Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-20

மனதில் விழுந்த விதையே-20

அத்தியாயம்-20

Thank you for reading this post, don't forget to subscribe!

அம்ரிஷ் மனமுடைந்து போவான் என்று எண்ணியதற்கு மாறாக, “ஆமா ஆன்ட்டி இஷா என் முதல் மனைவி. அவளோட ஒன்றரை வருஷம் வாழ்ந்திருக்கேன். இப்ப கருத்து வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம்.

அவளுக்கு அவளோட காதலன் கூட அஃபயர் இருக்கு. சோ அவனோட வாழணும்னு ஆசைப்பட்டு என்னை விவாகரத்து கொடுக்க கேட்டுட்டே இருந்தா.

அப்பாவும் அம்மாவும் குடும்ப மானம் போயிடும்னு வேண்டாம்னு தவிர்க்க பார்த்தாங்க. இஷாவோட அப்பாவும் அதை விரும்பலை. அதனால இஷாவுக்கு என் மேல செம கோபம். என் நேமை ஸ்பாயில் பண்ணி என் கோபத்தை கிளறி நானா விவாகரத்து கொடுக்க வச்சா. அப்பா அம்மா முதல்ல எதுனாலும் சேர்ந்து வாழ அறிவுரை செய்தாங்க. எப்ப என்னை டேமேஜ் பண்ணி பேட்டி தந்தாளோ, அப்பவே அம்மா அப்பாவும் விவாகரத்து கொடுத்துடலாம், அவ வேண்டாம்னு முடிவெடுத்துட்டாங்க. இப்ப மியூட்சுவலா விவாகரத்து பெற்று ஜீவனாம்சம் கோடிக்கணக்குல வாங்கிட்டா.

என்ன எனக்கு அவ கொடுத்த பட்டம் எல்லாம் அப்படி அப்படியே பேலன்ஸ் இருக்கு” என்றவன் பார்வை மிருதுளாவை நோக்கியது.

அம்ரிஷ் எதிர்பார்த்தது அந்த இடத்தில் ஒரு சிறு அணைப்பை. அதுவும் மிருதுளாவிடமிருந்து ஆசைப்பட்டான். அது அதிகப்படியாக தோன்றினாலும் காயப்பட்ட உள்ளம் எதிர்கால துணையாக அவளிடம் எதிர்பார்த்தது.

ஏனோ பெருத்த ஏமாற்றம். மிருதுளா கற்சிலையாக நின்றாள்.

“அம்மா போதும் அவங்க கிளம்பறாங்க. வழியனுப்பிட்டு வா, அப்பா அந்த மெடிஸன் வாங்கிட்டு வந்துடுங்க.” என்று சாக்ஷி தான் அடக்கினாள்.

வேதாந்த் பத்மா பேசவும் வாயடைக்க வந்தவனை தான் அம்ரிஷ் கைப்பிடித்து நிறுத்தி வைத்தான். அவனே பார்த்து பதில் தந்துக்கொள்வதாக கையில் அழுத்தம் கொடுத்தான்.

குருபிரசாத்தும் நாகரிகம் கருதி மனைவியை கட்டுப்படுத்தும் பார்வை பார்த்தார்.

“ஓகே அங்கிள் நாங்க கிளம்பறோம். ரிப்போர்ட் பார்த்துட்டு அகைன் என்னனு கால் பண்ணறேன்.” என்று வேதாந்த் அம்ரிஷை அழைத்து சென்றான்.

அவர்கள் சென்றதும் வீடே புயல் அடித்து ஓய்ந்தது போல ஆனது.

டாக்டர் அசோக் குமார் அப்பாயிண்மெண்ட் பெற்று ஆயின்மெண்ட் வாங்கிட்டு வந்து விடுவதாக குருபிரசாத் சென்றார்.

பத்மாவோ மகளிடம் ஏதேனும் கேட்டு சிங்கமுகம் காட்டுவாளென்று மிருதுளாவிடம் ஓடினார்.

அம்ரிஷ் எப்படி பழகினான். நல்லவனா? ஏன் இங்க எல்லாம் வர்றான்? ரொம்ப உயரத்துல இருக்கறவன் இங்க வரவண்டிய அவசியமில்லையே என்று ரயில் பெட்டியாக கேள்வியை நிறுத்தினார்.

“ஆன்ட்டி அது அவரோட பெர்சனல். சாக்ஷி பிரெண்ட்லியா பார்க்கறார். எனக்கு அவ்ளோ தான் தெரியும்.” என்று நழுவினாள்.

“என்னவோ இவ்ளோ பெரிய நடிகன் வீட்டுக்கு வந்துட்டு பேசிட்டு போறது எல்லாம் வியப்பா இருக்கு. யாராவது வீடு தேடி வருவாங்களா? இது ஏதோ தப்பாவே மனசுக்குபடுது. எங்கப் போய் நிறுத்தப்போகுதோ? அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்” என்று புலம்பி தள்ளவும் மிருதுளாவுக்கு மனம் சங்கடமாய் போனது. அவளுக்கு தெரியும் அம்ரிஷ் தனக்காக வந்தானென்று. ஆனால் பத்மா சாக்ஷிக்காக வந்ததாக தவறாக எண்ணிவிட்டார்.

இந்த ஒருமுறை அம்ரிஷ் வந்துவிட்டான். இனி வருவது சுலபமில்லை. அப்படி வந்தால் கடிந்திடலாயென்ற முடிவோடு இருந்தாள்.

மாலை கால் வலியோடு சாக்ஷி அசோக்குமாரின் க்ளிக்கிற்கு குருபிரசாத்தை அழைத்து சென்றாள்.

அசோக்குமார் வேதாந்த் கூட படித்த தோழனாக இருக்க வேண்டும். சாக்ஷி என்ற பெயரை கேட்டு பலமான கவனிப்பு வழங்கினான்.

குருபிரசாத்திற்கு அந்த கவனிப்பு கூட அம்ரிஷால் மகளுக்கு ராஜ உபசரிப்பென்று தவறாக கணித்தார்.

ஸ்கேன் எடுத்து பார்த்ததும் முதல் வேலையாக வேதாந்திற்கு அழைத்து சொல்லிட, அவனோ “ஓகேடா இனி நான் பார்த்துக்கறேன்.” என்று வைத்துவிட்டான்.

“காலுக்கு என்ன சார் ஆச்சு. இப்படி வலிக்குது” என்று முகம் சுணங்கி சாக்ஷி கேட்க, “உங்க ஆளு வேதாந்திடம் சொல்லிட்டேன் சிஸ்டர். யூ டோண்ட் வொர்ரி. அவன் பார்த்துப்பான்” என்று தனக்கு என்ன என்றதை கூறாமல் வேதாந்த் புகழாரம் சூட்டினார்.

சாக்ஷிக்கு தந்தையருகே இருக்க, இதென்ன இப்படி வேதாந்தை உங்க ஆளு என்று சொல்கின்றாரே என்று நினைக்க குருபிரசாத் அம்ரிஷ் சாக்ஷியை தான் ஜோடி போடுவதாக கவலைக் கொண்டார்.

குருபிரசாதிற்கு மகள் ஏற்கனவே திருமணமானவன் மீது ஆசை துளிர்விட்டதென்ற வருத்தம்.

வீட்டுக்கு வந்ததும், “என்ன சொன்னாங்க?” என்று பத்மா கேட்க, “அது டாக்டர் பையன் வந்து சொல்வார் போல. இப்ப எதையும் மூச்சுவிடலை.” என்று பொறுமி தள்ளினார்.

பத்மாவுக்கு அப்ப அந்த நடிகனும் டாக்டரும் திரும்ப வருவாங்களோ என்று நினைத்தார்.

பேயை நினைச்சிட்டு படுத்தா எதிரே பிசாசே வந்திடுமாம். அப்படி தான் வேதாந்த் அம்ரிஷ் இருவரும் வந்தார்கள்.

வேதாந்திற்கு இப்படி அம்ரிஷ் ஒட்டுண்ணியாக வருவது பிடிக்கவில்லை. என்ன தான் மிருதுளாவை பார்க்க வந்தாலும், விவாகரத்து வாங்கிய கொஞ்ச நாளில் இப்படி மிருதுளா பின்னால் சுத்துவது லேசான உறுத்தலை தந்தது.

அவனிடம் அதனை கூறி தவிர்க்க பார்த்தவனிடம், “ஏன்டா மனசல மாத்திக்கணும்னு ஒருத்தன் முடிவெடுத்தா உடனே மாறக்கூடாதா. உடனுக்குடன் மாறினாலும் தப்பா?

இஷா அஃபெயர்ல இருந்தது எனக்கு முன்னவே தெரியும். அப்படியிருந்தும் நேசித்தவன் தான். மேபீ வலுக்கட்டாயமாக நேசத்தை புதைச்சி வச்சியிருக்கலாம். இப்ப எனக்கான பெண்ணா மிருதுளாவை பார்த்ததும் மாறறேன். இதுல என்ன தப்பு. பத்து வருஷம் பன்னிரெண்டு வருஷம் என்று தன் கவலையை மற்றவர்களிடம் காட்டிடவேண்டுமா? என்று சாடினான்.

வேதாந்த்திற்கு கவலையாக போனது. அம்ரிஷ் மனம் மாற வேண்டும் என்ற நோக்கில் தான் கொடைக்கானல் சென்றது. தற்போது மிருதுளா மீது ஆசைக் கொண்டு பேசியவன் மணக்கவே சம்மதிப்பான், ஆனால் மிருதுளா பக்கமும் யோசிக்க வேண்டுமே?!

“அம்ரிஷ் நீ மாறியது தப்பில்லை டா. ஆனா மிருதுளா பத்தி கொஞ்சம் யோசி. ஏற்கனவே அவ சூசைட் செய்யற லெவலுக்கு எதுக்கு போனா? ஒரு அரசியல்வாதி அவளை இரண்டாதாரமா கல்யாணம் பண்ண கேட்டு அவ அதுக்கு நோ சொல்ல முடியாம முடிவெடுத்தா.

உனக்கும் மேரேஜ் முடிஞ்சு டிவோர்ஸூம் ஆகிடுச்சு. நீ அவளை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டாலும் அவளை பொறுத்தவரை நீயும் இரண்டாம் கல்யாணம் செய்ய போறதா இருந்தா அவ எப்படி சம்மதிப்பா?” என்றதும் அமரிஷிற்கு அப்பொழுது தான் இந்த கோணமே புரிந்தது.

அப்படியே உடைந்தது போல மாறினான். வேதாந்த் இதை சொல்லி இருக்க வேண்டாமோ என்று எண்ணினான்.

அந்தளவு அம்ரிஷ் நிலை பாவமாய் இருந்தது. “அம்ரிஷ் உன்னை காயப்படுத்த சொல்லலைடா. உனக்கு புரியாத காரணத்தை எடுத்து சொல்லறேன்.” என்று வேதாந்த் சரியான நண்பனாய் பேசவும் அம்ரிஷ் புரியுது என்பது போல கையை உயர்த்தினான்.

“இன்னிக்கு மட்டும் மிருதுளாவை பார்க்க வர்றேன்டா. எ லாஸ்ட் சான்ஸ்.” என்று கேட்டு நின்றவனை தான் தோளில் கைப்போட்டு அழைத்து வந்தான்.

மிருதுளாவை இன்றோடு பார்க்க முடியாத வலியோடு சோகம் தாங்கி வந்தவனின் முகத்தை கண்டு, குருபிரசாத் பத்மா இருவரும் மகளின் நிலை கண்டு வருந்துவதாக எண்ணினார்கள்.

ஏன் என்றால் சாக்ஷி கால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறவும் அம்ரிஷ் முகசோகமும் ஒத்துயிருந்தது. அம்ரிஷ் சாக்ஷி காதலிப்பதாக பெற்றோர் முதலிலிருந்தே தவறாக கருத மிருதுளாவிடம் வந்தான் அம்ரிஷ்.

தொண்டையை செருமி, “இதுவரை நமக்குள் மறைமுகமா இருந்த பனிபோர் உடைச்சிடலாம்னு உன்னை பார்க்க வந்தேன். ஆதேஷ் எங்க அம்மாவிடம் பேசியது, நீ அதை கேட்க நேர்ந்தது. அதனால என்னை பேஸ் பண்ண பயந்து அமைதியை கடைபிடிக்கற, நான் உன்னை விரும்பறது தெரிந்தும் அவாய்ட் செய்யற மிருது. எனக்கு புரியுது, நான் மேரீடாகி, டிவோர்ஸ் ஆனவன். உன்னை நேசிப்பது தப்பு தான். அதோட இந்த குறுகியகால இடைவெளியில் நேசத்தை வெளிப்படுத்தி இருக்க கூடாது. ஐ அம் சாரி. ஊருக்கே என்னை பிடிக்கும், சோ உனக்கும் என்னை பிடிக்கும்னு தப்பா நினைச்சிட்டேன். இனி தொந்தரவு பண்ண மாட்டேன், ஏதாவது உதவி தேவைப்பட்ட என்னை அணுகலாம். பை மிருது.” என்றவன் வேதாந்த்திடம் “வேதாந்த நான் கிளம்பறேன். மெய்யப்பன் வெளியே கார் கொண்டு வந்துட்டார். சாக்ஷி பை உடலை கவனிச்சிக்கோங்க. அங்கிள் அண்ட் ஆன்ட்டி கிளம்பறேன். தாங்க்ஸ்” என்றவன் மாஸ்க் எடுத்தணிந்து புறப்பட்டுயிருந்தான்.

மிருதுளா பேசவோ அங்கே மற்றவர்கள் பதில் சொல்லவோ நேரம் கொடுக்காமல் வெளியேறினான். வேதாந்த் இருந்து மருந்து மாத்திரை எல்லாம் எழுதி கொடுக்க, குருபிரசாத் புரியாமல் நின்றார்.

சினிமாவில் நடிக்கும் உச்சம் பெற்றவன் தன் வீடு தேடி வருவது எதனால்?குழப்பத்தில் மிதந்தவருக்கு கூடுதல் குழப்பம் தரவே பத்மா “இவளை பொண்ணு பார்க்க வருவதா இருக்கு. இப்படி கால்ல கட்டு போட்டுட்டு உட்கார்ந்து இருக்கா. டான்ஸ் கிளாஸ் எல்லாம் தேவையா? கல்யாணம் செய்தமா வெளிநாட்டுக்கு போனமா, பிள்ளை குட்டி என்று வளர்த்தமான இருக்காளா?” என்று புலம்ப, வேதாந்த் பார்வை சாக்ஷியை தழுவியது.

அவளோ சங்கடமாய் காணவும் லேசான அதிருப்தியோடு, “நானும் கிளம்பறேன்.” என்று பொதுவாய் கூறி நடந்தான்.

வேதாந்த் அவசரமாய் ஆதேஷ் போனிற்கு அழைக்க, அவனோ பிஸியாக சஹானாவிடம் போனில் கடலை வறுத்தவன், நேரில் அவளே சந்திக்க கேட்டால் விடுவானா? அவளுக்காக காத்திருந்தான். அதனால் வேதாந்த் அலைப்பேசி அழைப்பை புறக்கணித்தான்.

சஹானா தன்னை பார்க்க பேச இவனை போலவே ஆசைப்படுகின்றாள் என்று கை கடிகாரத்தை நொடிக்கு ஒருமுறை காண அவளோ நேரம் தாழ்த்தி வந்து சேர்ந்தாள்.

போனை எடுத்து முனங்கி கொண்டே தனது ஸ்கூட்டியை முறுக்கி வீட்டிலிருந்து கிளம்பினாள்.

அவள் கோபத்தின் அளவை வைத்து வண்டியின் வேகம் கூடியது. ஆதேஷை சந்திக்கும் இடத்திற்கு விபத்து இல்லாமல் வந்து சேர்ந்தாள்.

வந்ததும் வராததும் ஆதேஷ் பக்கதில் அமர, ”சஹானா?’ என்று ஆச்சரியமாக நினைக்கும் தருணம், போனை எடுத்து அவன் முன் காட்டி, “என்ன இதெல்லாம் ஆஹ்?” என்று சுட்டி காட்டவும், ஆதேஷ் அவள் காட்டியதை கண்டு திருதிருவென விழித்தவன், நான் என்ன சொல்ல வர்றேன்னா?” என்று ஆரம்பித்தவனிடம், “நிறுத்து ஆதேஷ், முதல்ல அம்ரிஷ் ஏதோ மிருதுளாவோட கனெட் பண்ணி லவ் சொன்னிங்க, இப்ப இவங்களா?” என்று கேட்டவளிடம், “இல்லை முதல்ல நாம அப்பறம் தான் மத்தவங்க லவ்” என்றவனின் பேச்சில் அருகே அமர்ந்திருந்தவள் மெதுவாக எழுந்தாள்.

ஆதேஷ் எழ விட்டால் தானே? “எதுவானாலும் பேசி முடிவெடுப்போம் சஹானா. ப்ளீஸ் சிட் டவுன்” என்றதும் அவள் அதை மீறி செல்லவும், வலுக்கட்டாயமாக அமர வைத்தான்.

வீம்பு பிடித்து நின்றவளை அதற்கு மேலும் கையை பிடிக்காமல் தளர்த்தி, இடையை வளைத்து அழுத்தி அமர வைக்க, அவன் கைகள் தீண்டியதில் பெண்ணவள் திக்குமுக்காடி தானாய் ஆதேஷ் அருகே அமர்ந்தாள்.

-தொடரும்.

1 thought on “மனதில் விழுந்த விதையே-20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *