சுந்தரி தனது பெரிய நாத்தனார் காவேரியிடம் ஆமாம் அனைத்து தப்பும் எனது மருமகள் மேல் தான் இருக்கிறது உங்கள் மருமகன் மேல் எந்த தப்பும் இல்லை அல்லவா என்று சொல்லிவிட்டு தனது இளைய மகன் எழில் மற்றும் நிலா இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் உள்ள பூந்தோட்டத்திற்கு வந்தார் ….
சுந்தரி வெளியே வந்தவுடன் காவேரி அங்கையே மடங்கி உட்கார்ந்து அழுதார் அப்பொழுது அவரது தோளில் பாண்டியம்மா பாட்டி கை வைத்தார் தனது அம்மாவின் காலை கட்டிக்கொண்டு காவேரி அழுதார் அவர் வேறு எதுவும் பேசவில்லை அவரது மனதிலும் வருத்தம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அனைத்து தவறையும் தனது மகள் மகா தான் செய்தால் என்று அவர் என்றும் என்னவில்லை ….
ஆனால் அவள் சொல்லியிருந்தால் நான் அவளுக்கு என்று விட்டுக் கொடுத்திருப்பேனே என்று மனதில் எண்ணி கொண்டு அழுது கொண்டிருந்தார் அப்பொழுது காவேரியின் பெரிய மருமகள் இனிதான் அவரது தோளில் கை வைத்து எழுப்பி அங்குள்ள ஷோபாவில் உட்கார வைத்தால் அத்தை உங்கள் மேல் எந்த தவறும் இல்லை அம்மா பேசிவிட்டு செல்கிறார் என்பதற்காக நீங்கள் உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்…
அம்மா அவரது மருமகள் மேல் தப்பில்லை என்று சொல்லவில்லை அவர் மகன் மேலும் தப்பு இருக்கிறது என்று மட்டும் தான் சொல்லி செல்கிறார் இருவரும் மேலும் தவறு இருக்க தானே செய்கிறது அவர்கள் இருவரும் அவர்களது விருப்பத்தை வீட்டில் சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சனை கிடையாது ..
என்னுடைய விருப்பத்தையும் உதிரன் மாமா விருப்பத்தையும் வீட்டில் சொல்லி பேசி சம்மதம் வாங்கி எங்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிந்தவர்களால் அவர்களது விருப்பத்தை சொல்லி அவர்களது காதலை நிறைவேற்றிக் கொள்ள தெரியவில்லை அவ்வளவு கோழையாக தான் இருந்திருக்கிறார்கள் அதற்கு எதற்காக நீங்கள் வருந்த வேண்டும்….
வீட்டில் உள்ள யாருமே வருந்த வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் செய்த தவறுக்கு நாம் என்ன செய்வோம் என்றால் காவேரி தனது மருமகளை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார் நான் எனது அண்ணனாக இருந்தாலும் அவர் மேல் தவறு இருந்தால் தவறு என்று தான் சொல்ல முடியும் அத்தை இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டிருக்கிறது கயல் தான் ….
இத்தனை உறவுகள் இருந்தும் சொந்த பந்தங்கள் இருந்தும் அனாதை போல் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் இப்பொழுது அவள் மாசமாக இருக்கிறாள் என்று தெரிந்தும் கூட உங்களால் அவளை போய் பார்க்கமுடியவில்லை ஏன் அவளைப் பற்றி பேச்சை கூட உங்களால் இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ….
அதற்கு காரணம் நீங்கள் எடுத்து வளர்த்த உங்களது மருமகனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி பந்தக்கால் நடும் வரை அழைத்துக் கொண்டு வந்து விட்டு விட்டால் என்ற வருத்தம் தானே கோபம் தானே அப்படி இருக்கும் பொழுது இதில் அதிக பாதிக்கப்பட்டிருப்பது கயல் தான் அவர்கள் இருவரும் அவர்களது நேசத்தை சொல்லியிருந்தால் கயலும் அவளுடைய விருப்பத்தை வீட்டில் சொல்லி இருப்பாள் ….
நாமும் அதற்கு சம்மதம் தெரிவித்திருப்போம் ஆனால் இவர்களும் அவர்களது காதலை சொல்லாமல் கயல் சொல்வதற்கும் உண்டான சூழ்நிலையையும் அமைத்துக் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தான் அவர்கள் இருவரும் இந்த வீட்டிற்காக என்று அவர்கள் காதலை தியாகம் செய்தேன். என்று சொல்லலாம் சுற்றி இருப்பவர்களும் அப்படி என்னலாம் ஆனால் அவர்கள் கோழையாக அவர்கள் காதலை விட்டுக் கொடுத்தது மொத்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் பறித்து விட்டது…..
நீங்கள் பேச வேண்டாம் என்று சொல்வதற்காகவோ இல்லை உங்களுக்காகவோ இங்கிருப்பவர்கள் யாரும் பேசாமல் இல்லை அனைவருக்குமே அவர்கள் இருவரும் மீதும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது அதனால் தான் பேசாமல் இருக்கிறார்கள் இப்பொழுது மகா மாசமாக இருந்தாலும் அவளிடம் பேச முடியவில்லை என்ற வருத்தம் வேண்டுமானால் வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கலாம் ஆனால் அவள் மேல் கோபம் இல்லை என்று ஆகிவிடாது என்று பிறகு காவேரி வேறு எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார் ….
அப்பொழுது வேணி தான் கோதை இடம் வந்து நேரம் ஆகிறது அத்தை இரவு உணவு சமைக்கலாம் என்று அழைத்துச் சென்றாள் அவரும் வேணியை பார்த்து விட்டு சமையல் அறைக்கு சென்றார் வேணி இடம் வேணி நீ போய் உட்காரு காலையிலிருந்து நின்று கொண்டிருக்கிறாய் உனக்கு அசதியாக இருக்கும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் எத்தனை பேருக்கு நீங்கள் ஒருவரே எப்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று சமைக்க சென்றால் ….
அப்போது சுந்தரி வெளியில் வந்து மகா மகிழ் இருவருக்கும் அருகில் வந்து நின்றார் மகா சுந்தரி அருகில் வந்து அத்தை இதில் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை எங்கள் இருவரும் மேலும் அனைத்து தவறையும் வைத்துக் கொண்டு நீங்கள் குற்றவாளியாக வீட்டில் உள்ள யாரிடமும் நிற்க வேண்டிய அவசியமில்லை என்னால் மறைக்க முடியாமல் உங்களிடம் வந்து சொன்னேன் அதற்காக நீங்கள் அதற்கு பலியாளகாக ஆக முடியாது ….
அதேபோல் வீட்டில் உள்ள யாருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை இன்னும் சொல்லப்போனால் உதிரன் அண்ணனை தவிர எங்களது விருப்பம் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது உதிரன் அண்ணானும் சொல்ல சென்றதையும் தடுத்தது நான் தான் முழுக்க முழுக்க அனைத்து தவறையும் என் மேல் வைத்துக்கொண்டு நான் யாரையும் குறை சொல்ல முடியாது என்று சொல்லும் பொழுது மகாவின் கையை மகிழ் பிடித்தான் ….
அதை சுந்தரி பார்த்துவிட்டு தனது மகனை முறைத்தார் அவன் அமைதியாக தனது தாயை பார்த்துக் கொண்டே இருந்தான் அப்பொழுது யாரோ எப்படியோ போங்க ஆக மொத்தம் இந்த வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்க கூடாது என்று முடிவு பண்ணிட்டீங்க என்று மகா மகிழ் இருவரையும் பார்த்து கத்திவிட்டு இரவு உணவு சமைக்க வேண்டும் என்று எண்ணி வீட்டிற்குள் சென்றார் ….
அப்போதுதான் வேணி கோதையிடம் பேசிக் கொண்டிருந்தாள் சுந்தரி சமையல் அறைக்குள் சென்றவுடன் வேணி நீ போய் உட்காரு உனக்கு கால் வலி இருக்கும் அல்லவா காலையிலிருந்து நின்று கொண்டிருக்கிறாய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் அம்மா என்றால் ஒன்றும் இல்லை நீ போ நான் பார்த்து கொள்கிறேன் என்றார் …..
கோதை சிரித்துக் கொண்டே மகாவிற்கு இருக்கும் அனைத்து நல்ல குணங்களும் எனது அண்ணி சுந்தரியிடம் இருந்து வந்தது தான் எங்கிருந்தோ வந்தவர் என்னையும் அக்காவையும் இந்த வீட்டு பெண்ணாக நினைத்து இருந்தாலும் எங்களை இந்த வீட்டில் இத்தனை வருடங்களாக இந்த வீட்டில் ஒரு ஆளாக வாழ வைத்து இருக்கிறார் எங்க அண்ணியின் குணநலன் மட்டுமே இதுவே இவரிடத்தில் வேறு ஒருவர் வந்து எங்களை இந்த வீட்டை விட்டு துரத்தி கூட இருக்கலாம்…
ஆனால் அதை செய்யாமல் விட்டதால் தான் இப்பொழுது இந்த குடும்பம் ஒன்றாக இருக்கிறது மகா எனது அண்ணியை பார்த்து வளர்ந்ததாலோ இல்லை அவர் வளர்த்ததாலோ அவரைப் போலவே இருக்கிறாள் அதனால் தான் அவள் வாழ்க்கையும் விட்ட தர துணிந்து விட்டால் இதில் நான் யாரையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை என்று விட்டு அமைதியாக தனது கண்ணீரை துடைத்துக் கொண்டே சமைக்க ஆரம்பித்தார் …
சமையலறைக்குள் வேணியை அனுப்பி விடுவதற்காக வந்து காவேரியும் இதைக் கேட்டார் காவேரி சமையல் அறைக்குள் வந்து தனது தங்கை கோதையின் கண்ணீரை துடைத்துவிட்டு எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களில் இது அனைத்தும் சரியாகிவிடும் கோதை என்று விட்டு சுந்தரியை பார்த்து முறைத்து விட்டு வாய் கோணித்துக் காண்பித்து விட்டு நிலா குட்டி மதியமே என்ன சாப்பிட்டாள் என்று தெரியவில்லை. …
பசி தாங்க மாட்டாள் அவளுக்கு இடியாப்பம் தேங்காய் பாலும் நான் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சமையலறைக்குள் வந்து நின்றார் அவர் சொல்லிய அனைத்துமே சுந்தரியிடம் தான் சுந்தரி சிரித்து விட்டு நீங்க உங்க மகளுக்கும் மருமகளுக்கு எதை வேண்டுமானால் செஞ்சுகோங்க எனக்கு என்ன என்று சொல்லிவிட்டு சுந்தரியும் கோதையும் மற்ற அனைவருக்கும் மாவு இருப்பதால் இட்லி ஊற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி சாம்பார் சட்னி செய்வதற்கு வெங்காயம் தக்காளி அறிந்து கொண்டிருந்தார்கள்….
வேணி சிரித்துவிட்டு அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தனக்கு கால் வலிப்பதால் அமைதியாக வெளியே வந்து விட்டால் மூவரும் சமைக்கிறார்கள் என்று எண்ணி தனது நண்பர்களையும் வரவேற்பு அறையில் இருக்கும் தனது நண்பர்களையும் வெளியில் உள்ள பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தால் அவர்கள் மூவரும் அமைதியாக வேனியுடன் வந்தார்கள் பிறகு பூத்தோட்டத்திற்கு வந்தவுடன் மகாவிடம் மேம் இந்த கூட்டு குடும்பத்தில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறதோ அதே அளவிற்கு வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது அல்ல என்று கேட்டார்கள்…
மகா மூவரையும் பார்த்து சிரித்து விட்டு கூட்டு குடும்பம் என்று இல்லை கணவன் மனைவி இருவர் மட்டும் இருந்தாலும் அங்கு சண்டையும் இருக்கும் சமாதானமும் இருக்கும் அதுதான் வாழ்க்கை வாழ்க்கையில் இன்பம் மட்டும் தான் வரும் என்று எப்பொழுதும் கிடையாது துன்பமும் வரும் இன்பத்தை தாங்கிக்கொள்ளும் நாமே துன்பத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும் இதுதான் வாழ்க்கை என்றால் அப்பொழுது சூழ்நிலையை மாற்ற எண்ணி நிலா தான் கை எடுத்து கும்பிட்டு அம்மா சாமி இங்கேயும் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுராது என்று சிரித்துக் கொண்டே சொன்னால்…..
மற்ற அனைவரும் சிரித்து விட்டார்கள் சூழ்நிலை மாற்ற எண்ணி தான் நிலா அவ்வாறு சொல்கிறார் என்று எண்ணி எழில் அவளது தலையில் கை வைத்துவிட்டு அவளது வெற்றியோடு நெற்றி முட்டி விட்டு குட்டி சாத்தான் பசிக்குது டி என்றான் பசிக்குதுன்னா எனக்கும் தான் பசிக்குது நான் என்ன பண்றது சமைக்க போனவங்க சமைச்சா தான் இல்ல எல்லாரும் கோபத்தில் போய் ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்திட்டாங்களோ என்று சொன்னால்….
அப்பொழுது வேணி சிரித்துவிட்டு நிலாவில் தலையில் கொட்டிவிட்டு மூன்று பேரும் சமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றவுடன் சரி என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு சுந்தரி அழைத்தவுடன் அனைவரும் வரவேற்பறைக்குச் சென்றார்கள் நிலாவின் தோழிகளுக்கும் வேணி சமையல் அறையில் இருந்து வெளியில் வரும் பொழுது வேணியிடம் காவேரி உனது நண்பர்களுக்கு இடியாப்பம் பிடிக்குமா என்று கேட்டவுடன் பிடிக்கும் என்ற உடன் அவர்களுக்கும் சேர்த்து செய்திருந்தார்கள்…..
இடியாப்பம் கொஞ்சம் அதிகமாகவே செய்யலாம் சாப்பிட விரும்புபவர்கள் இடியாப்பம் சாப்பிட்டுக் கொள்வார்கள் இட்லி மீதமிருந்தால் கூட அதை மறுநாள் காலையில் உப்புமா செய்து கொள்ளலாம் என்று எண்ணி கொஞ்சம் எக்ஸ்ட்ராவே இடியாப்பமும் செய்து இருந்தார்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் மகிழ் மகா இருவரும் அவர்கள் சென்று ஒரு அரை மணி நேரம் தோட்டத்தில் பேசியிருந்து விட்டு மொட்டை மாடிக்கு சென்றார்கள்….
மகிழ் மாவு இருந்ததால் மகாவிற்கு தோசை ஊற்றிக் கொடுத்தான் இருவரும் சாப்பிட்டுவிட்டு மகா மாத்திரை போட்டுவிட்டு அமைதியாக வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தார்கள் அப்போது நிலாவின் தோழிகள் நிலா எழில் இருவரையும் அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தார்கள் வேணி முகிலை பார்த்தாள் முகில் சிரித்துக் கொண்டு போ என்பது போல் கை காண்பித்தவுடன் நீங்க வரலையா என்று கேட்டால்….
இல்ல வேணி நீ போய்விட்டு வா எனக்கு அசதியாக இருக்கிறது இவர்களுடைய உறவைப் பற்றிய விளக்கம் எனக்கு தான் அனைத்துமே தெரியுமே என்றவுடன் வேணி சிரித்துக் கொண்டே தலையாட்டி விட்டு வேகமாக மாடிப்படி ஏறி சென்றாள் நிலாவின் தோழிகளுக்கு மகா அவர்கள் உறவின் விளக்கத்தை தெளிவாக புரிய வைப்பாளா …
அதை நிலாவின் தோழிகள் மூவரும் புரிந்து கொள்வார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
Interesting