Skip to content
Home » மகாலட்சும 91

மகாலட்சும 91

pவேணியின் பெற்றவர்கள் கயலை பிறந்து வீட்டிற்கு வருவதற்கு பதிலாக தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்கள் எங்கள் வீடு சிறிய வீடு தான் இருந்தாலும் தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் வளைகாப்பு முடிந்த பெண் நீ எங்கள் வீட்டிற்கு வா என்று அழைத்தார்கள்…

கயல் தனது  மாமனார் மாமியாரை பார்த்தால் அவர்கள் கண்மூடி திறந்தவுடன் தனது வீட்டின் ஆட்கள் அனைவரையும் பார்த்தால் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் எழில் சிரித்துக் கொண்டே நீ வா கயல் நான் உன்னை வேணி வீட்டிற்கு அழைத்துச்  செல்கிறேன் என்றான் அனைவரும் அமைதியாக எழிலை பார்த்தார்கள்….

எழில் அனைவரையும் பார்த்து மகா சொல்லி தான் அனுப்பி இருந்தால்  என்றவுடன் அதன் பிறகு அனைவரும் சரி என்றவுடன் கயலுடன் நிலாவும் வருவதாக சொன்னவுடன் அழைத்துக்கொண்டு சென்று வேணி வீட்டில் விட்டு வந்தான் கயல் வேணி வீட்டில் மூன்று நாட்கள் இருந்து விட்டு பிறகு தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்து விட்டால் வேணியின் பெற்றவர்கள் கயலை தங்கள் பெண் போல் பார்த்துக் கொண்டார்கள் ….

தங்களுடைய பெண்ணை அவள் என் உங்களிடம் பேசாத பொழுது கூட அவளை அந்த வீட்டில் உள்ளங்கையில் வைத்து தாங்கும் போது அந்த வீட்டில் பிறந்து வளர்ந்து மகளை தங்கள் மகள் போல் பார்ப்பதற்கு அவர்களுக்கு கஷ்டமாக இல்லை சந்தோஷமாக இருந்தது இப்படி ஒரு பாக்கியம் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் எண்ணினார்கள்…

கயலை பிரசவம் முடியும் வரை பார்த்துக் கொள்கிறேன் என்றுதான் சொன்னார்கள் ஆனால் அன்பும் கயலின் மாமனார் மாமியார் மூவரும் எங்களால் கயல் இல்லாமல் இருக்க முடியவில்லை அவள் எங்கள் வீட்டில் இருக்கட்டும் என்றுடன் கயலும் வேணியின் பெற்றவர்களை பார்த்தால் அவளுக்கு அன்புடன் இருக்க வேண்டும் என்று தோன்றியதால் சரி என்று அனுப்பி வைத்தார்கள் ..

மகிழ் மகா இருவரும் கீழே இருக்கும் பூந்தோட்டத்திற்கு வந்து விட்டார்கள் அவ்வப்போது மொட்டை மாடிக்கும் செல்வார்கள் அந்த நேரத்திலும் சுந்தரி முனங்கி கொண்டே இருப்பார் இருந்தாலும் அவளால் பூந்தோட்டத்தில் இருக்க முடியாமல் மொட்டை மாடிக்கும் சென்று வருவாள் இப்படியே ஒரு வாரங்களுக்கு மேல் சென்றது அப்பொழுது ஒரு நாள் மாலை வேணி நிலா இருவரும் கல்லூரி முடிந்து வேகமாக வந்தார்கள் …

வேணியின் முகம் ஒரு மாதிரியாக இருந்தது சுந்தரி தான் நிலாவிடம் கேட்டார் ஏண்டி வேணி ஒரு மாதிரி இருக்கிறாள் என்று அவள் தலை குளித்திருக்கிறாள் அத்தை என்று சொல்லிக் கொண்டே நிலா அவளது அ அரைக்குச் சென்று நாப்கின் எடுத்துக் கொண்டு வந்தால் சுந்தரியும் அவரது அரைக்கு சென்று நாப்கின் எடுத்துக் கொண்டு வந்தார் இருவரும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவுடன் இருவரையும் பார்த்துவிட்டு அமைதியாக வாங்கிக் கொண்டால்…

இரவு 7:00 மணி போல் முகில் வீட்டிற்கு வந்தான் அவன் வரும்பொழுது வேனி அவளது அரையிலே இருந்தால் நிலாவிடம் தான் கேட்டான் அவள் தலைக் குளித்திருக்கிறாள். அவளது அரையில் இருக்கிறாள் உன்னிடம் பேட் வாங்கி கொண்டு வர சொல்லி இருந்தாலாம் அறையில் இல்லை என்று சொன்னால் என்றால் சாரி நிலா மறந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான் …

வேணி தரையில் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு சாரி வேணி ஏதோ ஒரு வேலை ஞாபகத்தில் மறந்து விட்டேன் என்று சொன்னான் வேனி முகிலை பார்த்து முடறைத்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக வரவேற்பறைக்கு வந்து விட்டாள் அவள் வந்தவுடனே வீட்டில் உள்ள அனைவரும் வேணி கோவமாக இருக்கிறாள் என்பதையும் உணர்ந்து இருந்தார்கள்…

அதுவும் இந்த மாதிரி நேரத்தில் கோபம் வருவது நிறைய பெண்களுக்கு இருக்கும் பழக்கம் தானே என்று எண்ணி அமைதியாக விட்டுவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் இது புருஷன் பொண்ணாட்டி சண்டை அதுவும் அவனது தவறு தானே என்று எண்ணினார்கள் ஏனென்றால் நிலா அனைவரும் இருக்கும் போதே தான் சொல்லி இருந்தால் அதனால் வீட்டில் உள்ளவர்களும் தங்கள் வீட்டு மகன் மீது தவறு  இருக்கிறது என்று அமைதியாக இருந்தார்கள்….

அன்று இரவு பொழுதும் முடிந்தது ஆனால் வேணி நிலாவோ இல்லை சுந்தரியோ கொடுத்த நாப்கினை யூஸ் பண்ணவில்லை அவள் இரவு துணி வைத்துக் கொண்டால் அதை முகிலும் கவனிக்க தவறிவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும் மறுநாள் காலை கல்லூரிக்கு கிளம்பும்போது வேணி துணியை வைத்துக்கொண்டு கிளம்பினால் முதல் இரண்டு மணி நேரம் கல்லூரியில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இருந்திருப்பாள் ….


அதற்கு மேல் அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை அவளது நண்பர்கள் கூட ஏண்டி ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று எதுவோ சொல்லி சாமளித்து விட்டால் நிலா அமைதியாகவே வேணியை பார்த்துக் கொண்டிருந்தால் மகாவின் வகுப்பும்  வந்தது மகா அவர்கள் வகுப்பிற்கு வகுப்பை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் வேணியின் முகம் சரியில்லை …

அவள் நெளிந்து கொண்டிருப்பதையும் பார்த்தால் என்ன ஆயிற்று வேணி என்று கேட்டால் ஒன்றுமில்லை மேம் என்று சொல்லிவிட்டு எனக்கு உடல்நிலை சரியில்லை நான் வீட்டிற்கு செல்கிறேன் பர்மிஷன் வேண்டும் என்று கேட்டாள் சரி நான் உங்களுடைய வகுப்பு ஆசிரியரிடம் சொல்லிவிடுகிறேன் என்றவுடன் அமைதியாக  வேணி விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு நிலாவைப் பார்த்து விட்டு தலை மட்டும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள்….

நிலவிற்கு சிறிது வருத்தமாக இருந்தது மாலை பொழுதும் வந்தது மகா வீட்டிற்கு வந்தவுடன் மகா வரவேற்பு அறையிலிருந்து வேகமாக வேணி என்று கத்தினாள் வேணி சீக்கிரமகாவே வீட்டிற்கு வந்தது வீட்டில் உள்ள அனைவருமே வேணி என்ன ஆயிற்று என்று கேட்டு விட்டார்கள் மருத்துவமனைக்கு செல்லலாமா என்று கேட்டார்கள் ஆனால் அவள் வாயவே திறக்கவில்லை…

அவளது அறைக்குச் சென்றவள் தான் அதன் பிறகு வெளியே வரவில்லை மதிய உணவிற்கும் வரவில்லை அவள் எடுத்துக் கொண்டு சென்று பையும் வரவேற்பரையில் தான் இருந்தது பிறகு சுந்தரி தான் முகிலுக்கு போன் செய்திருந்தார் முகிலும் வந்து பார்த்தான் கதவு தாழ்ப்பாள் போட்டிருந்தது மதியத்திற்கு மேல் தான் கதவை திறந்து இருந்தால்…

முகிலும் கேட்டுப் பார்த்தான் பேசி பார்த்தான் ஆனால் அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசுவதாக இல்லை மகா மாலை  கல்லூரி முடிந்து வந்தவுடன் மகா வரவேற்பு அறையில் இருந்து அடித் தொண்டைலிருந்து வேணி என்று கத்தினால் வீட்டில் உள்ள அனைவருக்கும் இவள் கத்தியவுடன் சிறிது பயம் வந்தது சுந்தரி வாய்விட்டு கத்தி விட்டார் …

வயிற்றில் பிள்ளையை வைத்து கொண்டு இப்படியா கத்துவது என்று மகா சுந்தரியை பார்த்து முடறைத்துவிட்டு திரும்பவும் வேணி என்று கத்தியுடன் வேணி தூங்கிக் கொண்டிருந்தால் அவ்வளவு  வலியிலும் அசதியிலும் வேகமாக ஓடி வந்தால் வேணி வந்து நின்றவுடன் ஓங்கி ஒன்று அறைந்தால் காவேரி கத்தினார் மகா தனது பெரியம்மாவை பார்த்து முறைத்துவிட்டு உனக்கு என்ன தேவையோ அதை நீதான் உன்னுடைய கணவரிடம் கேட்க வேண்டும் ….

வாங்கிக் கொண்டு வரவில்லை தரவில்லை என்றாலும் சண்டையிட்டு எனக்கு ஏன் வாங்கி தரவில்லை என்று கேட்கக்கூடிய பழக்கம் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய பழக்கமாவது இருக்க வேண்டும் இது எதுவுமே இல்லாமல் நீயாக ஒன்றை நினைத்துக் கொண்டே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு முகில் என்று வேகமாக கத்தினாள் …


அவள் முகிலை அண்ணன் என்றுதான் அழைத்து இருக்கிறாள். இன்று முகில் என்று வேகமாக கத்தியவுடன் வந்தான் இவள் எப்படி காலேஜுக்கு இன்னைக்கு வந்தால் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டவுடன் அவனது தலை தானாக கீழே கவிழ்ந்தது அப்போ உனக்கு தெரியும் அப்படித்தானே என்று கேட்டால் எனக்கு உண்மையாகவே நான் மதியம் வந்த பிறகு தான் தெரியும்….

என்னை நம்பு மகா நேற்று நான் வாங்கிக் கொண்டு வந்து தரவில்லை தான் அவளுக்கு நான் மறந்து விட்டேன் ஆனால் இதற்கு முன்பு நீ கொடுத்து அவள் வாங்கி இருக்கிறாள் தானே அதே போல் நிலாவும் அத்தையும் கொடுத்துவிட்டார்கள் என்பதால் சரி அதை வைத்துக் கொள்வாள் என்று எண்ணினேன் ஆனால் அவள் துணி வைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்வாள் என்று நான் எண்ணவில்லை என்றவுடன் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் என்ன துணியா என்று வேணியை பார்த்தார்கள் ….


வீட்டில் உள்ள பெரியவர்கள் மூன்று பெண்களும் கூட நாப்கின் தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது வேணி துணி வைத்திருக்கிறாள் என்றவுடன் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது சுந்தரி வேணி அருகில் சென்று அவளது கையை இறுக பிடித்து என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய் அவன் வாங்கிக் கொண்டு தரவில்லை என்றால் நான் கொடுத்திருந்தேன் தானே அதை வைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே …

இல்லை என்றால் உனக்கு வேண்டும் என்று நீ சொல்ல வேண்டியதுதானே என்றவுடன்  காவேரி முகிலை ஓங்கி அறைந்திருந்தார் அத்தை என்று வேணி கத்தினாள் வேணியை பார்த்து முறைத்து விட்டு உனக்கு வேண்டும் என்று நீ இதுதான் வேண்டும் என்று தீர்க்கமாக இருந்து கேட்டிருக்க வேண்டும் இல்லையா அவன் தான் வாங்கி தர வேண்டும் என்று நீ எண்ணியிருந்தால் அதை அவனிடம் சொல்லி இருக்க வேண்டும் அவன் இவர்கள் இருவரும் கொடுத்து விட்டார்கள் என்று அமைதியாக இருக்கிறான் …

என்னுடைய வளர்ப்பு தான் சரியில்லை என்னதான் ஒரு பெண்ணிற்கு ஆயிரம் பேர் ஒரு விஷயத்தை செய்தாலும் அது கணவன் செய்வது போல் இருக்காது அவள் நீ வாங்கி தர வேண்டும் என்று எண்ணிருக்கிறாள் சரி நேற்று மாலை தான் வாங்கி தரவில்லை இன்று காலை வாங்கி கொடுத்திருக்கலாம் இல்லை என்றார் அம்மா அவர்கள் இருவரும் கொடுத்துவிட்டு சென்றாதால் என்றான் வாயை மூடுடா சரி மதியம் பார்த்தேன் என்று சொன்னாய் அதன் பிறகு வாங்கிக் கொண்டு வந்தாயா என்று கேட்டார்.,


முகில் அமைதியாக இருந்தான் அவன் மதியமே அவள் துணி வைத்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் கடைக்கு சென்று வாங்கி கொண்டு வந்து கொடுத்து விட்டான் ஆனால் இத்தனை பேர் முன்பும் சொல்லி வேனியை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க அவன் விரும்பவில்லை ஆனால் வேனி தனது கணவன் தனது பெற்ற தாயிடம் கூட தலை குனிந்து நிற்க கூடாது   என்று எண்ணி அவர் மதியமே வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டார் அதை தான் நான் இப்போது வைத்திருக்கிறேன் என்று சொன்னால் ….

வீட்டில் உள்ள அனைவருக்கும் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை அனைத்திலும் தெளிவாக இருக்கும் வேணி தனது கணவனிடம் எதிர்பார்ப்பதை அவனிடம் சொல்ல தெரியவில்லையா இல்லை அவனிடம் இன்னும் அவள் அந்த அளவிற்கு நெருங்கவில்லையா என்று வீட்டில் உள்ள அனைவரும் எண்ணி நின்றார்கள்……

மகா அமைதியாக மொட்டை மாடிக்கு சென்றால் மொட்டை மாடிக்கு செல்லும் தூரம் முழுவதும் முகிலையே பார்த்துக் கொண்டு சென்றாள் காவேரி முகிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக வரவேற்பு அறையில் உட்கார்ந்து விட்டார் வீட்டில் அனைவருமே முகிலை தான் பார்த்தார்கள்  வீட்டில் உள்ள அனைவரின் பார்வையின் அர்த்தமும் ஒன்றுதான் வேனி கணவனாக இன்னும் முகிலிடம் நெருங்கவில்லை….

அதற்கு முகில் எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை இவனும் ஒதுங்கி இருப்பதால்தான் அவள் ஒதுங்கி இருக்கிறாள் என்று எண்ணினார்கள் முகில் வேணி இருவரும் மனதளவில் கூட இதுவரை கணவன் மனைவியாக வாழவில்லையா இல்லை அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சும 91”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *