அத்தியாயம்-16
Thank you for reading this post, don't forget to subscribe!அம்ரிஷ் சட்டை அணிந்திடும் அளவிற்கு உடல் தேறிடவும், டீ-ஷர்ட் அணிந்து அறையிலிருந்து வெளியே வந்தான்.
அம்ரிஷ் ஹாலுக்கு வரவும், வேதாந்த் “இப்ப பரவாயில்லையாடா?” என்று நலம் விசாரித்தான்.
“யெஸ்டர்டே விட இன்னிக்கு பெட்டர்டா” என்றவன் மிருதுளாவை தேடினான்.
“அவங்க எங்க காணோம்?” என்று அம்ரிஷ் கேட்டதும், பெண்களோ மாறி மாறி தோழியை தேடுகின்றாரே என கையை பிசைந்தார்கள்.
தமிழ் தான் “அவங்க ரொம்ப பயந்துட்டாங்கடா. இயற்கையில் பயந்த சுபாவம் பாரு. அதனால உனக்கு அடிபடவும் அறைக்குள்ள இருக்காங்க” என்றுரைத்தான்.
“இது ஜஸ்ட் ஆக்சிடெண்ட். தெரியாம தானே நானா போய் விழுந்து வாறியது.” என்று மிருதுளாவை கூப்பிட்டான்.
அவள் அப்பொழுதும் எட்டிபார்க்கவில்லை. பேச்செல்லாம் அறைக்குள் கேட்கும் ஏனோ மிருதுளா கோழிப்போல அடைக்காத்தாள்.
தோழிகளும் வற்புறுத்தவில்லை.
தோழிகளே வற்புறுத்தாமல் இருக்க அம்ரிஷ் வலுக்கட்டாயமாக கூப்பிட்டால் தனித்து தெரியுமென பொறுமைக்காத்தான்.
பிரேக்பஸ்ட் சாப்பிடும் நேரம் வேறு வழியின்றி அம்ரிஷ் விலோசனங்களுக்கு தானாக தரிசனம் தந்தாள் மிருதுளா.
“அம்ரிஷ் சார் நாளைக்கு எஸ்டேட்ல ஆட்கள் வந்துடுவாங்க தானே?” என்று சாக்ஷி கேட்டாள்.
“ஏங்க அவனை வேதாந்த் என்று கூப்பிடுறிங்க. தமிழ் ஆதேஷ் என்று பெயர் வச்சி பேசறிங்க. நான் மட்டும் சாரா? பிரெண்ட்லியா அறிமுகமானவங்க நாம. ஆக்டரா அறிமுகமாகலையே.” என்றதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் தவிர்த்தனர்.
மற்றவர்களை பெயரிட்டு அழைத்தப்போது அது பெரிதாகபடவில்லை. சினி ஆக்டர் என்றதும் கொஞ்சம் தயக்கமிருந்தது. தற்போது அவனே பெயரிட்டே அழைக்க கூற அப்படியே பேச முயன்றனர். அதுவொன்றும் கஷ்டமில்லை. வெளிநாட்டில் பெரும்பாலும் வயதில் பெரியவர்கள் என்றாலும் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளதே.
மென்பனியோ, “அம்ரிஷ் நாங்க நாளைக்கு வீட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம்” என்று ஆரம்பித்தாள்.
“எங்கே?” -ஆதேஷ்.
“எதுக்குங்க?” -தமிழ்.
“பிரச்சனை அப்படியே தானே இருக்கு? -அம்ரிஷ்.
“அப்படியென்ன அவசரம்” -வேதாந்த்.
மடமடவென ஆண்கள் வினாக்களை தொடுத்தனர்.
“ஸ்கூலுக்கு டென் டேஸ் தான் லீவு சொன்னோம்.” -சஹானா மியூசிக் டீச்சராக பதில் தந்தாள்.
“போனும் சுவிட்ச்ஆப் யாராவது முக்கியமா அணுகினாலும் பத்து நாளுக்கு மேல தெரியாம இருக்கறது கஷ்டமில்லையா?” -மென்பனி கதையாசிரியராக நவின்றாள்.
“டான்ஸ் கிளாஸ்ல ஸ்டூடண்ட் வந்துடுவாங்க. இன்னமும் லீவ் விட்டா டான்ஸ் ஸ்டெப் மறந்துடுவாங்க. பிறகு இத்தனை நாள் டீச் பண்ணியது வேஸ்டா போகும்.” – என்று சாக்ஷி உரைத்தாள்.
கடைசியாக “நான் ராஜபாண்டியனை பேஸ் பண்ணிடலாம்னு தைரியம் வந்துடுச்சு.” என்று மிருதுளா திடமாக கூறினாள்.
அம்ரிஷோ “என்ன பேஸ் பண்ணுவ?” என்று உரிமையாய் கடிந்திட ஆரம்பித்தான்.
“எப்படியும் நான் தான் பேஸ் பண்ணணும். நான் பார்த்துப்பேன் அம்ரிஷ். என் பிரெண்ட் சாக்ஷி வீட்ல ஸ்டே பண்ணி ஏதாவது வேலைக்கு போவேன். ரொம்ப கட்டாயப்படுத்தினா ராஜபாண்டியன் மேல கேஸ் போட்டுக்கறேன்.
நீங்க தான் வேதாந்தோட அண்ணா யாரோ வக்கீலா இருப்பதா சொன்னிங்க. எனக்காக அரேஜ் பண்ண மாட்டிங்களா?” என்று சற்று கடினமாய் தான் மொழிந்தாள். அதே நேரம் நயமாய் சமாளித்தாள்.
இதுவரை அம்ரிஷ் சார் என்றவள் பெயரிட்டாள். அவன் தானே அழைக்க கூறியதும்.
அம்ரிஷ் நண்பர்களிடம் தன் முகமாறுதலை தவிர்த்துவிட்டு சாப்பிட்டான்.
பிரேக்பாஸ்ட் முடிந்த சில மணி நேரத்தில் கிளம்ப முடிவிடுத்தனர்.
அம்ரிஷோ “எதுல போறதா உத்தேசம்?” என்று கையை கட்டி நின்றான் தோரணையாக.
“உங்க எஸ்டேட் நிர்வாகி ராஜேந்திரனிடம் சென்னைக்கு போக பஸ் டிக்கெட் எடுக்க சொல்லிருக்கோம்.” என்று மென்பனி உரைத்தாள்.
“ஓ என் எஸ்டேட் ஆட்களிடம் உதவி கேட்டிருக்கிங்க” என்று ஒரு மார்க்கமாக அம்ரிஷ் பேச நான்கு பெண்களும் அமைதியானார்கள்.
“வேதாந்த் வீட்ல உங்க கார் இருக்கு மென்பனி. அப்பறம் லாஸ்ட்-டே என்பதால, முதல்ல தங்கிருந்த இடத்துக்கு போவோம். லஞ்ச் அங்க முடிச்சிட்டு ஈவினிங் கிளம்புங்க.” என்றதும் சாக்ஷி சஹானா ‘சாப்பிட்டு போகலாம்’ என்று பார்வை பார்த்துக்கொண்டனர்.
ராஜேந்திரனிடம் தாங்கள் கிளம்புவதாக கூறிவிட்டு முன்பிருந்த இடத்திற்கு சென்றார்கள்.
மிருதுளா சற்று கடினாமாகவே திரிந்தாள். ஏனோ இங்கே முகம் தெரியாத போது வந்த சமயம் ஒரு எதிர்பார்ப்பு, புதுவித அனுபவம், ஆர்வம், என்று பெண்கள் களிப்போடு நடமாடினார்கள்.
அதிலும் மிருதுளா எல்லாம் சாக முடிவெடுத்து, அதை மாற்றிக் கொண்டு சந்தோஷமாகவே திரிந்தாள்.
இன்று ஆக்டர் அம்ரிஷ் என்றறிந்து நன்றாக மற்றவர்களோடு பழகியும், ஒருவித சோகம், அமைதி வாட்டியது. ஒருவேளை பிரிவால் வாட்டுகின்றதோ என்று தான் மற்ற மூன்று பெண்கள் நினைத்தனர்.
முதலில் தங்கிய இடத்திற்கு வந்ததால், பணியாட்கள் உணவு பரிமாற கடனேயென்று விழுங்கினாள் மிருதுளா.
அதன்பின் தங்கள் உடமைகளை அடுக்கினார்கள் பெண்கள் .
ஹாலில் இருந்த ஆதேஷ் தமிழிடம் “தமிழ் நிஜமான ஆக்சிடெண்டால தான், இவங்க நம்மளை சந்திச்சிருக்காங்க டா.” என்று மகிழ்ச்சியாக கூறவும் தமிழ் முறைத்துவிட்டு, “நீ மட்டும் சஹானாவிடம் இப்படி சந்தேகப்பட்டதை சொல்லேன். காதல் சொல்லாமலே பிரேக்கப் ஆவ.” என்று கூறியதும் வாயை திறக்கவில்லை. நல்லவனாய் வேதாந்த் பக்கம் சென்று அமர்ந்தான்.
பெண்கள் குழுவில் நான்கு பேரும் செல்வதை கையை கட்டி வேடிக்கை பார்த்தனர்.
அதுவும் அம்ரிஷ் மிருதுளாவை தவிர யாரையும் கவனிக்கவில்லை எனலாம்.
ராஜேந்திரனிடம் கூறி கொடைக்கானலை தாண்டி விடக்கூறினான்.
கொடைக்கானலில் கூட ஏசி பஸ்ஸில் அனுப்பலாம். ஆனால் ராஜபாண்டியன் ஆட்களோ போலீஸோ இன்னமும் தேடினால்? பத்து நாளில் மறந்து போவார்களா? எப்படியும் ஒரிரு மாதமாவது தேட முயலுவார்கள்.
மிருதுளாவை தான் மணக்க வேண்டுமென்று அதிகப்படியாக பேராசை ராஜபாண்டியனுக்கு இருந்தால் ஒரு வருடம் கூட தேடலாம்.
எதற்கு வம்பென்று வேதாந்த் முடிவெடுத்தான்.
விடைப்பெறும் நேரமும் வந்தது.
“ரியலி ரொம்ப ஹாப்பியா இருந்தோம். நீங்க லிப்ட் கொடுத்து தங்க இடம் கொடுக்கலைனா, சூழ்நிலை கிரிட்டிக்கலா மாறியிருக்கும். தேங்க்யூ” என்றாள் சாக்ஷி.
“எக்ஸாக்ட்லி இந்த நன்றியை எப்பவும் மறக்க மாட்டோம். அதோட இந்த நினைவுகள் என்னைக்கும் மறக்காது.” என்றாள் மென்பனி.
“எஸ். இவர் காரை மோதியது. சண்டைப்போட்டது, அதே கார்ல டிராவல் பண்ணி இங்க வந்தது, நாலு பேரோட ஸ்டே பண்ணி புது நட்பு கிடைச்சு, கேக் கட் பண்ணி, ஃபயர் பிளேஸ்ல டான்ஸ் ஆடியது, கேக் அபிஷேகம் பூசி போட்டோஸ் எடுத்தது. அதோட எஸ்டேட் போய் அம்ரிஷ் உருண்டு புரண்டு சினிமா பாணில மிருதுளாவை காப்பாத்தி பல்பு வாங்கியதும் தான்.” என்று பேச மிருதுளா முறைக்கவும் சஹானா பேச்சை நிறுத்தினாள்.
“எதுவும் மறக்காது. ஃபன் மோட் தான்” என்று மகிழ்ந்து கூறினாள்.
மிருதுளாவோ “உங்க நாலு பேருக்கும் தேங்க்ஸ். இங்கிருந்து கிளம்பறேன். அதோட எங்களை பத்தி, என்னை பத்தி ரொம்ப திங்க் பண்ண வேண்டாம். ஒரு வேலையில சேர்ந்து சாக்ஷி வீட்ல இருப்பேன். இல்லைனா ஹாஸ்டலில் தங்கிப்பேன். இரண்டுத்துல ஒன்னு நடக்கும்.” என்று வணக்கம் வைத்து விடைப்பெற்றாள் மிருதுளா.
இந்தமுறை “வாழ்த்துகள்” என்று வாய்திறந்தான் அம்ரிஷ். அவன் பார்வையிலும் ஏதோவொரு வித்தியாசம் காணப்பட்டது.
பெண்கள் நால்வரும் காரில் ஏறியதும் மிருதுளாவை தவிர மற்றவர்கள் கையசைத்து டாட்டா காட்டினர்.
ஆனால் ஆண்கள் பாரபட்சம் பாராமல் சந்தோஷமாக வழியனுப்பினார்கள்.
அதுவும் ஆதேஷ் எல்லாம் செல்லும் வழியில் சஹானாவுக்கு பசிக்குமென ஹாட் சாக்லேட்ஸ் சிப்ஸ், கேக்ஸ் கூல்டிரிங்க்ஸ் என்று கடையையே கொடுத்தனுப்பினான்.
ராஜேந்திரனின் மேற்பார்வையிலேயே காரில் கொடைக்கானலிலிருந்து புறப்பட்டு, கொடைக்கானல் தாண்டி, ஏசி பஸ்ஸை நிறுத்தி ஏற்றி விட்டார் அவர்.
பஸ்ஸில் ஏறியதும் முதல் வேலையாக மூன்று பெண்களும் போனை ஆன் செய்தனர்.
பள்ளியிலிருந்து சஹானாவுக்கும், டான்ஸ் வகுப்பில் பயிலும் ஸ்டூடன்டின் பேரண்ட்ஸ் கால்ஸ் சாக்ஷிக்கும் வந்திருந்தது.
மென்பனிக்கு அவள் கதை எழுதும் ஆன்லைன் செயலியில் இருந்து நோட்டிபிகேஷன் குவிந்திருந்தது.
‘எங்க மேம் போனிங்க?’
புதுக்கதை எப்ப போடுவீங்க?’
‘ஹாய் டியர் பேசமாட்டியா?’
‘மேம் உங்க புக் ஆன்லைன்ல வாங்கிட்டேன். பேன்டாஸ்டிக் ஸ்டோரி’
‘இப்ப தான் உங்க கதை வாசிக்கறோம். ஒவ்வொன்னும் வித்தியாசமா இருக்கு.’
‘உங்க ரைட்டிங்கு அடிக்ட் ஆகிட்டேன்’
‘புதுக்கதைக்காக காத்திருக்கோம்’
‘சாப்பிட்டியா புஜ்ஜிம்மா?’ என்று வரிசையாக குறுஞ்செய்தி ஒருபக்கம் நிறைந்தது.
மறுபக்கம் கதைக்கான கமெண்ட்ஸ் பகுதியில் ‘சூப்பர், நைஸ் இன்ட்ரஸ்டிங், வொண்டர்புல், அமேசிங்’ என்று ஒருவரி கருத்தும் பக்கம் பக்கமாய் புகழ்ச்சி போதைகளும் குவிந்திருக்க, சந்தோஷமாய் பார்வையிட்டாள்.
மிருதுளாவை பார்த்து சிந்தனை வசப்பட்டவள் ‘புதுக்கதை நாளை முதல் துவங்கப்படும்’ என்று அறிவிப்பையும் கொடுத்தாள்.
பத்து நிமிடத்தில் ஐம்பது அறுபது கமெண்ட்ஸ் நிரம்பியது.
மிருதுளாவோ இமை மூடி சாய்ந்தாள்.
எஸ்டேட்டில் தங்கியிருந்த நேரம் அம்ரிஷின் உடல்நிலையை கேட்டறிய ஆதேஷிடம் சென்றாள்.
ஆதேஷோ அம்ரிஷின் அன்னையிடம் பேசிக்கொண்டிருக்க, மிருதுளா வந்ததை அறியாமால் பேசினான். அதை எதச்சையமாக மிருதுளா கேட்க நேரிட்டது.
ஆதேஷ் போனில் “ஆன்ட்டி இஷாவை தான் டிவோர்ஸ் பண்ணப்போறானே. மியூட்சுவலா டிவோர்ஸ் அப்ளை பண்ணியதால குயிக்கா விவாகரத்து வந்துடும். நீங்க மிருதுளாவை தாராளமா கட்டிவைக்கலாம்.
அம்ரிஷுக்கும் அந்த பொண்ணை பிடிச்சிருக்கு ஆன்ட்டி. இல்லைனா செப்பல் இல்லாம, நைட் நேரத்துல ஓடிப்போய் அந்த பொண்ணை காப்பாத்தறதா விழுந்து வாறிட்டு வந்திருப்பானா?
முதுகுல கல்குத்தியிருக்கு ஆன்ட்டி, கையில சிராய்ப்புயிருக்கு. அந்த பொண்ணும் அந்தளவு பணம் புகழை விரும்பலை. அந்த பொண்ணுனு இல்லை, இங்க மத்த மூன்று பேரும் கூட ஜஸ்ட் லைக் தட் என்று பழகிட்டு இருக்காங்க. மணி மைண்டோ சினி ஆக்டர் என்றோ வழியலை.
எதுக்கோ முடிவெடுங்க ஆன்ட்டி.
அம்ரிஷ் எதுவும் எங்களிடம் இன்னமும் ஷேர் பண்ணலை. மேபீ ஷேர் பண்ணினா அதை கன்வே பண்ணறேன்.” என்று பேசியதை கேட்டு அப்படியே துவண்டுவிட்டாள்.
மிருதுளாவிற்கு அம்ரிஷ் மீது லேசான அதிருப்தி ஏற்பட்டுவிட்டது.
மிருதுளா தாய் ஜனனி இறந்ததும், உடனடியாக திலகாவை மணந்துவிட்டார் தந்தை கேசவன். அப்பொழுது மிருதுளாவிற்கு ஆறு வயதிருக்கலாம்.
தாய் இறந்த கொஞ்ச நாளிலேயே சித்தியாக திலகா வரவும் மிருதுளா வாழ்வில் பெரிய மாற்றங்கள் வடுவாய் அமைந்தது.
உணவு, உடை, இருப்பிடம் என்று மனிதனின் அத்யாவசியத்தில் கைவைக்கப்பட்டாள்.
எஞ்சிய உணவு, கிழிசலான பிறகே புது துணி, உறங்கவும் வெளியே ஹாலில் பாய் விரித்து தள்ளிவிடுவார்.
கேசவனும் புதுமணபெண்ணின் அழகில் சொக்கி விடுவார். இரவென்ற பூதம் ஆட்சி செய்ய ஆண்மகனின் மோகத்திற்கு கட்டியவள் தான் தேவையென்று நாடுவார்.
அதன் காரணமாக முதல் மனைவிக்கு பிறந்த மகளை பெரும்பாலும் ஹாலில் இருக்கவும் வசதியாக போனது.
மிருதுளா வளரவளர சித்தியை புரிந்துக்கொள்ளும் பக்குவம் வரும் போது மதன் பிறந்துவிட்டான்.
மதனை தம்பியாக பாவித்தாலும் திலகா மிருதுளாவை முதல்தாரத்து மகளாக பாரபட்சமாக தான் நடத்தினார்.
சிறுவயதில் எட்டாவது படிக்கும் போது சாக்ஷி, மென்பனி, சஹானா மூவரின் நட்பும் கிடைத்தது.
அது பன்னிரெண்டாம் வகுப்பு வரவும் தொடர்ந்தது. கூடுதலாக கல்லூரியில் பி.ஏ.இங்கிலிஷ் லிட் சேர்ந்தே படிக்க ஆரம்பித்தனர்.
பள்ளியில் ஐந்து வருடமும், கல்லூரியில் மூன்று வருடமும், அதன்பின் இரண்டு வருடமென, பத்து வருடக்கால நட்பு கிடைக்க பெற்ற பாக்கியசாலி மிருதுளா. இந்த நட்பு காலம் முழுக்கவும் தொடரவே இறைவனிடம் வேண்டுதல் உண்டு.
மிருதுளாவை பொறுத்தவரை பருவம் தாண்டி யோசித்தவளுக்கு மனைவி இறந்தவுடன் மறுமணம் செய்த தந்தை கேசவனை எண்ணி சிறு கசப்பான உணர்வு.
ஆண்களுக்கு மனதில் உண்மையான நேசம் இல்லை. எல்லாமே உடல் இச்சைக்கு என்று தவறான புரிதல்.
அம்ரிஷ் விஷயத்திலும் அவன் இருட்டில், கற்பாதையில் காப்பாற்ற வந்த நோக்கத்தை விட, அவருக்கு என்ன பிடிச்சிருக்கு அதனால தான் காப்பாத்த வந்தாரா?
இஷாவை விவாகரத்து செய்திட முறையாக கோர்ட் பத்திரம் கைக்கு வராத பட்சத்தில், என்னை மணக்க முன் வருகின்றாரே, ஒன்றரை வருடம் வாழ்ந்த வாழ்க்கை விட இந்த இடைப்பட்ட நாளில் என்னை கண்டு மனம் மாற காரணம் அழகா? என்ற வெறுப்பு வளர்ந்தது.
ஆண்கள் குழுவில் நால்வருமே பெண்கள் மீது நல்ல அபிப்ராயமும், மரியாதையும் கொண்டு காதலை வளர்த்தாலும் வேகத்தை குறைக்கவே அமைதிக்காத்தனர்.
பெண்கள் குழுவோ, மிருதுளாவை தவிர ஆண்கள் மீது அன்பும் நேசமும் உருவாகியிருந்தாலும், முதலில் மிருதுளாவின் வாழ்வுக்கு வழி செய்திடுவோம். அதற்குள் சாட், மெஸேஜ் என்று ஆண்களிடம் தொடர்பில் பார்த்துக்கொள்வோம் என்ற முடிவில் இருந்தனர்.
மிருதுளாவின் பெற்றோரையும், ராஜபாண்டியன் இந்த இருதுருவங்களை அகற்றிவிட்டு பின்னரே மற்ற உணர்வுக்கு உயிர் கொடுக்க முனைந்தனர்.
மிருதுளா மட்டும் தோழிகளின் நேசம் போதும். தனித்து வாழ்ந்திடு, ஆண்களை நம்பாதே, அதுவும் வெள்ளித்திரை நாயகன் என்றாலே நடிகையோடு கிசுகிசு, படுக்கையை பகிர்ந்து கொள்பவன், வரைமுறையற்ற பெண் தோழிகள் என்றிருப்பவன் என்ற தவறான கோட்பாட்டை மனதில் வகுத்து அதில் மாற்று கருத்து தோன்றினாலும் மறுத்து வெறுப்பாகவே தன் கருத்தில் ஊறிக்கொண்டிருந்தாள்.
பேயுக்கு பயந்து பிசாசிடம் அகப்படுவதா? அவளுக்கு அரசியல்வாதிக்கு பயந்து சினிமாக்காரனிடம் விழவா என்றிருந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Ava yosikirathum sari thaaa
Super