Skip to content
Home » மகாலட்சுமி 86

மகாலட்சுமி 86

காவேரி தான் தங்கை கோதை இடம் அப்படி நீ என்ன செய்தாய் கோதை என்று கேட்டார் கோதை தனது அக்கா காவேரியை ஒரு சில நிமிடங்கள் மௌனமாக பார்த்துவிட்டு கோதை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்பு நடந்ததை கூற ஆரம்பித்தார் ….முதலில் என்னை மன்னித்து விடுங்கள் நீங்கள் ஒரு வருடங்களுக்கு முன்பு கயலை மகிழுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேசிய போது என்றவுடன் காவேரி பார்த்த பார்வையில் சாரி என்னை மன்னித்து விடுங்கள் நீங்கள் மகிழுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது நாங்கள் அனைவரும் முதலில் கயலுக்கு முதலில் திருமணம் முடித்துவிட்டு மகிழுக்கு பண்ணலாம் …..என்று சொல்லும் பொழுது அப்போது கயலையே மகிழுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொன்னீர்கள் அல்லவா ஆமாம் அதற்கு என்ன  என்று கேட்டார் அப்பொழுது அன்று நடந்த விஷயத்தை நான் மகாவிடம் சொல்லி இருந்தேன் நீங்கள் இதுபோல் கயலை மகிழுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக அதை மனதில் வைத்து தான் மகா அவளது விருப்பத்தை மறைத்திருப்பாள் என்றவுடன் காவேரிக்கும் அப்படித்தான் தோன்றியது…ஏனென்றால் வீட்டில் அனைவருக்குமே மகாவை பற்றி தெரியும் எங்கு தான் மகிழ் மாமாவை விரும்புகிறோம் என்று சொல்லி இன்று இல்லை என்றாலும் என்றாவது வீட்டில் உள்ள யார் மனதில் ஆவது கயலை விட்டுவிட்டு மகாவை திருமணம் செய்து விட்டார்கள் என்று எண்ணினால் வீட்டில் உள்ள அனைவரின் உறவுகளிலும் விரிசல் ஏற்படுமோ என்று எண்ணி மகா தனது விருப்பதையே மறைத்திருக்கிறாள் என்று எண்ணி தனது தங்கையை பார்த்து முறைத்தார்….பிறகு எழிலை பார்த்தார் அவன் அமைதியாக தனது அத்தை பார்த்தான் டேய் உனக்கு எப்பொழுது தெரியும் என்று கேட்டார் அத்தை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவள் அவளுடைய விருப்பத்தை என்னிடம் சொல்லவில்லை எனக்கு அவர்களுக்கு திருமணமாகிய ஒரு வாரத்தில் தான் தெரியும் என்று விட்டு அமைதியாக இருந்தான் இப்பொழுது நிலாவைப் பார்த்தார் …நிலா அழுகையும் சிரிப்புமாக எனக்கு அன்று கோவிலில் சாமி சொன்ன பிறகு சந்தேகம் இருந்தது பெரியம்மா அதன் பிறகு நானாக தெரிந்து கொண்டது தான் மற்றபடி இந்நாள் வரை அவர்கள் வாயிலிருந்து அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்ற வார்த்தை வரவில்லை என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தால் பிறகு வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பார்த்தார் ….தனது அப்பா அம்மாவையும் பார்த்தார் அவர்கள் இருவரும் எங்களுக்கும் நிலா சொன்னது போல் அவர்கள் மேல் சந்தேகம் இருந்தது திருமணத்திற்கு முன்பே எங்களுக்கு இருந்தது ஆனால் அவர்கள் இருவரும் விரும்புகிறார்கள் என்று எங்களுக்கும் தெரியாது என்றனர் அனைவரையும் பார்த்து கேட்டுவிட்டு உதிரனை பார்த்தார் …உதிரன் எனக்கு அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று நான்கு வருடங்களுக்கு முன்பே தெரியும் என்றான் என்ன நான்கு வருடங்களாக காதலிக்கிறார்களா என்று காவேரி வாய்விட்டு கேட்டார் உதிரன் தன் தாயைப் பார்த்து சிரித்து விட்டு அவர்கள் காதலிக்கிறேன் என்று எனக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாகவே  தெரியும் என்று தான் சொன்னேன் அம்மா ஆனால் அவர்கள் இருவரும் நான்கு வருடங்களுக்காக காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை என்றான்…..அனைவரும் உதிரனையே பார்த்தார்கள் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக காதலிக்கிறார்கள் என்றவுடன் என்ன என்று வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகிப் பார்த்தார்கள் ஆமாம் அதுவும் முதலில் மகா தான் அவளுடைய விருப்பத்தை மகிழிடம் சொல்லி இருக்கிறாள் என்றவுடன் முதலில் அதிர்ச்சியாகியது என்னவோ சுந்தரி தான் என்னடா சொல்கிறாய் என்று உதிரனின் சட்டையில் கை வைத்தார் …பிறகு எழில் அம்மா என்று கத்திய பிறகுதான் உதிரனின் சட்டையில் இருந்து கையை எடுத்தார் உதிரன் தனது  மாமியாராகிய அத்தை சுந்தரியை பார்த்து சிரித்துக் கொண்டே நான் சொல்வதெல்லாம் உண்மை தான் பள்ளி படிக்கும் பொழுது அவளுடைய விருப்பத்தை மகிழிடம் சொல்லி இருக்கிறாள் அவள் சிறிய பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவளிடம் உனக்கு இந்த வயதில் வந்திருக்கும் ஈர்ப்பு தான் இது… இதை வைத்து மனதில் இருந்து நீக்கிவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்து என்று சொல்லி இருக்கிறான் ஆனால் அவனது மனதிலும் மகாவின் மேல் விருப்பம் இருந்திருக்கிறது ஆனால் அதை சொல்லமால் மறைத்து அவள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணி மறைத்திருக்கிறான் பிறகு மகா கல்லூரி சேர்ந்த பிறகும் அவளது விருப்பத்தை சொல்லிருக்கிறாள் …அப்பொழுதும் இது இந்த வயதில் வரும் ஈர்ப்பு தான் என்று ஏதோ ஏதோ சொல்லி அவளை சமாளித்து இருக்கிறான் ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு அவள் கல்லூரி இறுதி ஆண்டு முடித்தவுடன் அனைத்தையும் முடித்துவிட்டு வேலையில் முதுகலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் மகிழிடம் வந்து சண்டையிட்டு கொண்டிருந்தாள் அப்பொழுதுதான் நான் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன் …அப்பொழுது கூட மகிழ் அவனது விருப்பத்தை சொல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் மகா கத்திவிட்டு சென்றதை நான் கேட்டுவிட்டு அதன் பிறகு மகிழிடம் கேட்ட பொழுதுதான் மகிழ் சொன்னான் அப்பொழுதுதான் அவன் விரும்புவதும் எனக்கு தெரியும் அதன் பிறகு நான் தான் உனக்கும் விருப்பம் இருந்தால் உன்னுடைய விருப்பத்தை அவளிடம் சொல்ல வேண்டியது தானே என்று சொன்னேன்…அப்பொழுது கூட அவன் இப்பொழுது நான் சொல்லிவிட்டு பிற்காலத்தில் அவளுக்கு வேறு ஒருவர் மேல் கூட விருப்பம் வரலாமே என்று சொன்னான் என்ன என்று நான் அவனை அடிக்க கை ஓங்கி விட்டேன் பள்ளி படிக்கும் பொழுது இருந்தே இவனை விரும்பியவள் இனிமேல் வெளியுலகம் தெரிந்து பிறகு இவனை வேண்டாம் என்று விட்டு விடுவாளா என்று சொன்னேன் அதன் பிறகு தான் இவனது விருப்பத்தை அவளிடம் சொன்னான்….ஆனால் அவர்கள் இருவரும் இந்த குடும்பத்திற்காக அவர்களது காதலை தூக்கி எறிவார்கள் என்று நான் எண்ணவில்லை இன்னும் சொல்லப்போனால் இந்த குடும்பத்தையும் தாண்டி உனக்காக மட்டும் தான் அம்மா உன்னை அத்தையாக என்று இருந்தாலும் தன்னை வளர்த்த அம்மாவாக எண்ணியதால் உனக்காக மகிழும்  வயிற்றில் பெறாத அம்மாவாக நீ இருந்ததால் மகாவும் அவர்களது விருப்பத்தை சொல்லாமல் மறைத்து விட்டார்கள் ….அவர்கள் இருவரும் சேய்தது தவறுதான் நான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் அவர்களது காதல் உண்மை அந்த காதல் அவர்களை சேர்த்து வைத்து விட்டதா இல்லை கயல் சேர்த்து வைத்து விட்டாளா என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று எண்ணினேன் அவர்கள் இருவரும் இப்பொழுது சேர்ந்து விட்டார்கள்….எந்த அளவிற்கு அவர்கள் இருவரும் சேர வேண்டும் என்று எண்ணினேனோ அதேபோல் என்னாலே அவர்கள் இருவரும் இந்த வீட்டை விட்டு பிரிய வேண்டிய நிலைமையை வந்துவிட்டது என்று தனது தாயைப் பார்த்து சொல்லிவிட்டு தனது கண்ணில் இருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அமைதியாக அங்கு உள்ள ஒரு சோபாவின் மீது உட்கார்ந்தான் இனி அவனது அருகில் அமைதியாக வந்து உட்கார்ந்தால் …இறுதியாக சுந்தரியிடம் வந்து நின்றார் ஆரம்பத்தில் கேட்ட கேள்வியை தான் நான் இப்போதும் கேட்கிறேன் சுந்தரி உனக்கு அவர்களது விருப்பம் எப்போது தெரியும் என்று கேட்டார் சுந்தரி தனது நாத்தனாரை அமைதியாக பார்த்தார் உன்னை தான் கேட்கிறேன் சுந்தரி உன்னிடம் எப்படியும் அவள் மறைத்து இருக்க மாட்டாள் என்றவுடன் சுந்தரி முகத்தில் கசப்பான முறுவல் ஒன்று வந்தது ,….உங்களுக்கு மகாவை பற்றி அந்த அளவுக்கு தெரிந்திருக்கிறதா அண்ணி என்று கேட்டவுடன்  காவேரியை யாரோ சாட்டையால் அடிப்பது போல் இருந்தது அவளைப் பற்றி அனைத்தையும் தெரிந்திருந்தும் நாம் அவளை இப்படி தள்ளி வைத்திருக்கக் கூடாதா அது மட்டும் இல்லாமல் இப்பொழுது அவள் இந்த வீட்டின் வாரிசை சுமந்து கொண்டிருக்கும் வேலையில் கூட அவளை ஒதுக்கி வைத்திருக்கிறோம் என்று மனதில் எண்ணினார்….ஆனால் அவருக்குமே ஒன்று தெரியுமே அவர் விருப்பப்பட்டு என்று எதையும் செய்யவில்லையே அவரது மனதும் காயப்பட்டு இருக்கிறது அதையும் மனதில் எண்ணி விட்டு தனது முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சுந்தரியை பார்த்தார் சுந்தரி வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு எனக்கு மகா மகிழ் இருவரது திருமணத்திற்கு முன்பு அதாவது பெண் அழைத்து விட்டு நீங்கள் அனைவரும் மண்டபத்திற்குச் சென்றவுடன் தெரியும் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் சுந்தரியை அதிர்ச்சியாக பார்த்தார்கள் ….என்ன சுந்தரிக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா என்பது போல் காவேரி அமைதியாக சுந்தரி பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரியே தொடர்ந்தார் எனக்கு மகா அப்போதுதான் வந்து சொன்னாள் என்றவுடன் காவேரி பரவாயில்லை சுந்தரி ஆனால் நீ அதையும் மறைத்திருக்கிறாயே என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அப்பொழுது சுந்தரி வேகமாக தனது அண்ணியை பார்த்து முறைத்துக் கொண்டே கேட்டார் ….என்னுடைய மருமகள் என்னிடம் அவளது விருப்பத்தை அந்த நேரத்தில் ஆவது அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சொன்னால் ஆனால் உங்களது மருமகன் இந்த நிமிடம் வரை வாய் திறக்கவில்லை என்பதை மறந்து விடாதீர்கள் என்னுடைய மருமகளை குறை சொல்வதை விட்டுவிட்டு உங்களது மருமகன் மேலும் தவறு இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று தனது பெரிய நாத்தனாரை நிமிர்ந்து பார்த்து வேகமாக கத்திவிட்டு தனது இளைய மகன் எழில் மற்றும் நிலா இருவரது கையையும் பிடித்துக் கொண்டு பூந்தோட்டத்திற்கு வந்தார் ….அவரது மனதில் ஆயிரம் வலிகள் இருந்தது அதை எப்படி சரி செய்வது என்று கூட அவருக்கு தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அவருக்கு இந்த வீட்டிலேயே ரொம்ப பிடித்தவர்கள் என்றால் எழிலும்  மகாவும் தான் எழில் மகா இருவரும் முழுவதாக அவருடைய வளர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும் இன்னும் சொல்லப்போனால் எழில் பிறந்த இரண்டு மாதங்களில் மகா பிறந்தால்…. மகாவிற்குமே தாய்ப்பால் இவர்தான் கொடுத்தார் கோதைக்கு சிறிது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மகாவிற்கு பால் பவுடர் கொடுக்க சொல்லி இருந்தார்கள் அப்பொழுதுதான் எழில் பிறந்திருந்தால் சுந்தரி தானே இருவருக்கும் தாய்ப்பால் கொடுப்பதாக சொல்லி கொடுத்தார் அதை இப்பொழுது எண்ணி அழுதார் அவரது நெஞ்செல்லாம் வெடிப்பது போல் இருந்தது வீட்டில் அனைவரும் தன்னுடைய மருமகளை மட்டுமே குற்றம் செல்கிறார்களோ என்று எண்ணி தான் கத்திவிட்டு வந்தார் ….காவேரி அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து அழுதார் சுந்தரி சொல்லி செல்வது போல் தான் தன்னுடைய மருமகன் மேல் தப்பில்லை என்று சொல்கிறேனா என்று வாய் விட்டே கத்தினார் அப்பொழுது பாண்டியம்மா அவரது தோளில் வந்து கை வைத்தார் காவேரி நிமிர்ந்து தனது அம்மாவை பார்த்துவிட்டு அவரது காலை கட்டிக்கொண்டு அழுதார் ….சுந்தரி இப்பொழுது கத்தி விட்டு சென்றது போல் காவேரி மகிழுக்கு சப்போர்ட்டாக மனதில் எண்ணுகிறாரா இல்லை அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 86”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *