அத்தியாயம்-11
பஸ் கம்பியை பிடித்து தலைசாய்ந்த நைனிகா, இன்று ஹாஸ்டல் கிளம்பிட வேண்டும்.
நிரஞ்சன் அத்தானை ஆசை காதல் கணவராய் மனதில் நிறைத்து, வாழ்வது என்றாவது அவருக்கு தெரிந்துவிட்டால் அசிங்கமாகிவிடும். அதற்கு இப்பொழுதே சென்றுவிட்டால் தன் மீது நல்ல அபிப்ராயம் மட்டுமாவது மிஞ்சும் என்று ஆயிரத்தி எட்டாவது முறையாக எண்ணினாள்.
“ஏம்மா சிவப்பு சுடிதாரு… நீ கேட்ட ஸ்டாப்பிங்” என்று நடத்துனர் குரலில் நடப்பிற்கு வந்தாள்.
“தேங்க்ஸ் அண்ணா” என்று படிக்கட்டில் இறங்கி நிரஞ்சன் வீட்டுக்கு அடியெடுத்து வைத்தாள்.
வாசல் திறக்கும் நேரம் ”என்னங்க நைனிகா வந்துட்டா” என்று ஆனந்தப்பட, ”ஷோபனா சிரிச்சு பேசி உன் மகன் விரும்பறதை காட்டிக்காத. நைனிகா தங்கின ரூம்ல தான் பையன் இருக்கான். அவனா காதலை சொல்லட்டும்.” என்று கட்டுப்படுத்தி பேசினார்.
அவருக்குமே தன் மனைவி இலக்கியா வளர்த்த பிள்ளை நைனிகாவை மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க கசக்குமா?
இதுநாள் வரை ஷோபனாவை அடக்கியது மகனுக்கு வேறொரு பெண் மீது பிடிப்பு இருந்தால்… என்ற கோணத்தில் தான் தடுத்தார். இன்று நிரஞ்சனே மனம் திறந்து பேசியப்பின் நிஷா எல்லாம் வேண்டாம். நீ நைனிகாவிடம் காதலை சொல்லு’ என்று தானே ஏற்றிவிட்டு வந்திருந்தார்.
நைனிகா ஹாலில் நுழைய ஷோபனா உதடு லேசாக விரிந்ததை கவனித்தாள். எப்பொழுதும் கடுகடுவென இருந்த வீரராகவன் முகமோ இன்று மாற்றம் பெற்றிருக்க, ‘நான் ஹாஸ்டல் போறது இவர்களுக்கு சந்தோஷமான விஷயம்’ என்று வருந்தினாள்.
“பேக் பண்ணிட்டு 7 மணிக்கு கிளம்பணும் அத்தை. ஆட்டோ புக் பண்ணி போகணும். எனக்கு பொடியும் ஊறுகாய் மட்டும் செய்திங்களா அத்தை” என்று விசாரித்தாள்.
“உனக்காக இட்லி பொடி மாங்கா ஊறுகாய், தக்காளி தொக்கு பருப்பு பொடி எல்லாம் செய்துட்டேன்” என்றார்.
“காய்ந்த துணியை எடுத்து வைக்கறேன் அத்தை” என்று அறைக்குள் நுழைந்தாள்.
அறைக்குள் நிரஞ்சன் உபயோகப்படுத்தும் பெர்ஃப்யூம் வாசனை வீசியது.
மூக்கால் நுகர்ந்து திரும்ப, அங்கே மெத்தையில் சூடாக நிரஞ்சன் வீற்றிருந்தான்.
‘இவர் எதுக்கு இங்க இருக்கார்? அய்யோ கையில தாலி. இதை ஏன் வச்சியிருக்கன்னு கேட்பாரோ? ஆனா தங்கத்துல தாலின்னா தங்க விற்கிற விலைக்கு தூக்கியா போடுவாங்கன்னு கேட்டு மடக்கிடலாம்’ என்று நிம்மதி கொள்ளும் நேரம், இலக்கியாவின் டைரியாக மெத்தையில் கடைப் பரப்பியிருந்ததை கண்டாள். அதோடு நிரஞ்சனை பற்றி அவள் எழுதிய புது டைரி அவன் கையில் இறுக பற்றியிருந்தான்.
‘ஓ காட். அவரை நான் விரும்பறதை சொல்லாம போயிடணும்னு இருந்தேன். ஆனா அவருக்கு நான் அவரை விரும்பறது தெரிந்திருக்கு, இப்ப என்ன செய்ய?’ என்று தொண்டையில் எச்சியை கூட்டி விழுங்கி மெதுவாக வந்தாள்.
“ஹாஸ்டலுக்கு இன்னிக்கு கிளம்பிடுவேன். நான் இங்க இருந்தவரை உங்களுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருந்தா சாரி.” என்று பேசியவள், அந்த நோட்டை வாங்க முயல, தன் முதுக்குக்கு பின்னால் மறைத்தான்.
“ஏதோ.. டைரி எழுதறது ஓல்ட் ஃபேஷன் எழுதியிருக்க?” என்று கோபமான குரலில் கேட்டான் நிரஞ்சன்.
“அது தனியா இருந்ததால் கிறுக்குத்தனமா எழுதியது” என்றாள் நைனிகா.
“கிறுக்குத்தனமானா?” என்று ஒற்றைப் புருவத்தை தூக்கியவனாக கேட்டான்.
“பச்.. கொடுங்க எல்லாத்தையும் பேக் பண்ணணும்” என்று வந்தாள்.
“என் இதயத்தை துண்டு துண்டா வெட்டிட்டு எதை பேக் பண்ணப் போற?” என்று நெஞ்சு விம்மி பேசினான்.
நைனிகாவிற்கு அத்தை மாமா வந்து விடுவார்களோ என்ற பயத்துடன், ”ப்ளீஸ் ஏதோ புத்திக்கெட்டு எழுதிட்டேன். பெரிசுப்படுத்தாம கொடுங்க” என்று கண்ணீர்மல்க இறைஞ்சினாள்.
நிரஞ்சன் என்ன அவளை காதலிக்கின்றேன் என்றா கூறினான். இதயத்தை துண்டு துண்டாக வெட்டியதாக கூறினானே. தன் செய்கை அவனுக்கு அந்தளவு வருத்தமளிப்பதாக இவள் எடுத்துக்கொண்டாள்.
“பெரிதுப்படுத்தக் கூடாதா? கண்டிப்பா இதை சும்மா விடமாட்டேன். அப்பா அம்மாவிடம் சொல்லணும். ராஜப்பன் அங்கிளிடம் சொல்லணும். ஏன் ஜோதி சித்தி, பாண்டியன் மாமா, மாதவனுக்கு, இளவரசன் மாமா கலையரசி சித்தி, கதிருக்கு எல்லாருக்கும் சொல்லணும், சொல்வேன்.” என்றான்.
ஷோபனா அத்தைக்கும் வீரராகவன் மாமாவுக்கும் தெரிந்தால் அசிங்கமே. அதுவும் அத்தையாவது விட்டுவிடலாம். மாமா வீரராகவன் ஏற்கனவே தன்னிடம் ஒதுங்கி பழகுவதாக தெரிகின்றது. இதில் இப்பொழுது வரும்போது கூட ஹாஸ்டல் போவதால் சந்தோஷமாக முகத்தை வைத்திருந்தார். இத்தனை நாள் அவரிடம் புன்னகை முகம் இல்லை.
அப்படியிருக்க காதல் என்று பேத்தல் மொழியை கேட்டால் கேலியாக சிரிப்பார்.
ராஜப்பன் மாமாவுக்கு தெரிந்தால், ‘ஏன்மா தாலியை தான் மறந்துட்டு அவனோட போய் ஹால்டல் தங்கி, ஒரு வேலைன்னு இரு. இங்கிருந்து நல்லபடியா போன்னு அனுப்பினா, நிரஞ்சனையே விரும்பறதா சொல்லி கெட்ட பெயரை உருவாக்கிட்டியே?’ என்பாரோ.
அச்சத்தில் துப்பட்டாவை இறுக பற்றினாள். கண்கள் கலங்கி உதடு துடிக்க எந்நேரமென்றாலும் அவளது திடம் உடைந்து பலவீனமாகிவிடுவேன் என்று சொல்லாமல் சொல்லியது.
நிரஞ்சனோ அவளது தோற்றத்தில் துடித்தவனாக, “கண்டிப்பா எல்லாரிடமும் சொல்வேன். அதுவும் கல்யாண பத்திரிக்கையில் பெயரை போட்டு, பத்திரிக்கையில் நாலு பக்கமும் மஞ்சள் பூசி தாம்பூலத் தட்டுல வச்சி ‘நான் நைனிகாவை விரும்பறேன். அவளுமே என்னை விரும்பறா. என் கல்யாணத்துக்கு வந்து எங்களை ஆசிர்வதிங்கன்னு ஊரையே கூட்டி சொல்வேன்” என்று கூற, நைனிகா மெதுவாய் ஏறிட்டு அவன் வார்த்தையை உள்வாங்கி, அதிர்ச்சியாக பார்க்க, “லவ் யூ நைனிகா. ஐ லவ் யூ.” என்று அவளை கட்டிப்பிடித்திருந்தான்.
ஆண் ஒருவன் தன்னை அவன் உடலோடு கட்டி சேர்த்தணைக்க பயத்தில் கண்கள் மிரண்டது.
ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள், அவள் மிரட்சியை கொஞ்சம் கொஞ்சமாய் உடைத்தது.
நிரஞ்சன் பேச்சு கேலி செய்வதாக இல்லையே. அவன் வார்த்தை உதிர்த்து நொடி, கண்ணீரும் பொழிந்தானே. அந்த முகத்தில் உண்மைத்தன்மை கண்டாலே.
அவளை அணைத்தபடி, மணப்பாறைக்கு வந்தது முதல், இங்கு வந்தது வரை, நைனிகாவால் உண்டான மாற்றத்தை, சற்று முன் தன் தாய் தந்தையிடம் உரைத்தவையை மீண்டும் அவளிடம் உரைத்தான்.
அவளுக்கு ஆனந்த கண்ணீர் வழிந்திட, “நீ போறேன்னு சொன்னதும் என் உடம்புல உயிர் போற மாதிரி இருக்கு நைனிகா. என்னால் இந்த நாலு நாள் இதயம் வலிக்கறதை தாங்க முடியாலை. இன்னிக்கு மதியமே இங்க வந்துட்டேன். உன்னை ஹாஸ்டலுக்கு போக விடமாட்டேன்.
என் நைனிகா என் கூட தான் இருக்கணும்.” என்று அவளது கண்களை உற்று நோக்கி உரைத்தான்.
அழுததால் ஈரமாய் இருந்த இமைகள், இன்னமும் அச்சத்தில் இருப்பதை கவனித்தான்.
நொடியும் யோசிக்காமல் அவளது மலரிதழில் ஆழ்ந்தமுத்தங்களை விதைக்க ஆரம்பித்தான்.
முதலில் மிரண்ட நைனிகா, அவனது காதல் முத்தத்தில் கரைய துவங்கினாள்.
பத்து நிமிடத்தை தாண்டி விடுவித்தவன் மடமடவென டைரிகளை அவள் வைத்த பையில் போட்டு மூடினான்.
அதற்குள் நைனிகா சீரான மூச்சை சுவாசிக்க ஆரம்பித்தாள்.
“நைனிகா.. சாரி. நீ அழுததும் துடைக்க தான் நெருங்கினேன். ஆனா கிஸ் கொடுக்கணும்னு சட்டுனு மனசுல தோணுச்சு. கண்ட்ரோல் இல்லாம கிஸ் பண்ணிட்டேன். ரியலி சாரி” என்று அவள் கண்ணை கைக்குட்டையால் துடைத்தான்.
“முதல்லயே சொல்லியிருக்க கூடாதா? நான் தவிச்சியிருக்க மாட்டேன்.” என்று அவளை மெத்தையில் உட்கார வைத்தான்.
நிரஞ்சனின் தீண்டலும் புதிதான நேசமும் திக்குமுக்காட வைக்க, “இலக்கியா அத்தை உயிரோட இருந்தப்ப, ஒரு தடவை கூட நீங்க வீட்டுக்கு வந்து பார்த்ததில்லை. அவங்க இறப்புக்கு கூட கொள்ளி வச்சிட்டு கிளம்பறதா ராஜப்பன் மாமாவிடம் பேசியிருக்கிங்க. ஏதோ ராஜப்பன் மாமா சொல்லவும் தங்கினிங்க.
கடைசி நாள் தாலி கட்டறதுக்கு முன்ன வரை உங்க மேல அத்தை மகன் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. தாலி கட்டிய நொடியில் இருந்து கணவரா பார்க்க ஆரம்பிச்சேன்.
கார்ல கொஞ்ச தூரம் வந்தப்ப, கனவெல்லாம் கண்டேன். அத்தை இல்லாத இடத்துல இனி நிரஞ்சன் அத்தான் மட்டும் தான். இனி அன்புக்கு பஞ்சமேயிருக்காது. நானும் ஒரு குடும்பத்துல இணைஞ்சிட்டேன்னு. நீங்க விரும்பி தாலி அணிவிச்சதா நினைச்சேன்.
காரை நிறுத்திட்டு ‘தாலியை கழட்டிடு, தாலி கட்டியதால தான் அனுப்பினாங்க இல்லைன்னு ஜோதி சித்தி உன்னை என்னோட அனுப்பியிருக்க மாட்டாங்க’ன்னு சொல்லிட்டிங்க.
தாலி கழுத்துல ஏறின இரண்டு மணி நேரத்துல கழட்ட, என் மனசு எப்படி துடிச்சது தெரியுமா? மனசு நீங்க சொன்ன மாதிரி துண்டு துண்டா வெட்டி நெருப்புல வாட்டின மாதிரி இருந்தது.
மனசை தேற்றிட்டு இங்க வந்துட்டப் பிறகும் உங்களை பார்க்கறப்ப இந்த வீட்ல நிரந்தரமா இருக்க முடியாதாயென்ற எண்ணம் ஒவ்வொரு நொடியும் நினைச்சேன். ஆனா ஹாஸ்டல்ல இடம் பார்த்து நீங்க தானே அனுப்ப பார்த்திங்க” என்றாள்.
“ஏய்ய்… நீ தான் தினமும் எனக்கு ஹாஸ்டல் பாருங்கனு என்னிடம் கேட்டுட்டே இருந்த. இவளுக்கு நம்ம வீட்ல இருக்க பிடிக்கலையோனு தான் ஹாஸ்டல்ல இடம் பார்த்தது.
நீ மாதவன் மாதிரி என்னை நினைச்சி பயந்தியோன்னு பார்த்தேனே தவிர, எனக்கென்ன நான் விரும்ப ஆரம்பிச்சவளை அனுப்ப ஆசையா?
இப்ப சொல்லறேன். இனி நான் சாகறவரை என் கூட தான் இருக்கணும்” என்று கூறவும் அவனை தழுவியிருந்தாள்.
உதட்டில் குறுஞ்சிரிப்புடன், நைனிகாவை அணைத்துக் கொண்டான்.
“அப்பா அம்மாவிடம் பிளசிங் வாங்கலாம். ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.” என்று அழைத்தான்.
“அத்தை மாமாவுக்கு என்னை பிடிக்காது” என்று தயங்கினாள்.
“அம்மாவுக்கு உன்னை பார்த்ததிலிருந்து என்னையும் உன்னையும் கல்யாணம் பண்ணி வச்சா என்னனு அப்பாவிடம் நச்சரிச்சிட்டு இருந்திருக்காங்க. நான் நிஷாவை விரும்பறதா நினைச்சி அப்பா தான் இந்த பேச்சை எடுக்காத, என் மகன் யாரை விரும்பறானோ அவளை தான் கல்யாணம் செய்யணும். அவ தான் நம்ம மருமகள்னு சொன்னார்.
இப்ப நான் யாரை விரும்பறேன்?” என்று பதில் வினா தொடுத்தான்.
நைனிகாவோ, ”யாரந்த நிஷா?” என்றாள்.
நிரஞ்சன் நகைத்து, ‘ஆபிஸ் கொலிக். அதெப்படி தான் இந்த பொறாமை வந்துடுதோ. நிஷாகிட்ட நான் உன்னை விரும்பறதா சொல்லிட்டேன். ” என்று கூறி அன்னை தந்தையிடம் நைனிகா கைப்பிடித்து அழைத்து வந்தான்.
நைனிகா கண்டதும், ஷோபனா கட்டியணைத்து, ‘முதல் தடவை வீட்டுக்கு வந்தப்பவே, உன்னை மருமகளா பார்த்தேன். இப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று கூறினார்.
“ஏம்மா… நிரஞ்சன் தாலி கட்டியிருக்கான். ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா? மறைச்சிட்டியே. இலக்கியா தான் தாலிக்குண்டான மதிப்பு தெரியாம கழட்டினா. நீயும் கழட்டிட்டியே” என்று ஆதங்கப்பட்டார்.
“இலக்கியா அத்தை தாலியை மதிக்காம கழட்டலை மாமா. அதை கழுத்துலயே போட்டிருந்தா, நீங்க ஷோபனா அத்தையோட வாழ தயங்குவிங்கன்னு கழட்டியிருக்காங்க.
நானுமே தாலி கழட்டலை. இவர் கழட்டுன்னு சொன்னப்பிறகு மனப்பாரத்தோட தான் கழட்டினேன்” என்று கூறினாள் நைனிகா.
அன்றய தினம் அதன் பிறகு இனிப்பு செய்து வீடே நெய் மணம் கமழ்ந்தது.
அடுத்து எப்பொழுது திருமணம்? என்ற பேச்சை அப்பா மகன் பேசினார்கள்.
இலக்கியா இறந்ததும் செய்ய வேண்டுமா? என்று முதலில் தயங்கினார்கள். ஆனால் நிரஞ்சனோ ”இல்லைப்பா இப்ப செய்தா தான் நல்லது. அங்க ஊர்ல சித்தி, மாமா குடும்பத்துக்கு முன்ன தாலி அணிவிச்சது. இங்க இவளை உரிமையா நடமாட குயிக்கா கல்யாணம் செய்யணும்.” என்று முடித்தான்.
“ஏன்டா அதுக்குதானா? நம்பற மாதிரி தெரியலையே. உன் அவசரத்தை பார்த்தா குட்டி நிரஞ்சனையோ, குட்டி நைனிகாவோ கொண்டு வர பிளான் போடற மாதிரி தெரியுது” என்றதும் நிரஞ்சனோ மறுத்து பேசாது வெட்கப்பட்டு நைனிகாவை ஏறிட்டான்.
அன்னை ஷோபனாவோடு சட்னிக்கு தேங்காயை எடுத்து பேசிக்கொண்டிருந்தாள் நைனிகா.
நிரஞ்சன் பார்வை தழுவுவதை உணர்வால் அறிந்து திரும்ப, ‘என்ன?’ என்று பாவணையில் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்து பதிலுரைத்தான்.
அடுத்தடுத்த நாட்களில் ராஜப்பனோடு முறையாக நைனிகாவை மணப்பதாக கூறினான்.
அப்படியே தந்தையிடம் பேசுங்கள் அங்கிள். உங்க நட்பை ரொம்ப தேடறார். இலக்கியா அம்மாவை பிடிக்காமலா அப்பா ஷோபனா அம்மாவை கல்யாணம் செய்தார். இலக்கியா அம்மா தான் அப்பாவை விவாகாரத்து பத்திரத்துல கையெழுத்து போடலைன்னா தற்கொலை பண்ணிப்பதா மிரட்டியிருக்காங்க.
அதோட அம்மா இறந்ததை நான் அப்பாவிடம் சொல்லாம வந்துட்டேன். சொல்லியிருந்தா அப்பா அம்மாவும் வந்திருப்பாங்க.” என்று கூறியதும் ராஜப்பனுக்கோ மனம் இறங்கியது.
“அவன்கிட்ட போனை கொடு. பேசி தொலைக்கறேன். நைனிகா வாழப்போற இடம். அவளுக்கு ஒரு ஆதரவு நான் இருக்கணுமே. அதனால அவனை மன்னிச்சு பேசறேன்” என்று சலிப்படைந்தார்.
இத்தனை நாள் பேசாதது ஒரு கோபம். இன்று நட்பாய் பேசினார். நிறைய பேசிக்கொண்டார்கள். இலக்கியா இறப்பில் ஆரம்பித்து, இலக்கியா வீட்டு ஆட்கள் மாதவன் செய்கை முதல்கொண்டு பேசி, கடைசியில் நைனிகா நிரஞ்சன் திருமணத்தில் வந்தது.
கல்யாணசத்திரம், சாப்பாட்டு செலவு பத்திரிக்கை செலவுகள் மட்டும் தான் என்பதால் விரைவில் நடத்திட முடிவெடுத்தனர்.
நிரஞ்சன் தினமும் நைனிகாவோடு போனில் பேசி காதலை வளர்த்தான். வீட்டில் நேரில் காதல் மயக்கத்தில் அவளை சுற்றி வந்தான்.
நைனிகா கொஞ்சம் கொஞ்சமாய் இந்த வீட்டில் தானும் வேரூன்றும் முயற்சியில் இறங்கினாள்.
ஷோபனா அத்தை இலக்கியா அத்தையோட உருவ ஒற்றுமை இருந்தது. அதனால் பழக இலகுவானது. இந்த வீரராகவன் மாமா தான் சற்று பயந்து பழகினாள்.
ஏற்கனவே இலக்கியா அத்தையின் தாலி இருப்பதால் அது செண்டிமெட்டாக அம்மாவின் தாலியே அணிவித்திடலாம் மெருக்கு போட மட்டும் கொடுக்க முடிவெடுத்தார்கள். அதோடு புதிதான முறையில் தாலியை அணிவிக்க ஆசைப்பட்டான் நிரஞ்சன்.
அதனால் நகைக்கடைக்கு அழைத்தான்.
வீரராகவனோ, “நாங்க எதுக்கு? மருமகளை அழைச்சிட்டு போ. கல்யாணபத்திரிக்கை எங்களோடு பொறுப்பு” என்றார்.
நைனிகா நிரஞ்சனோடு செல்ல வீரராகவன் தடைப்போடுவார் என்று எண்ணியிருக்க அவரே அழைத்து செல்ல கூறவும் வியந்தவளை, கரம் கோர்த்து நிரஞ்சன் நகைக்கடைக்கு அழைத்து வந்தான்.
“ஆக்சுவலி இங்க நான் டிசைன் செய்த தாலியை ஆர்டர் பண்ணப்போறேன்.” என்றான் நிரஞ்சன்.
“தாலியில் குறிப்பிட்ட டிசைன் இருக்கும். அத்தையோட தாலியை தான் மெருக்கேற்ற போறோமே. நீங்க என்ன தாலி டிசைன் செய்யறிங்க?” என்று புரியாது கேட்டாள்.
“அதுவா.. வந்து பாரு. என்னயிருந்தாலும் அம்மாவோடது பழைய தாலி. நமக்குன்னு ஒரு மெமரபிள் வேண்டும்” என்றவன் கடைக்காரரிடம் “போன்ல விவரம் சொன்னேன் சார்” என்று கூறிடவும் அவன் இதயவடிவத்தில் ஒன்றை எடுத்தான். அதில் நிரஞ்சன் கைரோகையை பதிவிட்டான். அடுத்து நைனிகா கைரோகை பதிய வைத்திட கூறினான். இருவரின் கைரேகையில் இதயவடிவில் வைத்தார்கள்.
“ஒன் வீக்ல ரெடியாகிடும் சார். கைரேகைக்கு மேல உங்க பெயர் வந்துடும்” என்றதும் நன்றி நவில்ந்து எழுந்தான்.
“என்ன ஒன்னும் புரியலையா? கட்டைவிரல் ஆள்காட்டி விரல் வச்சி இதயம் வடிவத்துல வைப்பாங்க. அதை தான் இப்ப தந்திருக்கு. என்ன கட்டைவிரலா என் கைரேகை, ஆள்காட்டி விரலாக உன் கைரேகை இருக்கும். இந்த ரேகைக்கு நடுவுல நிரஞ்சன்-நைனிகா எழுதி தருவாங்க. நமக்கு அதான் தாலி. ஊர் உலகத்துக்கு அம்மாவோட தாலியை அன்னைக்கு அணிவித்தது.” என்றதும் புரிந்தவளாக நிரஞ்சன் தோளில் சாய்ந்தாள்.


அதில் ‘உயிரும் நீ, உறவும் நீ’ என்று உணர்ந்தவளாக இருந்தாள்.
நிரஞ்சனோ, தங்கள் திருமண நாட்களுக்கு காத்திருந்தான்.
அவன் ஆசைக்கொண்ட நாட்களோ இதோ அதோ என்று ஓடியது.
வீரராகவன் ஷோபனா இருவரும் தம்பதியராக தான் இளவரசன், ஜோதி வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க சென்றார்கள்.
கருணாகரனுக்கு அடுத்து பெரியவள் இலக்கியா அதற்கு பின் ஷோபனா என்றதால் தம்பி தங்கையின் வீட்டுக்கு சென்றாள்.
இளவரசனோ நைனிகாவை நிரஞ்சன் மணப்பதால் எவ்விதமான முகத்திருப்பலை காட்டவில்லை. கூடுதலாக வீரராகவன்-ஷோபனா புத்தாடைகளை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்தனர்.
திருமணத்திற்கு வரமாட்டேனென்று எப்படி மறுப்பார்கள். நைனிகா என்னயிருந்துலும் அண்ணன் மகளென்று கடமையை ஏற்றனர்.
ஆனந்தஜோதியால் பிரச்சனை நேருமென்று எண்ணினார்கள். ஆனால் அவர்கள் மகன் மாதவனோ அன்னையால் மனைவியிடம் எட்டிநின்று பழகியவனுக்கு மனைவியின் உடல்தேவை தேவைப்பட்டது. நைனிகாவும் நிரஞ்சனை மணப்பதால் மனைவியோடு தனிக்குடித்தனம் சென்றான்.
மாதவன் மனைவிக்கு மாமியாரிடமிருந்து பிரிந்து வந்தாலே போதுமென்ற முடிவில் இருக்க, அந்த ஜோடி மீண்டும் இணைந்தனர்.
அதனால் தனக்கு மேலும் யாருடனும் பகைமையும், குத்தல் பேச்சையும் கேட்க பிடிக்காமல் வீட்டுக்கு வந்த ஷோபனாவை வரவேற்றனர்.
பாண்டியனும் கல்யாணத்திற்கு கண்டிப்பாக அழைத்து வருவதாக கூறினார்.
இந்த இடைப்பட்ட நாளில் நிரஞ்சன்-நைனிகா தங்கள் திருமணத்திற்கு தங்களுக்கு ஃப்ரீ வெட்டிங் ஷூட் நடத்தினார்கள்.
மணநாளும் விரைவாக வந்து சேர, ராஜப்பன் கரத்தால் இதயவடிவத்தில் கைரேகைக்கு மேலே பெயரை பொறிக்கப்பட்ட தாலியை அணிவித்து அதன் பின் இலக்கியாவின் பொன் தாலியை மீண்டும் அணிவித்தான்.
அடுக்கு கொண்டு இரண்டுநகையும் அவளது மார்பில் மாங்கல்யமாக புரண்டது.
அட்சதை தூவவும், அக்னியை சுற்றி வரவும் இனி வாழ்வில் நைனிகாவின் கரத்தை விடாமல் பற்றினான்.
அதில் வாழ்நாள் முழுவதும், மனமென்னும் ஊஞ்சலில் இருவரும் சங்கமித்து இருப்பார்கள்.
❤️~சுபம்~❤️
❤️~பிரவீணா தங்கராஜ்~❤️
பூமகள் மாதயிதழில் வெளிவந்த நாவல். ஏற்கனவே சொன்னது மாதிரி மாதயிதழுக்கு என்று சில விதிமுறை இருக்கு. அதுக்கு கீழ்ப்பட்டு எழுதியது. அளவு அதிகமா இருக்க கூடாது. தளத்தில் பதிவிடும் போது பெரிதாக போடலாம்னு தோன்றும். ஆனா நேரம் அமைய மாட்டேங்குது. இதுவே நறுக்கு தெரித்து கொடுத்தது என்றும் ஒரு எண்ணம் உருவாகுது. அதோட அடுத்த கதை எழுத கொடுக்கணும். இப்ப எல்லாம் எழுதுவதற்கு நேரம் குறைவா இருக்கு. 🤧
உங்க அபிமான கருத்துகள் பார்ப்பதற்காக மட்டுமே புதுக்கதைகளை பதிவிடறேன். இல்லைன்னா ரீரன் போட்டு விடுவேன்.
அடுத்து ரீரன் போடுவேன். நிலவோடு கதை பேசும் தென்றல்.
எப்பவும் ஆதரவு தரும் அன்பான வாசகர்களே… உங்களுக்கு நன்றிகள் பல. லவ் யூ ஆல்.🫂♥️🫂♥️🫂♥️🫂
முகநூலில் ரில்யு அல்லது தளத்தில் விமர்சன பகுதியில் உங்கள் கதைக்கான கருத்தை பதிவிடலாம். நன்றி.
https://praveenathangarajnovels.com/community/ongoing-completed-novels-discussion/ இந்த லிங்க்ல டாபிக் போய் உங்க கருத்தை வழங்கலாம். அடுத்தவரது விமர்சனத்துக்கு கீழ் பதிவிடாதிங்க. உங்களுக்கு தனியா போடுங்க.
விருப்பப்பட்டா மட்டுமே. கட்டாயம் அல்ல.
தினமும் கமெண்ட்ஸ் போடுவதே எனக்கு உற்சாகம் தான். ♥️🫂
Super story short and sweet
Short and sweet story. Fantastic narration sis.
Super😍😍 short and sweet story🤩
Super super 👍
Nice. Yes ethukumela kondu ponalum nalla erukathu
Super sis very nice ending 👍👌😍 semma story sis last la andha thaali idea super pa evanga love endraikum thodarattum😘😊 feel good story sis eagerly waiting for your next story 🙏
Nala
Super 👌 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Nice ending
Nala story rmba short ah crct ah irunthathu, nice ending
Semma short and sweet…..
மனமெனும் ஊஞ்சல்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 11)
அப்பாடா…! ஒருவழியா தன்னோட ப்ரபோஸலா சொல்லிட்டான். முதல்ல தாலியை கட்டிட்டு,
அப்புறம் லவ் ப்ரபோஸலை சொல்லிட்டு, அதற்கப்புறம் கல்யாணம் பண்ணவன் இந்த நிரஞ்சனாத்தான் இருப்பான்னு தோணுது. எப்படியோ தாய் வீட்டு சொந்தம் விலகிடாம, அந்த தாயே மகளுக்கு மகளா வளர்த்த பொண்ணையே ஒட்டு மொத்த குடும்பமும் மருமகளாவும், மனைவியாவும்
ஏத்துக்கிட்டு, அந்தாத்மாவோட மனசை குளிரவும் வைச்சுட்டாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
💛💛💛💛😍😍😍🫰🫰🫰🫰🫰👌👌👌👌
🤞🤞🤞🤞👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Nice ending sis superrrrrrrrr short and sweet ah mudichitinga azhaghana story
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
Short and sweet story .illakiya avangaloda maranthu la aarambicha kadhai avanga paiyan niranjan marumaga nainika oda kalyanam tha mudinchi iruku
⭐⭐⭐⭐⭐⭐👌👌👌👌👌
Nice 👍
Excellent sis👌
Wow…semma story sis….starting to end fulla padichitti comment pantren. Idaila comment panna thonala…avulo interesting story la…nan kuda…niranjan…avala vittutu nisha va kalyanam pannipaannu ninachen….aana…illa….ninikka voda sernthathu azhgu….arumai
..Arumai sis….👍👍👍👍❤️❤️❤️❤️🌹💝💝💝