பாட்டி நீங்கள் இவளுக்கு என்ன என்று பாருங்கள் என்றான் டேய் என்ன விளையாடுகிறாயா அவள் சாப்பிடாமல் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறாள் நீ என்னவென்றால்  இவர்களை பார்க்க சொல்கிறாய் மருத்துவமனைக்கு அழைத்து செல் என்றார் கொஞ்ச நேரம் அமைதியாக இரு அம்மா  என்று சொல்லிவிட்டு அந்த பாட்டியை பார்க்க சொன்னான் சுந்தரி கத்திக் கொண்டே இருந்தார் …


தனது இளைய மகனை திட்டி கொண்டே மகாவின் தாடையிலும் லேசாக தட்டினார் தனது அத்தை தட்டுதட்ட அவள் லேசாக கண்விழித்தால் அவள் கண் விழிக்கும் நேரத்தில் அந்த பாட்டி மகாவின் கையைப் பிடித்து பார்த்துவிட்டு சுந்தரி எதற்கு இப்படி பதட்டமாக இருக்கிறாய் ஒன்றும் பிரச்சனை இல்லை எல்லாம் நல்ல விஷயம் தான் என்றார் சுந்தரிக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் வீட்டில் இல்லை யாருக்குமே ஒன்றும் புரியவில்லை …

அனைவரும் அந்த பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் உன் வீட்டு மகாலட்சுமி மாசமாக இருக்கிறாள் ரெட்டை நாடி துடிக்கிறது சுந்தரி அவள் வயிற்றில் உன் வீட்டு வாரிசு வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார் சுந்தரிக்கு ஒரு சில நிமிடம் ஒன்றுமே புரியவில்லை மகா வேகமாக நிமிர்ந்து எழிலை பார்த்தால் அப்போதுதான் சுந்தரி தனது இளைய மகனை பார்த்தார் அவன் கண் மூடி திறந்தவுடன் சுந்தரி வேகமாக செல்லியம்மன் தாயை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்…

அதேபோல் காவேரியும் சாமியை வேண்டினர் எழில் அதைப் பார்த்தான் காவேரி எழிலை பார்த்துவிட்டு மகாவை பார்த்தார் மகா தனது பெரியம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது அங்கு ஒருவன் வந்து உங்கள் அனைவரையும் மகிழ் அண்ணா  கோவில் சன்னதிக்கு அழைத்துக் கொண்டு வரச் சொன்னார் என்றவுடன் எழில் எழுந்து மகாவை எழுந்து நிற்க வைத்தான் ….

பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வா மகா என்று அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்றான் கோவிலின் அருகில் சென்றவுடன் மகா அண்ணனுக்கு தெரிந்தால் வருத்தப்படும் அதனால் நீயே நடந்து வா என்றான் அவளும் சரி என்று விட்டு மெதுவாக நடந்து வந்தாள் மகிழுடன் இன்னும் ஒரு சிலர் கோவில் சன்னதியில் இருந்தார்கள்…

அனைவரும் கோவிலுக்கும் சென்றார்கள் பூசாரி பரிவட்டம் கட்ட வேண்டும் என்று சொன்னார் பிறகு பூசாரியே வேலுவை பார்த்து ஐயா அடுத்த தலைமுறை மகிழ் தானே திருமணமாகிவிட்டது அல்லவா அதனால் அவருக்கு பரிவட்டம் கட்டிவிடலாம்  தானே என்று கேட்டார் வேலு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் பூசாரியும் பரிவட்டம் கட்ட மகிழ் அருகில் வந்தார்…

அப்பொழுது ஐயா ஒரு நிமிடம் என்று எழில் சொன்னான் என்னப்பா என்று கேட்டார் நான் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்னுடைய அண்ணனுக்கு பரிவட்டம் கட்ட வேண்டாம்   உங்களுக்கு என்ன எங்கள் வீட்டில் அடுத்த தலைமுறைக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் அவ்வளவுதானே முகிலுக்கும் திருமணமாகிவிட்டது அவனுக்கு பரிவட்டம் கட்டுங்கள் என்று முகில் வேணி இருவரையும் அருகில் அழைத்தான்…

முகில் திருத்திருவென  முழித்தவன் தனது அம்மாவை பார்த்தான் அவர் போ  என்பது போல் கண் காண்பித்தவுடன் வேணியை கைப்பிடித்து அழைத்து கொண்டு வந்து நின்றான்  பூசாரி மகிழை பார்த்தார் மகிழ் கண்மூடி திறந்தவுடன் பூசாரி முகிலுக்கு பரிவட்டம் கட்டி முடித்தார் பிறகு மகாவை அழைத்தார் வந்து  நின்றால் இந்த மகா சாமி பிரசாதம் நீ உன் கையால் வாங்கிக் கொள் என்று கொடுத்தார் …

அப்பொழுது நிலா நீ வாங்கிக் கொள் என்றான்  எழில் மகிழ் முறைத்தான் ஆனால் வேறு எதுவும் பேசவில்லை நிலா வேகமாக வந்து தனது புடவை முந்தானையை விரித்து வாங்கிக் கொண்டாள் மகிழ் சரி என்று அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார்கள் அப்பொழுது மகிழ் எழிலிடம் ஏன் மகா வாங்கினால் என்ன என்று கேட்பதற்காக அருகில் வந்தான்….

அப்பொழுது ஊரில் உள்ள ஒருவர் வந்து மகிழ் அங்கு நடக்கும் வேலையை வந்து பார் என்று ஒரு வேலையாக அழைத்துக் கொண்டு சென்றனர் மகிழும் சரி என்று எழிலை பார்த்துவிட்டு முறைத்துவிட்டு உதிரன் முகில் இருவரையும் என்னுடன் வாருங்கள் என்று அழைத்துக் கொண்டு சென்று விட்டான் அப்பொழுது எழில் தான் மகாவை பார்த்து மகா நாம் வீட்டிற்கு செல்லலாம் என்றான்…

மகா திருத்திருவென என முழித்தால் இது செல்லியம்மன் தேர் துஷ்டமான சாமி இப்பொழுது நீ இங்கு இருக்கக்கூடாது நாம் வீட்டிற்கு செல்லலாம் என்றான் சுந்தரியும் ஆமாம் என்று மண்டை ஆட்டினார் மகா சுந்தரியை திரும்பிப் பார்த்துவிட்டு அவர் தலையாட்டியவுடன் வேறு எதுவும் பேசாமல் எழிலுடன் இரண்டடி எடுத்து வைத்தால் பிறகு திருப்பி தனது தாத்தா பாட்டி இருவரையும் பார்த்தாள் …


அவர்கள் இருவரும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பது போல் கண் மூடி திறந்தவுடன் சரி என்று எழிலுடன் வீட்டிற்கு சென்று விட்டாள்  மாலை 3 மணி போல் தேர் வடம் பிடித்தார்கள் அப்பொழுது மகிழ் ஒருவரை அனுப்பி வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு வர சொன்னான் குடும்பத்துடன் தேர் வடம் பிடிக்கலாம் என்று வர சொன்னான்….


அப்போது  தேர் வடம் பிடிக்கும் இடத்தில் அனைவரும் இருந்தார்கள் எழில் மகா இருவருக்கும் இல்லை என்பதை உணர்ந்தான் மகிழ் நிலாவிடம் இரண்டு முறை நிலா மகா எங்கே என்று கேட்டான் நிலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை நிலா முகமும் சரியில்லை என்பதையும் உணர்ந்தான் பிறகு வேணியிடம் கேட்டான் அவள் எதுவும் பதில் சொல்லாமல் இருந்த உடன் நேரமாகுவதால் எழில் மகா இருவரும் இல்லாமல் மற்ற பெண் குடும்ப உறுப்பினர்களுடன் தேர் வடம் பிடித்து விட்டான் …

தேர் வடம் பிடித்த உடன் வீட்டில் உள்ளவர்களும் வீட்டிற்குச் சென்று விட்டார்கள் வீட்டில் உள்ள அனைவரையும் தேர் வடம் பிடித்த பிறகு தேடிப் பார்த்தான் யாரையும் காணவில்லை எழில் மகா இருவரையும் ரொம்ப நேரமாகவே தேடினான் ரொம்ப நேரம் தேடிப்பார்த்து விட்டு  முத்துவை விட்டும் தேட சொன்னான்  இருவரும் இல்லை என்பதை முத்து வந்து சொன்னான் பிறகு உதிரன் முகில் இருவரும் தான் அவனுடன் இருந்து இருக்கும் ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் …

அவர்களும் இரவு 9:00 மணி போல் வீட்டிற்கு வந்து விட்டார்கள் மகிழ் வீட்டிற்கு இரவு 12 மணிக்கு மேல் வந்தான் அவன் வரும்பொழுது கதவு லேசாக திறந்து தான் இருந்தது மகிழ் வீட்டிற்கு வரும் பொழுது கோபமாக வந்தான் வீட்டின் கதவு திறந்து இருந்தவுடன் அமைதியாக திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தான் …

தனது வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்பறையில் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு எழில் என்று வீடே அதிரும் அளவிற்கு வேகமாக கத்தினான் வீட்டில் உள்ள அனைவரும் மகிழையே பார்த்துக் கொண்டே இருந்தார்கள் பிறகு எழில் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் அவன் வந்தவுடன் எழிலை மகிழ்  ஓங்கி தாடையில் ஒரு அரை விட்டான்…

என்னடா நினைத்து கொண்டு இருக்கிறாய் காலையில் நான் கிளம்பும்போது நானும் உன்னுடனே வருகிறேன் என்று சொன்னாய் ஆனால் நானும் பார்க்கிறேன் கோவில் சன்னதியில் பரிவட்டம் கட்டும்போது எனக்கு கட்ட வேண்டாம் முகிலுக்கு கட்டுங்கள் என்று சொன்னாய் எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை சரி என்று அமைதியாக விட்டுவிட்டேன் ஆனால் மகாவை வாங்க சொன்ன சாமி பிரசாதத்தையும் அவளை வாங்க வேண்டாம் என்று சொல்கிறாய்…

நிலாவை வாங்க சொன்னாய் சரி அவளும் நம் வீட்டுப் பெண்தான் என்று அமைதியாக விட்டுவிட்டேன் சரி தேர் வடப்பிடிக்கும் போது இருப்பீர்கள் என்று பார்த்தால் உன்னையும் காணவில்லை அவளையும் காணவில்லை இருவரையும் காணவில்லை இருவருக்கும் அவ்வளவு திமிரா அதன் பின்பாவது வேலை செய்வதற்கு இருப்பாய் என்று பார்த்தால் முகில் உதிரன் இருவரும் தான் இருக்கிறார்கள் உன்னை காணவில்லை என்று கத்தினான் …

எழில் அமைதியாக இருந்தான் அப்பொழுது மகா படி இறங்கி வந்தால் வாடி வா உனக்கு என்னை விட இவன்தான் முக்கியமாக போய்விட்டான் அல்ல இவன் கூப்பிட்டவுடன் வந்து விட்டாய்  கோவிலில் கூட உன்னால் என் உடன் உன்னால் நிற்க முடியாத உனக்கு என்னை விட இவன் தான் முக்கியமா அப்பொழுது நான் யாரடி உன்னை தான் கேட்கிறேன்…

உனக்கு நான் யாரு டி என்று அவளை உலுக்கி வேகமாக கத்தினான் வீட்டில் உள்ள அனைவரும் மகிழையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் மகா ஒரு சில நொடிகள் மகிழை பார்த்துக் கொண்டிருந்தாள் உன்னை தான் கேட்கிறேன் சொல்லடி உனக்கு நான் யாரடி இவன் தான் உனக்கு முக்கியமா என்று கத்தினான் மகா வேகமாக  எனக்கு உன்னை விட அவன் முக்கியமா இல்லையா என்பதெல்லாம் தெரியாது …

நான் என்றும் நீயா அவனா என்று பிரித்து எல்லாம் பார்த்ததில்லை எனக்கு இருவருமே தான் தேவை இரண்டு உறவும்  தான்  என் வாழ்நாள் முழுவதும் தேவை உனக்காக அவனையோ அவனுக்காக உன்னையோ என்னால் விட்டு தர முடியாது என்று கத்தினால் அப்போ நான்  யாரடி நீ உனக்கு என்று திரும்பவும் கத்தினான் …

மகா வேகமாக தன் வயிற்றில் அடித்து கொண்டு என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா போதுமா என்று எனது வயிற்றில் அடித்துக் கொண்டே கத்தினால் மகிழுக்கு ஒரு சில நிமிடம் ஒன்றுமே புரியவில்லை பிறகு நிதானித்து யோசித்து விட்டு மகாவை பார்த்தான் மகா கண்மூடி திறந்தவுடன் எழிலை கட்டிக்கொண்டு அழுதான் ….

எழிலும் தனது அண்ணன் மகிழை கட்டிக்கொண்டு அழுதான் இருவருக்குமே அவர்களது சந்தோஷத்தை எப்படி காட்டுவது என்று தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் வீட்டில் உள்ள அனைவரும் அண்ணன் தம்பி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ..

மகா மாசமாக இருக்கிறேன் என்று சொன்னவுடன் மகிழ் எப்படி உணர்வான் வீட்டில் உள்ள அனைவரும் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் …


என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்….

❣️ தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 78”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *