மகிழ் பெரியவர்களிடம் நீங்கள் இப்பொழுது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வாருங்கள் மாலை வேளையில் அனைவரும் குடும்பத்துடன் மலைக் கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என்றான் பெரியவர்களும் அவன் இதுவரை ஒத்துக் கொண்டது பெரிய விஷயம் என்று நினைத்து சரி என்று விட்டு குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டார்கள்
சிறியவர்களும் அவர்களது வேலையை பார்க்க கிளம்பிட்டார்கள் மகா நிலாவை அழைத்துக் கொண்டு நிலாவுடைய கல்லூரிக்கு சென்று நிலாவை இறக்கி விட்ட உடன் நிலாவிற்கு பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியர் வந்தார் அவரை பார்த்துவிட்டு மகா ஹாய் வருண் எப்படி இருக்கிறாய் என்று கேட்டால் வருண் என்பவன் எழில் மூலம் மகாவிற்கு பழக்கம்
எழிலும் வருணும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் தான் வேலை செய்வதால் பழக்கம் அதன் மூலமாக மகாவிற்கும் தெரியும் அவனும் ஹாய் மகா எப்படி இருக்கிறாய் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது என்றான் ஆமாம் எனக்கு இந்த பக்கம் வேலை இல்லை வெளியவும் எங்கும் உன்னை பார்க்க முடியவில்லை என்றால் அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நிலா குட் மார்னிங் சார் என்றாள்
குட் மார்னிங் நிலா என்றான் அப்பொழுது எழில் மகாவை பார்த்துவிட்டு மகாவிடம் வந்தான் இப்பதான் வந்தியா மகா என்றான் ஆமாம் என்றாள் ஹேப்பி மார்னிங் வருண் சார் என்றான் வருணும் ஹாப்பி மார்னிங் எழில் என்றான் எழில் அங்கு வந்தவுடன் நிலா எழிலை பார்த்துவிட்டு குட்மார்னிங் சார் என்றாள்
அவனும் குட் மார்னிங் என்று சொன்னவுடன் நிலா அந்த இடத்தை விட்டு வேகமாக அவளது வகுப்பறை நோக்கி சென்று விட்டாள் அப்பொழுது மகா தான் சிரித்துக் கொண்டே எழிலிடம் என்னடா உன்னோட ஆளு உன்னை பார்த்த உடனே சிட்டா பறக்குது என்றாள் அப்பொழுது வருண் தான் என்ன மகா நிலாவுக்கு அக்கா தான நீ நீயே இப்படி பேசுற என்றான்
மகா சிரித்து கொண்டே நிலாவுக்கு அக்காவாக இருந்தாலும் என் பிரண்டுக்கு பிரண்டு தானே என்றால் அது சரி மச்சான் உனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு டா இந்த மாதிரி ஒரு அக்கா கிடைக்கு கொடுத்து வச்சிருக்கணும் என்று எழிலின் தோளில் அடித்தான் அப்பொழுது மகா தான் என்ன வருண் இவன் நிறைய பொண்ணுங்களை சைட் அடிச்சுக்கிட்டு இருக்கானா என்று கேட்டாள்
எழில் மகாவை பார்த்து சிரித்தான் அப்போது வருண் நீ வேற மகா இவன் பின்னாடி நிறைய பொண்ணுங்க லவ் பண்றேன்னு சொல்லி சுத்துதுங்க சைட் அடிக்குதுங்க இவன் எந்த பொண்ணையும் திரும்பி பார்க்குறது இல்லை இவன் கூடவே இருக்கிற என்ன எந்த பொண்ணு கூட பாக்க மாட்டேங்குது என்றான் எழிலும் மகாவும் சிரித்தார்கள்
எனக்கு காலேஜுக்கு நேரமாகுது என்றால் அப்பொழுது வருண் மகா என்றான் என்ன வருண் என்றாள் எப்பொழுது ஜாயின் பண்ற என்றான் மகா எழிலை முறைத்து விட்டு எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று விட்டு சென்று விட்டாள் செல்லும் மகாவையே எழில் பார்த்துக் கொண்டே இருந்தான்
என்னடா மகா இப்படி சொல்லிட்டு போறா என்றான் வருண் அவ வரமாட்டேன் சொன்னாலும் என் அண்ணன் விட்டுருவானா என்ன என்று கூறி எழில் சிரித்தான் அவனுடன் வருனும் சேர்ந்து சிரித்தான் செய்தான் இருவரும் சேர்ந்து சிரித்து விட்டு அவர்களது வேலையை பார்க்கச் சென்றார்கள் இதுவரை மகா வருண் எழில் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நிலாவுடைய நண்பர்கள் பார்த்தார்கள்
என்னடி உங்க அக்கா கிட்ட வருண் சார் எழில் சார் இருவரும் சிரித்து பேசுகிறார்கள் ஏற்கனவே பழக்கம் இருக்கிறதா என்று கேட்டார்கள் ஆமாம் என்னுடைய அக்காவும் எழில் சாரும் நண்பர்கள் என்றால் ஓ அப்படியா அப்போது எழில் சாருக்கு உன்னை தெரியுமா உனக்கு அவரை இதற்கு முன்பே தெரியுமா என்றார்கள் அது எப்படி தெரியாமல் இருக்கும் இருவரும் நண்பர்கள் தானே அதனால் எனக்கு ஏற்கனவே தெரியும் என்றால்
இருவரும் நண்பர்கள் தான இல்லை காதலர்களா என்றார்கள் நிலா தனது நண்பர்களை பார்த்து முறைத்துவிட்டு உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் இதுவரை தவறான கண்ணோட்டத்தில் பழகியது கூட இல்லை உங்களைப் போன்ற ஆட்கள்தான் நண்பர்களாக இருப்பவர்களை கூட தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்று தனது நண்பர்களை முறைத்துவிட்டு அவளது வகுப்பறை நோக்கி சென்றுவிட்டாள்
அப்போ நிலாவின் ஒரு தோழி என்ன டி இப்படி சொல்லிவிட்டு செல்கிறாள் என்றால் அப்புறம் என்ன சொல்லுவாள் நமக்கே தெரியுமே எழில் சார் எப்படி ஆள் என்று அவருடைய குணத்தை பற்றி என்றால் எழில் சார் கல்லூரியில் தான் இப்படி வெளியே யாரிடமும் இப்படியே ஸ்டிக் ஆக நடந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லையே என்றார்கள்
பிறகு சரி வாங்க டி என்ன இருந்தாலும் அவளுடைய அக்காவை பத்தி பேசினா அப்புறம் அவளுக்கு கோபம் வராதா என்று அவர்களுக்குள்ளே பேசி விட்டு அவர்களது வகுப்பறை நோக்கி சென்று விட்டார்கள் நிலா பிறகு தனது நண்பர்களிடம் அன்று முழுவதும் பெரிதாக முகம் கொடுத்து கூட பேசவில்லை எழில் வகுப்பிற்கு வரும் போது கூட நிலாவை கவனித்தான்
அவள் எப்போதும் போல் சிரித்து முகமாக இல்லாமல் சிடு சிடு என்று இருப்பதை உணர்ந்து விட்டு இவளுக்கு என்ன ஆயிற்று எதற்காக இப்படி இருக்கிறாள் என்று எண்ணி விட்டு எப்பொழுதும் போல் பாடம் எடுத்துவிட்டு அமைதியாக சென்று விட்டான் அன்று மாலையும் வந்தது வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மதியம் மூன்று மணி போல் வீட்டிற்கு வந்து விட்டார்கள்
வெளியேவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார்கள் சிறிது நேரம் தூங்கி நான்கரை மணி போல் எழுந்தார்கள் பிறகு தூங்கி எழுந்ததால் குளித்து முடித்து வேறொரு உடை அணிந்து கொண்டு மலை கோவிலுக்கு செல்வதற்கு ரெடியாகிவிட்டோம் என்று நாலரை மணி போல் மகிழுக்கும் போன் செய்து சொல்லிவிட்டார்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் உதிரன் இனி இருவரும் ஆபீஸ் முடிந்து கோவிலுக்கு செல்வதால் சீக்கிரமாகவே வந்து விட்டார்கள்
முகிலும் தனது கடையை சாற்றி விட்டு வந்து விட்டான் மீதம் உள்ளது மகிழ் மகா நிலா எழில் தான் வீட்டில் உள்ளவர்கள் இவர்களை இன்னும் காணவில்லையே என்று புலம்பிக்கொண்டே மகிழுக்கு ஃபோன் செய்தார்கள் அப்பொழுது மகிழ் தான் வருவார்கள் என்று விட்டு தனது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு எழிலுக்கு அழைத்தான்
எழில் தான் அண்ணா மகாவை இன்னும் காணவில்லை என்றான் நான் நிலாவோடு தான் நின்று கொண்டிருக்கிறேன் அவளை கூப்பிட்டேன் அவள் என்னுடன் வரமாட்டேன் என்று விட்டாள் மகா வந்துடன் வரேன் என்று விட்டு ஃபோன் வைத்தான்
தனது அண்ணன் போன் செய்வதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் நிலா ரொம்ப நேரமாக நின்று கொண்டே இருப்பதால் நிலாவிடம் சென்று என்னுடன் வந்து விடு நான் உன்னை அழைத்து செல்கிறேன் வீட்டிற்கு மகா நேராக அண்ணனிடம் சென்று விடுவாள் என்றான் ஆனால் நிலா நான் அக்கா வந்தவுடன் அக்காவுடனே வந்து கொள்கிறேன் நீ வேண்டுமானால் போ என்று சொல்லிவிட்டால்
அதனால் மகா வரும் வரை எழிலும் காத்துக் கொண்டிருந்தான் பிறகு மகா அரை மணி நேரம் கழித்து தான் வந்தால் வரும்போது எழில் ஏன் இவ்வளவு நேரம் என்றான் எழில் மகாவைப் பார்த்தான் அவள் அசவுகரியமாக இருப்பது போல் பதற்றமாக இருந்தால் ஆனால் எழில் அவளுடன் வேறு எதுவும் கேட்கவில்லை வீட்டிற்கு சென்ற பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணினான்
ஆனால் நிலா அவசரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் மகாவை நன்றாக கவனிக்கவில்லை அதனால் மகாவின் முகத்தில் ஒரு பதற்றம் இருப்பதை உணரவில்லை பிறகு எழில் தான் நேரம் ஆவதை உணர்ந்து சரி நீங்கள் இருவரும் கிளம்புங்கள் என்று விட்டு அவனும் வீட்டிற்கு சென்றான் அப்பொழுது அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் நிலாவையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமென்று கேட்டார்கள்
நான் கூப்பிட்டேன் அவள்தான் வரமாட்டேன் என்று விட்டாள் நானும் மகா வந்த உடன் நான் வந்துடேன் என்று விட்டு அவனது அறைக்கு சென்று குளித்து முடித்து கொண்டு வந்தான் பிறகு வண்டி வந்தவுடன் மற்ற அனைவரும் வண்டியில் ஏறி விட்டார்கள் மகா நிலாவை அழைத்துக் கொண்டு பஞ்சாய்த்து ஆபிஸ்க்கு அழைத்து சென்றாள்
அங்கு சென்றவுடன் மகிழ் நிலாவிடம் ஒரு கவரை கொடுத்து முகம் கைகள் கழுவிக்கொண்டு இந்த டிரஸ் போட்டுக்கு வா என்றான் நிலா கவரை பிரித்து பார்த்து விட்டு ஏது மாமா இந்த டிரஸ் என்றாள் எழில் தான் வீட்டுக்கு வந்துட்டு இந்த டிரஸ் உனக்கு எடுத்துட்டு வந்து கொடுத்தான் என்றான் அப்ப அக்காவுக்கு உங்க அக்காவுக்கு உங்க அக்காவே வச்சிருப்பாள் என்றான்
என்ன சரி பவுடர் சீப்புக்கு எங்க போறது என்றால் நிலா எல்லாம் உங்க அக்கா வைத்திருப்பா போ நிலா டைம் ஆகுது என்றவுடன் தனது அக்காவை திரும்பி பார்த்துக் கொண்டே பஞ்சாயத்து அறையில் உள்ள ஒரு அறைக்குச் சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு அங்கையே உடைகளை மாற்றிக்கொண்டு வந்தால்
பிறகு தனது அக்காவிடம் வந்தவுடன் அவள் அவளிடம் இருக்கும் பவுடர் பொட்டு சீப்பு அனைத்தும் கொடுத்தவுடன் மகாவை பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டால் நேரமாவதால் வேறு எதுவும் பேசவில்லை மகிழுக்கு மகா ஒரு மாதிரி இருப்பது போல் அவனுக்கு தெரிந்தது ஆனால் இப்பொழுது எதையும் அவன் கேட்க நினைக்கவில்லை பிறகு இருவரும் கிளம்பி வருவதற்கும் வண்டி வருவதற்கும் கரெக்டா இருந்தது
அவர்கள் முவரும் ஏறியவுடன் வண்டி மலைக்கோவில் நோக்கி சென்றது கோவிலுக்கு சென்றவுடன் வண்டி நின்றவுடன் ஒவ்வொருவராக இறங்கி கோவிலுக்கு சாதாரண பூஜை செய்வதாக தான் சென்றார்கள் அதனால் பூப்பழம் மட்டும் எடுத்துக் கொண்டு அனைவரும் மலை ஏறினார்கள் கருப்பையா பாண்டியம்மா பாட்டியுடன் முகிலும் நிலாவும் பேசிக்கொண்டே அழைத்துக் கொண்டு சென்றார்கள்
பெண்கள் மூவரும் சுந்தரி காவேரி கோதை அவர்கள் முவரும் பேசிக்கொண்டே வந்தார்கள் வேலு கந்தன் மணி மூவரும் பேசிக்கொண்டே வந்தார்கள் உதிரன் இனி உடன் வந்தான் மகாவும் எழிலும் பேசிக் கொண்டு வந்தார்கள் மகிழ் அனைவரையும் முன்னே விட்டு அவன் பின்னாடி வந்து கொண்டிருந்தான் மகா பின்னாடி தனது மகிழ் மாமாவை திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தால்
மகிழ் அவள் பார்க்க பார்க்க அவளையும் பார்த்துக் கொண்டே இவள் முகம் சரியில்லையே ஏதோ ஒரு போல் இருக்கிறால் என்ன என்று தெரியவில்லை மேலே சென்று உடன் கேட்க வேண்டும் என்று எண்ணி விட்டு அமைதியாக வந்தான் அப்பொழுது அனைவரும் பேசிக்கொண்டே மலை ஏறினார்கள் அப்பொழுது மகா மகிழை பார்த்து கொண்டே ஒரு இடத்தில் கல் தடுக்கி கீழே விழப்போனால்
மகிழை பார்த்துக் கொண்டு நடந்ததால் கீழே விழுந்திருப்பாள் அப்பொழுது எழில் உதிரன் கூப்பிட்டான் என்பதால் உதிரன் இரம் பேசிக் கொண்டிருந்தான் அருகில் யாரும் இல்லாமல் அவள் தனியாகத்தான் நடந்து சென்றாள் அவள் கீழே விழ போகிறாள் என்றவுடன் எழில் லட்சு என்றும் மகிழ் மயிலு என்றும் இருவரும் ஆளுக்கு ஒரு புறம் அவளை தாங்கிப் பிடித்தார்கள்
இருவருமே அவளிடம் பார்த்து வரமாட்டாயா என்று கேட்டுக் கொண்டே அவளை நேராக நிற்க வைத்தார்கள் அப்போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவருக்கும் இவளுக்கு என்ன ஆயிற்று என்று எண்ணினார்கள் ஒரு பக்கம் அனைவருக்கும் வருத்தமாக இருந்தது திருமணம் முடிந்த முதல் முறையாக கோவிலுக்கு அழைத்து வரும்பொழுது இப்படியா தடங்கலாகும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லைye என்று எண்ணினார்கள்
தான் கல் தடுக்கி விழுந்தற்கு தன் குடும்பம் இப்படி வருந்துகிறது என்று எண்ணி விட்டு தன் காலில் வரும் ரத்தத்தை மறைத்தால் மறைத்துக் கொண்டே புடவையை சிறிதாக கீழே இறக்கிவிட்டு நடந்தால் எனக்கு ஒன்றும் இல்லை என்றால் சுற்றி உள்ளவர்களை பார்த்து ஆனால் மகிழும் எழிலும் அவளை நம்பவில்லை ஏற்கனவே இருவருமே இவள் ஒரு போல் இருக்கிறாள் என்று எண்ணினார்கள்
இப்பொழுது கல் தடுக்கி வேறு விழுந்தது மட்டுமில்லாமல் எதையோ மறைக்கிறாள் என்று எண்ணிவிட்டு மேலே சென்றவுடன் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு அனைவரும் மேலே சென்று சாமி தரிசனம் செய்தார்கள் வீட்டில் உள்ள அனைவரும் மன சஞ்சலத்தில் இருந்தார்கள் மகா மகிழ் இருவரும் இந்த குடும்பத்திற்காக திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் வாழ்க்கை நல்ல முறையில் தொடங்க வேண்டும் இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று எண்ணினார்கள்
காவிரி தவிர மற்ற அனைவரும் கயல் நன்றாக இருக்க வேண்டும் அவளது கணவன் வீட்டில் கணவன் மாமனார் மாமியார் அனைவரையும் அனுசரித்து வாழ வேண்டும் என்று விரும்பினார்கள் வேண்டினார்கள் அப்பொழுது மகா தான் அம்மா எனக்கு மொத்த குடும்பத்தையும் நீ தான் பாத்துக்கணும் இந்த குடும்பத்துக்காக தான் என் மாமாவை வேணாம்னு சொன்னேன்
இப்போ இதே குடும்பத்துக்காக தான் என் மாமா கையால தாலி கட்டிட்டு வந்து உன்ன பார்கிறேன் எங்க மாமா என்னை மன்னிக்க மாட்டாரு என்று எனக்கு தெரியும் மன்னிக்க கூடிய தப்பு செய்ய வில்லை என்று எனக்கு தெரியும் ஆனா என் மாமா எந்த மனசங்கடமும் இல்லாம சந்தோஷமா வாழனும் அதுக்கு நீ தான் உதவி புரியனும் இந்த குடும்பம் இப்ப இருக்கிறது போல எப்பயும் சந்தோஷமா இருக்கணும் என்று வேண்டினால்
மகா சாமியை தரிசனம் செய்துவிட்டு ஒரு இடத்தில் வந்து உட்கார்த்தால் அவள் உட்கார்ந்தவுடன் மகிழ் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான் அவளது காலை எடுத்து தனது மடியில் வைத்து பார்த்தான் மாமா என்றாள் மகிழ் அவளை நிமிர்ந்து பார்த்த உடன் தானாக வாயை மூடிக்கொண்டால்
என்னடி இது இவ்வளவு ரத்தம் வருது என்று அவளது கட்டவிரலை பிடித்து பார்த்துவிட்டு தனது பேன்ட் பாக்கெட்லில் இருக்கும் கர்சீப் எடுத்து அவளது காலில் கட்டி விட்டான் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் என்னாச்சு மகா ரத்தமா வருது என்று கேட்டுக் கொண்டே வந்தார்கள் அனைவரும் பார்த்தவுடன் மகா தனது காலை எடுத்துக் கொண்டால்
மகாவின் காலில் இரத்த கரையை வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தவுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் இன்னும் சங்கடமாக இருந்தது திருமணம் ஆகி முதல் முறையாக கோவிலுக்கு வரும் பொழுது ரத்தக்கறையா என்று எண்ணினார்கள் இப்படி மகாவிற்கு ஒன்று என்றவுடன் துடிக்கும் இந்த குடும்பம் எப்பொழுதும் இப்படியே ஒற்றுமையாக இருக்குமா ..
இதே மகாவை நாளை இந்த ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அழ வைத்து பார்க்குமா …
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
இப்படி தூக்கி வைச்சுஆடுற குடும்பம் தான் நாளைக்கு கீழே போட்டு மிதிக்கப் போகுதுன்னு தோணுது. ஆனா, அந்தளவுக்கு மகிழன் விடமாட்டான்னு தான் தோணுது.
Kudumbam kudumbam solitu iruka avangalukaga mama va venam sonna ipo avangalukaga mrg pannita ipo ivalukaga elkarum kasta paduranga magizh sariya pesa matranu etho pana poranga pola
Pakala yena nadakkumnu…
Interesting