மகாவை அறைந்தது யார் என்று வீட்டில் அனைவரும் பார்த்தார்கள் மகாவை அறைந்தது வேறு யாருமில்லை மகிழன் தான் அவன் அறைந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக தான் இருந்தார்கள் உதிரன் தான் மகிழன் என்ன செய்கிறாய் என்று கத்தினான் பின்ன என்ன மாப்ள என்ன பேச்சு பேசுற அன்னைக்கு கொஞ்சம் தவறி இருந்தாலும் உயிர் போயிருக்குமே என்ன விளையாட்டு தனமா பேசிட்டு இருக்கா என்றான்
அவள் திரும்பி தனது மகிழ் மாமாவை முறைத்துவிட்டு இப்ப என்ன மாமா ஆச்சு உயிர் போல இல்ல உசுரோட உங்க முன்னாடி தான நின்னுட்டு இருக்கேன் என்றால் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தார்கள் அன்று ஒரு நொடி நான் உன்னை பார்க்க தவறி இருந்தால் என்னாவது என்றான் எத்தனை நாளைக்கு தான் அதையே பேசிட்டு இருக்பீங்க இதை விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கலாமா
இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இனிக்கு கல்யாணம் ஆகப்போகுது அவளுக்கு சந்தோஷமா இருக்குமா இல்லையா அவளுக்கு மட்டும் இல்ல வீட்ல இருக்க எல்லாருக்குமே இந்த ஆசை இருக்கு உங்களுக்காக மட்டும் தான் யாரும் இதுவரை உங்ககிட்ட அவங்க விருப்பத்தை சொல்லாம இருந்தாங்க இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்று கெஞ்சினால் மகிழ் திரும்பி தன் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தான் அனைவருமே அமைதியாக இருந்ததிலேயே அவனுக்கு தெரிந்தது
மகா கூறுவது போல் வீட்டில் உள்ள அனைவருக்கும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்ற பிறகு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான் ஒரு நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு உதிரனை பார்த்து சரி எல்லோரும் மேலே போங்க என்று கூறி விட்டு அவனது அரைநோக்கி சென்று விட்டான் இதழினி தனது அண்ணன் பின்னாடியே சென்றால் அண்ணா என்றால் அவன் அமைதியாக இருந்தான்
ஒன்னும் இல்லை அண்ணா அன்று நம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருந்தால் தானே அதுவும் அன்று நமது யுபிஎஸ்சும் ரிப்பேர் ஆகி இருந்தால் தானே நம்மளால் மகா அருகில் பாம்பு வந்ததை பார்க்க முடியவில்லை என்றால் என்னால் இன்று அதை நினைத்தால் கூட உடம்பு எல்லாம் தூக்கி போடுகிறது என்ற பிறகு அதலாம் ஒன்றுமில்லை அண்ணா என்றாள்
சரி இதழ் நீ போ என்றவுடன் இதழும் மொட்டை மாடிக்கு சென்றாள் அவள் வெளியேறியவுடன் மகிழ் அறைக்கு உதிரன் சென்றான் மாப்பிள்ளை என்று அழைத்தான் மகிழ் உதிர்னை அங்கு பார்த்தவுடன் அவனை கட்டி அணைத்துக் கொண்டு மகிழ் நீ அதையே நெனச்சிட்டு இருக்காத என்றான் எப்படிடா நினைக்காம இருக்க முடியும் இப்ப நினைச்சா கூட என் உயிர் போது என் உயிரே அன்னைக்கு என் கையில் இல்லை சரிடா மாப்பிள்ளை அதையே யோசிச்சிட்டு இருந்தா சரியாகுமா என்று கேட்டான்
அவன் அவ்வாறு கேட்டவுடன் மகிழன் உதிரனை நிமிர்ந்து பார்த்தான் உதிர்னின் கண்களும் கலங்கி தான் இருந்தது எனக்கும் புரியுது மாப்பிள்ளை ஆனா அன்னைக்கு நடக்க இருந்ததை தான் நீ தடுத்துட்டியே அப்புறம் ஏன் அதையே நினைச்சுட்டு இருக்க வேண்டும் என்றான் அதை நினைக்காமல் என்னால் இருக்க முடியுமா நம்ப கண்ணு முன்னாடி நம்ம குடும்பத்தில் இருக்கிற ஒரு உயிர் ஒரு செகண்ட் நம்ப விட்டிருந்தாலும் போய் இருக்குமே
அன்னைக்கு நான் ஒரு செகண்ட் மகாவை பார்க்காமல் இருந்திருந்தால் மச்சான் அதையே நினைச்சுட்டு இருக்காதடா என்று கூறினான் உதிரன் அவன் அவ்வாறு கூறினாலும் அவனுக்கும் அன்றைய நினைவு தான் தோன்றியது அதேபோல் மகிழுக்கும் அன்றைய நினைவுதான் நினைவில் வந்து சென்றது ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போல் இரவு வேளையில் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக மாடியில் சாப்பிடலாம் என்று எண்ணி மாடிக்கு சாப்பிட சென்றிருந்தார்கள்
அப்போது அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கரண்ட் நின்று விட்டது அப்போது அவர்கள் வீட்டில் யூபிஎஸ் மாடியில் மட்டும் வொர்க் ஆகாமல் இருந்ததால் அனைவரும் மொட்டை மாடிக்கு சாப்பிட வரும் நிலையில் கையில் போன் வைத்திருக்க மாட்டார்கள் அதுவும் மொட்டை மாடிக்கு வந்து விட்டால் யாரோ ஒருவர் மட்டும்தான் போன் எடுத்துக் கொண்டு வருவார்கள் அவசரத்திற்காக மற்றபடி பெரிதாக வேறு யாரும் எடுத்துக் கொண்டு வர மாட்டார்கள்
ஏன் என்றால் மேல சாப்பிட வந்தாள் பேசி கொண்டே சாப்பிடுவார்கள் அதனால் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது கரெண்ட் இல்லை என்று உடன் வீட்டில் உள்ள பெரியவர்கள் கராண்ட் வந்த பிறகு சாப்பிடலாம் அது வரை அமைதியாக இருங்கள் என்று உடன் அவர்களுக்குள் பேசிக்கொண்டு அமைதியாக இருந்தார்கள் அப்போது அரை மணி நேரம் ஆகியும் கரெண்ட் வராததால் அன்று மகிழ் தான் போன் எடுத்து கொண்டு வந்ததால் தனது பாக்கெட்டில் இருக்கும் போனை எடுத்து லைட் அடி
அப்பொழுது அவனது எதிரில் தான் மகா உட்கார்ந்திருந்தால் அவன் லைட் அடித்தவுடன் மகாவின் மேல் தான் லைட் வெளிச்சம் முதலில் பட்டது மாமா என்ன பண்ற என்று கேட்டுக்கொண்டே தனது கண் கூசியதால் தன் கண்ணில் கை வைத்துக் கொண்டே கேட்டால் ஆனால் மகிழ் மகாவை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான் வீட்டில் உள்ள அனைவரும் அவன் மகாவை முறைக்கிறான் என்று எண்ணினார்கள்
ஏன் என்று தெரியாமலே அனைவரும் மகிழையே பார்த்தார்கள் ஆனால் அவன் மகாவை முறைக்கவில்லை மகாவின் பின்பு இருக்கும் பாம்பை பார்த்து முறைத்தான் என்று கூட சொல்ல முடியாது அதிர்ச்சியில் உறைந்திருந்தான் அப்பொழுதுதான் அருகில் இருக்கும் உதிரனிடம் செய்கையால் காட்டி விட்டு போனை அவனது கையில் கொடுத்துவிட்டு மகாவின் பின்பு சென்று அவளது அருகில் இருக்கும் பாம்பை தூக்கி எறிந்தான்
அவன் தூக்கி எறியும் வரை என்ன என்று யாருக்கும் தெரியாது அவன் தூக்கி எறிந்த பிறகு தான் வீட்டில் உள்ள அனைவரும் அது என்ன என்று பார்த்தார்கள் ஆனால் உதிரனின் கையில் போன் வந்தவுடன் உதிரன் பாம்பு என்பதை உணர்ந்து எங்கு கத்தினால் வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவார்களோ இல்லை பாம்பு மகாவை கொத்தி விடுமோ என்று அஞ்சினான்
வீட்டில் உள்ள அனைவரும் ஒரு நிமிடம் அவன் தூக்கி எறிந்தவுடன் பாம்பு என்று உறைத்து நின்றார்கள் பிறகு அனைவருமே மகாவை கட்டிக்கொண்டு அழுதார்கள் அவள் பேய் அறைந்தது போல் இருந்தால் பிறகு தன் வீட்டில் உள்ளவர்கள் தனக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று எண்ணி வருந்துகிறார்கள் என்றவுடன் எனக்கு ஒன்றும் இல்லை நான் நன்றாக தான் இருக்கிறேன்
அதுதான் மகிழ் மாமா என்னை காப்பாற்றி விட்டார்களே என்றால் அப்பொழுதே அந்த நிமிடமே மகிழ் வீட்டில் உள்ள அனைவரையும் மொட்டை மாடியில் இருந்து கீழே அழைத்து வந்து விட்டான் வீட்டில் உள்ள அனைவரும் அதன் பிறகு சாப்பிடவே இல்லை யாரும் யாரையும் சாப்பிடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு கூட இல்லை எல்லாம் பயத்தில் உறைந்து நின்றார்கள் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் மகிழ் பார்க்காமல் இருந்திருந்தால் இப்போது மகா தங்களுடன் இருப்பாளா என்று எண்ணி அஞ்சினார்கள்
சுந்தரி தனது மருமகளை தனது மடியிலே சாய்த்துக் கொண்டு அவளது தலையை கோதிக் கொண்டே இருந்தார் அத்தை எனக்கு ஒன்றுமில்லை நான் நன்றாக தான் இருக்கிறேன் என்று வீட்டில் உள்ள அனைவரிடமே கெஞ்சி கூத்தாடினால் ஆனால் அவளை யாரும் தனியாக விடுவதாக இல்லை அனைவருமே அன்று வரவேற்பு அறையில் தான் உட்கார்ந்து இருந்தார்கள் அன்று இரவு முழுவதும் வீட்டில் உள்ள யாருமே தூங்கவில்லை
அனைவருமே இதையேதான் யோசித்துக் கொண்டிருந்தார்கள் அன்றிலிருந்து மகா மட்டும் இல்லை யார் இரவுகளில் மொட்டைமாடி சென்று சாப்பிடலாம் என்று கேட்டாலும் கத்த ஆரம்பித்தான் புதிதில் சிறியவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள் பிறகு அவன் கத்துகிறான் என்றவுடன் அனைவருமே கேட்பதை நிறுத்திவிட்டார்கள் இப்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆசையாக இருந்தாலும் மகிழ் கத்துவான் என்பதற்காகவும் அன்று போல் இன்றும் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வது என்று அஞ்சியும் மகிழ் இடம் கேட்பதில்லை
கேட்டாலும் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் கத்துவான் என்று வீட்டில் அனைவருக்கும் தெரியும் அதனால் தங்களுக்குள் ஆசை இருந்தாலும் யாரும் கேட்கவில்லை இன்று வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆசை இருப்பதாலும் இதழினி தான் எனது அண்ணனின் தங்கையாகவும் எனது பெற்றோர்களின் மகளாகவும் மொட்டை மாடியில் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதனால் தான் மகா இன்று மகிழனிடமும் உதிரனிடமும் கேட்டால்
அதற்கு தான் இப்பொழுது மகிழன் கையால் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறாள் மகா அதுதான் இருவரும் இன்று யோசித்துப் பார்த்தார்கள் பிறகு சரி வா மாப்பிள்ள எல்லோரும் சென்று விட்டார்கள் என்று உதிரன் கூறியவுடன் மகிழும் தனது முகத்தை கழுவிக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றான் அப்போது அனைவரும் அனைத்தும் எடுத்து வைத்துக் கொண்டு தட்டையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்
மகிழன் வேகமாக சென்று மகாவின் அருகில் உட்காரச் சென்றான் அப்பொழுது அகல் நிலா மகா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தனக்கும் தனது உதிரன் அண்ணனுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் மகிழை உட்கார வைத்தால் மகிழ் முறைத்து பார்த்துக் கொண்டே அங்கு அமர்ந்தான் பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்குள் அனைவருக்கும் பரிமாறினார்கள்
அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பல கதைகள் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள் திருமணத்தின் வேலை எவ்வாறு செல்கிறது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கேட்க கேட்க மகிழ் பதில் கூறிக்கொண்டே சாப்பிட்டான் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் சாப்பிட வந்தால் பல கதைகள் பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள் இன்றும் அதே போல பல கதைகள் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்
கிழே சாப்பிட்டால் பேசாமல் சாப்பிட வேண்டும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் பேச வேண்டும் ஆனால் மொட்டை மாடிக்கு வந்தாள் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆகும் அனைவரும் ஒன்றாக வந்து சாப்பிட்டு பேசிக்கொண்டே தான் இருப்பார்கள் பிறகு 2 மணி நேரம் கழித்து தான் கீழே செல்வார்கள் எப்பொழுதுமே இது அவர்கள் வீட்டில் நடக்கும் பழக்கம் தான்
அனைவரும் திருமணத்தைப் பற்றி பேசி கொண்டும் இளையவர்கள் எல்லாம் என்ன துணி எப்போது போடலாம் என்று தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டவர்கள் பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு சரி நேரம் ஆகிறது கீழே செல்லலாம் என்று எண்ணி அனைத்து உணவு பதார்த்தங்களையும் கீழே எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் ஒவ்வொருவரும் அவர்களாக ஒவ்வொரு உணவு பதார்த்துடன் எடுத்துக் கொண்டு கீழே சென்று விட்டார்கள்
அப்போது பாட்டி தான் டேய் எல்லாரும் போய் தூங்குங்க மூன்று பேரும் ஃபர்ஸ்ட் போய் தூங்குங்கடி நீங்கள் தூங்கினாலே வீட்ல இருக்க எல்லாரும் தூங்கிடுவாங்க நீங்க தூங்காத்தது மட்டும் இல்லம்மா அவ தூக்கத்தையும் கெடுக்காதீங்க என்று விட்டு சென்றார் அந்த மூன்று வானரங்களும் பாண்டியம்மா பாட்டிக்கு பழுப்பு காட்டிவிட்டு அவர்களது அறைக்குச் சென்றார்கள்
இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தனித்தனி அறை அருகே அருகே இருக்கிறது அவர்கள் சிறுவயதாக இருக்கும் பொழுது அனைவரும் ஒரே அறையில் தான் இருந்தார்கள் அவர்களுக்கும் வயது கூட அவர்களுக்கு என்று தனி அறையில் வேண்டும் என்பதால் தனித்தனி அறை தான் கட்டியிருக்கிறார்கள்
அவர்களுக்கு விருப்பமாக இருக்கும்பொழுது அனைவரும் ஒரே அறையில் இருந்து கொள்வார்கள் மற்றபடி தனித்தனியாக தான் ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்யும்போது அப்பொழுது கட்ட முடியாது என்பதால் அவர்கள் அனைவரும் வயதிற்கு ஏற்ப கட்டிவிட்டார் வீட்டில் உள்ள பெரியவர்கள்
அனைவரும் அவர்களது அறைக்குச் சென்றவுடன் மகா அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு மாடிக்கு சென்றால் அப்போது மகிழ் அனைவரும் சாப்பிட்டு கீழே சென்றவுடன் அவன் கீழே வராமல் மொட்டை மாடியில் தான் நின்று கொண்டு இருந்தான் மகிழ் அங்கு நிற்பதை பார்த்தவுடன் மாமா என்று அழைத்துக் கொண்டு அவனது அருகில் சென்றால் மகிழ் மகாவின் குரலை கேட்டவுடன் திரும்பி நின்று அவளை வேகமாக கட்டி அணைத்துக் கொண்டு மயிலு ஏண்டி என் உயிரை இப்படி வாங்குகிறாய்
நீ செய்வது சரியா நானே உன்னை அடிக்கும்படியாக செய்து விட்டாயே என்று கூறி அவளது தோளிலே சாய்ந்து கொண்டு அழுதான் தனது மாமாவின் கண்ணீர் துளிகள் தன் முதுகில் பட்டவுடன் மாமா என்ன செய்கிறாய் என்றால் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு கட்டி அணைத்துக் கொண்டு இருப்பதை இரண்டு கண்கள் பார்த்தது .
மகா மற்றும் மகிழ் இருவருக்கும் இடையே உள்ள உறவு என்ன .. ???
இப்பொழுது இவர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு நிற்கும் கோலத்தை பார்த்த இரண்டு உருவங்கள் யார் … ???
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன் ..
❣️தனிமையின் காதலி❣️
Very nice epi
Very interesting