நிலாவின் தோழிகள் இடம் நெருங்கிய உறவினர் ஒருவர் எழில் வ
நிலாவின் தாய்மாமன் மகன் எழில் வேந்தன் என்று கூறியவுடன் என்ன எழில் சார் நிலாவின் மாமா வா என்று வாய்விட்டு சொன்னார்கள் பிறகு அதில் நிலாவின் தோழி நதியா தான் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து சரிடி பங்க்ஷன் முடியட்டும் நாம் நிலா வேணி இருவரிடமும் பேசலாம் என்றவுடன் மூவருக்குமே அதுதான் சரி என்று பட்டதால் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்….
என்ன வேணி என்று கேட்டுக்கொண்டே எழில் வேனியின் அருகில் வந்த நின்றான் அண்ணா நீங்கள் இருவரும் தட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்றவுடன் எழில் சிரித்துக்கொண்டே வேணி நாங்கள் இருவரும் தட்டை வாங்கிக் கொள்ள முடியாது ஆனால் நீ ஆசைப்பட்டதால் ஒன்று செய்யலாம் என்று சொல்லிவிட்டு தனது பெரியத்தை காவேரி மாமா கந்தன் இருவரையும் அழைத்தான் பிறகு நிலாவை அவர்களுடன் நிற்க சொல்லிவிட்டு ராமு வசந்தியுடன் எழில் நின்று கொண்டு தாம்பூல தட்டை இருவரும் மாற்றிக் கொண்டார்கள்….
காவேரி கந்தன் அருகில் நின்று நிலா நிலா தாம்பூல தட்டை பிடித்தால் ராமு வசந்தி உடன் நின்று எழில் தாம்பூல தட்டை பிடித்தான் பிறகு இருவரும் தாம்பூல தட்டை மாற்றிக் கொண்டவுடன் ரிசப்ஷனும் ஆரம்பமாகியது ஒவ்வொருவராக வந்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள் மொய் வைப்பவர்கள் மொய் வைத்துவிட்டு கிப்ட் கொடுப்பவர்கள் கிப்ட் கொடுத்துவிட்டு சென்றார்கள் இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சென்றது….
நிலாவின் தோழிகளும் கொஞ்சம் கூட்டம் குறைந்த பிறகு 12 மணி போல் மேடை ஏறி வந்தார்கள் வேணி மூவரையும் பார்த்து சிரித்தாள் மூவரும் வேணி நிலா இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு போலியான சிரிப்புடன் மேலே ஏறினார்கள் அவர்களது முகம் போன போக்கை பார்த்து எழில் சிரித்தான் நிலா தொடையில் கிள்ளினால் அமைதியா இருடா மாமா நீ வேற ஏற்கனவே நீ யாருன்னு தெரிஞ்சு கொண்டிருப்பார்கள் …
இப்பொழுது முறைக்கிறார்கள் நீ வேறு உசுப்பேத்தி விடாதே என்று சொல்லிக்கொண்டு லேசாக முனங்கினால் பிறகு எழில் மூவரையும் பார்த்து வாங்க மா என்று சொன்னான் வரோம் சார் என்று விட்டு வேணி முகில் இருவர் கையிலும் தங்கள் வாங்கிக் கொண்டு வந்த கிப்ட் கொடுத்துவிட்டு போட்டோ விற்கும் நண்பர்கள் போட்டோ எடுத்து உடன் கீழே இறங்கி சென்றார்கள் அப்பொழுது வேணி நிலாவை பார்த்தவுடன் நிலா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது நண்பர்களுடன் கீழே இறங்கினால் ….
மூவரையும் கீழே தனியாக அழைத்துக் கொண்டே வந்தால் மூவரும் நிலாவைப் பார்த்து முறைத்துவிட்டு என்னடி என்று மெதுவாகக் கேட்டார்கள் நிலா மூவரையும் பார்த்து தனது காதில் கை வைத்து சாரி என்று மெதுவாக சொன்னால் என்னடி சாரி எத்தனை நாட்கள் நாங்கள் கேட்டிருப்போம் எழில் சார் லீவு போடும்போது நீயும் போடுகிறாய் நீ போடும்போது எழில் சாரும் லீவு போடுகிரார் என்று அப்போது எல்லாம் நாங்கள் இருவரும் உறவினர் என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கிறாயா ….
அதை எழில் சாரிடம் தான் கேட்க வேண்டும் வா கேட்கலாம் என்று எத்தனை நாள் எங்களை பயமுறுத்திருக்கிறாய் ஆனால் இன்று இவ்வளவு நெருக்கத்தில் இருவரும் இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள் நிலா தனது நண்பர்களை பார்த்து பேந்த பேந்த முழித்தாள் இப்பொழுது இவர்களுக்கு பொறுமையாக அனைத்தையும் சொல்லி புரிய வைக்கும் அளவிற்கு தனக்கு நேரமும் இல்லையே என்று மனதில் எண்ணினால் …
அவளது தோளில் தட்டி என்னம்மா கனவு காண்க்கிறாயா என்று கேட்டார்கள் இல்லடி என்று விட்டு அமைதியாக இருந்தால் அம்மா தாயே நீ எங்களுக்கு எந்த விளக்கமும் தர வேண்டாம் நீ அவிழ்த்து விட்டு பொய் மூட்டையை கேட்க நாங்கள் தயாராக இல்லை என்றார்கள் போதும் இனியும் நாங்கள் அவதிப்பட வேண்டாம் என்று சொன்னார்கள் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் அருகில் வந்து நிலாவின் தோளில் கை போட்டு எழில் வந்து நின்றான்…..
நிலா லேசாக நெளிந்தால் எழில் நிலாவை பார்த்து முறைத்தான் அதன் பிறகு நிலாவாக நின்றால் எழில் நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நிலாவின் தோழி மூவரையும் பார்த்தான் பிறகு மூவரையும் பார்த்துவிட்டு முதலில் உங்கள் முவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சார் நீங்கள் இதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டார்கள் அண்ணா என்று அழைக்கலாம் நாம் ஒன்றும் கல்லூரி விஷயமாக இப்பொழுது பார்த்துக் கொள்ளவில்லை …
நிலா என்னுடைய அத்தை மகள் தான் என்ற உண்மையை அவள் மறைக்க காரணம் நான் மட்டும்தான் நான் தான் நாம் இருவரும் உறவினர்கள் என்று கல்லூரியில் உள்ள யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் அதனால்தான் அவள் மறைத்து விட்டால் நான் சொன்னால் அவள் மறைக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம் அதில் எந்த தவறும் இல்லை ஆனால் அதற்கும் நான் மட்டும் தானே காரணம் எங்கு அவள் சொன்னால் …
அனைவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள் என்று எண்ணியதால் தான் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தேன் இதில் எனக்கு எந்த பிரச்சினை கிடையாது நான் சமாளித்துக் கொள்வேன் அப்படியே ஏதாவது பிரச்சினை என்றாலும் ஆனால் நான் அவளுடைய உறவினர் என்று தெரிந்தால் அவளுடைய படிப்பு பாதிக்கும் என்பதால் தான் என்றான் நிலாவின் தோழிகள் மூவரும் அமைதியாக இருந்தார்கள் …
நிலாவின் தோழிகள் மூவரும் நிலாவை பார்த்தார்கள் நிலாவின் தோளில் இருக்கும் எழில் கையையும் பார்த்தார்கள் தனது தோழிகளின் கண் போகும் பார்வையை பார்த்துவிட்டு நிலா திரும்பவும் நெளிந்தாள் எழில் நிலாவை பார்த்து முறைத்துவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறாயா நம்முடைய உறவை அடுத்தவர்களுக்காக மறைக்க வேண்டும் என்று எதுவும் இல்லை இவர்கள் நம் உறவை புரிந்து கொள்வார்கள்….
அப்படி புரிந்து கொள்ளவில்லை என்றாலும் புரிய வைப்பது உன்னுடைய கடமையை அதற்காக நீ நாம் எப்போதும் இருக்கும் உறவையோ நெருக்கத்தையோ அடுத்தவர்களுக்காக விட்டு தர வேண்டிய அவசியம் இல்லை அப்படி நீ செய்தால் நம் உறவையே கொச்சை படுத்துவது போல் ஆகிவிடும் என்றான் …
மகா மகிழ் இருவரும் நிலாவின் தோழியிடம் நின்று பேசிக்கொண்டிருப்பதை மொட்டை மாடியில் இருந்து மகா பார்த்துவிட்டு கீழே இறங்கினால் மகிழ் கூட இரண்டு முறை வேண்டாம் என்றான் இல்ல மாமா ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்று சொல்லிவிட்டு அவர்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று தான் பேசிக் கொண்டிருப்பதால் கீழே இறங்கி அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தால் …
மகாவை அங்கு மூவரும் பார்த்துவிட்டு மகா மேம் என்றார்கள் நிலா இப்பொழுது கெத்தாக நிமிர்ந்து நின்றாள் எழில் கையோடு தன் கையையும் பிணைத்துக் கொண்டால் எழிலுக்கு சிரிப்பாக இருந்தது என்னதான் ஆயிரம் உறவு இருந்தாலும் அவளுக்கு அவளது அக்கா போல் வரவில்லை என்று மனதில் எண்ணினான்…
அவள் அக்கா அவளது அருகில் வந்து நின்று விட்டாள் என்றவுடன் எவ்வளவு தைரியமாக இவ்வளவு நேரம் தனது நண்பர்களிடம் மறைத்துவிட்டோமே என்று எண்ணி தனது கையை உதறி தோளில் இருக்கும் தனது கையை எடுக்க எண்ணினால் நெளிந்தாள் என்று எண்ணி மனதிற்குள் எண்ணி சிரித்தான் மூவரும் மகாவை பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மகா மூவரையும் பார்த்து சிரித்து விட்டு வாங்க மா என்று வரவேற்றாள்…
மேம் நீங்களும் வந்திருக்கிறீர்களா உங்களையும் கூப்பிட்டு இருக்கிறீர்களா நாங்கள் கேட்டதற்கு நான் உங்கள் மூவரையும் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை என்று சொன்னால் என்று சொன்னார்கள் என்றார்கள் மகா எழில் நிலா இருவரையும் பார்த்து சிரித்து விட்டு நிலாவின் தோழியையும் பார்த்து சிரித்தாள் மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை நான் நிலாவுடைய அக்கா இது என் அண்ணன் கார்முகிலன் உடைய ரிசப்ஷன் அது உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை என்றால்….
மூவரும் அதிர்ச்சியாகி நிலாவை பார்த்தார்கள் அவர்கள் மூவரும் ஒன்றை மறந்து விட்டார்கள் என்று சொல்ல வேண்டும் நிலாவின் அக்கா தான் மகா என்று மூவருமே அறிவார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் சூழலில் மறந்து இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் பிறகு நிலா பார்த்து முறைத்துவிட்டு சாரி மேம் நிலாவுடைய அக்காதான் நீங்கள் என்று நிலா சொல்லியிருக்கிறாள் நாங்கள் தான் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அதை மறந்து விட்டோம் என்று சொன்னார்கள்….
அவளும் சரிமா என்ன பிரச்சனை என்று கேட்டாள் ஒன்றுமில்லை மேம் என்று விட்டு அமைதியாக இருந்தார்கள் இப்பொழுதும் மூவரின் பார்வையும் நிலா இறுக்கி பிடித்து இருக்கும் பட்டிருக்கும் நிலா எழில் கையின் மேல் இருந்தது. மகா மூவரையும் பார்த்து சிரித்து விட்டு எழில் தோளில் கை போட்டால் மூவரும் இப்பொழுது மகாவை பார்த்தார்கள் மேம் எழில் சார் தான் உங்களுடைய கணவரா என்று கேட்டார்கள்…
நிலா சிரித்துக் இருந்தால் என்ன மகா என்னோட எழில் மாமா ஓட பொண்டாட்டிய என்னோட மகிழ் மாமாவோட பொண்டாட்டி என்னோட அக்கா என்னோட அக்காவும் எழில் மாமாவும் நெருங்கிய நண்பர்கள் என்றால் அப்பொழுது நெருங்கிய உறவினர் ஒருவர் எழில் நிலா இருவரையும் அழைத்தவுடன் இருவரும் சரி வந்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்….
மகா மூவரையும் பார்த்து நீங்கள் மூவரும் முதலில் சாப்பிட்டு விட்டு வாருங்கள் நீங்கள் மூவரும் அருகில் உள்ள பக்கத்து ஊர்தானே நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா என்று கேட்டாள் மூவரும் அவளை பார்த்தவுடன் இன்று இரவு இங்கு தங்கிக் கொள்கிறீர்களா நாளை இங்கிருந்து கூட கல்லூரிக்கு சென்று விடலாம் உங்கள் கல்லூரி பையை நான் கல்லூரிக்கு எடுத்துக் கொண்டு வர சொல்லி விடுகிறேன் …
உங்கள் மூவரின் வீட்டிலும் நான் பேசுகிறேன் என்றவுடன் மூவரது தலையும் தானாக ஆடியது ஏனென்றால் மூவரும் இருக்கும் இப்பொழுது இவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன என்று தெரிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் இருந்தது அதனால் மூவரும் சரி என்பது போல் மண்டை ஆட்டினார்கள் பிறகு மூவரையும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் மொட்டை மாடியில் நான் இருக்கிறேன் என்றவுடன் ….
மேம் நீங்கள் ஃபங்ஷனில் கலந்து கொள்ளவில்லையா என்று கேட்டார்கள் நானும் இங்கு தான் இருக்கிறேன் அப்புறம் என்ன என்று கேட்டாள் வேறு எதுவும் பேசாமல் சரி என்று மூவரும் சாப்பிடும் இடத்திற்கு சென்றார்கள் எழில் நிலா இருவரும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் கூடவே முத்து இன்னும் ஒரு சிலர் பரிமாறி கொண்டு தான் இருந்தார்கள் அது கடைசி பந்தி என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார வைத்து பரிமாறினார்கள்….
அவர்களுடனே நிலாவின் தோழிகளும் உட்கார்ந்தார்கள் எழில் நிலா இருவரையும் அழைத்ததற்கு நாங்கள் இருவரும் அப்புறமாக சாப்பிட்டுக்கொள்கிறோம் என்றார்கள் சரி என்று அனைவரும் அமைதியாக உட்கார்ந்தார்கள் இனி குழந்தைக்கு பால் கொடுப்பதால் அமைதியாக வீட்டில் உள்ள அனைவரிடமும் கலந்து சாப்பிட்டாள் உதிரனுக்கு இரண்டு நாட்களாக அதிக வேலை இருந்ததால் அவனும் பசியில் இருந்ததால் காலையில் சாப்பிடாததாலும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான் …..
முத்து நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் இருவரும் உட்காருங்கள் என்று எழில் நிலா இருவரையும் பார்த்து சொன்னான் இருவரும் இல்லை நாங்களும் பரிமாறுகிறோம் என்று அனைவருக்கும் பரிமாறினார்கள் நிலாவின் தோழிகள் நிலா எழில் இருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் நிலாவின் தோழி மூவருக்கும் தங்களது எழில் சார் நிலா வேணி மகா மேம் இவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன என்று தெரிந்து கொள்ளாமல் மண்டை வெடிப்பது போல் இருந்தது ….
ஆனால் பந்தியில் பரிமாறப்பட்ட பதார்த்தங்களை பார்த்தவுடன் அதை மறந்து விட்டு சாப்பிட அமர்ந்து சாப்பிடவும் செய்தார்கள் அவர்கள் அனைவரும் நிலாவின் தோழிகள் அல்லவா நாம் எப்போதும் பந்திக்கு முந்திக் கொள்ள வேண்டும் படைக்கு பிந்தணும் என்ற பழமொழியை பாலோ செய்யும் நண்பர்கள் அவர்களாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள் நிலா இவர்களை எப்படி சமாளிப்பது என்று மனதில் எண்ணிக் கொண்டே பரிமாற்றினால் ….
மகா மூவரையும் மொட்டை மாடிக்கு வர சொல்லி இருக்கிறாள் இரவு இங்கே தங்க சொல்லி இருக்கிறாள் அவர்கள் மூவரின் வீட்டிலும் மூவரையும் இங்கு இரவு தங்க ஒத்துக் கொள்வார்களா மகா மூவருக்கும் தங்களது உறவு என்ன என்பதை புரிய வைப்பாளா அவர்களும் அதை புரிந்து கொள்வார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
INTERESTING