Skip to content
Home » மகாலட்சுமி 92

மகாலட்சுமி 92

இப்படியே அமைதியாக இரண்டு நாட்கள் சென்றது முகில் வேணியை தேவையான அனைத்தையும் பார்த்துக் கொண்டான் வேணியும் கல்லூரிக்கு சென்று வந்தால் வேணி முகில் இருவரும் பெரிதாக இந்த இரண்டு நாட்களில் பேசிக்கொள்ளவில்லை நிலாவும் வேணியிடம் பேசவில்லை …

அவள் தன்னிடம் ஆவது சொல்லி இருக்கலாமே தோழியாக எண்ணி கூட சொல்லி இருக்கலாமே என்று வருந்தினாள் அதை வேனியிடமும் கேட்டுவிட்டால் அன்று மாலையே கல்லூரி முடிந்து வந்து நீ இந்த வீட்டில் ஒரு ஆளாக என்னிடம் சொல்லவில்லை என்றாலும் ஒரு தோழியாக சொல்லி இருக்கலாம் உனக்கு நான் அந்த அளவிற்கு அந்நியமான போய்விட்டேனா என்று சொல்லிவிட்டு  வேணி பேச வருவதை கூட காதில் வாங்காமல் சென்றுவிட்டாள் ….


வீட்டில் உள்ள யாருமே பெரிதாக வேணியிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்று தான் சொல்ல வேண்டும் வேணிக்கு தான் செய்தது  தவறோ என்று எண்ணம் கூட தோன்றியது எழில் மட்டும் எப்பொழுதும் போல் பேசினான் இனியும் அமைதியாக எப்பொழுதும் போல் பேச செய்தால் பாட்டி தாத்தாவும் பேசினார்கள் இருந்தாலும் அவளுக்கு ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்தது போல் இருந்தது….

இப்படியே இரண்டு நாட்கள் சென்றது மூன்றாவது நாள் மாலை வேணி நிலா இருவரும் கல்லூரி விட்டு வரும் நேரத்திற்கு கடையில் இருந்து வந்த முகில் வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் மூன்று நாட்கள் வெளியூர் செல்கிறேன் வருவதற்கு மூன்று நாட்களாகும் வேலை விஷயமாக என்றான் சுந்தரி தான் டேய் என்னடா வேலை விஷயமாக என்று கேட்டார் …

அப்பொழுது தான் மகா கல்லூரி முடிந்து வந்தால் அவள் தனது தொண்டையை கணைத்துக் கொண்டே அமைதியாக மொட்டை மாடிக்கு சென்றால் சுந்தரி அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை என்னடா வேலை விஷயமாக என்று கேட்டார் அத்தை அதான் சொன்னேன் அல்லவா வருவதற்கு மூன்று நாட்களாகும் நான் வருவதற்கு என்றான்…

சரிடா எப்பொழுது கிளம்புகிறாய் என்று கேட்டார் இன்று இரவு 10 மணிக்கு என்றான் என்ன என்று இரவே வா என்று கேட்டார் ஆமாம் அத்தை என்று விட்டு அமைதியாக அவனது அறைக்குச் சென்று  மூன்று நாட்களுக்குத் தேவையான துணிகளை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு வரவேற்புரைக்கு வந்தான் அவன் அறையில் இருந்து வெளியில் வந்தவுடன் வேனி அவர்கள் அறைக்குள் சென்று விட்டாள் …

எப்படியும் முகில் வருவார் என்று எண்ணினாள் ஆனால் அவன் இரவு 10 மணி வரையும் வரவேற்பரையிலே உட்கார்ந்து அனைவரிடமும் பேசிவிட்டு சென்றான் வேணி அவளது அறையில் இருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை எட்டி எட்டிப் பார்த்தால் அதை வீட்டில் உள்ள அனைவரும் பார்த்தார்கள் இனி முகிலை பார்த்து சிரித்தாள் காவேரி தான் வேணியை பார்த்து விட்டு டேய் உன் அறைக்கு போ அவள் எட்டி எட்டி பார்க்கிறாள்  என்றவுடன் முகில் தனது அம்மாவை பார்த்து முறைத்துவிட்டு அமைதியாக வரவேற்பு அறையில் உட்கார்ந்து இருந்தான் …

பிறகு  அனைவரும் சாப்பிடும் வேலையில் வேணியை அழைத்து விட்டு அனைவருடன் வந்து உட்கார்ந்து சாப்பிட செய்தான் வேணி முகிலையே பார்த்துக் கொண்டிருந்தால் அவன் மனதில் ஆயிரம் வலி இருந்தது வேணி தன்னை காதலிக்கிறாள் என்பதை அவன் உணர்ந்துவிட்டான் ஆனால் அவளால் என்னிடம் நெருங்காத அளவிற்கு தடுப்பது எது நான் அந்த அளவிற்கு தான் அவளிடம் நடந்து கொண்டிருக்கிறேனா….

இதுவரை என்னுடைய சுண்டு விரல் கூட அவள் மேல் பட்டதில்லையே அதுதான் தவறா? நானாக அவளிடம் நெருங்கிருந்தால் எண்ணை எப்போதே ஏற்று கொண்டு இருப்பாளோ நான் அவளாக ஒரு முடிவு எடுக்கட்டும் என்று எண்ணி அமைதியாக இருப்பது தவறா என்று எல்லாம் எண்ணி இந்த இரண்டு நாட்களில் குழம்பினான் இறுதியாக மகாவிடம் தான் வந்து நின்றான் இப்போது அவன் கிளம்புவதற்கு கூட மகா தான் காரணம்…

மகா தான் சொல்லியிருந்தால் அண்ணா ஒரு இரண்டு நாட்கள் நீ எங்காவது அவளை விட்டு சென்று வா இந்த இரண்டு நாட்களிலும் நீ அவளிடம் பேசக்கூடாது அதேபோல் செல்வதற்கு முன்பும் பேசக்கூடாது அவள் உன்னிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் கூட தர கூடாது  அவள் உன்னை விரும்புகிறாள் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டால் ஆரம்பத்திலேயே அவன் அடித்து அவள் என்னை விரும்புகிறாள் என்ற சொன்ன பின்பு தான் இந்த ஐடியாவையும் கொடுத்தால்…

மகாவும் ஒன்றை அறிவால் தனது முகில் அண்ணனை வேணி மனதளவில் விரும்ப ஆரம்பித்தால் விட்டால் என்பதையும் அதனால் தான் முகிலுக்கு உதவாவும் செய்தால் இந்த உதவி தனது அண்ணனாக முகிலுக்கு மட்டும் செய்யவில்லை அவள் வேணிகாகவும் தான் செய்கிறாள் அப்போது தான் வேனி அவளது விருப்பத்தை அவளாக சொல்வாள் என்று எண்ணினால் …

அதனால் தான் அமைதியாக இப்படி ஒரு காரியத்தை செய்ய சொன்னால் அதேபோல் முகிலும் நடந்து கொண்டான் சுந்தரி அன்று கேட்க வந்தது கூட இதுவரை நீ இப்படி சென்றதில்லையே என்றுதான் அதற்காகத்தான் தொண்டையை மகா செறுமி காண்பித்து விட்டு மேல சென்றாள் தனது அத்தையை மேற்கொண்டு எதுவும் பேசக்கூடாது என்பது போல் ஏனென்றால் முகில் வேலை என்று சொல்லி இதுவரை வெளியே சென்றதில்லை …

அப்படி அவன் கடைகாக சென்றாலும்  இரவு வருவான் அப்படி இரவு வர முடியாது என்றால் மறுநாள் மதியத்திற்குள் வீட்டிற்கு வந்து விடுவான் இதுவரை அவன் வெளியே தங்கியதில்லை என்று தான் சொல்ல வேண்டும் அதனால் தான் சுந்தரி கேட்க வந்தார் மகா தொண்டையைக் கனைத்துக் காண்பித்தவுடன் அமைதியாக ஆகிவிட்டார் வேணிக்கு வருத்தமாக இருந்தது….

முகில்  தன்னிடம் செல்லும்போது சொல்லிவிட்டு செல்வரா என்று முகிலையே பார்த்துக் கொண்டிருந்தால் அவன் வேகமாக அவனது அறைக்கு சென்றான் வேணியும் வீட்டில் உள்ள அனைவரையும் பற்றியும் யோசிக்காமல் முகில் சென்று உடன் வேகமாக அவளது அறைக்குச் சென்றாள் வேகமாக கதவை தாழ்ப்பாள் போட்டால் முகில் வேனியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு சரி வேணி நான் வருகிறேன் பார்த்துக்கொள் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான் …..

வேணி நில்லுங்கள் நான் உங்களிடம் பேச வேண்டும் என்றும் சொல்லவில்லை முகிலும் அவள் எதற்காக கதவை தாழ்ப்பாள் போட்டால் என்றும் கேட்கவில்லை அமைதியாக வேணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே வந்து விட்டான் வேணிக்கு அழுகையாக வந்தது கண்ணீர் முட்டிக்கொண்டும் நின்றது அதை வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தார்கள் ஆனால் அமைதியாக தான் இருந்தார்கள்….

முகில் சென்றவுடன் அமைதியாக அவளது அறைக்குச் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள் சுந்தரிக்கு தான் வருத்தமாக இருந்தது பிறகு காவேரியை பார்த்தார் சுந்தரி   இது அவனுடைய வாழ்க்கை பிரச்சினை இதை அவனே சரி செய்து கொள்வான் சுந்தரி அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை நீ போய் படு என்று சொன்னார்….

சுந்தரி காவிரியை முறைத்து பார்த்தார் எதுவும் உங்களுக்கு பெரிய விஷயம் இல்லை தானே அண்ணி புள்ளை இதுவரை வெளியே சென்றதில்லை மனதில் ஆயிரம் வருத்தங்களுடன் தனியாக செல்கிறான் எனக்கு உள்ளம் பதப்பதைக்கிறது உங்களுக்கு பதைக்க வில்லையா நீங்கள் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை தானே அவன் என்று சொன்னார்…

காவேரி சுந்தரியை பார்த்து சிரித்து விட்டு அவனை இங்கிருந்து செல்ல வேண்டும் என்று சொல்லத் தெரிந்தவர்களுக்கு அவனை இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனியாக விடக்கூடாது என்று கூடவா தெரியாது அவனை யார்  இங்கிருந்து செல்ல சொன்னார்களோ அவர்களே அவனை பார்த்துக்கொள்வார்கள் நீ அமைதியாக போய் படு அவனுக்கு ஒன்றும் ஆகாது என்றார்…

அவர்கள் இருவரும் அவர்களது வாழ்க்கையை பார்த்துக் கொள்வார்கள் என்று சுந்தரியிடம் சொல்லிவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரது அறைக்கு அமைதியாகச் சென்று விட்டார் என்னதான் காவேரி அவ்வாறு சொல்லிச் சென்றாலும் சுந்தரிக்கு சிறிது வருத்தமாக தான் இருந்தது காவிரிக்கும் உள்ளுக்குள் சிறிதாக பயம் இருக்கத்தான் செய்தது …

ஏனென்றால் முகில் வீட்டில் உள்ள அனைவரையும் போல அல்ல அவன் தனக்கு இதுதான் வேண்டும் என்று சிறுவயதிலிருந்து கேட்டு பழக்கம் உடையவன் அல்ல அவன் இந்த வீட்டில் தனக்கு இதுதான் வேண்டும் என்று கேட்டது இரண்டு விஷயங்கள் தான் ஒன்று அவனது படிப்பு மற்றொன்று வேணி அதையும் வீட்டில் உள்ளவர்கள் செய்து கொடுத்து விட்டார்கள் ஆனால் இனிமேல் அவனது வாழ்க்கையை அவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்….

அதில் நாம் தலையிட முடியாது என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தார்கள் இப்பொழுது வேணி இந்த அளவிற்கு மனதில் எண்ணுவாள்  என்று வீட்டில் உள்ள யாரும் எண்ணவும் இல்லை வேணி அவளது மனதில் இருக்கும் விருப்பத்தை தெரியப்படுத்துவதற்காகவும் வலிகளை முகிலிடம் சொல்வதற்காகவும் தான் இந்த பிரிவு என்று எண்ணி அமைதியாக இருந்தார்கள் ….


மகாவும் முகிலை தனியாக விடவில்லை முத்துவை அவனுடன் தான் அனுப்பி வைத்திருக்கிறாள் அவனும் ரொம்ப தூரம் எல்லாம் செல்லவில்லை அருகில் இரு ஊர்கள் தாண்டி தான் இருக்கிறான் அங்கு ஒரு வேலை விஷயமாக தான் சென்றிருக்ககிறான் என்ன வேலை முடித்துவிட்டு இரவு வந்துவிட்டு மறுநாள் காலை செல்வது போல் இருந்தவனை அங்கேயே தங்க வைத்திருக்கிறாள் அவ்வளவு தான் வித்தியாசம் …

எழில் முகில் சென்றவுடன் மேலே மொட்டை மாடிக்கு வந்தான் என்னடா முகில் அண்ணன் சென்று விட்டாரா என்று கேட்டாள் எழில் மகாவை பார்த்து முறைத்துவிட்டு வேணிக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்றெல்லாம் என்ன மாட்டாயா என்று கேட்டான் மகாவின் கண்கள் கலங்கியது மகிழ் தான் தனது தம்பியிடம் வந்து கத்தினான் ….

ஏன் உன் தங்கைக்கு மட்டும் தான் வருத்தம் இருக்குமா என்னுடைய மச்சானுக்கு எல்லாம் வருத்தம் இருக்காதா என்று கேட்டான் அதன் பிறகு தான் மகாவின் கண்கள் கலங்கி இருப்பதையும் எழில் பார்த்தான் மகா நான் வேண்டுமென்று கேட்கவில்லை அவள் அவளுக்கு வேண்டும் என்பதை முகிலிடம் கேட்பது தவறா என்று கேட்டான் அதேதான் நானும் சொல்கிறேன் அவளுக்கு வேண்டும் என்பதை முகிலிடம் கேட்க அவள் ஏன் தயங்க வேண்டும்….

அவர் வாங்கிக் கொண்டு தரவில்லை என்றால் எனக்கு ஏன் வாங்கிக் கொண்டு தரவில்லை என்று அன்று இரவே அவள் சண்டையிட்டு இருக்கலாமே ஏன் காலையில் கல்லூரி கிளம்புவதற்கு முன்பாக கூட சண்டை இட்டிருக்கலாமே அதை ஏன் அவள் கேட்கவில்லை நான் ஒன்று கேட்கட்டா உன்னிடம் அவள் உரிமையாக அனைத்தும் கேட்கிறாள் தானே …

மகிழ் மாமாவிடம் கேட்கிறாள் என் உதிரன் அண்ணனிடம் கூட கேட்கிறாள் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரிடமே கேள்வி கேட்கிறாள் அதையே தனது கணவனிடம் உரிமையாக கேட்பதற்கு அவளுக்கு என்ன என்று கேட்டாள் எழில் அமைதியாக இருந்தான்  நான் ஒன்று கேட்கட்டா வேணி முகில் அண்ணனை  விரும்பவில்லை நமக்காக தான் இந்த வீட்டில் இருக்கிறாள் என்று நினைக்கிறாயா என்று கேட்டால்….

எழில் மகாவை அடிக்க அவளது தாடை அருகில் வந்து விட்டு அமைதியாக கையை கீழே போட்டு விட்டு நீ என்ன லூசா அவள் எப்பொழுதோ முகிலை விரும்ப ஆரம்பித்து விட்டால் அதை நான் எப்பொழுதோ உணர்ந்து விட்டேன் என்றான் ஆனால் அவளது விருப்பத்தை முகில் அண்ணானிடம் சொல்லி இருக்கிறாள் என்று நினைக்கிறாயா என்றவுடன் இல்லை என்று எழிலின் தலை ஆடியது…


அது அவர்களது விருப்பம் மகா அதில் நாம் எப்படி தலையிட முடியும் என்றான் அதையே தான் நானும் சொல்கிறேன் அவர்களது விருப்பத்தில் நாம் தலையிட முடியாது தான் அதற்காக அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று நாம் விட்டு விட முடியுமா என்றவுடன் எழில் வேறு எதுவும் பேசாமல் மகா மகிழ் இருவரையும் பார்த்துவிட்டு அமைதியாக கீழே இறங்கி சென்றான் மகா மகிழைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுதால் ..

முகில் வேணி இருவருக்கும் இருக்கும் பிரச்சனை என்ன அதை முகில் இப்பொழுது மூன்று நாட்கள் வெளியே சென்று தங்கி வருவதால் சரியாகிவிடுமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 92”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *