சாமியார் சென்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தார்கள் பிறகு நேரம் ஆகுவதை உணர்ந்து எழில் தான் அனைவரையும் சரி வாருங்கள் வீட்டிற்கு செல்லலாம் மணி 7:30 ஆகிவிட்டது என்று அனைவரையும் மலையிலிருந்து கீழே அழைத்து வந்தான் அனைவரும் வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அமைதியாக தான் வந்தார்கள் பிறகு வீட்டிற்கு சென்றவுடன் பெண்கள் மூவரும் சமையல் அறைக்கு சென்று விட்டார்கள் சமைப்பதற்கு நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தாள் எதுவும் நடக்காமல் விடப்போவதில்லை நடக்க வேண்டியது தான் நடக்கத்தான் செய்யப்போகிறது என்ற பிறகு அதை நினைத்துக் கொண்டிருக்க முடியுமா என்று எண்ணி விட்டு சமையல் செய்யலாம் என்று உணர்ந்து சமைத்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார்கள் அனைவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக உட்கருந்தார்கள் பிறகு அனைவரும் பெரிதும் பேசிக்கொள்ளாமல் இரவு நேரமாவதை உணர்ந்து ஒன்பது அறை ஆகிவிட்டது என்பதால் அனைவரையும் தூங்க சொல்லிவிட்டு கருப்பையா பாண்டியம்மா இருவரும் அவர்கள் அறைக்கு சென்று விட்டார்கள் பிறகு ஒவ்வொருவராக அவர்கள் அறை நோக்கி சென்று விட்டார்கள் அனைவரும் அவர்களது அறைக்குச் சென்றவுடன் மகிழ் அவனது அறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்திருந்தான் மகிழ் சென்ற பிறகுதான் மகா அவளது அறைக்கு வந்தால் மகா வந்தவுடன் மகிழ் கையை பிடித்துக் கொண்டு சென்று கட்டிலில் உட்கார வைத்தான் மாமா என்றால் மகிழ் எதுவும் பேசாமல் அவளது காலை தனது மடியில் நீட்டிவிட்டு கட்டைவிரலை பார்த்தான் ஒன்றும் இல்லை மாமா ரத்தம் தானே சிறிய அடி தான் என்றால் மகிழ் அவளை முறைத்து விட்டு அவளது புடவையை சிறிது மேலே தூக்கினான் மாமா என்ன செய்ற என்று கேட்டுக் கொண்டே அவனது கையைத் தட்டி விட்டாள் அமைதியா இரு டி இருக்க கோபத்தில் என்ன செய்வேன் என்று தெரியாது என்று விட்டு அவளது புடவையை சிறிது மேலே தூக்கினான்தூக்கி பிறகு தான் முட்டிக்கு கீழே அவளது காலில் நிறைய சிறைவுகள் இருப்பதை பார்த்தான் அங்கும் ரத்தம் கட்டிக்கொண்டு இருந்தது என்னடி இது என்று கேட்டான் இல்ல மாமா சாயங்காலம் காலேஜ் முடிந்து வரும்போது நேரம் ஆவதை உணர்ந்து வேகமாக வந்து கொண்டிருந்தேன் அப்போது டிராபிக் மாட்டிக் கொண்டேன் சரி ட்ராபிக் சிக்னல் விழுந்தவுடன் நேரம் ஆவதை உணர்ந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய கல் தடுக்கி கீழே விழுந்து விட்டேன் அதில் ஏற்பட்டு சிறைவுகள் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது அறை கதவை திறந்து கொண்டு எழில் வந்தான் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டவுடன் மகா தனது புடவையை கீழே இறக்கி விட்டாள் அங்கு எழிலை பார்த்த பிறகு தான் மகாவிற்கு மூச்சு வந்தது மகா புடவையை வேகமாக சரி செய்தவுடன் எழில் இருவரையும் பார்த்து சாரி என்றான் மகிழ் சிரித்துக்கொண்டே எழில் பேசாமல் வாடா என்றான் தனது அண்ணன் எதுவும் பேசாமல் வாடா என்றவுடன் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஒரு சேர் எடுத்து போட்டு மகாவின் அருகில் உட்கார்ந்தான் என்னடி ஆச்சு உன் காலுக்கு ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு என்றான் அப்பொழுது மகிழ் தான் மகா சொன்னதை சொன்னவுடன் என்ன என்று கேட்டுவிட்டு அவளது காலை இழுத்து புடவையை லேசாக தூக்கிப் பார்த்தான் தனது அண்ணன் முன்பு இப்படி செய்யலாமா வேண்டாமா என்று எல்லாம் அவன் யோசிக்கவில்லை பார்த்துவிட்டு என்னடி பண்ணி வச்சிருக்க இத நாள் தான் ஒரு மாதிரி நடந்தியா என்று கேட்டான் இல்லடா முட்டியில் தான் நிறைய காயம் என்றவுடன் என்ன என்று விட்டு புடவையை தூக்க சென்றான் அப்பொழுது மகா தான் ஏழில் கையில் கை வைத்தவுடன் எழிலும் பெரிதாக எதுவும் பேசாமல் தனது கையை அவளது காலில் இருந்து எடுத்துக் கொண்டான் அதன் பிறகு எதுவும் பேசவில்லை மகிழ் இருவரையும் பார்த்துவிட்டு வேறு ஏதும் பேசவில்லை சரி ஒழுங்கா பார்த்து இரு என்று தனது கையில் இருக்கும் மருந்தை தனது அண்ணன் கையில் கொடுத்துவிட்டு தனது அண்ணனை ஒரு நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு வெளியில் சென்றான்தனது அண்ணன் இருக்கும்போது தான் அவளுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று எண்ணினான் அது மட்டும் இல்லாமல் தனது அண்ணனே இப்பொழுதுதான் அவளிடம் ஓரளவுக்கு பேசுகிறான் அதை நாம் ஏன் கெடுக்க வேண்டாம் நாம் இருந்தால் அவன் எதுவும் அவளுக்காக என்று செய்ய மாட்டான் அவளிடம் பேசவும் மாட்டான் என்று எண்ணி விட்டு அவர்கள் அறையில் இருந்து வெளியில் வந்தான் அப்பொழுது நிலா அவளது அறையில் இருந்து வேகமாக வெளியில் வந்தால் இவள் என்ன இந்த நேரத்தில் வருகிறாள் அதுவும் ஒரு மாதிரி இருக்கிறாள் பதட்டமாக என்று நினைத்து நிலா என்று கூப்பிடலாம் என்று தான் நினைத்தான் ஆனால் நான் வேகமாக கூப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணிவிட்டு மெதுவாக அவள் பின்பே வந்தான் அவள் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் இந்த நேரத்தில் எதற்காக வெளியில் செல்கிறாள் மணி பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது என்று விட்டு அவள் பின்னாடியே வந்தான் அவள் வீட்டை விட்டு வெளியே சென்றாள் நிலா வெளியே செல்லும்போது கயல் அவளது கணவனுடன் வெளியே நின்று கொண்டிருந்தால் நிலா வேகமாக சென்றவுடன் கயல் என்னாச்சு ஏன் இந்த நேரத்தில் வந்திருக்க என்று அவளது தாடையை பற்றி கொண்டு அவளை மேலும் கீழுமாக பார்த்தால்கயலுக்கு உள்ளுக்குள்ளே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது கயலுக்கு வீட்டில் உள்ள அனைவரையும் விட நிலா தனிப் பிரியம் தான் தோழி என்று தான் சொல்ல வேண்டும் கயல் இதுவரை தனது காதலை தவிர வேறு எதையுமே நிலாவிடம் மறைத்ததில்லை ஆனால் அவள் இந்த காதலை மட்டும் சூழ்நிலையின் காரணமாக மறைத்து இருந்தால் நிலா எத்தனை நாட்களுக்கு பிறகு தன்னிடம் எப்பொழுதும் போல் பேசுகிறாள் என்று அவளுக்கு கண்ணீராக வந்ததுஎழில் வெளியில் வந்தவுடன் கயல் இருப்பதை பார்த்துவிட்டு எழிலும் நிலாவின் அருகில் வந்தான் என்ன கயல் இந்த நேரத்தில் என்ன அண்ணா என்று அன்புவை பார்த்து கேட்டான் இல்லை எழில் கயல் தான் உங்களை பார்க்க வேண்டும் என்று வந்தால் அதனால் தான் என்றான் அதற்கு காலையில் வந்திருக்கலாமே இந்த நேரத்தில் ஏன் என்றான்நிலா விடம் திரும்பி இப்படி கயல் வந்திருக்கிறாள் என்று தெரிந்து வந்தாயா என்று நிலாவைப் பார்த்து கேட்டான் நிலா அப்பொழுது எதுவும் பேசாமல் அமைதியாக கயலையே முறைத்துக் கொண்டு நின்றாள் கயல் தான் இல்ல மாமா நான் தான் நிலாவிற்கு போன் செய்தேன் நிலா அவளது அறைக்கு தூங்க சென்றவுடன் கயலிடமிருந்து நிலாவிற்கு ஃபோன் வந்ததுகயல் திருமணமாகி சென்றதிலிருந்து நிலாவிற்கு அழைக்கவில்லை நிலாவும் கயலுக்கு அழைக்கவில்லை அப்படி இருக்கும் நிலையில் அதுவும் இந்த இரவு வேளையில் கயல் தனக்கு அழைக்கிறாள் என்றவுடன் என்ன என்று தெரியவில்லை என்று பதட்டத்திலே போன் அட்டென்ட் செய்து கயல் என்றால் கயல் ஒரே வார்த்தையாக நிலா நான் வெளியே தான் இருக்கிறேன்வீட்டிற்கு வெளியே வா என்று உடன் நிலா போனை வைத்துவிட்டு வேகமாக கயலை பார்க்க வந்துவிட்டால் என்ன என்று தெரியவில்லை இந்த நேரத்தில் வந்திருக்கிறாள் என்ற பதட்டத்தில் வந்தால் அவள் வெளியில் வரும் பொழுது தான் நிலாவை எழில் பார்த்தான் அதனால் தான் இப்பொழுது கயலிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான் அதற்கு அவளும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் ஒன்னும் இல்லை கயல் தலைக்கு குளித்திருப்பதால் ஒன்றும் முடியாததால் மாலை வேளையில் தூங்கிக் கொண்டிருந்தால் நான் கூட எழுப்புகிறேன் என்றேன் அம்மாதான் அவள் தூங்கட்டும் என்றார்கள் சரி என்று விட்டேன் தூங்கிக் கொண்டிருக்கும்போது மாலை ஒரு ஆறரை மணி போல் கயல் எழுந்து உட்கார்ந்து விட்டாள் என் வீட்டில் உள்ள அனைவரையும் பார்க்க வேண்டும் என்றால் என்னிடம் அப்பொழுது நிலா எழிலை பார்த்தான் எழிலும் நிலாவை தான் பார்த்தான் நாங்கள் இருவரும் ஏழு மணி போல் உங்கள் வீட்டிற்கு வந்தோம் ஆனால் நீங்கள் அனைவரும் மலைக் கோவிலுக்கு சென்று இருப்பதாக அருகில் உள்ளவர்கள் சொன்னார்கள் அதனால் தான் இப்பொழுது நீங்கள் வந்திருப்பீர்கள் என்று வந்தோம் அதற்கு நாளை காலையில் பார்த்திருக்கலாமே என்றான் எழில் நானும் அப்படித்தான்டா சொன்னேன் ஆனால் இவள் ஒரேடியாக நான் இப்போதே பார்த்தாக வேண்டும் என்றால் அழுது கொண்டே இருந்தால் அதனால் தான் என்றவுடன் இருவரும் அமைதியாக இருந்தார்கள் அப்பொழுது உதிரன் தண்ணி குடிக்க இனிக்கு தண்ணீர் இல்லை என்று உடன் தண்ணி எடுக்க வந்தவன் எழில் வேகமாக செல்வதை பார்த்துவிட்டு எழிலை பார்க்க வந்தான்உதிரன் எழில் பின்னாடியே சென்றான் உத்திரம் சென்று இவ்வளவு நேரமாகிறது என்று இனியும் பின்னாடியே வந்தால் அப்பொழுது வீட்டின் முன் கதவு திறந்து இருந்தவுடன் இனியும் வெளியில் வந்தால் உதிரன் இனி இருவரும் வெளியில் வந்து கயல் இருப்பதை பார்த்துவிட்டு கயலின் அருகில் வந்து நின்றார்கள் இனி வந்தவுடன் வந்த வேகத்தில் கயலை ஓங்கி அறைந்திருந்தால் கயல் இனியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு கீழே குனிந்து அவளது வயிற்றில் முத்தம் வைத்தால் அவள் முத்தம் வைத்தவுடன் இனியின் உடல்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து அடங்கியது இனி வேகமாக கயலின் கையை பிடித்தால் கயல் இனியின் வயிற்றை கட்டிக் கொண்டே அழுதால் இனி அந்த நிமிடம் ஒன்றை உணர்ந்தால் இவள் எதற்காக இந்த நேரத்தில் வந்திருக்கிறாள் என்று தெரியவில்லையே என்று அப்பொழுது இனி அன்பு வைப் பார்த்தால் அன்பு எழிலிடம் சொன்ன அனைத்தையும் திரும்ப சொன்னவுடன் இனி உதிரனை பார்த்தால் உதிரனும் இனியை தான் பார்த்தான் அப்பொழுது மகா முகில் மகிழ் மூவருமே வெளியே வந்திருந்தார்கள் எழில் தான் முகிலுக்கு போன் செய்து மகா மகிழ் இருவரையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு வெளியே வர சொல்லி இருந்தான்வீட்டில் உள்ள அனைவரையும் கயலை பார்த்துக் கொண்டே இருந்தார்கள் கயல் அனைவரையும் பார்த்து என்னிடமிருந்து மறைத்து விடலாம் என்று எண்ணினீர்களா என்று கேட்டால் வீட்டில் உள்ள அனைவரையுமே கயலை தான் பார்த்தார்கள் இவளுக்கு எப்படி தெரிந்து இருக்கும் என்று அனைவரும் எண்ணினார்கள் அப்பொழுது நிலா தான் நாம் கோவிலுக்கு சென்று இருந்த போது சாமியார் நம்மிடம் பேசிய அனைத்தும் இவளுக்கு கனவு போல் வந்திருக்கிறது மாமா அதனால்தான் நாம் அனைவரையும் பார்ப்பதற்காக இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்திருக்கிறாள் கயல் என்றால் மகா கயலை கட்டி அணைத்துக் கொண்டால் கயல் அழுதால் ஒன்றுமில்லை எல்லாம் சரியாகும் என்றால் அப்போது மகிழ் தான் சரி அன்பு நேரம் ஆகிறது நீ கயலை வீட்டுக்கு அழைத்துச் செல் என்று சொல்லிக் கொண்டிருந்தான் அப்பொழுது அவர்கள் வீட்டில் இருந்து வேலு என்ன முன் வாசல் கதவு திறந்து இருக்கிறது என்று எண்ணி விட்டு வெளியில் வந்தார்தனது வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் வெளியில் இருப்பதை பார்த்துவிட்டு இங்கு என்ன செய்கிறீர்கள் இந்த நேரத்தில் என்று கேட்டார் அனைவரும் ஒரு பயத்துடன் வேலுவை திரும்பிப் பார்த்தார்கள் அனைவரும் திரும்பிய உடன் அங்கு கயல் நிற்பதை பார்த்துவிட்டு கயல் உனக்கு இங்கே என்ன வேலை என்றார் கயல் எங்கே தன்னைத் தன் மாமா வெறுத்து விடுவாரோ என்று அஞ்சி தனது மகிழ் மாமாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேலுவை பார்த்தால் ..வேலு கயிலை இங்கிருந்து திட்டு அனுப்பி விடுவாரா? வீட்டில் உள்ள அனைவரையும் வேலு என்ன சொல்வார்…என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் ❣️தனிமையின் காதலி ❣️ சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்லாமல் செல்வதால் என்னுடைய கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று எனக்கு தெரியவில்லை ப்ளீஸ்போர் அடிக்கிறேனா இல்லை நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறதா இல்லை ஏதாவது மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஏதாவது சொல்லுங்கள் …மிக்க நன்றி🙏
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Story nalla poitu iruku sis next next ena move therinjjkanumnu iruku sikram maha magizh ipo pesa start pana mari inum nalla pesikanum
சூப்பர்