அத்தியாயம்-10
வீரராகவனுக்கு மகன் கலங்கி கண்ணீரை உகுத்திடாமல் மனதோடு போராடுவதை காண தவித்தார்.
“யாரை விரும்பற?” என்று கேட்டார்.
தலையணையை மெத்தையில் வைத்து, மூக்குறிந்து, “நைனிகா அப்பா. நைனிகாவை விரும்பறேன்.” என்றான்.
வீரராகவனுக்கு ஏதோ ஒரு சாந்தம். மனதில் ஆட்க்கொள்ள, “நைனிகாவா? நம்ம நைனிகாவா?” என்று உறுதிப்படுத்த கேட்டார்.
அதற்குள் தந்தையும் மகனும் பேசுவது பக்கத்து அறையில் கேட்டிருக்க, அரையுறக்கத்தில் வந்து கண்ணை கசக்கி நின்றார் ஷோபனா.
‘நைனிகா’ என்ற வார்த்தையில் கண்கள் விரிந்து உதடு விரிந்தது ஷோபனாவுக்கு.
“என்ன சொல்லற நிரஞ்சன். நைனிகாவை இப்ப தானே பார்த்திருக்க, பிறகு எப்படி?” என்று வீரராகவன் கேட்டு முடிக்க, “எப்படி வந்தா என்ன? அவன் நம்ம வீட்டு பிள்ளையை விரும்பியிருக்கான்.” என்று ஷோபனா மகிழ்ந்து கூறினார்.
வீரராகவனோ, “நைனிகா மேல அபெக்ஷனா நிரஞ்சன்.?” என்றார்.
“அபெக்ஷனுக்கும் காதலுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் அப்பா.
இத்தனை நாள் நிஷாவோட என் பெயரை கிசுகிசுத்து மத்தவங்க தான் பேசினாங்க. நான் அவளை விரும்பற உணர்வு எனக்குள்ள ஏற்படலை.
கோவாவுக்கு ட்ரிப் போயிருந்தா நிச்சயமா நிஷா அங்க எனக்கு பிரப்போஸ் செய்திருப்பா. ஆனா அம்மா இறந்து நான் மணப்பாறை போயிட்டேன்.
நைனிகாவை முதல் முறை பார்த்தப்ப, என்னோட அம்மாவுக்காக அழறான்னு தான் கவனிச்சேன். அவ அழுகை என்னையும் பாதிச்சிடுச்சு.
கொள்ளி போட்டு வந்துடலாம்னு இருந்த என் எண்ணத்தை, என்னை அறியாம மாத்திட்டு அங்க பதினாறு நாள் தங்க வச்சிட்டா.
அதெல்லாம் ஜஸ்ட் பதினாறு நாள் புது அனுபவம். மாமன் மகளை கண் குளிர சைட் அடிப்போம்னு இருந்தேன்.
நைனிகாவிடம் மாதவன் அத்துமீறும் போது தடுத்துட்டேன். அதுக்கு பிறகு அவளை அங்க இருக்க கூடாது என் கூட கூட்டிட்டு வந்து நல்ல லைப்பை அவளுக்கு தரணும்னு நினைச்சேன். ஆனா அதெல்லாம் அம்மாவுக்கு பிறகு நான் பார்த்துக்கற பொறுப்புனு நினைச்சேன்.
நைனிகா என்னோட வருவதை ஜோதி சித்தி விரும்பலை. அவங்க மாதவனுக்கு நைனிகாவை இரண்டாதாரமா கட்டி வைக்க நினைச்சாங்க.
வயசு பொண்ணான நைனிகா என் கூட வரக்கூடாதுனு சொல்லவும்… மாதவன் நைனிகாவை தாலி கட்டற ஆர்வமா இருப்பதும் எனக்குள்ள தப்பா தோணுச்சு.
அதனால் அம்மாவோட தாலி எடுத்து, நைனிகா கழுத்துல அணிவிச்சேன் அப்பா.
அங்க சித்தப்பா-சித்தி, கதிர், அத்தை மாமா, மாதவன், ராஜப்பன் முன்ன நைனிகா கழுத்துல தாலி அணிவிதச்சேன்.” என்று உடைந்து போனதாக பேசினான்.
ஷோபனா மகனின் தோளை தீண்டி, “என்ன சொல்லற? நைனிகா கழுத்துல தாலி அணிவிச்சியா?” என்று கேட்டார்.
ஆமா அம்மா. அந்த நேரம் அவ கழுத்துல அணிவிச்சேன். ஆனா கொஞ்ச தூரம் வந்ததும் காரை நிறுத்தி அவளை அங்கேயிருந்து என்கூட வருவதற்கு தான் அப்படி தாலி அணிவிச்சேன். மத்தபடி அது கல்யாணம் இல்லைன்னு சொல்லிட்டேன். தாலியும் கழட்ட சென்னேன். நைனிகா எதுவும் பேசாம கழட்டிட்டிட்டா” என்று கூறவும் வீரராகவனோ கோபமாய் மாறி நின்றார்.
“என்ன நிரஞ்சன் சாதாரணமா சொல்லற? இதெல்லாம் எவ்வளோ பெரிய விஷயம். தாலி உங்களுக்கு ஜஸ்ட் செயினா நினைச்சிட்டிங்களா? நீ கழட்டி கொடுன்னு சொன்னதும் அவ எப்படி கழட்டி கொடுத்தா.
எப்படி உங்களால் இத்தனை நாள் இயல்பா பேசி பழக முடிந்தது” என்று கண்டிக்கும் விதமாக கேட்டார்.
“பதினாறு நாள்ல என் மனசுல உண்மையான காதலா இருக்காதுன்னு நினைச்சேன் அப்பா. சென்னை வந்ததும் எல்லாம் மாறும்னு நினைச்சி தான் தாலியை கழட்ட சொன்னேன். ஆனா அவ என் இதயத்துல அவ மட்டும் தான்னு பதிய வச்சதே இப்ப தான் புரியுது.
நான் மணப்பாறையிலிருந்து வந்து ஆபிஸ்ல நிஷாவை சந்திச்சப்பிறகு, ஒவ்வொரு விஷயமும், நிஷா என்னை இன்ட்ரஸ்ட்டோட பார்க்கறப்ப எல்லாம். மனசுக்குள்ள நைனிகா வந்து வந்து போனாப்பா.
நிஷா லவ் பிரப்போஸ் பண்ணினப்ப, யோசிக்காம நானும் லவ் பண்ணுறேன் நிஷா. ஆனா உன்னையில்லை. ஐ அம் சாரின்னு சொல்லிட்டேன்.
அன்னையிலருந்து இப்ப வரை நைனிகாவிடம் காதலை சொல்ல துடிக்கறேன். என்னால முடியலைப்பா.
இதுல அவ ஹாஸ்டல்ல போறா. நான்… நான்… அவளை மறந்து வாழணுமா அப்பா” என்றவன் பேச்சில் இரு துளி நீர் கன்னத்தில் இறங்கியது.
வீரராகவனுக்கு இலக்கியாவை பிரிந்த நொடி இப்படி தான் இருந்தது.
என்ன தான் ஷோபனாவோடு நிறைவாக வாழ பழகினாலும், தன் முதல் திருமணம், முதல் மனைவி, முதல் காதல் என்ற வாசம் மறக்குமா?!
அந்த வலி மகன் அனுபவிக்க வேண்டாமென்று முடிவெடுத்தவராக, “நீயேன்டா மருமகளை போக சொல்லணும். வீட்டுக்கு வருவா இல்லையா முடிவா அவளிடம் காதலை சொல்லு. என்ன தான் நீ தாலி கட்டினாலும், நாங்க பார்க்கலை. அடுத்து மண்டபம் பிடிச்சி பத்திரிக்கை அடிச்சி, கல்யாணம் செய்து வைக்கறோம். என்ன ஷோபனா உன் விருப்பபடி உன் அண்ணன் மகளே மருமகளா வரப்போறா” என்று கேலி செய்தார்.
ஷோபனாவுமே மகன் தலை வருடிவிட்டு, “உன் காதலை சொல்லு. அவ மறுத்தா நான் அவளிடம் என் பையனுக்காக பேசறேன்.” என்று கூறினார்.
மனதை அழுத்திய பாரங்கள் இலவம் பஞ்சாக மாறியது நிரஞ்சனுக்கு. எப்படியும் நைனிகாவை கரம் பற்றும் முடிவில் தெளிந்தான். திடம் பெற்றவனாக நைனிகா வருகைக்கு காத்திருந்தான்.
நைனிகா தங்குவதற்காக கொடுக்கப்பட்ட அறையில் அவள் துணிகள் காயப்போட்ட துப்பட்டாவில் வாசம் பிடிந்தவனாக உலாத்தினான்.
நைனிகா… அறைக்குள்ளே வந்ததும் அவளை அணைத்து தூக்கி சுத்தி ஐ லவ் யூ சொல்வோமா?’ என்று அவன் மனம் மெத்தையில் நீட்டி நிமிர்ந்து சிந்தித்தது.
மனசாட்சியோ, ‘சட்டுனு கட்டி பிடிச்சி தூக்கி சுத்தினா மாதவன் செய்தது போல மாறிடும்.’ என்று எடுத்துரைக்கவும் தலையை உலுக்கினான்.
‘முதல்ல அவ கண்ணை பார்த்து காதலிப்பதை செல்லணும். அப்பறம் அவளிடம் விலாவரியா பேசி ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம்னு சொல்லி, கல்யாணத்துக்கு முறையா ஏற்பாடு செய்யணும்.’ என்று கனவுகள் மின்ன கட்டிலில் திரும்பி படுக்க அவன் கைகள் பட்டு அங்கிருந்து பை கீழே விழுந்தது. அச்சத்தம் கேட்டு அதை எடுக்க சென்றவன் கைகள் காற்றில் நின்றது.
தரையில் நிரஞ்சன் நைனிகாவுக்கு அணிவித்த பொன் தாலி கிடந்தது. மெதுவாக அதை எடுத்து பார்த்தான்.
பக்கத்தில் அவன் அன்னை எழுதிய டைரிகள் இருந்தது.
தந்தை தான் ஆயிரம் முறை சொன்னாரே, நிரஞ்சன் பிறந்த போது பார்த்துக்கொள்ள வந்த ஷோபனா மீது, ஏர்கலப்பை விழுந்து அம்மாவாகும் தகுதியை ஷோபனா இழந்ததும், அதன்பின் தான் இலக்கியா அம்மா, அப்பாவையும் ஷோபனா அம்மாவையும் இணைத்து பேசி காதலர்களாக பழகுவதாக பழிப்போட்டு, விவாகரத்து வாங்கினார்கள். விவாகரத்து கூட தந்தையிடம் கையெழுத்து போடாமல் போனால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாராம்.
ஷோபனா நலனுக்காக இலக்கியா அம்மா வாழ்வை கூட புறம் தள்ளிய கதை அவன் அறிவான். தந்தைக்கு இலக்கியா அன்னை அவரை பற்றி யோசிக்காததே கோபம் உண்டாகி இங்கு ஷோபனா அம்மாவை அழைத்து வந்ததை அறிவித்திருந்தாரே. அதனால் பழைய டைரி எல்லாம் அந்த பையிலேயே வைத்தான். புது டைரி அவன் கண்ணில்படவும், பிரித்தான்.
அன்னையின் எழுத்து இல்லை. நைனிகா பெயர் போட்டு அவளது ரத்தவகை முதல் கொண்டு முதல் பக்கத்தில் விருப்பங்களை எழுதியிருக்க, இது தன்னவளின் டைரி என்று புரிய படிக்க ஆரம்பித்தான்.
அன்னை இறந்து இரண்டாம் நாள் எழுதியிருந்தாள்.
‘எனக்கு இலக்கியா அத்தை மாதிரி டைரி எழுதற பழக்கமில்லை. ஓல்ட் பேஷன். அதோட அத்தை இருக்கறப்ப அவங்களிடம் தான் எல்லாமே ஷேர் பண்ணுவேன். இப்ப அவங்க உயிரோட இல்லை. யாரிடமும் பேசி பழக எனக்கு விருப்பமில்லை.
இப்ப வீட்டுக்கு ஆனந்தி அத்தை முதல் ஆளா வந்துட்டாங்க. மாதவன் அத்தான் வேற என்னை பார்க்குற பார்வையே சரியில்லை. ரொம்ப பயமாயிருக்கு. இளவரசன் சித்தப்பா கலையரசி சித்தி வந்துட்டு இருப்பதா சொல்லவும் தான் மனசுக்கு லேசா தெம்பு வந்துச்சு.
ராஜப்பன் மாமா வேற இலக்கியா அத்தையோட முன்னாள் புருஷனுக்கு சொல்லலாமா வேண்டாமான்னு புலம்பிட்டு இருக்கார். யாருக்கு சொன்னா என்ன? யார் வந்தா என்ன? இனி எங்க இலக்கியா அத்தை உயிரோட வரப்போவதில்லை. இறந்தப்பிறகு வந்து இரண்டு சொட்டு கண்ணீர் விடுவாங்களோ? இப்படி நினைச்சிட்டு விட்டுட்டேன். அத்தைக்கு ஒரு மகளாக நான் வாய்கரிசி போடணும்னு நினைச்சேன். ஆளாளுக்கு அண்ணன் பொண்ணு முறை செய்ய கூடாதுன்னு ஒதுக்கவும் ரொம்ப துடிச்சிட்டேன். அப்ப தான் என்ன செய்ய தோணுதோ அந்த பொண்ணு செய்யட்டும்னு ஒரு குரல். இலக்கியா அத்தையோட பையன் நிரஞ்சன் குரல்.
ஏன் அத்தான் கொஞ்ச நாள் முன்ன அத்தை உயிரோட இருந்தப்ப நேர்ல வந்து பார்த்திருக்கலாமேன்னு அவர் கொள்ளி வச்சிட போனப்ப திட்ட தோணுச்சு. ஆனாலும் என்னை ஒரு மகளாக செய்யற காரியத்தை செய்ய வச்சதுக்கு அவருக்கு மனசுக்குள்ள நன்றி சொன்னேன்.
அத்தை படுத்தபடுக்கையா இருந்து இறந்ததால் அவங்க இறப்பை முன்னவே ஓரளவு மனசுல ஏற்றுக்கொண்டேன். அதன் காரணமோ என்னவோ வீட்டுல தங்கின சித்தப்பா சித்தி, ஜோதி அத்தை, பாண்டியன் மாமா, கதிர் தம்பி, மாதவன் அத்தான் அதோட நிரஞ்சன் அத்தான் இவங்களுக்கு சாப்பாடும் காபியும் செய்து கொடுக்க தயாரானேன். இலக்கியா அத்தைக்கு அவங்க பையன் அவங்க வீட்டுக்கு வந்தது தெரிந்தா சந்தோஷப்படுவாங்க. அவங்க இருந்து எப்படி கவனிச்சிப்பாங்களோ அந்தளவு நான் கவனிக்கணும்.’
நிரஞ்சன் அவள் எழுதிய எழுத்தில் 'நிரஞ்சன் அத்தான்' என்ற வரியை தடவினான். நேர்ல ஒரு வார்த்தை அப்படி கூப்பிட்டாளா? நோட்ல எழுதிவச்சியிருக்கா என்று மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான்.
இந்த ஜோதிஅத்தை மாதவன் அத்தானுக்கு இரண்டாதாரமா கட்டிக்கொடுக்க நினைக்கறாங்க. அவங்க மருமகளை என்ன செய்வாங்களாம். சேச்சே கனவுல கூட இந்த டாபிக் வேண்டாம். கெட்ட கனவு. நான் எல்லாம் மாதவனை கட்டிக்க மாட்டேன். இதுல சித்தி வேலைக்காரியா வச்சிக்க கூப்பிட்டா கூட போயிடுவேன்.’ என்று எழுதியிருக்க நிரஞ்சன் துவண்டான்.
தன்னை பற்றி ஏதாவது எழுதியிருப்பாளா? என்ற ஆர்வத்தால் மேற்கொண்டு வாசிக்க ஆரம்பித்தான்.
இன்னிக்கு பூரான் கடிச்சிடுச்சு. பச் இலக்கியா அத்தை இருந்தா எப்படி துடிப்பாங்களோ அதே அளவுக்கு.. இல்லை அதை விட கொஞ்சமா அவங்க பையனா நிரஞ்சன் அத்தான் துடிச்சார். ராஜப்பன் மாமா நைட் இங்கேயே தங்கி என்னை பார்த்துக்கிட்டார். இவங்க இரண்டு பேரை தவிர மற்ற உறவுகள் யாரும் எட்டி கூட பார்க்கலை. அதெப்படி ஒரே வயிற்றில் பிறந்தவங்க வெவ்வேறு விதமா இருப்பாங்க. இலக்கியா அத்தையோட தங்கை தம்பின்னு சொன்னா நம்ப முடியலை. ஷோபனா அத்தை எப்படிப்பட்டாவங்க? ஆனா முன்ன கோபமிருந்தது. இப்ப அத்தையோட டைரி படிக்கவும் வீரராகவன் மாமா மேலயும், ஷோபனா அத்தை மேலயும் கோபம் குறைந்திடுச்சு.
இன்னிக்கு மாதவன் அத்தானால என் கற்பை இழக்க நேர்ந்திருக்கும். கடவுள் அவதாரமா நிரஞ்சன் அத்தான் வந்துட்டார். அதோட என்னை காப்பாற்றி ரூம்ல தூங்க போகற வரை பாதுகாப்பா இருந்தார். கூடுதலா அவர் இருந்த ரூம் கதவை திறந்து வச்சி என்னை பாதுகாத்தார்.
மூன்று நாளா நிரஞ்சன் அத்தான் கண்ணும் கருத்துமா என்னை கவனிச்சிக்கறார். ஐ மீன் மாதவன்அத்தான், ஜோதி அத்தை இவங்களை தவிர்க்கற விதமா அவர் வீட்ல நடமாட, அவங்க ரூம்ல அடைகாத்தாங்க. அவருக்கு நன்றி சொல்லணும். ஆனா சாப்பாடு காபி கொடுத்து அதை தவிர்த்து பேச முடியலை. இதுல ராஜப்பன் மாமா வேற அவனோட போய் சென்னையில தங்கும்மா. இங்க உன் உயிருக்கும், மானத்துக்கும் பாதுகாப்பு இல்லைன்னு சொல்றார். என்ன செய்ய தெரியலை. நீங்களே கேட்டு ஒரு வேலை தங்க ஹாஸ்டல் பார்த்து கொடுக்க சொல்லிட்டேன். அவர் நிரஞ்சன் அத்தானிடம் பேசறதா சொல்லிட்டார்.
நாளையோட இலக்கியா அத்தை இறந்து பதினாறாவது நாள். என்னால் தூங்க முடியலை.
இன்னிக்கு பிரச்சனையோட தான் எல்லாம் திட்டிட்டு போவாங்கன்னு நினைச்சேன். ஆனா நான் நினைச்சி பார்க்காத வேற விஷயம் நடந்தது. நிரஞ்சன் அத்தான் அத்தை போட்டோயிருந்த தாலியை எடுத்து என் கழுத்துல அணிவிச்சார். என்னை கல்யாணம் செய்து என்னை அவரோட கூட்டிட்டு போக முடிவெடுத்தார்.
எனக்கு இது எப்பேற்பட்ட அதிர்ச்சி தெரியுமா? ஆனா அதை விட பேரதிர்ச்சி தர்றேன்னு கார்ல கூட்டிட்டு போயிட்டு நிரஞ்சன் அத்தான் பேசினார்.
‘தாலியை கழட்டிடு. இது நீ என்னோட வர்றதுக்காக ஜோதி சித்தி எதுவும் சொல்லாம அனுப்ப கட்டியதுன்னு சொன்னார். தாலி என்ன பொம்மை பொருளா? இல்லை மத்த செயின் மாதிரியா? அவர் கேட்டதும் இல்லைங்க இதை நீங்க அணிவிச்சதிலயிருந்து உங்களை புருஷனா பார்க்கறேன்னு சொன்னா அபத்தமா இருக்காது. இருக்க இடம் கொடுத்தா மடத்தை பிடுங்கின கதையா இருக்கும். அவர் சொன்னதால அவர் அணிவித்த மாங்கல்யத்தை மனசுல வலியோட கழட்டினேன். அவர் மேல வந்த நேசத்தை எடுக்க முடியலை.
நான் அவரை விரும்பறேன். இது தாலி அணிவித்ததால வந்த செண்டிமெண்டா? இல்லை எனக்குன்னு இருந்த இலக்கியா அத்தை இப்ப இல்லை இப்ப உரிமையா வந்த இவரை மனசு நினைக்குதா? என்னனு தெரியலை. எதுனாலும் இங்க வீரராகவன் மாமா ஷோபனா அத்தையிடம் தாலி அணிவித்ததை சொல்லப் போறதில்லை.
அவருக்கு உதவனும்னு எண்ணமிருக்க அந்த உதவியை உரிமையா கேட்கற நிலையில் நான் இல்லை. ஒரு வேலை தங்க ஹாஸ்டல். இது தான் என்னை மாதிரி அனாதைக்கு போதுமானது.’ என்று முடித்திருக்க நிரஞ்சன் கண்கள் கலங்கியது.
~~~
‘அனாதை.’ எப்படி எழுத முடிந்தது இவளால? அத்தை மாமா சித்தி சித்தப்பா பெரிய அத்தை பெரிய மாமா எல்லாம் இருந்தும் அம்மா அப்பா இல்லான்னா அனாதையா?’ என்று வெதும்பினான்.
இன்று வரட்டும் எப்படியும் ஹாஸ்டலுக்கு அனுப்ப போவதில்லை’ என்ற முடிவோடு நைனிகாவின் வருகைக்கு தவமிருந்தான்.
-தொடரும்.
Lovely spr 👌👌👌💕💕💕💕💕💕
Interesting😍
மனமெனும் ஊஞ்சல்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 10)
நைனிகா நினைக்கிறதும் நியாயம் தானே..? நம்மளை ஒருத்தங்க உறவா நினைச்சாத் தானே அவங்களை நாமளும் உறவா நினைக்கத் தோணும்.
இல்லைன்னா உறவுகள் இருந்தும் அனாதையாத்தானே நினைக்கத் தோணும். அப்படி அனாதையா நினைச்சுத்தானே இருபதே நாள்ல வேலையை வாங்கி கொடுத்து வெளியே அனுப்ப முடிவெடுத்தான். முடிவெடுத்து செயல்படுத்தறச்ச இது தப்புன்னு தெரியலையா..?
என்ன தான் இருந்தாலும் நைனிகா நம்ம பெரிய மாமன் பொண்ணுன்னு தோணியிருக்கணும் தானே..?
ஆனா, இப்ப அவ மேல காதல் வந்ததாலத்தானே அனாதைன்னு எப்படி சொல்லலாம்னனு ஃபீல் பண்றான்..? பெரிய மாமன் பொண்ணுங்கிற நினைப்பு முதல்லயே இருந்திருக்கணும் தானே..? நிரஞ்சனுக்கு இப்பத்தான் புத்தியிலயே உறைச்சிருக்கு போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Iva morning feel panitu pona ipo varuvala ila hostel ivala poi join paniruvala
💛💛💛💛💛💛💛
Super sis nice epi 👍👌😍 Evanga ellarum avalukaga kaathutu erukanga Ava varuvaala Ella vera yedhavudhu prechanai nadakuma parpom 🧐🤔
Wow super Niranjan. Naini what will do now? Very intresting
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
Niranjan ku nainika love panrathu therinchiduthu