மகிழ் மகா எழில் இருவரையும் முறைத்துவிட்டு தன்னுடன் இருப்பவர்களையும் பார்த்துவிட்டு இது என்னுடைய அத்தை மகள் கயல்விழி இது அவளுடைய கணவன் அன்புச்செல்வன் இது என்னுடைய தம்பி எழில்வேந்தன் என்று விட்டு அமைதியாக இருந்தான் அப்பொழுது சுற்றி இருந்தவர்கள் தான் இது என்று மகாவை பார்த்தார்கள் மகிழ் மகாவை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான் எழிலும் கயலும் என்ன சொல்வான் மகிழ் என்று பார்த்தார்கள் ஒரு நிமிடம் கண் மூடி திறந்துவிட்டு இது என்னுடைய மனைவி மகாலட்சுமி என்றான் உங்களுக்கு நேற்று தானே திருமணமானது என்று விட்டு இந்த பெண் தானா என்று கயலை பார்த்தார்கள் கயல் அமைதியாக தான் இருந்தால்அப்பொழுது மகா தான் சார் ப்ளீஸ் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் என்ற உடன் அவர்களும் நாகரிகம் கருதி அமைதியாக அதனால் தான் நம்மிடம் அவருடைய கல்யாணத்தைப் பற்றி பேசவில்லை என்று எண்ணினார்கள் பிறகு மகிழ் மகா இருவருக்கும் கல்யாண வாழ்த்து சொன்னார்கள் சரி என்று விட்டு சாரி சார் என்னுடைய அக்கா மாமாவை பார்த்த ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டார் மன்னித்து விடுங்கள் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் நாங்கள் வேறொரு டேபிளுக்கு சென்று சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று விட்டு தனது மகிழ் மாமாவை பார்த்துக் கொண்டே கயல் அன்பு எழில் மூவரையும் அழைத்துக் கொண்டு வேறு ஒரு டேபிளுக்கு சென்று அமர்ந்தாள் செல்லும் மகாவையே தான் மகிழ் பார்த்துக் கொண்டு இருந்தான் பிறகு தன்னுடன் இருப்பவர்களை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் என்று விட்டு தன் வீட்டு ஆட்கள் இருக்கும் டேபிளுக்கு சென்றான் எழில் தனது அண்ணன் வருவதை பார்த்துவிட்டு போச்சு அண்ணன் வந்து திட்ட போறாங்க என்றான் மகா லேசாக எழிலை பார்த்து சிரித்து விட்டு இப்பொழுது திட்ட மாட்டார் என்றால் அப்பொழுது அவர்கள் இருக்கும் இடத்திற்கு மகிழ் வந்துவிட்டு ஏன்டா வெளியே வந்து இருக்கீங்க என்று மகாவை பார்த்துக் கொண்டே கயலிடம் கேட்டான் கயல் தான் மாமா சாரி மாமா நான் தான் அவர்களை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு வந்தேன் வேண்டுமென்று செய்யவில்லை நீங்கள் இருப்பதை பார்த்தவுடன் ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டேன் உங்களுடன் இருப்பவர்களை நான் பார்க்கவில்லை உங்கள் அருகில் வந்த பிறகு தான் பார்த்தேன் என்றால் சரி சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க மாமாவோ இல்லை அப்போவோ பார்த்தால் தவறாக ஆகிவிடும் என்று விட்டு மகாவின் அருகில் பணத்தை வைத்தான்மகாவும் எதுவும் சொல்லாமல் அந்த பணத்தை தனது கையில் எடுத்துக் கொண்டால் சரி சாப்பிடு சீக்கிரம் கிளம்புங்கள் இவர்களை விட்டு விட்டு நீங்கள் வீட்டுக்கு கிளம்புங்கள் என்று மகாவை பார்த்துக்கொண்டே எழிலிடம் சொல்லிவிட்டு அவன் இருக்கும் டேபிளுக்கு சென்று விட்டான் மகிழ் சென்றவுடன் மகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் பிறகு அவன் கொடுத்த பணத்தை பரிசில் வைத்தால் அப்போது எழில் தான் அடியே எல்லாத்துக்கும் காசு அண்ணன் குடுக்குறார். ஏன் இப்போது கூட நாம் சாப்பிடுவதற்கு பில் அவரே பே பண்ணிவிட்டு கூட சொல்வார் பின்னர் எதற்கு உன்னிடம் பணம் கொடுக்கிறார் அதையும் நீ பத்திரமா எடுத்து உன் பர்சில் வைக்கிற இப்போ அண்ணன் எதுக்குடி காசு கொடுத்துட்டு போறாரு என்றான் அவள் சிரித்து கொண்டே என் புருஷன் கொடுத்தாரு நான் எடுத்துக்கறேன் உனக்கு என்னடா வந்துச்சு என்றாள் கயலும் எழிலும் அவள் அவ்வாறு சொன்னவுடன் முதலில் முறைத்தார்கள் பிறகு இருவருமே சிரித்து விட்டார்கள் அவளும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தால் பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுமகிழும் மீட்டிங் முடித்துவிட்டு சென்று விட்டான் பிறகு எழிலும் மகாவும் கயல் அன்பு இருவரையும் அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு சரி நேரம் ஆகிறது நாங்கள் கிளம்பறேன் என்று கிளம்பி விட்டார்கள் பிறகு இருவரும் மாலை 3 மணி போல் தான் வீட்டிற்கு வந்தார்கள் அப்பொழுது காவேரி தான் வரவேற்பரையில் உட்கார்ந்து இருந்தார் மகா கிச்சனுக்கு சென்று பிளாஸ்க் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது மகா என்று கூப்பிட்டார் அவளும் என்ன பெரியம்மா என்று கேட்டாள் இதேபோல் வேலை இனிமேல் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றவுடன் அமைதியாக இருந்தால் இதுவே கடைசியாக இருக்கட்டும் இந்த வீட்டில் இருந்து யாரும் சென்று யாரையும் பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றார் மகா எதுவும் சொல்லாமல் தனது பெரியம்மாவை பார்த்துவிட்டு மண்டையை மட்டும் ஆட்டிவிட்டு அவளது அறைக்குச் சென்றால் இப்படியே மாலைப் பொழுதும் வந்தது அனைவரும் வீட்டில் உள்ள ஒரு வேலையாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள் மகாவும் அவளது அறையில் இருந்து வெளியில் வந்து வீட்டில் இருக்கும் ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தாள் பிறகு அனைவரும் இரவு உணவு சமைத்துக் கொண்டு இருந்தார்கள் அப்பொழுது இரவு 7 மணி போல் தான் மகிழ் வீட்டிற்கு வந்தான் காலையில் சென்றவன் இரவு 7 மணி அளவில் தான் வீட்டிற்கு வந்தான் அவன் வீட்டிற்கு வந்தவுடன் அவனது அறைக்குச் சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு அவன் வரவேற்புரைக்கு வந்தான் அவன் வீட்டுக்குள் வரும்போது மகா மகிழை பார்த்து விட்டால் பிறகு அவன் முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்தவுடன் மகா டீ போட்டுக் கொண்டு எடுத்துட்டு வந்து மகிழிடம் கொடுத்தால்மகிழ் எதுவும் பேசாமல் அதை எடுத்துக் கொண்டான் ஏன் என்றால் அவனுக்கு இப்போது டீ தேவையானதாக இருந்தது காலையில் இருந்து சரியாக சாப்பிடவும் இல்லை மதிய வேளையில் அவன் பெரிதாக ஒன்றும் சாப்பிடவில்லை அங்கு தனது வீட்டு ஆட்கள் கயல் எழில் அன்பு செல்வன் மகாவை பார்த்தவுடன் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது மகாவை மனதிற்குள் திட்டிக் கொண்டே இருந்தான் பிறகு தனது ஃபோன் எடுத்துப் பார்த்தான் மகா இரண்டு முறை அழைத்து இருக்கிறாள் நாம் தான் வேலையில் பார்க்காமல் விட்டுவிட்டோம் என்று எண்ணிவிட்டு அதே நினைப்பிலே சாப்பிடாமல் விட்டுவிட்டான் மீட்டிங் வந்தவர்களுடன் சாப்பிட்டான் தான் ஆனால் அவ்வளவாக சாப்பிடவில்லை பெரிதாக வெளியில் டீ அடிக்கடி குடிக்க மாட்டான்அப்பொழுது காவேரி தான் சுந்தரி இடம் பார்த்தாயா சுந்தரி மகாவை விட உனக்கு ஒரு நல்ல மருமகள் கிடைத்து விடுவாளா எப்போது எப்படி இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனுக்கு தேவையானதை செய்கிறாள் இவளை விடவா உனக்கு நல்ல மருமகள் கிடைத்துவிடப் போகிறாள் என்றார் காவேரி சுந்தரி காவேரியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு பிறகு ஆமாம் அண்ணி என்றார் பிறகு எட்டு மணி போல் அனைத்து சமையலும் முடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களை சாப்பிட வர சொல்லி இருந்தார்கள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தவுடன் மகிழ் வராமல் இருந்தான் பாட்டி பாண்டியம்மா தான் மகிழை கூப்பிட்டார்கள் இப்பொழுது தான் டீ குடித்தேன் எனக்கு இப்போது வேண்டாம் பெட்டி என்றான் காவேரியும் அதை உணர்ந்து இருந்தால் தனது அம்மாவிடம் ஆமாம் அம்மா அவன் இப்போதுதான் வந்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்பு அப்போது டீ குடித்து விட்டான் என்றவுடன் அவரும் சரி என்று விட்டுவிட்டார்சரிடா இன்னும் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிட்டுக் கொள் என்றார் காவேரி அப்பொழுது நிலா தான் அப்போ நான் மாமா கூடவே சாப்பிடுகிறேன் என்றால் காவேரி நிலாவை முறைத்து விட்டு நீ இப்போது சாப்பிடு அவனுக்கு என்று பொண்டாட்டி இருக்கிறாள் அவள் அவனுடன் சாப்பிட்டு கொள்ளுவாள் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் சிரிப்பு வந்தது ஆனால் நிலா மட்டும் தனது பெரியம்மாவை முறைத்துக் கொண்டு இருந்தால் அவர் நிலாவைப் பார்த்து சிரித்து விட்டு நிலா குட்டி சாப்பிடுடா என்று உடன் தனது பெரியம்மாவை பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக சாப்பிட அமர்ந்தால் மகா தன் அனைவருக்கும் பரிமாறினால் அப்பொழுது மகிழ் நானும் பரிமாறுகிறேன் என்றான் மாமா நானே பரிமாறிக் கொள்கிறேன் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றால் மகிழ் மகாவிடம் எதுவும் பேசாமல் நான் சும்மா தானே இருக்கிறேன் என்றவுடன் வீட்டில் உள்ளவர்களும் சரி என்றார்கள் இனி சரியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக அவளுக்கு பிடித்த உணவு வகைகளை அவளுக்கு எடுத்து வைத்தால் சத்தான ஆகாரங்களையும் அவளுக்கு எடுத்து வைத்தால் அப்பொழுது இனி மகாவை பார்த்து முறைத்துவிட்டு அமைதியாக சாப்பிட்டால் எதுவும் அவளிடம் பேசவில்லை ஏன் திருமணமான நாளிலிருந்து இனி மகாவிடம் பெரிதாக முகம் கொடுத்து கூட பேசவில்லை ஒதுங்கிய தான் செல்கிறாள் அதை வீட்டில் உள்ளவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ எழில் முகில் உதிரன் நிலா அனைவரும் உணர்ந்தார்கள் ஏன் நிலா இதை உணர்ந்து விட்டு நேரடியாக இனி இடமே கேட்க செய்தால் இனி அதற்கு சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தால் நிலா திரும்பவும் கேட்டவுடன் நிலா அனைவரையும் விட சிறியவள் என்பதால் அவளை இப்படி மன வருத்தத்திற்கு உள்ளாக்க கூடாது என்று மகா எனது அண்ணனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னாள் இல்ல அதனால்தான் என்றால் நிலா சிரித்துக் கொண்டே அண்ணி இது உங்களுக்கே ஓவரா இல்ல மகிழ் மாமாவும் தான் மகா அக்காவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார் அப்போது நீங்கள் உங்கள் அண்ணன் என்ற உடன் அவரிடம் மட்டும் பேசுவீர்களா என்றால் இனி சிரித்துக் கொண்டே நான் அண்ணனிடம் கூட சரியாக பேச நீ பார்த்தாயா என்று கேட்டால் அப்போதுதான் நிலாவும் அதையும் உணர்ந்தால் தனது மகிழ் மாமாவிடம் கூட தனது இனி அண்ணி பேசி அவள் பார்க்கவில்லை அதன் பிறகு அவள் அதைப்பற்றி கேட்கவில்லை அனைவரும் சாப்பிட்டு எழுந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் பிறகு நேரமாவதை உணர்ந்து மகிழ் மகா இருவரையும் சாப்பிட சொன்னார்கள் அவர்கள் இருவரும் இன்னும் சில நேரம் கழித்து சாப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்கள்பிறகு அவர்களுக்கு பசிக்கும் போது சாப்பிட்டு கொள்வார்கள் என்று விட்டு அனைவரும் அவர்கள் அறைக்கு தூங்கச் சென்று விட்டார்கள் அனைவரும் சென்ற பிறகு மகா இனி உதிரன் இருக்கும் அறைக்குச் சென்றால் கதவு தாழ்ப்பாள் போடாமல் தான் இருந்தது அதனால் கதவை முதலில் தட்டினால் யார் கதவு தாழ்ப்பாள் போடாமல் தான் இருக்கிறது என்றவுடன் கதவை திறந்து கொண்டு சென்றவுடன் உதிரன் இனி இருவரும் யார் என்று பார்த்தார்கள் மகா என்றவுடன் உதிரன் இப்பொழுது எதற்காக வந்திருக்கிறாள் என்று தெரியாமல் என்ன மகா என்றான் மகா எதுவும் சொல்லாமல் உதிரனிடம் ஒன்றுமில்லை அண்ணா சும்மாதான் என்று விட்டு இனி அருகில் போய் உட்கார்ந்தால் இனி மகாவை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தால் இனி நான் நடந்ததைப் பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை நான் பண்ணியது சரி என்றும் சொல்லவில்லை ஆனால் அதற்காக நீ என்னிடம் இப்படி முகம் கொடுத்து கூட பேசாமல் இருப்பது சரியா நான் எந்த மாதிரி சூழ்நிலையில் இருந்தேன் என்று உனக்கு சொல்ல வேண்டும் என்று இல்லை உனக்கே தெரியும் தானே என்றால் சூழ்நிலை இல்லையடி உன்னால் உன்னால் மட்டும் தான் நீ தான் வேண்டும் என்று இப்படி செய்து விட்டாய் என்று கத்தினால் இனிஅப்பொழுது உதிரன் தான் இனி இப்பொழுது எதற்காக கத்துகிறாய் என்றான் இனி உதிரனை பார்த்து முறைத்து விட்டு என்ன உன் தங்கச்சியை சொன்னதும் உனக்கு கோபம் வருகிறது என்று கேட்டாள் உதிரன் இனிய பார்த்துவிட்டு அமைதியாகி விட்டான் அப்போது மகா தான் என் எனக்கு சப்போர்ட் செய்து கொண்டு வந்து உன்னிடம் இப்பொழுது பேசவில்லை இரவு நேரத்தில் இப்படி கத்த வேண்டாம் என்று தான் இன்னொன்று நீ இப்போது மாசமாக இருக்கிறாய் இந்த நேரத்தில் வேண்டாம் என்று நினைத்திருக்கும் என்றால்இனி மகா மற்றும் உதிரன் இருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தால்..இப்பொழுது மகா இனியிடம் வந்து பேசி இருப்பதால் உதிரன் இனி இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுமா ..இனி மகாவிடம் நல்ல முறையில் இதற்கு முன்பு பழகியது போல் பழகுவாளா..என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️ சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் கதையை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் போர் அடிக்கிறது இல்லை கதை நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லுங்கள் மிக்க நன்றி🙏உங்களின் விமர்சனங்களே என்னை கதையின் அடுத்த பகுதியை எழுத துண்டுகளாக இருக்கும் என்று நம்புகிறேன்
Nice … Interesting
Nee Yen ini ivlo kovama iruka avanga life avanga pesi samadhanam agipanga athuku nee pesama iruntha sari aeiduma ena