எழில் கீழ இறங்கியவுடன் மகா மகிழை கட்டிக்கொண்டு அழுதால் மகாவிடம் மகா ஒன்றுமில்லை அனைத்தும் சீக்கிரம் சரியாகும் என்று அவளை அழைத்துக்கொண்டு சென்று படுக்க வைத்தான் அவளும் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பிக்கையில் மாத்திரை போட்டுக் கொண்டு படுத்துவிட்டாள்….
எழில் கீழே இறங்கி வந்துவிட்டு மகாவிடம் நாம் அதிகமாக தான் பேசி விட்டோமோ என்று எண்ணி விட்டு இருந்தாலும் அது வேனியின் மேல் இருக்கும் பாசத்தினால் தான் என்றும் மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக படுத்து விட்டான் மறுநாள் காலையிலிருந்து வேணியாகவே அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்தால் ….
அனைவரிடமும் பேச செய்தால் பெரியவர்கள் அனைவரும் பட்டும் படாமல் பேசினார்கள் பாட்டி தாத்தா இனி மகா எழில் மகிழ் இவர்கள் மட்டும்தான் நன்றாக பேசினார்கள் நிலா உதிரன் கூட அவ்வளவாக பேசவில்லை வேணிக்கு அது வருத்தமாக இருந்தது இப்படியே கிட்டத்தட்ட மூன்று நாட்களும் சென்றது மூன்று நாட்களுக்குப் பிறகு வேணி மாலை 7 மணி அளவில் மகாவிடம் சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தால் …
இந்த மூன்று நாட்களிலும் மகா வேணியிடம் பேசினாலும் அவளுக்கு சிறிது வருத்தமாக இருந்தது வேணியிடம் மகாவால் எப்பொழுதும் போல் பேச முடியாமல் சிறிது குற்ற உணர்ச்சியாக இருந்தது வேணியை இப்படி பார்க்க மூன்று நாட்களுக்குப் பிறகு வேணி மகாவிடம் மாலை ஏழு மணி போல் அண்ணி என்னால் இதற்கு மேல் முடியாது நான் ஒத்துக் கொள்கிறேன்….
என் மீது தான் அனைத்து தவறும் நான் என்னுடைய தவறையும் உணர்ந்து விட்டேன் என்று உன் மீது என்ன தவறு வேணி என்றால் அண்ணி எனக்கு தெரியும் அவர் சென்றதற்கு ஒரு வகையில் நீங்களும் காரணம் என்று என் மீது தான் தவறு என்றும் நான் உணர்ந்து விட்டேன் ஏதோ ஒரு வேகத்தில் நான் அப்படி நடந்து கொண்டேன் வீட்டில் உள்ளவர்கள் சொல்வது போல் நீங்கள் சொல்வது போல் எனக்கு தேவையானதை நான் தான் கேட்க வேண்டும் ….
கேட்காமல் விட்டது என்னுடைய தவறுதான் எனக்கு வேண்டும் என்பதை நான் கேட்க விட்டால் எதுவும் அதுவாக கிடைக்காது என்பதையும் புரிந்து கொண்டேன் ப்ளீஸ் என்னால் இதற்கு மேல் முடியவில்லை அவரை வந்து விட சொல்லுங்கள் என்றால் நான் போன் செய்தாலும் அவர் அட்டென்ட் செய்ய மாட்டேங்கிறார் என்று சொன்னால் மகா அழுதால் அண்ணி எதற்காக அழுகிரீர்கள் என்றால் …
எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது வேணி என்றால் மகா அண்ணி உங்கள் மீது எந்த தவறும் இல்லை நீங்கள் எதற்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறீர்கள் எனக்கு புரிய வைக்க வேண்டும் என்று தானே நீங்கள் எண்ணினீர்கள் உங்கள் மீது எந்த தவறும் இல்லை நான் என் மீது இருக்கும் தவறையும் புரிந்து கொண்டேன் என்னுடைய நேசத்தையும் நான் அவரிடம் சீக்கிரம் சொல்லி விடுவேன் என்னால் அவரிடம் என்னுடைய நேசத்தை சொல்ல முடியவில்லை …
ஒத்துக் கொள்கிறேன் ஆனால் நான் சொல்லிடுவேன் என்னால் அவர் இல்லாமல் இருக்க முடியவில்லை அவரை வந்துவிட சொல்லுங்கள் என்றால் போன் செய்யுங்கள் என்றால் மகா அழுகையும் சிரிப்புமாம் நான் போன் செய்தாலும் அவர் எடுக்க மாட்டார் என்றால் என்ன அண்ணி பொய் சொல்கிறீர்களா என்றால் அண்ணன் கண்டிப்பாக இன்று இரவு வந்து விடுவார் வேணி…
ஆனால் நான் இல்லை வீட்டில் இருந்து யார் போன் செய்தாலும் எடுக்க மாட்டார். அவர் இதுவரை இது போல் சென்றதில்லை என்றவுடன் என்ன என்று கேட்டால் ஆமாம் வேணி அண்ணன் இதுவரை ஒருநாள் கூட வெளியில் தங்கியதில்லை வீட்டில் உள்ள மற்றவர்கள் கூட தங்கி இருக்கிறோம் ஆனால் நிலாவும் முகிலன் அண்ணனும் இதுவரை ஒருநாள் கூட வெளியில் தங்கியதில்லை என்றால் ….
வேணி அமைதியாக தன்னால் தான் அவர் இந்த வீட்டில் உள்ள அனைவரையும் விட்டுவிட்டு இப்போது வெளியில் தங்கி இருக்கிறாரா என்று அழுதால் அப்படி சொல்லாதே இது அவர் வாழ்க்கை சம்பந்தப்பட்டது அவர் வாழ்க்கைக்காக அவர் போராடாமல் வேறு யாரு போராடுவார் அவர் செய்தது தவறு என்று நினைக்கிறாயா என்று கேட்டாள் …
அவர் செய்த எதுவும் தவறு இல்லை என் மேல் தவறு வைத்துக் கொண்டு நான் அவரை குற்றம் சுமத்து விரும்பவில்லை என்றவுடன் உன் மீதும் எந்த தவறும் இல்லை அவரை நீ எந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டிற்கு வந்தாய் என்று அவருக்கும் தெரியும் வேணி அதற்காக மட்டுமே தானே உனக்கான நேரம் தரவேண்டும் என்று எண்ணி உன்னை விட்டு ஒதுங்கி இருந்தார் இப்பொழுது நீ நடந்து கொண்டதால் மட்டும்தான் அவர் அவ்வாறு ஒரு முடிவு எடுத்தார் இல்லை என்றால் உனக்கான நேரத்தை இன்னும் கூட கொடுத்து இருப்பார்…
நீ அவரை விரும்புகிறாய் என்பது அவருக்கு தெரியும் ஆனால் உன்னுடைய விருப்பத்தை நீ அவரிடம் சொல்ல வேண்டும் நீயே சொல்ல வேண்டும் என்றுதான் காத்துக் கொண்டிருந்தார் ஆனால் இப்பொழுது நீ செய்த வேலையால் தான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியது வந்தது இதுவும் நல்லதுக்கு தான் நீ உன்னுடைய விருப்பத்தை சொல்லி விடுவாய் இது தான் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக மனதளவில் கூட வாழ்வதற்கான காலம் …
நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குவது உங்களது விருப்பம் அதில் நானோ வீட்டில் உள்ளவர்களோ தலையிட முடியாது அது உங்கள் இருவரின் விருப்பம் தான் என்றால் வேணியும் சரி அண்ணி என்று சொல்லிவிட்டு தனது கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள் அப்போது சுந்தரி வேகமாக வந்தார் மகாவின் தாடையில் இரண்டு போட்டார் வேணி தடுத்தால் …..
அம்மா என்ன செய்கிறீர்கள் என்று கேட்டாள் மகாவிற்கு தனது அத்தை அடித்தது வலிக்கவில்லை சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தால் பிறகு அவனை மரியாதையாக வர சொல்லிவிடு எத்தனை முறை போன் போட்டாலும் எடுக்க மாட்டேன் என்கிறான் இதுவரை இந்த வீட்டை விட்டு ஒரு நாள் கூட தங்காதவன் இரண்டு இரவு தங்கி இருக்கிறான்…
என்னால் இதற்கு மேல் முடியாது அவன் இன்று இரவே வீட்டிற்கு வந்தாக வேண்டும் அப்படி அவன் வரவில்லை என்றால் என்ன செய்வேன் என்று தெரியாது என்று கத்தினார் பிள்ளையை பார்த்து மூன்று நாட்கள் ஆகிறது என்று அழுகையாக சொல்லவும் போன் போட்டு குடு டி நான் பேசணும் நீ போன் போட்டால் தான் பேசுவான் என்றார் வேணியும் ஒரு நிமிடம் ஆசையாக மகாவை பார்த்தல்…
அத்தை நான் போன் போட்டால் இல்லை இந்த வீட்டில் இருந்து யார் போன் போட்டாலும் அவர் எடுக்க மாட்டார் என்று உங்களுக்கே தெரியாதா? அவரால் வீட்டில் உள்ள யாரையும் விட்டுவிட்டு ஒரு நாள் இருப்பதே கடினம் அப்படி இருப்பவர் இப்போது மூன்று நாட்கள் இருந்திருக்கிறார் அல்லவா அவர் பேசினால் எங்கு அழுது விடுவோமோ இல்லை வீட்டிற்கு வந்து விடுவோமோ என்று எண்ணிருக்கிறார் அதனால் பேச மாட்டார் என்றால்….
சுந்தரி அமைதியாக மகாவை பார்த்தார் மகா அவளது போனை எடுத்து நீட்டினால் வேணி கூட போன் பண்ணி அவர் போன் பேசுகிறார் இல்ல ஏதாவது வீடியோ இருக்கிறதா என்று எட்டி பார்த்தால் சுந்தரி அதை வாங்கி பார்த்துவிட்டு இதை யாரு டி எடுத்தது என்று கேட்டார் முத்து உடன் இருக்கிறான் என்றவுடன் அந்த போட்டோவை கண் குளிர பார்த்துவிட்டு மகா கையில் திணித்துவிட்டு வேனியையும் முறைத்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டார்…..
அண்ணி அதில் என்ன இருக்கு என்று கேட்டால் அண்ணன் இருக்கும் இடத்திலிருந்து எடுத்த இரண்டு மூன்று போட்டோ வேணி அவ்வளவுதான் என்றவுடன் அண்ணி எனக்கும் காமியுங்கள் என்று கேட்டாள் வேண்டாமே வேணி அண்ணன் நேரில் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றவுடன் சரி அண்ணி என்று சென்று விட்டால் இன்று இரவு வந்து விடுவார் தானே என்று இரண்டுக்கு மூன்று முறை கேட்டுவிட்டு அமைதியாக வீட்டுக்குள் சென்று விட்டால்….
வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள் வேணி தூங்காமல் முகில் எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் சுந்தரியும் அதேபோல் வரவேற்பு அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார் முகில் இரவு 11 மணி போல் வீட்டிற்கு வந்தான் எப்படியும் தனக்காக தனது அத்தை காத்திருப்பார் என்பதை அவன் அறிவான் அதனால் அமைதியாக வீட்டிற்கு வந்துவிட்டு கதவை லேசாக தட்டினான் ஆனால் கதவு திறந்து தான் இருந்தது கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்தது….
தனது அத்தை தனக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து விட்டு அமைதியாக வந்தான் வேணியும் அவளது அறையில் இருந்து எட்டி எட்டி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் சுந்தரி கதவையே பார்த்துக்கொண்டு இருந்தார் கதவு திறந்தவுடன் முகில் வந்து விட்டான் என்றவுடன் வேகமாக ஓடிச் சென்று அவனது நெஞ்சிலே இரண்டு மூன்று அடிகளை அடித்தார் பிறகு அவனை கட்டிக்கொண்டு அழுதார்….
உன்னை பார்க்காமல் நாங்கள் எல்லாம் தவிப்போம் இல்லை அவளுமே தவிப்பால் என்று எண்ணம் உனக்கு இல்லையா அவள் செய்தது தவறாக கூட இருக்கட்டும் அவளது தவறை உணர்த்த இது தான் உனக்கு வழியா என்று கேட்டார் பிறகு சாப்பிட்டாயா என்று கேட்டார் முத்து சாப்பிட வைத்து தான் அழைத்துக் கொண்டு வந்தான் என்றவுடன் சரிடா போய் அண்ணியை பார்த்துவிட்டு போ என்றவுடன் அத்தை அம்மா என்ன சொன்னார்கள் என்று கேட்டான்…..
உன் அம்மா வேணியிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை என்றவுடன் நீங்கள் மட்டும் பேசி இருப்பீர்களா என்று கேட்டான் அவர் அவனை பார்த்து சிரித்து விட்டு போ டா நேரம் ஆகிறது பார் என்றார் சரி அத்தை நீங்கள் போய் தூங்குங்கள் இனி நான் எங்கும் செல்ல மாட்டேன் நான் போய் அம்மாவை பார்த்துவிட்டு செல்கிறேன் என்று உடன் அவரும் சரி என்று விட்டு வாசல் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவரது சென்று விட்டார்….
வேணி நடந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டு தான் இருந்தால் பிறகு முகில் தனது தாயின் அறைக்கு சென்றான் எனது தாய் அமைதியாக உட்க்கார்ந்து இருப்பதையும் பார்த்தான் தனது தந்தை அசதியில் தூங்குவதையும் பார்த்தான் அவன் அவர்கள் அறைக்கு சென்று தனது தாயின் அருகில் உட்கார்ந்தவுடன் காவேரி அவனது தடையிலே ஒன்று போட்டார்…
என்ன டா நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஏன் வேறு வழியில் அவளுக்கு நீ உணர்த்த முடியாதா இங்கிருந்து சென்று தான் உணர்த்த வேண்டுமா இங்கிருந்தே நீ அவளுக்கு உன்னுடைய வலிகளை உணர்த்த முடியாதா என்று கத்தினர் அம்மா நடக்கும் விஷயத்தை என்னால் இங்கிருந்து கொண்டே அவளிடம் பேசாமல் அவளை விட்டு ஒதுங்கிச் செல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டான்….
கேட்கும் பொழுது அவனுக்கும் அழுகையாக இருந்தது காவேரியுமே அழ தான் செய்தார் அம்மா நான் அவளை விரும்பும் பொழுது என்னுடைய விருப்பத்தை நான் அவளிடம் சொல்லியவுடன் அவள் வேண்டாம் என்று சொன்னவுடன் ஒதுங்கி நினைத்தேனே தவிர அவள் தான் வேண்டும் என்று பிடிவாதமாக அவள் பின்னாடியே சென்று இருக்கவில்லையே…
அப்படி இருக்கும் பொழுது என்னால் அதுவும் இப்பொழுது அவள் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று டார்ச்சர் செய்து அவளது படிப்பில் கவனம் செலுத்தாமல் அவளது படிப்பில் கவன சிதறல்களை ஏற்படுத்த சொல்கிறீர்களா என்று கேட்டான் காவிரி தனது மகனை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அவனைக் கட்டிக்கொண்டு அழுதார் …
அப்பொழுது கந்தன் தான் எழுந்து உட்கார்ந்து அம்மாவும் மகனும் உங்களது பாசமழையை முடித்து விட்டீர்கள் என்றால் அவனை அவனது அறைக்கு அனுப்பி வைக்கிறாயா அவனுக்காக மூன்று நாட்களாக அங்கு ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள் என்றவுடன் காவேரி லேசாக முகிலை பார்த்து சிரித்துவிட்டு தனது கணவனை பார்த்து முறைத்தார் …
உங்களிடம் உங்கள் மருமகள் வந்து சொன்னாளா என்று கேட்டார் ஏன் அதை நான் உன்னிடம் சொல்ல வேண்டுமா உனக்கே தெரியாதா? என்றார் முகில் அமைதியாக தனது தாயை பார்த்தான் அப்படியா என்பது போல் அவர் முகிலை பார்த்து சிரித்தார் பிறகு முகில் சரி மா நான் செல்கிறேன் நீங்கள் தூங்குங்கள் என்று தனது தாய் தந்தை இருவரிடமும் சொல்லிவிட்டு தான் வெளியில் செல்லும் நிலையில் தனது தந்தையை பார்த்து உங்களுக்கு என் மேல் சிறிது கூட பாசம் இல்லையா …
மூன்று நாட்களாக மகனை பார்க்கவில்லை என்ற ஏக்கம் இல்லையா என்று கேட்டான் அவர் அவனைப் பார்த்து சிரித்தார் அவனும் தனது தந்தையை பார்த்து சிரித்து விட்டு வெளியில் சென்றான் கந்தனுக்கு பாசத்தை வெளியில் காட்டத் தெரியாது என்பதால் உள்ளுக்குள் பாசம் இல்லை என்று ஆகிவிடாது முகில் அவனது அறைக்கு செல்லும் வேலையில் வேணி தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தால் முகில் எட்டிப் பார்த்தான் அவள் தூங்கவில்லை என்பதையும் அவன் அறிவான் …
அமைதியாக அவன் எடுத்துக் கொண்டு சென்ற பையை அவர்கள் அரையில் ஒரு மூலையில் வைத்துவிட்டு வேணி அருகில் அமைதியாக வந்து படுத்தான் வேணி அவளது விருப்பத்தை முகில்யிடம் சொல்வாளா இல்லை இன்னும் நாட்கள் கடந்துவாளா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
Nice