Skip to content
Home » மஞ்சணத்தி மலரே-2

மஞ்சணத்தி மலரே-2

அத்தியாயம்-2

 ‘நீ வாசிக்க மறந்த/மறுத்த புத்தகம் என் இதயமடி பொம்மு…’ என மனம்  ஏங்க,  கரிக்கோல் கொண்டு தீட்டிய பெண்ணவள் ஓவியத்தை ஆசைத் தீர ரசித்தான் ஆடவன்.

உன்கண்களில் எனக்கான காதலை கண்டதுமில்லை..
எனக்கான வெறுப்பை உணர்ந்ததுமில்லை…

ஒவ்வொரு முறையும் இல்லையென்றுதான் சொல்கிறாய்..
ஆமென்றே என்செவிகளில் பலமாய்  ஒலிக்கிறது…

காதலில் மட்டும் தான் உயிரானவர்கள் மனதின் மொழியை கேட்கமுடியும் புரிந்து கொள்ளடி முட்டாள் பெண்ணே..

என மனதின் வலிகளை  வார்த்தைகளில் வடித்து வைத்ததை வாஞ்சையாய் வருடினான் ஹர்ஷா

        காதலிக்கும், கருவில் சுமந்தவளுக்கும் இடையில் துலாக்கோல் முள்ளாய் காலம் நிறுத்தி வைத்து விளையாட, நடுநிலையாய் நிற்க வேண்டுமென உறுதியாய் இருந்த மனம் தாயவள் விழிநீருக்கு சக்தி அதிகமென உணர்ந்து அவள் பக்கம் தாழ்ந்துப் போனது விதியின் விளையாட்டோ என ஒருமனம் அவனை எள்ளியது.

          தூரங்களும், பிரிவுகளும், உயிர்காதலை சாகடித்து விடுமா என்ன??  இல்லை மாறாக என் காதலை வலிமையாக்கும். அத்தகைய  பயிற்சி தான் இந்த பிரிவு என காதல் மனம் சோர்ந்து கிடந்தவனை  தேற்றியது.

     இரு  மனங்களுக்கிடையே சிக்கி  வெந்துப் போனவன், மனதின்  புழுக்கத்தை குளியலில் சரி செய்ய நினைத்து  குளியலறை புகுந்த நேரம், கீழே சமையலறையில் தாயவர் கறிவேப்பிலை போட்டு தாளி்ப்பதற்கு பதிலாக தன் ஒற்றை கறிவேப்பிலை கொத்தான மகனை தாளித்துக் கொண்டிருந்தார்.

       “கல்யாணமாகி ஆறு வருசம் கொழந்தே இல்லாம எத்தன பேச்சு, ஒதுக்கல்  எல்லாத்தையும்  சகிச்சிகிட்டு,  ஊர்ல இருக்கிற  கோயில்  படிக்கட்டு ஒன்னுவிடாம ஏறி,   எத்தன ஹாஸ்பிட்டல் டெஸ்ட் எல்லாம் தாங்கிக்கிட்டு,  சொல்ற  பரிகாரமெல்லாம் செஞ்சு, இருக்கிற எல்லா விரதமும் இருந்து, ஒன்னே பெத்து வளத்தா.., அது 22 வயசுல காதல்ன்னு கெட்டு சீரழிய பாக்குது… இதெல்லாம் எங்கே உருப்…” என்று அர்ச்சித்தவர் பேச்சு பாதியில் நின்றது‌. அந்தநிலையிலும் மகனை திட்ட மனம் வரவில்லை  தாயவருக்கு.

       ‘பொறந்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும்  ஒருநாள் அவனே பிரிஞ்சி இருந்திருப்பேனா… ஆனா முழுசா மூணுவருசம்  பிரிய வச்சிட்டாளே அந்த சண்டாளி…, ஊர்ல எத்தன காலேஜ் இருக்கு இவன் படிக்கிற காலேஜ்க்கா வந்து சேரனும் அந்த சனியன்…, அவளெல்லாம் நல்லா இருப்பாளா…, நாசமா தான் போவா…,’ என  தவறே செய்யாத மான்சிக்கு சாபமும் கொடுத்தார் மனதிற்குள்.

        வாசலில் நிழலாட தனது மனதின் முணுமுணுப்பை  சட்டென  நிறுத்திக் கொண்டார் உமா. தனது கணவன் ரவீந்தர் என்பதை அறிந்தவர் காத்திருந்தார் எதையாவது  பேசுவாரென்று. ஆனால் அமைதியின் ஆட்சியே நீடிக்க,  ஏமாற்றம் நிறைந்த சலிப்புடன் ஆரம்பித்தார்.

       “அதான் வந்தாச்சுல…. கேட்க  வந்ததே கேட்க வேண்டியது தானே…,” என பொரிந்த உமா, மகனுக்காக செய்த பச்சைபயிறு சுண்டலை தாளித்து முடித்து கொத்தமல்லியை தூவி இறக்கினார்.

      “ஏதோ பைத்தியக்காரன்  சொன்னான்னு உன்னையும்  வருத்திக்கிட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்துறே இந்த பிரிவு தேவையா டி… இப்பயாவது வேண்டாம்னு சொல்லுடி…” என கெஞ்சினார் பாசமிக்க  தந்தையாய்.

      “அவரு சொன்ன பரிகாரம் செஞ்ச பிறகு தான் ஹர்ஷாவே பொறந்தான் அதே நியாபகம் வச்சிட்டு பேசுங்க…, பையனுக்கு ஏதோ கண்டம் இருக்கு… மூணு வருசம்  நம்மலே பிரிஞ்சி இருக்கனும்னு சொன்னதும் சின்னபையன் அவனே  சம்மதிச்சு லண்டன் கிளம்புறான்…  நீங்க  மட்டும் நம்பாம ஏங்க எல்லாரையும் குழப்பிட்டு திரியுறீங்க…,” என தனது  தவறை  கணவனிடம் திருப்பிவிட்டார் உமா.

        அன்னைமனம் மகனின் எதிர்காலம் என்று தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனம் செய்ய, தந்தைமனமோ, கடைசி நொடியிலாவது தன் மனைவியின் மனம் மாறி மகன் தங்களுடனே இருந்து விட மாட்டானா என ஏங்கி தவித்தது. பிள்ளைமனம் காதலியின் நினைவில் தத்தளிக்கிறது.

        கெஞ்சல் கோபமாக உருமாற,  ரவீந்தர்  கூடம் வந்தமர்ந்தவர், வீடே அதிரும்படி தொலைக்காட்சிபெட்டி ஒலியின் அளவை கூட்டினார். சத்தம் கேட்டும் ஹர்ஷா வெளியே வரவில்லை.  நிதானமாய் தலை துவட்டிக் கொண்டிருந்தான்.

       “சவுண்ட்டே குறைங்க… காதே பஞ்சராயிடும் போல…,” என்ற மனையாளின் கத்தலும் அவரை அசைக்கவில்லை.

         கோபம் தலைக்கேறிய  உமாவோ, சமையலறை சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து கூடத்து தரையில் போட்டார்.

       “ஆமாங்க நான் பைத்தியம் தான்… யாரும் எங்கேயும் போக வேணாம்… ஆனா நாளைக்கு நம்ம பையனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்றம் என்னே உயிரோட  பாக்க முடியாதுங்க…” என கணவர் கையிலெடுத்த உணர்வுமிரட்டல் என்ற ஆயுதத்தை  தன்வசமாக்கி, நேரம் பார்த்து தன்னவர்  மேல் தொடுத்தார் உமா.

     ரவீந்தரின் கோபம் மனைவியின் கண்ணீரை கண்டு கற்பூரமாய் கரைந்து விட, ஓடி வந்து பெண்ணவளை அணைத்து  ஆறுதலுரைத்தார்.

      “உமா!!  இனி இதே  பத்தி எதுவும் பேச மாட்டேன்…  நீயும்  இப்படி பேசாதே…,”  என அழுது கரைந்து மன்னிப்பு கேட்டார். தன் முடிவில்  வென்ற மனநிறைவுடன் கணவனின் மார்பில் சாய்ந்தார் உமா.

        வெளியே வந்த ஹர்ஷா  தாய் தந்தை இருவரை கண்டவாறே சமையலறை துழைந்தவன் ஒரு கிண்ணத்தில்  சுண்டலை நிரப்பி கொண்டு வெளியே வந்தான்.

     “ரொமான்ஸ் முடிஞ்சதுன்னா  ரெண்டு பேரும் இப்படி வந்து ஷோஃபாலே உட்காருறிங்களா…,” என சற்று நக்கலாய் கேட்ட பிறகே, ரவீந்தர்  மனைவியிடமிருந்து விலகினார்.  இதில் முறைப்பு வேறு மகனை நோக்கி. உமாவோ  புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு வந்தமர்ந்தார்.

         முதலில் அன்னைக்கு ஊட்டிவிட்டான். பின் தந்தைக்கு தொடர்ந்தவன், “ப்பா… நான் யாரோ ஒருத்தன் சொன்னதே நம்பி லண்டன் கிளம்பலே…  என் அம்மாவுக்கு ஜாதகம் மேலே நம்பிக்கை… எனக்கு அதே விட அதிக நம்பிக்கை அவங்க மேலே…., ” என பேச்சை நிறுத்தி தாயை  பார்த்தான்.

       “வெறும் எய்ட் தவுசண்ட் சம்திங் கிலோமீட்டர்ஸ் துரமாப்பா  நம்ம உறவே தீர்மானிக்க போகுது….  வீடியோ காலுல மீட் பண்ணக்கூடாது எந்த ஜோசியமும் சொல்லாதுப்பா…,”  என மகனவன் ஆறுதல் மொழிய, தன்னருகே  நின்றிருந்தவனை கட்டிக் கொண்டு வயிற்றில்  முகம் புதைத்தார் ரவீந்தர். தவமிருந்து பெற்ற மகனை பிரியப் போகிறோம் என்ற  நினைவை கூட தாங்க முடியாது பரிதவித்தது பாசம் கொண்ட தந்தைமனம்.

         சிறிது நேரத்தில்  மகனிடமிருந்து விலகிய ரவீந்தர், ஹர்ஷா கையிலிருந்த கிண்ணத்தை பறித்தார். சண்டையிட்ட கணவனும் மனைவியும்  இப்போது ஒற்றுமையாய் மகனுக்கு ஊட்டிவிட்டனர்.

          அழைப்பு மணியோசை அழைக்க, உமா  தான்  சென்று பார்ப்பதாக கூறி, வெளியே வந்தார். மூன்று காவலர்கள் நின்றிருக்க ஒருநொடி தூக்கி வாரிப் போட்டது அவருக்கு.

      “இங்கே ஹர்ஷா…,” என வந்தவர்களில்  ஒருவர் விசாரிக்க, சத்தம் கேட்டு உண்பதை நிறுத்திவிட்டு தந்தையும் மகனும் வெளியே வந்தனர்.

        அவனிடமும் அதே கேள்வியை கேட்க, நான்தான் என்றவனி்ன் கழுத்தில்  காவலரின் கரம் பதிந்தது பலமாய். தம்பதியர் இருவரும் பதறியடித்து மகனை விடுவிக்க முயன்றனர்.

      “உங்க பையன் மான்சின்ற பொண்ணே கடத்துனதா அவங்க ஃபேரண்ட்ஸ் இவன் மேலே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க…” என்பது வரை தான் ஆடவன் செவிகளில் விழுந்தது. மான்சி கடத்தப்பட்டாள் என்பதிலேயே அவனது உயிர் பாதி பிரிந்துவிட்டது.

        “பொம்முக்கு  என்னாச்சி பொம்முக்கு என்னாச்சி…” சிறுகுரலில் ஆரம்பித்து  ஆக்ரோசமாய் கத்தியவன் உணர்ச்சிபெருக்கில் தகவல் சொன்ன காவலரின் சட்டையை பிடித்தான்.

        மற்ற காவலர்கள்  ஹர்ஷாவை அடிக்க பாய, ரவீந்தர் கையெடுத்து  கும்பிட்டு கெஞ்சினார். கடினப்பட்டு  மகனை விலக்கி தன்வசம் திருப்ப, அவனோ இன்னும்  அதையே தான் உளறிக் கொண்டிருந்தான் பித்து பிடித்தவன் போல. அவனது கன்னத்தில் ஓர் அறையை விடுத்து  மகனை தன்னோடு சேர்த்தணைத்து கொண்டார் ரவீந்தர்.  மான்சி, பொம்மு என்ற பெயர் குழப்பத்தில் அவர் மனம் கண்டதையும் சிந்தித்தது. இந்த களேபரத்தில் உமாவை யாரும் கவனிக்கவில்லை.

        மான்சி என்ற பெயரை கேட்டதும்   உமாவின் முகம் கறுத்துப் போனது  அடிகள் எப்போதோ பின்னோக்கி சென்றுவிடடன. இதயமோ  வேகமாய் துடித்தது அவருக்கு,  ஒருகட்டத்தில் சாய்விருக்கை  இடித்து தடுமாறியவர் அப்படியே மயங்கி கீழே சரிந்தார்.

        உமா என்ற தந்தையின் கத்தலில் சித்தம் தெளிந்த ஹர்ஷா ஓடி வந்து  அன்னையை தூக்கி தனது மடியில் தாங்கினான். அவரது கன்னத்தை வேகமாய் தட்டினான். சிறு அசைவும் இல்லை. தந்தை கொண்டு வந்து கொடுத்த நீரை முகத்தில் தெளித்தும்  விழி திறக்கவில்லை.

         இப்போதும் காலம் தன்னிடம் விளையாடுவதாகவே கருதினான் ஹர்ஷா.  ஆனால் அடுத்தநொடி காவலர்கள் வந்து  சட்டைகாலரை பிடித்து இழுத்திட, அன்னையை தரையில் கிடத்தி விட்டு எழுந்து நின்றான்.

       ஒரு காவலர் ஹர்ஷாவின் கைபேசியை கேட்க, அந்த பதட்டத்திலும் மயங்கி கிடக்கும்  மனைவியை கவனியாது மகனது அறை சென்றார் ரவீந்தர்.

      வெளியே அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. ஆனால் யாரும் உதவ உள்ளே வரவில்லை. கையறுநிலையில்   ஹர்ஷா வீட்டு வாயிலை  பார்த்தவாறு காவல் வாகனம் ஏறிய சமயம், இங்கு கண்களில் கட்டியிருந்த  கட்டு அவிழ்க்கப்பட்டு மான்சி மெத்தையில்  அமர வைக்கப்பட்டிருந்தாள். கை, கால்களிலிருந்த கட்டுகள் அப்பிடியே இருந்தன. அவளை சுற்றி நான்கு இளைஞர்கள் நீள்அரைவட்ட   வடிவில் மெத்தையில் அமர்ந்திருந்தனர்.

      ‘நால்வரில் ஒருவரை கூட தனது வாழ்நாளில் சந்திந்தது கிடையாதே… எதற்கு இந்த கடத்தல்..” என மனமாே விடைத்தெரியா கேள்வி கேட்டு துளைத்தது அவளது மூளையை.

      தங்களது திட்டத்தை ஒவ்வொருவராக  அவளிடம் விவரித்துக் கொண்டிருக்க, தலை கவிழ்ந்து அதை கேட்டுக் கொண்டிருந்தாள் மான்சி. 

         பயஅரக்கன்  கழுத்தை    நெரித்தாலும், உணர்வுகள் மரித்தநிலையில் அவனது பிடிப்பும் சிறிது சிறிதாக  இளகியது.

       நால்வரும்  அறையிலிருந்து வெளியேறினர். ஆனால் ஒருவன் மட்டும் திரும்பி வந்து, மான்சியின் பின்னந்தலை  கேசத்தை கொத்தாக பிடித்து   தன் முகம் பார்க்க வைத்தான். சுள்ளென்ற வலியில் சிறிதாய் முகம் சுருக்கினாள்.

      “மயக்க மருந்து கொடுத்து உன்னே கடத்தியிருக்கலாம்… ஆனா உன் முடிவு உன் சுயநினைவோட தான்டி நடக்கும்.., அதுக்கு முன்னாடி மரணத்தே விட கொடிய  வேதனையே நீ அனுபவிப்பே… வெயிட் பண்ணு தங்கம்…,” என்றவன் தன்னையே இமைகள் தட்டாது வெறித்து கொண்டிருந்தவளின்  நெற்றியில் முத்தமிட்டவன் பின்   அப்படியே  அவளை மெத்தையில் தள்ளிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

ஹர்ஷாவின் வெளிநாட்டு பயணம் என்னவாகும்??? மான்சியின் பெயரை கேட்டதும் உமாவின்  முகம் கறுத்தது ஏன்?? மான்சியை கடத்தியது யார்?? முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ்க்கப்படும் வரும் அத்தியாயங்களில்.
      

4 thoughts on “மஞ்சணத்தி மலரே-2”

  1. Avatar

    Mansi ah kidnapp panna yara ah yum ava parthathu illa aana harsha than kidnapp pannathu ah police la arrest pannitu poraga ithula uma avangaluku ava per ah keta udanae ipadi agitanga

  2. Avatar

    🫣aathi bayangarama irukae inga enna nadakudhu….mansi ku mutham vera kuduthutu poran ivan yaaru…. Harsha kum maansi kum epo marg achu… Indha uma amma ku yen maansi mela imbuttu kovam….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *