மகா மகிழை சாப்பிட வா மாமா என்று கூப்பிட்டவுடன் மகிழ் மகாவை அடிக்க கை ஓங்கினான் உதிரன் வந்து தடுத்து மகிழ் என்ன செய்கிறாய் என்றவுடன் மகாவை முறைத்தான் மகா கண்ணில் இருந்த நீர் வடிந்தது அவள் அழுகிறார் என்றவுடன் மகிழ் தாங்க முடியாமல் மச்சான் மரியாதையா அவளை வெளிய கூட்டிட்டு போ என்றான்
தனது மகிழ் மாமா தான் அழுவதை பொறுக்க முடியாமல் தான் இவ்வாறு சொல்கிறார் என்று உணர்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே சென்றாள் அதன் பிறகு உதிரன் மாகிழை வெளியே அழைத்துக் கொண்டு வந்தான் பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் கோதையும் காவேரியும் தான் மகிழுக்கு வந்து ஊட்டி விட்டார்கள்
வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள் இப்படியே அன்றைய நாளும் சென்றது மறுநாள் காலையில் நழுங்க வைத்து மண்டபத்திற்கு எடுத்து செல்வதற்கான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள் அப்படியே மாலையும் சென்றது பிறகு மணமக்கள் இருவரையும் அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்துவிட்டு அப்படியே மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள்
இருவரையும் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கும் மணமகன் மணமகள் அறையில் தங்க வைத்தார்கள் மகாவின் திருமணத்திற்கு கயலுக்கு என எடுக்கப்பட்ட எந்த துணிமணிகளையும் காவேரி கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் திருமணத்திற்கு மகாவிற்கு என என்ன புடவை எடுக்கப்பட்டதோ அந்த புடவையை கட்டிக் கொள்ள சொல்லிட்டார்
மகிழ் மகா திருமணத்திற்கு நான் அவளுக்கு ( கயலுக்கு) என்று எடுத்து எந்த துணியை போட அனுமதிக்க மாட்டேன் என்றார் வீட்டில் உள்ள அனைவரையுமே அமைதியாக காவேரி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்கள் அவள் என்னதான் சொல்ல வருகிறார் என்று எனது மகள் மகாக்கு இந்தத் திருமணத்திற்கு என்று அவளுக்கு அடுத்த புடவையையே கட்டிக் கொள்ளட்டும்
நேரம் இருந்தால் அவளுக்காக நான் புதுசு கூட எடுத்துக்கொண்டு வருகிறேன் இப்பொழுது எனக்கு நேரமில்லை நான் தான் எனது மருமகனுக்கு முன் நின்று அனைத்தும் செய்ய வேண்டும் ஆனால் என்னால் இப்பொழுது புதிதாக துணி எடுத்துக் கொண்டு வர முடியாது என்று மண்டபத்திற்கு வந்த உடனே கூறிவிட்டார் அதனால் வீட்டில் உள்ள யாரும் வேறு எதுவும் பேசவில்லை
இப்பொழுது மகாவிற்கு மேக்கப் செய்யும் பெண்களால் அவளுக்கு என எடுத்த புடவைகள் தான் கட்டிவிட்டார்கள் அவளை முழுவதுமாக அலங்கரித்தார்கள் அலங்கரித்து பின்பும் அவள் நன்றாக தான் இருந்தால் ஆனால் அவளது முகம் வாட்டமாக இருந்தது எவ்வளவு அலங்கரித்து இருந்தாலும் அவளது முகம் வாட்டமாக இருப்பதை வீட்டில் உள்ள அனைவருமே உணர்ந்தார்கள்
ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று அவர்களும் அமைதியாக இருந்தார்கள் ஏன் இவர்கள் இருவரும் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று வீட்டில் உள்ள யாருக்குமே புரியவில்லை ஏனென்றால் மகிழன் கயலை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற பிறகு கூட அவன் விரும்பவில்லையே வீட்டில் பார்த்த பெண் என்பது போல் தானே சாதாரணமாக இருந்தான்
கயலியிடம் எப்பொழுதும் பேசுவது போல் தானே பேசினான் அப்படி இருக்கும் பொழுது ஏன் அவன் மகாவை வேண்டாம் என்று சொல்கிறான் மகாவும் ஏன் வேண்டாம் என்று சொல்கிறாள் ஒருவேளை மகா கயலை விரும்பி இருப்பான் என்று எண்ணுகிறாளோ என்று கூட எண்ணி மகாவிடம் பேசினார்கள் அப்பொழுது மகா சிரித்துக்கொண்டே எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று தான் சொன்னேன் தவிர மகிழ் மாமாவின் மனதில் கயல் இருக்கிறாள் என்று நான் சொல்லவில்லையே
நான் அப்படி எண்ணவும் இல்லை மகிழ் மாமா மனதில் யாரும் இல்லை என்று எனக்கு தெரியும் என்றால் அப்பொழுது நீ ஏன் இப்படி இருக்கிறாய் திருமணமும் வேண்டாம் என்று சொல்கிறாய் என்று காவேரி கேட்டார் பெரிம்மா எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொன்னேன் நீங்கள் தான் ஒத்துக்கொள்ளவில்லை திருமணம் என்று முடிவாகிய பின் அதைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால்
சரிதான் மகா அப்பொழுது நீ சிரித்த முகமாக இருக்கலாமே என்றார் அவள் சிரித்துக் கொண்டே வேறு எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டாள் இவள் ஏன் இவ்வாறு செய்கிறாள் என்றும் புரியவில்லை மகிழ் ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறேன் என்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு புரியவில்லை இப்பொழுது திருமணம் நிற்காமல் நடக்க வேண்டும் என்று எண்ணினார்கள் ஆகையால் திருமணம் இப்பொழுது நடைபெறுகிறது
இப்பொழுது இவர்கள் இருவரும் திருமணம் வேண்டாம் என்று சொன்னாலும் பிற்காலத்தில் நன்றாக வாழ்வார்கள் என்று வீட்டில் அனைவரும் எண்ணினார்கள் ஏனென்றால் இருவருக்கும் அப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறது அது மட்டும் இல்லாமல் மகா எல்லா இடத்திலும் எல்லோரிடமும் விட்டுக்கொடுத்து செல்பவள்
அப்படி இருப்பவள் மகிழ் இடம் விட்டுக்கொடுத்து செல்ல மாட்டாளா என்று எண்ணினார்கள்
இப்படியே மாலைப் பொழுதும் ஆகியது மணமக்களை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள் இப்பொழுது நேரம் ஆகிறது என்று எண்ணி பொண்ணு மாப்பிள்ளை அழைச்சிட்டு வந்து நிச்சயதார்த்தத்தை முடித்து விடலாம் என்று எண்ணினார்கள்
முதலில் மணமகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள் உதிரன் தான் சென்று மகிழனை அழைத்துக் கொண்டு வந்தான் பிறகு மணமகளை அழைத்துக் கொண்டு வர நிலா சென்றால் அப்போது இனியும் நிலாவுடன் சென்று இருவரும் சென்று மகாவை அழைத்துக் கொண்டு வந்தார்கள்
கயலுக்கு என்று எடுத்த துணிமணிகளை மகா அணியக்கூடாது மகாவுக்கு என்று எடுத்த உடையை போட்டுக் கொள்ளட்டும் என்றவுடன் வீட்டில் உள்ள யாரும் அதைப்பற்றி அதன் பிறகு பேசவில்லை ஏற்கனவே மகா மகிழனுக்கு பிடித்த நிறத்தில் தான் இரண்டு புடவைகளையுமே எடுத்து இருந்தால் இப்பொழுது அந்த புடவையில் அம்மன் மகாலட்சுமியாகவே நடந்து வந்தால் சுற்றி இருந்த ஊர் மக்கள் உறவினர்கள் அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்
மகா இந்த புடவையில் நன்றாக இருக்கிறாள் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள் வீட்டில் உள்ளவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவளை பார்க்க வேண்டியவனோ அவளை புகழ வேண்டியவனோ அவளை பார்க்காமல் எனக்கு என்ன வந்தது என்பது போல் யாரோ போல் அமர்ந்து இருந்தான் மகாவும் மகிழன் பார்க்க வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை
அவள் அமைதியாக வீட்டில் உள்ளவர்களுக்காக அவர்களுடன் நடந்து வந்தாள் அப்போது மணமேடைக்கும் ஏறிவிட்டால் மகிழன் தனது வீட்டில் உள்ள இளவட்டங்களுடன் நின்று கொண்டு இருந்தான் மகா அருகில் வந்தவுடன் எழில் தான் தனது அண்ணன் மகிழனைபார்த்துவிட்டு லட்சு செமையா இருக்கு இந்த புடவையில் உன்னை அடித்துக்க ஆளே இல்லை
முதல்ல உனக்கு சுத்தி போடணும் என்றான் இந்த புடவை உனக்கு செமையா இருக்கு இந்த கலர் சூப்பர் என்றான் வீட்டில் உள்ள அனைவரும் சிரித்தார்கள் ஆனால் ஒருவனுக்கு மட்டும் வயிறு எரிந்தது ஏற்கனவே மகிழுக்கு மகாவும் எழிலும் பேசுவது பிடிக்காது என்றெல்லாம் சொல்ல முடியாது ஆனால் மகாவிடம் எழில் பேசும் எல்ல நேரங்களிலும் அவனுக்கு பற்றி கொண்டுதான் இருக்கும்
தன்னைவிட மகாவிற்கு எழில் ஒரு படி மேலோ என்றெல்லாம் கூட நிறைய இடங்களில் யோசித்திருக்கிறான் தனக்கு மகாவை பற்றி தெரியாத விஷயங்கள் கூட இவனுக்கு தெரியும் மகாவின் சிறு சிறு அசைவுகள் கூட அவனுக்கு தெரியும் என்று எத்தனை நாட்களில் எண்ணி இருக்கிறான் இப்படி தனது தம்பி அவளை வர்ணிப்பது அவனுக்கு சிறிது புகைச்சலை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்
அப்பொழுது தனது தம்பியை திரும்பி முறைத்து பார்த்தான் எழில் சரி நேரம் ஆகுது என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே வெளியே தனது அண்ணனை முறைத்துவிட்டு நீ வா லட்சு என்று தனது அண்ணன் அருகில் மகாவின் தோளில் கை போட்டு அழைத்துக் கொண்டு வந்து தனது அண்ணனின் அருகில் நிற்க வைத்தான்
வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள் மகிழனை பார்த்து ஊரில் உள்ளவர்களும் ஜோடி பொருத்தம் அழகாக இருக்கிறது என்று பேசினார்கள் அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகாக இருந்தது இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள் மோதிரம் எல்லாம் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை வீட்டில் உள்ள பெரியவர்களும் தாம்பூலம் தட்டு மட்டும் மாற்றி கொண்டார்கள்
இப்படி சொந்த பந்தங்களுடன் ஊரார்கள் மற்றும் குடும்பத்தினர்களின் முன்னிலையில் மகா மகிழ் நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடைபெற்றது பந்தியும் பரிமாறப்பட்டது வீட்டில் உள்ளவர்கள் ஓடியாடி திருமணத்திற்கு வந்த அனைவரையும் நன்றாக உபசரித்து அனுப்பினார்கள் இறுதியில் தான் மணமக்கள் சாப்பிட சென்றார்கள் நிலா தான் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள்
இருவரும் வேண்டாம் என்றார்கள் அமைதியாக வாருங்கள் என்று அழைத்துச் சென்றாள் வீட்டில் உள்ளவர்களுக்காக இருவருமே அமைதியாக சாப்பிட சென்றார்கள் அப்போது நிலா தான் என்ன மாமா இப்படி அமைதியாக உட்கார்ந்து இருக்கீங்க இலையில சாப்பாடு போட்டச்சு சாப்பிடுங்க என்றால்
அதன் பிறகு மாமா என்றால் சிரித்துக் கொண்டே நிலா குட்டி அமைதியா இருடா என்றான் மகா சாப்பிட அவள் வாயை அருகே கொண்டு சென்ற சாதத்தை தனது அக்காவின் கையை பிடித்துக் கொண்டு தனது மாமாவின் வாயில் வைத்தால் ஆனால் மகிழ் வாய் திறக்காமல் இருந்தான் நிலா தான் மாமா ஆ வாங்கு மாமா எங்களுக்காக என்றால்
நிலா சொன்னால் என்றவுடன் ஆ என்று வாயைத் திறந்தான் ஆனால் மகிழ் அவள் கை சாப்பிட ஊட்ட செல்லும்போது அவளது கையை வேகமாக கடித்து விட்டான் மகா ஒரு நிமிடம் ஆ என்று கத்தினால் ஆனால் சுற்றியுள்ள தனது அண்ணன்கள் தனது நண்பன் தங்கை இருப்பதால் எதுவும் பேசாமல் தனது கையை மெதுவாக எடுத்துக் கொண்டால் அவள் ஆ என்று கத்திய உடனே மகிழுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது
வெளியே ஒன்றும் தெரியாதது போல் எதுவும் பண்ணாமல் பேசாமல் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு ஒன்றுமில்லை சும்மாதான் என்றான் மகாவிற்கு ரொம்பவே வலி எடுக்க செய்தது இருந்தாலும் ஒன்றும் இல்லை என்று வெளியே தன்னுடைய குடும்பத்திற்காக சிரித்துக் கொண்டே சொன்னால் அப்பொழுது முகிலன் நிலாவை நிலா குட்டி நாம் போய் அங்கே பார்க்கலாம் வா என்று அழைத்துக் கொண்டு சென்றான்
நிலா அந்தப் பக்கம் நடந்த உடன் எழில் தான் தனது அண்ணனை முறைத்து பார்த்துக் கொண்டே என்ன நெனச்சிட்டு இருக்க உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை தான் என்று எங்க எல்லாத்துக்கும் தெரியுது ஆனால் நிலா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க வேண்டும் என்று எண்ணி தான் உன்னை மகாவுக்கு ஊட்டி விட சொன்னாள் நீ ஊட்டவில்லை என்றவுடன் மகாவின் கை பிடித்து அவளை உனக்கு ஊட்ட வைத்தால்
ஆனால் நீ என்ன பண்ணிட்டு இருக்க அப்படி என்ன உனக்கு மகா மேல வெறுப்பு அவள் என்ன அப்படி தப்பு பண்ண வீட்டில் உள்ளவர்களுக்காக உன்னை கல்யாணம் பண்றதுக்காக உன் கூட இவ்வளவு தூரம் வந்து நிற்கிறாள் இதில் அவள் தப்பு என்ன இருக்கு அதுக்காக அவள் கையை அப்படி கடிச்சிருக்க அவ கைல ரத்தம் வருது பார் என்றான் அவளது கையை தூக்கி மகிழ் முன்பு காட்டிவிட்டு கையை கீழே போட்டுவிட்டு தனது அண்ணனையும் முறைத்து விட்டு வேகமாகச் சென்றான்
உதிரனுக்கு அங்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை எதுவும் பேசாமல் அமைதியாக எழில் உடனே சென்று விட்டான் தனது வீட்டில் உள்ளவர்கள் யாரும் இல்லை என்றவுடன் மகா தனது இலையை மூடி வைத்துவிட்டு வேகமாக எழுந்து விட்டால் மகிழுக்கு கஷ்டமாக இருந்தது அவளை அவன் வேண்டும் என்று கடிக்க வேண்டும் என்று எல்லாம் எண்ணவில்லை ஆனால் அந்த நிமிடம் அவள் மேல் இருந்த கோபத்தில் அவன் கையை கடித்து விட்டான் ஆனால் அது இந்த அளவிற்கு இரத்தம் வரும் அளவிற்கு ஆகும் என்றெல்லாம் அவனும் எண்ணவில்லை
எழில் மகாவின் கை தூக்கி காண்பித்த பிறகுதான் அவளது கையில் ரத்தம் வருவதையே அவன் பார்த்தான் அந்த நிமிடம் அவனுக்கு கஷ்டமாக ஆகிவிட்டது சரி அனைவரும் சென்ற பிறகு அவளிடம் பேசலாம் என்று எண்ணினான் ஆனால் அவள் அவர்கள் எல்லோரும் சென்ற பிறகு இலையை முடி வைத்து விட்டு செல்வாள் என்றெல்லாம் அவன் எண்ணவில்லை பிறகு அவனும் சுற்றி பார்த்துவிட்டு அவனது இலையை மூடி வைத்துவிட்டு அவனது அறைக்கை சென்றான்
வீட்டில் உள்ள மற்றவர்கள் பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டார்கள் இப்படி அன்று இரவு நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது நாளை காலை பிரம்ம முகூர்த்தத்தில் காலை 4.30 to 6 மகா மகிழ் திருமணம் அனைவரும் வந்து விடுங்கள்…
மகிழ் மகா இருவரின் திருமணமும் எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறுகிறதா …
என்பதை நாம் அடுத்த பதிவில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி ❣️
வாசக நெஞ்சங்களே மறக்காதீங்க நாளைக்கு மகிழ் மகா திருமணம் எல்லாரும் வந்து கலந்து கொண்டு அவர்கள் இருவரையும் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…
பந்தியும் பரிமாறப்படும் உங்களுக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் சொல்லுங்க அதுல போட்டுடலாம்..
அருமை
Nice Yen rendu perum vena solranga ena karanam sollunga sikram. Avan venumne kadikala etho oru kovam ipo kastama iruku la magizh sikram samadhanam agunga
அருமை, அருமை, அருமை.