Skip to content
Home » மகாலட்சுமி 90

மகாலட்சுமி 90

அனைவரும் கல்லூரி முடிந்து வேலைகள் முடிந்து மாலை வீட்டிற்கு வந்த பிறகு இனி திரும்பவும் கேட்டால் எழிலிடம் அவனும் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து விட்டதா மகா மொட்டை மாடியில் அமைதியாக கீழே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்….

எழில் சிரித்துக் கொண்டே வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு செய்துவிடலாம் அதற்கு தேவையான அனைத்து ஏற்படுகளையும் நான் முகில் உதிரன் மூவரும் பார்த்துக் கொள்கிறோம் என்றவுடன் காவேரி காய் அறிந்து கொண்டிருந்தார் கத்தியை படார் என்று உணவு மேசை மீது வைத்தார் அனைவரும் காவிரியை பார்த்தார்கள்…

நிலா தனது பெரியம்மாவை பார்த்து சிரித்துக் கொண்டே  பெரியம்மா இப்பொழுது உங்கள் மகளுக்கு வளைகாப்பு வைக்க கூடாது என்று தூக்கி எறிந்தீர்களா இல்லை இவ்வளவு நாள் அனைத்தையும் எடுத்துக்காட்டி செய்த மகிழ் மகா செய்யாமல் நீங்கள் மூவரும் செய்ய போகிறீர்களா என்று அர்த்தத்தில் தூக்கி எறிந்தீர்களா என்று கேட்டால் நிலா அவ்வாறு கேட்டவுடன் தான் அனைவருக்குமே இப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது…

அனைவரும் அமைதியாக காவிரியை பார்த்தார்கள் காவிரி நிலாவை முறைத்துவிட்டு உன் வயதுக்கு என்ன பேச்சு பேசணுமோ அதை மட்டும் பேசு என்று சொல்லிவிட்டு நான் சொன்னால் நீங்கள் அனைவரும் கேட்டு விடப் போகிறீர்களா? நீ எதுவானாலும் பேசு எனக்கு என்ன என்று உங்கள் இஷ்டத்துக்கு தான் நடந்து கொண்டிருக்கிறீர்கள் அப்படி இருக்கும்பொழுது என்னுடைய பேச்சை கேட்கவா போகிறீர்கள் என்றார்…..

சரி பெரியம்மா நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சொல்லுங்கள் அதன் பிறகு நாங்கள் கேட்கிறோமா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம் என்றவுடன் நிலாவை பார்த்து முரைத்துவிட்டு அமைதியாக சமையலறைக்குள் புகுந்து விட்டார் நிலா போகும் தனது பெரியம்மாவை பார்த்து விட்டு நீ சொல்லும் மாமா என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தான்….


அனைவரும் அமைதியாக கண் மூடி திறந்தவுடன் நாங்கள் அனைத்து ஏற்பாட்டையும் பார்த்துக் கொள்கிறோம் புடவை நகை எடுப்பதற்கு மட்டும் வாருங்கள் என்றவுடன் இனி ஏன் இந்த வீட்டில் இருந்து யாரும் வர மாட்டார்களா என்றாள் இனி கேட்டது தன் வீட்டில் உள்ள பெரியவர்கள் யாரையும் அல்ல மகாவை மகா எப்பொழுது மாசமாக இல்லாவிடில் மகாவே வளைகாப்பை எடுத்துக்காட்டி  செய்து விடுவாள்….

மகா மாசமாக இருப்பதால் அவள் வளைகாப்பு செய்யக்கூடாது அதற்காகத்தான் இனி அனைவரும் வளைகாப்பு நடத்த திட்டம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று மகா ஏற்கனவே சொல்லியும் இருந்தால் அதன்படி எழிலும் சொல்லிவிட்டான் தினமும் ஒவ்வொரு வேலையாக செய்வதாக முடிவு செய்து இருந்தார்கள் ….


வீட்டில் இருந்த பெரியவர்கள் யாரும் வரமாட்டார்கள் என்று உடன் வேனியின் அப்பா அம்மாவை கூப்பிட்டு இருந்தார்கள் அவர்களும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டார்கள் இப்படியே ஒரு வாரங்கள் ஓடியது வளைகாப்புக்கு அன்று காலை அதிகாலை 3 மணி அளவில் தங்கள் வீட்டு வாசலிலேயே ஏழு வகையான சாதம் ரெடி செய்து எடுத்துக்கொண்டு சென்றார்கள்….

இனியும் வேணியும் சேர்ந்து படைச்சலில் வைப்பதற்கும் கயலுக்கு கொடுப்பதற்கும் சாதம் அவர்கள் கையால் ரெடி செய்தார்கள் வருபவர்களுக்கு பரிமாறுவதற்கு சமையல் காரரை வைத்து சமைத்துக் கொண்டார்கள் மூன்று மணியளவில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு குளித்துவிட்டு அவர்களுக்கு வைத்து கொடுப்பதற்கான தாம்பூலத்தட்டு நகைப்புடவை அனைத்தையும் எடுத்து வைத்தார்கள் ….


இதெல்லாம் கரெக்டாக இருக்கிறதா என்று கேட்பதற்காக மகாவை அழைப்பதற்கு எழில் மேலே செல்லும் நிலையில் காவேரி சுந்தரி என்று வேகமாக கத்தினார் சுந்தரி தனது இளைய மகனிடம் அவள் இதையெல்லாம் வந்து பார்க்க கூடாது என்றவுடன் எழில் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான் அப்போது  மகா ஏன் பார்க்க கூடாது என்று கேட்டவுடன் மாசமாக இருக்கும் பெண் இன்னொரு பெண்ணுக்கு வளைகாப்பு சுற்றும் பொழுது அந்த பொருட்களை பார்க்கக்கூடாது டா என்றார்..

தனது தாய் அவ்வாறு சொன்னவுடன்  எழில் தனது பெரிய அத்தை காவிரியை பார்த்து சிரித்துவிட்டு அப்படியே மாடி படி ஏறினான்  அவர் அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார் வரும்பொழுது மகாவை அழைத்துக் கொண்டு வந்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் இவன் தாங்கள் சொல்வதைக் கேட்கவே மாட்டான் என்று எண்ணினார்கள் ஆனால் அவள் கீழே இறங்கி வருவதற்கு முன்பே கயல் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான சாதங்களில் இருந்து தாம்பூல தட்டில் இருந்து அனைத்தும் வண்டியில் ஏற்றப்பட்டு இருந்தது….



அவர்கள் செல்வதற்கு சிறிய வண்டி ஒன்று சொல்லி இருந்தார்கள் அவள் கீழே இறங்கி வரும் போது அனைவரும் வண்டியில் உட்கார்ந்து இருந்தார்கள் மகா வந்தவுடன் நாலு டயருக்கு அடியிலும் எலுமிச்சம்பழம் வைத்தால் வைத்துவிட்டு பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு துண்டுகளாக அறிந்து அதன் நடுவில் கற்பூரத்தை வைத்து காட்டிவிட்டு பிறகு வண்டி எடுக்கப்பட்டது எழில் அனைவரையும் அனுப்பிவிட்டு மகா விடம் சொல்லி விட்டு அவனது பைக்கில் கிளம்பினான்….

அவன் கிளம்பும் பொழுது மகா தனது கையில் இருக்கும் வளையல்களை எழில் கையில் கொடுத்தால் அனைவரும் மகாவை பார்த்துக் கொண்டிருந்தார்கள் நேரம் ஆகுவதால் மகா கொடுத்ததை வாங்கி கொண்டு எழில் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிட்டான் மகா  மாடிப்படி ஏறிக்கொண்டே இந்த வளையலை நான் வாங்கவில்லை மாமா தான் வாங்கி கொண்டு வந்தார் அவர் கொண்டு சென்று கொடுப்பதாக இருந்தது ….

ஆனால் நான் இல்லாமல் செல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார் அவர் இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கிறார் அசதியில் அதனால் தான் நான் கொடுத்தேன் என்று அவள் போக்கில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு மாடி ப்படி ஏறிவிட்டாள் வீட்டில் உள்ள அனைவரும் போகும் மகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் காவேரி அவளை மேலே ஏறும் வரை பார்த்திருந்து விட்டு அனைவரையும் பார்த்து என்ன பார்த்துட்டு இருக்கீங்க போய் தூங்குங்க என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு அமைதியாக அவரது அறைக்கு சென்று விட்டார்…

அவருக்கும் தூக்கம் இல்லை தான் இருந்தாலும் 3 மணியில் என்ன செய்வது என்று நினைத்து விட்டு அமைதியாக இருந்தார்கள் 4 மணி அளவில் அனைவரும் கயல் வீட்டிற்கு சென்றிருந்தார்கள் முகில் உதிரன் எழில் மூவரும் ஒவ்வொன்றாக கீழே இறக்கி வைத்தார்கள் முத்துவும் இரண்டு மூன்று ஆட்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் மகிழ் தான் ஏற்கனவே சொல்லி இருந்தான் கயல் அனைவரும் வந்து வரவில்லையா என்றுதான் முதல் கேள்வியாக கேட்டாள்….


அப்பொழுது இனிதான் ஏண்டி உன்னுடைய இரண்டு அண்ணன் வந்திருக்காங்க அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாத என்றவுடன் கயல் வாயை கோணித்துக் விட்டு உனக்கு கவலை இல்லையா இது என்னோட விசேஷம் உனக்கு எப்படி கவலை இருக்கும் என்று சொல்லிவிட்டு அமைதியாக போய் ஓரிடத்தில் உட்கார்ந்தாள் இனி அவளது அருகில் உட்கார்ந்து திருப்பி அவளது முகத்தை பார்க்க வைத்தால் இனியின் கண்களும் கலங்கி தான் இருந்தது…

கயல் இனியை கட்டிக்கொண்டு அழுதால் பிறகு இனி தன்னை சரி செய்து கொண்டு லூசு மாதிரி அழாத டி என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டு பொண்டாட்டி இல்லாம உன்னுடைய மாமா தனியாக வர மாட்டாராம் போதுமா என்றவுடன் கயல் சிரித்தாள் பிறகு  கயல் இவர்கள் வரும் போது குளித்துவிட்டு இருந்தால் இவர்கள் வரும் வேளையில் பிறகு வேணி நிலா இருவரும் கயலை அழைத்து கொண்டு சென்று அலங்காரம் செய்தார்கள் …

இனி தங்கள் வீட்டு ஆண்களுடன் அனைத்து பொருட்களையும் எங்கெங்கு வைக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்று அனைத்தையும் செய்து கொண்டு இருந்தால் காவேரி வளைகாப்பு செய்யக்கூடாது என்று ஒரு வார்த்தை கூட சொல்லவும் இல்லை எதுவும் பேசாமல் அமைதியாக விட்டுவிட்டார் வீட்டில் உள்ளவர்களே அவர் ஏதாவது தடுப்பார் என்று எண்ணினார்கள் ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை…

ஏன் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட செல்ல வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை அவர்களாக போகாமல் இருக்கிறார்கள் சிறுவர்கள் அவர்களாக வந்து நிற்கிறார்கள் வேணியின் பெற்றவர்களும் இவர்கள் வந்து பத்து நிமிடங்களில் வந்து விட்டார்கள் பெண் வீட்டு சார்பில் இருந்து பெரியவர்களாக வேணியின் பெற்றவர்களும் முத்துவின்  அம்மா அப்பாவும் வந்திருந்தார்கள்….

அவர்கள் நால்வரும் அனைத்தையும் பெண் வீட்டு சார்பாக எடுத்துக்கட்டி செய்தார்கள் பிறகு ஊரில் இருந்தும் ஒரு சிலர் வர ஆரம்பித்து விட்டார்கள் காலை 6 டு 7:30 நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்திலே வளைகாப்பும் வைத்து விட்டார்கள் முதலில் முத்து வேணியின் அம்மா அப்பாவை தான் வளையல் போட சொல்லி இனி அழைத்தால் கயல் வேணியின் அம்மா அப்பாவிடம் என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று மன்னிப்பு கேட்டுவிட்டு நிலாவை வலையல் போட அழைத்தால்….

ஊரில் உள்ள ஒரு சில பெரியவர்கள் உன்னுடைய அண்ணன் மனைவி இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்களை கூட அழை ஆனால் திருமணம் ஆகாத சிறிய பெண்ணை அழைக்கிறாயே என்று கேட்டவுடன் கயல் நிலாவையே பார்த்து கொண்டிருந்தால் நிலா அமைதியாக கயல் அருகில் வந்து நின்றால் நாங்கள் சொல்வது உங்கள் காதில் விழாத என்று கேட்டார்கள் இனி கயலிடம் கயல் என்றால்…

ப்ளீஸ் நீ கொஞ்ச நேரம்  அமைதியாக இரு என்று விட்டு நிலா என்று தனது கையை காண்பித்தாள் நிலா அமைதியாக என்னிடம் எதுவும் இல்லை என்றவுடன் எழிலை பார்த்தால் எழில் வேகமாக வந்து நிலா கையில் இரண்டு வளையல்களை திணித்தவுடன் கயல் தனது அத்தை மாமாவை பார்த்தால் அவர்கள் கண்முடி திறந்தவுடன் ஊரில் உள்ள அனைவரிடம் பேச ஆரம்பித்தால் நீங்கள் சொல்வது என்னவோ சரிதான் வயதில் மட்டும் பெரியோர்களாக இருந்தால் போதாது மனதளவிலும் பெரியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் தான் ….

இந்த வளைகாப்பு அனைத்தும் நடத்துவதற்கு காரணமானவள் இவள் தான் இவள் போடுவதில் ஒன்றும் தவறு இல்லை என்று நினைக்கிறேன் என்னுடைய அத்தை மாமாவிற்கும் சம்மதம் ஊரில் உள்ள நல்ல உள்ளங்களுக்கும் இது தவறாக எடுத்துக் கொள்ளாமல் நல்ல முறையில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என்னுடைய வளைகாப்பை நல்ல முறையில் சிறப்பித்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கைகூப்பி கேட்டால் …

அனைவரும் அதன் பிறகு எதுவும் பேசவில்லை நிலாவிற்கு லேசாக மனது உறுத்தலாக இருந்தது அவளுக்கு செய்ய விருப்பமில்லை அதை இனி கையில் கொடுத்தால் இனி சிரித்துக் கொண்டே கயலை பார்த்தால் கயல் கண்மூடி திறந்தவுடன் உதிரனும் இனியும் வளைகாப்பை முதலில் ஆரம்பித்து வைத்தார்கள் அவர்கள் இருவரும் நிலா கையில் உள்ள வளையலை வாங்கிக் கொண்டு பிறகு போட்டுவிட்டார்கள்….

பிறகு அவர்கள் வாங்கி கொண்டு வந்த வளையலை போட்டு விட்டார்கள் முகில் நெக்லஸ் வாங்கி கொண்டு வந்தான் வேனியை அழைத்துக் கொண்டு சென்று தான் நெக்லஸ் வாங்கி கொண்டு வந்தான் வேணிக்கும் ஒரு நெக்லஸ் வாங்கி கொடுத்தான் அவள் வேண்டாம் என்று சொல்லியும் அவனாக ஒன்றை தேர்வு செய்து அதை வாங்கி கொண்டு வந்தான் அதுதான் இப்பொழுது வேணி கழுத்திலும் போட்டு இருக்கிறாள்….

பிறகு எழில் அவன் வாங்கிக் கொண்டு வந்த ஒரு டாலர் வச்ச செயினை நிலா கையில் கொடுத்தான் நிலா எழிலை பார்த்து சிரித்துவிட்டு வேகமாக சென்று கயல் கழுத்தில் போட்டுவிட்டால் பிறகு ஒவ்வொருவராக நலங்கு வைத்து கயலின் வளைகாப்பை நல்ல முறையில் நடத்தி முடித்தார்கள் பிறகு வந்திருக்கும் உறவினர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் பந்தி பரிமாறப்பட்டது…

பிறகு கயல் அன்பு இருவரையும்  பூஜை அறைக்கு அழைத்துச் சென்று படையல் போட்டுவிட்டு பிறகு அவர்கள் இருவரையும் உட்கார வைத்து ஊட்டி விட்டார்கள் கயலுக்கு லேசாக கண்கள் கலங்கியது அவள் வாய்விட்டு சொல்லாத ஒன்றை கயலின் மாமியார் சொல்லவும் செய்தார் மூன்றாம் மாதம் ஐந்தாம் மாதம் என்று கயலுக்கு சாப்பாடு கொடுக்க வந்த மகா இப்போது கொடுக்க வரவில்லை ஆனால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது …

இப்பொழுது அவளுடைய வயிறு நிரம்பி இருக்கிறது அவளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் இந்த குடும்பம் திரும்பவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாய்விட்டு சொல்லி இறைவனை பிரார்த்தித்து விட்டு தனது மருமகளுக்கு வருவாய் ஊட்டி விட்டார் கயலின் பிறந்த வீட்டு குடும்பத்தினர்கள் அனைவரும் கயலுக்கு நல்ல மாமனார் மாமியார் கிடைத்திருக்கிறார்கள் என்று மனதில் எண்ணிவிட்டு வளைகாப்பையும் நல்ல முறையில் முடித்துவிட்டு சரி வருகிறோம் என்று மாலை 3 மணி அளவில் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு அவர்கள் வீட்டை நோக்கி சென்றார்கள்…

அனைவருக்கும் சிறிய வருத்தம் இருந்தது கயலை தங்களுடன் அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆனால் கயலை இப்பொழுது அழைத்துச் செல்ல முடியுமா என்று எண்ணம்  அனைவருக்கும் இருந்தது அப்பொழுது வேணியின் பெற்றவர்கள் கயலை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்கள் கயல் வேணியின் பெற்றவர்கள் வீட்டிற்கு செல்வாளா …


கயல் மாமனார் மாமியார் ஒத்துக்கொள்வாரா அதைப்போல் கயல் பிறந்த வீட்டினரும் அதற்கு  ஒத்துக்கொள்வார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …


அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 90”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *