மகிழ் அந்த மூன்று வானரங்களையும் முறைத்துக் கொண்டே நலங்கு வைக்கும் இடத்திற்கு வந்தான் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து என்ன என்று கேட்டான் அப்போது இதழினி தான் தனது அண்ணனை பார்த்து அண்ணா எங்கு போய் இருந்த இவ்வளவு நேரம் எனக்கு நலங்கு வைக்கும் போது நீ என் உடனே இருக்க மாட்டாயா என்றால்
இதழு இது என்ன பேச்சு உன் கூடையே இருந்தால் இருக்கும் வேலைகளை யார் பார்ப்பது நலங்கு வைக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை அதான் இத்தனை பேர் இருக்கிறார்கள் அல்லவா என்றான் இத்தனை பேர் இருந்தாலும் எனக்கு நீ என் அருகில் இருப்பது போல் இருக்குமா என்றால் அவன் தனது தங்கையின் தலையை தடவி விட்டு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது
இதழு இந்த அண்ணன் உன் கூட எப்பவுமே இருப்பேன் என்றான் பிறகு அண்ணா எனக்கு நீ நலங்கு வை என்றால் விளையாடாதே இது எல்லாம் பொம்பளைங்க தான் செய்வார்கள் என்ன செய்ய சொல்ற என்றான் அண்ணா எனக்கு அம்மா அப்பா அண்ணன் எல்லாமே நீதான அண்ணா நீ நலங்கு வச்ச தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும் என் நலங்கும் முழுமை அடையும் என்றால்
அப்பொழுது பாண்டியம்மாள் தான் நீ வைடா பேராண்டி அவ சொல்ற மாதிரி அவளுக்கு அம்மாவே நீதான் பொம்பளைங்க தான் வைக்கணும் எந்த அவசியமும் இல்லை மனசு வந்து யாரு வச்சாலும் சரி தான் நீ வை டா என்றவுடன் அவன் தனது வேட்டியை கீழே அவிழ்த்துவிட்டு தனது சட்டை பாக்கெட்டில் இருக்கும் போனை தனது பாட்டி இடம் கொடுத்துவிட்டு நலங்கு வைக்கும் இடத்திற்கு வந்தான்
அப்பொழுது உதிரனை பார்த்து மாப்பிள்ளை என்னை மன்னிச்சுடுற இதழு இப்படி சொன்னதுக்காக தப்பா எடுத்துக்காத என்றான் உதிரன் சிரித்துக் கொண்டே மச்சான் உன் தங்கச்சி சொன்னதுல நான் தப்பா எடுத்துக்க வேண்டிய அவசியமே இல்லை அவ சொல்றது உண்மைதானே நீ நலங்கு வை என்று உடன் முதலில் உதிரனுக்கு நலங்கு வைத்துவிட்டு பிறகு தனது தங்கைக்கும் நலங்கு வைத்தான்
சரிடா உதிர அதான் நலங்கு வச்சாசி இல்ல நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வாங்க என்றான் இல்லை நாங்க அப்புறமா சாப்பிட்டுக் கொள்கிறோம் என்றான் மகிழ் அந்த மூன்று வானரங்களையும் பார்த்து அங்கு இருவரையும் சாப்பிட அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு பந்தி பரிமாறும் இடத்திற்கு தனது பாட்டியிடம் இருந்து போனை வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வேட்டியை திரும்ப மடித்து கட்டிக்கொண்டு பந்திப் பரிமாறும் இடத்திற்குச் சென்றான்
அவன் செல்லும் அழகியே அந்த மூன்று வானரங்களும் பார்த்துக் கொண்டிருந்தது பிறகு அண்ணா வா சாப்பிட போலாம் என்றார்கள் இல்லனா அப்புறமா சாப்பிட்டுக்கலாம் நீ வா அண்ணா அப்பறமா நாங்கல்லாம் சாப்பிட்டு கொள்கிறோம் உங்க ரெண்டு பேரையும் மாமா வரச்சொல்லுச்சுல்ல என்றார்கள் அப்புறமா சாப்பிட்டுக்கலாம் என்றான்
இல்ல நீங்க ரெண்டு பேரும் வேறு எதுவும் பேசாதீங்க ஒழுங்கா சாப்பிட வாங்க என்றவுடன் சரி என்று இருவரும் பந்தி பரிமாறும் இடத்திற்குச் சென்றார்கள் அவர்கள் இருவரும் வந்து உட்கார்ந்தவுடன் மகிழும் தனது தங்கைக்கும் மச்சானுக்கும் பரிமாற வந்துவிட்டோன். பிறகு ஒவ்வொன்றாக பரிமாறிக் கொண்டு இருந்தான்
அப்போது மகிழ் தனது தங்கிடமும் மச்சனிடமும் ஒழுங்கா சாப்பிடுங்க என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு உணவு பதார்த்தங்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் அப்போது அந்த மூன்று வானரங்களும் மாமா நாங்க இருக்கோம்ல நாங்க பரிமாறோம் நீங்க போயிட்டு மத்தவங்கள பாருங்க என்றார்கள்
அவனும் அந்த மூன்று வானவர்களும் சொன்னதும் சரியென்று விட்டு அமைதியாக மற்றவர்களுக்கு பரிமாற சென்று விட்டான் அப்பொழுது அனைத்து பதார்த்தங்களும் பரிமாறிய பிறகும் இதழினி சாப்பிடாமல் இருந்தால் அனைவரும் ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய் என்று கேட்டார்கள் இதழினி தனது அண்ணனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்
அனைவருக்கும் தெரியும் அவள் தனது அண்ணன் ஊட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் என்று எல்லா நேரங்களிலும் எதிர்பார்க்க மாட்டாள் எப்போதாவது அவளுக்கு தோன்றினால் அப்போது தனது அண்ணன் தனக்கு ஒரு வாயாவது ஊட்டி விட்டுவிட வேண்டும் என்று எண்ணுவாள். அது போல் தான் இன்றும் நினைக்கிறாள் ஆனால் இப்பொழுது இத்தனை பேர் முன்பும் அதுவும் அவன் பந்தி பரிமாறிக் கொண்டு இருக்கும் வேலையில் இது நடப்பது சாத்தியமா என்று என்னை விட்டு அனைவரும் நீயே சாப்பிடு என்றார்கள்
அப்போதும் அவள் மகிழையே பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த மூன்று வானவர்களின் சின்ன வாலு அகல் தான் மாமா என்று வேகமாக கத்தினாள் என்ன என்று கேட்டான் அவனும் பிறகு தனது தங்கை சாப்பிடாமல் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான் இதழு வர வர ரொம்ப பண்ற உனக்கு செல்லம் கொடுத்து தப்பா போச்சு இத்தனை பேர் இருக்கும் போது அதும் இந்த மாதிரி நேரத்துல நீ எதிர்பார்க்கிறது தப்பில்லையா
அவன் தனது மச்சானின் முகத்தையும் பார்த்தான் உதிரனின் முகம் லேசாக வருத்தத்துடன் தான் இருந்தது இருந்தாலும் அவன் அமைதியாக தான் இருந்தான் இந்த மாதிரி எல்லாம் செய்யாத இதுவே அண்ணன் உன்னோட எல்லா நேரத்திலும் கூட இருக்க முடியாது என்றான் என் அண்ணன் எனக்கு தேவைப்படும் நேரத்தில் என்னுடன் இருப்பார் அதை யாராலும் தடுக்க முடியாது
எப்பொழுதெல்லாம் தேவை என்று நான் யோசிக்கிறேனோ அப்பொழுது எல்லாம் என்னுடன் இருப்பார் என்றால் எல்லா நேரத்திலும் என்னால் உன்னுடன் இருந்து கொண்டிருக்க முடியாது எனக்கும் வேலைகள் இருக்கும் நான் எல்லா நேரங்களில் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் இதுவரையும் அது போல் இருந்ததும் இல்லையே எனக்கு தேவைப்படும்போது நீ இருப்பாய் என்றாள்
உனக்கு தேவைப்படும்போது நீ கூப்பிடாம நான் உன் உடனே இருப்பேன் ஆனால் எல்லா சூழ்நிலையிலும் இருப்பேன் என்று இல்லை என்றான் சரி இதற்கு மேல் இதை நான் பேச விரும்பவில்லை என்று விட்டு அமைதியாக தனது அண்ணன் ஊட்டிவிடும் சாப்பாட்டை சாப்பிட்டால் அவனும் இரண்டு வாய் ஊட்டி விட்டு சென்று விட்டான் அவன் செல்லும் முன்பு உதிரனை பார்த்து தலையை மட்டும் அசைத்து விட்டு சென்றான்
அவன் எதற்காக அசைத்தான் என்று காரணத்தை உதிர் அறிவான் அதனால் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருவரும் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டார்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள் என்னடா சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டார்கள் பாண்டியம்மா அதெல்லாம் ஆட்சி பாட்டி என்றான் உதிரன் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள் அப்பொழுது இதழினி முகம் வாடி இருந்தது வீட்டில் உள்ளவர்கள் என்ன என்று கேட்டார்கள்
அந்த மூன்று வானவர்களும் நடந்த அனைத்தையும் சொன்னவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இதழிநியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இவள் சொல்வது போல் எல்லா நேரங்களிலும் அவனால் வந்து நிற்க முடியாது சூழ்நிலை காரணமாக அவனால் வர இயலாமல் கூட செல்லுமே இவள் இப்படி பேசுவது சரியா என்று எண்ணினார்கள் ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் நாம் பேச வேண்டாம்
கல்யாண பெண் இவள் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று விட்டு அமைதியாக இருந்தார்கள் பிறகு கோதை தான் தனது மருமகளை தனது மடியில் சாய்த்து கொண்டார் அவளும் சரி என்று விட்டு தனது சிறிய அத்தையின் மடியில் அமைதியாக படுத்திருந்தாள் பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் சாப்பிட வர சொல்லி மகிழ ஒருவரிடம் சொல்லி இருந்தான் அப்போது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவதற்கு சென்றார்கள்
நீங்களும் வாங்க என்று அந்த மூன்று பெண்களையும் கூப்பிட்டார்கள் மூன்று பேத்தியும் பாண்டியம்மாள் கூப்பிட்டார் நாங்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொள்கிறோம் நீங்கள் சாப்பிடுங்கள் எல்லாரும் தான் இருக்கீங்களா அப்புறம் என்ன என்று சொல்லிவிட்டு பாண்டியம்மா தனது மற்ற இரு பேரனையும் அழைத்தார் சாப்பிடலாம் என்று இருவரும் வந்து நின்றவுடன் அந்த மூன்று பெண்களையும் பார்த்தார்கள்
அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த உடன் பாட்டி நாங்கள் அண்ணன் வந்தவுடன் சாப்பிட்டுக் கொள்கிறோம் நீங்கள் அனைவரும் போய் சாப்பிடுங்கள் என்று சொன்னான் எழில் அனைவரும் ஒன்றாகவே சாப்பிடலாம் என்றார்கள் அண்ணனுடன் சாப்பிட்டுக்கொள்கிறோம் நீங்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிடுங்கள் என்றவுடன் சரி என்று கூறிவிட்டு பாண்டியம்மாள் அனைவரையும் கூப்பிடு கொண்டு வந்து பந்தி பரிமாறும் இடத்திற்கு அழைத்து சென்றார்
அப்பொழுது அந்த மூன்று பெண்களும் பெரியவள் கயல்விழி நடுபவள் மகாலட்சுமி சிறியவள் அகல் நிலா மூவரும் உடனும் அந்த இரண்டு ஆண்களும் கார்முகிலன் உதிரனின் தம்பி எழில் வேந்தன் அக மகிழனின் தம்பி அனைவரும் தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிமாறுவதற்காக பந்திப் பரிமாறும் இடத்திற்கு வந்தார்கள் அப்பொழுது மகிழும் அனைவருக்கும் பரிமாற வந்தான்
டேய் நீங்க எல்லாம் சாப்பிடலையா என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று அனைவரையும் பார்த்து கேட்டான் அந்த மூன்று வானரங்களும் மாமா நீங்கள் சாப்பிடும் போது நாங்கள் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்கள் எல்லாம் அனைவரும் ஒன்றாக உட்காந்து சாப்பிடலாம் அல்லவா என்றான் நாங்கள் அதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் அனைவருக்கும் பரிமாறுங்கள்..
நாங்கள் உங்களுடன் சாப்பிட்டுக்கொள்கிறோம் நீங்கள் ஏன் தனியாக சாப்பிட வேண்டும் என்றாள் அவன் சிரித்துக் கொண்டே அகல் நிலாவின் தலையில் முட்டிவிட்டு சரிடா அகலு மாமா பாக்குறேன் எல்லாத்துக்கும் பரிமாணதும் நம்ப சாப்பிடலாம் என்றான் சரி மாமா நீங்க மற்றவர்களுக்கு பரிமாறுங்கள் நாங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி கொள்கிறோம் என்றார்கள்
அவனுன் முடிஞ்சிடுச்சு நான் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்க வைக்கிறேன் என்றான் சரி என்று கூறிவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துக் கொண்டு இருந்தான் கூடமாட உதிரனின் தம்பியும் கார்முகிலனும் எழிலும் உதவி செய்தார்கள் மற்ற மூன்று பெண்களும் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறினார்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றார்கள்
பிறகு வீட்டில் அனைவரும் நீங்கள் அனைவரும் சாப்பிடுங்கள் அதான் அனைவரும் சாப்பிட முடித்து விட்டார்களே என்றார்கள் இல்லை எல்லாத்தையும் ஒதுங்க வைத்து விட்டு என்று கூறிய உடன் அந்த பாண்டி என்றவன் அண்ணா நான் ஒதுங்க வைத்துக் கொள்கிறேன் நீங்கள் அனைவரும் சாப்பிடுங்கள் நாங்கள் தான் சாப்பிட்டு விட்டோமே என்று கூறி அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்தான்
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் அனைவருக்கும் என்னென்ன தேவை என்று பாண்டியும் அவனுடன் இருந்து இருவரும் கேட்டு கேட்டு பரிமாறினார்கள் ஊருக்கே பந்தி பரிமாறியும் சாதம் மிச்சம் இருந்தது மிச்சம் இருக்கும் சாதத்தை அருகில் உள்ள இயலாதவர்களுக்கு கொடுக்குமாறு கூறியிருந்தான் சரி என்று கூறிவிட்டு ஒரு வண்டியில் அனைத்து சாப்பாடுகளையும் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள் அந்த வேலையும் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தது
அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தார்கள் மகிழ் கைகழுவி விட்டு கை துடைக்கலாம் என்று பார்த்தான் வேஷ்டி கட்டி இருந்ததால் எங்கு துடேய்ப்பது என்று தெரியாமல் இருந்தான் அப்பொழுது மகாலட்சுமி தனக்குப் பின் கைகழுவி கொண்டு வருவதை பார்த்தவுடன் அவளது முந்தியில் தனது கையை துடைத்தான்
வீட்டில் உள்ள அனைவரும் அவனை திரும்பி பார்த்தார்கள் வீட்டில் அத்தனை பேர் இருக்கும் வேளையில் மற்ற இரு பெண்களையும் விட்டுவிட்டு ஏன் அக மகிழன் மகாலட்சுமியின் முந்தியில் மட்டும் கை துடித்தான் வீட்டில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் தவறாக நினைப்பார்களா ..
இல்லை ஏன் அவர்கள் அனைவரும் இவனையும் பார்த்தார்கள் ..
என்பதை நாம் வரும் பதிவுகளை பார்க்கலாம்..
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
கதையின் நகர்வு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
யாராவது ஜோடி யார் என்று கண்டுபிடித்தாள் கமெண்டில் சொல்லுங்கள்..
அருமை
நன்றி
கதாபாத்திரம் கொஞ்சம் தெளிவாக சொன்னால் நல்லது
Enava irukum