எழில் மகாவை அழைத்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கினான் அப்பொழுது மகிழும் உதிரனும் ஒரே போல் எழில் என்று கத்தினார்கள் எழில் அவர்கள் இருவரும் அழைப்பதை காதில் வாங்கியும் வாங்காதது போல தனது தோழியான மகாலட்சுமியை கீழே அழைத்துக் கொண்டு வந்து அவளது அறையில் விட்டான் மகா பேசாமல் எழிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்
எழில் வேகமாக மகாவை அறைந்தான் மகா அப்பொழுதும் எழிலையேப் பார்த்துக் கொண்டு அழுதல் பிறகு அவளை தனது நெஞ்சில் சாய்த்து கொண்டு எழிலும் அழுதான் அப்பொழுது மகா தான் வேந்தா என்றால் எதுவும் பேசாதே இதைப் பற்றி நான் உன்னிடம் பேச விரும்பவில்லை அமைதியாக இரு கொஞ்ச நேரம் என்றான் மகாவும் அதன் பிறகு அமைதியாக இருந்தால்
ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தனது நெஞ்சில் இருந்து மகாவை நிமிர்த்தி விட்டு சரி இதையே நினைத்து கொண்டு இருக்காதே வீட்டில் உள்ளவர்கள் உன்னை பார்த்தால் அவர்களுக்கும் சங்கடம் என்று விட்டு தனது கண்ணையும் துடைத்துக் கொண்டு மாகாவின் கண்ணையும் துடைத்துவிட்டு சரி நீ கொஞ்ச நேரம் அமைதியாக ஓய்வெடு என்று விட்டு அவளது அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்
அவன் மகாவின் அறையை திறந்து கொண்டு வெளியே செல்வதற்கும் மகிழனும் உதிரனும் மகாவின் அறைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது எழில் வெளியில் செல்லும்பொழுது இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு சென்றான் அப்பொழுது மகிழ் எழில் தோளில் கை வைக்க வந்தான் அப்போது அங்கு நிலா வந்து நின்றவுடன் எழில் தான் என்னடி குள்ளச்சி என்று கேட்டான்
நிலா எழிலை பார்த்து முறைத்துவிட்டு நீ போட தடிமாடு என்று சொல்லிவிட்டு தனது மகிழ் மாமாவின் அருகில் வந்து நின்றால் என்ன நிலா கூட்டி என்று கேட்டான் அவள் தனது மாமாவின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு தனது அண்ணன் உதிரனிடம் அண்ணா நாளைக்கு நம்ம வெளியே எங்கையாச்சும் போலாமா என்று கேட்டாள் அவள் மகிழனிடம் தான் கேட்க வந்தால் மகிழனிடம் ம் அவளுக்கு நேரடியாக பேச விருப்பமில்லை
அதை மகிழனும் உணர்ந்து விட்டு நிலாவின் தோளில் கை போட்டுக் கொண்டே ஏன் நிலா குட்டிக்கு என் மேல கோவமா அவளோட இந்த மாமா மேல என்றான் அப்போது எழில் தான் குறுக்கே வந்து ஆமாம் ஆமாம் இந்த குள்ளுச்சிக்கு உன் மேல கோவம் தான் போவியா என்று விட்டு நிலாவை பார்த்து சிரித்தான் அப்பொழுது நிலா தான் எழிலை பார்த்து நீ போடா சோத்து மூட்டை என்று சொல்லிவிட்டு முறைத்து பார்த்தால்
அப்பொழுது உதிரன் தான் நிலாவிடம் நிலா என்ன பேச்சு அவன் உன்னோட பெரியவன் இல்லையா இப்படி வாடா போடான்னு பேசுற என்று கேட்டான் எழில் தான் மாமா அவள் சும்மா விளையாட்டுக்கு தான் கூப்பிடுகிறாள் அவளுக்கு எப்படி கூப்பிடனும் தெரியும் நீ கம்முனு இரு என்றான் அப்பொழுது நிலா தான் எழிலை பார்த்து முறைத்துவிட்டு சாரி என்று விட்டு அண்ணா நான் கேட்டதுக்கு பதில் என்று மகிழை பார்த்தாள்
மகிழ் சிரித்துக்கொண்டே நிலாவின் தோளில் கை போட்டு வரவேற்பு அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தான் மகாவும் இவ்வளவு நேரம் இவர்கள் பேசியதை உள்ளிருந்தே கேட்டதால் அவளது அறையில் இருந்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியில் வந்தால் இரவு நேரம் என்பதால் வீட்டில் உள்ள அனைவருமே வரவேற்பரையில் தான் இருந்தார்கள்
காவேரி தான் என்ன நிலா நாளைக்கு போய் கேட்கிறாய் என்றார் ஏன் பெரியம்மா வெளிய போக கூடாதா என்றால் அப்போது நிலா தான் அதான் கோவிலுக்கு போலையே வெளியே போயிட்டு வரலாம் எல்லாத்துக்கும் கொஞ்சம் மனதுக்கு நிம்மதியாக இருக்கும் என்றாள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நிலா சொல்வது சரி என்று தான் பட்டது
அவர்கள் இருவருக்கும் மனசு கொஞ்சம் லேசாக ஆகும் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொஞ்சம் லேசாகும் என்று எண்ணினார்கள் ஆனால் அதற்கு மகிழ் ஒத்துக் கொள்வானா என்று நினைத்தார்கள் அனைவரும் மகிழ் என்ன சொல்வான் என்று பார்த்தார்கள் அப்பொழுது மகிழ் உடைய போன் அடித்தது மகிழ் போன் எடுத்து பார்த்தான் பாண்டி என்றவுடன் எடுத்து காதில் வைத்தான்
என்ன பாண்டி என்று கேட்டான் அண்ணா நாளைக்கு நம்ம ஒரு முக்கியமான மீட்டிங் போக வேண்டி இருக்கு ஞாபகம் இருக்கா என்றான் அதன் பிறகு தான் மகிழனே அதை உணர்ந்தான் பஞ்சாயத்து ஆபீஸ்லில் இருந்து ஒரு மீட்டிங் இருப்பதை உணர்ந்து விட்டு சரி என்று பாண்டியிடம் சொல்லிவிட்டு ஃபோன் வைத்தான்
பிறகு வீட்டில் அனைவரும் பார்த்துவிட்டு நிலா விடம் சாரி நிலா குட்டி என்னால் வர முடியாது உனக்கு விருப்பம் இருந்தா வீட்ல உள்ளவங்களோட போ இல்லன்னா மாமா நேரம் கிடைக்கும்போது உன்னை கூட்டிட்டு போறேன் என்றான் வீட்டில் அனைவரும் ஏன் என்பது போல் பார்த்தார்கள் நிலா வாய் விட்டே ஏன் என்று கேட்டால்
தனது நிலா குட்டி தன்னிடம் பேசி விட்டால் என்று உடன் அவளது நெற்றியில் முட்டி விட்டு இப்பொழுது பாண்டி எதற்காக போன் செய்தான் என்று தெரியுமா நாளைக்கு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அதற்கு நான் நாளை போய் ஆக வேண்டும் என்றான் அப்போது காவேரி தான் திருமணம் ஆன மறுநாளே நீ வேலைக்கு போக போய் ஆக வேண்டுமா
கோவிலுக்கு தான் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் வெளியே கூட போக வேண்டாம் பரவாயில்லை வீட்டில் இருக்கலாமே ஒரே இரண்டு நாட்கள் சென்றார் வீட்டில் உள்ள அனைவரையும் சுற்றி பார்த்துவிட்டு அத்தை எனக்கு நிறைய வேலை இருக்கு நான் வீட்டையே பார்த்துட்டு இருக்க முடியாது
ஊர் பொது மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு இந்த பதவிக்கு வந்துட்டு இப்ப நம்மளோட தனிப்பட்ட விஷயத்துக்காக இதை தள்ளிப் போட முடியுமா என்றான் அப்பொழுது கருப்பையா தாத்தா தான் அவன் போய்விட்டு வரட்டும் எல்லோரும் அமைதியாக இருங்கள் அதான் நாம் நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு குடும்பமாக போகவில்லையே என்றார்
அப்பொழுது காவேரி தான் இருக்கட்டும் குலதெய்வ கோயிலுக்கு போகவில்லை என்றால் என்ன அவன் வீட்டில் இருக்கட்டுமே என்றார் அப்பொழுது மகா தான் இல்ல பெரியம்மா ஊர் வேலையை பார்க்கட்டும் என்றால் மகிழ் மகாவை பார்த்து முறைத்துவிட்டு அமைதியாக இருந்தான் அவன் போய்விட்டு வரட்டும் என்று வீட்டில் உள்ளவர்களும் ஒரு மனதாக சரி என்று அமைதியாக இருந்தார்கள்
பிறகு அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது மகிழனுடைய போன் அடித்தது அவன் யார் என்று பார்த்து விட்டு தனது போனை சைலண்டில் போட்டுவிட்டு அமைதியாக சாப்பிட்டான் திரும்பவும் அடித்துக் கொண்டே இருந்தது அப்பொழுது அருகில் நிலா தான் இருந்தால் ஏன் மாமா போன் அடித்துக் கொண்டே இருக்கு எடுக்குமாற்ற என்று சொல்லிக் கொண்டே மகிழனுடைய போனை கையில் எடுத்தால்
அவனது ஃபோனில் கயல் என்ற பெயரை பார்த்தவுடன் எதுவும் பேசாமல் தனது மாமாவின் கையிலே வைத்துவிட்டாள் திரும்பவும் போன் அடித்தது வீட்டில் உள்ள அனைவரும் மகிழனையே பார்த்தார்கள் ஏன் இவன் போன் எடுக்காமல் இருக்கிறான் முக்கியமான போனாக இருந்தால் எடுத்து பேசுவானே என்று எண்ணினார்கள் அப்பொழுது மகா தான் எழுந்து வந்து மகிழனின் ஃபோனை எடுத்துப் பார்த்தால்
அதில் கயலுடைய நம்பர் இருந்தவுடன் போனை அட்டென்ட் செய்து மகிழ் மாமா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சாப்பிட்டு பிறகு பேசுவார்கள் என்று மட்டும் சொன்னால் அந்தப் பக்கம் கயல் மகா தான் பேசுகிறாள் என்றவுடன் அவள் கூறிய செய்தியும் கேட்டுவிட்டு போனை அமைதியாக வைத்து விட்டாள் அப்பொழுது மகா மகிழனை முறைத்துக் கொண்டே அடிக்கடி ஒருவர் போன் செய்கிறார்கள் என்றால்
ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தலாம் தவறு இல்லை என்று விட்டு அமைதியாக சாப்பிட உட்கார்ந்தால் வீட்டில் உள்ள அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள் இவள் தான் தனது மகிழக்கு ஏற்றவள் என்றும் எண்ணினார்கள் பிறகு அனைவரும் சாப்பிட்டு எழுந்தார்கள்
மகிழும் சாப்பிட்டுவிட்டு அவனது அறைக்குச் சென்று முதலில் கயலுக்கு போன் செய்து என்ன கயல் எதற்காக இத்தனை முறை அழைத்திருக்கிறாய் என்று கேட்டான் அந்த பக்கம் கயல் சிரித்துக் கொண்டே எப்படி மாமா உன் பொண்டாட்டி கையில் உன் போன் போச்சு என்று கேட்டால் கயல் என்று கத்தினான் போன்ல பேசுறேன் நீ கத்தினாலோ முறைச்சாலோ இந்த பக்கம் எனக்கு ஒன்னும் ஆகாது என்று அவள் சொன்னவுடன் மகிழனுக்கு எனக்கு சிரிப்பு வந்துவிட்டது
நான் நல்லா இருக்கேன் மாமா உன் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சா என்றாள் அதெல்லாம் ஆச்சு என்றான் ஏன் மாமா அப்படி பேசுற நீ விரும்பிய பெண் தானே என்றால் நான் விரும்பியவள் தான் ஆனால் இப்பொழுது விருப்பமே இல்லாமல் தான் திருமணம் செய்து இருக்கிறேன் என்றான்
இந்த வெறுப்பும் ஒரு நாள் விருப்பமாக மாறும் மாமா என்றால் அது அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் இந்த நேரத்தில் போன் செய்திருக்கிறாய் என்ன ஆயிற்று நீ நன்றாக தானே இருக்கிறாய் என்றான் கயல் சிரித்து கொண்டே நான் நன்றாக தான் மாமா இருக்கிறேன் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் உங்கள் திருமணம் எப்படி முடிந்தது என்பதை கேட்பதற்காக தான் போன் செய்தேன் என்றால்
சரி என்று விட்டு சிறிது நேரம் கயலிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ஃபோன் வைத்தான் அப்பொழுது நிலா மகிழனின் அரை கதவை திறந்து கொண்டு வந்தால் அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தால் ஒன்னும் இல்லை நிலா குட்டி சும்மா பேசுவதற்கு தான் என்றவுடன் நிலா தனது மாமாவை முறைத்துவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்
மகாவும் அமைதியாக மகிழனுடைய அறைக்கு வந்தால் அவள் வரும்பொழுது மகிழன் பால்கனியில் நின்று கொண்டு தான் விரும்ப ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் நினைத்துக் கொண்டு இருந்தான் பிறகு கொலுசு ஒலியை வைத்து மகா தான் வருகிறாள் என்று உணர்ந்து விட்டு திரும்பி கூட பார்க்காமல் அமைதியாக இருந்தான் மகாவும் தன்னை தனது மகிழ் மாமா பார்க்க வேண்டும் என்று எண்ணவில்லை
பிறகு அமைதியாக அவனுக்கு என்று எடுத்துக் கொண்டு வந்த பாலை அங்குள்ள உணவு மேசையில் வைத்துவிட்டு ஒரு போர்வை தலகாணியை கீழே எடுத்துப் போட்டால் அவள் செய்யும் செயல்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் போர்வையை கீழே போடுகிறாள் என்றவுடன் அவனது அறைக்குள் சென்றான்
கட்டிலில் இருக்கும் இன்னொரு தலகாணியும் போர்வையும் எடுத்துக்கொண்டு பால் கனிக்கு சென்றான் அவன் செல்லும்பொழுது நான் கீழ படுத்துகிறேன் என்றாள் மகா இப்போ நீ கட்டில்ல படுக்கலனா நான் என்னோட ரூமுக்கு போயிடுவேன் நான் விளையாட்டுக்கு சொல்லல என்று மகிழனை பார்த்து முறைத்துக் கொண்டே சொன்னால்
மகிழ் தனது கையில் இருக்கும் தலையணையை வேகமாக பெட் மீது வீசிவிட்டு எல்லாம் நீ நினைச்சது தான் நடக்கணும் இல்ல என்று போர்வையை அவளது முகத்தில் விச படுவது போல் கட்டிலில் தூக்கி எறிந்தான் அவன் அவ்வாறு கேட்டவுடன் மகா கண்ணில் இருந்து நீர் வடிந்தது அவள் அழுகிறார் என்று உடன் அவளது கண்ணீரை பார்க்கும் சக்தி தனக்கு இல்லை என்று எண்ணிவிட்டு அமைதியாக பால் கனிக்கு சென்றான்
மகாவும் தனது கண்ணீரை துடைத்து விட்டு நேரமாகிறது இந்த பணியில் பால் கனியில் இருந்தால் என்னாவது நாளைக்கு முக்கியமான மீட்டிங் வேற போக வேண்டும் என்று சொன்னீர்களே நேரம் ஆகிறது என்றால் மகாவை பார்த்து முறைத்துக் கொண்டே பால் கனி கதவை சாத்திவிட்டு அமைதியாக வந்து கட்டிலில் படுத்தான் இரவு முழுவதும் இருவருமே தூங்கவில்லை
மகா விடியும் வேலையிலாவது கொஞ்சம் கண் அசந்தால் ஆனால் மகிழ் சுத்தமாக தூங்கவே இல்லை அவனது கண்கள் சிவந்து இருந்தது காலையில் எழுந்தவுடன் ஐந்து மணி போல் எழுந்து குளித்துவிட்டு எழுந்து வந்தான் அவன் நேராக சமையல் அறைக்கு தான் சென்றான் அவனைப் பார்த்துவிட்டு சுந்தரி அவனது கையில் டீ கொடுத்தார் பிறகு மகா எங்கே என்று கேட்டார்
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவுடன் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து விட்டு எத்தனை மணிக்கு போற சாப்பாடு என்ன செய்யறது என்று கேட்டார் அவனும் நான் காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு தான் போவேன் ஏதாவது இருப்பதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு டீ குடித்துவிட்டு அவனது அறைக்குச் சென்று செல்லும் மீட்டிங் இருக்கு என்ன எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் அது என்னென்ன வீட்டில் இருக்கிறது என்று எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்
அவன் அங்கிருக்கும் பைல்களை எடுக்கும் சத்தத்திலே மகா எழுந்து விட்டால் அவள் எழுந்து விட்டு வேகமாக பாத்ரூம் சென்று வந்தால் தன்னுடைய துணி எதுவும் இங்கு இல்லை என்றவுடன் அவளது அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தால் வீட்டில் உள்ள அனைவருமே மகா அவளது அறைக்கு சென்று குளித்துவிட்டு வருவதை பார்த்தார்கள் இருந்தாலும் வேறு எதுவும் கேட்கவில்லை
அவள் குளித்துவிட்டு மகிழனை சாப்பிட அழைத்து வரலாம் நேரம் ஆகிறது என்றதால் அவனது அறைக்கு வந்தால் அப்பொழுது மகிழும் போனில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான் என்ன எப்பொழுது என்று கேட்டுக் கொண்டிருந்தான் அவன் அவ்வாறு கேட்டவுடன் மகா அவனை பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தால்
மகிழ் இப்போது யாரிடம் போனில் பேசினான் ..
எதற்காக என்ன ஏது என்று கேட்டுக் கொண்டிருக்கிறான் ..
அவன் பேசும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று மகாவும் அமைதியாக இருந்தால்…
Yen magizh ivlo kovam unaku konjam marakalame ava inum periya thappu panlaye
எஸ்… வீ ஆர் ஈகர்லி வெயிட்டிங்.
எழில் சொன்னப்படி இவனும் காதலுக்காக வீட்டில் பேசி இருக்கலாமே … இவன் பேச மாட்டானாமா மகா மேல் கோவபட தகுதி இல்லை