Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்..27

மயங்கினேன் நின் மையலில்..27

“இப்போ சொல்லுங்க ஜமுனா… என்கூட வரீங்களா? நான் உங்கள டிராப் பண்ணட்டுமா?” என்று அவன் நக்கலாய் கேட்க

Thank you for reading this post, don't forget to subscribe!

“அட போங்க..  உங்க வீடு வேற ரூட்.. என்னோட வீடு வேற ரூட்… அப்புறம் எப்படி ரெண்டு பேரும் ஒரே பஸ்ல போக முடியும்? போங்க… ” என்று அவளோ சுருங்கிய முகத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் பின்னே வேகமாக ஓடியவனோ “சரி…. இப்போ எப்படி வீட்டுக்கு போக போறீங்க?” என்று கேட்டான்.

“எப்படி? ஆட்டோ இல்ல கேப் ஏதாவது புடிச்சு தான் போகணும்” என்று அவள் சொல்லிட

“ஏன் இந்த கவர்மெண்ட் பஸ் எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா?” என்று அவன் கேட்க

“இல்லப்பா…. பஸ் ஸ்டாப்ல இருந்து எங்க வீடு ரொம்ப தூரம்… நான் பஸ்ல போனாலும் அவ்வளவு தூரம் நடந்து தான் போகணும்.  இல்லை அதுக்கு ஏதாவது ஆட்டோ படிக்கணும். அதனால தான்….  இங்கிருந்தே ஆட்டோல போயிரலாம்னு பார்க்கிறேன்” என்று அவள் சொன்னதும் அவன் சரி என தலையசைத்தான்.

“சரி…. நீங்க எந்த பஸ் ஸ்டாப்ல தினமும் பஸ் ஏறுவீங்க?  எத்தனை மணிக்கு பஸ் ஏறுவீங்க?”  என்று அவனை குறுக்கு விசாரணை செய்தபடியே அவனுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

“டெய்லியும் காலைல எட்டு முப்பதுக்கு அந்த ஹாஸ்பிட்டல் ஸ்டாப்ல ஏறுவேன்”  என்று அவன் சொன்னதும் அவளோ அதை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

தன்னுடைய வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த தருணும் கதவை தட்டினான்.

தருண் நீண்ட நேரம் கதவை தட்டிய பிறகே மெதுவாக நடந்து வந்து கதவை திறந்தாள் பூஜா.

அடர் பச்சை வண்ண புடவையை, ஒற்றை மடிப்பில் கட்டியவள், தன்னுடைய கூந்தலை துவட்டியவாரே வந்து கதவை திறந்தாள்.

பூஜாவை நீண்ட நாளுக்கு பிறகு இப்படி புடவையில் பார்த்ததும் அவனோ வீட்டிற்குள் கால் எடுத்து வைக்க கூட மனமின்றி வெளியவே  நின்று அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.

முகத்தில் எவ்வித ஒப்பனைகளும் இல்லாமல், கழுத்தில் ஒற்றை சிறிய செயினும், அவன் கட்டிய மஞ்சள் நிற தாலி கயிறும், காதில் குட்டி ஜிமிக்கியும் அணிந்தபடியே இன்னும் அப்படியே  கூந்தலை துவட்டி கொண்டே இருக்க,

கண்  இமைக்க கூட மனம் இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தருண்.

அவன் அமைதியாக வெளியவே நிற்பதை கவனித்தவளோ, அவன் கதவை திறக்க தாமதமானதால் தான் கோபமாக  இருக்கிறான் என்று நினைத்து “சாரி தருண்… குளிச்சிட்டு இருந்தேன்.  அதனால கதவை திறக்க  லேட் ஆயிடுச்சு”  என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

“அதெல்லாம் இல்ல பூஜா…  இதுக்கு எதுக்கு சாரி எல்லாம் கேக்குறீங்க? சரி எங்க கிளம்பிட்டீங்க?”  என்று கேட்டான் அவன்.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை தருண். அதனால தான் கோவிலுக்கு போகலாம்னு நினைச்சேன். அக்காவுக்கு சீக்கிரமா குணமானதும்  கோவிலுக்கு வரேன்ன்னு வேண்டி இருந்தேன். அதனால தான் போயிட்டு வந்துடலாமேனு…”  என்று அவள் சொன்னதும்,

“எப்படி போறீங்க பூஜா?”  என்று கேட்டான் அவன்.

“கோவில் இங்க பக்கத்துல தான தருண்… சோ பஸ் இல்ல ஆட்டோ எதுலையாவது தான் போகணும்”  என்று சொன்னாள்.

“பூர்ணா தனியா சமாளிச்சுப்பாங்களா?”  என்று அவன் அக்கறையாய் விசாரிக்க

“அதான் சொன்னேனே தருண்… அக்காவோட ஹெல்த்  இப்போ நல்லாவே இம்ப்ரூவ்மெண்ட் ஆயிடுச்சு.  நார்மலா நடக்க மட்டும் தான் முடியல. ஆனா கொஞ்சம் ட்ரை பண்ணி நடந்துக்குறா.  நான் போயிட்டு சீக்கிரமாக வந்துடுறேன். அதுக்குள்ள அவளுக்கு ஏதாவது வேணும்னா எனக்கு போன் பண்ண சொல்லியிருக்கேன்” என்று பூஜா சொன்னதும்

“ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்றீங்களா பூஜா? நானும் ரெடி ஆயிட்டு வந்துடறேன்”  என்று தருணும் அவளுடன் போக ஆசைப்பட்டான்.

“நீங்களே இப்போ தான் வந்ததிருக்கீங்க. உங்களுக்கு ரொம்ப டயர்டா இருக்கும். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் மட்டும் போயிட்டு வந்துடறேன்” என்று அவள் மறுத்திட

“அதெல்லாம் இல்ல பூஜா…. நீங்க ஒரு 10 மினிட்ஸ் மட்டும் வெயிட் பண்ணுங்க. நான் உடனே ரெடி ஆயிட்டு வந்துடறேன்” என்று சொன்னவன் உள்ளே போக

அவன் உள்ளே போவதை பார்த்து புன்னகைத்தவளோ அவனுக்கு டீ போட சமையலறை நோக்கி சென்றாள்.

தருண் சொன்னது போலவே அடுத்த பத்தே நிமிடத்தில் குளித்து கோவிலுக்கு தயாராகி  வெளியே வர, அவனுக்கான டீ கப்பை அவன் கையில் கொடுத்தாள்.

“என்ன பூஜா நான் ரெடியாகுற கேப்ல டீ போட்டு குடித்துட்டீங்களே”  என்று அவன் சொல்ல

“எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க.
அதனால தான்….”   என்று அவள் சொன்னதும் அவன் சில நொடி அமைதியாகி விட்டான்.

தன் கையில் டீ கப்பை வைத்துக் கொண்டு அதை பருகாமல், கண்ணிமைக்காமல் தரையை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான் தருண்.

அவனின் அத்தகைய செயலுக்கு அர்த்தம் புரியாதவளோ “என்னாச்சு தருண்?  ஏன் அமைதியா இருக்கீங்க? டீ குடிங்க. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” என்று  அவள் பதற்றமாய் கேட்க,

“அதெல்லாம் இல்ல பூஜா….   நாலு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா இருந்தப்போ இப்படி தான் ஆபீஸ் போயிட்டு வந்ததும் எனக்கு எல்லாமே பார்த்து பார்த்து பண்ணுவாங்க. அப்போ மட்டும் இல்ல… சின்ன வயசுல இருந்து நான் ஸ்கூல் போயிட்டு வரும்போதும் சரி… காலேஜ் போயிட்டு வரும்போதும் சரி….  எனக்காக  ஏதாவது பண்ணி வச்சிருப்பாங்க. நான் சாப்பிடாம எங்கேயும் போனதில்ல தெரியுமா?  எப்பவுமே எங்களை பத்தி மட்டுமே நினைச்சுட்டு எங்களுக்காகவே வாழ்ந்தவங்க. இப்போ அவங்க இல்லைன்னு நினைக்கும் போது என்னால நம்பவே முடியல. அந்த உண்மையை ஏத்துக்கவும் முடியல. எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும், எவ்வளவு கஷ்டமா இருந்தாலும், எவ்வளவு உடம்பு முடியாம இருந்தாலும் எனக்கு தேவையான விஷயத்தை அவங்க எப்பவுமே பண்ணாம இருந்ததே இல்ல. அதனால தான் இப்போ கூட நான் கிளம்பி வரேன்னு தான் சொன்னேன். ஆனா அதுக்குள்ள நீங்க எனக்கு காபி போட்டு தரணும்னு எந்த அவசியமும் இல்லை.  ஆனால் நீங்கள் எனக்காக யோசிச்சு பண்ணுங்க இல்லையா? அதனால எனக்கு பழசு எல்லாம் கொஞ்சம் ஞாபகம் வந்திருச்சு.” என்று கண் கலங்கிய படியே சொன்னவனோ இப்பொழுது அந்த டீயை பருக ஆரம்பித்தான்.

அதைக் கேட்டவளோ “உங்க அம்மா மட்டும் இல்லை தருண்…  எல்லாரோட அம்மாவும் அப்படித்தான். இவ்வளவு ஏன் என்னோட அம்மாவும் அப்படித்தான்.  சின்ன வயசுல இருந்து எனக்காக எல்லாமே பார்த்து பார்த்து பண்ணுவாங்க. ஆனா பாருங்க இப்போ அவங்க கூட நான் இல்லை. அவங்கள விட்டுட்டு இங்க வந்து இருக்கேன்.  இப்போ நானுமே எங்க அம்மாவை மிஸ் பண்ண தான் செய்றேன். இதுதான் வாழ்க்கை. நாம ஒண்ணுமே செய்ய முடியாது. உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம்னா பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி ஒரு கஷ்டம்.  பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுட்டு, அந்த சந்தோஷமான சூழ்நிலையை விட்டுட்டு, எல்லாத்தையும் விட்டுட்டு, வேற புது இடத்துல இருக்க பழகிக்கிறாங்க…. பழகிக்கணும். இப்போ நீங்க உங்க அம்மாவை பத்தி சொன்னதும் எனக்கும் எங்க அம்மா ஞாபகம் வந்திருச்சு. அவங்க கிட்ட நான் இன்னும் எந்த உண்மையும் கூட சொல்லல. என்னை பார்க்க வர அவ்வளவு ஆசையா கேட்டுகிட்டே இருக்காங்க. என்னால வர சொல்லவும் முடியல தருண்” என்று அவளும் இப்பொழுது தன் அம்மாவை நினைத்து கலங்கியபடியே சொன்னாள்.

அவள் பேசுவதை கேட்டவனுக்கு, அவளின் இந்த நிமைமைக்கு தான் மட்டுமே காரணம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதனால் அவனோ அமைதியாக இருக்க, அவளே பேச ஆரம்பித்தாள்.

“எல்லாரோட வாழ்க்கையும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி அமையுறது இல்ல தருண்… உங்க வாழ்க்கையில நடந்த சில உண்மைகளை நீங்க ஏதுக்கிட்டு வாழ பழகி தான் ஆகணும். கடந்த காலத்தையே நினைச்சுட்டு இருந்தா நிகழ்காலமும் நம்ம கையை விட்டு போயிரும்.” என்று அவள் வாழ்க்கையின் நிதர்சனத்தை சொன்னாள்.

பூஜா பேசுவதை கேட்டு நிதர்சனத்தை புரிந்து கொண்ட தருணும் “இதுதான் வாழ்க்கை…. இல்ல பூஜா?  நமக்கு பிடிச்சவங்க எல்லாருமே நம்ம கூடவே இருக்க முடியாது இல்லையா?” என்று தருண் சொல்லிட, அதற்கு அவளும் ஆமாம் என்பது போல தலையை அசைத்தாள்.

இதற்கு மேல் கடந்த காலத்தை பற்றி யோசிப்பது பயனற்றது என்பதை உணர்ந்தவனோ “சரி பூஜா கிளம்பலாமா? என்று  கேட்டான்.

“ம்ம்ம்ம்…. கிளம்பலாம்…. ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க….”  என்று சொன்னவள் பூர்ணா இருக்கும் அறையை நோக்கி நடந்தாள்.

அங்கே பூர்ணாவோ பெட்டில் உட்கார்ந்த படியே போன் பார்த்து கொண்டிருக்க, “அக்கா…. நான் கோயிலுக்கு போயிட்டு வந்துடுறேன். உனக்கு ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணு… ஓகேவா?” என்று சொல்லிவிட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த ஒரு சிறிய ஹேர் கிளிப்பை தன்னுடைய கூந்தலை வாரி அதில் போட்டபடியே, தன்னுடைய போனை  மட்டும் எடுத்துக் கொண்டு வேக வேகமாக வெளியே வந்தாள்.

“இருவரும் கோவிலுக்கு காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நொடி பூஜாவை திரும்பி பார்த்தவன்  இப்பொழுது சாலையை பார்த்தபடியே காரை ஓட்டிக்கொண்டு “பூஜா….”  என்று அழைத்தான்.

அவளும் என்ன என்பது போல அவனைப் பார்க்க, “இந்த சாரில நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அவள் முகத்தைக் கூட பார்க்காமல் சாலையை பார்த்தபடியே சொன்னான்.

அவன் சொன்ன விஷயத்திற்கு என்ன பதில் சொல்வது என்றே அவளுக்குத் தெரியவில்லை. அமைதியாக அவளும் சாலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

இருவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு முடித்த  பிறகு, கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பூஜாவுக்கு ஏதோ தோன்ற “ஏன்  தருண்….  நீங்க அக்காவுக்கும் கிஷோருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொன்னீங்க? ஆனா அதுக்கான எந்த ஸ்டெப்பும் எடுத்த மாதிரி தெரியலையே” என்று அவளோ இதை கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தோடே கேட்க.

“இல்ல பூஜா…. கண்ணன் என்கிட்ட ஒரு விஷயத்தை கேட்டாரு. அதனால தான் நானும்  கொஞ்ச நாள் போகட்டுமேன்னு பார்த்தேன்” என்று அவன் சொல்லிட

கண்ணன் பெயரை கேட்டதும் அவளுக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக விட்டது.  இன்னும் தருணிடம்  கண்ணனை பற்றி அவள் சொல்லவில்லையே….

அவளோ கண்ணன் பெயரை கேட்டதும் தலை குனிந்தபடியே அமைதியாக இருக்க, அதன் அர்த்தம் புரிந்தவன் மீண்டும் அவனே பேச ஆரம்பித்தான்.

“கண்ணன், பூர்ணா கல்யாணத்துக்கு உதவி பண்றேன்னு சொன்னாருல்ல… செழியன் கல்யாணம் நின்னத்துக்கு பூர்ணா தானே காரனம்? அதனால செழியன் கல்யாணம்  முடிஞ்ச பிறகு பூர்ணா கல்யாணத்துக்கான பிளான் பண்ணலாம்ன்னு  சொன்னாரு” என்று சொன்னான்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்..27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *