Skip to content
Home » மகாலட்சுமி 79

மகாலட்சுமி 79

மகிழ் மகாவிடம் நான் உனக்கு யாரடி இவன் தான் உனக்கு முக்கியமா என்று கத்தியவுடன் மகா வேகமாக தனது வயிற்றில் இரண்டு அடி அடித்துக் கொண்டே என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா நீ போதுமா என்று கத்தினாள்…

மகிழுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை சிறிது நேரம் அவள் என்ன சொன்னால் என்று உணர்ந்து விட்டு மகாவை பார்த்தான் அவள் கண்மூடி திறந்தவுடன் எழிலை கட்டிக்கொண்டு அழுதான் எழிலும் தனது அண்ணன் மகிழை கட்டிக்கொண்டு அழுதான் இருவருக்கும் அவ்வளவு ஆனந்தமாக இருந்தது…

இப்பொழுது இந்த சூழ்நிலையை எப்படி எடுத்துக் கொள்வது என்று கூட தெரியவில்லை டேய் அண்ணா நான் வேண்டும் என்று எதையும் செய்யவில்லை டா . வேணியிடமோ இல்லை நிலா விடமோ மகாவை ஒப்படைத்து விட்டு வரலாம் என்று எண்ணினேன் ஆனால் நிலா வீட்டிற்கு வந்ததிலிருந்து இன்னும் அவளது அறையை விட்டு வெளியே வரவில்லை…

வேணியிடம் மகாவை விட்டு வரலாம் என்று எண்ணினால் கூட வேணி அவளுடன் தான் இருக்கிறாள் சரி நான்  அங்கு இருந்து கொண்டு உன்னை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் என்றால் கூட நீ நம் வீட்டில் ஒரு ஆளாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்தால் கூட நான் உன்னை அனுப்பி வைத்துவிட்டு நான் இருக்கலாம் ….

ஆனால் இப்பொழுது நீ ஊர் பஞ்சாயத்து தலைவராக அனைத்தையும் எடுத்துக்காட்டி செய்து கொண்டிருக்கிறாய் இப்பொழுது உன்னை அனுப்பி வைத்துவிட்டு நான் அங்கு இருக்கவும் முடியாது என்பதால் தான் அவளுடன் நானாவது இருக்க வேண்டும் என்பதற்காக அவளை அழைத்துக்கொண்டு வந்து விட்டேன் தேர் வடம் பிடிக்க அவள் இருக்கக் கூடாது அல்லவா இது செல்லியம்மன் தேர் அல்லவா துரதிஷ்டமான சாமி அதனால்தான் அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டேன் என்றான்….

மகிழ் தனது  தம்பி எழிலை பார்த்துவிட்டு நிலா என்று வேகமாக அழைத்தான் நிலா அவளது அறையில் இருந்து வெளியில் வந்தால் மகிழை பார்த்துவிட்டு வேகமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டே அழுதால் உன் பொண்ணாட்டியை பாரு வயித்துல பிள்ளையை வச்சிட்டு தீ மிதிச்சிருக்கா என்று கத்தினால் எழில் மனதில் குட்டி சாத்தான் போட்டு கொடுத்துட்டாளே என்று மனதில் எண்ணினான்…

மகிழ் ஒரு நிமிடம் நிலாவை பார்த்துவிட்டு மகாவை பார்த்தான் மகா தனது தலையை கீழே குனிந்து கொண்டால் எழிலை பார்த்தான் எழில் அமைதியாக தனது அண்ணனை பார்த்துக் கொண்டு இருந்தான் அப்பொழுது காவேரி தான் வேகமாக கத்தினார் மணி என்ன ஆகிறது அனைவரும் இந்த நேரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் காலையிலிருந்து அதிக அலைச்சல் தானே சீக்கிரம் வந்து தூங்குகிற வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு மகிழை முறைத்தார்…

  மகிழ் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மகாவை அழைத்துக் கொண்டு படி ஏறினான் அப்பொழுது நிலாவைப் பார்த்து நிலா நீ இன்று என்னுடன் வந்து தூங்குகிறாயா என்று கேட்டான் வீட்டில் அனைவரும் எங்கே நிலா அவனுடன் சென்று விடுவாளோ என்று எண்ணினார்கள் நிலா தனது மாமாவை பார்த்து இல்லை மாமா எனக்கும் டயர்டாக இருக்கிறது உங்களுக்கும் அசதியாக இருக்கும் நீங்கள் போய் தூங்குங்கள் ….

நான் இன்னொரு நாள் உங்களுடன் வந்து தூங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தாள் சரி என்று விட்டு மகா மகிழ் இருவரும் மேலே சென்றார்கள் அவர்கள் இருவரும் மேல சென்றவுடன் நிலா வீட்டில் உள்ள அனைவரையும் முறைத்துப் பார்த்து எனக்கும் இங்கிதம்  தெரியும் என்று விட்டு அவளது அறைக்குள் சென்றால் பிறகு அவளது அறையில் இருந்து வெளியில் வந்து இனியிடம் அண்ணி தம்பி இன்று என்னுடன் தூங்கட்டும் என்றால் …

இனி அமைதியாக இருந்தால் அப்போது  காவேரியும் அவளோடு இன்று இருக்கட்டும் என்றார் அப்போது எழில் நிலா என்ன விளையாடுகிறாயா இப்பொழுது தானே அவன் பிறந்து மூன்று மாதம் ஆகிறது இரவில் பசிக்கு அழுவான் இல்லை  ஒவ்வொரு முறையும் நீ அவர்கள் அரை கதவை தட்டிக் கொண்டிருப்பாயா என்றான்….

சரி மாமா அப்பொழுது நான் உங்களுடன் தூங்கிக் கொள்கிறேன் என்றால் நிலா அவ்வாறு சொன்னவுடன் வேணி நிலாவை குறுகுறுவென பார்த்தால் இனி வேணி தலையில் கொட்டி விட்டு லூசு அவள் சாதாரணமாக தான் சொன்னால் அவள் எந்த அர்த்தத்தில் சொன்னால் என்று கூட புரிந்து கொள்ளாமல்  எதற்காக வேணி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்….

அப்போது வரவேற்பரையில் இருக்கும் அனைத்தையும் ஒரு பக்கமாக உதிரன் முகில் இருவரும் ஒதுக்க வைத்தார்கள் எழில் நிலா இருவரும் அவர்கள் அறையில் இருக்கும் தலையணை போர்வை அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து போட்டார்கள் வேணி நால்வரையும் பேந்த பேந்த முழித்து பார்த்தால்  இனி சிரித்துக் கொண்டே நாம் அனைவருமே இங்கு ஒன்றாக தான் படுக்கப் போகிறோம் என்றாள்….

அக்கா என்றால் ஆமாம் அப்படித்தான் வா என்றால் அக்கா நீங்களும் தம்பி வைத்துக் கொண்டு என்று நிறுத்தினால்  ஒன்றும் பிரச்சனை இல்லை வேணி நம்ப வீடு தானே என்று சொல்லிவிட்டு படுத்தாள் குழந்தை நிலா எழில் இருவருக்கும் இடையில் படுக்க வைத்துக் கொண்டார்கள் தம்பி எழுந்தால் இனியிடம் தருவதாக நிலா சொல்லியிருந்தால் சரி என்று விட்டு அனைவரும் படுத்தார்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருந்ததாலும் அலைச்சலிலும் படுத்தவுடன் உறங்கியும் விட்டார்கள்…

மகிழ் மகா மேலே சென்றவுடன் மகிழ் மகாவையே பார்த்துக் கொண்டு இருந்தான் மகா அமைதியாக மகிழை பார்த்தால் பிறகு எதுவும் பேசாமல் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து வைத்தால் நீ சாப்டியா என்று கேட்டான் நான் சாப்பிட்டேன் மாமா உண்மையாகவே சாப்பிட்டு விட்டேன் எழில் கோயிலில் இருந்து என்னை அழைத்து கொண்டு வந்தவுடன் அப்பொழுதே சாப்பிட வைத்து விட்டான் ….

இப்பொழுது இரவு வேளையிலும் சாப்பிட்டு விட்டேன் என்றவுடன் சரி என்று விட்டு மகிழ் கை கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்தான் அவனுக்கு பசி இருந்தது  தனக்காக மகா காத்துக் கொண்டிருப்பாள் என்பதால் வேகமாகவே வந்து இருந்தான் எவ்வளவுதான் அவள் மீது கோபம் இருந்தாலும் அவள் தனக்காக காத்துக் கொண்டிருப்பாள் என்று எண்ணம் அவன் மனதில் இருந்தது …..

அதனால் தான் அவள் சாப்பாடு பரிமாறியவுடன் மகிழ் அமைதியாக ஒரு நிமிடம் மகாவை பார்த்தான்  அவளும் மகிழுக்கு ஊட்டியும் விட்டாள் மகிழ் எதுவும் சொல்லாமல் அவள் ஊட்டி விட வாங்கிக் கொண்டான் அவன் சாப்பிட்டவுடன் இருவருக்கும் சேர்த்தே பால் காய்சியை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் இருவரும் வேறு எதுவும் பேசாமல் பால் குடித்துவிட்டு அவர்கள் அறைக்குச் சென்றார்கள்….

மகா கட்டிலில் தலையணையை முதுகு கொடுத்து உட்கார்ந்தால் அவள் அப்படி உட்கார்ந்தவுடன் மகிழ் அவளது மடியில் படுத்து கொண்டு அவளது கையை இறுக பிடித்து கொண்டான் மகா மகிழை ஒரு சில நிமிடம் பார்த்துவிட்டு அவன் தலையை கோதிக் கொண்டே மகிழையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகாவின் தலைக்கோதலிலும்  அசதியிலும் மகிழுக்கு தூக்கம் வந்துவிட்டது …..

அவன்  தூங்கிய உடன் மகா அவனது நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு அவனை சரியாக படுக்க வைத்து விட்டு அவளும் அவனது அருகில் அவனை பார்த்து கொண்டே படுத்தாள் மகாவிற்குமே சிறிது உடம்பு அடித்துப் போட்டது போல் இருந்ததால் அவளும் படுத்து விட்டாள் இருவரும் படுத்தவுடன் உறங்கி விட்டார்கள் காலை பொழுது விடிந்தது காலை 5 மணி போல் நிலா எழிலை எழுப்பினால் ….

எழில் அசந்து  தூங்கிக் கொண்டிருந்தான் நிலா தன்னை எழுப்புகிறாள் என்று உடன் என்னடி என்று கத்தினான் என்ன மாமா தூங்கிட்டு இருக்க மகாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது இல்லையா நம்ம இன்னைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு செக்கப் பண்ணிட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துடலாம் என்றால்…

எழில் நிலாவை இரண்டு நிமிடம்  பார்த்துக் கொண்டு இருந்து விட்டு அனைவரும் தூங்குகிறார்களா என்று பார்த்தான் அனைவருமே தூங்கி கொண்டிருந்தார்கள் இவள் கத்திய வேகத்தில் வெனு மட்டும் முழிப்பு வந்து எழுந்து இருந்தால் மகாவை ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போவது என்னவோ உண்மைதான் ஆனால் நீ வர வேண்டாம் என்றான் ….

ஏன் மாமா என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நிலா  எக்ஸாம் நெருங்கிக் கொண்டிருக்கிறது பிராக்டிகல் எக்ஸாம் நடக்கப் போகிறது சரியா ஏற்கனவே நிறைய நாள் லீவு போட்டாச்சு இப்பொழுது சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் தேர் என்பதால் நமக்கு கல்லூரி லீவு இல்லை என்றால் இதற்கும் சேர்த்து லீவ் போட வேண்டி இருந்திருக்கும் …

நாங்கள் இருவரும் லீவ் போட்டு மகிழுடன் மூவரும்  மருத்துவமனைக்கு போய்விட்டு வருகிறோம் நீ கல்லூரிக்கு போய்விட்டு வா என்றான் நிலா ஓர் இரண்டு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு அவன் சொல்வதும் சரி என்பதால் சரி நீ போய் அவர்கள் இருவரிடமும் சொல்லி அழைத்துக் கொண்டு வா என்றால் எழில் நிலாவுக்கு வரவேற்பு அறையில் இருக்கும் கடிகாரத்தை காண்பித்தான்.,.

மணி என்ன என்று பாரு காலை 5:30 தான் ஆகிறது அவர்கள் எழுதியிருந்தாலும் டாக்டர் யாரும் இப்பொழுது வந்திருக்க மாட்டார்கள் கொஞ்சம் பொறு நீ கல்லூரிக்கு சென்ற பிறகுதான் நாங்கள் செல்ல முடியும் சரியா என்றான் நிலா சரி என்று மண்டை ஆட்டினால் நிலா வேகமாக மாடி படி ஏறினால் எழில்  நிலா நிலா என்று கத்தினான் நிலா மேலே ஏறிச் சென்று விட்டாள்….

இவள வச்சுட்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பொறிந்து கொண்டே இருந்தான் வேணி அவங்க ரெண்டு பேரும் தூங்குவாங்க அவளை கூப்பிடு என்று விட்டு படுத்தான்  கொஞ்சம் எழிலுக்கு உடம்பு அடித்து போட்டது போல் இருந்தது அதனால் தான் அதனால் வேணியும் சரி என்று விட்டு  மேலே சென்றால் நிலா அப்பொழுது மகிழ் மடியில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தால் …

இப்பொழுதுதான் எழுந்தால் அதற்குள் உங்கள் மடியில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று வேணி கேட்டாள்  மகிழ் வேணியை பார்த்து சிரித்துவிட்டு என்ன வேணி என்றான் இல்ல அண்ணா இப்பொழுதுதான் மேலே வந்தால் அதற்குள் தூங்குகிறாள் என்றால் அவள் தூக்க கலக்கத்தில் தான் எழுந்து உட்கார்ந்திருப்பாள் அதனால் தான் இப்பொழுது தூங்குகிறாள்  என்று சொன்னான்…

அண்ணா அண்ணி எங்கே என்று கேட்டால் வேணி உங்க அண்ணி சமையலறையில் இருப்பாள் என்றவுடன் வேணி  மகாவைத் தேடி சமையல் அறைக்கு  வந்தால் மகா பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள் என்ன அண்ணி அதுக்குள்ளவே எழுந்து விட்டீர்கள் போல நிலா உங்கள் இருவரையும் வந்து எழுப்பி விட்டு விட்டாளா என்றால் இல்ல வேணி தூக்கம் களங்சிடுச்சு தினமும் எழுந்திருக்கிற டைமுக்கு தூக்கம் கலைந்துவிட்டது ….
மீ

தூக்கம் வரல என்றாள்  உங்க ரெண்டு பேத்தையும்  நிலா வந்து எழுப்பி விட்டாளா என்றால் அதெல்லாம் எதுவும் இல்லடா மாமா தான் தூங்கிட்டு இருந்தார் நிலா வந்த உடனே எழுந்துட்டாரு அவ வந்து அவரை  எழுப்பி விட்டாளா என்றால் அசதியில்  தூங்கி கொண்டு இருந்திருப்பார் இல்லை இவள் வந்து எழுப்பி விட்டு விட்டாளா  என்றாள்…

இல்லடா இது அடிக்கடி நடக்கிற விஷயம் தான் நிலா எழுந்து வந்து மாமா மடியில் படுத்து தூங்குவாள் தான் என்று சொல்லிக் கொண்டே மகா அவளது கையில் ஒரு டீ கிளாஸ் வைத்தால் இன்னும் நான்  வாய் கூட கொப்பளிக்கவில்லை அண்ணி என்றால் சரி கொப்பளித்துவிட்டு வா என்று அவளிடம் இருந்து டீ கிளாஸ் வாங்கிக் கொண்டால்  மகா  இன்னொரு டி கிளாஸ் எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றால் …

மகிழ் மடியில் நிலாப் படுத்து தூங்கி கொண்டு இருந்தால் தனது மகா மாமாவை முறைத்துக் கொண்டே வந்து அவனது கையில் டீ கொடுத்தால் நிலா மகிழ் மடியில் படுத்துக் இருப்பது மகாவிற்கு பிடிக்கவில்லையா இல்லை இப்பொழுது மகா எதற்கு மகிழை முறைத்தாள் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்  சைலண்ட் லீடர்ஸ் ப்ளீஸ் உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க நன்றி…

கதையை ஜவ்வுபோல் இழுக்கிறேனா இல்லை நன்றாக தான் செல்கிறதா என்று சொல்லுங்கள்

2 thoughts on “மகாலட்சுமி 79”

  1. Avatar

    Javvu mathiri tha iruku sis… Short ah solla vendiyathan neraya yeluthuringa…normal ah pesramathiri irukku. ..paduka bore ah iruku…writting style ah konjam mathuna nalla irukum… Onnumae illatha mater ah perusaa write panringa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *