Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 4

மனம் உன்னாலே பூப்பூக்குதே 4

பூ 4

இரவு நேரத்தில் நிலவின் ஒளியில் மலர இருந்த சில மல்லிகையின் வாசமும், ராமபாண பூக்கள் மலர்ந்து வீசிய சுகந்த மணமும் கோகுல கிருஷ்ணனை கண்களை மூடிக்கொண்டு வேறு லோகத்திற்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு இனிமையும் குளுமையையும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது.

வேஷ்டியும் டிஷர்ட் அணிந்து கொண்டு மெல்ல பூந்தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவனின் எண்ணம் அவனையும் அறியாமல் மனைவியின் பக்கம் திரும்பியது.

மாலை அவள் அவனை “கிருஷ்” என்று உரிமையாகவும், தாயை சமாளிக்கச் சொல்லி கெஞ்சுதலாகவும் கேட்டபோது அவனுக்குள் எழுந்த அந்த உணர்வை அவனால் விவரிக்க முடியவில்லை. அதே நேரம் சௌபர்ணிகாவின் கண்களில் அவளைப் பார்த்தபோது தெரிந்த பொறாமையைக் கண்டபோது அவனுக்கு அத்தனை திருப்தியாய் இருந்தது.

சௌபர்ணிகாவின் தாய் மங்களம் அத்தை கொஞ்சமும் இங்கிதமில்லாமல் ஆருத்ராவிடம் சௌபர்ணிகாவை தனக்கு பெண் பார்த்ததெல்லாம் கூறுவார் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.

எங்கே அவரது பேச்சில் ஆருத்ரா கோவம் கொள்ளவோ அல்லது வருத்தம் கொள்ளவோ செய்வாளோ என இவன் எண்ணிக் கொண்டிருக்க, அதற்கு மாறாக தனக்கு சௌபர்ணிகாவை பிடிக்கவில்லை என்பதை துல்லியமாக கண்டறிந்து கூறியதுடன், பெரியவர்கள் என்றால் இப்படித்தான் பேசிக் கொள்வார்கள் என்று சர்வசாதாரணமாக அதை பெரிது படுத்தாமல் இருந்த அவளது குணம் அவனுக்குப் புதிதாகத் தெரிந்தது.

திருமணத்தன்று அவள் பாடிய ‘முகுந்தா முகுந்தா’ பாடல் நன்றாகவே இருந்தாலும் ஏன் சினிமா பாடல் பாடினாள் என்று தெரியாமல் அவன் அவள் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்க, மெல்லிய குரலில்

“சட்டுனு பாட சொன்னா கத்துண்ட ஒரு பாட்டும் மண்டையில் உதிக்கல”
என்று நாக்கை பற்களின் இடையே வைத்து கடித்தபடி குழந்தை தான் மறந்த விஷயத்தை அழகாய் கூறுவது போல அவனிடம் மென்மையாய் கூறியிருந்தாள் ஆருத்ரா.

அதனால் தான் இன்று அவளுக்கு தெரிந்திருக்கும் என்று நம்பி ஒரு பாடலை எடுத்து அதனுடைய வரிகளையும் தன் மொபைலில் அவளுக்கு காட்டினான். அவளும் கற்பூரமாகப் பிடித்துக் கொண்டு சூழ்நிலையைக் கடந்து விட்டாள்.

அவளின் இனிய குரலில் அந்தப் பாடலை மீனாட்சி அம்மனே மனம் உருகிக் கேட்டிருப்பார். சௌபர்ணிகா காதில் புகை வராதது தான் குறை என்ற எண்ணி சிரித்துக் கொண்டான் கோகுலகிருஷ்ணன்.

நெடுநேரம் தான் வெளியே நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து தன்னுடைய அறைக்கு திரும்பாலானான்.

கதவை அவன் தட்டமாலா என்று சிந்தித்து பின் திறக்க முற்பட அதுவோ தாழ்ப்பாள் இடாமல் இருந்ததால் அமைதியாக உள்வாங்கியது.

அறை சிறு வெளிச்சமும் இன்றி இருள் சூழ்ந்து இருப்பதைக் கண்டு வேகமாக தன் கையில் இருந்தால் செல்போனில் டார்ச்சை ஆன் செய்து அறையின் விளக்கை போட்டான்.

அலுவலகத்திற்கு கட்டிச்சென்ற புடவையும், மாலை வீட்டில் கட்டி இருந்த புடவையும் அவளது பெட்டிகளின் மேலே சுருட்டி வைக்கப்பட்டிருக்க காட்டனில் பேண்ட்டும் அதே நேரத்தில் குர்த்தி போன்ற டாப்பும் அணிந்து எப்பொழுதும் அவன் படுத்துக்கொள்ளும் வலது பக்கத்தில் ஒருக்களித்து கொடுத்து கன்னத்தின் கீழே கையை வைத்து உறங்கிக் கொண்டிருந்தால் ஆருத்ரா. அவளது முகத்தில் சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஐடி ஆபிஸ் தான போறா?  முகம் ஏன் இத்தனை வாட்டமா இருக்கு? புடவை கூட மடிச்சு வைக்கலையே!” என்று எண்ணிக்கொண்டு அவளது இரண்டு புடவைகளையும் கட்டிலின் அந்தப் பக்கத்தில் கொண்டு வந்து போட்டு பின் பொறுமையாக நீவி அழகாக மடித்து வைத்தான்.

மடித்த புடவைகளை வைப்பதற்காக அவன் திரும்பிய போது தான் அவள் கொண்டு வந்த இரண்டு பெரிய பெட்டிகளும் ஒரு சிறு பெட்டியும் அவளது இரண்டு கைப்பைகளும் அடுத்தடுத்து சுவர் ஓரத்தில் அடுக்கி இருப்பதை கவனித்தான் திரும்பி தன்னுடைய அறையை நோட்டமிட்டான் அங்கிருந்த சிறு துணி போடும் கயிற்றிலோ அல்லது அவன் தன்னுடைய கோட்,பெல்ட் போன்றவை மாட்டும் ஹேங்கரிலோ அவளுடைய எந்த துணிகளும் இல்லை.

வேகமாக எதிரே இருந்த நான்கு சுவரோடு இணைக்கப்பட்ட மர அலமாரிகளையும் திறந்தான். அதில் இரண்டில் அவனது உடைகள் இருக்க இரண்டு அவளுக்காக அவன் காலி செய்து வைத்தது அப்படியே இருந்தது.

“இவ என்ன துணி கூட எடுத்து செல்ப்ல வைக்காம இருக்கா? அப்படியே திரும்பி போற பிளான்ல இருப்பாளோ?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன்,

பின் ஆருத்ராவின் நடவடிக்கைகளில் தெரியும் உரிமையும் நெருக்கமும் அவள் அப்படியெல்லாம் எண்ணி இருக்க மாட்டாள் என்று தன்னையே திட்டிக்கொண்டான்.

அவனுக்கோ தூக்கம் வரவில்லை, அதேநேரம் மறுநாள் கண்டிப்பாக அவளிடம் உன் உடைகளை எடுத்து வைத்துக் கொள் என்று அவனாகச் சென்று பேசப் போவதுமில்லை. இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரியாமல் சற்று நேரம் அவளின் பாதங்களுக்கு பக்கத்தில் கட்டில் நுனியில் அமர்ந்தபடி திறந்திருந்த காலி அலமாரியை வெறித்தான்.

திடீரென முடிவுக்கு வந்தவனாக அவளுடைய பெட்டிகளை திறந்து ரகவாரியாக, நிற வாரியாக, புடவைகள், குர்திகள், ஜீன்ஸ் பேண்ட்,பலாசோ, சில பார்ட்டி உடைகள், லாங்கவுன் என்று பிரித்து அலமாரிகளில் அடுக்கி வைத்தான்.

மேல் அலமாரியில் அவளது இரண்டு கைப்பைகளையும் வைத்தவன் வேறு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தபோது சிறு டிராவல் பேக் ஒன்று இருப்பதைக் கண்டு திறக்க அது முழுவதும் அவளது உள்ளாடைகளே இருந்தது.

முதலில் சற்று தயங்கியவன், பின் பொறுமையாக அதனையும் கடைசியாக இருந்த அலமாரியின் வலது கை ஓரத்தில் பிரித்து அடுக்கினான்.

உறக்கம் வராமல் உலவிக்கொண்டிருந்தவன் இந்த வேலைகளை எல்லாம் முடித்த போது நள்ளிரவை தொட்டுவிட்டதால் அடுத்து உறங்குவதா அல்லது என்ன செய்வதென்றே தெரியாமல் கட்டிலின் அந்த பக்கத்தில் வந்து தலகாணியை நேராக வைத்து சாய்ந்தமர்ந்தான்.

முன்னும் பல இரவுகள் அவன் உறங்காமல் இருந்ததுண்டு. அதற்கு பின்னால் இருந்த காரணங்கள் அந்த காலத்தில் ஒப்பற்றதாகவும் உல்லாசமாகவும் சில நேரங்களில் அவன் வயதிற்கே உரிய கனவுகளை காண ஏதுவாகவும் கூட இருந்தது.

ஆனால் இன்று பளிங்கு சிலை போல மனைவி பக்கத்தில் இருக்க அவளிடம் பேசக்கூட அவன் தயங்கிக் கொண்டிருக்கிறான்.

இத்தனைக்கும் ஆருத்ரா ஒன்றும் அவனிடம் பேசாமல் இல்லை. அவள் தேவைக்கு சில கேள்விகளை கேட்டுப்பதும் அன்னையோ தந்தையோ சொல்லும் விஷயங்களை அவனிடம் வந்து பகிர்வதும் என்று இயல்பாக இருக்கவே முயற்சி செய்கிறாள்.

ஆனால் அவன் தான் எந்த ஒரு கேள்விக்கும் நறுக்குத் தரித்தார் போல பதிலை மட்டும் சொல்லிவிட்டு பேச்சை அத்துடன் முடித்துக் கொள்கிறான்.

அவனும் இயல்பாக இருக்கத்தான் நினைக்கிறான். ஆனால் எது தடுக்கிறது? திடீரென நடந்த திருமணமா? அல்லது அவன் எதிர்பார்த்தது நடக்காமல் போனதா? நடந்து விடக்கூடிய சாத்தியக்கூறு அமைந்த போது அதை அவன் நிராகரித்ததா? அல்லது திருமணத்திற்கு பின்னும் கூட அவனின் இந்த விசித்திரமான நடவடிக்கைகளை கண்டும் எந்த கேள்வியும் எழுப்பாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் மனைவியா?

கேள்விகள் தான் நீண்டு கொண்டே சென்றது இரவு அத்தனை நீளமானதாக இருக்கவில்லை. அவனை அறியாமல் அவன் உறங்கிய போது விடியலுக்கு சற்று நேரமே பாக்கியிருந்தது.

ஐந்தே கால் மணிக்கு ஹாலில் இருந்த டிவியில் பக்தி சேனலில் மாமியார் போட்ட சுப்ரபாதம் காதுக்குள் உச்சி வைத்து ஆட்டியது போல ஆருத்ராவை குடைய ஆரம்பித்தது.

இன்னும் சரியாக கால் மணி நேரத்தில் ஆருத்ரா அறையை விட்டு வெளியே செல்லவில்லை என்றால் கண்டிப்பாக இந்த சத்தம் இன்னும் கொஞ்சம் கூடும் அதை இந்த ஒரு வாரத்தில் அவள் கண்டு கொண்டிருந்தாள்.

‘தினமும் காலை ஐந்து முப்பதுக்கு அந்த நாள் ஆரம்பித்து விட வேண்டும் இது எங்கள் வீட்டு வழக்கம்’ என்று மேம்போக்காக ஒரு முறை மாமியார் கூறி இருந்தார்.

அதன் மறுநாள் ஆருத்ரா ஆறு மணி வரை உறங்கிக் கொண்டிருக்கும்போது டிடிஎஸ் எஃபெக்டில் கனகதாரா ஸ்தோத்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது . விழுந்தடித்து எழுந்தவள் எதிரே பார்க்க அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து யோகாசனம் செய்து கொண்டிருந்தான் கோகுலகிருஷ்ணன்.

அன்றிலிருந்து தன்னுடைய கைபேசியில் ஐந்து மணியிலிருந்து ஐந்து முப்பது வரை அடுத்தடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ஸ்னூஸ் மோடில் வைத்து அலாரம் வைத்து விட்டாள் ஆருத்ரா.

சில காலம் இந்த நேரத்தில் எழுந்து பழகினால் பின் அதுவே வழக்கமாக மாறிவிடும் என்று எண்ணியவளுக்கு தூக்கம் தான் பற்றாக்குறையாகி போனது.

எழுந்து வெளியே வந்தவள் மாமியார் வாசல் தெளித்துக் கொண்டிருப்பதை கண்டு வேகமாக அவரிடம் செல்ல அவரோ,

“வாடா கண்ணு எழுந்துண்டியா? பல் தேச்சுட்டேனா கிச்சன்ல காபி வச்சிருக்கேன் குடிச்சுட்டு மேல் வேலையை பாரு. இதோ வாசல்ல கோலம் போட்டுட்டு வந்துடுறேன்” என்றவர் அந்த பெரிய வாசலை அடைத்தது போல மிகப் பெரிய கோலத்திற்காக புள்ளிகளை வைத்துக் கொண்டிருந்தார்.

நாலு கோடு இழுத்து ஒரு வட்டம் போட்டாலும் அதைக் கோலம் என்று சொல்லும் ஆருத்ராவுக்கு அவர் வரையும் அவ்வளவு பெரிய கோலம் என்பது ‘அய்யோ அம்மா’ என்பதைப் போன்ற உணர்வை கொடுக்கக் கூடியது.

என்னை கோலம் போட சொல்லாத வரை நிம்மதி என்று நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டவள் கிச்சனுக்கு செல்ல அங்கிருந்து காப்பியை எடுத்துக் கொண்டு நேராக கோகுல கிருஷ்ணனிடம் கொடுத்தாள்.

“உனக்கு தான் காபி பிடிக்கலையே, அம்மாகிட்ட எனக்கு காபி வேண்டாம் வேற ஏதாவது குடுங்கன்னு சொன்னா என்ன? வாய் திறந்து நீயா சொல்லாம உனக்கு பிடிக்கலன்கிறது அடுத்தவாளுக்கு எப்படி தெரியும்?”என்று வேகமாக கேட்ட கோகுல கிருஷ்ணனிடம்

“ஒருத்தருக்கு ஒரு விஷயத்தை கொடுக்கறதுக்கு முன்னாடி அது அவங்களுக்கு தேவைப்படுதா? அது அவங்களுக்கு பிடிக்குமான்னு தெரியாம திணிக்கிற பழக்கத்தை இந்த உலகம் எப்ப மாத்திக்கும்? எப்பவுமே எதிர்ல இருக்குறவங்க தான் மாறணுமா? 

அவங்க எனக்கு காபி வேணுமான்னு கேக்கல. “இந்தா காபி” என்று கொடுத்தாங்க. ‘வேண்டாம்’ ன்னு சொன்னா, ‘ஏன் எதுக்கு?’ ன்னு ஆயிரம் கேள்வி வரும். அதுக்கு பதில் சொல்லணும்.

அதுல இருந்து நாலு கேள்வி வரும்
அதுக்கும் பதில் சொல்லணும்.. அவ்வளவு பொறுமை என்கிட்ட இல்ல. அதுக்கு அந்த காபிய உங்ககிட்ட கொடுத்தா பத்து காபி சாப்பிடுற நீங்க கூட ரெண்டு காபி சாப்பிடறதுனால ஒன்னும் குறைஞ்சிடாது.” என்றவள் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

அவளது பதிலைக் கேட்டு அமர்ந்திருந்தவனுக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புரிந்தது.

இத்தனை நாட்களும் இந்த திருமணத்தை அவள் எப்படி ஏற்றுக் கொண்டாள், ஏன் உரிமையாக பார்க்கிறாள், ஏன் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை, என்று தான் அவளை வைத்து மட்டுமே கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்க, அவளிடமும் தான் எதுவுமே பேசவில்லை என்பதும் இந்த திருமணத்திற்கு அவளுக்கு சம்மதமா என்ற கேள்வியை தானும் அவளிடம் கேட்கவில்லை என்பதும் அவன் மண்டையில் உறைத்தது.

யாரும் அவளிடம் உனக்கு இது பிடிக்குமா என்று கேட்காதவரை அவளுக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவள் அப்படியே அவளுக்கு தகுந்தது போல் அந்த சூழ்நிலையை மாற்றிக்கொள்வாள் என்பதை அந்த காபியை வைத்து அவனுக்கு கற்பித்து விட்டுச் சென்று விட்டாள்.

அறையை விட்டு எழுந்து வெளியே வந்தவன் அவள் வீட்டின் மேல்வெளிகளை கவனித்துக் கொண்டு காய்கறிகளை நறுக்கி, சிறு சிறு சமையல் உதவிகளை செய்துவிட்டு தோட்டத்தில் நீர் பாய்ச்சும் தன் தந்தைக்கு காப்பி எடுத்துச் செல்வதை தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கும் அலுவலகம் கிளம்பியாக வேண்டும். முதல் நாளில் மாலை பார்க்க வேண்டிய எந்த வேலையும் அவன் பார்க்கவில்லை. இவளையே இப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தால் இன்றைய வேலையும் அவ்வளவுதான் என்று எண்ணி வேகவேகமாக தன்னை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான்.

அவன் அலுவலகத்திற்கு தயாராகி உணவு உண்ண வந்த போதும் அவள் சமையலறையில் அன்னை ஏதோ சொல்லிக் கொண்டிருந்த வேலையை செய்து கொண்டிருந்தாள்.

கை கடிகாரத்தை திருப்பி மணி பார்த்தவன் அது ஏழு நாற்பது என்று குறிப்பிட்டதை கண்டு “ஆருத்ரா” என்று சத்தமாக அழைத்தான்.

உணவு மேசைக்கு வந்தவளிடம் “மணி ஆகிறது நீ ஆபீஸ் கிளம்பல?” என்று கேள்வி எழுப்ப

எதிரில் இருந்த சுவர் கடிகாரத்தில் மணி பார்த்தவள் “இதோ கிளம்பணும்” என்று குரலில் அவசரத்தை காட்டி கூறினாள். மீண்டும் சமையலறை பக்கம் அவள் செல்ல முற்பட,

“வேலை பார்த்த வரைக்கும் போதும் போய் ரெடி ஆகி சாப்பிட வா” என்று அழைக்க அவளும் சமையலறையை திரும்பித் திரும்பி பார்த்தபடி தங்கள் அறையை நோக்கி சென்றுவிட்டாள்.

மகன் அழைத்தும்  வெளியே சென்ற மருமகள் இன்னும் சமையலறைக்கு திரும்பவில்லையே என்று சமையலறையில் இருந்து வந்து மகனிடம் “ஆருத்ரா எங்க?” என்று விசாரித்தார் சுபாஷினி.

“மணி ஆகறது மா. நான் தான் அவளை ஆபிஸ் கிளம்ப சொன்னேன்” என்று அவன் பதில் அளிக்க

“கூட்டுக்கு தேங்காய் மிளகாய் சீரகம் அரைச்சி தர சொன்னேன். இதோ வரேன்னுட்டு இங்க வந்தா என்கிட்ட சொல்லிட்டு கூட போகலையே, இப்ப கூட்டு பாதிலன்னா நிக்கிறது!” என்று அவர் அவளது செயலால் தனக்கு ஏற்பட்ட பிடித்தமின்மையை வெளிப்படுத்த,

“இத்தனை நாளும் அவளா வந்து அரைச்சு கொடுத்தா? நான் தானே கொடுத்தேன். வா நான் அரைச்சு தரேன்.” என்று தாயின் முன்னே அவன் சமையலறை நோக்கிச் செல்ல,

“இருக்கட்டும் டா கோகுல். நானே அரைச்சுக்கிறேன். உனக்கு ஆபீஸ்க்கு நாழி ஆயிடுத்து. டிபன் எடுத்து வைக்கிறேன். சாப்பிட்டு கிளம்பு.” என்று அரைமனதாகக் கூறினார்.

“இல்ல இருக்கட்டும்” என்று அரைத்துக் கொடுத்து விட்டே காலை உணவு உண்ண வந்தான்.

அதே நேரத்தில் அவசரமாக ஒரு குர்த்தியையும் பேண்ட்டையும் அணிந்து கொண்டு தலைக்கு ஒரு கிளிப்பை மாட்டிக் கொண்ட படி வந்து உணவு உண்ண அமர்ந்தாள் ஆருத்ரா.

“என்னாச்சுமா இன்னிக்கி புடவை கட்டிக்கலையா?” என்று மாமியார் கேட்டதும் சங்கடமாக நிமிர்ந்து அவரை பார்த்தவள்,

“இந்த டிரஸ் தான் ஆபீசுக்கு வசதி மாமி” என்று விட்டு அவசர அவசரமாக காலை உணவை முடித்துக் கொண்டவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள். பின் நினைவு வந்தவளாக

“மாமி மாமா நான் ஆபீஸ் போயிட்டு வரேன்” என்று கூற,

மாமியார் “லஞ்ச் வேண்டாமா?” என்றார்

“இல்ல மாமி நான் ஆபீஸ்ல பார்த்துக்கிறேன்” என்று விட்டு வேகமாகச் சென்று வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பியவள் கோகுல கிருஷ்ணனிடம் சொல்லிக்கொள்ள மறந்தே போனான்.

கோகுலகிருஷ்ணன் கிளம்பி தன்னுடைய பைல்களை தன் பையில் அடுக்கி விட்டு வெளியே செல்ல தயாராகும் போது அவனுக்கான மதிய உணவை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தார் சுபாஷினி.

“அவளுக்கேன்மா கொடுக்கல?” என்று கேட்டவனிடம்,

“உனக்கே இனி அவ தான் செய்யணும். அவளுக்கு இப்ப நான் செய்யணுமா? அவ கேட்கவும் இல்லையே! அதான் ஆபீஸ்ல பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாளே! அப்புறம் என்ன? நேரத்தோட நீ கிளம்பு.” என்று மகனை தோளில் தட்டி அனுப்பி வைத்தார்.

17 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 4”

  1. Avatar

    Correct ah purinji vachchirukka yellaaraiyum aaru….entha maamiya kusumbunrathu ethu thaan pola 🙄🙄🙄gokul nee yenna design nu theriaye 🧐🧐🧐🧐good going ma 👍👍👍👍

  2. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 4)

    ஆக மொத்தம், நம்ம கோகுல கிருஷ்ணனுக்கு ஆத்துக்காரியை பிடிக்காம எல்லாம் போகலை. நான் கூட என்னடா இந்த அம்மாஞ்சி, வேண்டா வெறுப்பா பிள்ளையைப் பெத்து காண்டா மிருகம்ன்னு பேரு வைச்சிடுமோன்னு நினைச்சுப்பூட்டேன். நல்ல வேளை, அப்படியெல்லாம்
    எதுவுமில்லை. இவனுக்குள்ள தான் ஏதோ குழப்பம், கலக்கம், விடை தெரியாத கேள்விகள். பொண்டாட்டி மேல அக்கறையும், அனுசரணையும் இருக்குதே.
    இதோ நேத்து நான் லேசா முணுமுணுத்ததை கேட்டுட்டு
    ஆருவோட திங்க்ஸ், துணி எல்லாத்தையும் சமர்த்துப் பிள்ளையா அலமாரியில அடுக்கிட்டானோ இல்லையோ?
    அதே மாதிரி, பொண்டாட்டி வேலையை தான் ஏன் செய்யணும்ன்னு நினைக்காமா
    கூட்டுக்கு மசால அரைச்சு கொடுத்ததும் இல்லாம, ஆத்துக்காரிக்கு வேலைக்கு போக நேரமாயிடுச்சின்னு ரீமைண்ட் பண்றானோ இல்லையோ..? அது மட்டுமில்லாம, ஆருவுக்கு மட்டும் ஏன் மதியத்துக்கு லஞ்ச் பேக் பண்ணி கொடுக்கலைன்னு கேள்வி கேட்குறானோ இல்லையோ..?
    அப்ப பாசம், பாயாசம் எல்லாம் இருக்குன்னு தானே அர்த்தம்.
    அப்படியே, அவளுக்கு காபிக்கு பதில் மைலோவோ இல்லை காம்ப்ளானையோ ரிகமண்ட் பண்ணிட்டா இன்னும் நல்லாத்தான் இருக்கும். இல்லைன்னா ஆத்துக்காரிக்கு எது பிடிக்கும்ன்னு கேட்டு கையோட வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் தேவலை தான். அதுசரி, நேத்தைக்கு கை நிறைய மல்லிச்சரம் வாங்கினானே, அதை ஆத்துக்காரிகிட்ட கொடுத்தானா.. இல்லை வேற யார் கிட்டயாச்சும் கொடுத்துட்டானா..????
    ஆனா ஒண்ணுங்க, அம்பிக்கு ஸ்டார்ட்டிங் தான் ட்ரபிள்ன்னு நல்லா தெரிஞ்சுப்போச்சு… இதோ நாம லேசா கோடு காட்டினவுடனே
    ரோடே போட்டுடறானோ இல்லையோ…? அப்ப சமர்த்து அம்பி தான்…!

    என்னவொன்னு, அந்த மாமி தான் கொஞ்சம் சில்மிஷத்தை ஆரம்பிச்சிட்டாளோன்னு தோணுது. அதான், அவ இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணிக்க சொல்றது, விடிகாலையிலயே
    எழுப்பி விடறது, ஆபிஸ் போறவாளுக்கு நேரமாகிடுமே
    அரக்க பறக்க போகணுமேன்னு
    நினைக்காம, கடைசி நிமசம் வரைக்கும் அத்தை செய், இத்தை அரைன்னு ட்ரில் மாஸ்டர் மாதிரி வேலை வாங்கிறது, எதையும் செய்யுநியா, சாப்பிடறியான்னு கேட்காம…. செய், இல்லை
    செத்து மடிங்கிற ரேஞ்சுக்கு வாட்டுறதுன்னு கொஞ்சம்
    மார்க்கமாத்தான் நடந்துக்குறாங்களோன்னு தோணுது….! மாமிக்கு பொம்பளை பிள்ளைக்கூட இல்லைத்தானே…? ஏன் மருமகளை தன் பொண்ணாட்டம் பார்த்துக்கிட்டா குறைஞ்சு போயிடுவாங்களா என்ன..? ஆடற மாட்டை ஆடியும், பாடற மாட்டை பாடியும் கறக்கற மாதிரி, மருமகளை கொஞ்சம் அரவணைச்சும் போகலாமே.
    ம்… இதெல்லாம் நாம கொஞ்சம் சத்தமா சொன்னா, நம்ம கிட்டேயும் பாய்ஞ்சுக்கிட்டு வந்துடுவாங்களோ என்னவோ?
    நம்ம பேசாம கோகுல கிருஷ்ணன் காதுல போட்டு விடுவோம். அதற்கப்புறம் அவனாச்சு, அவனோட அம்மாவாச்சு. என்ன இருந்தாலும் தன்னோட வீட்டுக்கு புதுசா வந்த ஆத்துக்காரியை அக்கறையோடவும், அனுசரணையோடவும் கவனிச்சுக்க வேண்டியது அவனோட பொறுப்புத்தானே…?

    அதுவுமில்லாம, இப்படியே போச்சுன்னா புருசன் பொண்டாட்டிக்குள்ள அனர்த்தமும், சலிப்பும் தான் வந்துடும் போலவே….!
    ம்… இது எங்கப்போய் நிப்பாட்ட போகுதோ…??? இல்லை, அதுக்குள்ள நம்ம கோகுல கிருஷ்ணன் முழிச்சுக்கிட்டா
    சரி தான்..!
    😜😜😜
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    அவளால் முடிஞ்ச வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணின்டு தான் போறா, மாமி நீங்க நல்லவாளா கெட்டவாளா?

  4. Avatar

    Aarudhara sollurathum correct than ah avaluku ithu pidichi iruku ah yarum ethuvum keka matraga la convo rendu pakkam um than ah irukanum ithu than nu define pannum.pothu accepting mentality than varum.

  5. Priyarajan

    Correct than namakku ithu venuma nu kekarathu illa…. Spr going waiting for nxt epi😍😍😍💕💕💕💕💕💕

  6. Kalidevi

    Romba sikrambyosichita da pesalanu but aaru ellaraium purinji nadanthukura aana ava suyathoda illa anga nee tha avala pathu therinji purinjitu pesi palaganum

  7. Avatar

    மனுசால நன்னா புரிஞ்சி வச்சிருக்கா ஆரு….good…👌👍
    Intha mami sila சமயம் அவள நல்லவிதமாக பாக்குறா..சில சமயம் மாமியார் வேலைய காட்டுறா…. என்னத்த சொல்ல…மாமி…..🙄🙃🥴
    அம்பி…உனக்குள் எதோ ஒரு confusion இருக்குடா அம்பி..அதை முதல்ல ..clear Pannu….
    ஆருக்காக…nee un amma kitta பேசினது superb….
    Nice moving dear…💕💕👏👏💐❤️❤️🥰

  8. Avatar

    அவர்கள் இருவர்குள்ளேயும் ஏதோ குழப்பம் அதான் இப்படி இருக்காங்க அது கசரியான அருமையான ஜோடி

  9. Avatar

    கிருஷ்ணாவுக்கு பிடிக்காத கல்யாணம் மாதிரி தெரியல அவனுக்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி இருக்கான்

  10. Avatar

    போன கமெண்ட்ல தான் சொன்னேன் ஆருவோட மாமியார் நல்லவங்களா இருக்காங்கன்னு இப்பதான் தெரியுது அவங்களும் டிபிக்கல் இந்தியன் மாமியார் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *