Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 26

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 26

மகா காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருவதை பார்த்துவிட்டு மகிழ் தன் பாக்கெட்டில் இருந்து கர்சிப் எடுத்து கட்டிவிட்டு ரத்தம் வேற இவ்வளவு வந்துட்டு இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருந்தான் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் வந்து மகா என்னாச்சு காயமா அதிகமாக இருக்கிறதா என்று கேட்டார்கள்


வீட்டில் அனைவரும் பார்த்தவுடன் மகா தனது காலை மடக்கிக் கொண்டு விட்டு இல்லை பெரிதாக ஒன்றும் அடியில்லை என்றால் மகிழ் மகாவை முறைத்து கொண்டிருந்தான் அப்பொழுது காவேரி தான் எங்கு உன் காலை காட்டு என்று கேட்டார் என்னடி இவ்வளவு ரத்தம் வருது ஒன்றும் இல்லை என்று சொல்கிறாய் என்று சொல்லிக்கொண்டே அழுதார் அப்பொழுது மகா அதான் மகிழ் மாமா காலில் துணி போட்டு கட்டி விட்டதே பெரியம்மா என்றால்

மகா ஒன்றுமில்லை என்றால் ஆனால்  வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவருக்கும்  சிறிது வருத்தமாக இருந்தது இப்படி திருமணம் ஆகி முதல் முறையாக கோவிலுக்கு வரும் போது ரத்தக்கரையாக ஆகிவிட்டது என்று எண்ணினார்கள் அனைவரும் மகாவிடம் பார்த்து வந்திருக்கலாம் அல்லவா எப்படி காயம் ஆகிவிட்டது என்று கேட்டுக்கொண்டு அவளுக்காக வருந்தி கொண்டிருந்தார்கள்


அப்போது அங்கு கோவிலில் ஒரு சாமியார் இவர்களைப் பார்த்து சிரித்தார் அவர் வேகமாக சிரித்தவுடன் வீட்டில் உள்ள அனைவரையுமே அந்த சாமியாரை பார்த்தார்கள் அப்பொழுது காவேரி தான் எதற்கு ஐயா எங்களை  பார்த்து சிரிக்கிறீர்கள் என்று கேட்டார் என்ன சிரிக்கிறேனா வேற என்ன செய்வது சிரிக்க தானே வேண்டும் என்னுடைய வேலை அது தானே எனக்கு பகவான் இப்பொழுது அந்த வேலையை தானே கொடுத்திருக்கிறான் என்றார்


என்னையா சொல்கிறீர்கள் எங்களுக்கு புரியவில்லை என்று கேட்டார் காவேரி இல்லை இப்பொழுது நீ யாருக்காக துடிக்கிறாயோ நாளை நீயே அந்த பெண்ணை முழுவதுமாக வெறுப்பாய்  அதை எண்ணி பார்த்து சிரித்தேன் என்றார் என்ன என் வீட்டு மகாலட்சுமியை நான் வேறுப்பேனா என்றார் காவேரி


வேகமாக அந்த சாமியார் இன்னும் வேகமாக சிரித்துக் கொண்டே என்ன உன் வீட்டு மகாலட்சுமியா இவளை தான் நாளை நீ என்னென்ன பேச்சு பேச போகிறாய் என்று நீயே உணர்வாய் உனக்கே அப்பொழுது தெரியவரும் இந்த குடும்பத்திற்காக என்று இப்பொழுது திருமணம் செய்து இருக்கலாம் ஆனால்  இந்த குடும்பத்திற்காக இவள் மறைத்த உண்மை  வெளியே வரும் பொழுது இந்த குடும்பம் இரண்டாக பிரிந்து விடும் என்று கூறி சிரித்தார்


வீட்டில் உள்ள அனைவரும் மகாவை தான் பார்த்தார்கள் மகா எதுவும் பேசாமல் அந்த சாமியாரை பார்த்துக் கொண்டிருந்தாள் மகா என்ன உண்மை மறைத்தால் என்று தெரிந்த இளவட்டங்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் அப்பொழுது சாமியார் இனியை பார்த்து உன்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தை தான் உன்னுடைய குழந்தை இந்த உலகத்தில் ஜனிக்கும் நேரம் அனைத்து உண்மைகளும் உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியவரும்

அப்போது இந்த குடும்பம் இரண்டாக பிரிந்து விடும் உன்னுடைய குழந்தை வரும் நேரம் இந்த குடும்பம் இரண்டாக பிரிந்து விடும் என்றார் சாமியார் அவ்வாறு சொன்னவுடன் இனி தனது அடிவயிற்றில் வேகமாக கை வைத்தால் அப்பொழுது மகா வேகமாக சென்று இனியை ஒரு பக்கம் பிடித்தால் உதிர் ஒரு பக்கம் பிடித்தான்


இப்படி தாங்கி பிடிப்பவர்கள் எப்போதுமே எந்த சூழ்நிலையில் உன்னை தாங்கி பிடிப்பார்களா என்று விட்டு அமைதியாக இருந்தார் இனி வேகமாக தனது வயிற்றில் இருக்கும் கையை எடுத்துவிட்டு அந்த சாமியாரை பார்த்து என்னுடைய உதிரனும் என்னுடைய மகாவும் என்னை என்றுமே தாங்கி பிடிப்பார்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் தாங்கி பிடிப்பார்கள் என்னை  விட்டு விட மாட்டார்கள் என்று கத்தினால்


சிரித்துக் கொண்டே நீ சொல்வது என்னவோ உண்மைதான் இவர்கள் இருவரும் உன்னை தாங்கி பிடிப்பார்கள் நீ இவர்களை தாங்கி பிடிப்பாயா இவளை தாங்கி பிடிப்பாயா என் மகாவை நான் எப்பேர்பட்ட சூழ்நிலையில் யாருக்காகவும் கை விடமாட்டேன் எல்லா நேரங்களிலும் தாங்கி பிடிப்பேன் என்றால்

பார்க்கலாம் என்றார் அப்பொழுது காவேரி தான் இதற்கு தீர்வு என்று அழுது கொண்டே கேட்டார் இதற்கு தீர்வு தானே நீ இப்போது யார் உன்னுடைய வீட்டு மகாலட்சுமி என்றாயோ அவளுடைய குழந்தை இந்த உலகத்தை தொடும் அன்று தான் உன் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வரும் அப்போதுதான் பிரிந்த குடும்பம் ஒன்றாக இணையும் என்றார் இப்போது அனைவரும் மகாவை பார்த்தார்கள்


மகா எதுவும் பேசாமல் தனது தலையை கீழே குனிந்து கொண்டால் அப்போது மகாவை அந்த சாமியார் பார்த்துக் கொண்டே என்ன இந்த குடும்பத்திற்காக குடும்பத்திற்காக என்று ஒன்றை இழக்கவும் செய்தாய் இதே குடும்பத்திற்காக இப்பொழுது திருமணமும் செய்து கொண்டாய் நாளை இதே குடும்பத்திற்காக என்று எண்ணி உன் மாமனை கைவிட்டு விடுவாயா என்று சிரித்துக் கொண்டே சாமியார் கேட்டார்


சாமியார் அவ்வாறு சொன்னவுடன் மகா அந்த சாமியையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ் வேகமாக மகாவின் கையை இறுக்கமாக பிடித்தான் அந்த சாமியார் மகா மகிழ் இருவரையும் பார்த்து சிரித்தார் உன் குடும்பமே உன்னையும் உன் மாமனையும்  எதிர்த்து நின்றாலும் இந்த குடும்பத்திற்காக போராடி உன் மாமன் பக்கம் நிற்பாயா


அவனுக்காக அனைத்து இடங்களிலும் உறுதுணையாக இருப்பாயா அவனுக்கு வரும் மன கஷ்டத்தில் இருந்தும் வருத்தத்தில் இருந்தும் வேதனைகளில் இருந்தும் அவனைக் காப்பாற்றுவாயா அன்னையாக மடிசாயாவும் தோழியாக தோள் சாயவும் விடுவாயா என்று கேட்டார் இல்லை இந்த குடும்பத்திற்காக என்று அவனை உதறி விடுவாயா என்றார்

மகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தால் மகிழ் மகா கையை பிடித்துக் கொண்டே இருந்தான் மகிழை பார்த்து  இப்படி நீ பிடித்துக் கொண்டிருக்கும் கையை எல்லா வேலையும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் விடாமல் பிடித்திருப்பாயா என்று கேட்டார் இப்பொழுது  மகிழ் சிரித்துக் கொண்டே அவள் செய்த அனைத்தும் இந்த குடும்பத்திற்காக தான் நான் இல்லை என்று சொல்ல மாட்டேன்


அதற்காக அவளை மட்டுமே நான் தவறு சொல்ல மாட்டேன் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் என்னுடைய மயிலு  என்னை விட்டு செல்ல மாட்டாள் அது எனக்கே தெரியும் அதை நான் இங்கு உள்ளவங்களுக்கோ உங்களுக்கோ நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை வாழ்ந்து காட்டுவோம் என்றான் சாமியார் இருவரையும் பார்த்து சிரித்து கொண்டே அதை தான் நானும் இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்


அடுத்தவர்களுக்காக நீங்கள் வாழ போவதில்லை உங்களுக்காக உங்களுக்காக மட்டுமே வாழ்ந்து காட்டுங்கள் அனைவரின் முன்பும் வாழ்ந்து காட்டுங்கள் என்றார் உதிர் இனி பார்த்து சிரித்தான் என்ன உதிரா உன்னை தாயாக தாங்கியவள்  இன்று உன் உதிரத்தில் பிறக்க போகும் குழந்தையால் இந்த வீட்டை பிரிய நேருமே என்ன செய்வாய் என்றார்


என்னை தாயாக தாங்கியவளை நான் தந்தையாக தாங்கக்கூடிய சூழ்நிலை வரும் வேளையில் தாங்க செய்வேன் என்றான் வேகமாக உன்னுடைய குழந்தை என்றார் இந்த குழந்தை இந்த உலகத்திற்கு வர வேண்டும் என்று எங்களை விட அதிகமாக விரும்பியது என்னுடைய மகா தான் இந்த குழந்தையால் அவளுக்கு ஒரு ஆபத்து வரும் என்றாலும் சரி இந்த குழந்தையால்தான் இந்த குடும்பம் பிரியும் என்றாலும் சரி  இந்த குழந்தையை நானும் என் மனைவியும் நல்ல முறையில் பெற்று எடுத்து வளர்ப்போம்

என் மகாவிற்காக இந்த குழந்தையை வெறுக்கவும் மாட்டோம் இந்த குழந்தைக்காக என் மகாவையும் வேறுக்கவும் மாட்டோம் அதேபோல் என் மகாவின் குழந்தையை என் தோளில் இந்த மொத்த குடும்பத்தையும் எதிர்த்து தூக்கி வளர்ப்பேன் இது என் குழந்தை மீது சத்தியம் என்றான் இனியின் அடி வயிற்றில் கை வைத்து உன் தங்கைக்கு ஒரு சோதனை வருது அவளே உன்னை விட்டு விலகி விடுவால் என்றால் என்றார்


வீட்டில் உள்ள அனைவரும் தங்கை என்றவுடன் கயலை எண்ணினார்கள் ஆனால் உதிரன் மட்டும் மகாவை பார்த்தான் வீட்டில் உள்ள அனைவரும் இவன் ஏன் மகவை பார்க்கிறான் என்று எண்ணினார்கள் என் மகாவே என்னை வெறுத்தாலும் அவளிடம் என்னை வர வேண்டாம் என்றாலும் நான் அவளை கைவிட மாட்டேன் என்றான்


வீட்டில் உள்ள அனைவரும் தங்கை என்றவுடன் கயலை எண்ணினார்கள் என்றவுடன் சாமியார் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து சிரித்து விட்டு இந்த குடும்பத்தை தாங்கும் ஆலமரமே என்றார் அனைவருமே மகிழை பார்த்தார்கள் மகா சாமியாரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது மகிழ் மகாவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு சாமியாரை பார்த்தான்


இந்த வீட்டில் இருந்து ஒருத்தி தனியாக சென்றாலே அவளை என்ன செய்வாய் இந்த வீட்டிற்க்காக அப்படியே விட்டு விடுவாயா என்றார் என் அத்தை மகளை அப்படியே விட்டுவிட மாட்டேன் கயலை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் இந்த குடும்பமே எதிர்த்தாலும் கயலை எப்பேர்ப்பட்ட சூழலிலும் விட்டு விட மாட்டேன் அதேபோல் இந்த குடும்பத்துடன் கயலை சேர்த்து வைப்பேன் என்றான்


அவள் மேல் எந்த தவறும் இல்லை என்பதையும் இந்த குடும்பத்திற்கு நிரூபிப்பேன் என்றான் சாமியார் சிரித்துக்கொண்டே என்ன எழில் வேந்தா உன் தோழிக்கு எப்பொழுதுமே துணையாக இருப்பாய் என்று நினைக்கின்றாயே இப்பொழுதும் இந்த குடும்பத்திற்காக துணையாக நிற்பாயா? இந்த குடும்பத்தை எதிர்த்து என்றார் எழில் சாமியாரை பார்த்து சிரித்தான் வேறு எதுவும் பேசவில்லை


அவன் அந்த சாமியாரிடம் கூட அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை அவனுக்கு அவனைப் பற்றி தெரிந்ததை விட மகாவிற்கு நிறையவே தெரியும் அதை தான் எதற்காக அடுத்தவர்களிடம்  நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று எண்ணி அமைதியாக இருந்தான் எதுவுமே பேசவில்லை சாமியார் எழிலையே பார்த்துக் கொண்டிருந்தார்


எழில் அவரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை அப்பொழுது நிலா தான் என்ன சாமி இப்படி எல்லாம் எங்க எழில் மாமாவை பார்த்து கேக்குறீங்க இந்த குடும்பத்துக்கே தாயா எங்க அக்கா இருந்து இருக்கா ஆனா என் அக்காவுக்கு தாயா இதுவரை இருக்கிறது எங்க எழில் மாமா   அவளோட சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் இருக்கிறது


என் அக்காவுக்கு துணையாக தான் இருக்கும் துணிஞ்சு நிற்குமே தவிர யாருக்காகவும் என் அக்காவை விட்டுக் கொடுக்காது அப்படியா நாளைக்கு  அவனுக்கு என்று ஒருவள் வருவாளே அவளிடம் என்றார் நிலா மகாவை ஒரு நிமிடம் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு அப்படி என் அக்காவையும் எழில் மாமாவையும்  புரிந்து கொள்ளாத ஒரு உறவு என் எழில் மாமா வாழ்க்கையில் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் வரமாட்டாள் என்றால்


அப்படி வந்து விட்டால் உன் மாமன் எழில் வேந்தன்  மனதில் ஒரு பெண் இருந்து  அந்தப் பெண் உன் அக்காவிற்கு ஏற்புடையவளாக இல்லாவிட்டால் உன் அக்கா மற்றும் மாமாவின் உறவை தவறாக எண்ணி விட்டால் என்றார் எழில் அப்பொழுதும் எதுவும் பேசவில்லை அமைதியாக தான் இருந்தான் இப்பொழுது நிலா என்னதான் சொல்ல போகிறாள் என்று வீட்டில் உள்ள அனைவருமே பார்த்தார்கள்

நிலா அந்த சாமியாரை முறைத்து பார்த்துக் கொண்டே அப்படிப்பட்ட எந்த உறவும் என் எழில் மாமாவின் வாழ்க்கையில் வராது அவர் அப்படி ஒரு பெண்ணை விரும்புகிறார் என்றால் அந்தப் பெண்  என் அக்காவையும் எழில் மாமாவையும் சந்தேகப்படக் கூடிய உறவாக இருக்காது என்றால் அந்த சாமியார் அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை அவர் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தவுடன் நிலா நான் இந்த குடும்பத்திற்கும் துணையாக இருப்பேன்


எனது அக்கா மாமாவின் வாழ்க்கையிலும் துணையாக இருப்பேன் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் யாருக்காகவும் யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் நான் எப்படி வாழ வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தவள் தான் என் அக்கா என்னைப் பெற்றவர்களோ இங்கு சுற்றி உள்ள அனைவரையும் விட அவளை விட நான்கு வயது சிரியவளான எனக்கு சிறுவயதில் இருந்தே தாயாக இருந்தவள்


அவளை இந்த குடும்பத்திற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் இந்த குடும்பத்திற்காக அவளையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று விட்டு எழில் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டு உறுப்பினர்கள் இருக்கும் இடத்திற்கு போய் நின்றால் சாமியார் மொத்த குடும்பத்தையும் பார்த்து சிரித்துவிட்டு பார்க்கிறேன் நானும் பார்க்க தானே போகிறேன் …

யார் யார்க்கு துணையாக நிற்கிறீர்கள் என்று ஆனால் ஆண்டவன் எழுதிய கணக்கு தப்பாகாது என்று கூறி சிரித்தார் வீட்டில் உள்ள அனைவரும் அந்த சாமியாரையே பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் எங்கு இவர் சொல்வது போல் அனைத்தும் நடந்து விடும் என்ற எண்ணத்தை விட அப்படி நடக்கும் அதிலிருந்து நாம் எப்படி மீல்வது என்று தான் யோசித்து கொண்டு இருந்தார்கள்


ஏனென்றால் இந்த கோவில் சக்தி வாய்ந்தது இந்த கோவிலுக்கு வரும் சாமியார் கூறுவது அனைத்தும் நடக்கும் என்று வீட்டில் அனைவருக்கும் தெரியும் அதனால் நம் வீட்டில் ஏற்படும் பிரிவை எப்படி தாங்கிக் கொள்வது அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க வேண்டும் என்று எண்ணினார்கள் கருப்பையா பாண்டியம்மா குடும்பத்தினர் எண்ணுவது போல் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரிவிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்களா..

இல்லை குடும்பம் மொத்தமாக பிரிந்து விடுமா…

என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️


3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 26”

  1. Kalidevi

    Interesting ah poitu iruku story ena twist and turns iruka potha eppadi pirinni eppadi sera poranganu parkalam but family ah romba alaga iruku ippadiye irukanum ellarum onna. Magizh maha purinijikanum epovum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *