Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-23

மனதில் விழுந்த விதையே-23

அத்தியாயம்-23

Thank you for reading this post, don't forget to subscribe!

சாக்ஷி கூறியதும் பத்மாவோ, “பாவி முதல்லயே சொல்லி தொலைக்க என்னவாம். திக்குதிக்குனு இருந்தது.” என்றார்.

வேதாந்த் புருவம் இடுக்கி, “ஏன் ஆன்ட்டி திக்குதிக்குனு இருந்தது? அம்ரிஷ் மேரீட்மேன், டிவோர்ஸ் ஆனவன் என்றதால பயமா? இப்ப நான் என்றதும் உங்க மனசு குளிர்ந்திடுச்சோ?” என்று காட்டமாய் கேட்டான்.

“மன்னிச்சிடுங்க தம்பி. ஒரு அம்மாவா நானும், அப்பாவா என் வீட்டுக்காரரும், என்னைக்கும் என் மகளோட எண்ணத்துக்கு எதிரா நடக்கமாட்டோம்.

உங்களுக்கே கொஞ்சம் யோசித்தா புரியும். அர்த்தராத்திரில காரை எடுத்துட்டு பிரெண்ட்ஸோட கொடைக்கானல் போகற அளவுக்கு சுதந்திரமும் தைரியமாவும் வளர்த்திருக்கோம். இத்தனைக்கும் கொடைக்கானல் போகற பிளானை இதோ இந்த ரூம்ல தான் பேசியது. என் பொண்ணு எங்களிடம் எதையும் மறைச்சதில்லை தம்பி.

அப்படிப்பட்டவ ‘அம்மா நான் இவரை விரும்பறேன்’னு சொன்னா நாங்களே சேர்த்து வைப்போம். எங்களுக்கு காதல் கல்யாணம் என்றதும் அதிர்ச்சியில்லை. வருங்காலத்தில காதல் கல்யாணம் தான் அதிகமா நடைப்பெறும்.

நாங்க யாரை காதலிக்கறா நல்லவனா என்றதை மட்டும் பார்ப்போம்.

நீங்களே சொல்லுங்க உங்க பிரெண்ட் அம்ரிஷை பத்தி நியூஸ் எப்படி பரவுச்சு? பெண்ணை பெத்தவங்க அதை பார்த்து என்ன நினைப்பாங்க? அதனால தான் அம்ரிஷ் என்றதும் திக்குனு இருந்தது.

ஒரு வேளை அவர் நல்லவரா இருக்கலாம். ஆனா முதல் கோணலா அறிமுகமானவரை பெத்தவங்க அப்படி பயந்து யோசிக்கறதுல தவறில்லையே.

இப்ப நீங்க தான் காதலிக்கறதா சொல்லறிங்க. அவளும் உங்களை தான் கைநீட்டி சொல்லிட்டா.

உடனே சம்மதிப்போமா? அவங்க அப்பாவிடம் பகிர்ந்து அவர் உங்களை பத்தி விசாரிப்பார் தானே?!

அம்ரிஷ் என்றால் விசாரிக்காம கிடைத்த தகவலை வச்சி முடிவெடுத்திருப்போம்.

ஏன் மிருதுளா என்றதால கண்ணை மூடி இருப்போம்னு நினைக்காதிங்க. அவளும் எங்க பொண்ணு தான்.” என்று பேசவும் சாக்ஷி அன்னையை கட்டிக் கொண்டு “லவ் யூ அம்மா” என்று அணைத்தாள்.

“ஐ அம் சாரி ஆன்ட்டி” என்று வேதாந்த் கூறியவன், “என்னை பத்தி அங்கிளிடம் பேசி ஒரு முடிவெடுங்க. மிருதுளா அம்ரிஷை விரும்பறாளா சாக்ஷி. அவன் அன்னைக்கு உடைந்து போயிட்டான்.” என்று வேதாந்த் பேசியதை கூறவும், சாக்ஷி கவலையுற்றாள்.

“நீங்க பேசியது தப்பில்லை தம்பி அதே போல அந்த தம்பி அம்ரிஷும் தள்ளி நிற்கறது தப்பில்லை. ஒரு காலஅவகாசம் தேவை தான்.

மிருதுளாவுக்குனு இதுவரை பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. ஒருவேளை உங்க பிரெண்ட்டை அவ விரும்பினா சிலதை புரிஞ்சுக்கணும்.

சினிமா நடிகன் என்றாலே சந்திக்கற பிரச்சனை அவன் வாழ்க்கையில சராசரி மனுஷனுக்கும் இருக்கற வித்தியாசம் அதெல்லாம் சமாளிக்கற திடம் அவளுக்கு இருக்கானு அவளே உணர்ந்துக்கவும், அவளா ஏத்துக்கவும் முன் வரணும். மீதி வாழ்க்கையாவது அவ சந்தோஷமா வாழணும்.” என்று பேசியபடி மறுமுறை சர்பத் எடுத்துவந்து கொடுத்தார்.

“இதேதான் நாங்களும் முடிவு பண்ணிருக்கோம்.” என்று சாக்ஷி உரைத்தாள்.

வேதாந்த்தோ “சந்தோஷம் ஆன்ட்டி. அம்ரிஷ் இப்ப டிவோர்ஸ் ஆனா சோகத்துல இல்லை. மிருதுளாவோட காதலுக்கு பதில் தெரியாத வருத்தத்தில இருக்கான். விரைவில் அவ சொன்னா சந்தோஷப்படுவான். வர்றேன் ஆன்ட்டி. அம்மா அப்பாவிடம் இனி தான் சாக்ஷியை பத்தி சொல்லணும்.” என்று எழுந்தான். சாக்ஷியும் எழமுற்பட்டாள் பாவம் வலியில் உட்கார, “நீ உட்கார்ந்து ரெஸ்ட் எடு. நான் கிளம்பறேன்.” என்று செல்லவும் “நல்லது தம்பி முடிஞ்சா அம்மா அப்பாவை மீட் பண்ணற பாக்கியம் அமையட்டும்.” என்று வணக்கம் வைத்திட, வேதாந்த் வீட்டு வாசலில் நிறுத்திய காரில் கிளம்பினான்.

“ஒரு வழியா கல்யாண யோகம் அடிச்சிடுச்சு. மிருதுளா மனசுல அம்ரிஷ் இருக்காராடி?” என்று பத்மா கேட்க, “முதல்ல எங்களுக்குள் சிலதை பேசிக்கறோம். பிறகு பேரண்ட்ஸ் உங்களோட டிஸ்கஷன் பண்ணறேன். முதல்லயே சொல்லிடாதிங்கம்மா.” என்று கூறவும், “வேதாந்த் எப்படி?” என்று பத்மா கேட்க வெட்கம் கொண்ட சாக்ஷியோ “நைஸ் மேன் அம்மா. எனக்கு பிடிச்சிருக்கு. அப்பா அக்சப்ட் பண்ணுவாரா?” என்று கேட்டாள்.

“உங்கப்பா அம்ரிஷையே கட்டிக்க விரும்பினாலும் ஒருவிதமா சம்மதிக்கற ஐடியால இருந்தார். நான் தான் தடையா பேசினேன்.
அதனால வேதாந்த்தை மனதார ஏத்துப்பார்.” என்று வாக்குதந்தார் பத்மா.

பத்மா மாலை நேரம் கணவருக்கு போன் போட்டு வேதாந்த் பற்றி உரைத்திடவும் ஸ்வீட் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வந்தார். மிருதுளாவுக்கு பழைய மகிழ்ச்சி கூடியது. சில நாட்களாக பத்மா ஆன்ட்டி, குரு அங்கிள் இருவரும் நார்மலாகவே இல்லை. இப்பொழுது தான் பழைய முகமாக பார்க்கவும் தன்னிலை மறந்து அதே குடும்பத்து பெண்ணாக மாறினாள்.

மிருதுளாவை பொறுத்தவரை தற்போது கிடைத்த வேலை, சம்பளம், புது மனிதர்கள் எல்லாம் தினசரி பார்த்து வெளியுலகம் காணவும் வசதியானது.

வேதாந்த் காதல் இருகை ஓசையாக ஒலித்து வெற்றி விளிம்பில் இருக்கவும், அதனை நண்பர்களிடம் தெரிவித்தான்.

ஆதேஷோ, “பார்டா நான் தான் நம்ம லிஸ்ட்ல முதல்ல காதலிச்சதை ஒப்புக்கொண்டது. ஏன் சஹானாவிடமும் முதல்ல சொன்னது நான் தான். எனக்கு முன்ன நீ கல்யாணம் பண்ணிடுவ போலயே” என்று கேலியில் இறங்கினான்.

அம்ரிஷோ “சாரிடா என்னால தான் சாக்ஷி அப்பா அம்மா கன்பியூஸ் ஆகிட்டாங்க.” என்று கூறவும் வேதாந்த் முறைக்க, “அப்பா அம்மாவிடம் சொல்லிட்டியா?” என்று கேட்டான் அம்ரிஷ்.

“நிஷாந்த் அண்ணாவுக்கு பொண்ணு பார்க்கறாங்கடா. அவரோடது முடிவடையவும் சாக்ஷி வீட்ல பேசலாம்னு சொல்லிட்டாங்க. இப்ப இரண்டு வீட்லயும் போன்ல மட்டும் பேசிக்கிட்டாங்க. கூடிய விரைவில் நேர்ல சந்திக்கலாம்னு சொல்லிட்டு இருக்காங்க.” என்று தன் பக்க நிலவரத்தை எடுத்துரைத்தான்.

“ஏ வாட் அபௌவுட் தமிழ்?” என்று அம்ரிஷ் கேட்க, “அவன் முன்ன இராணுவ படையில டிரெயினரா இருந்தான். இப்ப எல்லை பாதுகாப்பு படைக்கு மாத்தியிருக்காங்கடா. எப்படியும் அவனா தொடர்பு கொண்டா தான் ஆச்சு. போன் பேசி மாசக்கணக்காச்சு.
ஏன்டா நமக்கே இப்படி இருக்கே. அந்த பொண்ணு மென்பனி எப்படி பீல் பண்ணறா? பாவம்டா அவன் இங்க வந்திடலாம்ல?” என்று ஆதேஷ் கூறினான்.

“அவனுக்கு பிடிச்சி சேர்ந்தான். நான் எப்படி நரம்பியல் டாக்டராக முடிவெடுத்தேனோ அவன் அப்பயிருந்தே ஆர்மி டிரஸ் மேல ஒரு க்ரஷ்ல சுத்தினவன்டா. அந்த தேசபற்று கொண்ட மோகம் தீரவே தீராது.

ஆமா அவனை கேட்கற, என்னை கேட்கற. உன்னோட கியூட் காட்ஸில்லா எந்த லெவல்ல இருக்கு” என்று கேட்டான் வேதாந்த்.

“அவளுக்கென்ன பழகி பார்த்து சொல்லறேன்னு அனுப்பினா. ஸ்மூத்தான பிரெண்ட்லி சாட் போகுது. அவ சிஸ்டருக்கு பிரகனென்சிக்காக அவங்க அப்பா அம்மா அமெரிக்கா போயிருக்காங்க. அவங்க வரும் வரை தனியா தான் இருப்பா.” என்றான்.

அம்ரிஷோ “மிருதுளா மட்டும் ஏன்டா அப்படியிருக்கா? ரொம்ப பெயின்ஃபுல்லா இருக்கு. ஓகே சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல. இன்னிக்கு மட்டும் 131 லவ் லெட்டர்ஸ். சம்பத் ஒவ்வொன்னா படிச்சி காட்டறான். என்னோட அபிஸியல் அக்கவுண்ட்ல எத்தனை கேர்ள்ஸ் உருகி உருகி பேசறாங்க தெரியுமா? ஆனா அவ ஒரு பார்வை பார்க்கறதில்லை.” என்றதும் வேதாந்த் ஆதேஷ் தோளை தீண்டினார்கள்.

அம்ரிஷாகவே “இட்ஸ் ஓகேடா. லைப்ல பார்ன் வித் கோல்ட் ஸ்பூனா வளர்ந்துட்டேன். இப்ப கஷ்டத்தை அனுபவிக்கறேன். உங்க மூன்று பேரோட லவ் ஜெயித்தா என் லவ்வை ஜெயிக்க வைக்க மாட்டிங்க?” என்று கேட்டு புன்னகைத்தான்.

வேதாந்த் அவனை கட்டி தழுவி, “மிருதுளாவே ஓகே சொல்வாடா. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்” என்று கூறினான்.

அதன் பின் நண்பர்கள் அவரவர் பணியில் சிறப்பித்திருந்தனர்.

சாக்ஷி நடனப்பள்ளிக்கு தற்காலிகமாக ஒரு மாதம் உடல்நிலை காரணத்தை கூறி விடுமுறையை அளித்திவிட்டு வீட்டில் ஓய்வெடுத்திருந்தாள்.

அதன் பின் நாட்கள் சில நகர, வேதாந்த் அம்மா ராதிகா அப்பா விக்னேஷ்வரன் இருவரும் சாக்ஷியை காண வந்தனர். அப்பொழுது தான் ஓரளவு பழையபடி மாற முயன்ற தருணம்.

வேதாந்த் அண்ணன் நிஷாந்த் திருமண பத்திரிக்கையை வைக்க வந்தார்கள்.

குருபிரசாத்-விக்னேஷ்வரன், ராதிகா-பத்மாவும் ஓரளவு சுமூகமாக பேசி பழகினார்கள். நிஷாந்த் திருமணம் முடிந்து கொஞ்ச காலம் போகவும் வேதாந்த் திருமண விஷயம் பேசவருவதாக சென்றார்கள்.

மென்பனி புதுக்கதையை எழுதி முடித்து அதனை முழுத்தொகுப்பாய் பதிவிட்டிருந்தாள். தமிழ் படித்து பதிலளிப்பானென்று ஆர்வமாய், அவன் கருத்திற்காக தவமிருந்தாள்.

ஏனென்றால் அந்த கதையின் நாயகன் ஒரு ஆர்மி ஆபிஸர். உறவுகளற்ற அவன் வாழ்வில் நண்பர்களோடு, விடுமுறைக்கு கொடைக்கானல் சென்றிட, அங்கே சந்தித்த பெண்ணிடம் நட்புணர்வு ஏற்பட்டு தான் வாழ்வில் கிடைக்கப்பெறாத உறவுகளை அவளிடம் காண ஆரம்பிக்கின்றான்.
ஒரு கட்டத்தில் விரும்புகின்றான். விடுமுறை முடிந்து அவன் இராணுவபணிக்கே சென்றதும் தான் சந்தித்த பெண்ணுக்கு தினமும் போன் மூலம் பேசி மகிழ்கின்றான்.

நன்றாக நட்புணர்வு தோன்றவும், ஏற்கனவே மனம் பறிக்கொடுத்து பழகிய நாயகி அவனின் பிரிவில் மேன்மெலும் அவளும் காதலில் கட்டுண்டுள்ளதை அறிகின்றாள்.

ஒருத்தருக்கொருத்தர் காதலை சொல்லாமல் கடத்துகின்றார்கள். நாயகன் அவனாக காதலை உரைக்க போவதில்லையென்று புரிய துவங்கியது. அது அவன் பணிக்காரணமாக எங்கே நாயகி வாழ்வில் புயலை ஏற்படுத்திடுமோயென அஞ்சி, நாயகியாக காதலை உரைக்கும் தருணத்திற்கு காத்திருக்கின்றான்.

அது நாயகிக்கு புரிந்தப்பின் அவனுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட கதை வாயிலாகவே காதலை உரைத்து அவன் வருகைக்காக காத்திருக்கின்றாள்.

அவன் எப்பொழுது வருவான் காதலை ஏற்பானா? கைப்பிடிப்பானா? என்ற முடிவை வாசகரின் கற்பனைக்கு விருந்து கொடுத்து முடித்திருந்தாள்.

பெரும்பாலும் வாசித்த வாசகர்கள் நாயகன் வந்து நாயகி கரம் பிடிப்பான் என்று பாஸிடிவாக தான் உரைத்திருந்தனர்.

மென்பனியோ தமிழ் தன் கதையை படித்து, தன் காதலை ஏற்று, தன் கரம் பிடித்து மணக்கும் மனக்கோட்டையை கட்டியிருந்தாள்.

தமிழ் இன்னமும் வரவில்லை. ஆறு மாதங்களாக முடிக்கப் பெற்ற கதையில் அவன் வாசிக்கவில்லை.

மென்பனி தினமும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சஹானா மட்டும் ஆதேஷிடம் பேசியபடி பொழுதை கழித்தாள். அன்று வேறொரு பள்ளியில் இன்டர்நேஷனல் போட்டிக்கு எல்லா துறையிலிருந்தும் போட்டிகள் நடைப்பெற்றது. டான்ஸ் பாட்டு படிப்பு ஓவியம், ஜென்ரல் நாலேஜ், விளையாட்டு போட்டியிலும் ஓட்டபந்தயம், கோ-கோ, புட்பால் என்று ஒன்று விடாமல் அதனது தனிதனியாக பிரிவாக நடந்தது.

சஹானா பணிச்செய்யும் பள்ளியிலும் பாட்டு போட்டியில் இருந்த, மாணவி ஒருத்தி மூன்றாம் இடத்தில் இருக்க, அவள் பரிசு வாங்கியப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு சஹானாவுடையதாக இருந்தது.

அதனால் காத்திருக்க, மாலை சிற்றுண்டி நேரத்தில் கேன்டீன் சென்றாள்.

அங்கே ஸ்போர்ட்ஸ் டிரஸ் அணிந்து, வேர்த்து வழிந்து ஆதேஷ் அவனது ஸ்டூடண்டிற்கு பப்ஸ் கூல்டிரிங்க்ஸ் வாங்கி தந்து, ‘இன்னும் ஒன் ஹவர் கரெக்டா எய்ம் பண்ணு.’ என்று அதட்டிக் கொண்டிருந்தான்.

“ஹாய்” என்று கூப்பிட, “ஹல்லோ” என்று சம்பிரதாயத்திற்கு கூறி திரும்பிக் கொண்டவன், அதன்பின் சஹானாவை கண்டதும் வேகமாய் தலையை திருப்பினான்.

“ஏய் இங்க என்ன பண்ணற சஹானா?” என்று மகிழ்ந்தான்.

“என் ஸ்டூடண்ட் பாட்டு போட்டில தேர்ட் பிரைஸ் வாங்கறா. சோ மாரல் சப்போர்டுக்காக இருக்கேன்.
நீங்க” என்று பறக்கும் சிகையை காதுமடலுக்கு பின்னால் தள்ளி பதில் தந்தாள்.

“நானும் என் ஸ்டூடண்ட் பிரைஸ் வாங்க தான் வெயிட் பண்ணறேன். ஆல்ரெடி போட்டில பங்கெடுத்து பார்டிசிபேட் பண்ணிட்டாங்க. லாஸ்ட் ஸ்டேஜ்ல இருக்கறவங்களுக்கு மட்டும் அகைன் பிராக்டிஸ் மட்டும் டிஸ்பிளே செய்து, பிரைஸ் அனவுன்ஸ்மெண்ட் நடக்கும். இன்னும் ஒன்ஹவர் இருக்கு.” என்று கூறினான்.

“ஓ.” என்று ஆதேஷை கவனிக்க, அவனோ சின்சியராக மாணவர்களை பார்த்து “சாப்பிட்டதும் அவங்கவங்க பிளேஸ்ல போய் சேருங்க. எங்கயும் நின்று அரட்டை அடிக்கக்கூடாது. பாத்ரூம் போய் ரெப்பிரஷ் ஆகணும்னு பீல் பண்ணினா பியூ மினிட்ஸ் டைம் எடுத்துக்கோங்க.” என்று பொறுப்பானவனாக கட்டளையிட்டு வழிநடத்த பார்க்க மிகவும் அழகாக இருந்தது.

சஹானா கண்ணிற்கு முதல் சந்திப்பில் முட்டி மோதி சண்டையிட்டு, இதுவரை விளையாட்டுதனமாக சுத்தியவனை இப்படி காண்பது மேன்லியாக தோன்றியது.

“சஹானா டின்னர்?” என்று கேட்க, அவளோ இதுவரை அவனை கண்ணுற்று கிடந்ததாள்? “ஆஹ்?” என்றாள்.

“இப்படி காம்படேஷன் நடக்கற இடத்துல நீயும் நானும் ‘ஙே’னு பார்த்தா பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க. சோ டின்னருக்கு சேர்ந்து வெளியே போகலாமானு கேட்டேன்.” என்று மொழிந்தான்.

“வீட்ல ஆல்ரெடி சப்பாத்தி மாவு பிசைந்து உருட்டி எல்லாம் வச்சிட்டேன். மார்னிங் உருளைக்கிழங்கு மசாலா செய்து ப்ரிட்ஜ்ல இருக்கு” என்று கூறியவளை கடித்திடும் ஆசைப்பிறந்தது.

“ஓ… வெரிகுட். அப்ப வீட்ல போய் சாப்பிடலாம். வீட்டுக்கு வரலாமா?” என்று விளையாட்டுக்கு கேட்டு வைத்தான்.

சஹானாவோ முட்டை கண்ணில் உருட்டி முடித்து “யா. சூர் வரலாமே” என்று மழுப்பினாள்.

ஆதேஷ் பளீரிட்ட புன்னகையில், “சும்மா விளையாடினேன். யூ கேரியான்” என்று நகர்ந்தான்.

அவன் சொன்னப்பிறகு அவ்விடம் விட்டு பறந்துவிட்டாள். பிரைஸ் அனவுன்ஸ் செய்யும் இடத்தில் தனது மாணவி மெடலும், கிப்ட் கப்பும் வாங்கி சென்றிட, அதன் பிறகும் ஆதேஷ் மாணவ மாணவிகள் வெற்றி கப்பை வாங்கும் போதும் அமர்ந்து கைதட்டலானாள்.
ஆதேஷ் அவளை கவனித்து சிநேகமாக புன்னகைத்தான்.

மேற்கொண்டு மூன்று மணிநேரம் ஆனப்பின் மாணவ மாணவிகளை வழியனுப்பி வைத்து, ஆதேஷ் சஹானா பக்கம் நடந்து வந்தான்.

“உன் ஸ்டூடண்ட் இன்னுமா பிரைஸ் வாங்கறாங்க?” என்று ஷூவை களைந்து தட்டி மணலை உதறி மீண்டும் அணிய துவங்கினான்.

“அவ பிரைஸ் வாங்கிட்டு அப்பவே போயிட்டா. உங்க ஸ்டூடண்டோட பெர்பாமன்ஸ் அண்ட் கிப்ட் வாங்கியதை பார்த்தேன்.” என்று கூறவும், “எனக்காக இருந்தியா?” என்று கேட்டு பனிமனிதனாய் நின்றான்.

“ம்ம்” என்றதும் ஆதேஷ் இதயத்தில் பனிச்சாரலாய் இதயம் குளிர்ந்தது.

அங்கிருந்த டேப் வாட்டரால் முகமலம்பியவன், “வீட்டுக்கு போகலை?” என்று கேட்டான்.

“போய் தனியா இருக்கணும். போரடிக்கு அதான் ஊர்சுத்திட்டு பொறுமையா போறேன்” என்றதும் ஆதேஷ் ‘அதானே’ என்பதாக பார்த்து வைத்தான்.

“பூரி உருளைகிழங்கு மசாலா டின்னர் ஓகேனா வீட்டுக்கு வாங்களேன்.” என்று அழைக்க, “விளையாடதே சஹானா, இருக்கற அசதிக்கு வந்துடுவேன். செம பசி.” என்று கூறவும், “இங்கிருந்து நாலு தெரு என் வீடு?” என்றதும் தான் நினைவு வந்தவன், “அட ஆமால அதான் பூவாசமா வீசுச்சு.” என்று ஐஸ்மழையை பொழிந்தான்.

அதன் பின் அவனை சஹானா தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *